Category: அண்மைச் செய்திகள்

சாதனையாளர்களுக்கு விருது கோபி ஒன்றியக் கழகத்தின் எழுச்சி விழா

சாதனையாளர்களுக்கு விருது கோபி ஒன்றியக் கழகத்தின் எழுச்சி விழா

கோபி ஒன்றியம் அளுக்குளி கிளைக் கழகத்தின் சார்பில் சாதனையாளர்களுக்குப் பாராட்டு விழா மற்றும் ஜாதி மறுப்பு திருமணம் புரிந்தவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கும் விழா கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திகஜோதி, மாவட்டச் செயலாளர் செல்வகுமார், திமு கழகப் பொறுப்பாளர் அளுக்குளி தங்கம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஒ.பி.மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இராம. இளங்கோவன் வெளியீட்டு செயலாளர் திவிக, வழக்குரைஞர் செகதீஸ்வரன், வேலுச்சாமி தலைமைக் கழகப் பேச்சாளர் திவிக, சுப்பிரமணியம் கொளப்பலூர் கிளை கழகப் பொறுப்பாளர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஜாதி மறுப்பு மணம் புரிந்தவர்களுக்கும் மற்றும் கல்வி, அரசுப் பணி, விளையாட்டு துறைகளில் பல்வேறு சாதனைகள் புரிந்த இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு கழகத்தலைவர் கொளத்தூர் மணி, கோபி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஏ முருகன் ஆகியோர் நினைவுப்பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்வில் கோபி மாவட்டக் கழகத் தோழர்கள் மற்றும் அளுக்குளிப்...

பாஜகவின் வெற்றியை உறுதிசெய்வதே தொகுதி மறுவரையறை எனும் சூழ்ச்சித் திட்டம்

பாஜகவின் வெற்றியை உறுதிசெய்வதே தொகுதி மறுவரையறை எனும் சூழ்ச்சித் திட்டம்

நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 33வது கூட்டம், 29/8/26 (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு, சென்னை மயிலாப்பூர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர் பேரன்பு தொகுத்து வழங்கினார். “ஜம்மு காஷ்மீர், அசாமில் தொகுதி மறுவரையறை ஏற்படுத்திய பாதிப்புகள்” குறித்து கார்த்தி ராஜேந்திரன், “50 விழுக்காடு தொகுதிகள் உயர்வு தீர்வாகுமா?” எனும் தலைப்பில் சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், தொகுதி மறுசீரமைப்பு ஆபத்துகளையும், பாஜவின் சதிதிட்டம் குறித்தும் ர.பிரகாசு, எழுத்தாளர் தமிழ் காமராசன் விளக்கி உரையாற்றினர். நிறைவாக பேசிய இடதுசாரி செயல்பாட்டாளர் மருதையன் அரசியல் சட்ட அமைப்புகளை சீர்குலைக்கும் அவசர காலத்தில் வாழ்கிறோம் என்று கூறினார். தொகுதி மறுவரையரைத் திட்டத்தின் ஆபத்துகளை விரிவாக விளக்கிப் பேசினார். “ஜம்மு காஷ்மீர், அசாமில் தொகுதி மறுவரையறை ஏற்படுத்திய பாதிப்புகள் என்ற தலைப்பில் கார்த்திக் ராஜேந்திரன் உரை: தொகுதி மறு வரையறை சட்டத் திருத்தத்தை யார் கையில்...

மனுஸ்மிருதி வேண்டாம்- ராகுல்; அது நமது பாரம்பர்யம்-ஆதித்யநாத்

மனுஸ்மிருதி வேண்டாம்- ராகுல்; அது நமது பாரம்பர்யம்-ஆதித்யநாத்

ராகுல்காந்தி பெண்களை அடிமைப்படுத்தும் மனுசாஸ்திரம் ஒழிக்கப்பட வேண்டும்; ஆணாதிக்கத்திலிருந்து பெண்கள் விடுபட வேண்டும் என்றும் பேசினார். இதற்கு பதிலளித்த உ.பி. முதல்வர் ஆதித்யநாத் ‘மனுசாஸ்திரம்’ புனிதமானது; இதை எதிர்த்துப் பேசுவதைக் கண்டிக்கிறேன் என்று பேசியிருக்கிறார். புனேயில் நடைபெற்ற தனது நான்காவது ‘சாத்ரோன் கி பி கூஞ்ச்’ (மாணவர் குரல்) நிகழ்ச்சியில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, Gen Z தலைமுறையைச் சேர்ந்த பெண்கள் “ஆணாதிக்க அமைப்பைத் தகர்த்தெறிய வேண்டும்” என்று வலியுறுத்தினார். AISSMS மைதானத்தில் உற்சாகமான வரவேற்புக்கு மத்தியில், மாணவிகளிடம் உரையாற்றிய அவர், “உரக்கப் பேசுங்கள்; பெருமையுடன் நில்லுங்கள்; சமூகத்தில் உங்களுக்கான இடத்திற்காகப் போராடுங்கள்” என்று கூறினார். மராத்தி மொழியில் பேசிய அவர், “புனே என்றாலே அன்பு” (Pune mhanje prem) என்றார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த அவரது உரையில், இளம் பெண்களுடன் பல்வேறு கலந்துரையாடல்களும் இடம்பெற்றன. அவர்கள் தங்களது கவலைகள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து...

ஜெர்ரி மாண்டரிங்’கில் மறைந்துள்ள ஆபத்து

ஜெர்ரி மாண்டரிங்’கில் மறைந்துள்ள ஆபத்து

உலகம் முழுவதும் தொகுதி மறுவரையறையின் போது பாகுபாடான நோக்கத்துடன் எல்லைகளை மாற்றுவதே ஜெர்ரிமாண்டரிங் (Gerryman -dering) என்பதன் பொருள். ஆனால் இத்தகைய குற்றச்சாட்டுகளை நிரூபிப்பது மிகவும் கடினமானதாகும். ஏனெனில் அதற்கான சட்ட மற்றும் தொழில்நுட்ப அளவுகோல்கள் மிகவும் சிக்கலானவை. உலக அனுபவம் இந்தியாவிலும், தொகுதி மறுவரையறை ஆணையத்தின் முடிவு இறுதியானது; அதை நீதிமன்றத்தில் கேள்விக்கு உள்ளாக்க முடியாது. நியாயமான மற்றும் பயனுள்ள பிரதிநிதித்துவம் என்பதற்கு என்ன பொருள் என்பது குறித்த நிறுவனரீதியான கட்டமைப்பும் புரிதலும் இல்லை. இதுவே உலகம் முழுவதும் மத அடிப்படையிலான ‘ஜெர்ரி மாண்டரி’ங்கை எதிர்த்து கேள்வி எழுப்புவதில் ஒரு முக்கியமான தடையாக உள்ளது. அமெரிக்காவில், இன அடிப்படையிலான ஜெர்ரி மாண்டரிங் மூலம் ஆப்பிரிக்க – அமெரிக்க வாக்காளர்கள் ஒதுக்கப்படுவதைத் தடுக்க 1965-ஆம் ஆண்டின் வாக்குரிமைச் சட்டம் (Voting Rights Act of 1965) இயற்றப்பட்டது. இனஅல்லது மொழிசார் சிறுபான்மையினரின் தேர்தல் பங்கேற்பையும், அவர்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பையும்...

‘தேவதைகள்’ பட்டம் வேண்டாம்

‘தேவதைகள்’ பட்டம் வேண்டாம்

“தீண்டப்படாத மக்களுக்கு காந்தியார் சூட்டிய பெயர் “ஹரிஜன்”; அதாவது கடவுளின் குழந்தைகள் என்றார்.இந்த அவமதிப்புச் சொல்லை அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட அனைத்து முற்போக்கு சிந்தனையாளர்களும் கடுமையாக எதிர்த்தார்கள். அந்தச் சொல் இன்றைக்கு வெறுப்புக்குரிய சொல்லாகவே மாற்றப்பட்டுவிட்டது. இன்று (31.08.2026) சட்டமன்றத்தில் தூய்மைப் பணியாளர் பிரச்சனை எழுந்த போது அதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்மோகன் தூய்மைப் பணியாளர்களுக்கு “தேவதைகள் ” என்று பெயர் சூட்டுகிறார். தேவர்கள் பட்டமோ, தேவதைகள் பட்டமோ இந்த மக்களுக்கு வேண்டாம் ; முதலில் மனிதர்களாக அவர்களை நடத்துங்கள். அவர்களுக்கு வழங்கப்படுகிற ஊதியம் குறைந்தது ஒரு நாளுக்கு 2,000 ரூபாயாவது இருக்க வேண்டும். அனைத்து ஜாதியினரும் பங்கேற்கும் அரசு வேலையாக அது மாற்றப்பட வேண்டும். பணி நிரந்தரம் ஊதிய உயர்வு போன்ற அடிப்படை கோரிக்கைகள் பற்றி அமைச்சர் ராஜ்மோகன் வாய் திறக்கவே இல்லை. முதலமைச்சரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்பதில் இவர்களுக்கு என்ன தடை இருக்கிறது?...

பெரியார், அம்பேத்கர் பெயர்கள் இருட்டடிப்பின் பின்னணி என்ன?

பெரியார், அம்பேத்கர் பெயர்கள் இருட்டடிப்பின் பின்னணி என்ன?

பிற்படுத்தப்பட்டோருக்கான கொள்கைக் குறிப்பேட்டில் பெரியார், அம்பேத்கர், நேருவின் பெயர்கள் இடம்பெறாமல் போனது ஏன்? இது திட்டமிட்டு மறைக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர் இந்த குறிப்பேட்டைப் படித்தாரா? அப்படி படித்திருந்தால் இது விடுபட்டது ஏன் என்று கேட்டாரா? எதிர்க்கட்சிகள் கேட்டதற்குப் பிறகு இந்த உண்மை வெளியே வந்திருக்கிறது. இதற்கு நான் பொறுப்பேற்கிறேன். மீண்டும் புத்தகங்கள் அச்சடிக்கப்படும் என்ற ஒரு காரணத்தை இப்போது கூறுகிறார். இவர்கள் ஏற்றுக் கொண்டதாக கூறிக் கொண்டிருக்கும் கொள்கைத் தலைவர்களுக்கே இந்த நிலை; நிர்வாகத்தில் ஏதோ திட்டமிட்ட சதிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. மோடி இடதுசாரிகளுக்கு குறி வைத்துக் கொண்டிருப்பது போல் தமிழ்நாட்டில் கல்லூரிகளில் மாணவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியிலும் சேராமல் தவிர்க்க வேண்டும் என்று அரசாணை வெளியிட்டது யார் ? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அரசாணை வெளியிட்டது யார்? இதற்குப் பின்னால் என்ன சதி நடக்கிறது? குறிப்பாக...

