Category: தலைமை அறிக்கை

ஈழத்தமிழர்களுக்காக கழகத் தோழர்கள் நடத்திய போராட்டம்; 13-ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை!

ஈழத்தமிழர்களுக்காக கழகத் தோழர்கள் நடத்திய போராட்டம்; 13-ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை!

2013-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சென்னை மைலாப்பூர் தபால் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசி சேதம் விளைவித்ததாகக் கூறி, திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் தபசி குமரன், உமாபதி, ராவணன், மனோகரன், மாரிமுத்து, ஜான்சன் மற்றும் முகிலன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 13 ஆண்டுகளாக வழக்கு நடந்தது. தோழர்கள் நீதிமன்றம் சென்று வந்தனர். இது ஈழத் தமிழர்களுக்காக கழகத் தோழர்கள் நடத்திய போராட்டம். இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சென்னை சிங்காரவேலர் மாளிகையில் செயல்பட்டு வரும் 15-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போது, அரசு தரப்பில் ஆஜர்படுத்தப்பட்ட அனைத்து சாட்சிகளும் வழக்கறிஞர் திருமூர்த்தி அவர்களால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டனர். வழக்கில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும், குற்றம் சாட்டப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் அன்றாடம்...

தடை, அதை உடை!

தடை, அதை உடை!

இடிப்போம்‌ ஜாதிச் சுவரை! உடைப்போம் இந்த பழைய பூட்டை! ஒரே குரலில் முழங்குவோம்! “நாமெல்லாம் ஒன்று” இப்படி நாம் கூறினால் எதிர்ப்பு வருகிறது. நீ வேறு; நான் வேறு; எப்படி சமமாக முடியும்? இப்படித்தான் நமது சமூகம் கேட்கிறது. 3,000 ஆண்டுகளுக்கு மேலாக தீர்க்கப்படாத கணக்கு இது . இந்தத் தடை உடைய வேண்டாமா? இந்தக் கேள்வியுடன் தான் நாங்கள் உங்களிடம் வருகிறோம். கல்வியும் கால மாற்றமும் இளையோருக்கு இட ஒதுக்கீடு வழங்கியுள்ள வேலை வாய்ப்பு, சம வாய்ப்பு, சந்திப்பு காதலை நோக்கி நகர்த்துகிறது. ஆனால் ஜாதி அதற்குத் தடை போடுகிறது. வாழ வேண்டிய இளையோர் வாழ்க்கையையே தடுக்கிறது; இல்லையேல் ஆணவக் கொலை என்று வாழ்க்கையே முடிக்கிறது. ஜாதி பிறப்பிலிருந்து இறப்பு வரை ஒவ்வொரு இந்து மீதும் பிரிக்க முடியாமல் ஒட்டப்படும் ஸ்டிக்கர். ஜாதி விலை கொடுத்து பத்திரம் எழுதி வாங்கிய சொத்தா? பல்கலைக்கழகத்தில் படித்து வாங்கிய பட்டமா? இல்லை இல்லை;...

கட்சி மாறினால் பதவி, பணம்;  ஜாதி மாறினால் மரணமா?

கட்சி மாறினால் பதவி, பணம்; ஜாதி மாறினால் மரணமா?

மயிலாடுதுறை மாவட்டத்தில் சாத்தான்குடி கிராமத்தில் ஜாதி மாறி காதலித்த இளைஞர்களை ஜாதிவெறி உயிர்ப்பலி வாங்கியிருக்கிறது. பட்டியல் இனப் பிரிவைச் சேர்ந்த 19 வயது இளைஞரும் பிளஸ் டூ வகுப்பை முடித்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த 17 வயது பெண்ணும் காதலித்துள்ளனர். பெண்ணின் பெற்றோர்கள் ஜாதி வெறியுடன் எதிர்ப்பு தெரிவித்து பட்டியல் இனப்பிரிவு இளைஞர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பொறையார் காவல் நிலையத்தில் திங்கட்கிழமை இளைஞர் புகார் செய்திருக்கிறார்.செவ்வாய்க்கிழமை விடியற்காலை தங்களது மகளைக் காணவில்லை என்றும் பட்டியல் சமூகத்தின் இளைஞர் மீது சந்தேகம் இருப்பதாகவும் பெண்ணின் பெற்றோர்கள் புகார் செய்துள்ளனர். புகார் பதிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில் காதலர் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பெண்ணின் பெற்றோர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜாதி மாறி திருமணம் செய்ய விரும்பினால் அவர்கள் உயிருடனே வாழ முடியாது என்ற கொடூரமான சமூக அமைப்பில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். புரையோடி நிற்கும்...

பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தராக  பட்டியல் இனத்தவரை நியமிக்க வேண்டும்!

பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தராக பட்டியல் இனத்தவரை நியமிக்க வேண்டும்!

இதுகுறித்து கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை : சேலம், பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நிருவாகக்குழுவில் மாற்றங்கள் செய்ய அரசு தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிகிறோம். இவ்வேளையில் பெரியார் பல்கலைக்கழகச் சட்ட விதிகளின்படி பணிமூப்பில் முதல்நிலையிலுள்ள பேராசிரியர் ஒருவரைத் துணைவேந்தர் பொறுப்பில் நியமனம் செய்யலாம் என்ற விதிப்படி பணிமூப்பில் முதலாவதாகவுள்ள பட்டியலினப் பேராசிரியரைப் பொறுப்புத் துணைவேந்தராக நியமிக்க வேண்டுகிறோம். பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட 25 ஆண்டுகளில் ஒரே ஒருமுறை மட்டுமே பட்டியலினப் பேராசிரியர் ஒருவர் துணைவேந்தராக இருந்துள்ளார். எனவே, இடைக்கால ஏற்பாடாக அரசு தற்போது துணைவேந்தர் பணிகளைக் கவனிக்க பட்டியலினப் பேராசிரியரைப் பொறுப்புத் துணைவேந்தராக நியமிக்க வேண்டும். அதுவே சமூகநீதியாகும். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடித்த ஒரே ஜாதியின் ஆதிக்கம் முடிந்து, துணைவேந்தர் நிருவாகக்குழு அமைக்கப்பட்டுக் கடந்த ஓராண்டாக நிருவாகக்குழு பல்வேறு பாராட்டத்தக்க சமூகநீதி சார்ந்த செயல்பாடுகளை முன்னெடுத்தது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை துறைத்தலைவர் மாற்றம்,...

கழகப் பரப்புரைப் பயணத்துக்கான தலைப்பு

கழகப் பரப்புரைப் பயணத்துக்கான தலைப்பு

* ஜாதியில் திருமணம் * மதத்தில் பார்ப்பனியம் * வாழ்வில் மூடநம்பிக்கை தடை, அதை உடை…… * மாற்றத்தை நோக்கிய வாழ்வியல் பரப்புரை பயணம் பெரியார் முழக்கம் இதழ் 02072026

அதிகாரத்தில் கால் பதிக்காத குரலற்ற சமூகங்களின் உரிமைக்கு  கருத்தரங்குகள் குடும்ப விழாக்கள்         மாற்றத்துக்கான வாழ்வியல் பரப்புரை பயணம்  கழகத் தலைமைக் குழு முடிவுகள்

அதிகாரத்தில் கால் பதிக்காத குரலற்ற சமூகங்களின் உரிமைக்கு கருத்தரங்குகள் குடும்ப விழாக்கள் மாற்றத்துக்கான வாழ்வியல் பரப்புரை பயணம் கழகத் தலைமைக் குழு முடிவுகள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு கூட்டம் 28.06.26 ஞாயிறு பிற்பகல் 2.30 மணி அளவில் திருப்பூரில் கழகப் பொருளாளர் துரைசாமி அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. தலைமைக் குழுக் கூட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை வகித்தார். தலைமைக் குழுக் கூட்டத்தில் கழகத்தின் அடுத்த கட்ட செயல் திட்டங்கள், பரப்புரை பயணம், கருத்தரங்குகள் நடத்துவது, குடும்ப விழாக்கள் நடத்துவது ஆகியவை குறித்து விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டன. நிறைவாக தலைமைக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 1. “குரலற்ற மனிதர்களுக்கான குரல்” சீர் மரபினர் (DNC/DNT) என்று பட்டியலிடப்பட்டுள்ள ஜாதிகளில் இன்று வரை அரசியல் அதிகாரமோ, அரசு பதவிகளையோ பெறும் வாய்ப்பே கிட்டாமல் அமிழ்த்தபட்டுக் கொண்டிருக்கும் சமூகத்து மக்களின் பாடுகளை பொதுச் சமூகத்தின் பார்வைக்கு கொண்டு வந்து அவர்களுக்கான உரிமைகளுக்காய் குரல் கொடுக்கும் நோக்கத்துடன் “குரலற்ற மக்களின் குரலாக” ஒலிக்கும் வகையில்...

“சவுண்ட் – ஆக்க்ஷன் “டயலாக்”

“சவுண்ட் – ஆக்க்ஷன் “டயலாக்”

ரசிகர்களை வெறியூட்டுவதற்கும் உசுப்பேற்றுவதற்கும் தயாரிக்கப்பட்ட பேச்சுகளை பேசி பழக்கப்பட்டவர் விஜய். இப்போது முதல்வர் பதவிக்கு வந்த பிறகும் அதைத் தவிர வேறு எந்த பேச்சையும் அவரால் பேச முடியவில்லை. எனவே தான் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் அவையை விட்டு வெளியேற்றிவிட வேண்டும் என்பது அவரது முதல் பிரச்சினையாக இருந்தது. அதற்காகவே வசைச் சொற்களை வீசினார் ; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த பிறகு தான் அவருக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைத்தது” அப்பாடா; இனி ஸ்கிரிப்ட்டை ரசிகர்களிடம் பேசுவது போல் பேசலாம் என்ற நிம்மதி பெருமூச்சு அவருக்கு வந்திருக்கிறது. எதிரே அமர்ந்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் ரசிகர்கள் அல்ல! அவர்கள் முதல்வர் விஜயின் பேச்சுக்கு விசில் அடித்து கைதட்டி ஆரவாரம் செய்ய சட்டமன்றத்திற்கு வரவில்லை என்பதை அவருக்கு பேச்சு தயாரித்து கொடுத்தவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். விஜய் வருகைக்கு முன் தங்கள் அலுவலகத்துக்கு சோபா வந்தது என்பதை சில தலைவர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்;...

