Category: பெரம்பலூர்

முதல் கட்ட சந்திப்பில் கழகத் தோழர்கள் உற்சாகம் கிராமங்களில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

முதல் கட்ட சந்திப்பில் கழகத் தோழர்கள் உற்சாகம் கிராமங்களில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

கழகத் தோழர்களை பொறுப்பாளர்கள் சந்தித்து நிகழ்த்திய கலந்துரையாடல் நிகழ்வுகள் தோழர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்துள்ளன. கிராமங்களில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை நடத்தவும், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்கு உறுப்பினர்கள் சேர்க்கவும் தோழர்கள் முனைப்புடன் செயல்பட முன் வந்துள்ளனர். முதல்கட்டப் பயணத்தில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன், தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் பங்கேற்றனர். விரைவில் இரண்டாம் கட்டப் பயணம் தொடங்கவிருக்கிறது. பயணம் குறித்து விழுப்புரம் அய்யனார் தொகுத்து அனுப்பியுள்ள செய்தி. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெரும் தொற்றால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்ததோடு, இயக்க செயல்பாடுகளும் ஒரு சில நிகழ்வுகள் தவிர்த்து இணைய வழியில் மட்டுமே நடைபெற்று வந்தன. இயக்கப் பணிகள் சுணக்கம் ஆகிவிட்டன. இதனைப் போக்கும் வகையில் கழகப் பணிகளை தீவிரப்படுத்தும் கழக ஏடான, புரட்சிப் பெரியார் முழக்கம், நிமிர்வோம் ஏட்டிற்கு சந்தா சேர்த்திடவும், முதல் கட்டமாக 18.11. 2021 முதல் 20.11.2021 வரை...

கழக ஏடுகளுக்கு சந்தா  சேர்ப்பதில் தோழர்கள் தீவிரம் மாவட்டக் கலந்துரையாடல்களில் எழுச்சி டிசம்பர் 24 கருஞ்சட்டைப் பேரணிக்கு தயாராகிறார்கள்

கழக ஏடுகளுக்கு சந்தா சேர்ப்பதில் தோழர்கள் தீவிரம் மாவட்டக் கலந்துரையாடல்களில் எழுச்சி டிசம்பர் 24 கருஞ்சட்டைப் பேரணிக்கு தயாராகிறார்கள்

டிசம்பர் 24ஆம் தேதி திருச்சி கருஞ்சட்டைப் பேரணிக்கு தயாராகி வரும் கழகத் தோழர்கள் கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழுக்கு சந்தா சேர்க்கும் இயக்கத்திலும் முனைப்போடு  செயல்பட்டு வருகிறார்கள். மாவட்டக் கழகத் தோழர்களுடன் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் நேரில் சந்தித்து கலந்துரையாடல் கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர். முதல் கட்டமாக பயணம் நவம்பர் 21ஆம் தேதி காலை ஈரோடு வடக்கு மாவட்டம் கோபியில் காலை 11.30 மணியளவில் கழகத் தோழர் நிவாஸ் இல்லத்தில் நடந்தது. ஈரோடு வடக்கு மாவட்டமான கோபியில் 7 ஒன்றியங்களில் கழக அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. கல்வி உரிமை பரப்புரைப் பயணத்தைத் தொடர்ந்து ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத் தோழர்கள் பரப்புரைக்காக வாங்கியுள்ள வாகனத்தைப் பயன்படுத்தி கிராமம் கிராமமாக பரப்புரையை தொடர் நிகழ்வாக நடத்தி வருவது...

கழகம் எடுத்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள் தமிழகம் முழுதும் கழகத்தினர் எடுத்த பெரியார் விழாக்கள் பற்றிய தொகுப்பு:

கழகம் எடுத்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள் தமிழகம் முழுதும் கழகத்தினர் எடுத்த பெரியார் விழாக்கள் பற்றிய தொகுப்பு:

