பெரியார் ஆயுதம் ஏந்தாத புரட்சியாளர்-ஆக்ஸ்போர்டு பல்கலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உணர்ச்சி உரை

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில்–தந்தை பெரியார் படத்தை திறந்து வைத்து – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர்ச்சிமிகு உரை! முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் 4.9.2025 அன்று இங்­கி­லாந்து நாட்­டின் ஆக்ஸ்ஃ­போர்டு பல்­க­லைக் கழ­கத்­தில், பகுத்­த­றி­வுப் பக­ல­வன் தந்தை பெரியார் அவர்­க­ளின் திரு­வு­ரு­வப் படத்­தைத் திறந்துவைத்து உரை­யாற்­று­கை­யில் “தந்தை பெரி­யார்தர­ணி­ம­ய­மாகி விட்­டார்” என்று உணர்ச்சிமேலி­டக் குறிப்­பிட்­டார்.

முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் ஆற்றிய உரை வரு­மாறு:– பல நூறு ஆண்­டு­களாக, உல­கின் சிறந்த அறி­வா­ளி­களை உரு­வாக்கும் இந்த ஆக்ஸ்ஃ­போர்டு பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பேசு­வதை நான் பெருமை­யா­கக் கருதுகிறேன். இப்­போது புள­காங்­கித உணர்­வோடு உங்­கள் முன்­னால் நான் நின்று கொண்­டி­ருக்கிறேன். பெரி­யா­ரின் பேரன் என்ற கம்­பீ­ரத்து­டன் நிற்­கி­றேன்! இங்கே நான் தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­சர், தெற்­கா­சிய அர­சி­யலை புரட்­டிப் போட்ட இயக்­க­மான தி.மு.கழ­கத்­தின் தலை­வர் என்ற தகு­தி­யு­டன் மட்­டு­மல்ல; பெரி­யா­ரின் பேரன் என்­கின்ற கம்­பீ­ரத்­து­டன் உங்­கள் முன்­னால் நான்நின்று கொண்­டி­ருக்­கி­றேன்.

பகுத்­த­றி­வுப் பக­ல­வன் அறி­வா­சான் தந்தை பெரியாரின் படத்தை ஆக்ஸ்ஃ­போர்டு பல்கலைக்கழகத்தில் திறந்து வைத்­ததை, என்னுடைய வாழ்­நாள் பெரு­மை­யா­கக் கரு­து­கி­றேன். பகுத்தறிவுப் பட்­டொளி, உல­கம் முழுக்­கப் பரவி வரு­கி­றது என்­ப­தன் அடை­யா­ளம்­தான் இந்­தப் படத்திறப்பு விழா!

பெரி­யார் இன்று உல­கம் முழு­வ­தும் தேவைப்படுகிறார் என்­ப­தன் அடை­யா­ள­மாக, அவ­ரு­டைய படத்தைத் திறக்­கத் திட்­ட­மிட்­டி­ருக்­கி­றீர்­கள்!

ஆக்ஸ்ஃ­போர்டு பல்­க­லைக்­க­ழ­கம் அறி­வு­டைய அடை­யா­ளம் மட்­டு­மல்ல; உரி­மை­யின் அடையாளம் இது! மனித உரி­மை­யின் அடை­யா­ளம்! உலக அடை­யா­ளம்! அப்­ப­டிப்­பட்ட பெரி­யா­ரின் படம் இங்கு திறக்­கப்­ப­டு­வது என்­பது உள்­ள­ப­டியே பெரு­மைக்­கு­ரிய ஒன்­றா­கும்!

பெரி­யார் உரு­வாக்­கிய சுய­ம­ரி­யாதை இயக்கத்தை உல­க­ம­ய­மாக்­கும் நோக்­கத்­து­டன் இந்­தக் கருத்தரங்கை ஏற்­பாடு செய்­துள்ள பேரா­சி­ரி­யர்­கள் பைசல் தேவ்ஜி, ஜேம்ஸ் மல்­லின்­சன் உள்­ளிட்ட அனைவருக்­கும் என்­னு­டைய நன்றி!

