எல்லைகளைக் கடந்த சிந்தனையாளர் பெரியார்!

பகுத்­த­றி­வும், அறி­வி­ய­லும் ஒரே நேர்கோட்டில் இருக்­கும். அறிவின் கூர்மைதான் பகுத்­த­றிவு என்று எடுத்துச் சொன்­ன­தால்­தான், ஆக்ஸ்ஃபோர்டு பல்­கலைக்கழ­கம் அவ­ரைப் பற்றி அவர் மறைந்து இத்­தனை ஆண்டுகள் கழித்­தும் விவா­திக்­கி­றது. கேம்பிரிட்ஜ் பல்­க­லைக்­க­ழ­கம் புத்­த­கம் வெளியிடுகி­றது.

சுய­ம­ரி­யாதை இயக்­கத்தை 1925–ஆம் ஆண்டு தொடங்­கி­னா­லும், சுயமரியாதைச் சிந்­த­னை­யா­னது பெரி­யா­ருக்கு இள­மைக் காலத்­தி­லேயே வந்து­விட்­டது. அவர் அப்­போதே அப்­ப­டித்­தான்! அவ­ரு­டைய சுயசரிதையை கொஞ்­சம் பார்த்­தால், அவர் காலத்தை மீறி செய்த புரட்­சி­கள் புரி­யும்!

ஆதிக்க ஜாதி­யி­னர் வீட்­டில் தண்­ணீர் குடித்­த­தால் அவ­மா­னப்­படுத்தப்பட்டதும், தாழ்த்­தப்­பட்­டோர் வீட்­டில் தண்­ணீர் குடித்­த­தால் சொந்த வீட்­டில் அவ­மா­னப்­ப­டுத்­தப்­பட்­ட­தும் சிறிய வய­தி­லேயே அவர் மன­தில் ஒரு தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது.

பெரி­யா­ரின் தங்கை மகள் அம்­மா­யிக்கு 10 வய­தி­லேயே, 13 வயது பையன்கூட திரு­ம­ண­மாகி, மண­மான அறு­ப­தா­வது நாளே மண­மகன் இறந்­து விட்­டார். மறு­ம­ணத்­துக்கு குடும்­பத்­தில் உள்ள எல்­லோ­ரும் எதிர்ப்­புத் தெரி­வித்­தா­லும், அதை­யெல்­லாம் மீறி, அந்­தப் பெண்­ணுக்கு இரண்­டா­வது திரு­ம­ணம் நடத்தி வைத்­தார். மாற்­றுச் சமூ­கத்­தி­ன­ரின் காதல் திரு­ம­ணங்­களை ஊரார் எதிர்ப்பை மீறி நடத்தி வைத்­தார்.

இட­ஒ­துக்­கீடு உரி­மைக்­காக சுய­மரி­யாதை இயக்­கம் கண்­டார்! தெருக்களுக்கு வைக்­கப்­பட்ட ஜாதிப் பெயர்­களை நீக்­கி­னார். நக­ராட்­சிப் பள்ளிகளில் தீண்­டப்­ப­டாத வகுப்­புக் குழந்­தை­கள் சேர­வும், படிக்­க­வும் வழி கண்டார். இந்­திய விடு­த­லைப் போராட்ட இயக்­கத்­தில் சேர்ந்த பெரியார், அப்போதும் சீர்­தி­ருத்­தக் கருத்­து­க­ளைப் பரப்­பு­வ­தில் முனைப்­பாக இருந்தார். சேரன்மாதேவி குரு­கு­லத்­தில் எல்­லோ­ருக்­கும் சம­மான உணவு தரப்­ப­டவேண்­டும், வைக்­கத்­தில் எல்­லோ­ரை­யும் கோயில் தெரு­விற்­குச் செல்ல அனு­ம­திக்க வேண்­டும் என்று போரா­டி­னார்.

