‘குடிஅரசு’ தொகுப்பில் கழகம் சந்தித்த தடைகள் – விருது வழங்கும் விழாவில் கொளத்தூர் மணி விளக்கம்

தொகுப்புகளை வெளியிட்ட பதிப்பாசிரியர் கொளத்தூர் மணிக்கு சிறந்த பதிப்பாளர் விருதை சீர் வாசகர் வட்டம் வழங்கியது.விருது ஏற்பு விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை;
எனக்கு குடிஅரசு நூல் பதிப்புக்காக இந்த விருதை அளித்திருக்கிறார்கள். அதனால் அதைப் பற்றி இங்கே குறிப்பிட்டாக வேண்டும். பெரியாரின் உதவியாளராக இருந்த புலவர் இமயவரம்பன் அவர்களின் முயற்சியில் தோழர்களால் திரட்டப்பட்டு அப்போது வரை இருந்த குடிஅரசு இதழ்களை படி எடுத்து (ஜெராக்ஸ்) கையால் எழுதி திருச்சி பெரியார் மாளிகையில் பிரதியெடுத்தார்கள். இரண்டு ஆண்டுகள் இந்த பணிகள் நடைபெற்றன. பெரியார் மாளிகையில் புலவர் இமயவரம்பன் அவர்கள் அதற்கென்று தேக்கு மரத்தால் செய்யப்பட்ட தனி அலமாரியில் ஆண்டு வாரியாக தனித்தனி ட்ராயரில் பத்திரப்படுத்தி வைத்திருந்தார்.
என்னை பெரியார் திடலில் 1993-94ல் சந்தித்த போது சொன்னார். “ 25 கிலோ நாப்த்தாலின் குண்டுகளை வாங்கி குடிஅரசு இதழ் அலமாரியில் வைத்து பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்; இன்னும் வெளியிடவில்லை என்றாலும் பத்து ஆண்டுகள் அவை பத்திரமாக இருக்கும்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். எனக்கு அவர் பேசியதே மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியது. குடிஅரசு தொகுப்புகளை வெளியிட வேண்டும் என்ற எண்ணம் இதிலிருந்து தொடங்கியது என்று கூறலாம்.
சுயமரியாதை இயக்கம் பற்றிய சிறப்புகளை பல பேர் பகிர்ந்து இருக்கிறார்கள். ஒரு செய்தியை பெரியார் எப்படி தனித்துவமாகப் பார்த்தார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
பெரியார் கடவுள் மறுப்பாளர்தான். பல கடவுள் மறுப்பாளர்களை பார்த்திருக்கிறோம். இந்துத்துவா கொள்கையை உருவாக்கிய சாவர்க்கரே ஒரு கடவுள் மறுப்பாளர்தான். ஆனால் அவர் இந்த நாட்டுக்கு கேடான தத்துவத்தை உருவாக்கியவர்.
ஆனால் பெரியாரின் கடவுள் மறுப்பு அது அல்ல! ஜாதி ஒழிப்பை நோக்கமாகக் கொண்ட கடவுள் மறுப்பு. வேத சாஸ்திர ஒழிப்பு, அதற்குக் காரணமாக இருக்கிற பார்ப்பனிய எதிர்ப்போடு கூடிய எல்லாவற்றையும் இணைத்து ஜாதி ஒழிப்பை நோக்கமாகக் கொண்டதே பெரியார் பேசிய கடவுள் மறுப்பு. சமூகத்திற்கான கடவுள் மறுப்பு தான் பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கை. அப்படித்தான் அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பலரும் பெண் உரிமை என்று பேசிக் கொண்டிருந்த காலத்தில் பெரியார் பெண் விடுதலையைப் பேசினார். 1926 முதல் 1931 வரை வந்த கட்டுரைகளின் தொகுப்பு தான் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற நூல். அந்த காலகட்டத்தில் அந்த கட்டுரைகளை அவர் எழுதியிருக்கிறார். நாம் விரும்புகிற சமுதாயத்தைப் பற்றிய சிந்தனைகளை மக்களிடம் எடுத்து உரைத்து விட்டுப் போக வேண்டும் என்று நான் கருதுகிறேன் என்று பெரியார் சொல்கிறார்.
1972ல் கம்யூனிசம் என்ற தலைப்பில் ஒரு பொதுக்கூட்டம் திருச்சி உறையூரில் நடந்தது. அதில் பெரியார் உரையாற்றி இருக்கிறார் இறப்பதற்கு இரண்டு மாதம் முன்னால் அக்டோபர் மாதம் சமதர்மம் என்ற பெயரில் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். பொதுவுடமை உலகம் எப்படி இருக்க வேண்டும் என்று எழுதினார். தன்னுடைய திராவிடர் கழகக் கொடி வடிவமைப்பில் கூட கருப்புக் கொடியில் சிவப்பு வட்டம் மெல்ல விரிந்து அது சிவப்பாக வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.