சுய­ம­ரி­யாதை இயக்­கத்­தின் தொடர்ச்­சி­யாக இருக்கும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் தலைவர் பொறுப்­பில் இருக்­கின்ற எனக்கு, இதை­வி­டப் பெருமை எது­வும் இருக்க முடியாது. பெரி­யா­ருக்கு உணவு பரி­மா­றிய பெருமை எனக்­குண்டு!தந்தை பெரி­யா­ரின் கொள்கை வாரிசு என்று நான் தொடர்ந்து சொல்­லிக் கொண்­டி­ருக்­கி­றேன். பல­முறை பெரி­யாரை நான் பார்த்­தி­ருக்­கி­றேன். குறிப்­பாக, எங்­கள் வீட்டில் நடை­பெற்ற திருமண நிகழ்ச்­சிக்கு அவர் வந்திருக்கி­றார். அந்த நேரத்தில் நான் அவ­ருக்கு உணவு பரி­மாறிஇருக்­கி­றேன். இதைச் சொல்­லும் ­போதே எனக்கு பெரு­மையாக இருக்­கி­றது!

ஒரு இனத்­துக்கே சுய­ம­ரி­யாதை உணர்வை ஊட்டி தலை­நி­மிர வைத்த தந்தை பெரி­யாரை இன்­றைக்கு உல­கம் கொண்­டாடி வரு­வ­து­தான் தமிழ்­நாட்­டிற்­கும், திரா­விட இயக்­கத்­திற்­கும் கிடைத்­தி­ருக்­கக் கூ­டிய மிகப்­பெ­ரிய பெருமை!

இங்­கி­லாந்­தில் இருக்­கின்ற செயிண்ட் அந்­தோணி கல்­லூ­ரி­யும், பெல்­லி­யோல் கல்­லூ­ரி­யும் இணைந்து ஆக்ஸ்ஃ­போர்டு பல்­கலைக்­க­ழ­கத்­தில் இரண்டு நாள் மாநாட்டை ஒருங்­கி­ணைக்­கி­றார்கள் என்று என்­னி­டம் சொன்­ன­போது, எனக்கு அள­வில்லா மகிழ்ச்சி ஏற்­பட்­டது.

ஆக்ஸ்ஃபோர்டில் தந்தை பெரி­யா­ரின் பகுத்தறிவு ஒளி! நினைத்­துப் பார்க்­கி­றேன்…1983 செப்டம்பர் 21ஆம் நாள், இதே ஆக்ஸ்ஃ­போர்டு பல்கலைக்கழகத்தில் மான­மிகு ஆசி­ரி­யர் வீரமணி அவர்­கள் கலந்து கொண்ட தந்தை பெரி­யார் நூற்­றாண்டு விழா நடந்­தது. அது நடந்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகி­றது. அதற்­குப் பிறகு, இன்­றைக்கு மீண்­டும் ஆக்ஸ்ஃபோர்­டில் தந்தை பெரி­யா­ரின் பகுத்­தறிவு ஒளி பர­வு­கி­றது!

தந்தை பெரி­யா­ருக்கு மிக மிகப் பிடித்த சொல் என்ன என்று கேட்­டீர்­கள் என்­றால், சுய­ம­ரி­யாதை! “உல­கத்­தில் எந்த அக­ரா­தி­யைக் கொண்­டு­வந்து காட்­டி­னா­லும், இதை­விட சிறந்த சொல்­லைக் காட்ட முடி­யாது” என்று சொன்­னார் தந்தை பெரி­யார். “ஒரு மனி­த­னுக்கு சுய­ம­ரி­யாதை எண்­ணத்தை ஊட்­டி­விட்­டால், அவன் வெற்றி பெற்­றி­டு­வான்” என்று சொன்­னார்.

அது­மட்­டு­மல்ல, “உல­கத்­தி­லேயே உயி­ரைக் கொடுத்து பெற வேண்­டிய ஒன்றே ஒன்று சுயமரி­யா­தை தான்” என்று அழுத்­தந்திருத்தமாகச் சொன்­னார்.

மனி­த­னின் சுய­ம­ரி­யா­தை­யைக் காக்­கத்­தான் அனைத்து அர­சி­யல் தத்­து­வங்­க­ளும் தேவை என்று சொல்லி, தான் உரு­வாக்­கிய இயக்­கத்துக்கே சுய­ம­ரி­யாதை இயக்­கம் என்று பெயர் வைத்­தார்.