திருப்பரங்குன்றம் விவகாரம்  தெளிவுபடுத்திய தவெக அரசு!

திருப்பரங்குன்றம் விவகாரம் தெளிவுபடுத்திய தவெக அரசு!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சாமி கோவிலில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. ஆனால் `உச்சிப்பிள்ளையார் கோயிலில் அல்ல, மலையின் உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்காவின் சர்வே கல் பகுதியில்தான் விளக்கு ஏற்ற வேண்டும், அந்த சர்வே கல்தான் தீபத்தூண்’ என இந்து அமைப்புகள் கலவரத்திற்கு வித்திட்டு வருகின்றன. முந்தைய திராவிட மாடல் அரசு இவ்விவகாரத்தில் தனது உறுதியான நிலைப்பாட்டை வெளிக்காட்டி, வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோயிலில்தான் தீபம் ஏற்றப்படும் என்பதை உறுதி செய்தது. நீதிமன்றப் படியேறிப் பார்த்தும், சங்கிகளின் கலவர முயற்சி நடக்கவில்லை. மலையை முற்றுகையிட்டு கலவரம் செய்ய காவிகள் முயற்சித்த நொடியில் கூட, We are not allowing..we will face the consequences… என்று காவல்துறையை வைத்து தமிழ்நாடு அரசின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது அன்றைய ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம். இந்தச் சூழலில், தமிழ்நாட்டில் ஆட்சி மாறிவிட்ட நிலையில், தற்போதைய...

கோவையில் பேருந்து தீண்டாமை முடிவுக்கு வந்தது கழகத்தின் இடைவிடாத போராட்டத்திற்கு வெற்றி!

கோவையில் பேருந்து தீண்டாமை முடிவுக்கு வந்தது கழகத்தின் இடைவிடாத போராட்டத்திற்கு வெற்றி!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வாழும் கெம்பனூர் கிராமத்தில் நீண்ட காலமாக இருந்து வந்த பேருந்து தீண்டாமையை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது திராவிடர் விடுதலைக் கழகம். பெரியார் நடத்திய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாட்டமாக நடத்தாமல் கிராமங்களில் நிலவும் தீண்டாமை அவலங்களின் பட்டியலை தயாரிக்கும் செயல்திட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் இறங்கியது. அப்போதுதான் இந்த பேருந்துத் தீண்டாமை கவனத்திற்கு வந்தது. பேருந்து நிற்கும் இறுதி முனையமாக இந்த ஊர் இருந்த காரணத்தினால் பட்டியல் இனப் பிரிவினர் பேருந்துகளில் உட்கார்ந்து விடுகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக கட்சிகளைக் கடந்து ஆதிக்க ஜாதியினர் கைகோர்த்துக் கொண்டு பேருந்து ஊருக்கு வராமல் தடுப்பதில் ஜாதி வெறியுடன் முரட்டுப் பிடிவாதம் காட்டி வந்தனர். திராவிடர் விடுதலைக் கழகம் பலமுறை போராட்டங்கள் நடத்தியும் கவனத்தில் கொண்டு வந்தும் போக்குவரத்துத் துறை அலட்சியம் செய்தது. இந்தக் கோரிக்கைக்காக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர்...

ஆலங்குளம் அருகே ஜாதிவெறி தாக்குதல் தமிழ் நாடு அரசு மவுனம் கலைக்க வேண்டும் ! கழக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் வேண்டுகோள்

ஆலங்குளம் அருகே ஜாதிவெறி தாக்குதல் தமிழ் நாடு அரசு மவுனம் கலைக்க வேண்டும் ! கழக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் வேண்டுகோள்

29.05.2026 அன்று தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் கிராமத்தில் பட்டியல் இனத்தவர் இல்ல திருமணத்திற்கு பிளக்ஸ் பேனர் வைத்த விவகாரத்தில் ஏற்பட்ட சிறுவாக்குவாதம் தீவிரமடைந்து வன்முறை தாக்குதலாகி 8 பேருக்கு அரிவாள் வெட்டு என இன்று தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவின் பிற பகுதியிலும் பேசு பொருளாகியுள்ளது. கண்ணில் பட்டோரை எல்லாம் வெட்டிப்போடும் அளவிற்கு அங்கு என்ன நடந்தது என விசாரிக்கும் போது பிளக்ஸ் பேனர் கதையினை சொல்கிறார்கள். பட்டியலின இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் 6-பேர் கடும் காயங்களோடு நெல்லை அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூர்மையான ஆயுதங்களோடு 10-க்கும் மேற்பட்ட நபர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஒரு இளைஞரது கைவிரல் துண்டிக்கப்பட்டுள்ளது. கால், கை என காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடந்தேறியுள்ளது. இதுவரை 8 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றச் செயலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். அதே நேரத்தில் நெட்டூர் பகுதியில் தொடர்ந்து இது...

தமிழ்நாடு மக்கள் உரிமை பேரவை வலியுறுத்தல் கீழடி அகழாய்வு அறிக்கையை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும்

தமிழ்நாடு மக்கள் உரிமை பேரவை வலியுறுத்தல் கீழடி அகழாய்வு அறிக்கையை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும்

அமர்நாத் இராதகிருஷ்ணன் தந்த கீழடி அகழாய்வு ஆய்வு அறிக்கையை முடக்கி வைக்காமல் ஒன்றிய அரசு உடனே வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் உரிமை பேரவை ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பழ.நெடுமாறன், முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், ஓவியா உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்டோர் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். அறிக்கையின் விவரம். 2014 – 2016 காலகட்டத்தில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் ( Archeological Survey of India – ASI ) சார்பாகக் கீழடி அகழாய்வு, தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களால் மேற்கொள்ளப் பட்டது. கீழடியில் கிடைக்கப் பெற்ற பொருட்கள் மற்றும் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் 982 பக்கங்கள் கொண்ட அறிக்கையினை அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்திற்கு 2023 ஜனவரி மாதத்தில் முறைப்படி சமர்ப்பித்துள்ளார். அறிவியல் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் கீழடியின் காலம் கி.மு.800 – 500 வரை...

`திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்’ ஆவணப்படத்திற்கு தடை ஏன்?

`திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்’ ஆவணப்படத்திற்கு தடை ஏன்?

மத நல்லிணக்கத்தை பேசும் “திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்” ஆவண படத்தை புதுக்கோட்டையில் திரையிட காவல்துறை மறுத்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது. வீதி கலை இலக்கிய களம் என்ற அமைப்பு இந்த படத்தை திரையிடும் முயற்சிகளில் ஈடுபட்டது. திராவிட மாடல் ஆட்சியில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து தமிழ்நாடு முழுதும் எந்த தடையுமின்றி இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டு வந்தது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவலகத்திலும் திரையிடப்பட்டது. `திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம்!’ என்ற வெறிக்கூச்சலோடு மதவாத சக்திகள் சட்டங்களை கையில் எடுத்துக் கொண்டு செயல்பட்டதையும்; நீதிமன்ற தீரப்பின் முரண்பாடுகளையும் இந்த ஆவணப்படம் அம்பலப்படுத்துகிறது.தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை உருவாக்கும் இந்த முயற்சியை திராவிட மாடல் ஆட்சி உறுதியாக முறியடித்தது. காவல்துறை அனுமதி மறுப்பதற்கு மேலிட உத்தரவு என்ற ஒரு காரணத்தை கூறுகிறது. எந்த மேல் இடத்திலிருந்து உத்தரவு வந்தது? பெரியார் அம்பேத்கரை தங்களின் கொள்கைத் தலைவராக அறிவித்துக் கொள்ளும் த.வெ.க ஆட்சி அவர்கள் வலியுறுத்திய கொள்கைக்கு...

பொம்மைகளை பகுத்தறிவு பேச வைத்த கலைவாணன் விடைபெற்றார்

பொம்மைகளை பகுத்தறிவு பேச வைத்த கலைவாணன் விடைபெற்றார்

கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் இரங்கல் அறிக்கை: கலைவாணன் (67) இறந்துவிட்டார் என்ற செய்தியை உள்ளம் ஏற்கவே மறுக்கிறது; அவருடன் பழகிய எவரும் அவருடைய நினைவுகளில் இருந்து மீளவே முடியாது. தன்னை சுற்றி இருப்பவர்கள் அனைவரையும் எப்போதும் கலகலப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கக்கூடிய உயர்ந்த பண்பாளர். அவரது தந்தை முத்துக்கூத்தன் மிகச்சிறந்த திராவிட இயக்கத்தின் கலைப் போராளி; வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம் வழியாக பகுத்தறிவு சிந்தனைகளையும் திராவிட இயக்க கொள்கைகளையும் பரப்பியவர். தனது மகனை மிகச்சிறந்த கொள்கை வாரிசாக வளர்த்து எடுத்தார். மகனுக்கு என்.எஸ்.கிருஷ்ணன் நினைவாக அவர் சூட்டிய பெயர்தான் கலைவாணன். தந்தையிடமிருந்து பெற்ற உணர்வுகளோடு தனது கலை ஆர்வத்தை மிகச் சிறப்பாக வளர்த்துக் கொண்டார் கலைவாணன். தமிழ்நாட்டில் அபூர்வமாக உள்ள பொம்மலாட்டக் கலைஞர்களில் ஒருவர் கலைவாணன்.புராணங்களுக்கும் மடமை பிரச்சாரங்களுக்கும் பயன்படுத்தப்பட்ட பொம்மலாட்ட கலை வடிவத்தை சமூக மாற்றத்திற்கு பயன்படுத்திய பெருமை முத்துக்கூத்தன் அவர்களுக்கும் கலைவாணன் அவர்களுக்கும் உண்டு. பன்முக கலைத்திறன் அவரோடு இணைந்து...

