Category: கோவை புறநகரம்

காதலர் தினத்தில் ஜாதிமறுப்பு மணவிழா

காதலர் தினத்தில் ஜாதிமறுப்பு மணவிழா

கோவை மாவட்டம், வடவள்ளி பகுதியைச் சார்ந்த ராஜேந்திரன் – ஜானகி ஆகியோரின் மகள் விவேகா அவர்களுக்கு, கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியைச் சார்ந்த சிவகாமி – தமிழ்செல்வி ஆகியோரின் மகன் மோகனகிருஷ்ணன் அவர்களுக்கும் சுயமரியாதை இணையேற்பு விழா 14.02.2026 சனிக்கிழமை (அன்பின் நாளான காதலர் தினத்தன்று) மாலை 6 மணி அளவில் கோவை மாவட்டம், குன்னத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ பழனியாண்டவர் கலையரங்கத்தில் நடைபெற்றது. கழகப் பொருளாளர் துரைசாமி, பால் பிரபாகரன் (கழக பரப்புரைச் செயலாளர்), ஆசிரியர் சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் ), சூலூர்.தமிழ்செல்வி (கோவை மாவட்ட அமைப்பாளர்), வெங்கட் (கோவை மாநகரச் செயலாளர் ) ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி மணமக்களுக்கு வாழ்க்கை துணைநல ஒப்பந்தம் செய்து வைத்து வாழ்த்துரையாற்றினார். கோவை மாவட்டக் கழகம் வழிகாட்டுகிறது கோவை மாவட்டக் கழகம் சார்பில் 2026 ஆம் ஆண்டு புரட்சிப் பெரியார் முழக்கம் சந்தா முதல் தவணையாக...

எதிர்கால வேலைத் திட்டங்கள்; கோவை மாவட்டக் கழகம் முடிவு

எதிர்கால வேலைத் திட்டங்கள்; கோவை மாவட்டக் கழகம் முடிவு

கோவை மாவட்டக் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் 8/2/2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் தமிழ்ப்புலிகள் கட்சி அலுவலகத்தில் சூலூர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழுவில் பேசப்படும் வேலைத் திட்டங்களை பற்றி கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ஆலோசனைகளை கூறினர். பிப்ரவரி 14 அன்று கழகத் தோழர் மோகனகிருஷ்ணன் விவேகா சுயமரியாதை திருமண விழாவில் தோழர்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று சிறப்பிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் ஒரு மனதாக எடுக்கப்பட்ட முடிவுகள் 1. கோவை மாநகர புதிய பொறுப்பாளர்கள் கோவை மாநகர அமைப்பாளர்களாக தோழர்கள் சிவராசு,நவீன், நிலவழகன், மாநகர துணைத் தலைவர்களாக தோழர் சத்தியமூர்த்தி , மாநகர துணைச் செயலாளராக தோழர் தரணி , கோவில்பாளையம் பகுதி அமைப்பாளராக தோழர் மோகனகிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். 2. “மனிதம் நமது அடையாளம்! ஜாதி நமக்கு அவமானம்!” தலைப்பில் தொடர்ந்து தெருமுனைப் பிரச்சாரங்களை நடத்துவது. 3. கோவையில்...

சென்னை, கோவை, சேலத்தில் “வெனிசுலா ஆதரவுப் போராட்டம்”

சென்னை, கோவை, சேலத்தில் “வெனிசுலா ஆதரவுப் போராட்டம்”

சென்னையில் வெனிசுலாவை அடிமையாக்கும் அமெரிக்காவின் போர் வெறியை முறியடிப்போம் என்ற முழக்கத்துடன் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பில் 10.01.26 அன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் இரா.உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்) உரையாற்றினார். வேழவேந்தன் (மாவட்டத் தலைவர்) மற்றும் கழகத் தோழர் அசோக் ஆகியோர் பங்கேற்றனர். கோவையில் மேலாதிக்க வெறி பிடித்த அமெரிக்காவே மதுரோவை விடுதலை செய்,வெனிசுலாவிலிருந்து இராணுவத்தை வெளியேற்று என்ற முழக்கத்துடன் மக்கள் அதிகாரம், சிபிஎம்எல் ரெட் ஸ்டார், மக்கள் விடுதலை முன்னணி ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்டக் கழகத்தின் சார்பில் நிர்மல் (கோவை மாநகரச் செயலாளர்) உரையாற்றினார். தோழர்கள் வெங்கட், தரணி, அறிவுக்கனல் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். சேலத்தில், வெனிசுலா இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளின் வளங்களைக் கொள்ளையடிக்க துடிக்கும் அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு எதிராக ஒன்று திரண்டு போராட வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஆகியோர் கடத்தலை...

காரமடை கழகத்தோழர் ஜெகதீஷ் காலமானார்!

காரமடை கழகத்தோழர் ஜெகதீஷ் காலமானார்!

கோவை மாவட்டக் கழகத்தின் காரமடை பகுதி அமைப்பாளர் ஜெகதீஷ் 31.12.2025 அன்று மறைவுற்றார். பெரியார் கொள்கைகளை பரப்புவதிலும் பரப்புகிறவர்களுக்கு துணை நிற்பதிலும் தோழர் ஜெகதீஷ் முன்மாதிரியானவர். தோழரின் இணையர் கவிதா அவர்களும் பெரியாரிய கொள்கைப் பற்றாளராவார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி 17.01.2026 சனிக்கிழமை அன்று, மத்தாம்பாளையம், கோட்டை பிரிவு, இன்னிசை நகரில் உள்ள ஜெகதீஸ்-கவிதா இல்லத்திற்கு சென்று தோழரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். நிகழ்வில் துரைசாமி (கழகப் பொருளாளர்), ரத்தினசாமி (மாநில அமைப்புச் செயலாளர்), பன்னீர் செல்வம் (கோவை மாவட்டச் செயலாளர்), நிர்மல்குமார் (கோவை மாநகரத் தலைவர்), அமுல்ராஜ் (மேட்டுப்பாளையம் நகரப் பொறுப்பாளர்), அய்யப்பன் (திருப்பூர் வடக்கு ஒன்றிய அமைப்பாளர்), முத்து(திருப்பூர் மாநகர அமைப்பாளர்), சண்முகம் ( பல்லடம் ஒன்றிய அமைப்பாளர்), திருப்பூர் இனியன், ராமசாமி (திருப்பூர் தெற்கு பகுதி அமைப்பாளர்), காவை அவினாசி ஆகிய கழகத் தோழர்கள்உடனிருந்தனர். பெரியார் முழக்கம் இதழ் 22012026

