Category: தஞ்சாவூர்

எழுச்சியுடன் நடைபெற்ற மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்கள் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்பு

எழுச்சியுடன் நடைபெற்ற மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்கள் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்பு

நாமக்கல் : நாமக்கல் மாவட்ட திவிக கலந்துரையாடல் கூட்டம் பள்ளிபாளையம் ஐந்து பனையில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட சமுதாயக் கூடத்தில் 14.08.2024 மாலை 05.00 மணி அளவில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார். கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலந்துரையாடல் கூட்டத்தில் நாமக்கல் மாவட்டச் செயலாளர் மு.சரவணன், மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன், மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி, ராசிபுரம் நகரச் செயலாளர் பிடல் சேகுவாரா, காளிப்பட்டி பெரியண்ணன், திருச்செங்கோடு பொறுப்பாளர் பூபதி, கீற்று இணையதளப் பொறுப்பாளர் கார்த்தி, குமாரபாளையம் நகரத் தலைவர் மீ.தா.தண்டபாணி, செயலாளர் செ வடிவேல், தோழர்கள் மோகன், சந்திரா, மணியம்மை, மாதேஸ்வரன், ஆ பிரகாஷ், நாகராஜ், கடச்சநல்லூர் அமைப்பாளர் செல்வகுமார் ஐந்து பனை வாசகர் வட்ட சக்திவேல் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைக் பகிர்ந்து கொண்டனர். ஜாதி ஆணவப் படுகொலைகளைத்...

கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், ஆத்தூர், மதுரையில் பரப்புரைகள் தீவிரம்

கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், ஆத்தூர், மதுரையில் பரப்புரைகள் தீவிரம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டக் கழக சார்பில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! என்ற முழக்கத்தோடு 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு முதல்கட்ட பரப்புரைக் கூட்டமானது மார்ச் 15,16 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. மார்ச் 14ஆம் தேதி மூரார்பாளையம், கள்ளக்குறிச்சி மந்தைவெளி, சின்ன சேலம் பேருந்து நிலையம், நைனார்பாளையம் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் கா.மதியழகன் தலைமை தாங்கினார். இதில் மக்கள் அதிகாரம் கள்ளக்குறிச்சி மாவட்டப் பொறுப்பாளர் ராமலிங்கம், சின்ன சேலம் விசிக ஒன்றியச் பொருளாளர் மைக்கேல், அஜித், வழக்கறிஞர் ஆனந்த், கழகத் தலைமைக்குழு உறுப்பினர் ந.அய்யனார், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் க. ராமர், விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூ.ஆ.இளையரசன், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் சாக்ரடீசு, விசிக தலித் சந்திரன் தபெதிக மாவட்டச் செயலாளர் செ.பிரபு ஆகியோர் பரப்புரைக் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி சிறப்புரையாற்றினார்கள். இரண்டாவது நாளாக 16.3.2024 அன்று மு.நாகராஜ்...

மாவட்டக் கழகக் கூட்டங்களின் எழுச்சி

மாவட்டக் கழகக் கூட்டங்களின் எழுச்சி

மாவட்டக் கழகக் கலந்துரை யாடல்கள்: கடலூர் :  27.12.2022 அன்று சிதம்பரம் ஏபிஎன் மஹாலில்  திராவிடர் விடுதலைக் கழகத்தின் கடலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. பெரியார் பிஞ்சு சி.சந்தோஷ் பெரியார் பாடல் பாட நிகழ்ச்சி தொடங்கியது. மா.து.தலைவர் செ.பிரகாஷ், வரவேற்பு கூறினார். தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார் இயக்கத்தின் தேவை மற்றும் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினார். அதன்பின் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆ. சதிசு – மாவட்ட அமைப்பாளர்,  ர.சிவகுமார் – மாவட்ட செயலாளர்,  ப.அறிவழகன் – அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர், அ.மதன்குமார் – மாவட்டத் தலைவர் உள்ளிட்டோர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். பெரியார் பார்வை ஆசிரியர் கவி பங்கேற்று தன்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டார். இக்கூட்டத்தில்,  கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் இயக்கத்தின் நோக்கம் பற்றியும்...

கழகம் முன்னெடுத்த சட்ட எரிப்பு நாள் நிகழ்வுகள் சென்னையில் கழகத் தலைவர் தலைமையில் உறுதி ஏற்பு

கழகம் முன்னெடுத்த சட்ட எரிப்பு நாள் நிகழ்வுகள் சென்னையில் கழகத் தலைவர் தலைமையில் உறுதி ஏற்பு

  திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் நவம்பர் 26 அன்று நடைபெற்ற சட்ட எரிப்பு நாள் பொதுக் கூட்டங்கள் வீர வணக்க நிகழ்வுகளின் தொகுப்பு. சென்னை : திராவிடர் இயக்கத்தின் மிக முக்கிய போராட்டமான ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை தோழர்கள் கொளுத்தி இந்திய ஒன்றியத்தை திரும்பி பார்க்க வைத்தப் போராட்டம் ‘சட்ட எரிப்புப் போராட்டம்’ ஆகும். இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில், பதாகைகள் சட்ட எரிப்பு போராளிகளை நினைவுகூரும் வகையிலும், வீரவணக்கம் செலுத்தும் வகையிலும் அமைக்கப்பட் டிருந்தது.  26.11.2022 அன்று காலை 8 மணியளவில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு  பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பின்பு சட்ட எரிப்பு நாள் குறித்து உரையாற்றினார். முன்னதாக, தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் தேன்மொழி  ‘ஜாதி ஒழிப்பு உறுதிமொழி’ வாசிக்க கழகத் தோழர்கள் உறுதியெடுத்தனர். ஜலகண்டாபுரம் : 26.11.2022 மாலை 6.00 மணியளவில் ஜலகண்டாபுரம் பேருந்து...

குடந்தை – கீழப்பாவூர்-குடியாத்தத்தில் சிறப்புடன் நடந்த மண்டல மாநாடுகள்

குடந்தை – கீழப்பாவூர்-குடியாத்தத்தில் சிறப்புடன் நடந்த மண்டல மாநாடுகள்

குடந்தையில்: ‘நமக்கான அடையாளம் திராவிட மாடல்’ என்ற முழக்கத்தை முன் வைத்து கும்பகோணம் மீன் மார்க்கெட் திடலில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மண்டல மாநாடு 16.5.2022 அன்று மாலை சிறப்புடன் நடைபெற்றது. மாவட்டக் கழகத் தலைவர் மு. இளங்கோவன் தலைமையில் சா.வெங்கடேசன் (ஒன்றிய அமைப்பாளர்) முன்னிலையில் நடைபெற்றது. கு. பாரி (தஞ்சை மாவட்ட செயலாளர், தி.வி.க.), தெ. மகேசு (மாவட்டச் செயலாளர்), திருச்சி நாகம்மையார் இல்லத்துப் பெண்ணைத் திருமணம் செய்தவரும், திராவிடர் கழகத் தோழருமான பவுண்டரீகபுரம் முருகேசன், பொறியாளர் திருநாவுக்கரசு (உழவர் இயக்கம்), சி.த. திருவேங்கடம் (மாவட்ட அமைப்பாளர்), சா. விவேகானந்தன் (மண்டல செயலாளர் வி.சி.க.) உள்ளிட்டோர் மாநாட்டில் பேசினர். முன்னதாக, பெரம்பலூர் தாமோதரன், ‘மந்திரமா-தந்திரமா’ நிகழ்ச்சி நடைபெற்றது. திராவிடர் கழக மாவட்ட மகளிரணி செயலாளர் திரிபுரசுந்தரி மற்றும் தி.க. தோழர்கள் குணா, சங்கர், கழகத் தலைவர்-பொதுச் செயலாளருக்கு துண்டுகளை அணிவித்து மகிழ்ந்தனர். கரிகாலன் நன்றி கூறினார். தொடர்ந்து 20...