ஆனால் சமதர்மம், சமூக மாற்றம் இல்லாமல் வரமுடியாது என்பது அவரது கருத்து. ஒரு இடத்தில் வேடிக்கையாகச் சொன்னார். சதி செய்வதற்கென்றே ஒரு ஜாதி இல்லாத ரஷ்யாவில் லெலின் வெற்றி பெற்று விட்டார். ஆனால் இந்தியாவில் அப்படி செய்ய முடியாது என்பதைப்போல அவர் தனது ஒவ்வொரு கருத்தையும் பதிவு செய்திருக்கிறார். அவர் பேசிய திருமண முறையாகட்டும்; உடையை பற்றிய கருத்து ஆகட்டும்; யூனிசெக்ஸ் இரு பாலாருக்கும் ஒரே மாதிரியான உடை; பொது சமையலறை போன்ற பல கருத்துக்களை பெரியார் பேசியிருக்கிறார். 1938 வரை திசைவிலகல் இல்லாது சுயமரியாதை பரப்புரையை மட்டுமே செய்து கொண்டிருந்தவர் தான், 1938 இறுதியில் நீதிக்கட்சி தலைவராகவும் ஆக நேர்ந்தது.
குடிஅரசு தொகுப்புப் பணிகள் குறித்து சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். நாங்கள் 1949-ம் ஆண்டு வரை குடிஅரசு இதழை தட்டச்சு செய்து வைத்திருந்தோம். ஆனால் வெளியிடுவதற்கான சிக்கலைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் போது எவ்வளவு செலவாகும் என்று கணக்கிட்டோம். அப்போது தோழர் விடுதலை இராசேந்திரன் சொன்னார் வங்கிக் கடன் வாங்க வேண்டும் என்றால் என்னுடைய வீட்டை அடமானம் வைத்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னார். 1 கோடி அளவுக்கு செலவாகும் என்று சொன்னார்கள்.
முதலில் 1938 வரை குடிஅரசு இதழை வெளியிடுவோம் என்ற முடிவுக்கு வந்தோம். தட்டச்சு செய்து வைத்திருந்தது 1949 வரை. 1938 வரை குடிஅரசு இதழை தொகுப்பாக வெளியிட்டோம். அதற்கு வந்த சட்ட சிக்கலை எல்லோரும் அறிவீர்கள்.
நாங்கள் வெளியீட்டு விழாவை அறிவித்த உடனே நீதிமன்றம் சென்று திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி தடைகோரினார். அதற்குப் பிறகு ‘விடுதலை’ நாளேட்டில் ஒரு விளம்பரம் வெளியிட்டார்கள். தங்களிடம் இல்லாத குடிஅரசு இதழ்களை பட்டியல் போட்டு, பாதுகாத்து வைத்திருப்பவர்கள் அனுப்புமாறு கேட்டார்கள். பெரியாரின் அறிவு சொத்துக்கு உரிமைக்கோரியவர்கள், அந்த அறிவுச் சொத்துக்களை காப்பாற்றி வைக்கவில்லை. இதைத் தான் அவர்கள் வெளியிட்ட விளம்பரம் வெளிப்படுத்தியது.
குடிஅரசு தொகுதிகளை ஒவ்வொரு ஆண்டாகவே முதலில் வெளியிட்டோம். சேலத்தில் 2003 ஆம் ஆண்டு நடந்த தமிழர் வழிபாட்டு உரிமை மாநாட்டில் 1925 ஆம் ஆண்டுக்கான தொகுதியை வெளியிட்டோம். பேராசிரியர் நன்னன் வெளியிட முதல் நூலினை தஞ்சை மருதவாணன் பெற்றுக் கொண்டார். திருச்சி பெரியார் மாளிகையில் நடந்த நூல் தொகுப்பு குழுவில் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டவர் தோழர் மருதவாணன்.
பிறகு 1926, 1927-ம் ஆண்டுக்கான இரண்டாவது மூன்றாவது தொகுதிகளில் தான் நாங்கள் திரட்டி வைத்திருந்த முக்கியமான செய்திகளை எல்லாம் சேர்த்து வெளியிட்டோம். அதில் ஒரு தொகுதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளராக இருந்த டி.எம் ராஜா வெளியிட்டார். மற்றொரு தொகுதியை தோழர் நல்லகண்ணு வெளியிட்டார். இப்படி ஒவ்வொன்றாக குடிஅரசு தொகுப்பு வெளிவந்தது.
