மாநாட்டிலிருந்து சில துளிகள்…
★ மாநாட்டுத் திடலில் சுயமரியாதை இயக்கத் தலைவர்கள் குறித்த வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய பதாகைகள் இடம் பெற்றிருந்தன. ★ மாநாட்டில் பார்வையாளர்களிடம் துண்டு ஏந்தி திரட்டப்பட்ட ரூ.7420 நிதி, மயிலாடுதுறை மாவட்டக் கழகம் சார்பாக ரூ.5,000, மதுரை மாவட்டக் கழகம் சார்பாக ரூ.15,000 கழக ஏடான புரட்சிப் பெரியார் முழக்கத்துக்கு வழங்கப்பட்டது. ★ நாமக்கல் மாவட்டக் கழகம் சார்பாக தோழர்கள் ரூ.10,000 மாநாட்டுக்கு நன்கொடையாக வழங்கினர். ★ மாநாட்டு முன்னேற்பாட்டுக் குழுவினரான அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, தலைமைக்குழு உறுப்பினர் காவை. ஈஸ்வரன் மற்றும் தோழர்கள் பெரியார் நம்பி, குமரேசன் ஆகியோர் கழக ஆதரவாளர்களை சந்தித்து நன்கொடை திரட்டும் பணிகளை மேற்கொண்டனர். ★ பரப்புரைப் பயணத்துக்கும், மாநாட்டுக்கும், மயிலாப்பூர் பகுதி கழகம் சார்பாக, ரூ. 5,000-அய் தோழர் மனோகர் நன்கொடையாக வழங்கினார். ★ இந்த பரப்புரைப் பயணத் திட்டத்துக்கும், துண்டறிக்கை தயாரிப்பு, சீருடை தயாரிப்புக்கும் நிதி திரட்டி மாநாட்டு பணிகளுக்கும் முதுகெலும்பாக நின்று...