நீதிபதியின் துணிவானக் கருத்து

நீதிபதியின் துணிவானக் கருத்து

உச்ச நீதிமன்றத்தைக் கண்காணிக்க சிறப்பு அதிகாரம் கொண்ட நிபுணர்கள் குழு ஒன்றை (Distinguished Jurists) குடியரசுத் தலைவர் நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் பேசி இருப்பது உண்மையிலேயே வரவேற்கத்தக்க ஒன்றாகும். குடியரசுத் தலைவருக்கு சட்டம் இந்த உரிமையை வழங்கி இருக்கிறது என்றாலும், 76 ஆண்டு காலமாக இதுவரை அப்படி ஒரு நியமனம் நடக்கவில்லை என்று நீதிபதி புயான் புதுதில்லி தேசிய பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பேசியிருக்கிறார். இந்த உரை நிகழ்த்தப்பட்ட சூழல் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.கே.அய் சூரியகாந்த் இளைஞர்களைக் கரப்பான் பூச்சிக்கு ஒப்பிட்டுக் கூறிய கருத்துக்கு இளைஞர்கள், மாணவர்களிடையே எதிர்ப்புகள் வெடித்துக் கிளம்பின. இதைத் தொடர்ந்து அய்தராபாத்தில் உள்ள நெல்சார் சட்டப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தலைமை நீதிபதி அழைக்கப்பட்டதற்கு, மாணவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். தலைமை நீதிபதி நிகழ்ச்சிக்கு வரவில்லை. உடனே வழக்கறிஞர்களின் அமைப்பான பார்...

செங்கொடிக்கு கழக சார்பில் வீரவணக்கம்; பேரறிவாளன் பங்கேற்றார்!

செங்கொடிக்கு கழக சார்பில் வீரவணக்கம்; பேரறிவாளன் பங்கேற்றார்!

தோழர் செங்கொடியின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை, ஆக-28, அன்று மாலை 6 மணிக்கு சென்னை ஷெனாய் நகர் வைத்தியநாதன் தெருவில், மாவட்ட துணைச் செயலாளர் ஆ.வ. வேலு ஒருங்கிணைத்தார். தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் கு. அன்பு தனசேகர், மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மாவட்டத் தலைவர் மா. வேழ வேந்தன், மாவட்ட அமைப்பாளர் ந. தட்சிணாமூர்த்தி, மாவட்டத் துணைச் செயலாளர் இராவணன், தோழர்கள் சிகாமணி, அசோக், சுரேந்தர் ஆகியோர் பங்கேற்றனர். தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக, தோழர்கள் ஷர்மிளா, குடிஅரசு (மாவட்ட அமைப்பாளர்) ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் தோழர் பேரறிவாளன் பங்கேற்றார். பெரியார் முழக்கம் இதழ் 03092026

அனிதா நினைவுநாளில் உறுதியேற்பு! ‘கல்வி உரிமைகளை மீட்டெடுப்போம்’

அனிதா நினைவுநாளில் உறுதியேற்பு! ‘கல்வி உரிமைகளை மீட்டெடுப்போம்’

நீட் எதிர்ப்புக்கு உயிர்ப்பலி தந்த அனிதாவின் 9-ஆம்ஆண்டு நினைவு நாள் செப்டம்பர்-1ம் தேதி மாலை 5.30 மணி அளவில் பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நீட் ஒழிப்புக்கான உறுதி ஏற்பு நாளாக நடைபெற்றது. நீட் எதிர்ப்புக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பின் சார்பில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இந்த நினைவு நாள் திட்டமிடப்பட்டது. கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி மறுத்ததால் திராவிடர் கழகத்தின் தலைமையிடமான பெரியார் திடலுக்கு மாற்றப்பட்டது. பெரியார் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த அனிதாவின் படத்திற்கு தலைவர்கள் பலரும் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தினர். ஆசிரியர் கி.வீரமணி, நடிகர் சத்யராஜ் வீரவணக்க உரையாற்றினர். நீட் எதிர்ப்பையும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றவும் தொடர்ந்து போராடுவோம் என்ற உறுதி மொழி ஏற்கப்பட்டது. தோழர் தியாகு உறுதிமொழியைப் படித்தார். நிகழ்வில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைமை நிலையச் செயலாளர்....

இந்தியாவுக்கு அய்.நா. கண்டனம் ஜாதியும் இனப்பாகுபாடுதான்; உள்நாட்டுப் பிரச்சனை அல்ல!

இந்தியாவுக்கு அய்.நா. கண்டனம் ஜாதியும் இனப்பாகுபாடுதான்; உள்நாட்டுப் பிரச்சனை அல்ல!

“மனிதர்கள் அனைவருமே சமமாக முடியாது; பிறப்பிலேயே கடவுள் உருவாக்கியிருக்கிறார். இந்தப் பாகுபாடுகளை ஏற்றுக்கொண்டு வாழப் பழக வேண்டும் இந்த வாழ்க்கை தர்மம் தான் நமது சனாதனம்” இதுதான் சனாதன நெறிமுறை என்கிறது பார்ப்பனியம். வேற்றுமையில் ஒற்றுமை என்கிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத். வேற்றுமை என்பது இவர்கள் பூசி மெழுகி ஏமாற்றும் சொல். ‘பிராமண’ அர்ச்சகர்களையும் தூய்மைப் பணியாளர்களையும் வேற்றுமை என்ற அடையாளத்திற்குள் கொண்டுவர முடியுமா? நிச்சயமாக முடியாது. இதற்குப் பெயர் பாகுபாடு (Discrimination). வெள்ளையர்கள் கருப்பர்களை ஒதுக்கி வைத்தது பாகுபாடு. ‘பிராமணர்’கள் உயர் பிறவிகள்; ‘சூத்திர, பஞ்சமர்’கள் இழி பிறவிகள் என்பது பாகுபாடு. மனிதர்களுக்குள் திணிக்கப்படும் பாகுபாடுகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பது சர்வதேச சட்டம். இனப் பாகுபாடுகளை ஒழிக்கும் அமைப்பு (Committee on the Elimination of Racial Discrimination-CERD) 1968-ல் அய்.நாவில் உருவாக்கப்பட்டு ஒவ்வொரு நாட்டையும் கண்காணித்து வருகிறது. இந்த சர்வதேச உடன்பாட்டில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. இனப் பாகுபாடு...

மோகன் பகவத் வருகைக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு

மோகன் பகவத் வருகைக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு

வாசிங்டன், ஆக.21, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வரும் 29 ஆம் தேதி நியூயார்க்கில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க செல்ல உள்ளார். இந்நிலையில், பன்னாட்டு மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் தலைவர் ஆசிப் மஹ்மூத் மற்றும் ஆணையர் ஜீன் மில்ஸ் ஆகியோர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மீது அமெரிக்காவில் பொருளாதார தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர். அவர்களின் கருத்துகள், ஆணையத்தின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் (20.8.2026) அன்று பதிவிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உறுப்பினராக உள்ளார். இந்த அமைப்பு பல துணை அமைப்புகளைக் கொண்டது. அந்தத் துணை அமைப்புகள் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் உள்ளிட்ட மதச் சிறுபான்மையினர் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளன. இப்போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அமெரிக்கா வர திட்டமிட்டுள்ளார். முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வன்முறைச் செயல்களிலிருந்து பகவத்தின் வரு கையை தனிமைப்படுத்திப் பார்க்க முடியாது. எனவே, ஆர்.எஸ்.எஸ்....

ச.குப்பம்மாள் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு!

ச.குப்பம்மாள் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு!

முன்னாள் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் பெரியார் வெங்கட் தாயார் மறைந்த ச. குப்பம்மாள் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு கள்ளக்குறிச்சி மாவட்டக் கழகத்தின் சார்பில் பெரியார் வெங்கட் இல்லத்தில் ஆக-4, செவ்வாய்கிழமை அன்று காலை 10 மணியளவில் மு.நாகராஜ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்விற்கு கி.ஆனந்தன், இரா. கார்மேகம், வீ. முருகன், சி. சாமிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மக்கள் அதிகாரத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் ஆ.இராமலிங்கம், கழக விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூ. ஆ. இளையரசன், மாவட்டத் தலைவர் க.மதியழகன், ந. வெற்றிவேல், தபெதிக செ. பிரபு, திராவிடர் கழக சண்முகம், தலைமைக்குழு உறுப்பினர் ந. அய்யனார் ஆகியோர் நினைவேந்தல் உரை நிகழ்த்தினர்.கழகத் தலைவர் கொளத்தூர் மணி மறைந்த ச. குப்பம்மாள் அவர்களின் படத்தை திறந்துவைத்து நினைவேந்தல் உரை நிகழ்த்தினார். மா. குமார் நன்றியுரையாற்றினார். வேலூர் மாவட்டச் செயலாளர் இரா. சிவா, குப்பம்மாள் அவர்களின் கணவர் மு.சத்தியமூர்த்தி மகன்களான ச. ஜெயபால்,...