இப்படி ஒவ்வொன்றாக வெளியிட்ட போது தான் நாங்கள் பேசிக் கொண்டோம், நம்முடைய காலத்தில் கூட குடி அரசு இதழை முழுமையாக வெளியிட முடியாதோ என்று பேசி வந்தோம். இவை அனைத்தையும் ஒரே சமயத்தில் கொண்டு வர வேண்டும் என்ற முயற்சியை தொடங்கினோம். பின்னர் 1938 வரை குடிஅரசு இதழ் தொகுப்பு வெளியிடப்பட்டது.
வெளியிட்டதற்கு தடைக்கோரி சுயமரியாதை இயக்க சார்பில் அதன் தலைவர் கி.வீரமணி நடத்திய வழக்கில் நமக்காக வாதாடியவர் வழக்கறிஞர் துரைசாமி. தடை நீக்க வழக்கில் அவரது பங்கு மகத்தானது.
வழக்கை விசாரித்த உயர்நிதிமன்ற நீதிபதி சந்துரு இந்த தொகுப்புக்கு தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்தார். பிறகு வழக்கை மேல் முறையீடு செய்தார்கள். இரு நீதிபதிகள் அடங்கிய கலீஃப்புல்லா மற்றும் கிருபாகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு நீதிபதி சந்துருவின் தீர்ப்பை உறுதி செய்தது. பிறகு சுயமரியாதை இயக்கம் சார்பில் கீ.வீரமணி உச்சநீதிமன்றம் போனார். அவர்கள் தங்களது சார்பில் பிரபல வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் அவர்களை நியமித்தனர். நம்மால் பெரும் பொருட்செலவு செய்து உச்சநீதிமன்றதில் வழக்கறிஞர் வைத்து வாதாட முடியவில்லை.
அப்போது அச்சடித்து வைத்த புத்தகங்களை பாதுகாப்பது எங்களுக்கு பெரும் சுமையாக இருந்தது. அப்போது திராவிடர் கழகம் திமுகவுடன் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தது. பறிமுதல் செய்வார்களோ என்ற அச்சம் இருந்தது. அச்சடித்து, தொகுப்புகளை பாதுகாக்க இடங்களை மாறி மாறி தேட வேண்டியிருந்தது. ஒரு திருமண மண்டபத்தில் வைத்திருந்தோம், வேறு ஒரு இடத்திற்கு அதை மாற்றினோம். அந்த வீட்டில் இறப்பு நேர்ந்துவிட்டது. உடனே வேறு இடத்திற்கு மாற்றினோம். இப்படியே இரண்டு ஆண்டுகள் இந்த குடிஅரசு தொகுப்பை நாங்கள் பாதுகாத்து வந்தோம்.

இந்த விருது எனக்கு மட்டுமல்ல என்னோடு உழைத்த அத்தனை தோழர்களுக்கும் போய் சேர்ந்ததாக கருதவேண்டும். இந்த பணியில் தோழர்களின் பங்கு அளப்பரியது. கழகத் தோழர்களின் குடும்பமே பங்கேற்றது. அவர்களிடமிருந்து தான் ஒவ்வொரு நாளும் சுழல் வரிசையில் எங்களுக்கு உணவு வரும். தோழர்களின் துணைவியார்களே பிழை திருத்தும் பணியில் ஈடுபட்டார்கள்.
ஆதரவுக்கரம் நீட்டிய உச்சநீதிமன்ற வழக்கறிஞர்
இந்த நிலையில் தானாக வழக்குக்காக ஒரு உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வாதடுவதற்கு முன்வந்தார். அவரது பெயர் பசப்பா பிரபு பட்டீல். இவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த சிவராஜ் பட்டீல் அவர்களின் மகன்.உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பட்டீல் மருமகன்.ஒரு நாள் அவரே திடீரென்று என்னிடம் தொடர்பு கொண்டு இந்த வழக்கில் வாதாடுவதற்கான நல்ல வாய்ப்பை நீங்கள் வழங்குவீர்களா என்று என்னிடம் கேட்டார். (Shall We Previlege of Appering in this Case). எதிர்பாராமல் கிடைத்த இந்த ஆதரவு எங்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சியை தந்தது.
பிரபல வழக்கறிஞர் கே.கே வேணுகோபால் இந்த வழக்கில் மனுதாரருக்கு ஆதரவாக வாதாடப் போகும் செய்தி அவருக்கு தெரிந்தது. தனது ஜூனியரிடம் இது குறித்து விசாரித்துள்ளார். சுயமரியாதை இயக்கம் பெரியார் தொடர்பான வழக்கு இது. சுயமரியாதை இயக்கம் குறித்து உனக்கு தெரியாதா? என்று தனது ஜூனியரிடம் அவர் கடிந்து கொண்டார். உடனே அந்த ஜூனியர் தனக்கு அறிமுகமான தமிழ்நாடு வழக்கறிஞரிடம் கேட்டு விபரங்களை தெரிந்து இவரிடம் தெரிவித்துள்ளார் அதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை முறையாக படித்துவிட்டு அதற்குப் பிறகுதான் என்னிடம் அவர் பேசி இருக்கிறார். மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டு வழக்கு ஆவணங்களை அனுப்பி வைக்கட்டுமா என்று நான் கேட்டபோது தேவையில்லை உயர்நீதிமன்ற தீர்ப்புகளை நான் முழுமையாக படித்து விட்டேன் என்று கூறியதோடு வணிக நோக்கத்தில் நீங்கள் இதை வெளியிடவில்லை. பெரியார் கருத்துக்களை மக்களிடம் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே இணையதளத்தில் வெளியிட்டுள்ளீர்கள். வழக்கிற்கு இது ஒன்றே போதும் என்று என்னிடம் கூறினார்.