சதுர்வேதிமங்கலம் – ஆரிய மாடல் சமத்துவபுரம் – திராவிட மாடல்

சதுர்வேதிமங்கலம் – ஆரிய மாடல் சமத்துவபுரம் – திராவிட மாடல்

தமிழ்நாட்டில் தமிழ் மன்னர்கள் பலரும் ஆரியத்தைக் கொண்டாடியதாகவே வரலாறு கூறுகிறது. ‘பிராமணர்’களுக்கு ஊர்களும் கிராமங்களும் இலவசமாக வழங்கப்பட்டன. வேதப் பார்ப்பனர்ககளின் வேத அறிவே உலகத்தை வாழ்விக்கும் என்று மன்னர்கள் நம்பினார்கள். அதற்குப் பெயர் ‘சதுர்வேதிமங்கலம்’; தமிழ் தாத்தா என்று கொண்டாடப்படும் சங்க இலக்கிய சுவடிகளைத் தொகுத்த உ.வே.சாமிநாதய்யர், தனது பிறந்த ஊரான ‘உத்தமதானபுரம்’ பிராமணர்களுக்கு ‘தானமாக’ வழங்கப்பட்ட ஊர் என்பதை தனது சுயசரிதையில் பதிவு செய்திருக்கிறார். ஒரு அரசர், தனது வேதபண்டிதர் பரிவாரங்களுடன் தங்கள் கிராமத்தில் ஒரு மரத்தடியில் ஓய்வு எடுத்து, உணவு உண்டு, வெற்றிலைப் பாக்கு போட்டுக் கொண்டாராம். பிறகுதான்  அன்றைய தினம் அமாவாசை என்பது தெரிந்து அதிர்ந்து போனாராம். அமாவாசையில் வெற்றிலைப் பாக்கு போடுவது- தெய்வக் குற்றமாம். இந்தக் ‘குற்றத்துக்கு’ பரிகாரம் தேட, அருகிலிருந்த வேத பண்டிதர்கள் ஆலோசனைப்படி  அந்தப் பகுதியை வேத பண்டிதர்களுக்கு தானமாக்கி வீடுகளைக் கட்டித் தந்தாராம். அதுவே தான் பிறந்த உத்தமதானபுரம் வரலாறு என்று...

முதல் கட்ட சந்திப்பில் கழகத் தோழர்கள் உற்சாகம் கிராமங்களில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

முதல் கட்ட சந்திப்பில் கழகத் தோழர்கள் உற்சாகம் கிராமங்களில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

கழகத் தோழர்களை பொறுப்பாளர்கள் சந்தித்து நிகழ்த்திய கலந்துரையாடல் நிகழ்வுகள் தோழர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்துள்ளன. கிராமங்களில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை நடத்தவும், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்கு உறுப்பினர்கள் சேர்க்கவும் தோழர்கள் முனைப்புடன் செயல்பட முன் வந்துள்ளனர். முதல்கட்டப் பயணத்தில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன், தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் பங்கேற்றனர். விரைவில் இரண்டாம் கட்டப் பயணம் தொடங்கவிருக்கிறது. பயணம் குறித்து விழுப்புரம் அய்யனார் தொகுத்து அனுப்பியுள்ள செய்தி. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெரும் தொற்றால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்ததோடு, இயக்க செயல்பாடுகளும் ஒரு சில நிகழ்வுகள் தவிர்த்து இணைய வழியில் மட்டுமே நடைபெற்று வந்தன. இயக்கப் பணிகள் சுணக்கம் ஆகிவிட்டன. இதனைப் போக்கும் வகையில் கழகப் பணிகளை தீவிரப்படுத்தும் கழக ஏடான, புரட்சிப் பெரியார் முழக்கம், நிமிர்வோம் ஏட்டிற்கு சந்தா சேர்த்திடவும், முதல் கட்டமாக 18.11. 2021 முதல் 20.11.2021 வரை...

கழகத்தில் இணைந்த புதிய தோழர்கள்

கழகத்தில் இணைந்த புதிய தோழர்கள்

கோவையில் பிப். 9 அன்று நடந்த நீலச்சட்டை பேரணியன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி  முன்னிலையில்,  துளசி, அறிவரசு, சுரேசு, அசோக், மாதவன் ஆகிய புதிய தோழர்கள் இணைந்தனர். இவர்கள் கோவை மாவட்டத் தோழர்கள். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த  சமூக செயற்பாட்டாளர் மருத. உதயகுமார்  16.02.2020 அன்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் தன்னை திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைத்துக் கொண்டார். பெரியார் முழக்கம் 05032020 இதழ்

கழகக் கட்டமைப்பு நிதி

கழகக் கட்டமைப்பு நிதி

நாச்சியார் கோயில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழகக் கட்டமைப்பு நிதிக்கு ரூ.20,000/-மும், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டினம், ஓய்வு பெற்ற ஆசிரியர் இளங்கோவன், கட்டமைப்பு நிதியாக ரூ.5000/-மும் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் வழங்கினர். பெரியார் முழக்கம் 05032020 இதழ்

பேராவூரணி கூட்டத்தில் கொளத்தூர் மணி விளக்கம் தேசிய மக்கள் பதிவேட்டின் (என்.பி.ஆர்.) ஆபத்துகள்

பேராவூரணி கூட்டத்தில் கொளத்தூர் மணி விளக்கம் தேசிய மக்கள் பதிவேட்டின் (என்.பி.ஆர்.) ஆபத்துகள்

தேசிய மக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமைப் பதிவேடு இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, அனைத்துப் பிரிவினரையும் பாதிக்கும்; எளிய குடிமக்கள் தலையில் தங்களை நிரூபித்துக் கொள்ளும் சுமையை அழுத்துகிறது மத்திய அரசு என்றார் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. பிப். 17, 2020 அன்று பேராவூரணியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கொளத்தூர் மணி ஆற்றிய உரை: சென்ற இதழ் தொடர்ச்சி மக்கள் தொகை கணக்கெடுப்பில் (Census) நாம் சொல்வதை அவர்கள் எழுதிக் கொள்வார்கள். எம்.ஜி.ஆரிடம் ஒருமுறை மதம் என்னவென்று சென்சசுக்காக கேட்டார்கள்; அவர் ‘திராவிட மதம்’ என்று கூறினார். எம்.ஜி.ஆர்.  இந்து மதம் என்று கூற வில்லை. ஆனால் அப்படி ஒரு மதம் உண்டா என்று கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது; மக்கள் சொல்வதை எழுதிக் கொள்ள வேண்டும். அதற்கென உள்ள கையேடு அப்படித்தான் கூறுகிறது. அதை எழுதிக் கொண் டார்கள். மக்கள் என்ன கூறுகிறார்களோ அதை எழுதிக் கொள்வார்கள். எம்.ஜி.ஆர்-யை திராவிட...

பெரியாரிய போராளி ஆசிட் தியாகராஜன் முடிவெய்தினார்

பெரியாரிய போராளி ஆசிட் தியாகராஜன் முடிவெய்தினார்

பெரியாரிய போராளி ஆசிட் தியாகராஜன் 94ஆம் வயதில் பிப்.26, 2020 அன்று தஞ்சையில் அவரது இல்லத்தில் முடிவெய்தினார். இயக்கத்தில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் வெளிச்சத்துக்கு வராமல் செயல்பட்ட தன்மானப் போராளி. பெரியாரை இழித்து பழித்துப் பேசியவர்களை ‘பகத்சிங்காக’ மாறி தண்டனை வழங்கியவர். 1957ஆம் ஆண்டு பெரியார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அரசு வழக்கறிஞரான சீனிவாச்சாரி என்ற பார்ப்பனர், பெரியாரை ‘ராமசாமி நாய்க்கர்’ என்று நீதிமன்றத்தில் குறிப்பிட்டதைக் கேட்டு ஆத்திர மடைந்து, அவர் மீது ‘ஆசிட்’ வீசியதாக கைது செய்யப்பட்டவர். வன்முறைகளிலும் பழிவாங்குதலிலும் பெரியார் இயக்கத்துக்கு உடன்பாடு இல்லை என்றாலும், இயக்கத்தோடு தொடர்புபடுத்திக் கொள்ளாமல் பெரியார் உணர்வாளர்களாகப் பல போராளிகள் இயக்கத்துக்கு வெளியே செயல்பட்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ‘ஆசிட்’ தியாகராஜன். செய்தி அறிந்த நாகை மாவட்ட கழகத் தோழர்கள் ஆசிட் தியாகராஜனுக்கு வீரவணக்கம் செலுத்தினர். தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் சாக்கோட்டை இளங்கோவன், தஞ்சை மாவட்ட அமைப்பாளர்  பேராவூரணி திருவேங்கடம்,...