அப்­ப­டிப்­பட்ட சுய­ம­ரி­யாதை இயக்­கத்­தின் நூற்றாண்டை முன்­னிட்டு, இந்த மாபெ­ரும் கருத்தரங்­கம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது. உலகப் புகழ்­பெற்ற ஆய்­வா­ளர்­க­ளால் ஆய்வுரைகள் நிகழ்த்­தப்பட்­டி­ருப்­ப­தைப் பார்த்து மகிழ்ச்­சி­யும், மன­நி­றை­வும் நான் பெறு­கிறேன்.

தமிழ்­நாடு அர­சின் திட்­டக்­குழு துணைத் தலைவராக சிறப்­பா­கப் பணி­யாற்­றிக் கொண்டிருக்கும் பேராசிரியர் ஜெய­ரஞ்­சன் அவர்­களும், பேராசிரியரும், வர­லாற்று ஆய்வா­ள­ரு­மான பேராசி­ரி­யர் ஆ.இரா.வெங்­க­டா­ ச­ல­பதி அவர்களும், பெரி­யா­ரின் பெண் விடு­த­லைச் சிந்­த­னை­களை ஆய்வு செய்த பேரா­சி­ரி­யர் எஸ்.ஆனந்தி அவர்களும் இன்­றைக்கு இங்கே வந்திருக்­கி­றார்­கள்.

இந்த விழா­வுக்கு மகு­டம் சேர்க்­கின்­றது போல, தமிழ்­நாட்­டின் மிகச்­சி­றந்த ஆய்­வா­ளர்­க­ளில் ஒருவ­ரான பேரா­சி­ரி­யர் முனை­வர்ஆ.இரா.வெங்கடா­ச­ல­பதி அவர்­க­ளும், முனை­வர்கார்த்­திக் ராம் மனோ­க­ர­னும் இணைந்து உரு­வாக்கியிருக்கக் கூடிய, ‘‘The Cambridge Companion to Periyar’’ என்ற ஆய்­வுக்­கட்­டு­ரைத் தொகுப்பு ஆங்­கில நூல் வெளி­யீட்டு விழா அமைந்­தி­ருக்­கி­றது. இதை வெளி­யி­டு­கின்ற பெரு­மை­யும் எனக்­குக் கிடைத்தி­ருக்­கி­றது! பெரி­யார் உல­க­ம­ய­மா­கி­விட்டார் என்­ப­தன் அடை­யா­ளம்!

இந்த சிறப்­பான நூலை, இந்த ஆண்டு ‘சாகித்ய அகா­டமி’ விருது பெற்­ற­வ­ரான ஆ.இரா.வெங்க­டா­ச­ல­பதி அவர்­க­ளு­டைய முயற்­சி­யால், பெரியார் குறித்த நூலை Cambridge University Press வெளியிட்­டி­ருக்­கி­றது. பெரி­யார் உல­க­ம­ய­மா­கி­ விட்­டார் என்­ப­தன் அடை­யா­ளம்­தான் இது!

தந்தை பெரி­யார் அவர்­கள் தமிழ்­நாட்­டில் பிறந்தார். தமி­ழில் பேசி­னார். ஆனால் அவருடைய சிந்­த­னை­கள் எல்­லை­க­ளுக்கு அப்­பாற்­பட்­டது; மானி­டச் சமு­தா­யத்­திற்­கா­னது! உலக மக்கள் அனை­வருக்­கும் பொது­வானது! அது­தான் பெரியா­ரி­யம்!

பெரி­யா­ரி­யம் என்­றால் என்ன என்று யாரா­வது கேட்­டால்,அவர்­க­ளுக்கு நாம் அறி­மு­கப்­ப­டுத்த வேண்­டிய அடிப்­ப­டை­கள் என்­ன­வென்­றால்

சுய­ம­ரி­யாதை
பகுத்­த­றிவு
சம­தர்­மம்
சமத்­து­வம்
மானு­டப்­பற்று
இரத்த பேத­மில்லை
பால் பேத­மில்லை
சுய முன்­னேற்­றம்
பெண்­கள் முன்­னேற்­றம்
சமூ­க­நீதி
மத­சார்­பற்ற அர­சி­யல்
அறி­வி­யல் மனப்­பான்மை

– என்று பெரியாரியத்தை அறி­மு­கப்­ப­டுத்த வேண்­டும். பரந்து விரிந்த அறிவுக் ­க­ட­லான அவ­ரு­டைய சிந்­த­னை­களை உள்­வாங்க, இந்த அறி­மு­கம் நிச்­ச­யம் பயன்­ப­டும்!

