Category: நிமிர் நேர்காணல்
பெரியார் கலைத்துப் போட்ட ஜாதி அமைப்பை – ஜாதிய சக்திகள், மறுகட்டுமானம் செய்து வரும் நிலையில், நாமோ, உடனடி எதிர்வினை யோடு நிறுத்திக் கொள்கிறோமே தவிர, நம்மிடம் தொலைநோக்குத் திட்டம் இல்லை எனும் ஆழமான சிந்தனையை கவலையோடு முன் வைக்கிறார், சூழலியல் எழுத்தாளர் நக்கீரன். அவரது பேட்டி: நக்கீரன், மிக அரிதாகச் சூட்டப்படுகிற பெயர் அல்லவா? “ஆமாம். இதைப் புனைபெயர் என்றே பலரும் நினைக்கிறார்கள். எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் அழகான தமிழ்ப் பெயர்களோடு பௌத்த, சமண, மார்க்சிய ஆளுமைகளின் பெயர்களும் சூட்டப்பட்டிருக்கின்றன. இதில் எனக்கு உட்பட பலருக்கும் பெயர் சூட்டியவர் பெரியார். என் பெற்றோரின் திருமணமே அவருடைய தலைமையில்தான் நடந்தது. எழுத்துலகுக்கு வந்தபோது ‘நக்கீரன் கோபால்’ பிரபலமாக இருந்ததால், பலரும் பெயரை மாற்றுமாறு வற்புறுத்தினர். ஆனாலும் நான் மறுத்துவிட்டேன்”. “எழுத்துலகுக்குள் வந்து சேர்ந்த கதையைச் சொல்லுங்கள்…” “அய்ந்தாம் வகுப்பில் ‘கல்கண்டு’ பத்திரிகையின் ‘தமிழ்வாணன் கேள்வி பதில்’ பகுதிக்கு தபால் கார்டில் கேள்விகள்...
1940-50களில் சென்னையில் பெரியார் இயக்கச் செயல்பாடுகள் எப்படி இருந்தன? 14 வயதில் பெரியாரிடம் அறிமுகமாகி பெரியார் இயக்கத்தில் இணைத்துக் கொண்டு 23ஆவது வயதில் பெரியார் ஆணையை ஏற்று தமிழக அரசுப் பணியில் சேர்ந்தவர் மா.கோபாலன். திருத்தணி வட்டம் சிறுமணவூரைச் சேர்ந்தவர். அரசு துணைச் செயலாளராகவும், கடைசியில் புதிய பல்கலைக் கழகங்களுக்குத் தனி அலுவலராகவும் பணியாற்றி, ஓய்வுக்குப் பிறகு சைவப் பற்றாளராக மாறியவர். குடந்தை அருகே திருப்பனந்தாள் சைவ மடத்தில் மடத்தின் சைவ மடாதிபதியிடம் நெருக்கமாகி, சைவச் சொற்பொழிவுகளை நடத்தத் தொடங்கினார். பெரியாரியலிலிருந்து சைவப் பற்றாளராக மாறிய நிலையிலும், பணி ஓய்வுக்குப் பிறகு வாழ்வின் இறுதி காலத்தில் தனது மரணத்துக்கு முன் ‘ஆடும் பருவத்தில் என்னை ஆட்கொண்ட பெரியார்’ என்று பெரியார் இயக்கத்திடம் தனக்கிருந்த ஈடுபாட்டை நெகிழ்ச்சியோடு பதிவு செய்துள்ளார். வாய்மொழி வரலாறாக வெளி வந்துள்ள இந்த நூலில், அக்காலத்தில் சென்னையில் திராவிடர் கழகத்தின் செயல்பாடுகளையும் களப்பணியாற்றிய பெரியார் தொண்டர்கள், அவர்கள் நடத்திய...
