ஊடகவியலாளர்களிடம் முதல்வர் கேள்வி தமிழ்நாட்டைப் போல் சாதனைகள் வேறு எந்த மாநிலத்திலாவது உண்டா?
இங்கு ஏராளமான ஊடகவியலாளர்கள் இருக்கிறீர்கள். 11.19 சதவிகிதம் வளர்ச்சி என்பதை, தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்தால் சாதிக்க முடிந்திருக்கிறது?அதுவும் எப்படிப்பட்ட சூழலில் இதை சாதித்திருக்கிறோம்? ஜனநாயகத்திற்கும், கூட்டாட்சிக்கும்சிறிதும் மதிப்பு தராத பா.ஜ.க. ஆட்சி ஒன்றியத்தில் ஆளுகிறது. எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களை, எந்தளவிற்கு வஞ்சகத்துடன், ஓரவஞ்சனையுடன் அவர்கள் Approach செய்கிறார்கள் என்று நான் உங்களுக்கு விளக்கி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, உங்களுக்கே அது நன்றாகத் தெரியும்.
ஆளுநர்கள் மூலமாக நிர்வாகச் சிக்கல்களை ஏற்படுத்துவதில் தொடங்கி, செயற்கையான நிதிச் சுமையை உருவாக்கி மாநிலங்களை முடக்க நினைப்பது வரைக்கும், அத்தனை செயல்களையும் செய்து கொண்டிருக்கிறார்கள். இது மட்டும்தான் அவர்களுக்குத் தெரிந்த Politics.
ஆனால், இதையெல்லாம் அரசியல் தளத்திலும், ஆட்சி அதிகாரத்திலும் எதிர்கொண்டு, “வளர்ச்சி அரசியல் என்றால், தமிழ்நாட்டைப் பாருங்கள்” என்று சொல்லும் அளவிற்கு Development Politics–க்கானஅடையாளமாக தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது. அதுவும் ஒரு தரப்புக்கான வளர்ச்சி இல்லை; ‘எல்லாருக்கும் எல்லாம்’ என்ற பரந்துபட்ட வளர்ச்சி! பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், உழவர்கள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், தொழில் முனைவோர், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், திருநர்கள், மாற்றுத்திறனாளிகள் என்று எல்லோரையும் ‘Empower’ செய்யும் Politics–யை நாங்கள் முன்னெடுத்து இருக்கிறோம்.
நாங்கள் செய்திருப்பது மாதிரியான திட்டங்களை வேறு எந்த மாநிலத்திலாவது செய்து இருக்கிறார்களா? ‘Growth’ சாதாரணமாக வந்துவிடுமா? இத்தனை திட்டங்களையும் வெற்றிகரமாக செயல்படுத்துவதால்தான் 11.19 சதவிகிதம் ‘Growth’ சாத்தியமாகியிருக்கிறது!
தமிழ்நாட்டில் எந்தக் குடும்பத்தை எடுத்துக்கொண்டாலும், அவர்களில் ஒருவராவது நம்முடைய அரசின் திட்டங்களால் பயனடைந்து கொண்டிருப்பார்கள்! அதனால்தான், ஆட்சிக்கு ஆதரவான மனநிலையில் மக்களை இன்றைக்கு நாங்கள் சந்திக்கிறோம்! தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சியும், தனித்துவமும், உண்மையான வளர்ச்சி அரசியல் என்றால் என்ன என்று இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு காண்பிக்கும் செயல்பாடுகளும் பா.ஜ.க.வை கடுமையாக எரிச்சல் அடைய வைக்கிறது. ஆனால், அவர்களின் சதி அரசியல் Expose ஆகி, அவமானப்பட்டு, அசிங்கப்பட்டு நிற்கிறார்கள்.
பா.ஜ.க.வின் ‘Pattern’ என்ன என்று தி.மு.க. மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாடே உணர்ந்திருக்கிறது. அவர்கள் மேல் மக்களுக்கு நம்பகத்தன்மை கிடையாது. மற்ற மாநிலங்களில் கட்சிகளை மிரட்டி, ஆட்சிகளைக் கவிழ்த்து, தங்களின் அரசைக் கொண்டு வரப் பயன்படுத்திக் கொண்ட‘வாஷிங் மெஷினை’, கொண்டு வந்து கூட்டணி அமைத்திருக்கிறார்கள். அவர்களின் N.D.A. கூட்டணி என்பது முழுக்க முழுக்க ஊழல்வாதிகளை மிரட்டி அமைக்கப்பட்டுள்ள கூட்டணிதான்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் பல பேர் ரெய்டுகளுக்கு ஆளானவர்கள். 10 பேர் மேல் D.V&A.C–யில் வழக்குகள் இருக்கிறது. ஆனால், கூட்டணிக்காக அவர்களை இப்போது பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், முன்னாள் அமைச்சர்கள் சில பேர் மேல் F.I.R. கூட பதிவு செய்ய விடாமல் நிறைய ஆண்டுகளாக ஆளுநர் மூல மாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.
