Category: திருச்சி

திருச்சியில் குடும்ப விழா!

திருச்சியில் குடும்ப விழா!

திருச்சி: மணப்பாறையைச் சேர்ந்த கழகத் தோழர் பாலசுப்பிரமணியம் – சித்ரா இல்ல குடும்ப விழா 08.09.2024 அன்று அவரது நடுப்பட்டி கிராமத்தில் நடைபெற்றது‌. இதில் பெரியாரியலாளர் சிற்பி இராசனின் மந்திரமா? தந்திரமா? பகுத்தறிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் விழா மகிழ்வாக பாலசுப்பிரமணியம் – சித்ரா ஆகியோர், கழக ஏடான புரட்சிப் பெரியார் முழக்கம் இதழுக்கு ரூ.6000/- வளர்ச்சி நிதியாக வழங்கினார்கள். இந்த விழாவில் கழகத் தோழர்கள் மனோகரன், டார்வின் தாசன், குமரேசன், தனபால் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 19.09.2024 இதழ்

தேனி, திண்டுக்கல், திருச்சியிலும் கழகம் ஆர்ப்பாட்டம்!

தேனி, திண்டுக்கல், திருச்சியிலும் கழகம் ஆர்ப்பாட்டம்!

சேலம் : “மாநில உரிமையைக் காப்போம்! கல்வி உரிமையை மீட்போம்!” என்ற முழக்கத்துடன் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியைத் தடை செய்ய நினைக்கிற, பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் – கழக இளைஞரணி மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 10.09.2024 அன்று சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெற்றிமுருகன் வரவேற்புரையாற்றினார். சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் க.சக்திவேல், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கு.சூரியகுமார், கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈசுவரன், சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராசு, சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, சேலம் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் ஏற்காடு பெருமாள், சேலம் மாவட்ட இளைஞரணித்...

சேலத்தில் தலைவர், சென்னையில் பொதுச்செயலாளர் பங்கேற்பு கல்வி உரிமைகளைப் பறிக்கும் பாஜகவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேலத்தில் தலைவர், சென்னையில் பொதுச்செயலாளர் பங்கேற்பு கல்வி உரிமைகளைப் பறிக்கும் பாஜகவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேலம் : “மாநில உரிமையைக் காப்போம்! கல்வி உரிமையை மீட்போம்!” என்ற முழக்கத்துடன் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியைத் தடை செய்ய நினைக்கிற, பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் – கழக இளைஞரணி மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 10.09.2024 அன்று சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெற்றிமுருகன் வரவேற்புரையாற்றினார். சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் க.சக்திவேல், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கு.சூரியகுமார், கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈசுவரன், சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராசு, சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, சேலம் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் ஏற்காடு பெருமாள், சேலம் மாவட்ட இளைஞரணித்...

எழுச்சியுடன் நடைபெற்ற மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டங்கள்; கழகத் தலைவர் பங்கேற்று சிறப்புரை

எழுச்சியுடன் நடைபெற்ற மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டங்கள்; கழகத் தலைவர் பங்கேற்று சிறப்புரை

ஈரோடு தெற்கு: திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஈரோடு தெற்கு மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 14.08.2024 காலை 11 மணியளவில் சூரம்பட்டி நால்ரோடு அருகில் உள்ள மதிமுக அலுவல அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் தலைமையில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோரது முன்னிலையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் செல்வராசு, மாவட்டச் செயலாளர் எழிலன், அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, அறிவியல் மன்றப் பொறுப்பாளர் சிவக்குமார், மணிமேகலை, ஜோதி, திருமுருகன், கௌதம், கோபிநாத், விக்னேஸ், இரவி, அழகு, குமார், பிரபு, முருகேசன், ரங்கம்பாளையம் பிரபு, முகுந்தன், அய்யப்பன், நல்லதம்பி, சுரேஷ், விஜய்ரத்தினம், பழனிசாமி, சத்திய மூர்த்தி உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். இதில் மாணவர்களிடையே நிலவிவரும் போதைப் பழக்கத்திற்கு எதிரான பரப்புரையை மேற்கொள்வதெனவும், ஜாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான நடவடிக்கைகள், மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் உள்ளிட்டவைகளை இயற்றக்கோரி அரசை வலியுறுத்துவதோடு...

பெரியார் பெருந்தொண்டர் இனியன் பத்மநாபன் காலமானார்

பெரியார் பெருந்தொண்டர் இனியன் பத்மநாபன் காலமானார்

திருச்சி : பெரியார் பெருந்தொண்டரும், ஈரோடு மாவட்டக் கழக ஆலோசகருமான அய்யா இனியன் பத்மநாபன் (97) வயது முதிர்வினால் 15.03.2024 அன்று முடிவெய்தினார். அவரது உடல் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டிருந்தது. அய்யாவின் உடலுக்கு ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் எழிலன், கிருட்டிணன், பிரபு, திருப்பூர் சங்கீதா, தனபால், முத்து ஆகியோர் கழகக் கொடியைப் போர்த்தி இறுதி மரியாதை செலுத்தினார்கள். அவரது உடலை கழகப் பெண் தோழர்களே சுமந்து சென்றனர். பின்னர் எந்தவித மூட சடங்குகளுமின்றி அவரது உடல் எரியூட்டப்பட்டது. இறுதி நிகழ்வில் மணப்பாறை பாலசுப்பிரமணியம், வையம்பட்டி ஒன்றியப் பொறுப்பாளர் – துரை காசிநாதன், திமுக தலைமைக் கழக சொற்பொழிவாளர், திராவிடர் கழக நகரச் செயலாளர் சி.எம்.எஸ்.ரமேஷ், விசிக நகரச் செயலாளர் ஆனந்த் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் திரளாக கலந்து கொண்டு அய்யாவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள். பெரியார் முழக்கம் 21032024 இதழ்