சமஸ்கிருதத்துக்கு ரூ.2532 கோடி!

சமஸ்கிருதத்துக்கு ரூ.2532 கோடி!

2015-லிருந்து 2020 வரை சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஒதுக்கிய தொகை அதன் பார்ப்பனிய ஆதரவை வெளிப்படுத்துகிறது. சமஸ்கிருதம் – ரூ. 2,532 கோடி; உருது – ரூ.837 கோடி இந்தி – ரூ. 426 கோடி தமிழ்- ரூ. 113 கோடி கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஒடியா மொழிகளுக்கு சேர்த்து ஒதுக்கிய தொகை வெறும் ரூ.31 கோடி. மக்கள் பேச்சு வழக்கில் இல்லாத பார்ப்பனிய வேதமத சடங்குகளுக்கு மட்டுமே பயன்படுத்தும் மொழிக்கு ரூ.2,532 கொடி ஒதுக்கியுள்ளனர். மக்கள் பேசாத மொழி; பார்ப்பனர்கள் கோயிலில் மட்டும் பேசும் மொழி சமஸ்கிருதம். இந்நிலையில் கடந்த மே-15, ஆம் தேதி மத்திய மேல்நிலை கல்வி வாரியம் சி.பி.எஸ்.சி-க்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சி.பி.எஸ்சி பள்ளிகளில் 9-ம் வகுப்பில் மும்மொழித் திட்டத்தை அமல்படுத்த வற்புறுத்துகிறது அந்த சுற்றறிக்கை. இரண்டு இந்திய மொழிகளோடு அந்நிய மொழியை கற்பிக்க வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களில் மாநில மொழி, ஆங்கிலம் இரண்டைத்...

அறநிலையத்துறைக்கு பார்ப்பன அமைச்சரா?

அறநிலையத்துறைக்கு பார்ப்பன அமைச்சரா?

இந்து அறநிலையத்துறையின் பார்ப்பன அமைச்சரையும், இயக்குனரான பார்ப்பன அதிகாரியையும் திரும்பப் பெற வேண்டும்! கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை ! “தமிழ்நாட்டின் புதிய அமைச்சரவையில் ஏழு பேர் பட்டியல் இனப் பிரிவினரும், 4 பெண்களும் இடம் பெற்று இருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். அதே நேரத்தில் அறநிலையத்துறை அமைச்சராக இந்த பட்டியல் இனப் பிரிவினரில் ஒருவரை ஏன் நியமிக்க கூடாது என்ற எண்ணம் எழத்தான் செய்கிறது. இந்தத் துறைக்கு அமைச்சராகவும் துறையின் இயக்குனராகவும் பார்ப்பனர்களையே தேர்ந்தெடுத்து நியமித்திருப்பதின் நோக்கம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது. நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் பனகல் அரசர் முதன் முதலாக கொண்டு வந்த அறநிலையத்துறை சட்டம் (Hindu Devastaan Act) பார்ப்பனர்கள் கொள்ளையிலிருந்து கோயில்களை காப்பாற்றுவதற்காகத் தான்! அப்போதிலிருந்தே பார்ப்பனர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பிறகு ஓமந்தூரார் முதலமைச்சராக இருந்த காலத்தில் இதற்கான முழு சட்ட வடிவம் ( Hindu Religious Endowments Act)...

வந்துவிட்டது கட்சிமாறல் கலாச்சாரம்!

வந்துவிட்டது கட்சிமாறல் கலாச்சாரம்!

தமிழ்நாடு இதுவரை இத்தகைய கட்சி மாறும் காட்சிகளைக் கண்டது இல்லை. குதிரை பேரம் கொடி கட்டி பறக்கிறது. பெரும்பான்மை இல்லாத ’தமிழக வெற்றிக் கழகத்திற்கு’ காங்கிரஸ் ஓடிப்போய் ஆதரவு அளித்தது. திமுக அணியில் இருந்து போட்டியிட்டு தவெக, அஇஅதிமுக வேட்பாளர்களைத் தோற்கடித்தவர்கள் ஒரே நாளில் அணி மாறினார்கள். அடுத்த 5-ஆண்டுகளுக்கு தவெக அணிதான் என்று கூச்சமின்றி அறிவித்தார்கள். பாஜக தலையிடாமல் தடுக்கிறோம் என்று காரணம் கூறினார்கள். ஆனால் பாஜகவின் கட்சிமாறல் கலாச்சாரத்தை அப்படியே ஏற்றுக் கொண்டார்கள் என்பதுதான் உண்மை! காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பல மாநிலங்களில் அந்த கட்சியில் இருந்து எம்.எல்.ஏ-க்களை பேரம் பேசி இழுத்து கட்சி மாறசெய்யும் பாஜகவின் அரசியல் கலாச்சாரத்தை அப்படியே இப்போது வெட்கமின்றி பின்பற்றுகிறது காங்கிரஸ். அசாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கோவா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிகளை உடைத்து தனது ஆட்சிகளை நியமித்துக் கொண்டது பாஜக. 2017-ல்...

கழகத்தின் மூத்த பெரியார் தொண்டர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் விடை பெற்றார்!; உடல் மருத்துவமனைக்குக் கொடையளிக்கப்பட்டது

கழகத்தின் மூத்த பெரியார் தொண்டர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் விடை பெற்றார்!; உடல் மருத்துவமனைக்குக் கொடையளிக்கப்பட்டது

பெரியார் கொள்கைகளை உயிர்மூச்சாக கொண்டு வாழ்ந்த கழகத்தின் மூத்த தோழர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் விடைபெற்றுக் கொண்டார். அவரது விருப்பப்படி அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது. கொளத்தூர் மணி கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள இரங்கல் செய்தி: திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை மாவட்டத் தலைவர் தோழர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் (83) அவர்கள் வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு கோவை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 17.05.26 ஞாயிறு காலை 04.30 மணியளவில் காலமானார். தோழர் மேட்டுப்பாளையம் ராமச்சந்திரன் அவர்கள் மூத்த பெரியார் தொண்டர் ஆவார்.தந்தை பெரியாரை நேரில் சந்தித்தவர்.தன் வாழ்நாள் முழுவதும் பெரியார் கொள்கைகளை பரப்பி அதனை தன் சொந்த வாழ்விலும் கடைபிடித்து செயல்படுத்திய கொள்கைப் பற்றாளர் ஆவார். மிகவும் துணிச்சலாக செயல்படக்கூடியவர். மிகவும் சுறுசுறுப்பானவர்.வயதான நிலையிலும் ஒரு இளைஞரை போல பெரியார் பணி செய்வதில் மிகுந்த ஆர்வமும்...

பாஜக ஊடுருவல் முறியடிப்பு!

பாஜக ஊடுருவல் முறியடிப்பு!

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் உருவாக்கிய மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு விஜய் கட்சி ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களை பெற்றிருக்கிறது. தேர்தல் களத்தை டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்குமான போராட்டமாக கட்டமைத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் டெல்லியின் ஊடுருவலை தோல்வியடைய செய்திருக்கிறார். விஜய் கட்சியை பயன்படுத்தி தமிழ்நாட்டில் கால் பதிக்கலாம்; அதற்கு ஆளுநரை பயன்படுத்தலாம் என்ற சதி திட்டத்தை தமிழ்நாடு முறியடித்திருக்கிறது. முதல்வர் பதவியை ஏற்க இருக்கும் விஜய் முழுமையாக பாஜக எதிர்ப்பு அணிகளின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சி மட்டும் தான் துரோக சக்தியாக மாறி உள்ளது. மற்றபடி சிபிஅய், சிபிஎம், இடதுசாரிகளும், விடுதலை சிறுத்தை கட்சியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் திமுக கூட்டணியின் நட்பு சக்தியாக இருந்து கொண்டு பாஜக ஊடுருவலை தடுப்பதற்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் மிகச் சிறப்பான முடிவை எடுத்திருக்கின்றன. இதைத் தான்...

பதவிக்காக இருப்பவர்களை கொள்கைவாதிகளாக மாற்ற வேண்டும்!

பதவிக்காக இருப்பவர்களை கொள்கைவாதிகளாக மாற்ற வேண்டும்!

தற்போது நிலவும் அரசியல் சூழல் குறித்து கழக தலைவர் “கொளத்தூர் மணி” அறிக்கை: “தமிழக வெற்றிக் கழகத்துக்கு” பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆளுநர் ஒன்றிய ஆட்சியின் தூதுவராகி அதிக பெரும்பான்மை பெற்றுள்ள கட்சியை ஆட்சி அமைக்க மறுத்து வருகிறார். ஆளுநர் உருவாக்கும் இந்த குழப்பத்தால் பல்வேறு அரசியல் குழப்பங்கள் உருவாகி வருகின்றன. இது தொடர்பாக அதிர்ச்சியான செய்தி ஒன்று வெளி வந்திருக்கிறது. மக்களால் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்ட அஇஅதிமுகவை ஆட்சி அமைக்க அனுமதித்து அந்த ஆட்சிக்கு திமுக வெளியிலிருந்து ஆதரவைத் தெரிவிக்க முடிவு செய்து இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.இது உண்மையாக இருந்து விடக்கூடாது என்று நாம் அஞ்சுகிறோம். இந்திய அரசியலில் கொள்கைக்கான இலட்சியத் தலைவராக மு.க.ஸ்டாலின் உயர்ந்து நிற்கிறார். மாநில அடையாளங்களை அழிப்பதற்கு ஒன்றிய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக சமரசம் இன்றி அவர் போராடுகிறார். இந்தியாவிலேயே மாநிலங்களுடைய உரிமைக்குப் போராடும் ஒரே தலைவராக இன்றைக்கு பல்வேறு கட்சிகளிலும் அவர்...