கருத்தரங்கு, குடும்ப விழா நிகழ்வுகளுக்கு தயாராகிறது சென்னை மாவட்டம்

கருத்தரங்கு, குடும்ப விழா நிகழ்வுகளுக்கு தயாராகிறது சென்னை மாவட்டம்

சென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம், ஆக-23 அன்று மாலை 6 மணிக்கு கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. சமகால அரசியல் சூழ்நிலைகள் குறித்தும், கழகச் செயல்பாடுகள் குறித்தும் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தனது உரையில் குறிப்பிட்டார். ‘‘கழகத் தோழர்களுக்கிடையே நட்புணர்வையும், ஒருங்கிணைப்பையும் வலிமையாக்கும் நோக்கத்துடன் இந்தப் பரப்புரைப் பயணத்தை ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறோம். அந்த நோக்கத்தில் இந்தப் பயணங்கள் கழகத்துக்கு புத்துணர்வை உருவாக்கி வருகிறது’’என்றார். கட்சி அரசியல் வேண்டாம் என்று பெரியார் இயக்கம் நோக்கி, வரும் தோழர்கள் அரசியல் கட்சிகளின் பண்புகளாகிய சுய விளம்பரம், தன்முனைப்புகளை தவிர்த்துக் கொள்கை உணர்வுகளுக்கு முன்னுரிமை தரும் உளவியலை வளர்த்துக் கொள்ள வேண்டும். கழகத்தின் பதவிகள் செயல்பாட்டுக்கு உரியவைகளே தவிர, அதிகார மய்யம் அல்ல என்ற உணர்வோடு தோழமையை வளர்த்தெடுக்க வேண்டும்” என்றார். 1996 ஆம் ஆண்டிலிருந்து பெரியார் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகமாக பயணித்து...

சேலம்-நாகர்கோவில் பரப்புரைப் பயணக் குழு கலந்துரையாடல் கூட்டம்!

சேலம்-நாகர்கோவில் பரப்புரைப் பயணக் குழு கலந்துரையாடல் கூட்டம்!

பயணத்தின் நிறை, குறை குறித்து விவாதிக்கப்பட்டு, வரவு செலவும் சரிபார்க்கப்பட்டது. கலந்துரையாடல் கூட்டம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், மாவட்டப் பொருளாளர் சம்பத், மாவட்ட அமைப்பாளர்கள் அண்ணாதுரை, அன்பு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், மேட்டூர் நகரத் தலைவர் மார்டின், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கதுரை, சீனிவாசன், காளியப்பன், நங்கவள்ளி நகரச் செயலாளர் சந்திரசேகரன், வனவாசி நகரத் தலைவர் செந்தில், கொளத்தூர் ராஜா, சேலம் மாநகர அமைப்பாளர் தேவராஜ், தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் நாகராஜ், கவியரசு, கொளத்தூர் கணேசன், செந்தமிழ் கலையமுதன், கோகுலகண்ணன், கே. ஆர். தோப்பூர் கண்ணன், ஆகியோர் பங்கேற்றனர். எஸ்.எம்.எஸ் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் தவமணி 10 நாற்காலிகளை மேட்டூர் பெரியார் படிப்பகத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார்.பயணகுழுத் தோழர்களுக்கு சேலம் மாவட்டப் பொருளாளர் சம்பத் விருந்து ஏற்பாடு செய்திருந்தார்....

தொகுதி அதிகரிப்பு தீர்வாகுமா?

தொகுதி அதிகரிப்பு தீர்வாகுமா?

தொகுதி மறுவரை சட்டத்தில் 50 விழுக்காடு இடங்களை உயர்த்த ஒன்றிய ஆட்சி முன்வரும்போது அதை ஏற்பதால் உருவாகும் நெருக்கடிகளை முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில நாளேட்டில் 17.04.2024 அன்று எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகள்… ஒவ்வொரு மாநிலமும் தற்போது பெற்றுள்ள பிரதிநிதித்துவத்தை இழக்கக் கூடாது என்ற அடிப்படையில் மக்களவையின் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கையை 550 இலிருந்து 850 ஆக உயர்த்தும் முன்மொழிவும் பிரச்சினைக்குரியது. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அதிகாரம் என்பது உறுப்பினர்களின் முழுமையான எண்ணிக்கையில் மட்டும் இல்லை; மொத்த அவை உறுப்பினர்களில் ஒரு மாநிலம் பெற்றிருக்கும் ஒப்பீட்டு பங்கிலும் உள்ளது. உதாரணமாக: கேரளா தனது 20 இடங்களையும் தக்கவைத்துக்கொண்டாலும், 543 உறுப்பினர்களைக் கொண்ட தற்போதைய மக்களவையில் அதன் பங்கு 3.68%. 850 உறுப்பினர்களாக விரிவுபடுத்தப்பட்டால் அதே 20 இடங்களின் பங்கு 2.35% ஆகக் குறையும். தமிழ்நாட்டின் இடங்கள் 39 இலிருந்து 49 ஆக அதிகரித்தாலும், அதன் ஒப்பீட்டு பங்கு...

தேவை, பூணூலும் குடுமியும்

தேவை, பூணூலும் குடுமியும்

ராமஜென்ம பூமி அறக்கட்டளைக்கு முதல் முறையாக தலைமை நிர்வாக அதிகாரி நியமனம் செய்ய முடிவெடுக்கப்பட்டு மொத்தம் 18 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் பூணூல் அணிவீர்களா? குடுமி வளர்ப்பீர்களா? அசைவம் சாப்பிடுவீர்களா? சைவம் சாப்பிடுவீர்களா? மதுபானம் அருந்தும் பழக்கம் உள்ளதா? என்பன உள்பட பல்வேறு வித்தியாசமான கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன. இந்த பொறுப்புக்கு 5,300 பேர் விண்ணப்பம் செய்தனர். இதில் 18 பேர் இறுதி செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இவர்களின் வயது 50 முதல் 70–க்குள் உள்ளது. 18.8.2026 அன்று நேர்காணல் தொடங்கியது. நேர்காணலின் ஒரு பகுதியாக விண்ணப்ப படிவம் ஒன்றை நிரப்பி வழங்கினர். அதில் மொத்தம் 18 வகையான கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. அதில்தான் மேற்கண்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. (ராமன் மாட்டுக்கறி சாப்பிட்டதையும், கள் குடித்ததையும் வால்மீகி இராமாயணம் கூறுகிறது). இதுதவிர சம்பந்தப்பட்டவர்களின் குடும்பப் பின்னணி, அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எந்த வகையான பணி செய்கின்றனர். ராமன் கோயிலில்...

சட்டமன்ற உறுப்பினர்களுக்கான கார் சலுகையும், பெரியார் காட்டிய எளிமையும் !”

சட்டமன்ற உறுப்பினர்களுக்கான கார் சலுகையும், பெரியார் காட்டிய எளிமையும் !”

சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரு காரும், அதனைப் பராமரிக்க மாதம் ஒரு இலட்சம் ரூபாய் செலவுத் தொகையும் வழங்கப்படும் என்று ஆக-19, அன்று சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவித்தபோது, எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் அனைவரும் அதனை ஆதரித்தனர். தன்னிடம் கார் இல்லை என்று கூறி இந்த வேண்டுகோளை முன்வைத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணியிடம் கார் உள்ளது என்பது, அவரது தேர்தல் பிரமாணப் பத்திரத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை ஆதரித்துப் பேசிய இதர சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும், தங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விலையுயர்ந்த கார்கள் இருப்பதை ஏற்கனவே தேர்தல் பத்திரத்தில் ஒப்புக் கொண்டுள்ளனர் என்பதே உண்மை. முன்பு சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டபோது அதனை மறுத்த பொதுவுடைமைக் கட்சியினர் கூட, தற்போது இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. திமுக மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆடம்பரக் கார்களை வைத்திருப்பவர்கள் தான்; அவர்களிடமிருந்தும் “தங்களுக்குக் கார் வேண்டாம்” என்ற...

மாநில உரிமைகளில் மற்றொரு குறுக்கீடு

மாநில உரிமைகளில் மற்றொரு குறுக்கீடு

மாநிலத்தில் உள்ள நிலங்களும் கனிமங்களும் மாநில உரிமைகளுக்கு உட்பட்டவை என்று சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் 18 வது பிரிவு திட்டவட்டமாக கூறுகிறது. இந்த மாநில உரிமையை பறிக்கும் மசோதாவை கடந்த ஆக-13, அன்று எந்த விவாதமும் இல்லாமல் நிறைவேற்றி இருக்கிறது ஒன்றிய ஆட்சி. சுரங்கம் மற்றும் கனிமவள சட்டத் திருத்தத்தின் படி வரிவிதிப்பு உரிமையை ஒன்றியஆட்சி கையில் எடுத்து இருக்கிறது. மாநில அரசுகளின் வரி விதிக்கும் உரிமையை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறது. மாநிலப் பட்டியலில் இடம்பெற்றுள்ள உரிமையைப் பறித்து கூட்டாட்சி தத்துவத்தையே குலைக்கிறது இந்தச் சட்டத் திருத்தம்! முதலமைச்சர் விஜய் தனது சுதந்திர நாள் உரையில் ஒன்றிய ஆட்சியோடு நிர்வாக ரீதியாக ஒத்துழைப்போம் என்றும் மாநில உரிமையை விட்டுத்தர மாட்டோம் என்றும் பேசியிருக்கிறார். மாநிலங்களின் பட்டியலில் உள்ள ஒரு பிரச்சனையில் ஒன்றிய அரசு இப்படி தலையிடுவது மாநில உரிமையைப் பறிப்பதாகும் என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் உணர்வாரா? இதற்கான கண்டனக் குரலை...

பாஜகவைக் கண்டு தவெக நடுங்குவது ஏன்?

பாஜகவைக் கண்டு தவெக நடுங்குவது ஏன்?

தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாட்டில் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் எம்.சாய்குமார் அவர் பதவி ஓய்வு பெற்ற நிலையில் நீட்டிப்புக் கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி ஒப்புதலைப் பெற்றது த.வெ.க ஆட்சி. தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளின் போராட்டங்களிலோ அல்லது காக்ரோச் ஜனதா பார்ட்டி (CJP) கட்சியின் போராட்டங்களிலோ பங்கேற்க விடாமல் தடுக்க வேண்டும் என்ற உத்தரவுக்குக் காரணமாக இருந்தவர்; இந்தத் தலைமைச் செயலாளர் தான் என்பது இப்போது ஆதாரத்துடன் வெளி வந்திருக்கிறது. ஜூலை-28,ஆம் தேதி தலைமைச் செயலாளர் கூட்டிய சட்டம் ஒழுங்கு குறித்த ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அவரது ஆலோசனைப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டதோடு, ஆகஸ்ட்-17, ஆம் தேதி சிறப்பு அதிகாரியின் வழியாக கல்வி நிறுவனங்களுக்கு இந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இது மிகவும் அவசரமான நடவடிக்கை என்று அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடும் எதிர்ப்புக்குப் பிறகு அடுத்த இரண்டு நாட்களிலேயே ஆகஸ்ட்-19ஆம் தேதி இந்தச் சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது. திரும்பப்...

