எதையும் ஏன்? என்று கேள்வி கேள்!குழந்தைகள் மகிழ்வு பழகுமுகாம்
தமிழ்நாடு மாணவர் கழகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் மன்றம் இணைந்து நடத்திய குழந்தைகள் பழகு மகிழ்வு ஒரு நாள் முகாம் 30.05.2026 சனிக்கிழமை கொளத்தூர் உக்கம்பருத்திக்காடு பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. சுகந்தன் பிரபாகரன் (தமிழ்நாடு மாணவர் கழகம்) தலைமை வகித்தார். செ.யாழ் இன்பன் (தமிழ்நாடு மாணவர் கழகம்) முன்னிலையில் நடைபெற்றது. முதல் வகுப்பாக தன்னை அறிதல் என்ற தலைப்பில் `சிறார் நண்பன்’ ஆனந்த் குழந்தைகள் தாங்கள் யார்? தங்களின் அடையாளம் என்ன? வாழ்வில் தாங்கள் அடையவேண்டிய இலக்குகளை எவ்வாறு திட்டமிடுவது? என்பது குறித்து ஒரு கலந்துரையாடலாக, செயல்பாடுகளுடன் வகுப்பு நடைபெற்றது. ஏனென்று கேள்வி கேள்? என்ற தலைப்பிலான வகுப்பை தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி நடத்தினார். சமூகத்தில் நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை கேள்வி கேட்காமல் அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது. ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளை எழுப்பி அதற்கு பதிலையும் பெற வேண்டும் என்பதனை குழந்தைகள்...