இந்­தச்சிந்­த­னை­க­ளின் அடிப்­ப­டை­யிலான சுயமரி­யாதை இயக்­கத்­தின் கொள்­கை­க­ளாக, ஆறு குறிப்­பு­களை, ‘குடி­அ­ரசு’ இத­ழில் பெரி­யார் எழு­தி­னார். பெரி­யார் கொள்கை, உல­க­ளாவிய கொள்கை! அவற்றை நான் சொல்­ல­வேண்டும் என்­றால், முத­லில், சமூக வாழ்­வில் ஒரு­வருக்கொருவர் எவ்வித உயர்வு, தாழ்­வும் இருக்­கக் கூடாது.
இரண்­டா­வது, ஏழை, பணக்­கா­ரன் ஏற்றத்தாழ்வு இல்­லா­மல் எல்­லாப் பொருளும்,பூமி­யும் எல்லோருக்­கும் சரிசமமாக இருக்­க­வேண்­டும்.

மூன்­றா­வது, ஆணுக்­கும், பெண்­ணுக்கும் சகல துறை­க­ளி­லும் சமத்­து­வம் இருக்க வேண்­டும்.

நான்­கா­வது, ஜாதி, மதம், தேசம், வருணம், கட­வுள் ஆகி­யவை இல்­லாத மனித சமூக ஒற்­றுமை நிலவ வேண்­டும்.

மக்கள் சுயமரியாதையுடன் வாழ, இறுதிக்காலம் வரை போராடியவர் தந்தை பெரியார்!

ஐந்­தா­வது, அனைத்து மனி­த­ரும் உழைத்து அதன் பயனை அனை­வ­ரும் சம­மா­கப் பயன்­­படுத்தவேண்­டும்.

ஆறா­வது, யாரும் எதற்­கும் அடிமை ஆகாமல், அவ­ர­வர் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகி­ய­வற்­றுக்கு இணங்கி நடத்த முழு சுதந்­தி­ரம் இருக்க வேண்­டும்.

இதை­யெல்­லாம் உல­கம் முழு­வ­தும் அனைத்து நாடுக­ளுக்­கும், அனைத்து மக்க­ளுக்­கும் பொதுவான கருத்­தி­யல்­கள்! அத­னால்­தான் பெரி­யார் கொள்கை, உல­க­ளா­விய கொள்கை என்று சொல்­கி­றோம்.
பழ­மை­வா­தம் நிரம்­பிய மண்­ணில் எழுச்சி பெற வைத்­த­வர்!

இவ்­வ­ளவு முற்­போக்­கான கருத்­தி­யல்­களை, நூறு ஆண்­டு­க­ளுக்­கும் முன்பே, அது­வும் பழமைவாதங்களும், மூட­நம்­பிக்­கை­க­ளும் நிரம்பியிருக்­கின்ற மண்­ணில் பேசி, மக்­களை எழுச்­சி பெற வைத்­த­வர் தந்தை பெரி­யார்!

சுய­ம­ரி­யாதை இயக்­கத்தை அவர் சாதா­ர­ணமாக தோற்­று­விக்­க­வில்லை. உல­கம் முழு­வ­தும் பய­ணம் செய்­தார். உல­கம் எப்­படி இருக்­கி­றது என்­பதை அனு­ப­வப்­பூர்­வ­மாக உணர்ந்து, தமிழ்­நாட்­டிற்கு எடுத்­துச் சொன்­னார்! தமிழ்­­நாடும் தலை­நி­மிர்ந்தது! அத­னால்­தான் அவர் தந்தை பெரி­யார்!