கிராமங்கள்தோறும் பிரச்சாரம் – கோவை மாவட்டக் கழகம் முடிவு!

கிராமங்கள்தோறும் பிரச்சாரம் – கோவை மாவட்டக் கழகம் முடிவு!

கோவை மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 03.01.2026 அன்று தமிழ்ப் புலிகள் கட்சி தலைமை அலுவலகத்தில் சூலூர் பன்னீர்செல்வம் (மாவட்டக் கழகச் செயலாளர் ) தலைமையில் நடைபெற்றது. கழகத்தின் 2025-ஆம் ஆண்டு செயல்பாடுகள், 29.12.2025 அன்று அன்று கோவையில் நடந்து முடிந்த போராட்டத்தின் நிறைகுறைகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டு போராட்ட வரவு – செலவுக் கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானங்கள் பின்வருமாறு:- 1. அண்மையில் மாரடைப்பால் முடிவெய்திய கழகக் காரமடை பகுதி அமைப்பாளர், பொறியாளர் ஜெகதீசு அவர்களுக்கு கோவை மாவட்டக் கழகம் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. மிகவிரைவாக அவர் வாழ்ந்த காரமடையில் நினைவேந்தல் கூட்டம் நடத்துவதென இக்கூட்டம் முடிவு செய்கிறது. 2. கோவையில் நடந்து முடிந்த ஜாதியத் தீண்டாமைக்கு எதிரானப் போராட்டத்திற்கு முகம் அறியாத – வெளிநாட்டில் வசிக்கும் பலரும் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து 100, 200, 500,1000...

இங்கர்சால் மறைவு

இங்கர்சால் மறைவு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன் அவர்களின் மகன் “இங்கர்சால்” 17.01.26 சனிக்கிழமை அதிகாலை மாரடைப்பால் முடிவெய்தினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை 4 மணி அளவில் மேட்டுப்பாளையம் சென்டயூரில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று “இங்கர்சால்” உடலுக்கு புகழ்வணக்கம் செலுத்தி, நினைவேந்தல் உரையாற்றி இரங்கல் தெரிவித்தார். மேட்டுப்பாளையம் எஸ்.எம்.எஸ் சிக்பால் (ம.தி.மு.க), சந்திரசேகர் (த.பெ.தி.க), அஷ்ரப் அலி (தி.மு.க), வேலுச்சாமி (தி.க), கோபால் (பா.ஜ.க.), அருள்வடிவு (மேட்டுப்பாளையம் நகர மன்ற துணைத் தலைவர்), முனுசாமி (தி.மு.க தெற்கு நகரச் செயலாளர்) ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர். துரைசாமி (கழகப் பொருளாளர்), ரத்தினசாமி (அமைப்புச் செயலாளர்), பன்னீர் செல்வம்(கோவை மாவட்டச் செயலாளர்), நிர்மல்குமார்( கோவை மாநகரத் தலைவர்), அமுல்ராஜ் (மேட்டுப்பாளையம் நகரப் பொறுப்பாளர்), அய்யப்பன் (திருப்பூர் வடக்கு ஒன்றிய அமைப்பாளர்), முத்து (திருப்பூர் மாநகர அமைப்பாளர்), சண்முகம் (பல்லடம் ஒன்றிய அமைப்பாளர்), திருப்பூர் இனியன், ராமசாமி (திருப்பூர் தெற்கு...

இடைவிடாத பரப்புரைகளால் நிறைந்த ‘2025’ கழகத்தின் ஓராண்டு களப்பணிகள்!

இடைவிடாத பரப்புரைகளால் நிறைந்த ‘2025’ கழகத்தின் ஓராண்டு களப்பணிகள்!

சனவரி 12: சென்னை ராயப்பேட்டையில் 25-ஆம் ஆண்டாக தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. திருப்பூர் மாஸ்கோ நகர் பெரியார் திடலில் முழு நாள் நிகழ்வாக தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா எழுச்சியோடு நடைபெற்றது. சனவரி 15: கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பெரியார் விருது வழங்கப்பட்டது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் விருதுடன், ரூ.5 லட்சத்திற்கான காசோலை, ஒரு சவரன் மதிப்பிலான பதக்கம் வழங்கி கவுரவித்தார். பெரியார் விருது பெற்ற கழகப் பொதுச்செயலாளருக்கு ராயப்பேட்டையில் கழகத் தோழர்கள், தோழமை இயக்கத்தினர் பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். சனவரி 22: பெரியார் குறித்து கண்மூடித்தனமாக அவதூறுகளை பரப்பி வந்த சீமான் வீட்டை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி எச்சரித்தது. இதில் திராவிடர் விடுதலைக் கழகம் பெருந்திரளாகப் பங்கேற்று சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. சனவரி 26: பெரியார் விருது...

எழுத்தாளர் பாமரன் இணையர் மறைவு!