இட­ஒ­துக்­கீடு உரி­மைக்­காக காங்­கி­ரஸ் மாநா­டு­ க­ளில் தீர்­மா­னம் கொண்டு வந்­தார். அந்­தத் தீர்­மா­னங்­கள் எல்­லாம் தோற்­க­டிக்­கப்­பட்­டது. அங்­கேயும் உயர் ஜாதி­யி­ன­ரின் ஆதிக்­கம் இருப்­பதைப் பார்த்து, அர­சி­யல் விடு­தலை மட்­டும் போதாது, சமூக விடு­த­லை­யும் தேவை என்று அதி­லிருந்து அவர் வெளி­யே­றி­னார். அப்­படி உரு­வா­ன­து­தான், இன்­றைக்கு நாம் விழா எடுத்துக் கொண்­டா­டிக் கொண்­டி­ருக்­கின்ற சுய­ம­ரி­யாதை இயக்­கம்!

சமூ­க­நீதி பெண்­க­ளுக்கு சொத்­து­ரிமை, தீண்­டாமை ஒழிப்பு, பொது இடங்க­ளில் பட்­டி­ய­லி­னத்­த­வ­ருக்கு தடை இருக்­கக் கூடாது. நில உரிமை , கைம்­பெண் மறு­ம­ணம, தமி­ழுக்கு முக்­கி­யத்­துவம் சமஸ்­கி­ருத ஆதிக்க எதிர்ப்பு, இந்­தித் திணிப்­புக்கு எதிர்ப்பு ஆகி­ய­வை­தான் சுய­ம­ரி­யாதை இயக்­கத்­தின் அடிப்படைக் கொள்­கை­கள். மான­மும் அறி­வும் உள்ள மக்களாக்கிட ஓயா­மல் உழைத்­தார்!

இந்­தக் கொள்­கை­க­ளுக்­காக பெரி­யார் அலைந்த அலைச்­சல் நினைத்தே பார்க்க முடி­யா­தது, யாரும் அலை­யா­தது. 14.2.1937 அன்று மட்டும், ஒரே நாளில், 17 சிற்­றூர்­க­ளில், பெரி­யார் பேசி இருக்­கி­றார். 16.2.1962 அன்று மட்­டும் 19 கூட்டங்­க­ளில் பெரி­யார் பேசி இருக்­கி­றார். அது­வும் அப்­போது அவ­ருக்கு என்ன வயது? 82 வயது! 82 வய­தி­லும் பேசி­யி­ருக்­கி­றார்! 95 வய­தி­லும் 98 நாட்­கள் அலைந்­தி­ருக்­கி­றார் தந்தை பெரியார். இவ்­வ­ளவு உழைப்பு எதற்­காக? நம்­மு­டைய மண்­ணில் வாழு­கின்ற மனி­தர்­களைமான­மும், அறி­வும் உள்ள சுய­ம­ரி­யா­தை­ மிக்க மக்­க­ளாக்கத்தான் அவர் ஓயா­மல் உழைத்­தார்.

ஆயு­தம் தாங்­காத, இரத்­தம் சிந்­தாத புரட்­சி­கள்

உல­கத்­தில் எந்த சீர்­தி­ருத்த இயக்­கத்­துக்­கும் இல்­லாதப் பெரு­மை­யும், புகழும் பெரி­யார் இயக்­கத்­துக்கு உண்டு. பெரி­யா­ரின் இந்­தச் சாத­னைகள் எல்­லாம், ஆயு­தம் தாங்­காத புரட்­சி­கள்! இரத்­தம் சிந்­தாத புரட்­சி­கள்!

அவ­ரு­டைய சீர்­தி­ருத்­தக் கொள்­கை­கள் எல்­லாம், சட்­டங்­கள் ஆவதை பார்த்த பெருமை பெரி­யா­ருக்கே உண்­டா­னது! இது உல­கத்­தில்எந்­தச் சீர்­தி­ருத்த இயக்­கத்­துக்­கும் கிடைக்­காத புகழ்!

நம்­மு­டைய தமிழ்­நாட்­டில் மட்­டும்­தான், ஒரு சீர்­தி­ருத்த இயக்­கம், அரசியல் இயக்­க­மாக எழுச்சி பெற்று, வெகு­சன மக்­களிடம் பரப்புரை செய்து, அவர்­க­ளு­டைய ஆத­ரவை வாக்­கு­க­ளா­கப் பெற்று, சீர்­தி­ருத்­தக் கருத்துக்­களை நடை­மு­றைப்­ப­டுத்தி, அவற்றை சட்­ட­மா­க­வும் ஆக்கி அந்தச் சமுதா­யத்தை மேன்­மை­ய­டைய வைத்­தி­ருக்­கி­றது.

