Category: தென்காசி

மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்கள் நிறைவு!

மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்கள் நிறைவு!

திண்டுக்கல்: திண்டுக்கல் – தேனி மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 22.08.2024 அன்று பழனி அ.கலையம்புத்தூரில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், கழகப் பொருளாளர் சு.துரைசாமி, கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசிகுமரன், கழகத் தலைமைக்குழு உறுப்பினர்கள் சூலூர் பன்னீர்செல்வம், இரா.உமாபதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கடந்த ஒரு ஆண்டாகத் திண்டுக்கல் மாவட்டக் கழகச் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது என்றும், இணையதள செயல்பாடுகளில் கழகத்திற்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது என்றுப் பேசினார். கூட்டத்தின் முடிவில் திண்டுக்கல் – தேனி மாவட்டப் பொறுப்பாளர்களைக் கழகத் தலைவர் அறிவித்தார். அவை பின்வருமாறு:- திண்டுக்கல் மாவட்டத் தலைவராக மருதமூர்த்தி, மாவட்டச் செயலாளராக மாக்சிம் கார்க்கி, மாவட்ட அமைப்பாளர் மற்றும் இணையதளப் பொறுப்பாளராக ராஜா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக நாச்சிமுத்து, தமிழ்நாடு மாணவர் கழகப் பொறுப்பாளராக ஆயுதன், ஒட்டன்சத்திரம் ஒன்றியத் தலைவராக கபாலி, ஒன்றியச் செயலாளராக ஜோசப், ஒன்றிய அமைப்பாளராக...

குடந்தை – கீழப்பாவூர்-குடியாத்தத்தில் சிறப்புடன் நடந்த மண்டல மாநாடுகள்

குடந்தை – கீழப்பாவூர்-குடியாத்தத்தில் சிறப்புடன் நடந்த மண்டல மாநாடுகள்

குடந்தையில்: ‘நமக்கான அடையாளம் திராவிட மாடல்’ என்ற முழக்கத்தை முன் வைத்து கும்பகோணம் மீன் மார்க்கெட் திடலில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மண்டல மாநாடு 16.5.2022 அன்று மாலை சிறப்புடன் நடைபெற்றது. மாவட்டக் கழகத் தலைவர் மு. இளங்கோவன் தலைமையில் சா.வெங்கடேசன் (ஒன்றிய அமைப்பாளர்) முன்னிலையில் நடைபெற்றது. கு. பாரி (தஞ்சை மாவட்ட செயலாளர், தி.வி.க.), தெ. மகேசு (மாவட்டச் செயலாளர்), திருச்சி நாகம்மையார் இல்லத்துப் பெண்ணைத் திருமணம் செய்தவரும், திராவிடர் கழகத் தோழருமான பவுண்டரீகபுரம் முருகேசன், பொறியாளர் திருநாவுக்கரசு (உழவர் இயக்கம்), சி.த. திருவேங்கடம் (மாவட்ட அமைப்பாளர்), சா. விவேகானந்தன் (மண்டல செயலாளர் வி.சி.க.) உள்ளிட்டோர் மாநாட்டில் பேசினர். முன்னதாக, பெரம்பலூர் தாமோதரன், ‘மந்திரமா-தந்திரமா’ நிகழ்ச்சி நடைபெற்றது. திராவிடர் கழக மாவட்ட மகளிரணி செயலாளர் திரிபுரசுந்தரி மற்றும் தி.க. தோழர்கள் குணா, சங்கர், கழகத் தலைவர்-பொதுச் செயலாளருக்கு துண்டுகளை அணிவித்து மகிழ்ந்தனர். கரிகாலன் நன்றி கூறினார். தொடர்ந்து 20...

கழக ஏட்டுக்கு சந்தா சேர்க்க தீவிரம்: தென்காசி-நெல்லை மாவட்ட கலந்துரையாடல்

கழக ஏட்டுக்கு சந்தா சேர்க்க தீவிரம்: தென்காசி-நெல்லை மாவட்ட கலந்துரையாடல்

கீழப்பாவூரில் நடைபெற்ற தென்காசி, நெல்லை (ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம் ) மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம் 02.01.2022 ஞாயிறு காலை 10.30 மணியளவில் தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் நடைபெற்றது. இக்கலந்துரையாடல் கூட்டத்தில் கழகப் பொருளாளர் திருப்பூர்  சு.துரைசாமி தலைமை வகித்தார் நெல்லை மாவட்டத் தலைவர் பா.பால்வண்ணன் தென்காசி மாவட்டத் தலைவர் அ.மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் தோழர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் கூட்டத்தின்நோக்கத்தை விளக்கிப் பேசினார். தோழர்கள் கழக இதழான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வார இதழுக்கு சந்தா சேர்ப்பது குறித்தும் மாவட்டம் முழுவதும் இயக்கத்தைக் கொண்டு செல்ல பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இம்மாதம் முழுவதும் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழுக்கு சந்தா சேகரிப்பு பணியாற்றுவது என்றும்  கொரானா தொற்று தற்போது பெருகி வருவதால் தொற்று குறைந்ததும்  கொள்கை விளக்கத் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடத் திடவும், குடும்ப விழா...

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மகளிர் தின விழா!

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மகளிர் தின விழா!

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மகளிர் தின விழா! நாள் :07.03.2021, ஞாயிறுகாலை நேரம் : 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இடம்: ஆயிரப்பேரி விலக்கு அருகேயுள்ள தோப்பு பழைய குற்றாலம் செல்லும் வழி, குற்றாலம். தலைமை :தோழர். கலாவதி , பொறுப்பாளர், தமிழ்நாடு அறிவியல் மன்றம், தென்காசி மாவட்டம். முன்னிலை : தோழர். கோமதி, நெல்லை தோழர். வெற்றிச் செல்வி , சூரங்குடி தோழர். சுமதி , செட்டியூர், தென்காசி தோழர். மாரீஸ்வரி, தூத்துக்குடி தோழர். அனிதா, கபாலிபாறை வரவேற்புரை : தோழர். இரமணி, கீழப்பாவூர். சிறப்புரை : “திராவிடர் இயக்கமும் பெண்ணுரிமையும்” எனும் தலைப்பில் பால். பிரபாகரன் (பரப்புரைச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்) மகளிர் தின விழா உரை தோழர். சங்கீதா, (அமைப்பாளர், திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம்) தோழர். அ. மாசிலாமணி தென்காசி மாவட்டத்தலைவர் தி.வி.க. தோழர். பா.பால்வண்ணன் நெல்லை...

நினைவு நாளில் பெரியார் சிலைகளுக்கு மாலை

நினைவு நாளில் பெரியார் சிலைகளுக்கு மாலை

கோவை : கோவை மாநகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பெரியார் 46 வது நினைவு நாளில் தலைமை செயற்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் தலைமையில் பெரியார் சிலைக்கு  மாலை அணிவித்து, மாநகர துணை தலைவர் வெங்கட் கொள்கை முழக்கங்கள் எழுப்பி, விஷ்ணு உறுதிமொழி வாசிக்க தோழர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் சுரேஷ்-தர்ஷினி இணையர்  தேனீர் வழங்கினர். சென்னை :  24.12.2019 அன்று காலை 9 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன்  தலைமையில் சென்னை சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. உடன் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தென் சென்னை மாவட்ட செயலாளர் வேழவேந்தன், தென் சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி, வட சென்னை மாவட்ட செயலாளர் இராஜீ, தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் சுகுமார் மற்றும் கழகத் தோழர்கள் திரளாக பங்கேற்றனர்....