எழுத்தாளர் பாமரன் இணையர் மறைவு!

எழுத்தாளர் பாமரன் அவர்களின் இணையர் தோழர் யாழ்மொழி அவர்கள் உடல் நலக்குறைவால் 26.12.2025 அன்று இயற்கை எய்தினார். 29.12.2025 கோவை பூ மார்கெட், சிரியான் சர்ச் ரோடுல் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி பாரமரன் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். பன்னீர் செல்வம் (கோவை மாவட்டச் செயலாளர்), நிர்மல் (மாநகரத் தலைவர்), வெங்கட்(மாநகரச் செயலாளர்), அன்னூர் விஷ்னு, மோகன கிருஷ்ணன், நவீன் மற்றும் கழகத் தோழர்கள் உடன் இருந்தனர். சமூக வலைதளப் பக்கத்தில் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதியிருந்த பதிவில், “அன்புத் தோழர் பாமரனின் இணையர் யாழ்மொழியின் இறப்புச் செய்தி, உண்மையிலே என்னை மிகவும் பாதித்திருக்கிறது. ஒரு சில முறைதான் அவரை நான் சந்தித்திருக்கிறேன். நீண்ட காலம் பழகியது போல் உணர்வுகளையும் உரிமைகளையும் எடுத்துக்கொண்டு கலகல என்று அவர் கொட்டிய அன்பு மொழிகள் அப்படியே என் கண் முன் தெரிகிறது. அன்புத்தோழர் பாமரனை வாழ்க்கையில் அவர் சுமந்தார்....

ஜாதியவாதிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு!   தமிழ்நாடு  அரசை  வலியுறுத்தி  கோவையில்  போராட்டம்

ஜாதியவாதிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு! தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கோவையில் போராட்டம்

2023 ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சேலத்தில் நடைபெற்ற ‘இது தமிழ்நாடு – இளம் தலைமுறையினரின் எச்சரிக்கை’ மாநாட்டில் ‘வைக்கம் போர் முடியவில்லை’ என்ற தலைப்பில் தீர்மானம் இயற்றப்பட்டு அதனடிப்படையில் தீண்டாமைக் கொடுமைகளைப் பட்டியலெடுத்துப் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆணையத்திலும் மனு அளிக்கப்பட்டது. 2025-இல் கழகத் தலைமைக் குழுவில் செப்-17 முதல் செப்-24 வரை “மனிதம் நமது அடையாளம்; ஜாதி நமக்கு அவமானம்” என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது என்றும் நிறைவாக கோவையில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி 200-க்கும் மேற்பட்ட தெருமுனைக் கூட்டங்களைக் கழகம் தமிழ்நாடு முழுவதும் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக கழகத்தின் சார்பில், கோவையில் ஜாதிய தீண்டாமைக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சட்ட நடவடிக்கை கோரி மாநிலம் தழுவிய போராட்டம், டிசம்பர் 29-அன்று காலை 10.30 மணிக்கு...

ஆர்வத்துடன் நிதி அனுப்பும் ஆதரவாளர்கள்!

ஆர்வத்துடன் நிதி அனுப்பும் ஆதரவாளர்கள்!

ஜாதிய தீண்டாமைக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சட்ட நடவடிக்கையை வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் டிசம்பர் 29 கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற உள்ள போராட்டத்திற்கு தோழர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள் பொதுமக்கள் தங்களால் ஆன ஆதரவை கொடுத்து உதவுமாறு பொதுவெளியில் சமூக ஊடகங்களில் தோழர்கள் பலரும் பதிவிட்டனர் அந்த பதிவை பலரும் தங்கள் பக்கங்களில் பகிர்ந்து ஆதரவு தெரிவித்தது மட்டுமின்றி, தங்களால் முடிந்த சிறு தொகையை அவரவர் சக்திக்கு ஏற்றவாறு நிர்மல் குமாரின் கூகுள் பே எண்ணுக்கு அனுப்பி, போராட்டம் வெல்ல வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கோவையைச் சேர்ந்த, தற்போது கத்தாரில் பணியாற்றி வரும் தோழர் ஒருவர் இந்த போராட்டம் மிக அவசியமானது எனக்கூறி, ஆர்வத்துடன் நிதி உதவி அளித்திருப்பதோடு, கழகத்தின் இந்த போராட்டத்திற்கான தீர்மானம் 2023-இல் சேலம் மாநாட்டில் இயற்றப்பட்ட சமயத்தில் இருந்து கவனித்து வருவதாக கூறியுள்ளார்....

டிசம்பர் 29- கோவையில் திரள்வோம்!  ஜாதி ஒழிப்பை வெகுமக்கள் இயக்கமாக்குவோம்!

டிசம்பர் 29- கோவையில் திரள்வோம்! ஜாதி ஒழிப்பை வெகுமக்கள் இயக்கமாக்குவோம்!

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், டிசம்பர் 29-ஆம் தேதி, ஜாதி தீண்டாமைக்கு எதிராக உறுதியான சட்ட நடவடிக்கைகள் கோரி போராட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டுக் கிராமங்கள் இன்னமும் ஜாதியக் கட்டமைப்புக்குள் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது உண்மையிலேயே ஒரு வெட்கப்படத்தக்க நிலையாகும். இன்னமும் கிராமங்களில் ஜாதி தீண்டாமைகள் எப்படி நியாயப்படுத்தப்பட்டு வருகின்றன, நிலைநாட்டப்பட்டு வருகின்றன, அதன் வடிவங்கள் எவ்வாறு இருக்கின்றன என்பதையெல்லாம் கோவை, திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமம் கிராமமாகச் சென்று ஆராய்ந்து, அதுகுறித்து விரிவான அறிக்கை ஒன்றைத் தயாரித்து ஒடுக்கப்பட்ட மக்களின் ஆணையத்தின் முன் திராவிடர் விடுதலைக் கழகம் கையளித்தது. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ‘ஜாதி ஒரு அவமானம், மனிதம் நமக்கு அடையாளம்’ என்ற ஒரு தலைப்பில் தமிழ்நாடு முழுதும் திராவிடர் விடுதலைக் கழகம் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி, மக்களிடம் ஜாதியத் தீண்டாமைக் கொடுமைகளுக்கு...