எதை நோக்கிப் பயணிக்கிறது தவெக!

எதை நோக்கிப் பயணிக்கிறது தவெக!

தமிழ்நாட்டின் சமூக அரசியல் அடையாளங்களாக மூன்றை குறிப்பிடலாம். மாநில உரிமை, சமூக நீதி, மதச் சார்பின்மை என்ற மூன்று கோட்பாடுகள் தான் அவை. காமராசர் ஆட்சிக் காலத்தில் இருந்து திமுக, அதிமுக ஆட்சி வரை இதுதான் தமிழ்நாட்டு அரசியலின் அடிப்படைக் கொள்கை. இதற்கு மாறாக ஆட்சி நடத்த முயன்ற இராஜகோபாலாச்சாரி ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டார். ஜெயலலிதா ஒரு பார்ப்பனராக இருந்தாலும் கூட இந்துமத கொள்கையில் அவருக்கு ஈடுபாடு இருந்தாலும் மாநில உரிமை, சமூக நீதியைக் கொள்கையை பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். இந்திய தேசிய கட்சியான காங்கிரஸ் ஒரு காலத்தில் இட ஒதுக்கீடு கொள்கையை ஏற்க மறுத்தது; மதச்சார்பின்மை கொள்கையையும் ஏற்க மறுத்தது; பார்ப்பனியக் கட்சியாகவே அது திகழ்ந்தது. சோனியா காந்தி தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சி வந்ததற்குப் பிறகு அதில் பண்பு மாற்றங்கள் ஏற்பட்டன. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் தான் திமுகவின் வற்புறுத்தல் காரணமாக மண்டல் பரிந்துரையில்...

தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன?

தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன?

தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை என்றே சொல்ல வேண்டும். எவ்வித அரசியல் அனுபவமோ, பயிற்சியோ இல்லாத நடிகர் விஜய் ஒரு கட்சியைத் தொடங்கி இரண்டே ஆண்டுகளில் நேரடியாக முதலமைச்சர் பதவியில் அமரப் போகிறார். இதற்கு தமிழ்நாட்டு வாக்காளர்கள் பெருமளவுக்கு ஆதரவு வழங்கியுள்ளார்கள். 75 ஆண்டுகால வரலாறு கொண்ட திமுக வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது. முதல் தலைமுறை வாக்காளர்கள் பெருமளவு நடிகர் விஜய்க்கு வாக்குகளைக் குவித்துள்ளார்கள். நடிகர் விஜய் மக்களிடம் முன்வைத்த ஒரே கொள்கை “திமுக தீய சக்தி” என்பது மட்டுமே! இது தவிர தனது கொள்கை இதுதான் என்று ஒரு வார்த்தையைக் கூட அவர் உச்சரிக்கவில்லை. ’மாற்றம் வேண்டும்’ என்ற ஒரே கொள்கைக்காக வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். எதை நோக்கிய மாற்றம் என்பது குறித்த புரிதலோ, தெளிவோ வாக்காளர்களுக்கும் இல்லை; அந்த கட்சிக்கும் இல்லை. தமிழ்நாடு வரலாற்றில் கடந்த ஐந்து ஆண்டுகள் நடந்த திராவிட மாடல் ஆட்சி அடுக்கடுக்கான சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. சமூகத்தில் எந்த...

சாதனைகளைத் தொடர வைப்போம்!

சாதனைகளைத் தொடர வைப்போம்!

இந்த ஆட்சியின் சாதனைகள் தொடர வேண்டும் என்று ஏன் கூறுகிறோம்? நேர்மையுடன் சிந்தித்துப் பார்ப்போம்! கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளைப் போல் தமிழ்நாட்டில் இதுவரை நடந்திருக்கிறதா? “பதவி ஏற்றவுடன் முதல்வர் ஸ்டாலின் முதல் கையெழுத்தோடு தொடங்கியது பெண்களின் கட்டணம் இல்லாப் பேருந்து பயணம்; மகளிர் உரிமைத்தொகை; புதுமைப்பெண்; பள்ளிக் குழந்தைகளுக்கு காலைச் சிற்றுண்டி; மக்களைத் தேடி மருத்துவம்; நான் முதல்வன்; என்று நூற்றுக்கணக்கான திட்டங்கள் அணிவகுத்து வந்து கொண்டே இருந்தன. அறிவிக்கப்பட்ட திட்டங்களில் இதுவரை நிறைவேற்றப்படாத திட்டம் என்று எந்த ஒரு திட்டத்தையாவது கூற முடியுமா ? எதிர்க்கட்சிகளால் கூடஇந்த திட்டங்களில் குற்றம் குறைகளை காணமுடியவில்லை? இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது இத்தகைய சாதனைகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கிறதா? இங்கே தான் நடந்தது. அதுமட்டுமா! பெண்களுக்கான உரிமை திட்டங்களின் வெற்றிகளை உணர்ந்து இந்தியாவில் பாஜக உள்ளிட்ட 8 மாநிலங்கள் இதை செயல்படுத்த தொடங்கிவிட்டன. வழிகாட்டியது தமிழ்நாடுதான். பொருளாதார...

கழகத் தலைமைக்குழு முடிவு திமுக கூட்டணியை ஆதரித்து      1,000 பரப்புரைக் கூட்டங்கள்

கழகத் தலைமைக்குழு முடிவு திமுக கூட்டணியை ஆதரித்து 1,000 பரப்புரைக் கூட்டங்கள்

தேர்தல் களத்தில் முழுவீச்சுடன் களமிறங்கி செயல்பட கழகம் முடிவுசெய்துள்ளது “தொடரட்டும் தமிழ்நாட்டில் சாதனைகள்! திமுக ஆட்சியை உறுதி செய்வோம்!” என்றத் தலைப்பில் 1000 பரப்புரைக் கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழுக் கூட்டம் 15.02.2026 ஞாயிறு அன்று சேலம் மேட்டூரில் பிற்பகல் 3:30 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை வகித்தார். தலைமைக் குழு கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் நிலைப்பாடு, இணையதளச் செயல்பாடுகள், முழக்கம் சந்தா சேர்ப்பு, மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கலந்தாய்வு, கோவையில் நடைபெற்ற தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தின் தாக்கங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. தலைமைக் குழுவில் கலந்து கொண்ட கழகத் தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் தலைமைக் குழு உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்கள் ஆலோசனைகளை விரிவாக எடுத்துக் கூறினார்கள். அனைவரின் கருத்துக்களை விவாதித்து நிறைவாக கீழ்கண்ட...

மதவாத கும்பல்களின் கலவர முயற்சிகளை முறியடிப்போம்!

மதவாத கும்பல்களின் கலவர முயற்சிகளை முறியடிப்போம்!

கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை! மதுரை திருப்பரங்குன்றத்தில் கலவரம் செய்ய முயற்சிக்கும் பாஜக இந்து முன்னணி அமைப்புகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்! தமிழ்நாட்டின் பொது அமைதியைக் குலைத்து வன்முறைக் காடாக்கி அதில் அரசியல் லாபம் அடைய முயற்சிக்கும் மத தீவிரவாத கூட்டத்தை அனுமதியோம்! இந்துத்துவ அமைப்புகளின் கலவரம் உருவாக்கும் சூழ்ச்சியை தக்க சமயத்தில் முறியடித்து அமைதியை நிலை நாட்டிக்கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசின் முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களைப் பாராட்டுகிறோம்! மதவாத சக்திகளுக்கு எதிரான முதல்வரின் நடவடிக்கைகளுக்கு என்றும் துணை நிற்போம்! “மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வு பல நூறு ஆண்டுகளாக தொடர்ச்சியாக முருகன் கோயில் கருவறைக்கு நேர் மேலே இருக்கும் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகில் இருக்கும் தீபத்தூணில் ஏற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதனை திருமலை நாயக்கர் காலத்து கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. மேலும் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தலைமை அர்ச்சகர் ராஜா...

தொடர்ந்து விவாதிப்போம்

தொடர்ந்து விவாதிப்போம்

அனைவருக்கும் வணக்கம், 28.9.2025 அன்று கோவையில் நடந்த திராவிடர் விடுதலைக் கழகத்தின் பயிலரங்கின் நிறைவில் என்னிடம் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு நான் அளித்த பதிலை மையமிட்டு பல்வேறு பதிவுகள் வெளிவந்த வண்ணமாக இருந்தன. அது குறித்து நான் சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன். எழுப்பப்பட்ட கேள்விகளில் ஒன்று “ஈரோட்டுப் பாதை சரியா?” என்ற நூலில் தோழர் ஜீவா அவர்கள் எழுப்பிய கேள்வி குறித்து உங்கள் விளக்கம் என்ன? என்பதுதான். அந்த நூல் ஏற்கனவே ‘தமிழன் தொடுத்த போர்’ என்ற தலைப்பில் 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்து எழுதி இருந்த தோழர் மா. இளஞ்செழியன் அவர்களால் எழுதப்பட்ட 1947 ஆண்டு பிற்பகுதியில் வெளியான ஒரு நூலை விமர்சித்து எழுதப்பட்டதாகும். அவர் சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து 1944 வரையான காலத்தை நான்கு கட்டங்களாகப் பிரித்து, ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்பட்ட மாற்றங்களைக் குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் எழுதியிருந்த “ஈரோட்டுப் பாதை” என்ற நூலுக்கு எதிராக...