தொடர்கிறது, பார்ப்பன ஆதிக்கம்

தொடர்கிறது, பார்ப்பன ஆதிக்கம்

அரசியலிலும் சமூகத்திலும் பார்ப்பனியமும் மனுசாஸ்திரமும் அதிகாரம் பெற்றுவருகிறது; இதை உறுதிப்படுத்தும் நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு. திருட்டுக்கு ’தீண்டாமை’ இல்லை கோயில் கர்ப்பக் கிரகத்தில் “தீண்டாமை”யை ஆகமங்களைக்கூறி பின்பற்றி வருகிறது பார்ப்பனியம். அந்த ’கர்ப்பக்கிரகத்தில்’ அம்மன் நகைகளை திருடுகிறார்கள் அர்ச்சகர்கள். ஆலந்தூர் பொன்னி அம்மன் கோயில் அர்ச்சகராக இருக்கும் ரெங்கநாதன் கருவறையில் இருந்த 190 கிராம் வெள்ளி கிரீடம், 270கிராம் வெள்ளி ஜல்லடை, 10 கிராம் தங்கத் தாலியை திருடி கைது செய்யப்பட்டுள்ளார். கோயில் அறங்காவலர் புகாரில் அர்ச்சகர் வீட்டில் இருந்த திருட்டுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பார்ப்பனர் அல்லாதார் கருவறையில் நுழைந்தால் தீட்டு; ஆனால் கருவறையில் நுழையும் பிறவி உரிமை பெற்றவர்களே கடவுளுக்கு ஏதும் சக்தி இல்லை என்பதை நன்கு உணர்ந்ததால் அம்மன் தாலியையே திருடி கைதாகிறார்கள். சாக்கடைக் குழியில் இட ஒதுக்கீடு கருவறையில் ‘பிராமணர்’களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு இருப்பது போல் கழிவுநீர் அடைப்பைச் சுத்தம் செய்யும் வேலை பட்டியலினப் பிரிவினருக்கு...

பேரணியில் முழக்கங்கள்

பேரணியில் முழக்கங்கள்

பேரணியில் கழகத் தோழர்கள் எழுப்பி வந்த முழக்கங்கள் மக்களைக் கவர்ந்தது. ஒழியட்டும் ஒழியட்டும்! மக்களைப் பிரிக்கும் பார்ப்பனியம் ஒழியட்டும் ஒழியட்டும் சுயமரியாதை வாழ்க்கையே சுகமான வாழ்க்கை பில்லி,சூனியம்,ஜோசியம் எல்லாம் சாமியர்கள் வயிறு வளர்க்க உதவுது காசை எல்லாம் செலவு செய்து தமிழர் வாழ்வு சீரழியுது! நடந்ததைச் சொல்லும் ஜோதிடத்தால் நடக்கப் போவதை சொல்ல முடியுமா? அறிவுடனே நாம் இருந்தால் ஜோதிடப் புரட்டு நடக்குமா? ஜாதி மறுப்பு திருமணம் செய்வீர் காதலோடு மகிழ்வாய் வாழ்வீர் ஜாதியத்தைக் காப்பாற்ற பெண்களைத்தான் நம்புறான்! பெண்கள் உரிமை பேசினால் நான் ஆம்பள என்கிறான். தடுத்திடுவோம் தடுத்திடுவோம் ஜாதி ஆணவக்கொலையைத் தடுத்திடுவோம் காதல் செய்வீர் காதல் செய்வீர் இளைஞர்களே காதல் செய்வீர் ஜாதி ஒழிக்க காதல் செய்வீர் சட்டமியற்று சட்டமியற்று ஜாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டமியற்று வேண்டாம் வேண்டாம் ஜாதிக்குள்ளே திருமணம் வேண்டவே வேண்டாம் வாழ்வில் மூடநம்பிக்கை வேண்டாம் வேண்டாம் சனாதனம் என்பது பார்ப்பனியமே பார்ப்பனியம் என்பது...

உழைப்புக்குக் கிடைத்த வெற்றி

உழைப்புக்குக் கிடைத்த வெற்றி

மாநாட்டுப் பொறுப்பாளர்கள் காரைக்குடி இளங்கோ, பெரியார்முத்து விடுத்துள்ள அறிக்கை. திராவிடர் விடுதலைக் கழகத்தின் “வாழ்வியல் மாற்றத்திற்கான பரப்புரைப் பயணத்தின்” நிறைவு மாநாடு, 12.08.2026 அன்று காரைக்குடியில் எழுச்சியுடனும், சிறப்புடனும், வரலாற்றில் இடம்பிடிக்கும் வகையிலும் நடைபெற்று முடிந்துள்ளது. தோழர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ள தென் மாவட்டத்தில் இத்தகைய சிறப்பான மாநாட்டை நடத்த முடியும் என்பதை காரைக்குடி மாநாடு நிரூபித்துள்ளது. இது ஒரு மாநாட்டின் வெற்றி மட்டுமல்ல; சிவகங்கை மாவட்டத்தில் இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் புதிய தொடக்கம். காரைக்குடியில் மாநாடு நடத்தப்படும் என்று தலைமைக்குழு அறிவித்தபோது, “இவ்வளவு பெரிய மாநாட்டை நம்மால் நடத்த முடியுமா?” என்ற தயக்கம் எங்களுக்குள் இருந்தது. ஆனால் தலைவர், தலைமைக்குழு மற்றும் முன்னணித் தோழர்களின் வழிகாட்டுதலும், மாவட்டத் தோழர்களின் அர்ப்பணிப்பும், தமிழகம் முழுவதிலுமிருந்து கிடைத்த ஒத்துழைப்பும், நன்கொடையாளர்களின் ஆதரவும் அந்தத் தயக்கத்தை நம்பிக்கையாக மாற்றின. நம்பிக்கை செயலாக மாறியது; செயல்பாடு வரலாற்று வெற்றியாக மாறியது. மாநாட்டிற்கான...

வணிகர்கள், பொதுமக்கள் பயணக்குழுவுக்குப் பாராட்டு!

வணிகர்கள், பொதுமக்கள் பயணக்குழுவுக்குப் பாராட்டு!

6ம் நாள்: பட்டுக்கோட்டை அம்பேத்கர் சிலை அருகிலும், கைகாட்டி பேருந்து நிலையத்திலும், வடகாடு பேருந்து நிறுத்தத்திலும் ஆக-11 அன்று முறையே பாரி, கலைச்செல்வன், சின்னப்பத்தமிழர் ஆகியோர் தலைமையில் பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற்றன. புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு கழகப் பொருளாளர் துரைசாமி, பெரியாரின் தளபதி பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி சிலைக்கு நல்லதம்பி ஆகியோர் மாலை அணிவித்தனர். எழுகதிர்(தமிழ் வழிக் கல்வி இயக்கம்) வரவேற்புரை ஆற்றினார். ஜாதியில் திருமணம் என்ற தலைப்பில் வீரமணி-நிர்மல்குமார் இருவரும் கேள்வி பதில் பாணியில் உரைநிகழ்த்தினர், வாழ்வில் மூடநம்பிக்கை என்ற தலைப்பில் சூலூர் பன்னீர்செல்வம், கலைச்செல்வன், மதத்தில் பார்ப்பனியம் என்ற தலைப்பில் முகில்ராசு, தேன்மொழி, ஆகியோர் கருத்துரையாற்றினர். நிறைவாக துரைசாமி, அய்யனார், சின்னப்பத்தமிழர் (தமிழ்மொழிக் கல்வி இயக்கம்) ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் திராவிடர் கழகத் தோழர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். பட்டுக்கோட்டையில் ரயில்வே கேட்டில் தோழர்கள் கிருஷ்ணன், நல்லதம்பி, ஜெயச்சந்திரன் சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் துண்டறிக்கை வழங்கினர். கூட்டம்...

பயணத்துக்குத் தோழமை அமைப்புகளின் பேராதரவு

பயணத்துக்குத் தோழமை அமைப்புகளின் பேராதரவு

நாகர்கோவில் அணி: 4வது நாள்: திருநெல்வேலி, தென்காசியில் 09.08.2026 ஞாயிறு காலை 10.00 மணிக்கு சேரன்மகாதேவி பகுதியிலும், மதியம் 12.30 மணிக்கு வீரவநல்லூர் பகுதியிலும், மாலை 3.00 மணிக்கு தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியிலும், மாலை 5.30 மணிக்கு தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியிலும் நடைபெற்றது. கழக திருநெல்வேலி மாவட்டத் தலைவர் பால்வண்ணன் தலைமை வகித்தார். தென்காசி மாவட்டச் செயலாளர் சு.அன்பரசன் முன்னிலை வகித்தார். தென்காசி மாவட்டத் தலைவர் மாசிலாமணி வரவேற்புரை ஆற்றினார். பால்.பிரபாகரன்(கழகப் பரப்புரைச் செயலாளர்), நங்கவள்ளி அன்பு (சேலம் மாவட்ட அமைப்பாளர்), கணபதி (ஆத்தூர் நகரச் செயலாளர்), அழகேசன் (விசிக மாவட்டச் பொருளாளர் திருநெல்வேலி), செல்வசுந்தரசேகர் (பெரியார் உணர்வாளர் சேரன்மகாதேவி), சிவராஜ் (பகுஜன் சமாஜ் கட்சி மாவட்டப் பொருளாளர் திருநெல்வேலி), கருணாநிதி (பெரியார் உணர்வாளர் வீரவநல்லூர்), ச.பெரியார் பித்தன் (புஇமு), மு.தமிழ்ச்செல்வன் (பெரியார் உணர்வாளர்), ஜோயல் மில்டன் (ஆலங்குளம் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் திமுக), பொன். அறிவழகன்...