சமூ­க­நீ­திக் கொள்­கையை தமிழ்­நாடு மட்­டு­மல்ல, இந்­தியா முழு­மைக்­குமான கொள்­கை­யாக இந்­திய அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தில் இடம்பெற வைத்தவர் தந்தை பெரி­யார். ‘தமிழ்­நாடு’ என்று பெயர் சூட்­டப் போராடினார் தந்தை பெரி­யார். ஆட்சி அதி­கா­ரத்தை அடைந்து, அதைச் செய்து காட்டி­னார் பேர­றி­ஞர்அண்ணா. முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் “அனைத்­துச் ஜாதி­யினரும் அர்ச்­ச­கர் ஆக­லாம்” என்று சட்­டம் கொண்டு வந்­தார். பெண்­க­ளுக்­குச் சொத்­தில் சம உரிமை வேண்­டும் என்று பெரி­யார் தீர்­மா­னம் கொண்டு வந்­தார். அதைச் சட்­டம் ஆக்­கி­ய­வர் முத­ல­மைச்­சராக இருந்த கலைஞர். அனை­வ­ருக்­கும் கல்வி, அனை­வ­ருக்­கும் வேலை, அனைவ­ருக்­கும் அதிகாரம் வேண்­டும் என்று பெரி­யார் சொன்­னார். அதைச் சட்டம் ஆக்கி நிறைவேற்­றித் தந்­தது திரா­விட இயக்­கத்­தின் ஆட்சி. தந்தை பெரி­யா­ரின் எண்­ணங்­க­ளுக்கு செயல் வடி­வம் கொடுத்த தலை­வர்­கள்!

இது எல்­லா­வற்­றை­யும்­விட, நான் பெரு­மை­யோடு சொல்­கி­றேன், ஜாதியைக் கடப்­ப­தற்­காக இந்­தி­யா­வி­லேயே வேறு எந்த மாநி­ல­மும் செய்யாத முன்னெடுப்­பாக, பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள் “சுய­ம­ரி­யா­தைத் திருமணச் சட்­டத்­தை­யும்”, தலை­வர் கலை­ஞர் அவர்­கள் “சமத்­து­வ­பு­ரம்” திட்­டத்­தை­யும் கொண்­டு­வந்து, தந்தை பெரி­யா­ரின் எண்­ணங்­க­ளுக்­குச் செயல்வ­டி­வம் கொடுத்­தி­ருக்­கி­றோம்!

இந்த ஐரோப்­பி­யப் பய­ணத்­தில் நான் பார்ப்­பது, ஒடுக்­கப்­பட்ட குடும்பங்களில் இருந்து முன்­னேறிவந்து ஏரா­ள­மான பேர் இங்கே நல்ல நிலையில் இருக்கி­றார்­கள். தமிழ்­நாடு எல்­லா­வற்­றி­லும் முன்­னே­றிக் கொண்டு வருகிறது. கல்­வி­யில், பொரு­ளா­தா­ரத்­தில், தொழில் வளர்ச்­சியில், வாழ்க்கைத்­ த­ரத்தில், உள்­கட்­ட­மைப்பு வச­தி­யில் முன்­னேறி இருக்­கிறோம். உழைப்­பின் சாதனை, உற்­பத்­திச் சாத­னை­யாக மாறி இருக்­கி­றது.பட்­டி­னிச் சாவு இல்­லாத மாநி­ல­மாக தமிழ்­நாடு இருக்­கி­றது. வள­மான தமிழ்­நா­டாக வளர்த்து வரு­கி­றோம். மற்ற மாநி­லங்­கள் வியந்து பார்க்­கும் மாநி­ல­மாக உயர்ந்­தி­ருக்­கி­றோம். இது­தான் திரா­விட இயக்­கத்­தின் சாதனை!