செப்-17 முதல் டிசம்-24 வரை ஜாதி எதிர்ப்பு தீவிர பரப்புரை இயக்கம் –  தலைமைக் குழுவின் முடிவுகள்

செப்-17 முதல் டிசம்-24 வரை ஜாதி எதிர்ப்பு தீவிர பரப்புரை இயக்கம் – தலைமைக் குழுவின் முடிவுகள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழுக் கூட்டம் ஈரோட்டில் 07.09.25. ஞாயிறு காலை 10.30 மணிக்கு கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. தலைமை குழுக்கூட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பங்கேற்ற கழக தலைமைக் குழு உறுப்பினர்கள் கழகத்தின் அடுத்த கட்ட செயல்திட்டங்கள், பரப்புரைப் பயணங்கள், போராட்டங்கள், புரட்சிப் பெரியார் முழக்கம் குறித்த ஆவணமாக வெளியிடுவது பற்றி பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். 1) முன்னதாக கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் கிராம மற்றும் நகரப் பகுதிகளில் கடைபிடிக்கப்படும் ஜாதி தீண்டாமை குறித்து (முடி திருத்தகங்கள், இடுகாடு,குடிநீர் குழாய்கள்,பேருந்து போன்ற இடங்கள்) கழகத் தோழர்கள் கள ஆய்வு செய்து அது குறித்து ஆதாரப்பூர்வமான தகவல்களை திரட்டி கழகத் தலைமைக்கு அனுப்பி வைக்க கேட்கப்பட்டு பல்வேறு இடங்களில் தீண்டாமை குறித்த ஆதாரப்பூர்வமான தகவல்கள் திரட்டப்பட்டு பெறப்பட்டது. அப்படி பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஜாதி தீண்டாமை...

வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்குத் துணைநிற்போம்!

வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்குத் துணைநிற்போம்!

கழகத் தலைவர் அறிக்கை! “பாஜக ஆட்சியில் நீதித்துறை தனது தன்னாட்சியை இழந்து வருவதோடு ஆளுகின்ற அரசின் ஓர் உறுப்பாக தொடர்ந்து மாறி வருகிறது.ஆர்எஸ்எஸ் சார்பு நீதிபதிகள் வெகுவாகப் பதவியில் அமர்த்தும் போக்கும் கூடுதலாகியுள்ளது. நீதிபதி ஜி.ஆர் சாமிநாதன் அவர்களை விமர்சித்து உச்ச நீதிமன்றத்திற்கு ஆதாரங்களுடன் கொண்டு சென்றதற்காக,மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும் வழக்குரைஞருமான தோழர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏன் தொடுக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் ஜி.ஆர்.சாமிநாதன். மேலும் தோழர் வாஞ்சிநாதன் பேசியதற்கு உரிய பதிலளிக்க வேண்டும் எனவும் ஆணையிட்டுள்ளார். மதுரையைக் குறிவைத்து இந்து பார்ப்பனியக் கூட்டம் ஒரு கலவரத் திட்டத்துடன் மதுரையின் மத நல்லிணக்க மரபை சிதைக்க களமிறங்கியுள்ளது. இந்நிலையில் மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமத்துவ, ஜனநாயக , மதச்சார்பின்மை மரபுகளைக் காக்கத் தொடர்ந்து தோழரும் வழக்குரைஞருமான வாஞ்சிநாதன் போராடி வருகிறார். வைதீக, சநாதன காலமல்ல இது. சீசருடைய...

ஜாதி ஆணவப் படுகொலை; திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம்!

ஜாதி ஆணவப் படுகொலை; திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம்!

ஆணவப் படுகொலைகளை தடுக்க ஜாதி ஆதிக்க மனநிலையில் இருந்து அம்மன நிலையில் உள்ளோர் வெளியில் வரவேண்டும் என கோரிக்கை! கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியை சேர்ந்தவர் கவின் செல்வ கணேஷ் (27) கவினை 27.7.25 அன்று பாளையங்கோட்டையில் சுஜித் என்பவர் வெட்டி படுகொலை செய்கிறார். கவின் பட்டியல் சமூகத்தையும் சுஜித் பிற்படுத்தப்பட்ட சமூகத்தையும் சார்ந்தவர்கள். சுஜித்தின் சகோதரியை கவின் காதலித்த காரணத்தினால் கவினை சுஜித் ஜாதி ஆணவப் படுகொலை செய்துள்ளார் என்பது தெளிவாகிறது. ஜாதி ஆணவப் படுகொலை செய்த சுஜித் தானாக முன்வந்து காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டு தற்பொழுது அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது. கவின் பெற்றோர் சரவணன், கிருஷ்ணவேணி ஆகியோர் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் மீதும் வழக்கு போடப்பட்டு அவர்கள் தற்காலிக பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.இந்நிலையில்...

சமரசமற்ற கடவுள் மறுப்பாளர்  வேலுபிரபாகரன் முடிவெய்தினார்

சமரசமற்ற கடவுள் மறுப்பாளர் வேலுபிரபாகரன் முடிவெய்தினார்

“,சீரிய பகுத்தறிவாளரும், திரைப்பட இயக்குநர் – நடிகர் – ஒளிப்பதிவாளருமான தோழர் வேலு பிரபாகரன் அவர்கள் (வயது 68) இன்று 18.07.2025 விடியற்காலை மறைந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமடைகிறோம். 1980-ஆம் ஆண்டில் ஒளிப்பதிவாளராக தமிழ்த் திரையுலகில் அறிமுகமான வேலு பிரபாகரன்,பின்னர் இயக்குநராகவும் உருவெடுத்தவர்.இவர் இயக்கிய ‘கடவுள்’, ‘புரட்சிக்காரன்’ போன்ற திரைப்படங்களில் தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்பு – பெண்ணுரிமைக் கருத்துக்களையும், கடவுள் மறுப்பு – பகுத்தறிவுக் கொள்கைகளையும் அழுத்தமாகப் பேசி, பொதுமக்களாலும் அத்திரைபடங்களை நேசிக்கச் செய்தவர். தன்னை நாத்திகவாதி என்று வெளிப்படையாக அறிவித்துக்கொண்டு, தமிழ்த் திரைத்துறையில் தவிர்க்க முடியாத இடத்தைத் தனக்கென கொண்டிருந்தது மட்டுமல்லாமல், திரைப்பட படப்பிடிப்புத் தளங்களில் கூட மூட நம்பிக்கை ஒழிப்புக் கருத்துக்களைப் பேசி,தன்னுடன் பணியாற்றும் திரைத்துறை நண்பர்களையும் பகுத்தறிவாளராக்கிய பெருமைக்குரியவர் வேலு பிரபாகரன். திரைத்துறையில் நடிகர் சத்யராஜ் போன்ற பலர் நாத்திகராகவும், பகுத்தறிவாளராகவும் அடிப்படைக் காரணியாய் இருந்தவர் வேலு பிரபாகரன். நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில்...

பெரியார் பல்கலைகழகத்தில் ஜாதியப் பாகுபாடு

பெரியார் பல்கலைகழகத்தில் ஜாதியப் பாகுபாடு

சேலம் பெரியார் பல்கலையில் ஜாதியப் பாகுபாடு, வன்கொடுமை நிலை தமிழக அரசு தலையிட்டு தமிழ்த் துறைப் பேராசிரியர் பெரியசாமி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டியலின முனைவர் பட்ட மாணவர்கள் முனைவர் பட்டத்தை முடிக்க முடியாமல் தமிழ் துறைப் பேராசிரியர் பெரியசாமி இடையூறு செய்து வருவதால் பல பட்டியலின முனைவர் பட்ட மாணவ மாணவிகள் வெளிப்படையாகப் புகார் அளித்துள்ளது மிகவும் வேதனையான ஒன்றாகும். படிக்கும் மாணவர்களை வீட்டு வேலை செய்யச் சொல்வது, வீட்டிற்குத் தண்ணீர் பாய்ச்சக் கூறுவது, மளிகை பொருட்களை வாங்க சொல்வது போன்ற கொடுமைகள் பெரியார் பல்கலையில் நடப்பது வேதனையான ஒன்று. இனியும் இதை அனுமதிக்க முடியாது.பட்டியலின, மிகப்பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவிகளை வேலைக்காரர்களாக எஜமான மனப்பான்மையோடு நடத்துவது கண்டனத்திற்கு உரியது. பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆய்வு மாணவர்கள்...

விநாயகன் ‘அரசியல்’ ஊர்வலம் கழகத் தலைவர் அறிக்கை

விநாயகன் ‘அரசியல்’ ஊர்வலம் கழகத் தலைவர் அறிக்கை

விரைவில் வர இருக்கும் விநாயகன் ‘அரசியல்’ ஊர்வலத்தில் விதிமீறல்களைத் தடுப்பதற்கான முயற்சிகளில் கழகத் தோழர்கள் உடனடியாக ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தி கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை ! அன்பார்ந்த தோழர்களே! “முருகன் முகமூடியோடு தமிழ்நாட்டு மக்களின் மனங்களைக் கொள்ளை அடிக்க சிலர் எடுத்த முயற்சி, பல வகைகளிலும், பல தரப்பிலும் நிகழ்ந்த அசைவுகள், நகர்வுகள், எச்சரிக்கை மணிகள் என விழிப்போடு இருந்து நா(வீ)ட்டாரால் தோற்கடிக்கப்பட்டு விட்டது. ஆனால், ‘மயானக் கொள்ளை’ என்பதைப் போல மக்களையும் உடன் அழைத்துக் கொண்டு, பறைகள் முழங்க, பட்டப்பகலில், ஒலிபெருக்கிகள் அலற ஆண்டுதோறும் நடக்கும் அடுத்த ‘மனங்கள் கொள்ளை’ எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 27ஆம் நாள் பிள்ளையார் சதுர்த்தி என்ற பெயரில் நடக்க உள்ளது. மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் விநாயகர் களை, இரசாயன சாயப் பூச்சோடு இப்போதே ஜோராக உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டார்கள். மூன்று அங்குல விட்டமுள்ள...

