Category: அரியலூர்

இடைவிடாத பரப்புரைகளால் நிறைந்த ‘2025’ கழகத்தின் ஓராண்டு களப்பணிகள்!

இடைவிடாத பரப்புரைகளால் நிறைந்த ‘2025’ கழகத்தின் ஓராண்டு களப்பணிகள்!

சனவரி 12: சென்னை ராயப்பேட்டையில் 25-ஆம் ஆண்டாக தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. திருப்பூர் மாஸ்கோ நகர் பெரியார் திடலில் முழு நாள் நிகழ்வாக தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா எழுச்சியோடு நடைபெற்றது. சனவரி 15: கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பெரியார் விருது வழங்கப்பட்டது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் விருதுடன், ரூ.5 லட்சத்திற்கான காசோலை, ஒரு சவரன் மதிப்பிலான பதக்கம் வழங்கி கவுரவித்தார். பெரியார் விருது பெற்ற கழகப் பொதுச்செயலாளருக்கு ராயப்பேட்டையில் கழகத் தோழர்கள், தோழமை இயக்கத்தினர் பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். சனவரி 22: பெரியார் குறித்து கண்மூடித்தனமாக அவதூறுகளை பரப்பி வந்த சீமான் வீட்டை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி எச்சரித்தது. இதில் திராவிடர் விடுதலைக் கழகம் பெருந்திரளாகப் பங்கேற்று சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. சனவரி 26: பெரியார் விருது...

பேரெழுச்சியோடு நடைபெற்ற பரப்புரைக் கூட்டங்கள்!

பேரெழுச்சியோடு நடைபெற்ற பரப்புரைக் கூட்டங்கள்!

சேலம்: 18/03/2025 வீரகனூர் பேருந்து நிலையம், பெரம்பலூர் வேப்பந்தட்டை பேருந்து நிறுத்தம், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் பரப்புரை நடைபெற்றது. பறை இசை மற்றும் பகுத்தறிவு பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. ஆத்தூர் நகர செயலாளர் கணபதி, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரைகணபதி, சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, சேலம் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரபாகரன், பெரம்பலூர் சுதாகர் ஆகியோர் தலைமை வகித்தனர். சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், சேலம் மாநகர செயலாளர் ஆனந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், ஆத்தூர் நகர தலைவர் மகேந்திரன், தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன், ஆத்தூர் நகர செயலாளர் கணபதி, சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரை தாமோதரன் ஆகியோர் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி உரை...

பயணத்தில் பங்கேற்ற தோழர்களுக்கு பாராட்டு

பயணத்தில் பங்கேற்ற தோழர்களுக்கு பாராட்டு

தமிழர்களின் தன்மான மீட்பர் தலைவர் பெரியார் மீது அவதூறுகளை வீசி, தமிழ்நாட்டில் அவரைத் தனிமைப்படுத்தலாம் என்ற சதித்திட்டத்தை முறியடிக்கவும், அந்தத் துரோகக் கும்பலின் முகத்திரையைக் கிழித்தெறிந்து, மக்களிடத்தில் பெரியாரைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடும் திராவிடர் விடுதலைக் கழகம் இந்த பயணத்திற்குத் திட்டமிட்டது. தன்னல மறுப்போடு, பெரியார் லட்சியத்தில் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் கழகத் தோழர்கள் ஆர்வத்துடன் இந்த பயணத்தில் பங்கேற்றனர். கொளுத்தும் வெயிலில் தங்களை வருத்திக் கொண்டு நாள் ஒன்றுக்கு குறைந்தது நான்கு கூட்டங்கள் வழியாக பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்தித்துப் பரப்புரை, நூல் விற்பனை, நிதி திரட்டல் என்ற பணிகளை ஏற்று ‘பெரியார் பணி செய்வதே என் கடன்’ என்ற லட்சிய வெறியோடு ஒரு வாரகாலம் பயணித்த கழகச் செயல் வீரர்களை இம்மாநாடு பாராட்டுகிறது, மகிழ்கிறது.இந்தப் பயணத்தில் தோழர்கள் செலுத்திய உழைப்பு வீண் போகாது; வரலாற்றில் பதியப்படும் என்று இந்த மாநாடு பெருமை அடைகிறது. பெரியார் முழக்கம் 27032025இதழ்