திருச்சியில் தெருமுனைக் கூட்டங்கள்

திருச்சியில் தெருமுனைக் கூட்டங்கள்

திருச்சி : திருச்சி மாவட்டக் கழக சார்பில் வைக்கம் நூற்றாண்டு மற்றும் எது திராவிடம்? எது சனாதனம்? என்ற தலைப்பில்  3.2.2024 அன்று திருவெறும்பூர் பேருந்து நிலையம், காட்டூர் கைலாஷ் நகர், காட்டூர் கடைவீதி உள்ளிட்ட இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தை குணராஜ் தொடங்கி வைத்தார். டார்வின் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத் தலைவர் தாமோதரன், மந்திரமில்லை! தந்திரமே!  பகுத்தறிவுக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் சங்கீதா கருத்துரையாற்றினார். நிறைவாக குமரேசன் நன்றி கூறினார். நிகழ்வில் மணிகண்டன், சர்மிளா, ஜெய சீனிவாசன், அசோக், ஆறுமுகம், மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 15.02.2024

சனாதனம் தோலுரிப்பு : திராவிட மாடல் சாதனை விளக்கம் தெருமுனைக் கூட்டங்களுக்கு பேராதரவு!

சனாதனம் தோலுரிப்பு : திராவிட மாடல் சாதனை விளக்கம் தெருமுனைக் கூட்டங்களுக்கு பேராதரவு!

எது சனாதனம்? எது திராவிடம்? தெருமுனைக் கூட்டங்கள் சென்னை மாவட்டக் கழகம் சார்பாக இரண்டாவது வாரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அது பின்வருமாறு :- ஜுலை 15-ஆம் தேதியன்று ராயப்பேட்டை இலாயிட்ஸ் காலனி மற்றும் வி.எம்.தெருவிலும், ஜுலை 17-ஆம் தேதியன்று இராயபேட்டை பகுதிகளில் உள்ள கொலைகாரப்பேட்டை மற்றும் ராயப்பேட்டை பெருமாள் கோயில் வீதியிலும், ஜுலை 18-ஆம் தேதியன்று ஐஸ் ஹவுஸ் NKT பள்ளி அருகில் மற்றும் திருவல்லிக்கேணி பி.வி.நாயக்கன் சாலையிலும், ஜுலை 19-ஆம் தேதியன்று ஐஸ் ஹவுஸ் இஸ்ஸபா தெரு மற்றும் ஷேக் தாவூத் தெருவிலும் ஜூலை 20-ஆம் தேதியன்று மீசார்பேட்டை மார்கெட் மற்றும் ஜாம் பஜார் சிட்டிபாபு சாலையிலும், ஜுலை 21-ஆம் தேதியன்று திருவல்லிக்கேணி மாணிக்கவாசகம் தெரு மற்றும் தேவராஜ் தெருவிலும் ஜுலை 22-ஆம் தேதியன்று ஆயிரம் விளக்கு மாடர்ன் பள்ளி அருகில் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை அருகிலுள்ள மக்கிஸ் கார்டனிலும் நடைபெற்றது. நாத்திகன் – உமாபதி குழுவின் அரசியல்...

காவல்துறை அதிகாரிகள், அரசு அலுவலர்களை தோழர்கள் சந்தித்து நிதி திரட்டினர்

காவல்துறை அதிகாரிகள், அரசு அலுவலர்களை தோழர்கள் சந்தித்து நிதி திரட்டினர்

சேலம் கழக மாநாட்டை ஒட்டி நன்கொடை திரட்டும் பணி ஏப்ரல் 17, அந்தியூரில் கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன் தலைமையில் ஈரோடு மாவட்டத் தலைவர் நாத்திகஜோதி முன்னிலையில் நடைபெற்றது. வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் மாநாட்டு நிதியை வழங்கினார்கள். அந்தியூரில் ரூ.13,030 நன்கொடை திரட்டப்பட்டது. பங்கேற்றோர் : இராம.இளங்கோவன், நாத்திகஜோதி, காவை ஈசுவரன், சித்துசாமி, இளவரசன், இளம்பிள்ளை தங்கதுரை, தங்கமாபுரிபட்டினம் ராமசந்திரன், நங்கவள்ளி கிருஷ்ணன், பிரபாகரன், வனவாசி உமாசங்கர், நந்தினி , கே.ஆர்.தோப்பூர். அஜித்குமார் ஆகியோர். சேலம் மேற்கு : தனிநபர் வசூல் பணி சுசீந்திரன், சாரா தலைமையில் ஏப்ரல் 17 ஆம் தேதி சங்ககிரியில் நடைபெற்றது. சங்ககிரி பேரூராட்சி தலைவர், பேரூராட்சி செயல் அலுவலர், காவல்துறை உயர் அதிகாரி மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் மாநாட்டு நிதி வழங்கினார்கள். ரூ. 25,300 வசூலானது. இளைஞர்கள் அதிகளவில் பெரியாரிய இயக்கத்தில் இருப்பதை பார்த்து அரசு அதிகாரிகள் பாராட்டி...