‘பரப்புரைகள் தொடர வேண்டும்’

‘பரப்புரைகள் தொடர வேண்டும்’

(பயணத்தில் குழுவினர் சந்தித்த நிகழ்வுகளை குழுவின் தலைவர்கள் மாநாட்டு மேடையில் விளக்கினர்.) நாகர்கோவில் அணியின் தலைவர் நங்கவள்ளி கிருஷ்ணன் தனது உரையில் குறிப்பிட்டதாவது: அதிக எண்ணிக்கையிலான தோழர்கள் பங்கெடுத்த அணி நாகர்கோவில் அணி! குறிப்பாக சேலம் தோழர்கள் 20-க்கும் மேற்பட்டோர் பரப்புரைப் பயணத்தில் முழுமையாக இருந்தனர். முன்னேற்பாடு குழுவினரும், பரப்புரைக் கூட்ட ஏற்பாட்டுக் குழுவினரும் உணவு, தங்குமிடம் ஆகியவற்றை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். தென்மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தினோம். பொதுமக்கள் பலர் அடிக்கடி இதுபோன்ற கூட்டங்களை நடத்த வேண்டும் என்று பல இடங்களில் கேட்டுக் கொண்டனர். இரண்டு இடங்களில் பரப்புரை தடைபட்டது. பாஜக இந்துத்துவா கும்பல் சமூக வலைதளங்கள் வழியாக ஆட்களைத் திரட்டி ஒரு பதற்றத்தை நாகர்கோவில் பகுதியில் ஏற்படுத்தினர். திருப்பரங்குன்றம் பகுதியில் பாஜக மாநில பொறுப்பாளர் ஒருவர் பிரச்சாரத்தை புகைப்படம் எடுத்ததோடு காணொலியாகவும் எடுத்தார். திருப்பரங்குன்றம் காவல்நிலைத்திற்கு முன்பு தான் கூட்டம் நடைபெற்றது. கலவர முயற்சிகள் தோல்வியடைந்தன. காவல்துறை...

★	மூடநம்பிக்கை மற்றும் ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க  ★	தனிச்சட்டம்   எண்ணிக்கை பலமற்ற சேவை ஜாதிப் பிரிவினருக்கு சமூகநீதி இயக்கம், ★	ஆட்சிப் புலத்தில் மதத்தைத் திணிக்கும் அமைச்சர்களுக்குக் கண்டனம்! கழக மாநாட்டின் தீர்மானங்கள்

★ மூடநம்பிக்கை மற்றும் ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க ★ தனிச்சட்டம் எண்ணிக்கை பலமற்ற சேவை ஜாதிப் பிரிவினருக்கு சமூகநீதி இயக்கம், ★ ஆட்சிப் புலத்தில் மதத்தைத் திணிக்கும் அமைச்சர்களுக்குக் கண்டனம்! கழக மாநாட்டின் தீர்மானங்கள்

12.08.2026 அன்று காரைக்குடியில் நடைபெற்ற மாற்றத்திற்கான வாழ்வியல் பரப்புரைப் பயணங்களின் நிறைவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள். எதிர்ப்பைப் பதிவு செய்க தீர்மானம்-1: ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் பார்ப்பன சொற்பொழிவாளர்களும், பிராமணர் மாநாடு போன்ற மாநாடுகளில் உரையாற்றுபவர்களும் முன்வைக்கும் பல வாதங்கள் அரசியல் சட்டம் தனது நோக்கமாக கொண்டுள்ள சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றிற்கு எதிராகவும், பிற சமுதாய மக்களை இழிவுபடுத்துவதாகவும் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட குற்ற வரையறைக்குள் வருவதாகவும் உள்ளன. அ) அவ்வாறான உரைகள் ஆற்றப்படும் இடங்களிலேயே எதிர்ப்பினைப் பதிவு செய்ய வேண்டுமாறு தோழர்களை, பார்ப்பனரல்லாத மக்களை – குறிப்பாக இளைஞர்களை இம்மாநாடு தமிழ்நாட்டு வேண்டி கேட்டுக்கொள்கிறது ஆ) தனி இடங்களில் அவ்வாறு பேசப்பட்டாலும் காணொலி வழியாக பொது வெளியில் பரப்பப்படும் போது உரிய நிறுவனங்களுக்கு புகார் (Report) பதிவிடுமாறும், அதே வேளையில் காவல் நிலையங்களில் புகார் அளித்து உரிய ஒப்புகையைப் பெறுமாறும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. குரலற்ற சேவை ஜாதி...

மாநாட்டுத் திடலில் இயக்க முன்னோடிகள் வரலாறு!

மாநாட்டுத் திடலில் இயக்க முன்னோடிகள் வரலாறு!

தென் மாவட்டங்களைச் சார்ந்த `சுயமரியாதைச் சுடரொளி’களின் வரலாறுகள் படங்களுடன் மாநாட்டுத் திடலில் காட்சிப்படுத்தப்பட்டன. சுயமரியாதை இயக்க வீரர் சிவகங்கை இராமச்சந்திரனார் (16.09.1884-26.02.1933) ★ தென் மாவட்டங்களில் காரைக்குடிக்கு அருகே உள்ள சிவகங்கையைச் சார்ந்த இராமச்சந்திரனார் சுயஜாதியை எதிர்த்து தீண்டப்படாத மக்களுக்காக போராடிய சுயமரியாதை இயக்கத் தலைவர்களில் ஒருவர். முக்குலத்தோர் சமூகத்தில் முதல் முதலாக சுயமரியாதை இயக்கக் கொள்கைகளுடன் அரசியலுக்கு வந்த தலைவர். ★ 1929 செங்கல்பட்டு மாநாட்டில் பெரியார் நடத்திய முதல் சுயமரியாதை மாநாட்டில் பெயருக்குப் பின்னால் ஒட்டிக்கொண்டிருக்கும் ஜாதிப் பெயர்களை நீக்க வேண்டும்; ஜாதி,மத அடையாளங்களை தவிர்க்க வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை முன்மொழிந்தவர் இவர் தான். அப்போது தனது பெயருக்குப் பின்னால் ஒட்டி இருந்த ‘சேர்வை’ பெயரை நீக்குவதாக அறிவித்தார். தனது நெற்றிப் பொட்டுக்களையும் அழித்துக் கொண்டார். தேவஸ்தான குழுத் தலைவராக இருந்தபோதுதான் தனது அதிகாரத்தின் கீழே இருந்த இந்து கோயில்களின் கிணறுகள், சாலைகள், குளங்களில் தீண்டாமையைத்...

மாநாட்டிலிருந்து சில துளிகள்…

மாநாட்டிலிருந்து சில துளிகள்…

★ மாநாட்டுத் திடலில் சுயமரியாதை இயக்கத் தலைவர்கள் குறித்த வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய பதாகைகள் இடம் பெற்றிருந்தன. ★ மாநாட்டில் பார்வையாளர்களிடம் துண்டு ஏந்தி திரட்டப்பட்ட ரூ.7420 நிதி, மயிலாடுதுறை மாவட்டக் கழகம் சார்பாக ரூ.5,000, மதுரை மாவட்டக் கழகம் சார்பாக ரூ.15,000 கழக ஏடான புரட்சிப் பெரியார் முழக்கத்துக்கு வழங்கப்பட்டது. ★ நாமக்கல் மாவட்டக் கழகம் சார்பாக தோழர்கள் ரூ.10,000 மாநாட்டுக்கு நன்கொடையாக வழங்கினர். ★ மாநாட்டு முன்னேற்பாட்டுக் குழுவினரான அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, தலைமைக்குழு உறுப்பினர் காவை. ஈஸ்வரன் மற்றும் தோழர்கள் பெரியார் நம்பி, குமரேசன் ஆகியோர் கழக ஆதரவாளர்களை சந்தித்து நன்கொடை திரட்டும் பணிகளை மேற்கொண்டனர். ★ பரப்புரைப் பயணத்துக்கும், மாநாட்டுக்கும், மயிலாப்பூர் பகுதி கழகம் சார்பாக, ரூ. 5,000-அய் தோழர் மனோகர் நன்கொடையாக வழங்கினார். ★ இந்த பரப்புரைப் பயணத் திட்டத்துக்கும், துண்டறிக்கை தயாரிப்பு, சீருடை தயாரிப்புக்கும் நிதி திரட்டி மாநாட்டு பணிகளுக்கும் முதுகெலும்பாக நின்று...

உற்சாக வெள்ளத்தில் காரைக்குடி மாநாடு!

உற்சாக வெள்ளத்தில் காரைக்குடி மாநாடு!

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய “மாற்றத்தை நோக்கிய வாழ்வியல் பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாடு” ஆகஸ்ட் -12,2026 அன்று காரைக்குடியில் சுயமரியாதை சுடரொளி கானாடுகாத்தான் வை.சு சண்முகம் அரங்கில், (பாண்டியன் தியேட்டர் அருகில்) மாலை 6 மணிக்குத் தொடங்கியது. முன்னதாக காரைக்குடி ஐந்து விளக்குப் பகுதியில் இருந்து பரப்புரைப் பயணத்தில் பங்கேற்ற தோழர்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் இருந்து மாநாட்டிற்கு வருகை தந்த கழகத் தோழர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. பேரணியில் உற்சாகமாக தோழர்கள் கலந்து கொண்டு கொள்கை முழக்கங்களை எழுப்பியவாறு மாநாட்டுத் திடலை நோக்கி அணிவகுத்து வந்த காட்சி உணர்ச்சிமயமாக இருந்தது. பேரணி செல்லும் பாதையில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், மாநாட்டு அமைப்பாளர் காரைக்குடி இளங்கோ ஆகியோர் மாலை அணிவித்தனர். தோழர்கள் பெரியார் வாழ்க! புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் வாழ்க! என்று உணர்ச்சி முழக்கமிட்டனர்....

நீட்டை நீக்கு; போராட்டம் தீவிரம்!

நீட்டை நீக்கு; போராட்டம் தீவிரம்!