அம்பேத்கர் நினைவுநாளில் கழகம் மரியாதை!

அம்பேத்கர் நினைவுநாளில் கழகம் மரியாதை!

கோவை: புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில், கோவை மாநகர கழகத்தின் மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம் தலைமையில் காந்திபுரம் பெரியார் சிலை முன்பு தபெதிக அமைத்த அம்பேத்கர் படம் முன்பு காலை 9.30 மணிக்கு கோவை தோழர்கள் புகழ் வணக்கம் செலுத்தினர். இந்நிகழ்வில் கோவை மாவட்டத்தில் நிலவும் ஜாதிய தீண்டாமை வன்கொடுமைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை உறுதியாகப் போராடுவது என்று உறுதி ஏற்றனர். பன்னீர்செல்வம், வெங்கட், நிர்மல் குமார் உரையாற்றினர் தோழர்கள் கிருஷ்ணன், மாதவன், சதீஷ், நவீன், தரணி, சத்தியமூர்த்தி, மேட்டூர் பாலு, ஆதரவாளர்கள் சங்கனூர் கார்த்தி, பரத், இலக்கியா கலந்து கொண்டு புகழ்வணக்கம் செலுத்தினர். திருப்பூர்: மாவட்டக் கழகத்தின் சார்பாக புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில், அவரது நினைவைப் போற்றும் விதமாக மாநகர அமைப்பாளர் இரா. சரசுவதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஜாதி ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கழகப் பொருளாளர் சு.துரைசாமி, வீ.சிவகாமி (தலைவர்,...

ஜாதி வெறிக்கு முடிவுரை எழுத கோவையில் திரள்வோம்!   தமிழ்நாடெங்கும் திராவிடர் விடுதலைக் கழகம் பரப்புரை

ஜாதி வெறிக்கு முடிவுரை எழுத கோவையில் திரள்வோம்! தமிழ்நாடெங்கும் திராவிடர் விடுதலைக் கழகம் பரப்புரை

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், டிசம்பர் 29 அன்று கோவையில் ஜாதிய தீண்டாமைக்கு எதிரான மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ளது. இன்றைய நாகரீக உலகிலும் பல்வேறு வடிவங்களில் ஜாதியம் தலைதூக்கி நிற்கிறது. ஜாதிக் கயிறுகள், ஜாதிய குருபூஜைகள், ஜாதிய திருமண தகவல் மையங்கள், சமூக வலைதளங்களில் ஜாதி அடையாளத்தை வெட்கமின்றி ஒட்டிக்கொள்ளுதல் என ஜாதியை வலிமைப்படுத்தும் புதுவிதமான முயற்சிகள் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. ஜாதிச்சங்கங்கள் இந்த வேலைகளை இடைவிடாமல் செய்துகொண்டே இருக்கின்றன. இத்தகைய ஜாதி வெறிச்செயல்களால் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் தாழ்த்தப்பட்டோருக்கு நீதி கிடைப்பதையும் தடுக்க முயற்சிகள் நடக்கின்றன. இவற்றையெல்லாம் கண்டிப்பதுடன், ஜாதிய நடவடிக்கைகளுக்கான எதிரான அரசின் உறுதியான சட்ட நடவடிக்கைகளை வலியுறுத்தும் விதமாக, திராவிடர் விடுதலைக் கழகம் இந்த போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கிறது. தமிழ்நாடெங்கும் போராட்டத்திற்கு கழகத் தோழர்கள் தயாராகி வருவதுடன், “மனிதம் நம் அடையாளம் ஜாதி நமக்கு அவமானம்” என்ற தலைப்பிலே போராட்ட நோக்கத்தை விளக்கி, பரப்புரைப் பயணங்களையும் நடத்தி வருகின்றனர். அந்த...

ஜாதி ஒழிப்பு மாவீரர்களை நினைவில் ஏந்துவோம்! சட்ட எரிப்பு நாளில் எழுச்சிகரமான வீரவணக்க நிகழ்ச்சிகள்

ஜாதி ஒழிப்பு மாவீரர்களை நினைவில் ஏந்துவோம்! சட்ட எரிப்பு நாளில் எழுச்சிகரமான வீரவணக்க நிகழ்ச்சிகள்

அரசிலமைப்புச் சட்டத்தில் 25, 26, 13, 19, 368, 372(1) ஆகிய பிரிவுகள் ஜாதியைப் பாதுகாக்கும் விதமாக உள்ளது என்றும், அவற்றை நீக்க வேண்டுமென்றும் 03.11.1957 அன்று தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழக ஸ்பெசல் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றிய பெரியார், கோரிக்கைக்கு செவிசாய்க்க அரசுக்கு 30 நாட்கள் கெடு விதித்தார். ஆனால் கோரிக்கை குறித்து பரிசீலிக்க வேண்டிய அரசாங்கமோ, சட்டத்தை கொளுத்தினால் என்ன தண்டனை என்று வரையறுத்து மசோதாவை இயற்றி நிறைவேற்றியது. 3 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்று சட்டமியற்றி அச்சுறுத்திய பின்பும், முதல் நாளே தந்தை பெரியாரை திருச்சியில் வைத்து கைது செய்த பின்பும், 26.11.1957-இல் நடைபெற்ற சட்ட எரிப்புப் போராட்டத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று, நான்காயிரம் பேர் சிறைபுகுந்து, சிறைக்குள்ளேயும் விடுதலை ஆன ஒரு மாதத்தில் 18 பேர் உயிர் நீத்த வீரஞ்செறிந்த ஜாதி ஒழிப்புப் போராட்டம் இந்தியக் கண்டம் கண்டிராதது....