காந்தி முதல் கவுரி லங்கேஷ் வரை : திருச்சியில் கழகம் கருத்தரங்கம்

காந்தி முதல் கவுரி லங்கேஷ் வரை : திருச்சியில் கழகம் கருத்தரங்கம்

திராவிடர் விடுதலைக் கழகம் திருச்சி, பெரம்பலூர் மாவட்டக் கழகங்களின் சார்பில், காந்தியார் நினைவு நாள் கருத்தரங்கம், “காந்தி முதல் கவுரி லங்கேஷ் வரை” என்ற தலைப்பில், 28.01.2023 அன்று மாலை 5 மணி யளவில், திருச்சி இரவி மினி அரங்கில் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு, பெரம்பலூர் மாவட்டத் தலைவர் துரை தாமோதரன் தலைமை வகித்தார். நிகழ்விற்கு, திருச்சி மாவட்டச் செயலாளர் மனோகரன் வரவேற்பு கூறினார். திருச்சி மாவட்டத் தலைவர் ஆரோக்கியசாமி, திருவரங்கம் அசோக், விராலிமலை குமரேசன், திருச்சி ஆறுமுகம், போலீஸ் காலனி மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வின் தொடக்கத்தில், மக்கள் கலை இலக்கிய கழகம் மய்யக் குழுவின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மதவெறிக்கு எதிரான பாடல்களை கலைக்குழுவினர் பாடினர். தொடர்ந்து, விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு கருத்துரையாற்றினார். இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சங் பரிவாரங்களின் மதவெறிக் கலவரங்கள் மற்றும் கொலைகளைப் பற்றி விரிவாக விளக்கி உரையாற்றினார்....

மூன்று நாள்கள் திருச்சியில் விவாதங்களுடன் நடந்தன களப்பணியாளர்களுக்கு கழகம் பயிற்சி வகுப்புகள்

மூன்று நாள்கள் திருச்சியில் விவாதங்களுடன் நடந்தன களப்பணியாளர்களுக்கு கழகம் பயிற்சி வகுப்புகள்

திராவிடர் விடுதலைக் கழகத் தின் களப் பணியாளர்கள் 47 பேருக்கு பயிற்சி முகாம், திருச்சி டான்பாஸ்கோ மீடியா அரங்கில் ஜூலை 23, 24, 25 தேதிகளில் நடைபெற்றது. பல்வேறு தலைப்பு களில் வகுப்புகள் நடத்தப்பட்ட தோடு விவாதங்களுடன் நடந்தன. முதல் நாள்: கொள்கை முன்னெ டுப்பில் பெரியாரின் அணுகு முறைகள் – விடுதலை இராசேந்திரன், பெண் ணியம்/டுழுஞகூணு – ஆசிரியர் சிவகாமி, தமிழ் வளர்ச்சியில் பெரியாரின் தொண்டு – பால் பிரபாகரன், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் / போதாமைகள்/ஆணவக் கொலைகள் – திண்டிவனம் இரா.முருகப்பன். இரண்டாம் நாள் : பெரியாரும் அயோத்திதாசரும் / அம்பேத்கர்/ எம்.சி. இராஜா / இரட்டைமலை சீனிவாசன் /சகஜானந்தா ஆகியோரும் – கொளத்தூர் மணி, மக்கள் உளவிய லும் கொள்கை பரப்புரைகளும் – மருத்துவர் சிவபாலன், இந்திய ஒன்றியமும் தமிழர் தன்னாட்சியும் – ஆ.வந்தியத்தேவன் (மதிமுக), ஆர்.எஸ்.எஸ். பண்பாட்டுப் புரட்டுகள் – விடுதலை இராசேந்திரன். மூன்றாம் நாள்...

முதல் கட்ட சந்திப்பில் கழகத் தோழர்கள் உற்சாகம் கிராமங்களில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

முதல் கட்ட சந்திப்பில் கழகத் தோழர்கள் உற்சாகம் கிராமங்களில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

கழகத் தோழர்களை பொறுப்பாளர்கள் சந்தித்து நிகழ்த்திய கலந்துரையாடல் நிகழ்வுகள் தோழர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்துள்ளன. கிராமங்களில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை நடத்தவும், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்கு உறுப்பினர்கள் சேர்க்கவும் தோழர்கள் முனைப்புடன் செயல்பட முன் வந்துள்ளனர். முதல்கட்டப் பயணத்தில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன், தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் பங்கேற்றனர். விரைவில் இரண்டாம் கட்டப் பயணம் தொடங்கவிருக்கிறது. பயணம் குறித்து விழுப்புரம் அய்யனார் தொகுத்து அனுப்பியுள்ள செய்தி. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெரும் தொற்றால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்ததோடு, இயக்க செயல்பாடுகளும் ஒரு சில நிகழ்வுகள் தவிர்த்து இணைய வழியில் மட்டுமே நடைபெற்று வந்தன. இயக்கப் பணிகள் சுணக்கம் ஆகிவிட்டன. இதனைப் போக்கும் வகையில் கழகப் பணிகளை தீவிரப்படுத்தும் கழக ஏடான, புரட்சிப் பெரியார் முழக்கம், நிமிர்வோம் ஏட்டிற்கு சந்தா சேர்த்திடவும், முதல் கட்டமாக 18.11. 2021 முதல் 20.11.2021 வரை...

சட்ட எரிப்பு நாளில் கழகத் தோழர்கள் ஜாதி ஒழிப்பு உறுதி ஏற்றனர்

சட்ட எரிப்பு நாளில் கழகத் தோழர்கள் ஜாதி ஒழிப்பு உறுதி ஏற்றனர்

திருச்சி : சட்ட எரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைச் சென்று சிறையிலேயே உயிர்நீத்த பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகியோரின் நினைவிடத்தில் திருச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் மீ.இ. ஆரோக்கியசாமி தலைமையில் ஜாதி ஒழிப்பு உறுதிமொழி ஏற்பும், அண்மையில் முடிவெய்திய இராவணனுக்கு வீரவணக்க நிகழ்வும் 26.11.2019 அன்று காலை 10:30 மணியளவில் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழகக் கொள்கைப் பரப்புரைச் செயலாளர் சீனி. விடுதலையரசு பங்கேற்று வீர வணக்க உரை நிகழ்த்தினார். மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் புதியவன் உறுதி மொழி வாசிக்க தோழர்கள் உறுதி மொழி ஏற்றனர். இறுதியாக மனோகர் நன்றி கூறினார். நிகழ்வில், திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சி, மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கிய பண்பாட்டு...

