Category: திருநெல்வேலி

குடந்தை – கீழப்பாவூர்-குடியாத்தத்தில் சிறப்புடன் நடந்த மண்டல மாநாடுகள்

குடந்தை – கீழப்பாவூர்-குடியாத்தத்தில் சிறப்புடன் நடந்த மண்டல மாநாடுகள்

குடந்தையில்: ‘நமக்கான அடையாளம் திராவிட மாடல்’ என்ற முழக்கத்தை முன் வைத்து கும்பகோணம் மீன் மார்க்கெட் திடலில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மண்டல மாநாடு 16.5.2022 அன்று மாலை சிறப்புடன் நடைபெற்றது. மாவட்டக் கழகத் தலைவர் மு. இளங்கோவன் தலைமையில் சா.வெங்கடேசன் (ஒன்றிய அமைப்பாளர்) முன்னிலையில் நடைபெற்றது. கு. பாரி (தஞ்சை மாவட்ட செயலாளர், தி.வி.க.), தெ. மகேசு (மாவட்டச் செயலாளர்), திருச்சி நாகம்மையார் இல்லத்துப் பெண்ணைத் திருமணம் செய்தவரும், திராவிடர் கழகத் தோழருமான பவுண்டரீகபுரம் முருகேசன், பொறியாளர் திருநாவுக்கரசு (உழவர் இயக்கம்), சி.த. திருவேங்கடம் (மாவட்ட அமைப்பாளர்), சா. விவேகானந்தன் (மண்டல செயலாளர் வி.சி.க.) உள்ளிட்டோர் மாநாட்டில் பேசினர். முன்னதாக, பெரம்பலூர் தாமோதரன், ‘மந்திரமா-தந்திரமா’ நிகழ்ச்சி நடைபெற்றது. திராவிடர் கழக மாவட்ட மகளிரணி செயலாளர் திரிபுரசுந்தரி மற்றும் தி.க. தோழர்கள் குணா, சங்கர், கழகத் தலைவர்-பொதுச் செயலாளருக்கு துண்டுகளை அணிவித்து மகிழ்ந்தனர். கரிகாலன் நன்றி கூறினார். தொடர்ந்து 20...

கழக ஏட்டுக்கு சந்தா சேர்க்க தீவிரம்: தென்காசி-நெல்லை மாவட்ட கலந்துரையாடல்

கழக ஏட்டுக்கு சந்தா சேர்க்க தீவிரம்: தென்காசி-நெல்லை மாவட்ட கலந்துரையாடல்

கீழப்பாவூரில் நடைபெற்ற தென்காசி, நெல்லை (ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம் ) மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம் 02.01.2022 ஞாயிறு காலை 10.30 மணியளவில் தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் நடைபெற்றது. இக்கலந்துரையாடல் கூட்டத்தில் கழகப் பொருளாளர் திருப்பூர்  சு.துரைசாமி தலைமை வகித்தார் நெல்லை மாவட்டத் தலைவர் பா.பால்வண்ணன் தென்காசி மாவட்டத் தலைவர் அ.மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் தோழர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் கூட்டத்தின்நோக்கத்தை விளக்கிப் பேசினார். தோழர்கள் கழக இதழான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வார இதழுக்கு சந்தா சேர்ப்பது குறித்தும் மாவட்டம் முழுவதும் இயக்கத்தைக் கொண்டு செல்ல பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இம்மாதம் முழுவதும் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழுக்கு சந்தா சேகரிப்பு பணியாற்றுவது என்றும்  கொரானா தொற்று தற்போது பெருகி வருவதால் தொற்று குறைந்ததும்  கொள்கை விளக்கத் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடத் திடவும், குடும்ப விழா...

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மகளிர் தின விழா!

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மகளிர் தின விழா!

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மகளிர் தின விழா! நாள் :07.03.2021, ஞாயிறுகாலை நேரம் : 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இடம்: ஆயிரப்பேரி விலக்கு அருகேயுள்ள தோப்பு பழைய குற்றாலம் செல்லும் வழி, குற்றாலம். தலைமை :தோழர். கலாவதி , பொறுப்பாளர், தமிழ்நாடு அறிவியல் மன்றம், தென்காசி மாவட்டம். முன்னிலை : தோழர். கோமதி, நெல்லை தோழர். வெற்றிச் செல்வி , சூரங்குடி தோழர். சுமதி , செட்டியூர், தென்காசி தோழர். மாரீஸ்வரி, தூத்துக்குடி தோழர். அனிதா, கபாலிபாறை வரவேற்புரை : தோழர். இரமணி, கீழப்பாவூர். சிறப்புரை : “திராவிடர் இயக்கமும் பெண்ணுரிமையும்” எனும் தலைப்பில் பால். பிரபாகரன் (பரப்புரைச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்) மகளிர் தின விழா உரை தோழர். சங்கீதா, (அமைப்பாளர், திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம்) தோழர். அ. மாசிலாமணி தென்காசி மாவட்டத்தலைவர் தி.வி.க. தோழர். பா.பால்வண்ணன் நெல்லை...