Ban_NEET! மற்றும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்று!, தமிழ்நாடு அரசு நீட்விலக்கு மசோதாவை நிறைவேற்று, தொடர் போராட்டத்துக்கு இடம் கொடு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, நீட் எதிர்ப்பு கூட்டியக்கம் சார்பில் சென்னை கோயம்பேடு திருவள்ளுவர் இல்லத்தில், கடந்த 10 நாட்களாக காலவரையறையற்ற பட்டினிப் போராட்டத்தில் 4 தோழர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தோழர் ரவி 7 நாட்கள் உண்ணாவிரத்தில் ஈடுபட்டு தற்போது மருத்துவமனையில் உள்ளார். பட்டினிப் போராட்டத்துக்கு, ஆக-2, அன்று தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் பேரன்பு, ஷர்மிளா, குடிஅரசு, குறளரசி, பரணி, தமிழ்க்குமரன் ஆகியோரும், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு இராசேந்திரன், மாவட்ட அமைப்பாளர் ந. தட்சிணாமூர்த்தி, மாவட்டத் துணைச் செயலாளர் ஆ.வ. வேலு, தோழர்கள் கார்த்தி ராஜேந்திரன், ராஜன், இளைஞரணி சார்பில் அருண்(மாவட்ட அமைப்பாளர்), யாழினி, குமார், இளவரசன், பிரசாந்த் ஆகியோர் பங்கேற்று ஆதரவளித்தனர்....

சலசலப்புகளை முறியடித்து பயணம் தொடர்கிறது

சலசலப்புகளை முறியடித்து பயணம் தொடர்கிறது

திருச்சி அணி: துவக்க பொதுக்கூட்டம் திருச்சி மேலப்புலிவார்டு பகுதியில் ஆக-6 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பயணக்குழு தலைவர் உமாபதியிடம் கழகக் கொடியைத் தந்து பயணத்தைத் துவக்கி வைத்தார். டார்வின் தாசன் தலைமை தாங்கினார். பெரியார் விருதாளர் தி.நெடுஞ்செழியன், தலைமை நிலையச் செயலாளர் தபசிகுமரன் ஆகியோர் கருத்துரையாற்றினர். சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மற்றும் லதா சத்யா குழுவினரின் பகுத்தறிவுப் பாடல்களை பாடினர். தலைமைக்குழு உறுப்பினர் திருச்சி மனோகரன் பயணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். கழகத் தோழர்கள் மணிகண்டன், குணா உள்ளிட்ட தோழர்கள் உடனிருந்து உதவினர். 2-ம் நாள்: திருச்சி புறநகர் அண்ணா நகர் 3வது பேருந்து நிலையம், MIET குண்டூர், சோமரசம்பேட்டை, அல்லித்துறை ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட்-7, அன்று பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், கருப்பு கோகுல் ஆகியோர்...

‘இந்துத்துவா’ அரசியலில் பார்ப்பன எதிர்ப்பு!

‘இந்துத்துவா’ அரசியலில் பார்ப்பன எதிர்ப்பு!

‘இந்துத்துவா’ அரசியலிலும் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் முரண்பாடு தீவிரமடைந்து வருகிறது. உ.பி, பீகார் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் பார்ப்பன எதிர்ப்பு வெடித்து கிளம்பியுள்ளது. இந்தி பேசும் மாநிலங்களில் பாஜகவின் பார்ப்பன வாக்கு வங்கி அமைதியிழந்துள்ளது. இது 2027 சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சியின் வாய்ப்புகளுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்தி பேசும் மய்யப் பகுதிகளில் பாஜகவுக்கும் அதன் பார்ப்பன ஆதரவாளர்களுக்கும் இடையிலான பிளவுகள் விரிவடைந்து வருகின்றன. இதைப் புறக்கணிப்பது பாஜகவுக்கு ஆபத்தாக முடியலாம். பீகாரின் போஜ்பூர் மாவட்டத்தில் ஜூன்-17 அன்று காவல்துறை என்கவுன்ட்டரில் பாரத் பூஷண் திவாரி என்ற பார்ப்பனர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட கொந்தளிப்பு ஜாதிப் பிரச்சினையாக மாறியது. மத்தியப் பிரதேசத்தில் நரோத்தம் மிஸ்ராவ் என்ற பார்ப்பனருக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றன. உத்தரப்பிரதேசத்தில் பார்ப்பன சமூகத்தினர் நடத்திய அரசியல் கூட்டங்களிலும், தங்களுக்கு அநீதி இழைப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ளனர். உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும்...

பயணத்திற்கு நூல்கள் வெளியீடு

பயணத்திற்கு நூல்கள் வெளியீடு

அகமண முறையை அகற்றுவோம்! ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவோம்! எனும் கேள்வி பதில் வடிவில் ஜாதி எதிர்ப்பு கருத்துக்களை உள்ளடக்கி 16 பக்கத்தில் ரூ.5 விலையில் சிறுநூல் வெளியிடப்பட்டுள்ளது. பேய், பில்லி, சூனியம், வாஸ்து, தீ மிதித்தல் எனும் தலைப்பில் மூடநம்பிக்கைகளுக்கு அறிவியல் விளக்கத்துடன் செய்திகள் இடம் பெற்றுள்ளன. 24 பக்கம் கொண்ட இந்நூல் ரூ.10 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. பெரியார் முழக்கம் இதழ் 13082026

செயற்கை நுண்ணறிவு தரும் தகவல்களில் பாஜக சார்பு நிலை!

செயற்கை நுண்ணறிவு தரும் தகவல்களில் பாஜக சார்பு நிலை!

செயற்கை நுண்ணறிவு கருவிகளை சாட்ஜிபிடி, ஜெமினி, மெட்டா தரும் தகவல்கள் குறைபாடுகளையும், சார்பு நிலைகளையும் வெளிப்படுத்துகின்றன என்று ’இந்து ஆங்கில’ நாளேட்டில் சுசித்ரா கார்த்திகேயன் என்பவர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். இந்த வாரம் ஒரு கட்டுரையை எழுதுவதற்காக, “பிரம்பானன் (Prambanan) கோயிலுக்கு முதலில் சென்ற இந்தியத் தலைவர் யார்?” என்று கூகுள் தேடலில் தட்டச்சு செய்தேன். உடனே, “இந்தோனேசியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பிரம்பானன் கோயிலுக்கு சென்ற முதல் இந்தியத் தலைவர் பிரதமர் நரேந்திர மோடி” என்ற பதில் தோன்றியது. ஆனால், இந்தியாவும் இந்தோனேசியாவும் 1940-களிலிருந்தே இராணுவம், கலாச்சாரம் உள்ளிட்ட பல துறைகளில் இணைந்து செயல்பட்டு வந்துள்ள நிலையில், அந்தப் பதில் குறித்து எனக்கு சந்தேகம் எழுந்தது. உண்மையை உறுதிப்படுத்துவதற்காக, நூற்றாண்டுக்கும் மேலான செய்தித்தாள் காப்பகங்களைத் தேடக்கூடிய ’தி இந்து’ நாளிதழின் பொருள் சார்ந்த (semantic) தேடலைப் பயன்படுத்தினேன். அதில், 1958 டிசம்பர் 14 அன்று, இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர...

ஆதித்தமிழர் பேரவை நிர்வாகி முருகேசன் நினைவேந்தல் நிகழ்வு!

ஆதித்தமிழர் பேரவை நிர்வாகி முருகேசன் நினைவேந்தல் நிகழ்வு!

ஜாதி ஒழிப்பு – சமூக நீதி விடுதலைக் களத்தில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஓய்வறியாமல் போராடிய ஒப்பற்ற போராளி, ஆதித்தமிழர் தொழிலாளர் பேரவை திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் தோழர் சு. முருகேசன் அவர்களின் மறைவையொட்டி நினைவேந்தல் கூட்டம் மற்றும், படத்திறப்பு நிகழ்வு ஆக-1, வல்லக்குண்டாபுரத்தில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டக் கழகம் சார்பாக மாவட்டத் தலைவர் முகில் ராசு கலந்து கொண்டு புகழ் வணக்கம் செலுத்தி, இரங்கல் உரையாற்றினார். நிகழ்வில் திருப்பூர் குணா பங்கேற்றார். பெரியார் முழக்கம் இதழ் 13082026

கழக ஏட்டுக்கு நன்கொடை

கழக ஏட்டுக்கு நன்கொடை

ஆசிரியர்கள் சிவகாமி, சிவக்குமார் முயற்சியில் ஆதரவாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள் ஒருங்கிணைந்து வாட்ஸ்அப் குழு வழியாக புரட்சிப் பெரியார் முழக்கத்திற்கு மாதம் ரூ. 500 என நன்கொடை திரட்டி வருகின்றனர். ஓராண்டு செயல்திட்டமாக இதைச் செயல்படுத்தி வருகின்றனர். ஜூலை மாத நன்கொடையாக ரூ.9000 வழங்கியுள்ளனர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். – (ஆசிரியர்) பெரியார் முழக்கம் இதழ் 13082026

கழகம் புகார் எதிரொலி  ஜாதிச் சங்க வாகனங்கள் பறிமுதல்

கழகம் புகார் எதிரொலி ஜாதிச் சங்க வாகனங்கள் பறிமுதல்

தீரன் சின்னமலை அவர்கள் நினைவுநாள் என்ற பெயரில் ஜாதிச் சங்கங்கள் நடத்தும் நிகழ்வுகளில் ஆணவப் படுகொலையை ஆதரித்தும், ஜாதிக் கலவரத்தை தூண்டுவதும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பியும், விபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்குவதை தடுத்திடவும் மீறுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு மேற்கு மண்டல காவல்துறை அய்.ஜி அவர்களிடம் கோவை மாவட்டக் கழகம் சார்பில் ஆகஸ்ட்-1 அன்று மதியம் 12 மணி அளவில் மனு அளிக்கப்பட்டது. மனு கொடுத்ததன் எதிரொலியாக காவல்துறையால் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 220 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளது. பெரியார் முழக்கம் இதழ் 13082026

இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் கருத்தரங்கம்

இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் கருத்தரங்கம்

தென் மண்டல எல்.அய்.சி பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் கூட்டமைப்பு முன்னெடுத்த சமூக நீதி போராளி இரட்டைமலை சீனிவாசனார் பிறந்த நாள் கருத்தரங்கம் அண்ணாநகர் டவர் கிளப் இக்லு அரங்கில் ஆகஸ்ட்-1 அன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இரட்டைமலை சீனிவாசன், பெரியார் அம்பேத்கர் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ச.அய்யனார் (பொதுச்செயலாளர், தெ.ம.எல்.அய்.சி.பி. ஊழியர் கூட்டமைப்பு) தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. வி. சகாயராணி ( தலைவர், எல்.அய்.சி.பி ஊழியர் நலச்சங்கம் செ.கோ-1) வரவேற்புரை ஆற்றினார். ச.சுரேஷ்குமார் ( செயலாளர்(சமூக உறவு) தெ.ம.எல்.அய்.சி.எஸ்.சி/எஸ்.டி ஊழியர் நலச்சங்கம்), இரட்டைமலை சீனிவாசன் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்ட நிகழ்வுகளை விவரித்தார். தமிழ் சாக்ரடீஸ் (திராவிட இயக்க பேச்சாளர்), இரட்டை மலை சீனிவாசன் குறித்த பல்வேறு வரலாற்றுச் செய்திகளையும் ஜாதியை எதிர்த்து களமாடிய நிகழ்வுகள் குறித்து கருத்துரையாற்றினார். க.கார்குழலி (தலைவர், தெ.ம.எல்.அய்.சி ஊழியர் கூட்டமைப்பு) பெண்கள் இது போன்ற முற்போக்கு செயல்களில் ஈடுபட வேண்டும் என்றும்,...