7 மாதம் ‘தடா’வில் சிறை சென்றவர் பெரியார் தொண்டர் ஞான. செபஸ்தியானுக்கு கழகம் இறுதி மரியாதை

7 மாதம் ‘தடா’வில் சிறை சென்றவர் பெரியார் தொண்டர் ஞான. செபஸ்தியானுக்கு கழகம் இறுதி மரியாதை

பெரியார் மருந்தியல் கல்லூரியின் தாளாளரும் முதுபெரும் பெரியார் தொண்டருமான தோழர் ஞான செபஸ்தியான் (101), 04.06.2019 அன்று திருச்சியில் முடிவெய்தினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி இறுதி மரியாதை செலுத்தினார். அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி,  திருச்சி புதியவன் மற்றும் கழக முன்னணிப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மறைந்த அய்யா ஞான செபஸ்தியான், விடுதலைப் புலிகளுக்கு பல்வேறு உதவிகளைச் செய்த ஈழ ஆதரவாளர். இ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா கொலை வழக்கில் பொய் குற்றச்சாட்டில் 7 மாதம் தடா சிறையில் இருந்தவரும் ஆவார். பெரியார் முழக்கம் 13062019 இதழ்

நேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள்

நேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள்

இரண்டு நாட்களுக்கு முன்னர் மதுரைக்கு வந்த மோடியை தமிழகமே எதிர்த்து நின்றது. உள்ளுக்குள் பொறுமியவாறு சடங்குத்தனமாக உரையாற்றி விட்டு பறந்தார் மோடி. நேரில் வந்தால் மட்டும் என்றில்லை ‘நேரலை’யில் வந்தாலும் அதே சம்பவம்தான் என்பதை செய்து காட்டியிருக்கின்றனர், திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள். “தேர்வு கால பதற்றத்தை கையாள்வது எப்படி’’ என்பது மோடியின் நிகழ்ச்சிகளுள் ஒன்று. இந்தியில் இதற்குப் பெயர் “பரிக்ஷா பே சர்ச்சா 2.0’’ பதட்டம் குறையுதோ இல்லையோ நிகழ்ச்சியின் பெயரைக் கேட்டாலே மாணவர்களுக்கு எரிச்சல் வருவது நிச்சயம். இந்த நிகழ்ச்சியை மாணவர்கள் நேரலையில் கண்டு பயன்பெறுவதற்கு ஏற்ப ஏற்பாடுகளை செய்யச் சொல்லி “மேலிட உத்தரவாம்’’. கல்லூரியின் பெரியார் கலையரங்கத்தில் ‘படம் காட்ட’ ஏற்பாடுகளை செய்திருந்தது கல்லூரி நிர்வாகம். இந்நிகழ்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு வருகைப் பதிவு கிடையாது என மிரட்டி வரவழைத்திருக் கின்றனர். இவற்றையெல்லாம் காணச் சகிக்காத முற்போக்கு மாணவர்கள் சிலர், “கல்லூரி கலையரங்கமா, மோடியின் விளம்பர இடமா’’...

திருச்சிப் பேரணி : மூத்த கருஞ்சட்டைத் தோழரின் உணர்வு

திருச்சிப் பேரணி : மூத்த கருஞ்சட்டைத் தோழரின் உணர்வு

23.12.2018 அன்று திருச்சியில் நடைபெற்ற பெரியார் கருஞ்சட்டைப் பேரணி மாநாடு குறித்து பொது மக்கள் மற்றும் பெரியார் உணர்வாளர்கள், பெரியார் இயக்கத்தினரிடையே மிகுந்த பேரெழுச்சியும், மகிழ்ச்சி யும் ஒரு புதிய செயல் வேகமும் ஏற்பட்டிருக்கிறது. உணர்வாளர்களிடம் பேசிய போது பெரியார் பெருந்தொண்டர், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் வணிகம் நடத்தி வரும் கம்பரசம் பேட்டையைச் சேர்ந்த பெரியவர் இருளாண்டி கூறிய கருத்து: “நான் சிறுவயதிலிருந்தே பெரியார் கொள்கைகளைப் பின்பற்று பவனாகவே இருந்தேன். எனது 18ஆவது வயதில் 1957இல் பெரியார் கூட்டிய தஞ்சை மாநாட் டிற்குப் பிறகு இப்பொழுதுதான் இவ்வளவு பெரும் கருஞ்சட்டைத் தோழர்களைப் பார்க்க முடிந்தது. உணர்ச்சி பெருக்கில் ஆனந்தக் கண்ணீர் வடித்தேன். எங்களுக்குப் பிறகு இந்த பெரியார் இயக்கத்தை வழி நடத்த, மக்களிடையே கொண்டு செல்ல யார் இருக்கிறார்கள் என்று நினைத்த வேளையில் பல ஆயிரக்கணக்கில் குறிப்பாக இளைஞர்களும் இளம் பெண்களும் பேரணியில் ஆட்டம் பாட்டம் முழக்கத்துடன் வந்தது...

கழக ஏடுகளுக்கு சந்தா  சேர்ப்பதில் தோழர்கள் தீவிரம் மாவட்டக் கலந்துரையாடல்களில் எழுச்சி டிசம்பர் 24 கருஞ்சட்டைப் பேரணிக்கு தயாராகிறார்கள்

கழக ஏடுகளுக்கு சந்தா சேர்ப்பதில் தோழர்கள் தீவிரம் மாவட்டக் கலந்துரையாடல்களில் எழுச்சி டிசம்பர் 24 கருஞ்சட்டைப் பேரணிக்கு தயாராகிறார்கள்

டிசம்பர் 24ஆம் தேதி திருச்சி கருஞ்சட்டைப் பேரணிக்கு தயாராகி வரும் கழகத் தோழர்கள் கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழுக்கு சந்தா சேர்க்கும் இயக்கத்திலும் முனைப்போடு  செயல்பட்டு வருகிறார்கள். மாவட்டக் கழகத் தோழர்களுடன் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் நேரில் சந்தித்து கலந்துரையாடல் கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர். முதல் கட்டமாக பயணம் நவம்பர் 21ஆம் தேதி காலை ஈரோடு வடக்கு மாவட்டம் கோபியில் காலை 11.30 மணியளவில் கழகத் தோழர் நிவாஸ் இல்லத்தில் நடந்தது. ஈரோடு வடக்கு மாவட்டமான கோபியில் 7 ஒன்றியங்களில் கழக அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. கல்வி உரிமை பரப்புரைப் பயணத்தைத் தொடர்ந்து ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத் தோழர்கள் பரப்புரைக்காக வாங்கியுள்ள வாகனத்தைப் பயன்படுத்தி கிராமம் கிராமமாக பரப்புரையை தொடர் நிகழ்வாக நடத்தி வருவது...