நீதிபதிகள் முன்பு இந்த வாதத்தை மட்டுமே அவர் முன்வைத்தார். உடனே நீதிபதிகள் இதை ஏற்றுக்கொண்டு இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று நிராகரித்து விட்டனர். அதே நேரத்தில் வெளியீட்டு உரிமை பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்துக்கு மட்டுமே உண்டு என்ற முதன்மை வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 15 இலட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டார்கள். விசாரணை நடக்கும் போது ஒரு கட்டத்தில் அவர்களே பின்வாங்கிக் கொண்டார்கள் என்பது வேறு.
அப்போது அச்சடித்து வைத்த புத்தகங்களை பாதுகாப்பது எங்களுக்கு பெரும் சுமையாக இருந்தது. அப்போது திராவிடர் கழகம் திமுகவுடன் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தது. பறிமுதல் செய்வார்களோ என்ற அச்சம் இருந்தது. அச்சடித்து தொகுப்புகளை பாதுகாக்க இடங்களை மாறி மாறி தேட வேண்டியிருந்தது. ஒரு திருமண மண்டபத்தில் வைத்திருந்தோம், வேறு ஒரு இடத்திற்கு அதை மாற்றினோம். அந்த வீட்டில் இறப்பு நேர்ந்துவிட்டது. உடனே வேறு இடத்திற்கு மாற்றினோம். இப்படியே இரண்டு ஆண்டுஇந்த நிலையில் தானாக வழக்குக்காக ஒரு உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வாதாடுவதற்கு முன்வந்தார். அவரது பெயர் பசப்பா பிரபு பட்டீல். இவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த சிவராஜ் பட்டீல் அவர்களின் மகன். உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பட்டீல் மருமகன். ஒரு நாள் அவரே திடீரென்று தொடர்பு கொண்டு இந்த வழக்கில் வாதாடுவதற்கான நல்ல வாய்ப்பை நீங்கள் வழங்குவீர்களா என்று கேட்டார். (shall you give me the previlege of appearing in this case). எதிர்பாராமல் கிடைத்த இந்த ஆதரவு எங்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தந்தது.
பிரபல வழக்கறிஞர் கே.கே வேணுகோபால் இந்த வழக்கில் மனுதாரருக்கு ஆதரவாக வாதாடப் போகும் செய்தி அவருக்கு தெரிந்தது. தனது ஜூனியரிடம் இது குறித்து விசாரித்துள்ளார். உடனே அந்த ஜூனியர் நம் வழக்கறிஞர்களான பாரிவேந்தன், பிரபு ஆகியோரிடம் கேட்டு விபரங்களைத் தெரிந்து அவரிடம் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை முறையாக படித்துவிட்டு அதற்குப் பிறகுதான் என்னிடம் அவர் பேசி இருக்கிறார். மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டு வழக்கு ஆவணங்களை அனுப்பி வைக்கட்டுமா? என்று கேட்டபோது தேவையில்லை உயர்நீதிமன்ற தீர்ப்புகளை நான் முழுமையாக படித்து விட்டேன் என்று கூறியதோடு வணிக நோக்கத்தில் நீங்கள் இதை வெளியிடவில்லை. பெரியார் கருத்துக்களை மக்களிடம் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே இலவசமாக பதிவிறக்கம் செய்யும் வகையில் இணையதளத்தில் வெளியிட்டுள்ளீர்கள். வழக்கிற்கு இது ஒன்றே போதும் என்று கூறியுள்ளார். நீதிபதிகள் முன்பு இந்த வாதத்தை மட்டுமே அவர் முன்வைத்தார். உடனே நீதிபதிகள் இதை ஏற்றுக்கொண்டு இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று நிராகரித்து விட்டனர். அதே நேரத்தில் வெளியீட்டு உரிமை பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்துக்கு மட்டுமே உண்டு என்ற முதன்மை வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 15 இலட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டார்கள், விசாரணை நடக்கும் போது ஒரு கட்டத்தில் அவர்களே பின்வாங்கிக் கொண்டார்கள் என்பது வேறு.
பெரியார் முழக்கம் இதழ் 18092025

You may also like...