லெனின் சுப்பையா நினைவுநாள்
பெரியார் சிந்தனையாளர் இயக்கம் நடத்திய லெனின் சுப்பையா நினைவேந்தல் படத்திறப்பு மற்றும் புதுச்சேரி மண்ணில் ஓபிசி,எஸ்.சி,எஸ்.டி பூர்வீகப் பெண்களின் (தாய் வழி) பிள்ளைகள் அகதிகளாக? நீதிக்கேட்போம்! உரிமை மீட்போம் பொதுக்கூட்டம் 21.02.2026 அன்று மாலை 5-மணிக்கு சுதேசி மில் புதுச்சேரியில் நடைபெற்றது. விடுதலை கலைக்குழு தோழர்கள் பாடல்களால் லெனின் சுப்பையா அவர்களின் சமூக அரசியல் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தினார்கள். பாடல்கள் வழியாக உணர்வு அலைகளில் காண்போரை மூழ்கடித்தார்கள். பாடல்களுக்கு இடையே இணைப்புகளையும் வழங்கினார்கள். திராவிட மகிழன் குழுவினருடன் இணைந்து லெனின் சுப்பையா பாடல்களை பாடினார். மகேசு (மக்கள் மன்றம்) லெனின் சுப்பையா மற்றும் செந்தாரகை படத்தினை திறந்து வைத்து பாடல்கள் வழியாக பாமரனுக்கும் உணர்வூட்டியவர் லெனின் சுப்பையா என்றும் புதுச்சேரி தாய்வழி பிள்ளைகள் பிரச்சனையில் போராட்டமே தீர்வு என்றார். கோவன் (செயலாளர் மகஇக) தன் பாடல்களுடன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். நிறைவாக கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசுகையில் ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு...