பரப்புரைப் பயணத்திலிருந்து சில துளிகள்….

பரப்புரைப் பயணத்திலிருந்து சில துளிகள்….

திருநெல்வேலி பணகுடி பகுதியில் கழகப் பரப்பரைச் செயலாளர் பால்.பிரபாகரன் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனர் உற்சாகம் பெற்று மேடைக்கு வந்து தோழர்களுக்கு பயனாடை அணிவித்து பாராட்டினார். தோழர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பணகுடி பகுதியில் பரப்புரையைக் கவனித்துக் கொண்டிருந்த பார்வையாளர் ராஜலட்சுமி பயணக் குழு தோழர்களை பாராட்டி குளிர்பானம் வழங்கினார். அவருக்கு கழக வெளியீடுகளை தோழர்கள் வழங்கினர். அதிராம்பட்டினம் பள்ளிகொண்டான் பகுதியைச் சார்ந்த தோழர்கள் ராஜேஷ், வினோத், மகேஷ் ஆகியோர் கழகப் பொருளாளர் துரைசாமி முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் ஆடை போர்த்தி கழக வெளியீடுகளை வழங்கினார். கோவை ’தோழர்’ அறக்கட்டளை சாந்தகுமார் பேராவூரணி அணி தோழர்களுக்கு முதலுதவி மருந்து பொருட்களை வழங்கினார். பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் பேசிய கருத்துக்களை கவனித்து விட்டு ரூ.500 ஒருவரும் மற்றொருவர் ரூ.1000 வழங்கினர். திருச்சி பெரியார் பெருந்தொண்டர் தமிழ்ச்சுடர் இரண்டு நாட்களும் தனது இல்லத்தில் பயணக்குழு...

கழகத் தோழர்கள் களமிறங்கினர் பரப்புரைப் பயணம் தொடங்கியது

கழகத் தோழர்கள் களமிறங்கினர் பரப்புரைப் பயணம் தொடங்கியது

‘ஜாதியில் திருமணம்! மதத்தில் பார்ப்பனியம்! வாழ்வில் மூடநம்பிக்கை! என்ற மூன்று கருத்துகளை முன்னிறுத்தி `தடை, அதை உடை!’ என்ற முழக்கத்தோடு கழகத் தோழர்களின் பரப்புரைப் பயணம் திருச்சி, நாகர்கோவில், போராவூரணி என்ற மூன்று முனைகளிலிருந்து புறப்பட்டது. போராவூரணியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியும், நாகர்கோயிலில் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரனும், திருச்சியில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனும் பயணத்தை துவக்கி வைத்தனர். போராவூரணியிலும், திருச்சியிலும் பொதுக்கூட்டமாக நடந்தது. கழகப் பொருளாளர் திருப்பூர். துரைசாமி தலைமைக்குழு உறுப்பினர்கள் அய்யனார், சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் போராவூரணி பயணக் குழுவினரோடு இணைந்து பயணம் செய்து வருகின்றனர். அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, தலைமைக்குழு உறுப்பினர் காவை.ஈசுவரன் இருவரும் பயணக்குழுவினரின் முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் 4 பரப்புரைக் கூட்டங்களை நடத்துகின்றனர். நூல்விற்பனை, மக்களிடம் உண்டியல் மூலம் நிதி திரட்டுதல், துண்டறிக்கை வழங்கல் என்று தோழர்கள் பணியாற்றுகிறார்கள். நாகர்கோவில் அணி: சேலம் அணியின் பயணக் குழு 05.08.2026 புதன்...

வைகறைவாணன் விடைபெற்றார்!

வைகறைவாணன் விடைபெற்றார்!

தோழர் வைகறை வாணன் (77) முடிவெய்தினார். பெரியாரிய பொதுவுடமை சிந்தனை கொண்டவர். ஈழ விடுதலைப் பிரச்சனையில் முனைப்புடன் செயல்பட்டவர். குத்தூசி குருசாமி எழுத்துக்களையும், தர்ம தீர்த்த அடிகளார் மலையாளத்தில் எழுதிய நூலை தமிழாக்கம் செய்து “இந்து மத கொடுங்கோன்மை வரலாறு” என்ற நூலையும் தனது சாளரம் பதிப்பகம் வழியாக வெளியிட்டவர். அவர் நடத்திய `பாலம்’ இதழ் வழியாக ஈழத்துக் கவிஞர்கள், கவிதைகள், நாவல்களை வெளியிட்டு பதிப்பித்தவர். விடுதலைப் புலிகளின் கவிஞரான புதுவை ரத்தினதுரை கவிதைகளை தொகுத்து வெளியிடும் முயற்சிகளில் முனைப்புடன் இருந்தார். இந்த நிலையில் உடல்நலன் பாதிக்கப்பட்டு விடை பெற்றுக் கொண்டு விட்டார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். பெரியார் முழக்கம் இதழ் 06082026

பரப்புரைப் பயண பாடல் வெளியீடு!

பரப்புரைப் பயண பாடல் வெளியீடு!

ஜாதி மற்றும் மூடநம்பிக்கைக்கு எதிரான பாடல் வெளியீட்டு விழா, ஜூலை-31, மாலை 6 மணிக்கு சென்னை கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார், திரைப்படங்களின் மூலம் பரப்பப்படும் புராணக்கதைகளை கண்டித்து உரையாற்றினார். “வெங்காயம்” திரைப்பட அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். நிறைவாக கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பாடல்வரிகளை வெகுவாகப் பாராட்டினார். இதுபோல் இன்னும் நிறைய பாடல்களை உருவாக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். கழகப் பரப்புரைப் பயணத்தில் தோழர்கள் பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகளையும் பொறுப்புகளையும் விளக்கினார். பாடல் உருவாக்கத்தில் ஈடுபட்ட இசையமைப்பாளர் வசந்த ரமேஷ், பாடலாசிரியர்கள் மற்றும் பாடகர்கள் சத்யா, லதா, குரல் கொடுத்த இரா. உமாபதி, இரண்யா ஆகியோருக்கும், வீடியோ உருவாக்கத்தில் ஈடுபட்ட தோழர்கள் அருண் கோமதி, குகன் ஆகியோருக்கும் சிறப்பு செய்யப்பட்டது. U2BRUTUS மைனர் மற்றும் கழகத் தோழர்கள் பங்கேற்று பாடல்களை வரவேற்றனர். பெரியார் முழக்கம் இதழ் 06082026

கழகத் தோழர் இலக்கம்பட்டி குமார் விடைபெற்றார்!

கழகத் தோழர் இலக்கம்பட்டி குமார் விடைபெற்றார்!

சேலம் மாவட்டம், கொளத்தூர் , இலக்கம்பட்டி கழகத் தோழர் குமார் (52) 01.08.2026 அன்று மாலை 6.00 மணியளவில் மறைவுற்றார். தோழரின் இறுதி நிகழ்வு 02.08.2026 காலை 10.00 மணிக்கு இலக்கம்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தோழரின் உடலுக்கு சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார், மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான தோழர்கள் அணிவகுத்து கழகக் கொடி மற்றும் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. கழகப் பெண் தோழர்களே குமார் அவர்களின் உடலைச் சுமந்து இறுதி ஊர்வலத்தை தலைமை ஏற்று நடத்தினர். இறுதி நிகழ்வை சடங்கு, சம்பிரதாயங்கள் இன்றி நடத்த தோழரின் குடும்பத்தார் முழு ஒத்துழைப்பு வழங்கினர். கழகத் தலைமைக்குழு உறுப்பினராக செயல்பட்டவர் தோழர் குமார். நிகழ்வில் கொளத்தூர், காவலாண்டியூர், மேட்டூர், மேட்டூர் ஆர்.எஸ், சேலம் மாநகரம், நங்கவள்ளி, வனவாசி, இளம்பிள்ளை, ஏற்காடு, திருப்பூர், குருவரெட்டியூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கழகத் தோழர்கள்...

கழகப் பரப்புரைப் பயணம் மற்றும் காரைக்குடி நிறைவு மாநாடு – முன்னேற்பாட்டுக் குழு சந்திப்பு!

கழகப் பரப்புரைப் பயணம் மற்றும் காரைக்குடி நிறைவு மாநாடு – முன்னேற்பாட்டுக் குழு சந்திப்பு!

கழகத்தின் சார்பில் “ஜாதியில் திருமணம், மதத்தில் பார்ப்பனியம், வாழ்வில் மூடநம்பிக்கை – தடை! அதை உடை!” என்ற முழக்கத்துடன் பரப்புரைப் பயணம் நடைபெற உள்ளது. இப்பயணத்தின் நிறைவு மாநாடு வருகிற ஆகஸ்ட்-12 அன்று காரைக்குடியில் எழுச்சிகரமாக நடைபெற உள்ளது. மாநாட்டின் முன்னேற்பாடுகளைச் செய்யவும், களப்பணிகளில் உள்ள இடர்பாடுகளைக் களையவும் கழகத்தின் அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி மற்றும் தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன் ஆகியோர் தீவிரப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று காரைக்குடிக்கு வருகை தந்த அவர்கள், மாநாட்டுப் பணிகள் குறித்தும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் குறித்தும் கழகத் தோழர்களுடன் விரிவாகக் கலந்துரையாடினர். மேலும், பல்வேறு தோழர்களை நேரில் சந்தித்து மாநாட்டுக்கான அழைப்பிதழ்களையும் வழங்கினர். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் வேணுகோபால் (காரைக்குடி) அவர்களுக்கு மாநாட்டு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. நாகர்கோயில் மாநகராட்சியின் மேனாள் மேயர், திமுக மாவட்டச் செயலாளர் ஆர். மகேஷ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. பயணக்குழுவிற்கு தேவையான...