நாகரீக உலகிலும் ஜாதிவெறி தலைதூக்கலாமா?  சமத்துவ சிந்தனைகளை மக்கள் மனதில் விதைக்க ஜாதி ஒழிப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகிறது கழகம்!

நாகரீக உலகிலும் ஜாதிவெறி தலைதூக்கலாமா? சமத்துவ சிந்தனைகளை மக்கள் மனதில் விதைக்க ஜாதி ஒழிப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகிறது கழகம்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், டிசம்பர் 29 அன்று கோவையில் ஜாதிய தீண்டாமைக்கு எதிரான மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. மாநிலம் தழுவிய அளவிலான இந்த ஆர்ப்பாட்டத்தை ஒட்டி, கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கழகத்தின் சார்பில், சுவர் விளம்பரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தோழர்கள் ஆத்தூர் மகேந்திரன், சென்னிமலை செல்வராசு ஆகியோர் சுவர் விளம்பரங்கள் தீட்டும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சென்னை, ஈரோடு, சேலம், திருப்பூர், பொள்ளாச்சி, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு என பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டத்திற்கு தயாராவதற்கான திட்டமிடல் பணிகளில் கழகத் தோழர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள், தனியார் வாகனங்களில் தோழர்களை திரட்டி அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளனர். ஏற்பாடுகள் ஒருபக்கம் தீவிரமடைந்து கொண்டிருக்க இந்த ஆர்ப்பாட்டம் ஏன் என்ற விவாதமும் எழத் தொடங்கியிருக்கிறது. ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துவிட்டது. இனி இந்த ஆர்ப்பாட்டம் தேவைதானா என்ற உரையாடலும் ஒருபக்கம் நடந்து...

“ஜாதி நமக்கு அவமானம்” ஈரோடு, கோவையில் தீவிர பரப்புரை!

“ஜாதி நமக்கு அவமானம்” ஈரோடு, கோவையில் தீவிர பரப்புரை!

ஈரோடு: வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் கடந்த 09.11.2025 ஞாயிறு மாலை பவானி அந்தியூர் பிரிவு பகுதியில் ‘ஜாதி நமக்கு அவமானம்! மனிதம் நமது அடையாளம்!’ தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் வினோத் தலைமையேற்க, பரப்புரைச் செயலாளர் வேணுகோபால் முன்னிலை வகிக்க செல்வக்குமார் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் நாத்திக ஜோதி, விசிகவின் ஆற்றல், தலைமைக் கழகப் பேச்சாளர் .கா.சு வேலுச்சாமி, நாமக்கல் மாவட்டத் தலைவர் சாமிநாதன், மமகவின் மாநில தொண்டரணி செயலாளர் முஹம்மது ஆகியோர் கருத்துரையாற்றினர். இராம. இளங்கோவன் கழக வெளியீட்டுச் செயலாளர், பரப்புரைப் பயணத்தின் நோக்கத்தினை விளக்கி நிறைவுரையாற்றினார். பெரியார் பிஞ்சு அறிவுக்கனல் பெரியார் குறித்த பாடலை பாட பழனிச்சாமி நன்றியுரை ஆற்றினார். நிகழ்வில் பெரியார், அம்பேத்கர் மற்றும் கழகத்தின் செயல்பாடுகள், திராவிட மாடல் அரசின் சாதனைகள், மற்றும் பிரதமர் நரேந்திர மோடி குறித்த குறும்படங்கள் திரையிடப்பட்டு மக்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தோழர்கள்...

ஈரோடு: வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் கடந்த 09.11.2025 ஞாயிறு மாலை பவானி அந்தியூர் பிரிவு பகுதியில் ‘ஜாதி நமக்கு அவமானம்! மனிதம் நமது அடையாளம்!’ தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் வினோத் தலைமையேற்க, பரப்புரைச் செயலாளர் வேணுகோபால் முன்னிலை வகிக்க செல்வக்குமார் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் நாத்திக ஜோதி, விசிகவின் ஆற்றல், தலைமைக் கழகப் பேச்சாளர் .கா.சு வேலுச்சாமி, நாமக்கல் மாவட்டத் தலைவர் சாமிநாதன், மமகவின் மாநில தொண்டரணி செயலாளர் முஹம்மது ஆகியோர் கருத்துரையாற்றினர். இராம. இளங்கோவன் கழக வெளியீட்டுச் செயலாளர், பரப்புரைப் பயணத்தின் நோக்கத்தினை விளக்கி நிறைவுரையாற்றினார். பெரியார் பிஞ்சு அறிவுக்கனல் பெரியார் குறித்த பாடலை பாட பழனிச்சாமி நன்றியுரை ஆற்றினார். நிகழ்வில் பெரியார், அம்பேத்கர் மற்றும் கழகத்தின் செயல்பாடுகள், திராவிட மாடல் அரசின் சாதனைகள், மற்றும் பிரதமர் நரேந்திர மோடி குறித்த குறும்படங்கள் திரையிடப்பட்டு மக்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தோழர்கள்...

கோவையில் தீண்டாமை ஒழிப்பு ஆர்ப்பாட்டம்! மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை!

கோவையில் தீண்டாமை ஒழிப்பு ஆர்ப்பாட்டம்! மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை!