தந்தை பெரி­யா­ரின் உல­கப் பய­ணங்­களை சுருக்கமாக பட்­டி­ய­லிட்­டுச் சொல்­ல­வேண்­டும் என்­றால், 1929–ல் – மலே­சியா, சிங்­கப்­பூ­ருக்­கும்
1932–ல் எகிப்து, கிரீஸ், துருக்கி, ஜெர்­மனி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்­கி­லாந்து, போர்ச்­சுக்­கல்,சோவியத் ரஷ்யா என்று ஓராண்டு முழு­வ­தும் பய­ணம் செய்­தார். அப்­போது, இந்த இங்­கி­லாந்து நாட்­டில், ஜூன் 16 முதல் ஜூலை 6 வரைக்­கும் பல்­வேறு பகு­தி­க­ளுக்­குப் பய­ணம் செய்­தார். இங்­கே­தான், கம்­யூ­னிஸ்ட் தலை­வர் லெனின் எழு­திய ‘மதம்’ என்ற நூலை வாங்­கி­னார்.

இங்கே இருக்­கின்ற பார்ன்ஸ்­லே­வில் நடந்த கூட்டத்தில் பங்­கேற்று பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தொழி­லா­ளர்­க­ளுக்­கி­டையே துணிச்­ச­லா­கப் பேசினார். அந்­தக் கூட்­டத்­தில் இருந்த நிறையபேர், லேபர் பார்ட்­டி­யைச் சேர்ந்­த­வர்கள். அப்­போதும் இந்தி­யா­வில் நடந்து கொண்­டி­ருந்­தது பிரிட்டிஷ் ஆட்சி.

ஆனால், அதைப் பற்­றி­யெல்லாம் கவலைப்படாமல், “இங்கே தொழி­லா­ளர் நட்பு ஆட்சியை நடத்துவதாகச் சொல்­கி­றீர்­கள். ஆனால், இந்தியாவில் தொழிலாளர்க­ளுக்கு விரோ­த­மாக ஆட்சி நடத்துகிறீர்­கள்” என்று வெளிப்­ப­டையாகக் குற்றம் சாட்­டி­னார். இந்­தத் துணிச்­சல்­தான் தந்தை பெரி­யார். அதனால்­தான், காலங்­கள் கடந்­தும், என்­றென்­றும் பெரி­யார் என்று எல்­லோ­ராலும் நினைக்­கப்­ப­டு­கி­றார். இன்­னும் எத்­தனை நூறு ஆண்­டு­கள் கடந்­தா­லும், தந்தை பெரி­யார் தொடர்ந்து நினைக்­கப்­ப­டு­வார்; போற்­றப்­ப­டு­வார்!

அவர் இந்­தச் சமூ­கத்­தில் விதைத்­தது நாத்­தி­கம் இல்லை; பகுத்­த­றிவு! அத­னால்­தான் “நானே சொன்­னா­லும், உன் புத்­திக்கு சரி என்று பட்­டால் ஏற்­றுக்­கொள், இல்­லை­யென்­றால் விட்­டு­விடு” என்று சொன்­னார் தந்தை பெரி­யார். அறி­வியல் மனப்­பான்­மையை விதைத்­தார் பெரி­யார்!

வெறும் நம்­பிக்­கையை கண்­டு­பி­டிப்­பாக ஏற்றுக் கொள்­ளக் கூடாது என்று சொல்லி, எல்­லா­வற்­றை­யும் கேள்வி கேட்­கச் சொன்­னார். எல்­லாவற்றுக்­கும் விடை­யைக் கண்­டு­பி­டிக்க வேண்­டும். எதை­யும் லாஜிக்­க­லாக அணு­க­வேண்­டும். இந்த அறி­வி­யல் சிந்­த­னை­ யைத்­தான் பரப்­பி­னார்; அறி­வி­யல் மனப்­பான்­மை­யைத்­தான் அவர் விதைத்­தார்.

இன்­றைக்கு ஏற்­பட்­டி­ருக்­கின்ற அத்­தனை அறிவியல் மாற்­றங்­க­ளை­யும், ‘இனி­வ­ரும்உல­கம்’ என்று தொலை­நோக்­குப் பார்­வை­யு­டன்சொன்ன சிந்தனை­யா­ளர் தந்தை பெரி­யார்.
பெரியார் முழக்கம் இதழ் 11092025

You may also like...