நாத்திகம் முருகேசன் துணைவியார் முடிவெய்தினார்

நாத்திகம் முருகேசன் துணைவியார் முடிவெய்தினார்

ஆழ்வை ஒன்றிய தி.வி.க. தலைவர் நாத்திகம் முருகேசன் துணைவியார் திருமதி. சந்திரா (வயது 65) 30.11.2018 மாலை 4.00 மணியளவில் முடிவெய்தினார். அவரது உடல் நல்லடக்கம் ஆழ்வார் தோப்பில் 01.12.2018மதியம் 1.00 மணியளவில் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகப் பரப்புரைச் செயலாளர் பால் .பிரபாகரன்  மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினார். நிகழ்வில் நெல்லை மாவட்டத் தலைவர் பா. பால்வண்ணன், நெல்லை மாவட்டச் செயலாளர் சி.ஆ.காசிராஜன், தமிழ்நாடு அறிவியல் மன்ற நெல்லை மாவட்ட பொறுப்பாளர் ச. தமிழன், நெல்லை மாவட்ட அமைப்பாளர் சு. அன்பரசு, கீழப்பாவூர் ஒன்றிய தலைவர் அ.மாசிலாமணி, தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர் பால். அறிவழகன், மாவட்ட துணைச் செயலாளர் ச.கா.பால சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் சந்திரசேகர், தூத்துக்குடி மாவட்டத் தலைவர் கோ.அ.குமார், வே.பால்ராசு, சா.த.பிரபாகரன், செ.செல்லத்துரை. குமணன், பாரி, மனோஜ் மற்றும் தூத்துக்குடி நெல்லை மாவட்ட தி.வி.க. தோழர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். எவ்வித சடங்குகள் இன்றி...

சங்கரன்கோவில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் முதல் நிகழ்ச்சி 

  திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் நகரத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய நூல் அறிமுக விழா கடந்த  மே 14 அன்று  அபர்ணாதேவி திருமண மண்டபத்தில் நடைபெற்றது . நிகழ்ச்சிக்கு கழக பரப்புரை செயலர் பால்.பிரபாகரன் தலைமை வகித்தார் .நெல்லை மாவட்ட தலைவர் பால் வண்ணம் முன்னிலை ஏற்றார். ஒருங்கிணைப்பு செய்த சங்கரன்கோவில் தோழர் வே.ராமசாமியின் நோக்க உரையுடன்  நிகழ்ச்சி தொடங்கியது .சங்கை பெரியார் தொண்டர் பா.சதாசிவம் வரவேற்புரை நல்கினார்  “.பெரியார் இன்றும் என்றும் “அண்ணல் அம்பேத்கரின் “நான் ஓர்  இந்துவாக சாக மாட்டேன் “கழக மாத இதழான நிமிர்வோம் ஆகிய நூல்கள் அறிமுகப் படுத்தப்பட்டன . .நிமிர்வோம் இதழ்கள் குறித்து மதுரை தோழர் மா.பா மணிஅமுதனும் ..அம்பேத்கரின் நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன் நூல்குறித்து தலித்முரசு ஆசிரியர் புனிதப்பாண்டியனும் கழகத்  தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் பெரியார் இன்றும் என்றும் நூல் பற்றியும் உரையாற்றினர் .பால்.பிரபாகரன் தலைமை உரை ஆற்றினார் ஆதித்தமிழர் பேரவையின் தென்னரசு ,முள்ளிக்குளம்...

நெல்லையை காப்போம் – பேரணி மற்றும் பொதுக்கூட்டம் பாளையங்கோட்டை 13052017

நெல்லையைக் காப்போம் ! கூடங்குளத்தில் அணு உலைப்பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், குடிநீருக்கும்,பயிர்த்தொழிலுக்குமே தாமிரபரணி தண்ணீர் எடுப்போம் எனும் முழக்கத்துடன் பேரணி மற்றும் பொதுக்கூட்டம். நாள் : 13.05.2017 நேரம் : மாலை 4 மணி. இடம் : பாளையங்கோட்டை, லூர்துநாதன் சிலை முன்பிருந்து ஜவஹர் திடல் வரை. கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் மற்றும் பல்வேறு இயக்கத்தோழர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்கள். நெல்லையைக் காப்போம் கூடங்குளத்தில் அணுஉலைப் பூங்கா வடாதென எதிர்ப்போம். குடிநீருக்கும் பயிர்த் தொழிலுக்குமே தாமிரபரணித் தண்ணீர் எடுப்போம்… பேரணி மற்றும் பொதுக்கூட்டம்  

திருநெல்வேலி மாவட்ட தோழர்களின் கலந்துரையாடல் கூட்டம் 09042017

திருநெல்வேலி மாவட்ட தோழர்களின் கலந்துரையாடல் கூட்டம் 09042017

சங்கரன்கோவிலில் 09042017 ஞாயிற்றுக்கிழமை அன்று தோழர் பா.சதாசிவம் அவர்கள் இல்லத்தில் திராவிடர் விடுதலைக்கழக திருநெல்வேலி மாவட்ட தோழர்களின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது தோழர்.பால்.பிரபாகரனின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 14-5-17 அன்று கழகத்தின் சார்பில் சங்கரன்கோவிலில் நடைபெற உள்ள நூல் அறிமுகக் கூட்டத்தை சிறப்புற நடத்துவது என்று முடிவு செய்யப் பட்டது