வாழ்வியலை சிதைக்கும் மூடநம்பிக்கைகள் – (2)

வாழ்வியலை சிதைக்கும் மூடநம்பிக்கைகள் – (2)

ஜோதிடம் அறிவியலா? ஜோதிடம் ஓர் அறிவியல் என்று கதை விடுகிறார்கள். இவர்கள் கொடுக்கிற கணக்குகளைப் போட்டுப் பார்த்து கிடைக்கிற பலன்கள் சரியாக இல்லை என்றாலோ கணக்குப் போட்டவருக்கு -ஜோதிடருக்கு -‘கடவுள் அருள்’ இல்லை என்று சொல்லி தப்பித்துக் கொள்கிறார்கள். ‘ஜோதிடமும் ஒரு விஞ்ஞானமே என்பது மக்களை ஏமாற்றி இதன்பால் இழுக்க சிலர் போடும் நாடகமே. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என்று ஒன்பது கிரகங்கள் இருக்கின்றன. இவற்றின் சஞ்சாரத்தைக் கொண்டே ஜோதிடம் கணிக்கப்படுகிறது என்கிறார்கள். ஜோதிடத்தின் இந்த அஸ்திவாரமே அறிவியலுக்கு விரோதமானது. சூரியன் ஒரு கிரகமே (Planet) அல்ல. அது ஒரு நட்சத்திரம் (Star). நட்சத்திரம் என்றால் அது பிரதானமாக ஹைட்ரஜன் வாயுவால் ஆனது. ஒளியையும் வெப்பத்தையும் உருவாக்கவல்லது. ஒரு மாபெரும் அணு உலை என்று சூரியனைக் கூறலாம். இதனைச் சுற்றி செல்லும் கிரகங்கள் அப்படி அல்ல. இவற்றிற்கு சொந்தமாக ஒளியை உருவாக்கும் ஆற்றல்...

சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 6102 சமஸ்கிருத ஆசிரியர்கள்

சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 6102 சமஸ்கிருத ஆசிரியர்கள்

24,000 பேர் பேசும் சமஸ்கிருதத்தைக் கற்பிக்க 6,102 பார்ப்பன பண்டிதர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்படுள்ளனர். ஏழு கோடி பேர் பேசும் தமிழைக் கற்பிக்க 12 ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுள்ளனர். மத்தியப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் சமஸ்கிருத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டாகிவிட்டது. இதுதான் பிரதமர் மோடி பெருமை பேசும் ‘பிஎம் ஸ்ரீ’ பள்ளியின் புள்ளிவிவரம். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்தில் ஒன்றிய கல்வி அமைச்சரிடம் கேள்வி எழுப்புயுள்ளார். பி.எம்.ஶ்ரீ பள்ளிகள் நாடு முழுக்க எத்தனை உள்ளன? அவற்றில் எத்தனை இந்தியல்லாத மொழிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்? என்று கேட்டிருந்தார். எழுப்பிய கேள்விகளுக்கு கல்வி இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி, இந்தியா முழுமையும் 14,500 பள்ளிகளைப் பி.எம்.ஶ்ரீ திட்டத்தின் கீழ் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும், இதுவரை 13,092 பள்ளிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்தி அல்லாத மொழிகளில் ஆசிரியர்கள் எவ்வளவு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கேட்டதற்கு, சமஸ்கிருத ஆசிரியர்கள் 6,102 பேரும், உருது...

கருத்துரிமை பறிப்புகள் எல்லை மீறுகிறது!

கருத்துரிமை பறிப்புகள் எல்லை மீறுகிறது!

திராவிடர் கழகம் நடத்தும் நீட் எதிர்ப்புப் பரப்புரை ஏன் தவெக ஆட்சியைப் பதற வைக்கிறது? நீட்டைத் திணிக்காதே என்று ஒன்றிய பாஜக ஆட்சிக்கு எதிராக பரப்புரைச் செய்வதை தனது ஆட்சிக்கு எதிரான பரப்புரையாக ஏன் இந்த ஆட்சி கருதுகிறது? ஒன்றிய ஆட்சியுடன் அனுசரித்துப் போவது என்பது அவர்கள் திணிக்கும் கொள்கைகளோடு அனுசரித்தல் தானா? கருத்துரிமை பறிப்புகள் எல்லை மீறுவது கண்டனத்துக்குரியது! பெரியார் முழக்கம் இதழ் 06082026

அதிகார ஆணவத்தின் உச்சம்!

அதிகார ஆணவத்தின் உச்சம்!

கைது அடக்குமுறை அரசியலின் காலம் மலையேறிவிட்டது என்பதை முதல்வர் விஜய் உணர வேண்டும்! எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது அவதூறு என்றால் அதற்காக வழக்கு ப்பதிவு செய்வதற்கு உரிமை உண்டு. ஆனால் வழக்குப் பதிவு செய்தவர்களை எல்லாம் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற அவசியம் என்ன வந்திருக்கிறது? நாளை சட்டமன்றம் கூடும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சட்டமன்றத்தில் தனது கடமையை ஆற்ற விடாமல் தடுப்பது சட்டமன்ற ஜனநாயகத்தைக் குழி தோண்டி புதைப்பது ஆகும்! உயர்நீதிமன்றம் அவசர வழக்காக இதை எடுத்துள்ள நிலையில் பகல் 12 மணி வரை கைது செய்ய தடை விதித்த நிலையில் நீதிமன்ற ஆணையையும் மீறி கைது செய்வது அப்பட்டமான பழிவாங்கும் அரசியல் அல்லாமல் வேறு என்ன? நேற்று தஞ்சை ஆர்ப்பாட்டம் முடித்து வந்தவரை மீண்டும் காலையில் கைது செய்து தஞ்சை வரை வேனில் ஏற்றிச் சென்று பழிவாங்க வேண்டும் என்ற அற்ப அரசியலைத் தவிர...

சுயமரியாதைச் சுடரொளி வை.சு.சண்முகம்  பெயரில் காரைக்குடி மாநாட்டு மேடை!

சுயமரியாதைச் சுடரொளி வை.சு.சண்முகம் பெயரில் காரைக்குடி மாநாட்டு மேடை!

காரைக்குடியில் ஆக-12,ல் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் பயண நிறைவு விழா மாநாட்டின் மேடைக்கு சுயமரியாதைச் சுடரொளி வை.சு. சண்முகம் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. காரைக்குடி பகுதியில் செல்வவளம் மிக்க நகரத்து செட்டியார் சமூகத்தினர் வாழ்ந்த பகுதியில் சுயமரியாதைக் கொள்கைகளை முன்னெடுத்த பெரியாரின் உற்ற தோழராக விளங்கியவர் கானாடுகாத்தான் வை.சு.சண்முகம். ஜாதிக்குள் திருமணத்தையும் இந்துமத பார்ப்பனியத்தையும் எதிர்த்து நின்ற அந்த சுயமரியாதைச் சுடரொளி பெயரை மிகப் பொருத்தமாக மாநாட்டு அரங்கிற்கு சூட்டியுள்ளோம். முகவை மாவட்டம் கானாடுகாத்தானில், 1883ஆம் ஆண்டில் பிறந்த வை.சு. சண்முகம் அவர்கள். காங்கிரசில் இருந்தபோதே சேரன்மாதேவியில் நடந்த குருகுலப் போராட்டத்தில் பெரியாருக்கு பெரும் ஒத்துழைப்பு நல்கியவர். “பார்ப்பனரல்லாதார்” உணர்வு நிரம்பியவராகையால், வகுப்புரிமைக்கு பெரியார் சுயமரியாதை இயக்கம் அமைக்கையில் இவரும் உடன் தோழராய்த் தோள்கொடுக்க முன்வந்தார். இவரது நேர்மையும், ஆர்வமும், தகுதியும் உணர்ந்த சுயமரியாதைத் தலைவர்கள் செங்கற்பட்டு மாநாட்டிலேயே இயக்கத்தின் பொருளாளராகத் தேர்வு செய்தார்கள். நாட்டின் பல பகுதிகட்கும் சென்று...

இது மாற்றம் அல்ல; கண்டிக்கத்தக்க ஏமாற்றம்!

இது மாற்றம் அல்ல; கண்டிக்கத்தக்க ஏமாற்றம்!

வேளாண் துறை அமைச்சர் வினோத் தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட்டை திருப்பதி ஏழுமலையான் முன் சமர்ப்பித்துள்ளார். பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் கூட இப்படி ஒரு கேவலம் நடந்ததாக தகவல் இல்லை! சட்டமன்றத்தில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்கு பேரவைத் தலைவர் தான் அனுமதிக்க வேண்டும். ஆனால் இந்த ஆட்சியின் அமைச்சர் திருப்பதி ஏழுமலையானிடம் அனுமதி கேட்கிறார். ஏழுமலையான் பட்ஜெட் முழுவதையும் படித்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசுவார் என்று அமைச்சர் எதிர்பார்க்கிறாரா? பட்ஜெட் என்ற அரசு ஆவணத்திற்கு மதம் கிடையாது; அது மக்களுக்கான ஆவணம்.அனைத்து மதப் பிரிவு மக்களுக்கும் மத நம்பிக்கை அற்றவர்களுக்கும் தயாரிக்கப்படுகின்ற ஒரு அரசு ஆவணத்தை இந்து மத கடவுளுக்கு முன் சமர்ப்பித்து ஆசிர்வாதத்தையும் அனுமதியையும் கேட்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட அயோத்தி ராமன் கோயில் முன் பட்ஜெட்டை சமர்ப்பிக்கவில்லை. துறையின் அமைச்சர் ஒரு இஸ்லாமியராக இருந்து அவர் பட்ஜெட்டை மசூதி முன்வைத்து...