பெரியார் நினைவு கருஞ்சட்டைப் பேரணி – மாநாடு திருச்சி 24122018

பெரியார் நினைவு கருஞ்சட்டைப் பேரணி – மாநாடு திருச்சி 24122018

பெரியார் நினைவு கருஞ்சட்டைப் பேரணி – மாநாடு: ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்   பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24 அன்று அனைத்து பெரியாரிய இயக்கங்களும், உணர்வாளர்களும் இணைந்து முக்கியமான அரசியல் நிகழ்வு ஒன்றினை நடத்த வேண்டும் என்பது குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:   நாள்:  10-11-2018, சனிக்கிழமை இடம்:  சென்னை நிருபர்கள் சங்க கட்டிடம் டிசம்பர் 24 அன்று மாலையில் திருச்சியில் கருஞ்சட்டைப் பேரணி மற்றும் மாநாடு நடத்துவதென்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. மாநாட்டிற்கான பெயர் விவாதிக்கப்பட்டு“தமிழின உரிமை மீட்போம்!” என்ற முழக்கத்தின் பெயரில் நடத்துவதென்று முடிவெடுக்கப்பட்டது. இயக்கங்கள் மற்றும் இயக்கங்களை தாண்டிய பெரியாரிய சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், உணர்வாளர்கள் அனைவரையும் பங்கேற்கச் செய்வது. திருச்சியில் அனுமதி பெறுவதற்கான பொறுப்பினை தோழர் குடந்தை அரசன் அவர்கள் ஏற்றுக் கொண்டார். ஒன்பது மண்டலங்களாக பிரித்து மாநாட்டிற்கான வேலைகளை பார்ப்பது என முடிவெடுக்கப்பட்டு, ஒவ்வொரு இயக்கத்திற்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது.       ஒன்பது மண்டலங்கள்   1.சென்னை – தோழர் பொழிலன்(தமிழக...

நெருக்கடிக்குள்ளாகும் மத சார்பின்மையும் அரசியல் எழுச்சிக்கான தேவையும் கருத்தரங்கம் திருச்சி 21102018

நெருக்கடிக்குள்ளாகும் மத சார்பின்மையும் அரசியல் எழுச்சிக்கான தேவையும் கருத்தரங்கம் திருச்சி 21102018

திருச்சியில் 21.10.2018 ஞாயிறு அன்று நடைபெற்ற SDPI அமைப்பின் “ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டின் காலை அமர்வில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி’ அவர்கள் ‘நெருக்கடிக்குள்ளாகும் மத சார்பின்மையும் அரசியல் எழுச்சிக்கான தேவையும்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ரத்தினம் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் தோழர் கு.இராமகிருட்டிணன், இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், மக்கள் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம், தமிழ் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன், ஜமாத்தே இஸ்லாமிய ஆலோசனை குழு உறுப்பினர் ஜலாலுதீன், தமிழ் தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன், கிருஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிக்கோ இருதயராஜ், மே17 இயக்கத்தின் அருள் முருகன், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொதுச்செயலாளர் காலித் முகமது, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர்...

திருச்சியில் அம்பேத்கர் சிலைக்கு ஊர்வலமாகச் சென்று மாலை

திருச்சியில் அம்பேத்கர் சிலைக்கு ஊர்வலமாகச் சென்று மாலை

அம்பேத்கரின் 127ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஏப்.14 அன்று காலை 10 மணிக்கு திருச்சியிலுள்ள அவரது சிலைக்கு திருச்சி மாவட்டக் கழகம் சார்பில் ஊர்வலமாகச் சென்று முழக்கமிட்டு மாலை அணிவித்து மரியாதை  செலுத்தப்பட்டது. வழக்கறிஞர் கென்னடி, மாவட்ட ஒருங்கிணைப் பாளர் மனோகரன் தலைமையில் வழக்கறிஞர் கென்னடி, மணி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 03052018 இதழ்

தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாடு திருச்சி 25012018

இன்று (25.01.2018) பிற்பகல் 3 மணிக்கு திருச்சியில். ‘தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாடு !’ ஜனவரி 25 மொழிப்போர் ஈகியர் நாளில்… கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். நாள் : 25.01.2018 வியாழக்கிழமை. நேரம் : பிற்பகல் 3 மணி இடம் : டி.எம்.எஸ்.எஸ். அரங்கம்,ஆர்.சி.மேல்நிலைப்பள்ளி அருகில்,தொடர்வண்டி சந்திப்பு,திருச்சி. தோழமை அமைப்புகளின் தலைவர்கள் சிறப்புரையாற்றுகிறார்கள் ! நிகழ்ச்சி ஏற்பாடு : சி.பி.எம்.எல்.(மக்கள் விடுதலை).

அரசு தேர்வாணையத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள்!