பேராவூரணி கூட்டத்தில் கொளத்தூர் மணி விளக்கம் தேசிய குடியுரிமை-மக்கள் பதிவேடுகள் அனைத்து தரப்பினருக்கும் ஆபத்தானவை

பேராவூரணி கூட்டத்தில் கொளத்தூர் மணி விளக்கம் தேசிய குடியுரிமை-மக்கள் பதிவேடுகள் அனைத்து தரப்பினருக்கும் ஆபத்தானவை

இந்த தேசிய மக்கள் பதிவேடும், இந்தியக் குடியுரிமைப் பதிவேடும் இஸ்லாமியருக்கு மட்டும் எதிரானதா? இல்லை, அனைத்துத் தரப்பினருக்கும் எதிரானது. தேசிய குடியுரிமை பதிவேடு, தேசிய மக்கள் பதிவேடு இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, அனைத்துப் பிரிவினரையும் பாதிக்கும்; எளிய குடிமக்கள் தலையில் தங்களை நிரூபித்துக் கொள்ளும் சுமையை அழுத்துகிறது மத்திய அரசு என்றார் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. பிப். 17, 2020 அன்று பேராவூரணியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கொளத்தூர் மணி ஆற்றிய உரை: குடியுரிமை திருத்தச் சட்டத்தின் பாதிப்புகளை எனக்கு முன்னர் உரையாற்றிய பலரும்  விளக்கி யிருக்கிறார்கள். குறிப்பிட்ட மதத்தினரை மட்டும் விலக்கி, குறிப்பிட்ட நாடுகளை உலகின் கொடூரமான நாடுகள் என்பதாக அடையாளப்படுத்துகிற ஒரு சட்டம்; அதிலும் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முன்னால் வந்தவர்களுக்கு மட்டும் – 2014க்குப் பின் அந்த நாடுகளெல்லாம் எந்த கொடுமைகளையும் செய்வதில்லை; 2014உடன் நிறுத்திவிட்டார்கள் என்பதைப்போல  -–இந்த சட்டத்தை ஏன் கொண்டு வந்தார்கள்...

கும்பகோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

16.2.2020 ஞாயிற்றுக் கிழமை மாலை ஆறு மணி அளவில் தஞ்சை மாவட்டம் கும்ப கோணத்தில் மீன் மார்க்கெட் அருகில் மக்கள் அரசு கட்சி பொதுச் செயலாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற அக் கட்சியின், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கண்டனக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் இயக்கங்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து பெருவாரியான மக்கள் கலந்து கொண்டனர். அதில்  அழைக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்சித் பொறுப்பாளர்களும் உரையாற்றினார்கள். மக்கள் அரசு கட்சியின் தலைவர் வழக்கறிஞர் அருள்மொழிவர்மன் சிறப்புரை ஆற்றினார். அக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை சுட்டிக்காட்டி அக்கூட்டத்தின் நோக்கத்தையும், மக்கள் இந்த நேரத்தில் ஒன்றுபட்டு நிற்க வேண்டியதின் மிக முக்கியமான தேவையையும் வலியுறுத்தி நல்லதொரு கண்டன உரையாற்றினார்கள். கூட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் நாச்சியார்கோயில் கிளையின் சார்பாக மூன்றாவது தவணையாக கழகக் கட்டமைப்பு நிதிக்காக ரூ.20,000/- கழகத் தலைவரிடம் வழங்கப்பட்டது....

பெரியார் சிலை உடைப்பு எதிரொலி: பேராவூரணியில் ஆர்ப்பாட்டம்!

பெரியார் சிலை உடைப்பு எதிரொலி: பேராவூரணியில் ஆர்ப்பாட்டம்!

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே கலிப்பட்டு கிராமத்தில் சமூக விரோதிகளால் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் செயலை கண்டித்து பேராவூரணியில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேராவூரணி பெரியார் சிலை அருகில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், திராவிட முன்னேற்ற கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி, தமிழக மக்கள் புரட்சி கழகம், அறநெறி மக்கள் கட்சி, விதை நெல் இலக்கிய கூடம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பெரியார் சிலையை உடைத்தவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர். கூட்டத்தில் உண்மைக்கு மாறாக பெரியாரை அவதூறு செய்யும் நோக்கத்தோடு ‘துக்ளக்’ இதழ் விழாவில் பேசிய ரஜினிகாந்துக்கு எதிராகவும்,  கலவரத்தை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்த தமிழ்நாடு அமைச்சர்...

நாச்சியார் கோயில் கழகக் கூட்டத்தில் கழகத்தினர் வழங்கிய ரூ.30,000 நிதி

நாச்சியார் கோயில் கழகக் கூட்டத்தில் கழகத்தினர் வழங்கிய ரூ.30,000 நிதி

பெரியாரின் 41 ஆவது நினைவு நாள் கூட்டம் 1.2. 2020 அன்று சனிக்கிழமை மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்டம்  நாச்சியார் கோவில் வடக்கு வீதியில்   மிகச் சிறப்பாக நடை பெற்றது.   மாவட்டத் தலைவர் சாக்கோட்டை இளங்கோவன் தலை மையிலும் தலைமைக் குழு உறுப்பினர்  இளைய ராஜா மற்றும் சோலை மாரியப்பன் முன்னிலையிலும் தொடங்கியது. கூட்டத்திற்கு, குடந்தை ஒன்றிய அமைப்பாளர் வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து தஞ்சை மாவட்ட செயலாளர் கு. பாரி, நாகை மாவட்ட செயலாளர்  தே.மகேஷ், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ்முகமது , சிவபுரம் மாணவர் கபிலன் ஆகியோர் உரையாற்றினர் . அதனைத் தொடர்ந்து நாச்சியார் கோவில் தி.வி.க . கிளைக் கழகம் சார்பில் இரண்டாவது தவணையாக ரூ.30,000  (முப்பதாயிரம் மட்டும்) கழகத் தலைவர் தா.செ. மணியிடம் வழங்கப்பட்டது. கழகத்  தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரை நிகழ்த்தினார். ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாகவே பேச்சு...

நாச்சியார் கோயிலில், தந்தை பெரியார் 46-வது நினைவு நாள் பொதுக்கூட்டம் !

நாச்சியார் கோயிலில், தந்தை பெரியார் 46-வது நினைவு நாள் பொதுக்கூட்டம் !

நாச்சியார் கோயிலில், தந்தை பெரியார் 46-வது நினைவு நாள் பொதுக்கூட்டம் ! நாள் : 01.02.2020 சனிக்கிழமை. நேரம் : மாலை 7.00 மணி இடம் : வடக்கு வீதி,நாச்சியார்கோயில், #தஞ்சை_மாவட்டம். சிறப்புரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். நிகழ்ச்சி ஏற்பாடு : திராவிடர் விடுதலைக் கழகம், தஞ்சை மாவட்டம்.

பேராவூரணியில் பெரியார் நினைவு நாள் பொதுக் கூட்டம்

பேராவூரணியில் பெரியார் நினைவு நாள் பொதுக் கூட்டம்

பேராவூரணியில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பெரியார் நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  பேராவூரணி அண்ணா சிலை அருகில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு திராவிடர் விடுதலை கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் சித. திருவேங்கடம் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பா. பாலசுந்தரம், திராவிட முன்னேற்றக் கழகம் க. அன்பழகன், திராவிடர் கழகம் இரா. நீலகண்டன், காங்கிரஸ் கட்சி ஷேக். இப்ராஹிம், அறநெறி மக்கள் கட்சி ஜேம்ஸ், மனிதநேய ஜனநாயக கட்சி அப்துல் சலாம், திராவிடர் விடுதலைக் கழகம் நாவலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ‘பெரியார் இன்றும் தேவைப்படுகிறார்’ என்ற தலைப்பில் தமிழக மக்கள் புரட்சி கழகத்தின் தலைவர் அரங்க குணசேகரன், தாளாண்மை உழவர் இயக்கத்தின் தலைவர் கோ. திருநாவுக்கரசு, கல்வியாளர்கள் கே.வி. கிருஷ்ணன், புலவர் சு போசு, தமிழக மக்கள் புரட்சி கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆறு நீலகண்டன், தமிழக மக்கள் விடுதலை இயக்கம் முனைவர் ஆ. ஜீவா,...