நெல்லையில் அணு உலைப் பூங்கா எதிர்ப்பு மாநாடு

அணு உலைப் பூங்கா என்பது, இரண்டுக்கும் மேற்பட்ட அணுவுலைகளை ஒரே இடத்தில் நிறுவுவதாகும். கூடங்குளத்தில் அமையவிருக்கும் 3,4,5,6 என்று அடுத்தடுத்து அணு உலை அமைக்க நினைக்கிறது அரசு. கூடங்குளத்தில் ஓர் அணு உலைப் பூங்கா அமைப்பதே திட்டம். அணு உலைப் பூங்காக்களால் போர், பயங்கரவாதிகளின் தாக்குதல் மற்றும் சுனாமி போன்ற இயற்கை பேரிடரால் பேராபத்து  நிகழலாம். எனவே அணு உலை வேண்டாம் என்று தொடர்ந்து பல்வேறு பரப்புரைகளையும், போராட்டங்களையும் நடத்தி வரும், “அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு” சார்பாக 03-12-2016 சனிக்கிழமை அன்று மாலை 3-00 மணி முதல் இரவு வரை, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை முருகன் குறிச்சி பகுதியில் உள்ள கிங்ஸ் சிக் அரங்கில் “கூடங்குளம் அணு உலைப் பூங்கா எதிர்ப்பு மாநாடு” நடைபெற்றது. அமெரிக்கா, ஜப்பான், இரஷ்யாவுடனான அணு ஒப்பந்தங்களை இரத்து செய்ய வேண்டும்; கூடங்குளத்தில் அணு உலைப் பூங்கா அமைப்பதையும், கல்பாக்கத்தில் விரிவாக்கம் செய்வதையும் கைவிட வேண்டும்;...

மூடப்படும் அரசுப் பள்ளிகள்: கொளத்தூர் மணி கண்டனம்

திருநெல்வேலி மாவட் டம் பாவூர் சத்திரத்தில் பெரியார் 138ஆவது பிறந்த நாளான 17.9.2016இல் கல்வியை காவி மயமாக்கும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்து கீழப்பாவூர் ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகத் தின் சார்பில் சார் பதிவாளர் அலுவலகம் அருகே பொதுக் கூட்டம் நடைபெற்றது. கீழப்பாவூர் ஒன்றிய கழகத் தலைவர் குறும்பை அ. மாசிலாமணி தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு பொருளாளர் ந. சங்கர், துணைச் செயலாளர் மூ.சபாபதி முன்னிலை வகித்தனர். நெல்லை மாவட்ட கழக அமைப்பாளர் பொ.பெ.சு. அன்பரசு வரவேற்புரையாற்றினார். காவை இளவரசனின் ‘மந்திரமா? தந்திரமா?’ நிகழ்வோடு பொதுக்கூட்டம் தொடங்கியது. நிகழ்வில் நெல்லை மாவட்ட கழகத் தலைவர் பால்வண்ணன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு மற்றும் இராம. உதயசூரியன் (ம.தி.மு.க.), கலிவரதன் (ஆதித் தமிழர் பேரவை), கூ.சு. இராமச்சந்திரன் (தி.மு.க.), டேனியல் (வி.சி.க.), சொ. சு. தமிழினியன் (விசிக) ஆகியோர் உரைக்குப் பின் கழகத் தலைவர்...

‘ஆடு மேய்ப்பதை அரசு வேலையாக்குவோம்’ என்கிறது தமிழ்த் தேசியம்; ‘ஆடு மேய்ப்பவரை ஐ.ஏ.எஸ். ஆக்கியது’ பெரியாரியம்: பால்பிரபாகரன் பேச்சு

திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மத்திய அரசின் கல்வி வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்தும், கல்வி நிலையங்களில் நிலவும் ஜாதிய பாகுபாடுகளை நீக்க வலியுறுத்தியும், கண்டன பொதுக்கூட்டம் பாவூர் சத்திரம் பேருந்து நிலையத்தில் மார்ச் 3ம் தேதி மாலை 5 மணியளவில் கீழப்பாவூர் ஒன்றிய தலைவர் குரும்பலாபேரி மாசிலாமணி தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது. துவக்கத்தில் மாவட்ட அமைப்பாளர் அன்பரசு வரவேற்றார். திராவிடர் விடுதலைக்கழக நிர்வாகிகள் சங்கர், லெட்சுமணன், பெரியார் திலீபன், தங்கதுரை, சபாபதி, மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விளிம்பு நிலை மக்களுக்கு எதிராக செயல்படும் மத்திய மோடி அரசை கண்டித்து, திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட தலைவர் பால்வண்ணன், கீழப்பாவூர் மதிமுக ஒன்றிய செயலாளர் இராம உதய சூரியன், கீழப்பாவூர் திமுக ஒன்றிய செயலாளர் இராமச்சந்திரன், கழகத் தோழர் குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக கல்வி வேலை வாய்ப்புகளில்...