திருப்பூர் வீரபாண்டி பெரியார் படிப்பகத்தில் 03-11-2025 மாலை 5 மணி அளவில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி தலைமையில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன : தீர்மானம் -1 டிசம்பர் 24 தலைவர் பெரியார் நினைவு நாளையொட்டி கோவையில் ஜாதிய தீண்டாமைக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சட்ட நடவடிக்கையை வலியுறுத்தி கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமையில் மாபெரும் போராட்டத்தை நடத்துவது. அதற்கான சுவர் எழுத்து, சுவரொட்டி, சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்வதின் மூலமாக ஜாதியத் தீண்டாமைக்கு எதிரான இந்தப் போராட்டத்தின் நோக்கத்தை மக்களிடத்தில் எடுத்துச் செல்வது அதன் வாயிலாக தோழர்கள் மற்றும் மக்களை அணி திரட்டுவது தீர்மானம்- 2 கழக வார ஏடான “புரட்சிப் பெரியார் முழக்கம்” ஆண்டு சந்தா மூன்று மாவட்டங்கள் இணைந்து மொத்தம் 500 சந்தாக்களை நவம்பர் 03 தேதி முதல் டிசம்பர்...

மடத்துக்குளம், கோவையில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

மடத்துக்குளம், கோவையில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

திருப்பூர்: மடத்துக்குளம் – கணியூர் காரத்தொழுவு, துங்காவி பகுதிகளில் 12-10-2025 அன்று மடத்துக்குளம் மாவட்டக் கழகம் சார்பாக தந்தை பெரியார் 147வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, ‘ஜாதி நமக்கு அவமானம்; மனிதம் நமது அடையாளம்’ என்கிற கருத்தை முன்வைத்து தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. பெரியாரின் கருத்துக்கள் அடங்கிய துண்டறிக்கை பொதுமக்களிடம் வழங்கப்பட்டது. மடத்துக்குளம் ஒன்றிய தலைவர் கணக்கன் தலைமை தாங்கினார். மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளர் சிவானந்தம் முன்னிலை வகித்தார். கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, சமூக ஊடகப் பொறுப்பாளர் பரிமளராசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தங்கவேலு, கழக மாவட்டக் குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், முன்னாள் ஒன்றியச் செயலாளர் விசிக ராஜசேகர், கழக மாவட்டத் தலைவர் முகில் இராசு, மாநகர அமைப்பாளர் முத்து ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். கடத்தூர் சரவணன் நன்றி உரையாற்றினார். மாநகர துணைத் தலைவர் மாரிமுத்து, திருப்பூர் வடக்கு ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன்,...

சென்னிமலையில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

சென்னிமலையில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

ஈரோடு தெற்கு மாவட்டக் கழகம் சார்பில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பேரணி- மற்றும் பொதுக்கூட்டம் சனிக்கிழமை 14.09.2025 அன்று மாலை 6 மணியளவில் சென்னிமலை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தோழர்கள் கலந்து கொண்ட வாகனப் பேரணி வெள்ளோடு மாரியம்மன் கோவில் திடலில் இருந்து மேளதாளத்துடன் தொடங்கியது. தலைமைக் குழு உறுப்பினர் காவலாண்டியூர் ஈஸ்வரன் பேரணிக்கு தலைமை வகித்தார். ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திக ஜோதி, கரூர் மாவட்டத் தலைவர் மோகன் தாஸ், ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் சென்னிமலை செல்வராசு, திராவிடர் எழுச்சிப் பேரவை மாநிலத் தலைவர் சக்திவேந்தன், சுற்றுச்சூழல் போராளி முகிலன், கழக மாநிலப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். திமுக சென்னிமலை கிழக்கு ஒன்றியச் செயலாளர் செங்கோட்டையன் பேரணியை கொடியசைத்து துவங்கி வைத்தார். பேரணி வெள்ளோடு, அனுமன்பள்ளி ,...

இளைஞர்கள் புடைசூழ நடந்து முடிந்த கோவை பயிலரங்கம்!

இளைஞர்கள் புடைசூழ நடந்து முடிந்த கோவை பயிலரங்கம்!

கோவை மாவட்டக் கழகச் சார்பில் பெரியாரியல் பயிலரங்கம் 28.09.2025 அன்று கோவை ஆர்.எஸ்.புரத்தில் நடைபெற்றது. பயிலரங்கில் பங்கேற்ற தோழர்களின் அறிமுகத்துடன் நிகழ்வு தொடங்கியது. பயிலரங்கின் முதல் வகுப்பாக தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி, இந்திய வரலாற்றில் பார்ப்பனிய எதிர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார். அடுத்ததாக கழகப் பரப்புரைச் செயலாளர் பால்‌.பிரபாகரன், திராவிடர் இயக்க வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு பெரியார் தொண்டர் சிற்பி இராசனின் மந்திரமா! தந்திரமா! மூடநம்பிக்கை விளக்க நிகழ்ச்சி நடைப்பெற்றது. நிறைவாகக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஜாதி ஒழிப்புப் பணியில் திராவிடர் இயக்கம் என்ற தலைப்பில் வரலாற்றுச் சிறப்பிக்க உரையை நிகழ்த்தினார். கழகத் தலைவர் முன்னிலையில் கோவையைச் சேர்ந்த மோகன் கிருட்டிணன், வழக்கறிஞர் ஆல்டன், ஹரிஹரன், கவுதம், அஜய், சுதர்சன் ஆகியோர் தங்களைக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்குக் கழகத் தலைவர், கழக வெளியீடுகளை வழங்கி வரவேற்றார். பயிலரங்கில்...

ஜாதிவெறி மிரட்டல் காவல்துறையில் கோவை மாவட்டக் கழகம் மனு!

ஜாதிவெறி மிரட்டல் காவல்துறையில் கோவை மாவட்டக் கழகம் மனு!