இந்த இலட்சணத்தில், இப்போது E.D., I.T., C.B.I. ஆகியவற்றை வைத்து எங்களையும் மிரட்டலாமா என்று பார்க்கிறார்கள். என்னதான் பா.ஜ.க. E.D., I.T., C.B.I. என்று தன்னுடைய படைப் பரிவாரத்தை அழைத்து வந்தாலும், அதை ஒரு கை பார்க்க நாங்களும் தயாராகத் தான் இருக்கிறோம்.
E.D. இதுவரைக்கும் பதிவு செய்த 8000-க்கும் அதிகமான வழக்குகளில் எத்தனை வழக்குகள் முழுமையாக நடைபெற்றிருக்கிறது? அவர்களின் உண்மையான ‘Conviction rate’ என்ன? ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளானவர்கள் எல்லோரும் உடனடியாக யாருடன் கூட்டணி சேருகிறார்கள்? புலனாய்வு முகமைகளை இவ்வளவு மலிவாக பயன்படுத்திதான் பா.ஜ.க. அரசியல் சதுரங்க வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது. அதற்கு N.D.A. கூட்டணி என்று பெயர்.
மக்கள் பா.ஜ.க.வை நம்ப வேண்டும் என்று, பழனிசாமி போன்ற ஆமாம் சாமியை பா.ஜ.க.வின் கிளைக் கழகச் செயலாளராக வைத்துக் கொண்டு ‘டப்பா எஞ்சின்’ எடுத்துக் கொண்டு உள்ளே வர நினைக்கிறார்கள்.
பாஜக நுழைந்தால்
பா.ஜ.க. உள்ளே நுழைந்தால், எப்படி யெல்லாம் நடந்துகொள்வார்கள் என்பதைதான் இப்போது அண்மையில் மகாராஷ்டிராவில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மாநிலக் கட்சியை உடைத்து ஆட்சிக்கு வந்த அவர்கள், இப்போது பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கான 5 விழுக்காடு இடஒதுக்கீட்டை இரத்து செய்திருக்கிறார்கள்.
“மகளிர் உதவித்தொகை திட்டத்தில் 28 இலட்சம் பெண்களை நீக்கியிருக்கிறார்கள். இதைத் தான் தமிழ்நாட்டிலும் செய்ய நினைக்கிறார்கள். அதற்கு அவர்கள் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் ‘ட்ரோஜன் குதிரை’ தான் அ.தி.மு.க. அதனால்தான் பழனிசாமி அவர்கள் வழங்கும் எந்த வாக்குறுதியையும் மக்கள் நம்பத் தயாராக இல்லை. மண்குதிரையை நம்பி யாராவது ஆற்றில் இறங்குவார்களா? நிச்சயம் மாட்டார்கள்!
எங்களைப் பொறுத்தவரைக்கும் எங்களின் இலட்சிங்களும் கடமைகளும் மிகவும் பெரியது. அதை நோக்கிய பயணம்தான் எங்களுடைய தேர்தல் வெற்றிகள். “எல்லாருக்கும் எல்லாம்”, “எங்கும் தமிழ் – எதிலும் தமிழ்”, “அனைத் துத் துறை வளர்ச்சி – அனைத்து மாவட்ட வளர்ச்சி” என்று மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
அடுத்து, ஒன்றுபட்ட இந்தியாவில், மாநிலங்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தந்து, உண்மையான கூட்டாட்சிக் கருத்தியலை நிறுவ வேண்டும் என்று எங்களின் அடுத்த கட்டப் பயணத்தையும் தொடங்கியிருக்கிறோம்”.
வளர்ச்சி அரசியலுக்கு அடையாளம் தமிழ்நாடு
என்.டி.ஏ வாஷிங்மெஷின் கூட்டணி
பெரியார் முழக்கம் இதழ்26022026