பெரியார் பல்கலை.பேராசிரியர் கதிரவனை பொறுப்பில் இருந்து நீக்குக!

பெரியார் பல்கலை.பேராசிரியர் கதிரவனை பொறுப்பில் இருந்து நீக்குக!

தமிழக அரசுக்கு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி கோரிக்கை! இது குறித்து கழகத் தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: “ஆட்சிக் குழு உறுப்பினர் நிர்வாகப் பதவியில் பொறுப்பு வகிப்பதா? துணை வேந்தரின் செயலுக்குக் கண்டனம். ஆட்சிக் குழு பதவிக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டார் உளவியல் துறை பேராசிரியர் கதிரவன்” ஆட்சிக் குழு உறுப்பினர் என்பது நிர்வாகம் எடுக்கும் முடிவுகளுக்கு ஒப்புதல் கொடுக்கும் ஒரு அமைப்பாகும். அவ்வாறான ஆட்சிக்குழுவில் உள்ளவரே கையெழுத்திட்டு பணி இடை நீக்க ஆணையைப் பேராசிரியர் வைத்தியனாதனுக்கு வழங்கி விட்டு இவரே எப்படி ஆட்சிக் குழுவில் ஒப்புதல் தர முடியும்? இந்த முறைகேட்டால் பேராசிரியர் கதிரவன் ஆட்சிக் குழு உறுப்பினர் என்ற தகுதியை இழந்து விட்டார். இவரை உடனடியாக ஆட்சிக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். மேலும் சேலம் பெரியார் பல்கலைக் கழக உதவிப் பேராசிரியர் வைத்தியநாதன் தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவாலின்...

மே.18 கொண்டாட்ட நிகழ்வு தள்ளிவைப்பு!

மே.18 கொண்டாட்ட நிகழ்வு தள்ளிவைப்பு!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்த மே18 அன்று திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் நட்சத்திர இசை திருவிழா கன்னிகுமரியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி கீழ்க்கண்ட அறிக்கையை விடுத்து இருந்தார். துயர மிகுந்த இந்த நாளில் இவ்வாறான கொண்டாட்டத்தை நடத்துவது இன உணர்வுமிக்க தமிழர்களின் உணர்வுகளைப் பதறவைக்கும் ஒன்றாகும். அந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்களை இதனை வேறு நாளுக்கு ஒத்திவைக்க வேண்டுமாறு முதற்கட்டமாக கனிவுடன் கோருகிறோம் என்று குறிப்பிட்டுருந்தார். அதனை தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர்‌ நாசர்‌ இதில் தலையிட்டு நிகழ்ச்சியை தள்ளி வைக்க முயற்சிகளை எடுத்தார். அதனை தொடர்ந்து நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டது. இத்தகவலை திரு நாசர் கழக தலைவருக்கு கடிதமாக எழுதியுள்ளார். இன‌முரசு சத்தியராஜ் இந்த கடிதத்தை கழக தலைவருக்கு அனுப்பியுள்ளார். இதற்கு நன்றி தெரிந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்ட அறிக்கையில்: ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் கழகத்...

கழகத் தலைவருக்கு சீர் விருது

கழகத் தலைவருக்கு சீர் விருது

சீர் வாசகர் வட்டம் கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு 2025 ஆண்டுக்கான‌ சமூக போராளி விருது வழங்குகிறது. விருது தொகை ரூ. 1,00,000 இது தொடர்பாக சீர் வாசகர் வட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் போராட்ட களங்களில் 50 ஆண்டுகளுக்கு மேலாய் முதல் வரிசையில் நிற்கும் முன்கள வீரர் என்று பாராட்டி உள்ளது.வாசகர் வட்டத்தின்‌ அறிக்கை: சாதி ஒழிப்பு, சமூகநீதி, பாலின சமத்துவம், பகுத்தறிவுப் பரப்புரை, சுரண்டல் எதிர்ப்பு என மானுட விடுதலைக்கான அனைத்துத் தளங்களிலும் போராட்டக் களங்களிலும் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாய் முதல் வரிசையில் நிற்கும் முன்கள வீரர். இட ஒதுக்கீட்டு வரலாறு, விடுதலை வேட்கை, தமிழர் பண்பாடு, பெரியாரும் தனித்தமிழ்நாடும், பெரியாருக்கு எதிரான முனை மழுங்கும் வாதங்கள் உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தமிழர், தமிழ்நாடு நலன்சார்ந்த போராட்டங்களுக்காக எண்ணற்ற முறை சிறை சென்றவர். சட்டத்தை விட நியாயமே மேலானது என்பதை உரத்துச் சொல்பவர். தன் பேச்சையும் மூச்சையும்...

“சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது நடவடிக்கை வேண்டும்     தமிழ்நாடு முதல்வருக்கு திராவிடர் விடுதலைக் கழகம் கோரிக்கை !”

“சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது நடவடிக்கை வேண்டும் தமிழ்நாடு முதல்வருக்கு திராவிடர் விடுதலைக் கழகம் கோரிக்கை !”

இது குறித்து கழகத் தலைவர் “கொளத்தூர் மணி” அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை : ஆளுநரின் அதிகாரங்கள் குறித்து ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. இந்தத் தீர்ப்பின் வழியாக தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய சட்ட முன்வரைவுகளுக்கு ஒப்புதல் என்பதோடு, ஆளுநரின் அதிகார வரம்புகள் என்ன என்பது குறித்தும், ஒப்புதல் வழங்குவதற்கான கால வரையறை குறித்தும் இந்த தீர்ப்பு தெளிவுபடுத்தி இருக்கிறது. இந்தத் தீர்ப்பினால் மும்மொழிக் கொள்கை ஆனாலும், நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை ஆனாலும் வழிகாட்டி மாநிலமாக திகழும் தமிழ்நாடு, அதன் செயல்திறன் மிக்க முதலமைச்சர் இந்த வகையிலும் இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், குறிப்பாக ஒன்றிய ஆளுங்கட்சி ஆளாத மாநிலங்களுக்கு ஒரு புதிய தெம்பினை ஊட்டி இருக்கிறார். அதற்காக நாம் தமிழ்நாடு முதலமைச்சரை மனம் நெகிழ்ந்து பாராட்டுகிறோம். மேலும் இந்தத் தீர்ப்பு ஒப்புதல் வழங்கிய சட்ட த்தின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களின் வேந்தராகவும் முதல்வரே ஆகிவிடுகிறார்...

பெரியார் முழக்கம் சந்தாக்களை விரைந்து அனுப்புவீர்…

பெரியார் முழக்கம் சந்தாக்களை விரைந்து அனுப்புவீர்…

புரட்சிப் பெரியார் முழக்கம் ஆண்டு சந்தா : ரூ.300/- ஐந்தாண்டு சந்தா : ரூ.1500/- தொடர்புக்கு : 15. தோழமை, வெங்கடேஸ்வரா நகர், பெருங்குடி, சென்னை – 600096. பேச : 63697 76351. பெரியார் முழக்கம் 03042025இதழ்

இன‌ ஒதுக்கல் பேசும் சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடு!

இன‌ ஒதுக்கல் பேசும் சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடு!

காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திர சரஸ்வதி பெங்களூருவில் கடந்த ஜனவரி 19-ம் தேதி நடந்த ‘பிராமண’ மாநாட்டில் சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்டுள்ள இன ஒதுக்கல் (Apartheid) என்ற சட்ட விரோதக் கருத்தை வலியுறுத்தி இருக்கிறார். ‘பிராமணர்கள்’ என்பது வர்ணாசிரமத்தின் அடையாளமாகும். ஜாதி அடையாளம் அல்ல. அய்யர், அய்யங்கார் என்பது ஜாதி. ‘பிராமணர்’ என்ற வர்ணாசிரம அடையாளத்தைப் பேசினால் இந்து மதத்தின் பிற பிரிவினரை சூத்திரர், பஞ்சமர் என்று இழிவுபடுத்துவதாகும். அந்த அடிப்படையில் விளிம்பு நிலை மக்களான சூத்திரர் பஞ்சமர்களோடு பிராமணர்கள் கலந்து வசிக்கக் கூடாது; தனிக் குடியிருப்பு வேண்டுமென்று பேசி இருப்பது சர்வதேச அளவில் தடை செய்யப்பட்டுள்ள இன ஒதுக்கல் கொள்கையே ஆகும். இது சர்வதேச குற்றம். சமத்துவபுரம் வேண்டுமென்று வலியுறுத்தும் தமிழ்நாட்டில் ‘அக்ரகாரம்’ வேண்டுமென்று சங்கராச்சாரி பேசியிருக்கிறார். இதைக் கண்டித்து சங்கராச்சாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மயிலாடுதுறையில் கடந்த மார்ச் 22-இல் கூடிய திராவிடர் விடுதலைக் கழக மாநாடு தீர்மானம்...

நூல் வெளியீடு !

நூல் வெளியீடு !

