தொகுதி அதிகரிப்பு தீர்வாகுமா?
தொகுதி மறுவரை சட்டத்தில் 50 விழுக்காடு இடங்களை உயர்த்த ஒன்றிய ஆட்சி முன்வரும்போது அதை ஏற்பதால் உருவாகும் நெருக்கடிகளை முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில நாளேட்டில் 17.04.2024 அன்று எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகள்… ஒவ்வொரு மாநிலமும் தற்போது பெற்றுள்ள பிரதிநிதித்துவத்தை இழக்கக் கூடாது என்ற அடிப்படையில் மக்களவையின் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கையை 550 இலிருந்து 850 ஆக உயர்த்தும் முன்மொழிவும் பிரச்சினைக்குரியது. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அதிகாரம் என்பது உறுப்பினர்களின் முழுமையான எண்ணிக்கையில் மட்டும் இல்லை; மொத்த அவை உறுப்பினர்களில் ஒரு மாநிலம் பெற்றிருக்கும் ஒப்பீட்டு பங்கிலும் உள்ளது. உதாரணமாக: கேரளா தனது 20 இடங்களையும் தக்கவைத்துக்கொண்டாலும், 543 உறுப்பினர்களைக் கொண்ட தற்போதைய மக்களவையில் அதன் பங்கு 3.68%. 850 உறுப்பினர்களாக விரிவுபடுத்தப்பட்டால் அதே 20 இடங்களின் பங்கு 2.35% ஆகக் குறையும். தமிழ்நாட்டின் இடங்கள் 39 இலிருந்து 49 ஆக அதிகரித்தாலும், அதன் ஒப்பீட்டு பங்கு...