தமிழ்நாட்டின் அரசுப் பணிகளுக்கு பிற மாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து கழகம் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. திருச்சி : திருச்சி மாவட்ட கழகச் சார்பாக 14.12.2017 வியாழன் காலை 10.30 மணிக்கு தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையத்தைக் கண்டித்து, அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்டத் தலைவர் துரை. தாமோதரன் தலைமை வகித்தார். பல் மருத்துவர் எஸ்.எஸ். முத்து, திருவரங்க நகரச் செயலாளர் அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்துரை வழங்கியோர்: செந்தில் (இளந்தமிழகம்), வின்செட் (மாநகரத் தலைவர், த.பெ.தி.க.), பாலாஜி (மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மே 17 இயக்கம்), வழக்குரைஞர் தமிழழகன் (ஆசிரியர், ‘தமிழ்க்காவிரி’), அன்பழகன் (பெரியார் பாசறை), பஷீர் அகமது (மக்கள் உரிமை மீட்பு இயக்கம்), வழக்குரைஞர் பொற்கொடி ஆகியோர்.  டார்வின்தாசன் (கழக மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்) நன்றியுரையாற்றினார்.  தோழர்கள் குணா, முருகானந்தம், மு.மனோகரன், டி.வி.மெக்கானிக் மணி, அவரது துணைவியார்,...

தலித்துகள் மீதான படுகொலைகள், பின்னணி, வழக்குப் பதிவு, சட்ட நடவடிக்கைகள் போன்றவை குறித்த பொது விசாரணை திருச்சி 24092017

24-9-2017, ஞாயிறு, காலை 10-00 மணியளவில் திருச்சி, செய்ண்ட் ஜோசப் கல்லூரி நூலக அரங்கில், சமீப காலமாக தமிழகத்தில் அதிகரித்துவரும் தலித்துகள் மீதான படுகொலைகள், பின்னணி, வழ்க்குப் பதிவு, சட்ட நடவடிக்கைகள் போன்றவை குறித்த பொது விசாரணை நடைபெற்றது. இதனை தமிழகத்தில் தீண்டாமை வன்கொடுமை வழக்குகளில் முனைப்பாகத் தலையிட்டு உரிய நீதி பெறுவதிலும், பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு, நிவாரணம், ஈடுசெய்நீதி ஆகியவற்றுக்காகவும் ஈடு இணையற்றப் பணியாற்றிவரும் எவிடன்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. எவிடன்ஸ் முத்து வரவேற்புரையைத் தொடர்ந்து, எவிடன்ஸ் செயல் இயக்குநர் கதிர் பொது விசாரணையின் நோக்கம் குறித்தும், தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 15 தலித்துகள் கொலையானதையும் கடந்த ஒரு ஆண்டு காலத்தில் தலித் செயல்பாட்டாளர்கள் 25 பேர் கொலையுண்டுள்ளதையும் குறிப்பிட்டு உரையாற்றினார். மேலும் வன்கொடுமைத் திருத்தச் சட்டம் குறித்தும்,  அவற்றைப் பயன்படுத்திப் பாதிக்கப்பட்டோருக்கு இடைக்கால நிவாரணம், மாதாந்திர குடும்ப உதவிநிதி பெற்றுள்ளது குறித்தும், பாதிக்கப் பட்ட தரப்பினர்...

தமிழகமும் சாதிய படுகொலைகளும்” மக்கள் பொதுவிசாரணை !

”தமிழகமும் சாதிய படுகொலைகளும்” மக்கள் பொதுவிசாரணை ! எவிடன்ஸ் அமைப்பின் சார்பில்.. நாள் : 24.09.2017 காலை 9.30 மணி. இடம் : செயின்ட் ஜோசப் கல்லூரி, சத்திரம் பேருந்து நிலையம் எதிரில்,திருச்சி. கழகத்தலைவர் அவர்கள் விசாரணையின் நடுவராக பங்கேற்கிறார்.பல் வேறு தோழமை அமைப்பின் தலைவர்கள்,சமூக ஆர்வலர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள்  

நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்? புத்தக வெளியீட்டு பரப்புரை விழா திருச்சி

நூல் முன் வெளியீட்டு பரப்புரை விழா ! தோழர் பசு.கவுதமன் அவர்கள் தொகுத்துள்ள ”நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்.” எனும் நூலின் நூல் முன் வெளியீட்டு பரப்புரை விழா 04.03.2017 சனிக்கிழமை அன்று மாலை 6 மணியளவில் திருச்சி,சத்திரம் பேருந்து நிலையம்,கலைஞர் அறிவாலையம் அருகில் உள்ள சுசி ஹாலில் நடைபெற்றது. 4000க்கும் மேற்பட்ட பக்கங்கள் உள்ள A4 அளவு தாளில் அச்சிடப்பட்ட ரூபாய் 4000 மதிப்புள்ள இத்தொகுப்பு நூல் முன் வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ 2000த்திற்கு இந்நிகழ்வில் பதிவு செய்யப்பட்டது. இவ்விழாவிற்கு நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் இயக்குனர் தோழர் தா.பாண்டியன் தலைமை தாங்கினார். ஜனசக்தி இதழின் பொறுப்பாசிரியர் தோழர் இந்திரஜித் அவர்கள், சி.பி.எம். மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.ஸ்ரீதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் நூல் குறித்த செய்திகளை பகிர்ந்து கொண்டு நூலின் முன் வெளியீட்டுத்திட்டத்திற்கு ஆதரவளித்து புத்தகத்தை வாங்கி பயன் பெற...

நூல் முன் வெளியீட்டு பரப்புரை விழா !

நூல் முன் வெளியீட்டு பரப்புரை விழா ! தோழர் பசு.கவுதமன் தொகுத்த ”நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்.” நாள் : 04.03.2017 சனிக்கிழமை,மாலை 5 மணி. இடம் : சுசி ஹால்,கலைஞர் அறிவாலையம் அருகில், சத்திரம் பேருந்து நிலையம்,திருச்சி. தலைமை : தோழர் தா.பாண்டியன், இயக்குனர்,நியூசெஞ்சுரி புக் ஹவுஸ். வாழ்த்துரை : தோழர் இந்திரஜித், பொறுப்பாசிரியர், ஜனசக்தி. தோழர் ஶ்ரீதர், மாநிலக்குழு,உறுப்பினர் சிபி.எம். நூல் பரப்புரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் பசு.கவுதமன். நூல் தொகுப்பாசிரியர்.