நீதிமன்றத்தில் விசாரிக்கும் போது சாட்சி, ஆதாரம் உள்ளிட்ட குற்றத்தைப் பற்றி மட்டும்தான் பார்க்க வேண்டும்; குற்றத்திற்கான தண்டனையை முடிவு செய்யும் போது குற்றத்தை யும், குற்றவாளியையும் (வயது, முதல் குற்றமா? எந்த சூழலில் குற்றம் நடந்தது போன்ற காரணிகள்) பார்க்க வேண்டும்; முன்விடுதலை செய்யும் போது குற்றவாளியை மட்டுமே பார்க்க வேண்டும்; செய்த குற்றத்தைப் பார்க்கக் கூடாது என்பவை எல்லாம் உலகம் முழுவதும் ஒத்துக் கொள்ளப் பட்ட நடைமுறைகள். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, தன் வாழ்நாளில் 15 ஆண்டுகள் சிறையில் கழித்தவர் தியாகு. சிறைப்பட்டோரின் உரிமை, சிறைகளின் நிலைமை, அரசு எந்திரங்களின் மனோபாவம் பற்றி தியாகு பேசுகிறார். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நீண்டகால சிறை வாசிகளை விடுதலை செய்வதில் பாகுபாடு காட்டக் கூடாது என்ற கோரிக்கை எழுப்பப் படும் நேரத்தில் இந்த நேர்காணல் முக்கியத்துவம் பெறுகிறது. கேள்வி: எந்த மாநிலத்தில் சிறைச் சாலை சீர்திருத்தங்கள் சிறப்பாக இருக்கின்றன என்று கருதுகிறீர்கள்?...
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற நடன-இசைக் கலைஞர் பாலசரஸ்வதி. பார்ப்பனரல்லாத சமுதாயத்தில் பிறந்தவர். வழிவழியாகக் கையளிக்கப்பட்ட பரதக் கலையை சாஸ்திரத்துக்கு உள்ளே அடைக்கும் முயற்சியை எதிர்த்தவர். இன்று அவரது மாணவர்கள் உலக நாடுகள் பலவற்றிலும் பரவி, பாலசரஸ்வதியின் புகழை உலகுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பாலசரஸ்வதியின் நூற்றாண்டு கொண்டாடப்படும் வேளையில், பாலசரஸ்வதி வரலாற்றை ‘பாலசரஸ்வதி: அவர் கலையும் வாழ்வும்’ நூலாக எழுதியவரும் அவருடைய மருமகனும் (மகளை மணந்தவர்) மிருதங்கக் கலைஞருமான டக்ளஸ் எம். நைட்டுடன் ஒரு பேட்டி. பாலசரஸ்வதி உங்களுக்கு எப்படி அறிமுகமானார்? 1968-ல் அமெரிக்காவின் வெஸ்லீயன் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந் தேன். சிறு வயதிலிருந்தே எனக்கு நாடகத்தின் மீது ஆர்வம். கூடவே, மற்ற கலை வடிவங்கள் மீதும் மற்ற கலாச்சாரங்களின் இசை வடிவங்கள் மீதும் எனக்கு ஆர்வம் இருந்தது. எனது ஆசிரியர்களில் தஞ்சாவூர் ரங்கநாதனும் ஒருவர். பாலாம்மாவின் தம்பி அவர். ஒருமுறை ரங்கநாதனைப் பார்க்க அமெரிக்காவுக்கு பாலாம்மா வந்திருந்தார். அப்போதுதான் அவரைச்...