அரியலூரில் கழகம் நடத்திய ஒரு நாள் பயிற்சி வகுப்பு

அரியலூரில் கழகம் நடத்திய ஒரு நாள் பயிற்சி வகுப்பு

20.02.21 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டம் இணைந்து நடத்திய ஒருநாள் பயிலரங்கம், ஆண்டிமடத்தில் பெரியார் – அண்ணா அரங்கில் நடைபெற்றது. கடலூர் மாவட்ட அமைப்பாளர் அ. மதன்குமார், கடவுள் மறுப்பு கூறி நிகழ்வை தொடங்கி வைத்தார். முதல் நிகழ்வாக தலைமைக் குழு உறுப்பினர் மயிலாடு துறை ந. இளையராஜா, ‘பயிலரங்கத்தின் நோக்கம் மற்றும் நடப்பு அரசியல்’ குறித்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து ‘திராவிட இயக்க வரலாறு’ குறித்து தஞ்சை மாவட்டத் தலைவர் சாக்கோட்டை இளங்கோவன் உரையாற்றினார். மதிய உணவுக்குப் பிறகு 2.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட தலைவர் துரை. தாமோதரன், அறிவியல் பூர்வமாக கடவுள் மறுப்பு நிகழ்ச்சிகளை கலை வடிவில் நடத்தினார். அதனைத் தொடர்ந்து தலைமைக் குழு உறுப்பினர் ந. அய்யனார், ‘அமைப்பாவோம்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘பெரியாரிய பார்வையில் அம்பேத்கர்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். பயிலரங்கத்தில்...

கவரபாளையத்தில் ஜாதி மறுப்பு இணையர்கள் அறிமுக விழா

கவரபாளையத்தில் ஜாதி மறுப்பு இணையர்கள் அறிமுக விழா

ஆண்டி மடம் கழகத் தோழர் இராவணகோபால் தாயார் சரோஜா அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் 22.6.2019 அன்று கவரப்பாளையம் வெங்கடேசுவரா திருமண மண்டபத்தில் மாலை 6 மணியளவில் நடைபெற்றது. நினைவு நாளில் ஜாதி – தாலி எதிர்ப்புடன் ஏற்கெனவே மறுமணவிழா நடத்திக்  கொண்ட இரா. இராவணகோபால்-நா. கோமதி மற்றும் இராவண கோபாலின் அண்ணன் மகள் ப. ஓவியா- இரா. விஜயகுமார் இணையர்களின் மணவிழா அறிமுக நிகழ்வும் நடந்தது. மறுமணத்தை முன் மொழிந்து ஏற்பாடு செய்த கோமதியின் மகன் மாணவர் கழகத் தோழர் பிரபாகரன் (படத்தில் கோமதியின் அருகில் நிற்பவர்) ஆவார். தி.க. மண்டல செயலாளர் தி. காமராஜ் தலைமையில் நடந்த நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார். முன்னதாக நாத்திகனின் ‘மந்திரமல்ல தந்திரமே’ அறிவியல் நிகழ்ச்சி நடந்தது. செ.பூ. அறிவழகன் (தி.மு.க.), க.நா. ஆராவமுதன் (தி.மு.க.) முன்னிலை வகித்தனர். பத்மநாபன், வழக்குரைஞர் துரை. அருண்,...

கடலூர் -அரியலூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல்

கடலூர் -அரியலூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல்

08.01.2019 திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக கடலூர் மற்றும் அரியலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் கருவேப்பிலங்குறிச்சி வசந்தா திருமண நிலையத்தில் நடைபெற்றது.  நிகழ்வுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்றார்.  முதல் நிகழ்ச்சியாக கழகத்தின் பொருளாளர் திருப்பூர் துரைசாமி கழகக் கொடியை ஏற்றினார். தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகப் பெரியார் சிந்தனைப் பலகை தலைவரால் திறந்து வைக்கப்பட்டது. கடவுள் மறுப்பை மதன்குமார் கூறினார். அறிவழகன் வரவேற்புரையாற்றினார். துவக்க உரையாக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமிதிராவிடர் விடுதலை கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும் பெரியாரியல் குறித்தும் பேசினார். தமிழ்நாடு மாணவர் கழக மாநிலச் செயலாளர் பாரி சிவக்குமார், பொருளாளர் திருப்பூர் துரைசாமி, சூலூர் பன்னீர்செல்வம், அய்யனார், பழனிவேல் (ஆசிரியர்), முத்துகிருஷ்ணன், அரியலூர் மாவட்ட அமைப்பாளர் கோபால் இராவணன், நட பாபு அம்பேத்கர், கண்மணி, நட பாரதிதாசன் ஆகியோர் பேசினர். கடலூர் மாவட்ட செயல்பாடுகள் குறித்து விவரிக்கப்பட்டது. அடுத்த கட்ட...