“ஆரிய மாடலா? திராவிட மாடலா?” திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் தோழர் “விடுதலை இராசேந்திரன்” அவர்களின் எழுத்தாக்கத்தில் கருத்து செறிவு மிகுந்த கட்டுரைகள்,வரலாற்று தகவல்கள், நிகழ்கால அரசியல் பார்வைகள்……(கெட்டி அட்டையில்) முன்பதிவு செய்வோருக்கு சலுகை விலையில் ரூ.300/- (ரூபாய் முன்னூறு மட்டும்) (தபால் செலவு ரூ.50 தனி) “பெரியார் ஏன் எதிரிகளைப் பதற வைக்கிறார்?” பரப்புரைப் பயணத்தின் போது (மார்ச் 15 முதல் மார்ச் 22 முடிய) முன்பதிவு செய்யப்படும்.முன்பதிவிற்கு அலைபேசி எண் : 94986 56683 – இந்த எண்ணில் GPay செய்து விட்டு வாட்ஸ் அப்பில் முன்பதிவு செய்யவும். பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாட்டில் சிறப்பு வெளியீடாக இந்நூல் வெளியிடப்படுகிறது. முன்பதிவு செய்வோருக்கு மாநாட்டு திடலில் புத்தகங்கள் வழங்கப்படும். நாள் : 22.03.25 சனி நேரம் : மாலை 04.00 மணி இடம் : சின்னக் கடைவீதி, மயிலாடுதுறை. – நிமிர்வோம் வெளியீடு, 15.03.2025

மயிலாடுதுறையில் திரள்வோம்!

மயிலாடுதுறையில் திரள்வோம்!

தமிழ்நாட்டில் காலூன்றத் துடிக்கும் பார்ப்பனிய மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் இருந்து பெரியாரைக் அகற்றினால் தான் காலூன்ற முடியும் என்ற முடிவுக்கு வந்து விட்டனர். இதற்காக சதித்திட்டம் அரங்கேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் பெரியாரை எதிர்த்துப் பேசுகிறார், ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பெரியார் மீது அவதூறுகளை பேசுகிறார்,‌ தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் சங்கிகள் ஒவ்வொரு நாளும் அவதூறுகளை வீசுகின்றனர். இதற்காக நாம் தமிழர் கட்சியின் சீமான் சங்கிகளின் கைப்பாவையாக களம் இறக்கப்பட்டுள்ளார். பெரியார் எதிர்நீச்சலில் வளர்ந்த தலைவர்; இந்த எதிர்ப்புகள் பெரியார் கருத்துக்களை மேலும் வலிமைப்படுத்தவே செய்யும் அதற்கான களங்களை பெரியாரியத் தொண்டர்களாகிய நாம் உருவாக்க வேண்டும். இந்த வரலாற்றுக் கடமையை முன்னெடுக்கவே இந்த பரப்புரைப் பயணத்தைத் தொடங்கி உள்ளோம். இதன் நிறைவு மாநாடு மயிலாடுதுறையில் மார்ச் 22 -ல் நிகழ இருக்கிறது. எதிரிகளைச் சந்திக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை இந்த மாநாட்டில் நாம் முடிவெடுப்போம். பெரியாரியலுக்கு எதிராக எழுந்துள்ள சவால்களை சந்திக்க...

பெரியார் பல்கலை.யில் விக்சிட் பாரத்-2047 கருத்தரங்கு-திராவிடர் விடுதலைக் கழகம்

பெரியார் பல்கலை.யில் விக்சிட் பாரத்-2047 கருத்தரங்கு-திராவிடர் விடுதலைக் கழகம்

இதுதொடர்பாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி 06.03.2025 அன்று விடுத்துள்ள அறிக்கை: “மும்மொழிக் கொள்கை, பாராளுமன்ற தொகுதிகள் மறு சீரமைப்பு போன்ற பிரச்சனைகளை ஒன்றிய அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நிலையில் ஒன்றிய அரசின் திட்டமான ‘விக்சிட் பாரத் வளரும் இந்தியா 2047’ தொடர்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழகம் வரும் மார்ச் 10 மற்றும் 11-ஆம் தேதி கருத்தரங்கு ஏற்பாடு செய்ததை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. பதிவாளர் தேர்வு, அலுவலர் பதவி உயர்வு, புதிய பணி நியமனம், விதிகளுக்கு புறம்பாக நூலகர், உடற்கல்வி இயக்குநர் நியமனம் போன்ற பிரச்சனைகளிலிருந்து, ஒன்றிய அரசு தன்னை காப்பாற்றுவதற்காக இந்த கருத்தரங்கினை ஏற்பாடு செய்துள்ள துணைவேந்தர் வரும் மே 19 உடன் பணியிலிருந்து விடுபட உள்ளார். தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கவே இந்த கருத்தரங்கை நடத்த முடிவு செய்துள்ளார். ஆர்எஸ்எஸின் கூடாரமாக சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மாறுவதை தமிழ்நாடு...

ஏன் இந்த பரப்புரைப் பயணம்?

ஏன் இந்த பரப்புரைப் பயணம்?

தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கி சமுதாய இயக்கமாக தமிழர் நலனுக்காக அரை நூற்றாண்டுக்கு மேலாக ஓயாது உழைத்தவர் பெரியார். ஜாதிய ஏற்றத்தாழ்வு இல்லாத, பாலினப் பாகுபாடு இல்லாத ஒரு சமத்துவ சமூகம் மலர வேண்டும் என்று தன் வாழ்நாளை ஒப்படைத்துக்கொண்டு பாடுபட்டவர் பெரியார். மக்கள் ஆதரிப்பதைப் பேசி, அவர்களின் நன்மதிப்பை பெற வேண்டும் என்ற எண்ணத்திற்கு மாறாக மக்கள் பின்பற்றிய மூடத்தனங்களை மிகக் கடுமையாக எதிர்த்தவர் பெரியார். தன் மீது கல், முட்டை, செருப்பு போன்றவை வீசப்பட்டபோது கூட ஓடி ஒளிந்து கொள்ளாமல், தனக்கு சரியெனப்பட்டதை வெளிப்படையாகப் பேசியவர் பெரியார். குடலிறக்க வலியோடும், மூத்திரச் சட்டியோடும் வாழ்நாளின் கடைசிவரை தமிழ் மக்களின் தன்மானத்திற்காகப் பேசியவர் பெரியார். கல்வி எட்டாக்கனியாக இருந்த தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டி ஒரு நூற்றாண்டில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு உருவாகக் காரணம் பெரியார். எல்லாவற்றுக்கும் மேலாக சுயமரியாதைச் சிந்தனையைத் தமிழர்களுக்குக் கடத்தியவர் தந்தை பெரியார். ஆனால் இன்றைக்குப் பெரியாரைக்...

பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார்?-வாங்க வரலாறு பேசுவோம்

பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார்?-வாங்க வரலாறு பேசுவோம்

வாங்க வரலாறு பேசுவோம்…பரப்புரைப் பயணம் இப்போதைய பேசுபொருளாய் எதிர்மறையாய் உருவாக்கப்பட்டிருக்கிற அரசியல் சூழலை, நேர்மறையாய் எடுத்துச் செல்லும் நோக்கத்தோடு திராவிடர் விடுதலைக் கழகம் தமிழ்நாட்டின் நான்கு முனைகளில் இருந்து பரப்புரை பயணம் நடத்துகிறது. நிறைவாக மயிலாடுதுறையில் மாநாடு நடைபெறவுள்ளது. ஏனென்றால், பெரியார் மறைந்து அரை நூற்றாண்டுகளைக் கடந்துவிட்டோம். இப்போதும் தமிழ்நாட்டின் விவாதப் பொருள் பெரியாரை சுற்றியே இருக்கிறது. தமிழ்நாட்டின் எல்லா போராட்டக் களங்களிலும் பெரியார் இடம்பெறுகிறார், அவரது கருத்துக்கள் பேசப்படுகின்றன. தமிழ்நாட்டை ஆதிக்கம் செலுத்தத் துடிக்கும் இந்தித் திணிப்புக்கு எதிராக அரண்போல நிற்கிறார் பெரியார். மதவாத சக்திகள் தமிழ்நாட்டை வன்முறைக்காடாக்க முயற்சிக்கும் களங்களில் சமத்துவ நெருப்பாக அவர்களின் எண்ணத்தை சுட்டுப் பொசுக்குகிறார் பெரியார். பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களைக் கல்வியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று துடிக்கும் வருணாசிரமாவதிகளுக்கு தமிழ்நாட்டில் மரண அடி கொடுத்து எதிர்த்து நிற்கிறது பெரியார் விதைத்துவிட்டுச் சென்ற கல்வி குறித்தான விழிப்புணர்வு சிந்தனைகள். பெரியாரை எப்படி எதிர்கொள்வது என்றே...