பேரா பி விருத்தாசலனார் நினைவேந்தல் கருத்தரங்கம் ! – தஞ்சாவூர் 17112019

பேரா பி விருத்தாசலனார் நினைவேந்தல் கருத்தரங்கம் ! – தஞ்சாவூர் 17112019

பேரா பி விருத்தாசலனார் நினைவேந்தல் கருத்தரங்கம் ! நாள் : 17.11.2019.ஞாயிறு நேரம் : காலை 10.00 மணி இடம் : நாவலர் ந.மு.வேங்கட்டசாமி நாட்டார் திருவருள் கல்லூரி, தஞ்சாவூர். கருத்துரை : சமூக விடுதலை எனும் தலைப்பில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களும், ஊடக அறம் எனும் தலைப்பில் ஊடகவியலாளர் திரு.ஜென்ராம் அவர்களும் கருத்துரையாற்றுகிறார்கள்.  

கழகத்தில் இணைந்தனர்

கழகத்தில் இணைந்தனர்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ஸ்ரீராம், மாதவன், சுரேஷ், விஜய், கரண், அசோக்ராஜ், சின்னப்பதாஸ், மாரியப்பன், மணிகண்டன், தமிழ், மணிசேகரன், தேவேந்திரன், அருண் ஆகியோர்  திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்துள்ளனர். கும்பகோணம் அம்மன்பேட்டை கிளை அமைப்பாளராக ராஜ்குமாரும், கும்பகோணம் நகர அமைப்புச் செயலாளராக அசோக்கும் கழகத்தால் தலைமை ஒப்புதலோடு நியமிக்கப்பட்டனர். தஞ்சை மாவட்டக் கழகத் தலைவரும் தலைமைக் கழகப் பேச்சாளருமான சாக்கோட்டை இளங்கோவன் முயற்சியில் இவர்கள் கழகத்தில் இணைந்துள்ளனர். பெரியார் முழக்கம் 19092019 இதழ்

மயிலாடுதுறை மா.க. கிருட்டிணமூர்த்தி படத்திறப்பு; நினைவு நூல் வெளியீடு

மயிலாடுதுறை மா.க. கிருட்டிணமூர்த்தி படத்திறப்பு; நினைவு நூல் வெளியீடு

திராவிடர் விடுதலை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் ஆகியோரின் மூத்த சகோதரர் மா.க. கிருட்டிண மூர்த்தி (85) ஆகஸ்டு 19ஆம் தேதி முடிவெய்தினார். கூட்டுறவுத் துறையில் இணைப் பதிவாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற மா.க. கிருட்டிணமூர்த்தி, தீவிரமான பெரியாரிஸ்ட். தனது சகோதரர்களை பெரியார் இயக்கத்தை நோக்கிக் கொண்டு வந்தவர். அவரது விருப்பப்படி உடல் புதுச்சேரி ‘மகாத்மா காந்தி’ அரசு மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது. படத்திறப்பு நிகழ்வு ஆகஸ்டு 29 அன்று மயிலாடுதுறை வாசுகி மகாலில் மாலை 6 மணியளவில் நடந்தது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி படத்தைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். திராவிடர் விடுதலைக்கழகத் தோழர்களும் திராவிடர் கழகத் தோழர்களும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் நண்பர்களும் உறவினர்களும் திரளாகப் பங்கேற்றனர். நிகழ்வில்  மா.க. கிருட்டிணமூர்த்தி மகன் கி. தளபதிராஜ் எழுதிய ‘விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரா பெரியார்?’ என்ற நூல் வெளியிடப்பட்டது....

‘பெரியாரின் வேர்களைத் தேடி’ தஞ்சையில் மூன்று நாள் கருத்தரங்கு

‘பெரியாரின் வேர்களைத் தேடி’ தஞ்சையில் மூன்று நாள் கருத்தரங்கு

தஞ்சையிலுள்ள அன்னை வேளாங்கன்னி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் காட்சி தொடர்பியல் துறையும் ‘ரிவோல்ட்’ அமைப்பும் இணைந்து மூன்று நாள் பன்னாட்டு மாநாட்டை ஆகஸ்டு 23, 24, 25 தேதிகளில் நடத்தியது. ‘ஊடகங்களில் பகுத்தறிவு மற்றும் சமூக நீதியின் வேர்களைத் தேடி’ எனும் தலைப்பில் நடந்த கருத்தரங்கில் ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், சூழலியாளர்கள் பங்கேற்றுப் பேசினர். முதல் நாள் : ஆகஸ்டு 23 முதல் நாள் காலை அமர்வுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். பசு. கவுதமன் வரவேற்புரையாற்ற பேராசிரியர் ந. முத்துமோகன் முதன்மை உரையாற்றினார். பேராசிரியர் மு. நாகநாதன், புலவர் செந்தலை கவுதமன், இரா. எட்வின், சுப. குணராசன், முனைவர் தமிழ் காமராசன், சூழலியல் ஆய்வாளர் நக்கீரன் உரையாற்றினர். மனித நேயர் எஸ்.எஸ். ராஜ்குமார், ஆய்வு விமர்சனத்துன் நெறிப்படுத்தினார். இரண்டாம் நாள் அமர்வில் மருத்துவர் ஷாலினி, ‘பெரியாரின் பெண்ணியம்’ என்ற தலைப்பில் பேராசிரியர் முனைவர் இந்திரா, அமந்தா, ஓவியா,...

கழகப் பொறுப்பாளர் ப.அ. வைத்திலிங்கம் 105ஆவது வயதில் முடிவெய்தினார்

கழகப் பொறுப்பாளர் ப.அ. வைத்திலிங்கம் 105ஆவது வயதில் முடிவெய்தினார்

பெரியார் பெருந்தொண்டர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொறுப்பாளர் ப.அ. வைத்திலிங்கம் 17.8.2019 அன்று 105ஆம் அகவையில் முடிவெய்தினார். பிரபல திரைப்பட பாடலாசிரியர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நெருங்கிய நண்பர் பெரியார் பெருந்தொண்டர் வைத்திலிங்கம், பேராவூரணி அருகே அழகியநாயகிபுரம் கிராமத்தில் வசித்து வந்தார். சிங்கப்பூரில் பணியாற்றி தனது கடும் உழைப்பால் பெற்ற பெரும் செல்வத்தைக் கொண்டு அழகியநாயகிபுரம் அரசு மருத்துவமனைக்கு நிலம் வாங்கிக் கொடுத்தார் வைத்திலிங்கம். நிறைந்த உழைப்பும், கடன் வாங்காமல் வாழும் பண்பும், பசித்தபின் அளவோடு உண்ணும் பழக்கமும் அய்யாவின் நிறை வாழ்வுக்கு காரணமாக அமைந்தன என்று அவரே அடிக்கடி பல்வேறு கூட்டங்களில் குறிப்பிட்டிருக்கிறார். சிறந்த கவிபுனையும் ஆற்றல் கொண்டவர். கவிதைகளை கையெழுத்துப் பிரதிகளாகவே வைத்திருக்கிறார். பேராவூரணி திருக்குறள் பேரவை வைத்திலிங்கம் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பித்துள்ளது. கழக சார்பில் தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித. திருவேங்கடம் மற்றும் ஆயர் ஜேம்ஸ், மெய்ச்சுடர் வெங்கடேசன், அ. கோவேந்தன்,...

பெரியார் பெருந்தொண்டர் ஐயா வைத்திலிங்கம் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி

பெரியார் பெருந்தொண்டர் ஐயா வைத்திலிங்கம் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி

திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொறுப்பாளர் ஐயா வைத்திலிங்கம் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி ———– பெரியார் பெருந்தொண்டர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொறுப்பாளர் ஐயா ப.அ. வைத்திலிங்கம் அவர்களின் உடலுக்கு திராவிடர் விடுதலை கழகத்தின் தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித திருவேங்கடம், ஆயர் த ஜேம்ஸ், மெய்ச்சுடர் நா. வெங்கடேசன், அ.கோவேந்தன், தா.கலைச்செல்வன் உள்ளிட்ட பெரியாரிய உணர்வாளர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

ஐயா ப அ வைத்தியலிங்கம் அவர்களுக்கு வீரவணக்கம்

ஐயா ப அ வைத்தியலிங்கம் அவர்களுக்கு வீரவணக்கம்

ஐயா ப அ வைத்தியலிங்கம் அவர்களுக்கு வீரவணக்கம் ———– பட்டுக்கோட்டை செங்கப்படுத்தான்காடு  கிராமத்தில் பிறந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நண்பரும் பேராவூரணி அருகே அழகியநாயகிபுரம் கிராமத்தில் வசித்து வரும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொறுப்பாளருமான நூற்றி ஐந்து வயது கடந்த பெரியவர் வைத்தியலிங்கம் அவர்கள் அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார். சிறுவயது முதலே பெரியார் கொள்கைகளில் ஈர்க்கப்பட்ட இவர் கடைசிவரை பெரியார் கொள்கைகளில் முழு ஈடுபாடும் சமூகத் தொண்டும் செய்து வாழ்ந்து வந்தார். மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் குடும்பத்தோடு மிகுந்த நட்போடு இருந்த ஐயா வைத்திலிங்கம் அவர்களின் குடும்பம் பின்னர் பேராவூரணி அருகே அழகியநாயகிபுரம் கிராமத்தில் குடியேறியது. சிங்கப்பூர் நாட்டில் பணியாற்றி தனது கடும் உழைப்பால் பெற்ற பெரும் செல்வத்தைக் கொண்டு அழகியநாயகிபுரம் அரசு மருத்துவமனைக்கு நிலம் வாங்கிக் கொடுத்தார் ஐயா வைத்திலிங்கம். நிறைந்த உழைப்பும், கடன் வாங்காமல் வாழும் பண்பும், பசித்தபின் அளவோடு உண்ணும் பழக்கமும் அய்யாவின்...