கோவை மாவட்டக் கழகத்தின் சார்பில் நிர்மல் குமார் (மாநகரத் தலைவர்) தலைமையில் காவல்துறையிடம் மனு கொடுக்கப்பட்டது. கோபி, சுதாகர் இருவரும் பரிதாபங்கள் என்கிற வலையொலி சேனல் மூலம் விழிப்புணர்வு வீடியோக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்கள். ஆணவக் கொலைகளுக்கு காரணமாக உள்ளவற்றை விளக்கி அதனால் ஏற்படும் பாதிப்புகளை உணர்த்தியும் கல்வி சார்ந்து முன்னேறுவோம் ஒற்றுமையாக இருப்போம் என்பதை வலியுறுத்தியும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வெளியான நிலையில் திரைப்படத் தயாரிப்பாளர் சவுத்ரி தேவர் என்பவர் கோபி சுதாகர் இருவரையும் பகிரங்கமாக மிரட்டியுள்ளார். அதுமட்டுமன்றி அண்மையில நடந்த சுர்ஜித் ஆணவப் படுகொலையை நியாயப்படுத்தி ஜாதி வெறியை தூண்டியுள்ளார். இவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கழகத் தோழர்கள் நவீன் (தமிழ்நாடு மாணவர் கழகம் கோவை) வழக்கறிஞர்கள் பாபு, முத்துமாரி, சண்முகநாதன் (பெரியார் மாணவர் கழகம்), வழக்கறிஞர் நரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர். பெரியார்முழக்கம்இதழ்04092025

அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் கோவை கெம்பனூர் கிராமத்தில் தொடரும் பேருந்து தீண்டாமை

அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் கோவை கெம்பனூர் கிராமத்தில் தொடரும் பேருந்து தீண்டாமை

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமம் ஓரளவு பெரிய கிராமம். இந்த கிராமத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு நிகராக தாழ்த்தப்பட்டவர்கள் எண்ணிக்கையில் உள்ளனர். பிற்படுத்தப்பட்டவர்கள் வாழும் பகுதியின் மத்தியில் பள்ளிக்கூடம் உள்ள இடத்தில் ஒரு பேருந்து நிறுத்தம், அடுத்து 500 மீட்டர் தொலைவில் இந்த கிராமத்தில் தாழ்த்தப்பட்டோர் மக்கள் வாழும் பகுதி அண்ணா நகர் என்று அழைக்கப்படும் அந்த இடத்தில் ஒரு பேருந்து நிறுத்தம் உள்ளது. கெம்பனூருக்கு 21, 21b இரண்டு பேருந்துகள்தான். ஆனால் தற்போது 64D,1C, பேருந்துகள் செல்கின்றன, இடைப்பட்ட காலத்தில் 94 பேருந்து சென்றது. கொரானோ காலத்துக்குப் பிறகு செல்வது இல்லை. பொதுவாக மேலோட்டமாக பார்க்கும் போது அண்ணா நகருக்கு 21B காலை 8:30க்கு ஒரு முறையும் 1C ஒரு முறையும் 64D மூன்று முறையும் தானே செல்கிறது பிறகு என்ன பிரச்சனை என்று நினைக்கத் தோன்றும். ஆனால் உண்மை நிலை 21 காலை...

சென்னை, கோவையில் கலந்துரையாடல் கூட்டங்கள்

சென்னை, கோவையில் கலந்துரையாடல் கூட்டங்கள்

சென்னை: மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 07.06.2025 அன்று மயிலாப்பூரில் உள்ள கழகத் தலைமை அலுவலகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது. மறைந்த கழகத் தோழர் இசைக் கலைஞர் அருண் படத் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி தொடர்ச்சியாக கழகம் முன்னெடுத்த பிரச்சார கூட்டங்களையும், இளைஞரணி, நிமிர்வோம் வாசகர் வட்டம், மாணவர் கழக செயல்பாடுகளையும் பட்டியலிட்டு கருத்துரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன் கழகத் தோழர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அவற்றை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் பேசினார். தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு ராஜேந்திரன், அருண் கோமதி, புருஷோத்தமன், தினகரன், தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் பேரன்பு, தேன்மொழி, இரண்யா, பிரசாந்த், சிரிஜன், மகிழவன், நந்தகுமார், ஹர்ஷா ஆகியோர் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். மேலும் கழக வார இதழான ‘புரட்சிப்...

பேரறிஞர் அண்ணா நினைவுநாள்; கழகம் சார்பில் மரியாதை!

பேரறிஞர் அண்ணா நினைவுநாள்; கழகம் சார்பில் மரியாதை!

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை இராயப்பேட்டை பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சென்னை மாவட்ட தலைவர் வேழவேந்தன், ஓ.சுந்தரம் (திமுக), கழக இளைஞரணி அமைப்பாளர் ப.அருண், மாணவர் கழக அமைப்பாளர் பேரன்பு மற்றும் பகுதி கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர். கோவை: பேரறிஞர் அண்ணா அவர்களின் 56 ஆவது நினைவு நாளில் கோவை மாநகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் காந்திபுரம் பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலைக்கு, மாநகர அமைப்பாளர் கிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. பெரியார் முழக்கம் 13022025 இதழ்

கோவையில் அம்பேத்கர் – பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டம்!

கோவையில் அம்பேத்கர் – பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டம்!