91ஆம் அகவையை எட்டியுள்ள கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன், இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் திராவிட இயக்க பத்திரிகையாளர்களிலேயே மிகவும் மூத்தவர். மாணவர் பருவத்திலேயே திராவிட இயக்கக் கொள்கையில் ஈர்க்கப்பட்டு பத்திரிகையாளராக திராவிடர் கழக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரபூர்வ ஏடுகளிலே பணியாற்றியவர். தலைவர்களோடு நெருங்கிப் பழகியவர். நாளேடுகள், வார இதழ்கள், இலக்கிய இதழ்கள், எளிய பொதுக் கூட்ட மேடைகள், குடியிருப்புப் பகுதிகளிலேயே உருவாக்கிய படிப்பகங்கள், நாடகம், கலை நிகழ்ச்சிகள், முடிதிருத்தகங்கள், சைக்கிள் கடைகள், தேனீர்க் கடைகள் வழியாக எளிய மக்களிடம் கருத்துகளைப் பரப்பிய பெருமை திராவிடர் இயக்கத்தினருக்கு உண்டு. பிறகு திரைத் துறையிலும் கால் பதித்தது. திராவிட இயக்க இதழ்களை நடத்தியவர்கள் செல்வந்தர்கள் அல்ல; அவர்களின் மூலதனம் கொள்கை வலிமையும் மக்களை கிளர்ந்தெழச் செய்யும் எழுத்துக்களும் தான். கடும் பொருளாதார நெருக்கடிகளோடு மூச்சுத் திணறிக் கொண்டு வந்தன அந்த ஏடுகள். அவை அன்று தமிழினத்தின் சுவாசக் காற்றுகள் என்றே கூறலாம். இந்த ஏடுகளில்...
சங்கரை காதலிச்சு திருமணம் செய்த உடனே ஒரு கனவோட வாழ்க்கைய துவங்கீருப்பீங்க. ஆனா இந்த சமூகம் அந்தக் கனவை சிதைச்சிருச்சு. சங்கர் இல்லாத நாட்கள் எப்படி இருக்கு ? முதலில் அது நடக்கும் போது என்னால் கொஞ்சம் கூட ஏத்துக்க முடில. வாழ்க்கை முழுவதும் கூட இருப்பான் வேற எதுவுமே வேண்டாம்னுதான் எல்லாத்தையும் விட்டுட்டுத் தான் நான் சங்கர் கூட வந்தேன். அப்படி வரும் போது எதுவேணும்னு நெனச்சு வந்தேனோ, அது கடைசி வரைக்கும் கூட இல்லைனு தெரியும் போது சுத்தமா ஏத்துக்கவே முடியல. இதுக்கு முழுக்க முழுக்க காரணம் இந்த சாதீய சமூகம் மட்டும்தான். உங்க பார்வையிலும் பேச்சிலும் ஒரு தன்னம்பிக்கை தெரியுது, இனி வரும் காலத்தை எப்படி எதிர்கொள்ள விரும்பறீங்க? என்னோட நிலைமைக்கு முழுக்க முழுக்க காரணம் ஜாதியம்தான் அதனால் அதனை எதிர்த்து போராடனும் என்னோட நிலைமை வேற யாருக்கும் வரக்கூடாது. அதற்காக இந்த தலைமுறையில் இருக்கும் தாத்தா...
தமிழ் தேசியம் என்று நாம் இன்றைக்குச் சொல்ல விரும்புகிறோம், சனநாயக நாடுகளிலே ஏற்பட்ட சிந்தனை மாற்றத்தின் விளைவாக தேசிய இனம் என்ற எண்ணம் பிறந்தது. தேசிய இன சிந்தனையே 200 ஆண்டுகளுக்குள் என்று சொல்கிறார்கள். இல்லை அதற்கு முன்னாலேயே அதற்கான குறுவித்துக்கள் தமிழ் மண்ணிலே புதைந்து கிடந்தது. மூன்று நாள் மழை பெய்தால் நான்காம் நாள் புல் தலை நீட்டுகிறது. ஏனென்றால் வித்து மண்ணில் கிடந்திருக்கிறது. தமிழ் மரபில் அந்த குறுவித்துக்கள் உண்டு. ஏனென்றால் இங்கு சேரநாடு, சோழ நாடு, பாண்டிய நாடு இப்படி இருந்தது. திருநெல்வேலி கீழ் வேம்பநாடு. அந்தப் பக்கம் போனால் வல்லநாடு. சுத்தமல்லி பக்கம் போனால் மேல் வேம்பநாடு. பாளையம்கோட்டை கீழ் களகொற்றம். இப்படி நாடுகள் நாடுகளா இருந்ததினால் இளங்கோவடிகள் தமிழ்நாடு என்ற சொல்லை முதன்முதலில் பயன் படுத்தினார். சேர நாடு இல்ல, சோழ நாடு இல்ல, பாண்டிய நாடு இல்ல, தமிழ்நாடுன்னு சொல்லு. இதுதான் முதல்...