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

  ‘மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப் பறிக்காதே; புதிய கல்வி என்ற பெயரால் குலக் கல்வியைத் திணிக்காதே’ என்ற முழக்கத்துடன் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழகத்தில்  முனைகளிலிருந்து பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறது. ஆகஸ்டு 26இல் தொடங்கி நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி பயண நிறைவு விழா நடைபெறுகிறது. திருப்பூர், விழுப்புரம், ஈரோடு (கோபி), மயிலாடு துறை, சென்னை, மேட்டூர் என 6 முனைகளிலிருந்து தொடங்கும் பயணம், 150 ஊர்களில் பரப்புரையை நடத்துகிறது. நூறுக்கும் மேற்பட்ட கழக செயல்பாட்டாளர்கள், பயணங்களில் முழு அளவில் பங்கேற்கிறார்கள். பரப்புரைக்கான துண்டறிக்கை, கழக வெளியீடுகள் தயாராகி வருகின்றன. கலைக் குழுக்கள், பரப்புரைப் பயணங்களில் இசை, வீதி நாடகம் வழியாக மண்ணின் மைந்தர்கள் வேலை  வாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுவது குறித்தும் வடநாட்டுக்காரர்கள் தமிழக வேலை வாய்ப்புகளில் குவிந்துவரும் ஆபத்துகள் குறித்தும் மக்களிடையே பரப்புரை செய்வார்கள். ஒத்த கருத்துடைய அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள் பயணத்துக்கு ஆதரவு தர ஆர்வத்துடன்...

நன்கொடை

நன்கொடை

திருவிடை மருதூர் வட்டம், அனக்குடி (அஞ்சல்), அம்மன் பேட்டை கிராமம் இரா.ராஜ்குமார்- எழிலரசி இணையருக்கு 15.06.2019 அன்று ஆண் மகன் வெற்றிச்செல்வன் பிறந்துள்ள மகிழ்வுக்காக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வளர்ச்சி நிதிக்கு ரூ. 1000/- வழங்கியுள்ளார்கள். பெரியார் முழக்கம் 27062019 இதழ்

ஆர்.பி.எஸ். ஸ்டாலின் நினைவு நாள் கொளத்தூர் மணி பங்கேற்றார்

ஆர்.பி.எஸ். ஸ்டாலின் நினைவு நாள் கொளத்தூர் மணி பங்கேற்றார்

பெரியார் தொண்டர் குடந்தை ஆர்.பி.எஸ். ஸ்டாலின் நினைவு நாள் ஜூன் 15ஆம் தேதி மாலை குடந்தை பவளம் திருமண மண்டபத்தில் நடந்தது. ‘கீதாலயனின் நினைவுகள் சட்டக் கல்வி மய்யம்’ சார்பில் நடந்த இந்த நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்று தோழர் ஆர்.பி.எஸ். ஸ்டாலின், பெரியாரியலுக்கு ஆற்றிய தொண்டுகளை நினைவு கூர்ந்தார்.   இந்த நிகழ்வில் த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கோவை இராம கிருட்டிணன், சோழபுரம் கலியன், சாக்கோட்டை இளங்கோவன், வழக்கறிஞர் விவேகானந்தன்,  பேராசிரியர் ஜெயராமன், எஸ்.எம். ஜெயக்குமார் (அ.ம.மு.க.), வழக்கறிஞர் ஜார்ஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர். பெரியார் முழக்கம் 20062019 இதழ்

கழகக் கட்டமைப்பு நிதி: தோழர்களின் பேரார்வம்

கழகக் கட்டமைப்பு நிதி: தோழர்களின் பேரார்வம்

கோவை விடியல் நண்பர்கள் ரூ.   4,20,000 (27.5.2019 அன்று மாலை திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன், கோவை மாவட்டக் கழகத் தோழர்கள் விடியல் நண்பர்கள் குழுவினரைச்  சந்தித்தபோது தங்கள் நிதியுடன் திரட்டிய நிதியையும் சேர்த்து ரூ. 4,20,000த்தைக் கழகத் தலைவரிடம் வழங்கினர். இவர்கள் ஏற்கனவே ரூ. 20,000 வழங்கியுள்ளனர்.) அ.மாசிலாமணி (கீழப்பாவூர்)  ரூ.         25,000 கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட சார்பில்     ரூ.   4,35,000 (ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டக் கழக கட்டமைப்பு நிதி ஒப்படைப்பு நிகழ்ச்சி 27.05.2019 அன்று கழகப் பொருளாளர் துரைசாமி இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்வில் ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டத் தோழர்கள் கலந்து கொண்டு முதல் கட்டமாக ரூ.4,35,000 (நான்கு இலட்சத்து முப்பத்தி ஐயாயிரம்) ரூபாயை கழகத் தலைவரிடம் ஒப்படைத்தனர்) மேட்டூர் நாத்திகர் விழாவில்…...

தலைமைக் கழக நிதி

தலைமைக் கழக நிதி

பேராவூரணி-சேதுபாவாசத்திரம் ஒன்றிய திவிக சார்பில் கழக கட்டமைப்புநிதி ரூ20000  கழகத் தலைவரிடம் தஞ்சைமாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம், அறிவுச்செல்வன் பெரியசாமி, அரும்புச்செல்வன் பெரியசாமி ஆகியோர் வழங்கினர். பெரியார் முழக்கம் 23052019 இதழ்

மயிலாடுதுறையில் ஆக்கிரமிப்புக் கோயில்கள்  கழக சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனு

மயிலாடுதுறையில் ஆக்கிரமிப்புக் கோயில்கள் கழக சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனு

மயிலாடுதுறை பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 28 நடைபாதைக் கோயில்கள் மற்றும் வழிபாட்டு இடங்களின் பட்டியலை மயிலாடுதுறை வருவாய்த் துறை அதிகாரியிடம் ஜன.21 அன்று கழகத் தோழர்கள் நேரில் பட்டியலாக  அளித்தனர். மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பதிவுத் அஞ்சலிலும் அனுப்பப்பட்டுள்ளது. கழகப் பொறுப்பாளர்கள் இளையராஜா, மகேஷ், செந்தில், மகாலிங்கம், விஜயராகவன், தில்லை நாதன், ராகவன் ஆகியோர் மனு  அளிக்க சென்றிருந்தனர். பெரியார் முழக்கம் 24012019 இதழ்

தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம் 10012019

தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம் 10012019

திராவிடர் விடுதலைக் கழகம் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் தலைமையில் பேராவூரணியில் நடைபெற்றது. கூட்டத்தில், இயக்க பணிகள் கிராமங்கள் தோறும் எடுத்து சென்று மக்களை இயக்கமாக்குவது குறித்து ஆலோசித்து அதற்கான செயல் வரைவுகள் முன்வைக்கப்பட்டது, புரட்சி பெரியார் முழக்கம் ஏடு, நிமிர்வோம் இதழ் சந்தா சேர்ப்பு அதிகப்படுத்துவது குறித்த ஆலோசனைகள் பதிவு செய்யபட்டன. கூட்டத்தில் தலைமைக் கழக உறுப்பினர்கள் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய கழக தோழர்கள் தவறாது வந்திருந்து பெரியார், அம்பேத்கர் கொள்கையினை ஒவ்வரிடத்திலும் கொண்டு செல்வோம் என உறுதி மொழி எடுத்துக் கொண்டு கூட்டத்தினை நிறைவு செய்தார்கள்.

