கரூரில் ஈழப் படைப்பாளிகளின் நூல்கள் அறிமுகம்
தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக தியாகி “பொன் சிவகுமரனின்” 52 -ஆவது ஆண்டு நினைவுகளோடு மறுக்கப்படும் உரிமைகள், மறைக்கப்பட்ட வரலாறுகளைப் பேசும் 11 நூல்கள் அறிமுக விழா 27.06.2026 சனிக்கிழமை அன்று மாலை 5.00 மணி அளவில் கரூர், அய்யப்பா சேவா சங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சண்முகம் (சாமானிய மக்கள் கட்சி ) அவர்கள் தலைமை வகித்தார். முகிலன் (சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் – காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்) அவர்கள் முன்னிலை வகித்தார். ஆ. பாண்டியன் (சுயமரியாதை சமத்துவக் கழகம்) அவர்கள் வரவேற்புரையாற்றினார். நிவேதா சத்யாராஜ், முனைவர் சாலினி (பேராசிரியர், ஆய்வாளர்), முனைவர் ப. கிருட்டிணவேணி (முதுகலை அறிவியல் யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) ஆகியோர் நூல்களைப் பற்றி கருத்துரையாற்றினர். புதுச்சேரி மாநில திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் நூல்களைப் பற்றி மதிப்புரையாற்றினார். “கஸ்தூரியின் ஆக்கங்கள், வானதியின் கவிதைகள், மேஜர் பாரதி எழுதிய காதோடு சொல்லிவிடு, தமிழீழ...