பெரி­யார் கண்ட வளர்ச்­சியை நாங்­கள் தமிழ்­நாட்­டில் செயல்­ப­டுத்திக் காட்டி வரு­கி­றோம். “பெரி­யா­ருக்கே இந்த ஆட்சி காணிக்கை” என்று சொன்­னார் பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள். தமி­ழர் தந்தை பெரி­யார் மறைந்­த­போது, அரசு மரி­யா­தைக்கு ஆணை பிறப்­பித்­தார் தமிழினத் தலைவர் கலைஞர். பெரி­யார் பிறந்­த­நாளை சமூ­க­நீதி நாளாக அறிவித்து, செப்டம்பர் 17 அன்று தமிழ்­நாட்­டையே உறு­தி­மொழி எடுக்க வைத்திருக்கிறது நம்முடைய திரா­விட மாடல் அரசு. அதற்­காக, பெரியார் கண்ட கன­வு­கள் எல்­லா­வற்­றை­யும் நாம் நிறை­வேற்­றி­விட்­டோம் என்று சொல்­ல­மாட்­டேன்.

இந்த நூறாண்­டு­க­ளில் ஒரு சமூ­க­மாக நாம் அடைந்­தி­ருக்­கின்ற வளர்ச்சி என்­பது, ஒரு குழந்தை நடை பழ­கு­கின்ற மாதி­ரி­தான்! நம்­மு­டைய பய­ணம் நெடி­யது. நாம் செல்ல வேண்­டிய தூரம் இன்­னும் இருக்­கி­றது. இந்­தப் பய­ணத்­தில் ஏற்­ப­டு­கின்ற தேக்­கங்­களை – தேவை­யற்ற இடைஞ்சல்களை – பழைய குள­று­ப­டி­களை நாம் ஒதுக்­க­வேண்­டும். போலிப் பெரு­மைகளில் சிக்கி மறு­ப­டி­யும் பின்­னோக்­கிப் போய்­வி­டக் கூடாது. நம்மை பின்­னோக்கி இழுக்க அத்­த­னை­வி­த­மான தந்­தி­ரங்­க­ளை­யும் மேற்­கொள்ளுவார்கள். கொஞ்­சம் ஏமாந்­தா­லும், நம்­மு­டைய அத்­தனை உழைப்­பும் கேள்விக்­­ குறியா­கி­டும். ஜாதி வேறு­பா­டு­க­ளை­யும், ஏற்­றத்­தாழ்­வு­க­ளை­யும் முற்றிலுமாக விலக்­கு­கின்ற பய­ணத்­தின் பல்­வேறு படி­நி­லை­களை நாம் படிப்­ப­டியாகத் தாண்டி வர­வேண்­டும். அதற்­கா­கத்­தான் இந்த நிகழ்ச்சி. இதற்­கான முயற்சிக­ளில் திரா­விட முன்­னேற்­றக் கழ­க­மும், நம்­மு­டைய திரா­விட மாடல் அர­சும் தொடர்ந்து பய­ணிக்­கி­றது.

100 ஆண்­டு­க­ளுக்கு முன்பு, சுய­ம­ரி­யாதை இயக்­கம் எந்த நோக்­கத்­துக்­கா­கத் தொடங்­கப்­பட்­டதோ, அந்த நோக்­கம் படிப்­ப­டி­யாக நிறை­வேறி வரு­கி­றது.

 பிறந்த நாடு
 பேசும் மொழி
 வாழும் சூழ்­நிலை

இன்­றைக்கு உல­கம் ஒப்­புக் கொண்ட உண்­மை­கள்! இதற்கெல்லாம் கட்டுப்பட்டு அறி­வுரை சொன்­ன­வர்­கள் மத்தி­யில், இதற்கெல்லாம் வெளியே நின்று அறி­வுரை சொன்னவர் பெரி­யார். திருவள்ளுவர் திருக்­கு­றளை தமி­ழில் எழுதி­னா­லும், அது உல­கப் பொதும­றை­யாக இருப்ப­தைப்­போல, பெரி­யார் சிந்­த­னை­கள் உல­கம் முழுக்­கத் தேவை­யா­னவை. உலகச் சமு­தா­யம் ஏற்­றுக்­கொள்­ளத் தக்­கவை. உல­கமே கூட்­டுறவு ­ம­யம் ஆக­வேண்­டும் என்று சொன்­னார் பெரி­யார். மனி­தப்­பற்று தவிர வேறு எந்­தப் பற்­றும் தேவை­யில்லை என்று சொன்­னார். பெரி­யார். நிற­பே­தம் இல்லை! இரத்­த­பேதம் இல்லை! பால் பேதம் இல்லை! என்று பெரியார் சொன்­ன­தெல்லாம் இன்றைக்கு உல­கம் ஒப்­புக்­கொண்ட உண்­மை­கள்..