புரட்சிப் பெரியார் முழக்கம்

புரட்சிப் பெரியார் முழக்கம்

ஆண்டு சந்தா : ரூ.300/- ஐந்தாண்டு சந்தா : ரூ.1500/- தொடர்புக்கு : 15. தோழமை, வெங்கடேஸ்வரா நகர், பெருங்குடி, சென்னை – 600096. பேச : 63697 76351, முழக்கம் தொடர்பான சந்தேகங்களுக்கு மேற்கண்ட எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். மின்னஞ்சல் : newsdvk@gmail.com. பெரியார் முழக்கம் 20022025 இதழ்

புதியக் கல்விக் கொள்கையைத் திணிக்கும் பெரியார் பல்கலைக்கழகம்

புதியக் கல்விக் கொள்கையைத் திணிக்கும் பெரியார் பல்கலைக்கழகம்

“ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் அறிமுகமா? திராவிடர் விடுதலைக் கழகம் கேள்வி!” இது குறித்து கழகத் தலைவர் தோழர் “கொளத்தூர் மணி” அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை : சேலம் பெரியார் பல்கலைக் கழகம் அண்மையில் வெளியிட்ட முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பு கையேட்டில் முனைவர் பட்ட படிப்பில் சேர அடிப்படை கல்வி தகுதியாக 10+2+3+2 அல்லது 12+1+3+2 அல்லது 10+2+4 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கைப் படி இளநிலைப் பட்டப் படிப்பு மூன்று ஆண்டுகளுக்கு பதிலாக 4 ஆண்டுகளாக மாற்றம் செய்யப் பட்டுள்ளதை சேலம் பெரியார் பல்கலைக் கழகம் தனது முனைவர் பட்ட சேர்க்கை வழிகாட்டியில் சேர்த்துள்ளது. முதுநிலை பட்டப் படிப்பை முனைவர் பட்டத் தகுதியிலிருந்து நீக்கி உள்ளது. இது பல்கலைக் கழக மானியக் குழு வழிகாட்டலில் உள்ளதாகும். அதாவது முதுநிலைப் பட்டப் படிப்பு இல்லாமலும் முனைவர் பட்டப் படிப்பில்...

கல்வி உரிமையைப் பறிக்காதே! யு.ஜி.சி.யைக் கண்டித்துக் கழகம் ஆர்ப்பாட்டம்

கல்வி உரிமையைப் பறிக்காதே! யு.ஜி.சி.யைக் கண்டித்துக் கழகம் ஆர்ப்பாட்டம்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவிப்பு! ஒன்றிய அரசே ! கல்வி உரிமையைப் பறிக்காதே ! இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்காதே! ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து நம் மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகள், விதிகளில் திருத்தங்களை செய்து அறிவித்து வருகிறது.சமீபத்தில் UGC விதிகளில் திருத்தம் செய்து புதிய விதிகளை ஒன்றிய பாஜக அரசு வெளியிட்டுள்ளது. அது மாநிலக் கல்வி உரிமைகளைப் பறிக்கும் வண்ணம் குறிப்பாக தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்பைச் சிதைக்கும் வகையில் உள்ளது. மேலும் இந்த புதிய விதிகளில் உயர்கல்வியில் இட ஒதுக்கீட்டை முற்றிலும் ஒழிக்கும் திட்டத்துடன் திருத்தங்களை செய்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. “எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்காதே” எனும் சனாதன தர்மத்தை சட்டப்படியே நிறைவேற்ற துடிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் எதிர்வரும் பிப்.13ஆம் தேதி வியாழக்கிழமை அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டத்தை ஒத்த கருத்துள்ள...

விடுதலை இராசேந்திரனுக்கு அரசின் ‘தந்தை பெரியார்’ விருது!

விடுதலை இராசேந்திரனுக்கு அரசின் ‘தந்தை பெரியார்’ விருது!

தமிழ்நாடு அரசின் 2024ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் விருது – படிக்கராமு பேரறிஞர் அண்ணா விருது – எல்.கணேசன் பாவேந்தர் பாரதிதாசன் விருது – பொ.செல்வராஜ் பாரதியார் விருது – கவிஞர் கபிலன் திரு.வி.க. விருது – டாக்டர் ஜி.ஆர்.ரவிந்திரநாத் அண்ணல் அம்பேத்கர் விருது – துரை.ரவிக்குமார் முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது – பொதியவெற்பன் முத்தமிழ் அறிஞர் கலைஞர் விருது – முத்து வாவாசி பொதுச்செயலாளருக்கு விருது வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்து கழக சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

“பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார் ?”

“பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார் ?”

As “மாநாட்டுத் தீர்மானங்கள் !” திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் “பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார் ?” “வாருங்கள் வரலாறு பேசுவோம்!!” பரப்புரை பயணத்தின் நிறைவு மாநாடு மயிலாடுதுறை – 22.03.2025 . மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : தீர்மானம் எண் 1 : “தமிழர்களின் தன்மான மீட்பர் தலைவர் பெரியார் மீது அவதூறுகளை வீசி, தமிழ்நாட்டில் அவரைத் தனிமைப்படுத்தலாம் என்ற சதித்திட்டத்தை முறியடிக்கவும்.அந்தத் துரோகக் கும்பலின் முகத்திரையைக் கிழித்தெறிந்து, மக்களிடத்தில் பெரியாரைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு திராவிடர் விடுதலைக் கழகம் இந்த பயணத்திற்குத் திட்டமிட்டது. தன்னல மறுப்போடு, பெரியார் லட்சியத்தில் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் கழகத் தோழர்கள் ஆர்வத்துடன் இந்த பயணத்தில் பங்கேற்றனர். கொளுத்தும் வெயிலில் தங்களை வருத்திக் கொண்டு நாள் ஒன்றுக்கு குறைந்தது நான்கு கூட்டங்கள் வழியாக பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்தித்துப் பரப்புரை, நூல் விற்பனை, நிதி திரட்டல் என்ற பணிகளை ஏற்று பெரியார் பணி...

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 22.12.2024 அன்று மேட்டூரில் நடந்த செயலவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 22.12.2024 அன்று மேட்டூரில் நடந்த செயலவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 22.12.2024 அன்று மேட்டூரில் நடந்த செயலவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தீர்மானம் 1 பெரியார் அடையாளப்படுத்திய ஆரிய திராவிட போராட்டம் இப்போது மனு நீதி எதிர் சமூக நீதி, ஹிந்து இராஷ்ட்ரம் எதிர் அரசியல் சட்டம் என்று வடிவெடுத்து இருக்கிறது. ஒன்றிய பாஜக ஆட்சி பெரும்பான்மை அற்ற நிலையிலும் பார்ப்பனிய மனுவாத சீரழிவுக் கொள்கையை நோக்கி நாட்டை இழுத்து செல்கிறது. இதற்கு எதிரான தத்துவார்த்த போராட்டம் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது, திராவிட மாடல் ஆட்சி தான் இதைத் தடுத்து நிறுத்தும் வலிமைபெற்ற அரணாக நிற்கிறது. அதை சீர்குலைக்க எந்தவித முறைகேடுகளையும் பயன்படுத்தி அகற்றுவதற்கு தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. திராவிட மாடல் ஆட்சியின் இருத்தல் என்பது பார்ப்பனிய ஹிந்து இராஷ்டர முறியடிப்புக்கான தேவையாகவும் அவசியமானதாகவும் வரலாறு கோரி நிற்கிறது. இந்த அடிப்படை கருத்தை கவனத்தில் கொண்டு அரசுக்கு வலிமை சேர்க்க வேண்டிய அவசியத்தை இந்த செயலவை வலியுறுத்துகிறது. இந்த...

தமிழ்நாட்டின் கல்வி உரிமையைப் பாதுகாத்திட மாவட்டத் தலைநகரங்களில் கழகம் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டின் கல்வி உரிமையைப் பாதுகாத்திட மாவட்டத் தலைநகரங்களில் கழகம் ஆர்ப்பாட்டம்

மாநில உரிமையைக் காப்போம்! கல்வி உரிமையை மீட்போம்! எனும் முழக்கத்தோடு தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியைத் தடை செய்ய நினைக்கிற, பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்! கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை! அன்பு தோழர்களுக்கு, வணக்கம். அண்மைக் காலமாக ஒன்றிய அரசும் ஒன்றிய அரசின் முகவராக தமிழ்நாட்டில் செயல்படும் ஆளுநர் ஆர்.எஸ்.எஸ். ரவியும் கல்வியில் முன்னேறி உள்ள தமிழ்நாட்டின் கல்வி நிலையைச் சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒன்றிய அரசின் கல்வித் துறை இந்த ஆண்டு கல்வி நிலையங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் சிறந்த பல்கலைக் கழகங்கள் 100இல் 22 தமிழ்நாட்டில் இருப்பதையும், சிறந்த கல்லூரிகள் 100இல் 37உம், சிறந்த பொதுப் பல்கலைக் கழகங்கள் 50இல் 10உம், சிறந்த 100 பொறியியல் கல்லூரிகளில் 13உம், சிறந்த ஆய்வு நிறுவனங்கள் 50இல் 9உம் தமிழ்நாட்டில் இருப்பதை...

கழகத் தலைவரின் சுற்றுப்பயணம் தொடங்கியது போதைக்கு எதிரான பரப்புரைக்குத் தயாராக அறிவுரை

கழகத் தலைவரின் சுற்றுப்பயணம் தொடங்கியது போதைக்கு எதிரான பரப்புரைக்குத் தயாராக அறிவுரை

19.07.2024 அன்று தலைமைக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கழகத் தலைவரின் மாவட்ட வாரியான சுற்றுப்பயணம் சென்னையில் தொடங்கியது. சென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 04.08.2024 அன்று மயிலாப்பூரில் உள்ள கழகத் தலைமை அலுவலகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது. முதல் நிகழ்வாக அண்மையில் மறைந்த கழகச் செயல்வீரர் மதிவாணன் அவர்களின் படத்தைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்தார். பின்னர் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவரது மகன் தமிழரசன் மாவட்டக் கழக வளர்ச்சி நிதியாக ரூ.5000/- வழங்கினார். மேலும் தற்போது போதைப்பொருள் கலாச்சாரம் இளைஞர்கள் மத்தியில் வேகமாகப் பரவி வரும் சூழலில் அதற்கு எதிரான பரப்புரைகளைக் கழகத் தோழர்கள் திவிரமாக மேற்கொள்ள வேண்டும் எனக் கழகத் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டுப் பேசினார். கழகப் பொதுச்செயலாளர் பேசுகையில் ஊடகங்களும், பத்திரிகைகளும்...