கழகச் சார்பில் பெரியார் சிலைகளுக்கு மாலை

கழகச் சார்பில் பெரியார் சிலைகளுக்கு மாலை

பேராவூரணி: தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பேராவூரணி ஆவணம் சாலை முகத்தில் அமைந் துள்ள பெரியார் சிலைக்கு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் திருவேங்கடம்,  நகர அமைப்பாளர் கலைச்செல்வன், மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட குழு உறுப்பினர் கருப்பையா, மதிமுக பொறுப்பாளர்கள் குமார், கண்ணன், மணிவாசன், தேனி ஆல்பர்ட், தமிழக மக்கள் புரட்சி கழகப் பொறுப்பாளர்கள் பைங்கால் மதியழகன், வீரக்குடி ராஜா, சத்துணவு ஊழியர்கள் சங்க பொறுப்பாளர் முத்துராமன், அறநெறி மக்கள் கட்சி பொறுப்பாளர்கள் வனராணி, ஜேம்ஸ்,   முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் கீ.ரே. பழனிவேல், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், பேராசிரியர் ச.கணேஷ்குமார், திரைப்படப் பாடலாசிரியர் செங்கை நிலவன், பெரியார் அரும்புகள் அறிவுச் செல்வன், அரும்புச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். திருச்செங்கோடு : தந்தை பெரியாரின் 140 ஆவது பிறந்தநாளான...

பயண அனுபவங்கள் : தோழர்களின் பகிர்வு

பயண அனுபவங்கள் : தோழர்களின் பகிர்வு

ஆகஸ்ட் 21 முதல் 26 வரை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய ‘தமிழர் கல்வி உரிமை மீட்பு’ப் பரப்புரைப் பயணத்தில் பங்கேற்ற தோழர்களின் பயண அனுவபங்கள். சென்னை குழுவின் அனுபவங்கள் பற்றி உமாபதி கல்வி உரிமைகள் குறித்த பரப்புரைப் பயணம் என்பதால் கலைக்குழுவுக்கு அதிக நேரத்தை எல்லா இடத்திலும் வழங்கினோம். எங்களுடன் வந்த விரட்டு கலைக் குழுவின் நாடகம் பரப்புரையின் நோக்கத்தை மக்களிடம் மிக எளிமையாக விளக்கியது. தங்களுக்குத் தேவையான செய்திகளைப் பேசுகிறார்கள் என்பதைப் புரிந்து எல்லா இடங்களிலும் மக்கள் தங்களது பேராதரவைத் தந்தனர். சென்ற இடங்களில் கடை வைத்திருந்த ஏழை, எளிய உழைக்கும் மக்கள், நம் நிகழ்ச்சியை முடித்த பிறகு குளிர்பானங்கள், பழங்கள் வாங்கிக் கொடுத்து பல இடங்களில் எங்களை உற்சாகப்படுத்தினர். ஒரு இடத்தில் தோழர்கள் பரப்புரையில் புத்தகம் விற்றுக்கொண்டிருந்தபோது நாடகத்தைப் பார்த்துவிட்டு, “எனக்குப் படிக்கத் தெரியாது, நீங்கள் ஏதோ நல்லது செய்கிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது” என்றுகூறி தனது...

தஞ்சை மாவட்டத்தில் பார்ப்பன-பண்ணையார் ஆதிக்கம்-முடிவுக்கு வந்தது எப்படி?(2)

தஞ்சை மாவட்டத்தில் பார்ப்பன-பண்ணையார் ஆதிக்கம்-முடிவுக்கு வந்தது எப்படி?(2)

அசோகா பல்கலைக்கழகமும் (டெல்லி), அம்பேத்கர் பல்கலைக்கழகமும், திராவிடியனிஸம் என்ற தலைப்பில் சென்ற ஜனவரி மாதம் ஒரு கருத்தரங்கை ஒழுங்கு செய்திருந்தார்கள். இந்தக் கருத்தரங்கம் திராவிட இயக்கம் தோன்றி ஒரு நூற்றாண்டு ஆனதையொட்டி ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. அக்கருத்தரங்கில் பேராசிரியர் ஜெயரஞ்சன் வாசித்த கட்டுரையின் சுருக்கம். (சென்ற இதழ் தொடர்ச்சி) நில உரிமையாளர் தனது நிலத்தை திரும்பக் கேட்டால் குத்தகைதாரர் மிகக் குறைவாக கேட்பது மூன்றில் ஒரு பகுதி நிலமோ அல்லது அதற்கு ஈடான பணமோ. நில உரிமையாளர் அதிகாரம் மிக்கவராக இருந்தால், மூன்றில் ஒரு பகுதி நிலத்தை வழங்கிவிட்டு மீதி நிலத்தை எடுத்துக் கொள்ளலாம். நில உரிமையாளரின் அதிகார பலம் குறையக் குறைய குத்தகைதாரரின் பங்கு கூடும். நில உரிமையாளர் உள்ளூர்க்காரராக இல்லாமலும் சாதி மற்றும் இதர பலம் இல்லாதவராக இருந்தால் ஒரு சென்ட் நிலம் கூட பெற முடியாது. ஆக, இந்தப் பேரத்தை தீர்மானிப்பது இவர்கள் இருவரது பலங்கள்தான். பதிவுபெற்ற...

தஞ்சை மாவட்டத்தில் பார்ப்பன-பண்ணையார் ஆதிக்கம்-முடிவுக்கு வந்தது எப்படி?

தஞ்சை மாவட்டத்தில் பார்ப்பன-பண்ணையார் ஆதிக்கம்-முடிவுக்கு வந்தது எப்படி?

அசோகா பல்கலைக்கழகமும் (டெல்லி), அம்பேத்கர் பல்கலைக்கழகமும், திராவிடியனிஸம் என்ற தலைப்பில் சென்ற ஜனவரி மாதம் ஒரு கருத்தரங்கை ஒழுங்கு செய்திருந்தார்கள். இந்தக் கருத்தரங்கம் திராவிட இயக்கம் தோன்றி ஒரு நூற்றாண்டு ஆனதையொட்டி ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. அக்கருத்தரங்கில் பேராசிரியர் ஜெயரஞ்சன் வாசித்த கட்டுரையின் சுருக்கம். தமிழகம் ஒரு முன்னேறிய மாநிலமாகச் சமீப காலங்களில் அங்கீகரிக்கப்பட்ட போதும், நிலச் சீர்திருத்தம் இம்மாநிலத்தில் சரிவரச் செயல்படுத்தப் படவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு ஒரு சாரரால் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. இக்குற்றச் சாட்டின் அடிப்படையில் நோக்கினால், நிலப் பிரபுத்துவம் தமிழகத்தில் தொடர்கிறது என்றுதான் எவரும் ஊகிப்பர். அதன் விளைவாகப் பெரும்பான்மையான சாகுபடி நிலங்கள் குத்தகைக்கு அடைக்கப்பட்டும் வேளாண் வருமானத்தில் பெரும் பகுதி குத்தகையாக வசூலிக்கப்படும் சூழலும் நிலவ வேண்டும். குறிப்பாகக் காவிரி டெல்டா போன்ற செழிப்பான பகுதிகளில் இத்தகைய நிலச் சுவான்தார் முறை உக்கிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், நடைமுறை என்ன? நிலப் பிரபுத்துவம் பெருமளவு...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

மதுரை : தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து 22.05.2018 அன்று மாலை 6 மணிக்கு மதுரையில் திராவிடர் விடுதலைக் கழகம், மே 17, புரட்சிகர இளைஞர் முன்னணி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோர் இணைந்து பெரியார் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.  சாலை மறியலில் ஈடுபட்ட தோழர்களை காவல்துறை கைது செய்து இரவு 11 மணிக்கு விடுதலை செய்தது. பேராவூரணி : 23.05.2018 அன்று மாலை அண்ணா சாலை பேராவூரணி யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் எதிர்ப்பையும் மீறி ஸ்டெர்லைட் ஆலையை ஏன் உடனடியாக மூட வில்லை? போராடும் மக்கள் ஆட்சியர் அலுவலகம் வந்த போது ஆட்சியர் எங்கு போனார்? ஏன் அமைதியாகப் போராடும் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டது? இதற்கு அனுமதி கொடுத்தது யார்? காவலர்களால் திட்டமிட்டு கலவரம் நடத்தப்பட்டது ஏன்? இராணுவ உதவி வேண்டுமானால் தருவதாக...