(மஞ்சள் நாடகத்துக்கு உரையாடல்களை எழுதிய ஜெயராணி நாடகம் உருவானதன் பின்னணி ஜாதி ஒழிப்புக்கான இயக்கத்தின் தேவையை விளக்கி“நிமிர்வோம்” இதழுக்கு அளித்த பேட்டி) ஒரு எழுத்தாளரான நீங்கள் ஜெய்பீம் மன்றம் என்ற ஓர் அமைப்பைக் கட்டமைக்க வேண்டிய சூழல் எவ்வாறு ஏற்பட்டது? முதலில் ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். ஓர் அமைப்பையோ இயக்கத் தையோ உருவாக்க வேண்டுமென்பது எனது எதிர்கால செயல்திட்டங்களில் ஒன்றாகக் கூட இருக்கவில்லை. எழுத்தாளர் என்று சொல்வது கூட பரந்துபட்ட அடையாளம். பத்திரிகையாளர் என்ற அடையாளமே எனக்கு சரியானதாக இருக்கும். நான் எழுத வந்த 18 ஆண்டுகளில் ஒரு செய்தியாளராக எத்தனையோ அமைப்புகளோடு பயணப்பட்டிருக்கிறேன். போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என அப்போதெல்லாம் சிறிய பெரிய அளவுகளில் என்ன செயல்பாடுகள் நடந்தாலும் என்னுடைய எஸ். எல். ஆர் கேமராவோடு என்னை பார்க்க முடியும். என் சக பத்திரிகையாளர்கள், தோழிகள் வெவ்வேறு அமைப்புகளோடு இணைந்திருந்த காலகட்டம் அது. ஆனாலும் எனக்கு எந்த அமைப்பிலும்...
70க்கும் மேற்பட்ட பெரியாரியல் நூல்களை எழுதிக் குவித்துள்ள பேராசிரியர் நன்னன் அவர்களுக்கு இப்போது வயது 93. “முதுமைக்கான தளர்வுகள் இருந்தாலும் மூளை மட்டும் 24 மணி நேரமும் பெரியார் மற்றும் தமிழ் குறித்து அசை போட்டுக் கொண்டே இருக்கிறது” என்கிறார். சில பெயர்களை உடனே நினைவுக்குக் கொண்டு வருவதில் மறதி குறுக்கிட்டாலும் ஊன்றி நிற்கும் கொள்கை உணர்வுகள் சொற்களாக வெடிக்கின்றன. சென்னையில் உள்ள அவரது ‘சிறுகுடில்’ இல்லத்தில் ‘நிமிர்வோம்’ பேட்டிக்காக சந்தித்தோம், “மய்யமான பிரச்சினைகளை விட்டு விலகி நான்பேசிக்கொண்டேஇருப்பேன். நீங்கள்தான் மீண்டும் தொடங்கிய இடத்துக்கு என்னை இழுத்து வரவேண்டும்” என்ற நிபந்தனையோடு உரையாடத் தொடங்கினார். உரையாடல் 3 மணி நேரம் வரை நீண்டது. உண்மை பெரியாரிஸ்டுகளுக்கே உரிய தன்னடக்கம், மிகைப்படக் கூறாமை, தெளிவான சிந்தனை என்ற தனித்துவத்தோடு அவர் நிகழ்த்திய உரையாடல்களின் தொகுப்பு: கேள்வி: திராவிடர் இயக்கம் நோக்கி ஈர்க்கப்பட்டது எப்படி? பதில்:அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நான் மாணவராக சேர்ந்தபோது எனக்கு திராவிட...