அஃபிர்­மேட்­டிவ் ஆக்­சன் என்று சில நாடுக­ளில் இப்­போ­தும் இருக்கிறது. கேம்­பஸ் டைவர்சிட்டி, ஸ்டூடண்ட் டைவர்­சிட்டி என்று பல முன்னணி கல்­லூரி, பல்­க­லைக் கழகங்களிலும் இருக்கிறது. பல்­வேறு உலக மொழிகளில் பெரி­யா­ரின் கருத்­துகளை தமிழ்­நாடு அரசு மொழிபெ­யர்த்து வெளி­யிட்டு வருகிறது. இன்றைக்கு கேம்­பி­ரிட்ஜ் பல்­க­லைக் கழ­கம் வெளி­யிட்டு இருப்­பது போல, மற்ற பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளும் வெளி­யிட வேண்டும் என்று கேட்­டுக் கொள்­கி­றேன்.

“சுய­ம­ரி­யாதை உணர்ச்­சி­தான் உலக மக்­க­ளையே ஒரு குடும்ப சகோதரர்களாக மாற்­றும். அப்­போ­து­தான் இந்த இயக்­கத்­தின் உண்­மைச் சக்­தி­யும், பெருமை­யும் வெளிப்­ப­டும்” என்று பெரி­யார் சொன்­னார். பெரி­யா­ரின் சுய­ம­ரி­யா­தைக் கொள்­கையை வென்­றெ­டுக்க இது­போன்ற கருத்­த­ரங்குகள் வழி­வ­குக்­கும்.

தமிழ்­நாடு முத­ல­மைச்­ச­ராக எத்­த­னையோ வெளி­நா­டு­க­ளுக்கு நான் சென்றிருக்­கி­றேன். அங்கே நடை­பெற்ற பல்­வேறு நிகழ்ச்­சி­க­ளில் கலந்துகொண்டு இருக்­கி­றேன். ஆனால், இந்த நிகழ்ச்சி, என்னை உணர்ச்­சி ­வ­யப்­பட வைத்திருக்­கி­றது. அந்த உணர்ச்சி யாரென்­றால் தந்தைபெரியார். காரணம், இது பெரி­யா­ருக்­கான நிகழ்ச்சி! மானு­டத் தன்­மையை மதிப்ப­தாக உலகம் மாறட்­டும்!’

இலண்­ட­னில் இருக்­கின்­றேனா இல்லை, தமிழ்­நாட்­டில்­தான் இருக்கின்றேனா என்று ஒரு சந்­தே­கம் வந்­து­விட்­டது. அந்த வகை­யில், இந்த நிகழ்ச்சி அமைந்­தி­ருக்­கி­றது.

போலிப் பெருமைகளில் சிக்கி மறுபடியும் பின்னோக்கிப் போய்­வி­டக் கூடாது. நம்மை பின்னோக்கி இழுக்க அத்தனை வி­தமான தந்­திரங்களையும் மேற்கொள்ளுவார்கள். கொஞ்சம் ஏமாந்தாலும், நம்­மு­டைய அத்தனை உழைப்பும் கேள்விக் குறி­யா­கி­டும். ஜாதி வேறு­பா­டு­க­ளையும், ஏற்றத் ­தாழ்வுகளையும் முற்­றி­லு­மாக விலக்கு­கின்ற பயணத்தின் பல்­வேறு படிநி­லை­களை நாம் படிபடியாகத் தாண்டி வர­வேண்டும். அதற்காகத்­தான் இந்த நிகழ்ச்சி

You may also like...