குமரி மாவட்டம் : திராவிடர் விடுதலைக் கழகம் குமரி மாவட்டம் நடத்திய பெரியார்140ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 16.09.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00மணிக்கு, விண்ணரசு வித்யா கேந்திரா, அழகிய மண்டபத்தில் தக்கலை எஸ்.கே.அகமது (பெரியாரியலாளர்) தலைமையில் கருத்தரங்கம் நடைப்பெற்றது. அனீஸ் வரவேற்புரையாற்றினார். விஷ்ணு “பெரியார் பார்வையில் கடவுள் மறுப்பு” என்னும் தலைப்பிலும், நீதி அரசர் (பெரியார் தொழிலாளர் கழகம், மாவட்டத் தலைவர்) “பெரியார் பார்வையில் இடஒதுக்கீடு” என்னும் தலைப்பிலும், தமிழ் மதி (மாவட்டச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்) “பெரியார் பார்வையில் நீட்” என்னும் தலைப்பிலும், போஸ் (மார்க்சியலாளர்) “பெரியார் பார்வையில் பொதுவுடைமை” என்னும் தலைப்பி லும், மகிழ்ச்சி (ஒருங்கிணைப்பாளர், பொது வுடைமை தொழிலாளர் கட்சி) “இளைஞர்கள் எதை நோக்கி பயணிப்பது” என்னும் தலைப்பிலும் உரையாற்றினர். பின்பு கலந்துக்கொண்ட அனைவரும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். சூசையப்பா (முன்னாள்மாவட்டத் தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்) நன்றி கூறமுடிவுற்றது. கூட்டத்தில் மஞ்சு குமார் (மாவட்டப்...

பயண அனுபவங்கள் : தோழர்களின் பகிர்வு

பயண அனுபவங்கள் : தோழர்களின் பகிர்வு

ஆகஸ்ட் 21 முதல் 26 வரை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய ‘தமிழர் கல்வி உரிமை மீட்பு’ப் பரப்புரைப் பயணத்தில் பங்கேற்ற தோழர்களின் பயண அனுவபங்கள். சென்னை குழுவின் அனுபவங்கள் பற்றி உமாபதி கல்வி உரிமைகள் குறித்த பரப்புரைப் பயணம் என்பதால் கலைக்குழுவுக்கு அதிக நேரத்தை எல்லா இடத்திலும் வழங்கினோம். எங்களுடன் வந்த விரட்டு கலைக் குழுவின் நாடகம் பரப்புரையின் நோக்கத்தை மக்களிடம் மிக எளிமையாக விளக்கியது. தங்களுக்குத் தேவையான செய்திகளைப் பேசுகிறார்கள் என்பதைப் புரிந்து எல்லா இடங்களிலும் மக்கள் தங்களது பேராதரவைத் தந்தனர். சென்ற இடங்களில் கடை வைத்திருந்த ஏழை, எளிய உழைக்கும் மக்கள், நம் நிகழ்ச்சியை முடித்த பிறகு குளிர்பானங்கள், பழங்கள் வாங்கிக் கொடுத்து பல இடங்களில் எங்களை உற்சாகப்படுத்தினர். ஒரு இடத்தில் தோழர்கள் பரப்புரையில் புத்தகம் விற்றுக்கொண்டிருந்தபோது நாடகத்தைப் பார்த்துவிட்டு, “எனக்குப் படிக்கத் தெரியாது, நீங்கள் ஏதோ நல்லது செய்கிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது” என்றுகூறி தனது...

பயண நிறைவு விழா மாநாடு பெரம்பலூரில் பேரெழுச்சி

பயண நிறைவு விழா மாநாடு பெரம்பலூரில் பேரெழுச்சி

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கல்வி உரிமை மீட்புப் பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழா மாநாடு ஆகஸ்ட் 26 அன்று பெரம்பலூரில் எழுச்சியுடனும் உணர்ச்சியுடனும் நடைபெற்றது. பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய வளாகம் முழுதும் பல்லாயிரக்கணக்கில் பொது மக்களும் கருஞ்சட்டைத் தோழர்களும் கடல்போல் திரண்டிருந்தது கண்கொள்ளாக் காட்சி. மாநாட்டுக்குப் பொறுப்பேற்று செயல்பட்ட பெரம்பலூர் மாவட்டத் தலைவர் துரை. தாமோதரன் தலைமை யிலான செயல் வீரர்கள் மிகச் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். நகரம் முழுதும் கழகக் கொடிகளும் மாநாட்டுக் கோரிக்கைகளை விளக்கும் பதாகைகளும் கம்பீரமாகக் காட்சி அளித்தன. மாநாட்டு மேடைக்கு ‘சமச்சீர் கல்வி நாயகன் கலைஞர் மேடை’ என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. மாலை 3 மணியிலிருந்தே 6 பயணக் குழுக்களும் பறை இசை ஒலி முழக்கங்களோடு பெரம்பலூர் நோக்கி வந்து நகரையே குலுக்கின. சென்னை பயணக்குழு தனது நிறைவு பரப்புரையை பெரம்பலூர் கூட் ரோடு சந்திப்பில் நிகழ்த்தியது. மாலை 6 மணியளவில் பறை...