சமஸ்கிருத எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி 08072016

திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ! மத்திய மோடி அரசின் சமஸ்கிருத திணிப்பை கண்டித்தும், மத்திய அலுவல் மொழி பட்டியலில் இருந்து சமஸ்கிருதத்தை நீக்கிட வலியுறுத்தியும் 08 07 2016 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் திருச்சி ராமகிருஷ்ணா திரையரங்க பாலம் அருகில் (நாகநாதர் டீ கடை எதிரில்), நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆரோக்கிய சாமி தலைமை தாங்கினார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி,த.பெ.தி.க,ஆதித்தமிழர் பேரவை,சிந்தனையாளர் கழகம்,புதிய தமிழகம்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,மா.பெ.பொ.கட்சி,பெரியார் பாசறை அமைப்புகளை சார்ந்த தோழர்கள் உள்ளிட்ட கழக தோழர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

பெரியாரும் தலித்துகளும் – திருச்சியில் வாசிப்பு முகாம்

பெரியாரும் தலித்துகளும் – திருச்சியில் வாசிப்பு முகாம்

வாசிப்பு முகாம் – II. +++++++++++++++++++ நாள் : 02-07-2016 – சனிக்கிழமை. நேரம் : காலை 09.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை. தலைப்பு : பெரியாரும் தலித்துகளும். இடம் : இன்னாவோட்டர்ஸ் குரூப்ஸ், தியான லிங்கா டவர், முதல் தளம், உறையூர் பெட்ரோல் பங்க், ஏ ஒன் பாஸ்ட் புட் அருகில், ருக்மணி தியேட்டர் பஸ் ஸ்டாப், சாலை ரோடு, உறையூர், திருச்சி. பங்கேற்பு :தோழர் கொளத்தூர் மணி மற்றும் வாசிப்பாளர்கள். கட்டணம் : ரூ.100 மட்டும். ஏற்பாடு : தமிழ்நாடு அறிவியல் மன்றம். தொடர்புக்கு – 8754316187, 9842448175.

”ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க அரசும் சமூகமும் செய்யவேண்டியது என்ன?” – கருத்தரங்கம் திருச்சி

9-4-2016 சனிக்கிழமை மாலை, திருச்சி, புத்தூர் நால்ரோடு, சண்முகம் திருமண மண்டபத்தில், இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில், ”ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க அரசும் சமூகமும் செய்யவேண்டியது என்ன?” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கத்தின் தொடக்கத்தில்,விரட்டு கலை பண்பாட்டு மையக் குழுவினரால் பறை முழக்கமும்,வீதி நாடகமும் நிகழ்த்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, இளந்தமிழகத் தோழர் ஜாசெம் தலைமையில் கருத்தரங்கம் தொடங்கியது. கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, எவிடென்சு அமைப்பின் இயக்குனர் கதிர், கர்நாடக தலித் சுயமரியாதை இயக்கத்தின் பேராசிரியர் சிவலிங்கம்,கம்யூனியூஸ்ட் கட்சி (மா.லெ) மக்கள் விடுதலை கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் செல்வி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க துணைப் பொதுச்செயலாளர் நந்தலாலா, இளந்தமிழகம் இயக்கத்தின் தோழர் நாசர் ஆகியோர் உரையாற்றினர். அனைவரும் எராளமான புள்ளிவிவரங்களோடும், அக்கறையோடு சேகரித்துவந்த செய்திகளோடும் மிகச் செறிவாக உரையாற்றியது வந்திருந்தோருக்கு பயனுள்ளதாகவும், தொடர்ந்து செயலாற்றுவதற்கு பெரும் ஊக்கமாகவும் அமைந்தது. நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழக்த்...

ஆணவப் படுகொலைகளைத் தடுக்க அரசும் சமூகமும் செய்ய வேண்டியது என்ன? கருத்தரங்கம் திருச்சி 09042016

”ஆணவக் கொலைகளைத் தடுக்க அரசும் சமூகமும் செய்ய வேண்டியது என்ன ?” – இளந்தமிழகம் நடத்தும் கருத்தங்கம். நாள்: ஏப்ரல் 9, சனிக்கிழமை நேரம்: மாலை 5 மணி. இடம்: சண்முகா திருமண மண்டபம், புத்தூர் நாலு ரோடு, திருச்சி. கருத்துரை வழங்குபவர்கள்:- தோழர். கொளத்தூர் மணி தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம் தோழர். எவிடென்ஸ் கதிர் எவிடென்ஸ் அமைப்பு, மதுரை தோழர். சிவலிங்கம் தலைவர், சுயமரியாதை தலித் இயக்கம், கர்நாடகா தோழர். செல்வி தலைமைக்குழு உறுப்பினர், கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ.) மக்கள் விடுதலை, தமிழ் நாடு தோழர். நந்தலாலா மாநில துணைத் தலைவர், தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தோழர். தமிழ் நாசர், செயற்குழு உறுப்புனர், இளந்தமிழகம் இயக்கம்

பிப்.1இல் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்!

பார்ப்பன ‘துரோணாச்சாரி’களின் வாரிசுகளா, உயர்கல்வி நிறுவனங்கள்? ‘ஏகலைவன்’களாக இனியும் இருக்க மாட்டோம்! ‘ரோகித் வெமுலா’ மரணத்துக்கு நீதி கேட்போம்! கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் 24.01.2016 அன்று திருச்சியில் கூடிய திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 7 சதவீதத்தையும் தாண்டாத இடஒதுக்கீடு மத்திய அரசு பதவிகளில் பிற்படுத்தப்பட் டோருக்கான 27 சதவிகித இடஒதுக்கீடு ஆணை அமுலுக்கு வந்து 23 ஆண்டுகள் –கடந்த பிறகும் குரூப் ஏ, குரூப் பி போன்ற முதல்நிலைப் பதவிகளில் 7 சதவிகிதத்தைக் கூட எட்டவில்லை என்று அண்மை யில் வெளிவந்துள்ள தகவல்கள் அதிர்ச்சியூட்டு கின்றன. அரசு உயர் அதிகாரப் பதவிகளை கைப்பற்றிக் கொண்டிருக்கும் – பார்ப்பன – உயர் ஜாதி அதிகார வர்க்கம் – அவற்றோடு இணைந்து நிற்கும் நடுவண் ஆட்சிகள் – பார்ப்பன உயர்ஜாதி கட்டுப் பாட்டில் உள்ள உச்சநீதிமன்றம் ஆகியவை சமூக நீதிக்கான...

திருச்சியில் கோட்சே ஆதரவாளர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் காந்தி நினைவு நாளில் கழகத்தினர் கைது! 0

திருச்சியில் கோட்சே ஆதரவாளர்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் காந்தி நினைவு நாளில் கழகத்தினர் கைது!

ஆக. 29ஆம் தேதி தொடங்கப்பட்டதுதான் விசுவ இந்து பரிஷத். ஆனால், அதை காந்தி நினைவு நாளில் தொடங்கப்பட்டதாக மாற்றிக் கொண்டார்கள். பார்ப்பனர்கள், சங்கராச்சாரிகள், சாமியார்கள் இடம் பெற்றுள்ள அமைப்பு விசுவ இந்து பரிஷத். பாரதிய ஜனதா கட்சி உருவாவதற்கு முன்பே 1964ஆம் ஆண்டிலே ஆர்.எ°.எ°. தலைவர் கோல்வாக்கர் ஆலோசனை பெயரில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, அயோத்தியில் ‘இராமன்’, மதுராவில் ‘கிருஷ்ணன்’, காசியில் ‘விசுவநாதன்’ ஆகிய மூன்று மதக் கடவுள்களுக்கும் அங்கே அமைந்துள்ள மசூதிகளைத் தகர்த்துவிட்டு கோயில்கள் கட்டவேண்டும் என்று அறிவித்தது. பிற மதத்தினரை ‘இந்து’ மதத்துக்கு மாற்றுவதற்காகவே ‘தர்ம பிரச்சார்’ என்ற தனிப் பிரிவை, விசுவ இந்து பரிஷத் உருவாக்கியுள்ளது. 1966ஆம் ஆண்டு பசுவதை தடைச் சட்டம் கொண்டு வர வலியுறுத்தி, டெல்லியில் காமராசரை உயிரோடு கொளுத்த திட்டமிட்டு, அவரது வீட்டுக்கு தீ வைத்து, சங் பரிவாரங்களோடு சேர்ந்து விசுவ இந்து பரிஷத்தும் வெறியாட்டம் நடத்தியது. இந்த விசுவ இந்து பரிஷத்,...

திருச்சியில் டாஸ்மாக் முற்றுகை: கழகத் தோழர்கள் கைது 0

திருச்சியில் டாஸ்மாக் முற்றுகை: கழகத் தோழர்கள் கைது

காந்தி மார்க்கெட் பகுதியில் பள்ளி வளாகங்களுக்கு அருகிலுள்ள நெல்பேட்டை ஒயின்ஷாப், பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கும் பெரும் இடையூறாக இருந்து வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ஒயின்ஷாப் முற்றுகைப் போராட்டத்தை 4.8.2015 காலை 10 மணிக்குஅறிவித்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் காந்தி மார்க்கெட் காவல் துறையினர் கழக மாவட்டச் செயலாளர் கந்த வேல் குமார், பிள்ளை மாநகர் பகுதி தலைவர் வெனிஸ் கிளமெண்ட், ஜெனிபர் ஆகியோரை நள்ளிரவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெரியார் முழக்கம் 13082015 இதழ்

0

திருச்சி மாவட்டக் கலந்துரையாடல்

திருச்சி, உறையூரில் உள்ள “ Innovators Group of Community College “-இன் கூட்ட அரங்கில் 7-8-2015 அன்று பிற்பகல் 4-00 மணிக்கு நடைபெற்றது.

0

கோகுல்ராஜ் படுகொலையை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் கழகத்தின் சார்பில் கோகுல்ராஜ் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் ! 03-07-15 திருச்சி மாவட்ட திராவிடா் விடுதலைக் கழகத்தின் சாா்பாக கோகுல்ராஜ் படுகொலையைக் கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றியோர் – புதிய தமிழகம் கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளா் வாழையூா் குணா.மாவட்டச் செயலாளா் அய்யப்பன்.விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளா் தமிழாதன்.எஸ்.டி.பி.ஜ கட்சியின் மாநிலப் பேச்சாளர் சம்சுதீன். பெரியார் பெருந்தொண்டர் திருச்சி எஸ்.எஸ்.முத்து, மாவட்ட தலைவர் திவிக தோழர் ஆரோக்கியசாமி. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் – திருச்சி விஜி, திவிக, திவிக மாவட்ட செயலாளர் கந்தவேல்குமார், திவிக மாவட்ட அமைப்பாளர்கள் புதியவன்.மனோகரன்.குணா.திருவரங்க பகுதி செயலாளர் அசோக்.வழக்கறிஞா் சந்துரு.பழனி. பாரத்.சரத்,முருகானந்தம்.குளித்தலை சத்யா, கரூர் மோகன் தாஸ் மற்றும் கழக தோழா்கள் கலந்துக் கொண்டனா். நன்றியுரை தோழர் சந்துரு, வழக்கறிஞர்