எச்.ராஜாவைக் கைது செய்! கொந்தளித்தது தமிழகம்!

எச்.ராஜாவைக் கைது செய்! கொந்தளித்தது தமிழகம்!

எச். ராஜாவைக் கண்டித்து, திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் உருவ பொம்மை எரிப்புகள் நடந்தன. குமரி மாவட்டத்தில் 07-03-2017 புதன் கிழமை, காலை 11.00 மணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறீநாத்திடம் புகார் மனு வழக்குரைஞர் வே.சதா (மாவட்டத் தலைவர்) தலைமையில் தமிழ்மதி (மாவட்டச் செயலாளர்), நீதி அரசர் (தலைவர், பெரியார் தொழிலாளர் கழகம்), சூசையப்பா (முன்னாள் மாவட்டத் தலைவர்), அப்பாஜி (வழக்குரைஞர் அணி துணைச் செயலாளர், தி.மு.க), வைகுண்ட ராமன், வின்சென்ட் ஆகியோரால் வழங்கப் பட்டது. ஆனைமலை : கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின்  ஒருங் கிணைப்பில் அனைத்து கட்சிகளின் சார்பில் 07-03-2018 மாலை 5 மணிக்கு ஆனைமலை முக்கோணத்தில் நடைபெற்றது. ஆனைமலை நகரச் செயலர் வே.அரிதாசு தலைமையில், நகர தலைவர் சோ.மணிமொழி முன்னிலையில் நடைபெற்றது. கண்டன உரையாக நாகராசு (திராவிடர் கழகம்), பரமசிவம் (சிபிஎம் ), மணிமாறன்  (வெல்ஃபேர் பார்ட்டி), அப்பன்குமார் (விசிக), சாந்துசாகுல்அமீது (இந்திய...

பேராவூரணியில் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

பேராவூரணியில் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

பேராவூரணியில் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் ! மதவெறியைத் தூண்டும் வகையில் பேசிவரும் எச். இராசாவைக் தமிழக அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் – பேராவூரணி பெரியார் சிலை முன்பு ஆர்ப்பாட்டம். பேராவூரணி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் எச். ராசாவைக் கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பேசிய மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேல் “திரிபுரா மாநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த, புரட்சியாளர் லெனின் சிலையை, தற்போது அம்மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் பாரதிய ஜனதா கட்சியினர் உடைத்தெரிந்திருக்கும் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உலகில் தலைசிறந்த தலைவர்களின் சிலைகளை எல்லா நாடுகளும் அமைத்துப் போற்றி வருகிறது. இந்தியாவின் தேசத் தந்தை காந்தியடிகளின் சிலை உலகெங்கும் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. பகுத்தறிவுத் தந்தைப் பெரியாரின் சிலை உலகெங்கிலும் அமைக்கப்பட்டு போற்றப்படுகிறது. சமூகத்தில் சிறந்த சிந்தனைகளை போற்றுவதும் அச்சிந்தனை...

கழகம் எடுத்த  தமிழர் திருநாள் எழுச்சி

கழகம் எடுத்த தமிழர் திருநாள் எழுச்சி

கடலூர் : கடலூர் மாவட்ட திராவிடர் விடுதலை கழகம் சார்பாக 2018ஆம் ஆண்டு தமிழர் திருநாளை முன்னிட்டு  மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் பொருட்டு விளையாட்டு போட்டி, கட்டுரைப் போட்டி, திருக்குறள் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் ஓட்டப் பந்தயம், கோ-கோ போன்ற எண்ணற்ற போட்டிகள், காவல் துறையின் எதிர்ப்பை மீறி, ஒலிபெருக்கி அனுமதி மறுத்த போதும் அதை பொருட்படுத்தாது நடத்தியே தீருவோம் என்று நமது தோழர்களும், கிராம பொதுமக்களும், தீர்மானம் போட்டு சிறப்பாக நடத்தி முடித்தனர். 16.01.2018 அன்று இரவு பரிசளிப்பு விழா நடைபெற்று விழா இனிதே முடிவுற்றது. விழாவை முன்னின்று மிகச் சிறப்பாக நடத்திய திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் நட. பாரதிதாசன் (மாவட்டச் செயலாளர்), நட. பாபு அம்பேத்கர், பாலமுருகன் சிலம்பரசன், மற்றும் தமிழ்நாடு  மாணவர் கழகத் தோழர்கள் பாலாஜி, தினேஷ், மோகன், மணிகண்டன் ஆகியோர் முன்னின்று நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தனர். பேராவூரணி :  போராட்டப் பண்பே தமிழர்களின்...

கீழ்வெண்மணி: மறைக்கப்படும் உண்மைகள்

கீழ்வெண்மணி: மறைக்கப்படும் உண்மைகள்

கீழ்வெண்மணி படுகொலையில் வரலாற்றில் மறைக்கப்படும் பகுதியை சுட்டிக்காட்டுகிறார் பசு. கவுதமன். ‘தடம்’ இதழுக்கு அவர் எழுதிய கட்டுரையின் முழுமையான வடிவம். 25.12.1968, மனிதகுல வரலாற்றில் மறக்கமுடியாத கருப்பு தினம்.  44 மனித உயிர்கள், மனிதர்கள் என்று சொல்லப்பட்டவர்களாலேயே கொளுத்தப்பட்ட கொடும் கோரநாள். ஆயிற்று அய்ம்பது ஆண்டுகள் ! இந்த அய்ம்பது ஆண்டுகளிலும் எப்போதும் , எல்லோராலும் சொல்லப்பட்டது, “அரைப்படி நெல் கூலிஉயர்வு கேட்டதற்காக…  ”  இது கூலி உயர்வு மட்டுமேயான பிரச்சனையா? அல்லது அந்த மிகப்பெரிய அவலச் சம்பவத்தை – துயர விளைவை அப்படித்தான் குறுக்கி, சுருக்கிவிட முடியுமா? 62களின் இறுதிகளிலிருந்து நாகை தாலுக்காவில் வளர்த்தெடுக்கப்பட்ட போராட்டச் சூழலில், ஆய்மழை தங்கவேலு , சிக்கல் பக்கிரிசாமி, இருஞ்சூர் சின்னப்பிள்ளை, கேக்கரை ராமச்சந்திரன் ஆகியோர்களின் உயிர்பலி என்ற தொடர்ச்சியின் உச்சகட்ட வெளிப்பாடுதான் வெண்மணியின் 44 மனித உயிர்களை பலிகொண்ட தீயின் கங்குகள்.! “ மோதலுக்குக் காரணம் நெல் உற்பத்தியாளர் சங்கத்திற்கும், இடது கம்யூனிஸ்ட்...

நீடாமங்கலம் சாதியக் கொடுமை-நூல் ஆய்வரங்கம்

பெரியார் பெருந்தொண்டர் தஞ்சை ந.பசுபதியின் 12-ஆம் ஆண்டு நினைவு நாளில் ‘ரிவோல்ட்’ நடத்தும் ‘நீடாமங்கலம் சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்’நூல் ஆய்வரங்கம் தஞ்சாவூர் சரோஜ் நினைவகத்தில்  25.11.2017 மாலை 5 மணிக்கு தொடங்கியது பெரியாரிய எழுத்தாளர் பசு கவுதமன் தலைமையேற்க தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சிவகுரு வரவேற்புரை ஆற்றினார். எழுத்தாளர் சண்முகசுந்தரம் ஒருங்கிணைப்பில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச்செயலாலர் சாமுவேல்ராஜ், தபெதிக பிரச்சாரச் செயலர் சீனி விடுதலை அரசு, மதிமுக வெளியீட்டுச் செயலர் வந்தியதேவன் ஆய்வுரை நிகழ்த்தினர் வரலாற்று ஆய்வறிஞர் பேராசிரியர் ஆ இரா வேங்கடாசலபதி இந்நூல் வெளிவர நூலாசிரியர் எவ்வாறெல்லாம் உழைத்தார் என்றும் தான் எப்படியெல்லாம் அவரை வழிகாட்டி விரைவில் நூல் வெளிவர நெருக்குதல் அளித்தேன் என்பதை சுவைபட எடுத்துரைத்தார் நூலாசிரியர் ஆ திருநீலகண்டன் தன்னுரையில் கழகத் தோழர்கள் மற்றும் பெரியாரிய பற்றாளர்கள் இந்நூல் வெளிவர எவ்வோறெல்லாம் உடனுதவினார்கள் என்றும், தான் எவ்வாறெல்லாம் நூல் வெளிவர களவுழைப்பை...