கழக போராட்ட எதிரொலி – பெரம்பலூரில் வட்டாச்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பூஜை நிறுத்தம்

பெரம்பலூர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வெள்ளிகிழமையும் பார்ப்பனரை அழைத்து பூஜை செய்வது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதை கண்டித்து பெரம்பலூர் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்  12.05.2017 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்து துண்டறிக்கை விநியோகம் செய்யப்பட்டது. இதை அறிந்த பெரம்பலூர்  வட்டாட்சியர், பெரம்பலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக்கழக தலைவர் துரை. தாமோதரனை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி இனிமேல் பூஜை நடைபெறாது என்று உத்திரவாதம் அளித்ததை ஒட்டி போரட்டம் நிறுத்திக்கொள்ளப்பட்டது. கடந்த வெள்ளிகிழமை அன்று பூஜை நடைபெறவில்லை.

பாரூக் படுகொலை: பெரம்பலூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

பாரூக் படுகொலை: பெரம்பலூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

கழகத் தோழர் பாரூக் படுகொலையைக் கண்டித்து மார்ச் 25 மாலை 5 மணியளவில் பெரம்பலூர் பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம், மாவட்ட தலைவர் தாமோதரன் தலைமையில் நடைபெற்றது. என். செல்லத்துரை (தீண்டாமை ஒழிப்பு முன்னணி), திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் தமிழ் முத்து, குணராசு, வீ. ஞான சேகரன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), கிருட்டிணசாமி (அம்பேத்கர் அறக்கட்டளை), அக்ரி. ஆறுமுகம் (தி.க.), சித்தார்த்தன் (தி.க.) ஆகியோர் கண்டன உரையாற்றினர். பாரூக் குடும்பத்துக்கு தோழர்கள் ரூ.13,000 நிதியை மாவட்ட தலைவர் தாமோதரனிடம் வழங்கினர். பெரியார் முழக்கம் 30032017 இதழ்

நந்தினிக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் அரியலூர் 04022017

கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட அரியலூர் மாவட்டம் செந்துரை அருகில் சிறுகடம்பூர் தலித் சிறுமி நந்தினி படுகொலையை கண்டித்தும் 1.நந்தினியின் கூட்டுபாலியல் வன்கொலையின் முக்கிய குற்றவாளி இந்து முன்னனி மாவாட்ட தலைவர் ராஜசேகரனை உடனே கைது செய். 2. தமிழ்நாட்டில் தொடர்ந்து சாதி மத கலவரங்களை தூண்டிவரும் இந்துமுன்னனி அமைப்பை தடைசெய். 3.நந்தினி குடும்பத்திற்கு ஒருகோடி நிதியும் அரசு வேலையும் உடனே வழங்கு. 4.சாதி மத அமைப்புக்கு ஆதரவாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு எதிராகவும் சாதிய உணர்வோடு செயல்படும் காவல்துறை ஆய்வாளர் மற்றும் Dsp மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து உடனே கைது செய். 5. வழக்கினை CBI விசாரனைக்கு உத்திரவிடு. 6. நந்தினி குடும்பத்திற்க்கு உரிய பாதுகாப்பு வழங்கிடு. 7. மாவட்டதோறும் இயங்கும் தீண்டாமை ஒழிப்பு அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடு. 8. SC ST வழக்குகளை விசாரிக்க தனி நீதீமன்றம்...

அரியலூர் நந்தினிக்கு நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் அரியலூர் 04022017

அரியலூர் நந்தினிக்கு நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் அரியலூர் 04022017

அரியலூரில் ஆர்ப்பாட்டம். #Justice_for_nandhini அரியலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நந்தினிக்கு நீதிவழங்கு என்கிற முழக்கத்தோடு… தோழர் கோபால் ராமகிருஷ்ணன். தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம். இடம்:அண்ணாசிலை பின்புறம். பேருந்து நிறுத்தம். அரியலூர். நாள் :04.02.2017.சனிக்கிழமை. நேரம்:காலை.10.00மணிக்கு.

0

பெரம்பலூர் மாவட்டக் கலந்துரையாடல்

7-8-2015 அன்று, பெரம்பலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் அக்ரி ஆறுமுகம் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது