ஈரோடு, கடலூர், ஏற்காட்டில் தெருமுனைக் கூட்டங்கள்!
ஈரோடு: தெற்கு மாவட்டக் கழகம் சார்பாக தொடரட்டும் “தமிழ்நாட்டில் சாதனைகள், திமுக ஆட்சியை உறுதி செய்வோம்” என்கின்ற முழக்கத்தோடு அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி ஒருங்கிணைப்பில் 4 நாட்களில் 13 இடங்களில் தெமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. தெருமுனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. 11.03.26 புதன் அன்று காலை சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் தெருமுனைக் கூட்ட மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமையில் மாலை 5 மணி அளவில் நடைபெற்றது. அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி, சண்முகப்பிரியன் (திமுக)ஆகியோர் சிறப்புரையாற்றினர். 2வது நாள் (12.03.26): வியாழன் அன்று கனி ராவுத்தர் குளம், அக்ரகாரம், காமராஜர் நகர், காந்திநகர் ஆகிய 4 இடங்களில் நடைபெற்றது. இக்கூட்டங்களுக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் அவர்கள் தலைமை தாங்கினார். கூட்டங்களில் அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி, கழகப் பொருளாளர் துரைசாமி, சமூக வலைதள பொறுப்பாளர் பரிமளராசன், திருப்பூர் மாநகர அமைப்பாளர் முத்து ஆகியோர் உரையாற்றினார்கள்.மதிய உணவு சண்முகப்ரியன்...