நீடாமங்கலம் – நூல் ஆய்வரங்கம் தஞ்சாவூர் 25112017

பெரியார் பெருந்தொண்டர் தஞ்சை ந.பசுபதியின் 12-ஆம் ஆண்டு நினைவு நாளில் *ரிவோல்ட்* நடத்தும் *நீடாமங்கலம்*நூல் ஆய்வரங்கம் தஞ்சாவூர் சரோஜ் நினைவகத்தில்  25.11.2017 மாலை 5 மணிக்கு தொடங்கியது பெரியாரிய எழுத்தாளர் தோழர் பசு கவுதமன் அவர்கள் தலைமையேற்க தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தோழர் சிவகுரு வரவேற்புரை ஆற்றினார். எழுத்தாளர் சண்முகசுந்தரம் அவர்களின் ஒருங்கிணைப்பில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச்செயலாலர் சாமுவேல்ராஜ், தபெதிக பிரச்சாரச் செயலர் சீனி விடுதலை அரசு, மதிமுக வெளியீட்டுச் செயலர் வந்தியதேவன் அவர்கள் ஆய்வுரை நிகழ்த்தினர் வரலாற்று ஆய்வறிஞர் பேராசிரியர் ஆ இரா வேங்கடாசலபதி அவர்கள் இந்நூல் வெளிவர நூலாசிரியர் எவ்வாறெல்லாம் உழைத்தார் என்றும் தான் எப்படியெல்லாம் அவரை வழிகாட்டி விரைவில் நூல் வெளிவர நெருக்குதல் அளித்தேன் என்பதை சுவைபட எடுத்துரைத்தார் நீடாமங்கலம் நூலாசிரியர் ஆ திருநீலகண்டன் அவர்கள் தன்னுரையில் திவிக தோழர்கள் மற்றும் பெரியாரிய பற்றாளர்கள் இந்நூல் வெளிவர எவ்வோறெல்லாம் உடனுதவினார்கள் என்றும் தான்...

பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் பேராவூரணி

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா தந்தைப் பெரியாரின் 139 வது பிறந்தநாளையொட்டி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பேராவூரணியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம் தலைமையில், திவிக பொறுப்பாளர் சீனி. கண்ணன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். மேலும் தமிழக மக்கள் புரட்சிக் கழகம் சார்பில் முனியன், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், உழைக்கும் மக்கள் கட்சியின் வீர.மாரிமுத்து, நாகூரான், பெரியார் அம்பேத்கர் மக்கள் கழகம் அனல் இரவீந்திரன், பெரியார் பிஞ்சுகள் அறிவுச்செல்வன், அரும்புச் செல்வன் ஆகியோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்வில் ஆறு.நீலகண்டன், ஆயில் மதியழகன், பைங்கால் இரா.மதியழகன், தா.கலைச்செல்வன் உள்ளிட்ட பெரியாரிய தொண்டர்கள் கலந்துகொண்டனர். பெண் விடுதலை, சாதி மறுப்பு, வகுப்புவாரி இடஒதுக்கீடு, மநுநீதி எதிர்ப்பு, திருக்குறள் மீட்பு, மாநில சுயாட்சி உள்ளிட்ட பெரியாரின் கருத்துக்கள் ஒலிபெருக்கிமூலம் முழக்கம் செய்யப்பட்டது.

அரியலூர் அனிதாவை தற்கொலைக்கு தூண்டிய மத்திய அரசை கண்டித்து திவிக சார்பில் மாநிலம் முழுதும் முற்றுகைப் போராட்டம் 02092017

நீட் தேர்வை திணித்து தமிழக கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்து, அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணமான பா.ஜ.கவின் தமிழக தலைமையகம் கமலாயத்தை முற்றுகையிடும் போராட்டம்.. நீட் தேர்வை ரத்து செய் மாணவி அனிதாவின் கொலைக்கு நீதி வழங்கு! நேரம்:மாலை 3.00 மணி நாள்:02.09.2017 திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை   நீட் தேர்வினை திணித்த மத்திய மாநில அரசுகளை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெறுகிறது காலை 10 மணிக்கு, கோவை இரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாலை 4 மணிக்கு, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாலை 3 மணிக்கு, சென்னை பாஜக அலுவலகம் முற்றுகை மாலை 5 மணிக்கு, மன்னார்குடி பெரியார் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

மாபெரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தஞ்சாவூர் 01062017

தஞ்சையில் ஜுன் 12ல் காவிரி நீரை பெற்றுத் தந்து மத்திய அரசிடம் வாழ வழி கேட்டு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக மாபெரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர்,பனகல் பில்டிங் அருகில்,ஜூன் 1 முதல் ஜூன் 5 வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த போராட்டத்தை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் தோழர் பழ.நெடுமாறன் அவர்கள் துவங்கி வைத்தார். ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். போராட்டத்தின் துவக்க நாளான நேற்று 01.06.2017 அன்று கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் தோழர் கு.ராமகிருட்டிணன், S.D.P.I. தலைவர் தோழர் தெஹலான் பாகவி,தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் சி.முருகேசன், தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் புண்ணியமூர்த்தி, ஒருங்கிணைப்புக்குழு கவுரவ தலைவர்...

நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்- புத்தக அறிமுக விழா தஞ்சாவூர் 01042017

நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்- புத்தக அறிமுக விழா தஞ்சாவூர் 01042017 தஞ்சை பசு.கவுதமன் பெரியாரின் மொழி, கலையும் பண்பாடும், இலக்கியம், தத்துவம், சித்திரபுத்திரன் கட்டுரைகள் என்ற ஐந்து தலைப்புகளில் தொகுத்து, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட உள்ள 3,750 பக்கங்கள் கொண்ட தொகுப்புகளைக் குறித்த அறிமுகக் கூட்டத்தை அந்நிறுவனமும், தஞ்சை இலக்கிய வட்டமும் இணைந்து    1-4-2017 அன்று மாலை 6-00 மணியளவில், தஞ்சாவூர் பெசண்ட் அரங்கில் நடத்தினர். தஞ்சை இலக்கிய வட்டத் த்ஹொழர் சண்முக சுந்தரத்தின் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில், செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் தலைவரும் மூத்த பொதுவுடமை இயக்கத் தலைவருமான தோழர் ஆர்,நல்லக்கண்ணு, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வழக்குறைஞர் இராஜ்குமார் (தி.மு.க), பேராசிரியர் காமராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அறிமுக உரையாற்றினர். கூட்டத்தின் இறுதியில் தொகுப்பாசிரியர் பசு கவுதமன், அவருக்கு துணை நின்ற அவரது வாழ்விணையர் அறிவுச்செல்வி ஆகியோர் பாராட்டப் பட்டனர்....

பேச்சுரிமையை மறுக்கும் தமிழக அரசு !

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் இன்று 01032017 அன்று மன்னார்குடியில் ஹைட்ரோ கார்பன் காஸ் திட்டத்தை கைவிடக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும், மேகதாது அணை கட்டுமானத்தை தடுக்க கோரியும் மத்திய மோடி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது இந்த நிலையில் திடீரென 27022017 நள்ளிரவு சுமார் ஒரு மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து மன்னார்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கடிதம் கொடுத்து உள்ளார் . நீதிமன்ற அனுமதிக்கு வழக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் விரோத அரசுகளின் முகமூடிகள் மக்கள் மன்றத்தில் தோலுரிக்கப்படும் . செய்தி மன்னை காளிதாசு

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் 01032017

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் 01032017

மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் ! ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும், மேகதாது அணை கட்டுமானத்தை தடுக்க கோரியும் திருவாரூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மத்திய அரசி வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நாள் : 01.03.2017 மாலை 6 மணிக்கு இடம் : மன்னார்குடி, பெரியார் சிலை அருகில். தலைமை : இரா .காளிதாசு மாவட்ட செயலாளர் திராவிடர் விடுதலைக் கழகம் சிறப்புரை : தஞ்சை விடுதலைவேந்தன் தலைமை கழக பேச்சாளர் ம தி மு க