கோவை மாநகர மாவட்டக் கழக சார்பில் புரட்சியாளர்கள் அம்பேத்கர் – பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டம் 24.12.2024 அன்று சிவானந்தா காலனி பேருந்து நிறுத்தம் அருகில் கோவை மாநகரச் செயலாளர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. மாநகர அமைப்பாளர் கிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். முன்னதாக நிகர் கலைக்குழுவின் பறையிசை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் “தற்கால அரசியலும் அம்பேத்கரும்” என்ற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியும், “ஜாதி ஒழிப்பில் தந்தை பெரியார் “ என்ற தலைப்பில் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவனும், “மார்க்சிய பார்வையில் பெரியாரும் – அம்பேத்கரும்” என்ற தலைப்பில் சிபிஐ (மாலெ) ரெட் ஸ்டார் மத்தியக்குழு உறுப்பினர்  மு. இனியவனும்  சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தமிழ்ப்புலிகள் கட்சி பொதுச்செயலாளர் இளவேனில், தலைமை செயற்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன், மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர் செல்வம், திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில் ராசு, கோவை மாநகரத் தலைவர் நிர்மல்...

மேட்டுப்பாளையத்தில் பெரியாரின் 146வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்; திருப்பூர் துரைசாமி, சிற்பி இராசன் பங்கேற்பு

மேட்டுப்பாளையத்தில் பெரியாரின் 146வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்; திருப்பூர் துரைசாமி, சிற்பி இராசன் பங்கேற்பு

மேட்டுப்பாளையம்: பெரியார் 146வது பிறந்த நாள் விழா 29.09.2024 அன்று மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இதற்குக் கோவை மாவட்டக் கழகத் தலைவர் மேட்டுப்பாளையம் இராமசந்திரன் தலைமை தாங்கினார். முன்னதாக சிவரஞ்சனி திரையரங்கம் முன்பு திராவிடர் விடுதலைக் கழகத்தின் மேட்டுப்பாளையம் நகரப் பொறுப்பாளர் அமுல்ராஜ் கழகக் கொடியை ஏற்றி வைத்தார். முதல் நிகழ்வாகப் பெரியாரியலாளர் சிற்பி ராசனின் மந்திரமல்ல! தந்திரமே! அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் மூலம் சாமியார்களின் பித்தலாட்டங்களைத் தோலுரித்துக் காட்டினார். பொதுக்கூட்டத்தில் கோவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்ச்செல்வி, மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் நவீன் குமார், திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில்ராசு, கோவை மாநகரத் தலைவர் நிர்மல் குமார் ஆகியோர் உரையாற்றினர். நிறைவாகக் கழகப் பொருளாளர் திருப்பூர் சு.துரைசாமி சிறப்புரையாற்றினார். மேட்டுப்பாளையம் நகரப் பொறுப்பாளர் அமுல்ராஜ் நன்றி கூறினார். நிகழ்வில் கோவை மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர் செல்வம்,திருப்பூர் மாநகரத் துணைத் தலைவர் மாரிமுத்து,...

ஒன்றிய அரசுக்கு எதிராகக் கழகம் போர் முழக்கம்

ஒன்றிய அரசுக்கு எதிராகக் கழகம் போர் முழக்கம்

கோவை: மாநில உரிமையைக் காப்போம்! கல்வி உரிமையை மீட்போம்! என்ற முழக்கத்துடன் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியைத் தடை செய்ய நினைக்கிற – பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து 12.9‌.2024 அன்று கோவை உக்கடம் வள்ளியம்மை பேக்கரி அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர அமைப்பாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநகரச் செயலாளர் வெங்கட் வரவேற்புரையாற்றினார். கழகத் தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், கோவை மாவட்டத் தமிழ்நாடு மாணவர் கழகப் பொறுப்பாளர் நவீன், திமுக மாணவரணிப் பொறுப்பாளர் மதிவாணன், மக்கள் அதிகாரம் பொறுப்பாளர் மூர்த்தி, பெண்ணிய செயற்பாட்டாளர் லோகநாயகி, மாநகரத் தலைவர் நிர்மல்குமார், CPIML ரெட்ஸ்டார் இனியவன், புரட்சிகர இளைஞர் முன்னணிப் பொறுப்பாளர் மலரவன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். நிறைவாக மாவட்ட அமைப்பாளர் சூலூர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார். முன்னதாக மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரிக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இதில்...

கழகத் தோழர் மதிவாணன் முடிவெய்தினார்

கழகத் தோழர் மதிவாணன் முடிவெய்தினார்

கோவை : வட சென்னையில் வசித்து வந்த கழகத் தோழர் மதிவாணன், 28.07.2024 அன்று அவரது இல்லத்தில் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென முடிவெய்தினார். அவரின் பூர்வீகம் கோவை என்பதால் அவரது உடல் கோவைக்கு எடுத்துச் செல்லப்பட்டு கோவை குறிச்சி அண்ணா நகரில் உள்ள மயானத்தில் எந்தவித மதச் சடங்கு சம்பிரதாயங்களின்றி உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி நிகழ்விற்கான ஏற்பாடுகளை கழக கோவை மாநகரத் தலைவர் நிர்மல்குமார், வட சென்னை மாவட்ட அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன், கழக மாநகர அமைப்பாளர் கிருட்டிணன், கழகத் தோழர் சதிஷ்குமார் ஆகியோர் மேற்கொண்டனர். தோழரின் உடலுக்கு கோவை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சந்திரசேகர், குமரேசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செந்தில்குமார் ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தோழர் மதிவாணன் பெரியாரியலை வாழ்வியலாக ஏற்றுப் பணியாற்றி வந்தவர் என்பதால் அவரது உடலை எந்த மதச் சடங்கு சம்பிரதாயங்களின்றி அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் எவ்வித...

பகுத்தறிவாளர் வி.பி.சண்முகசுந்தரம் மறைவு; கழகத் தலைவர் மரியாதை

பகுத்தறிவாளர் வி.பி.சண்முகசுந்தரம் மறைவு; கழகத் தலைவர் மரியாதை

கோபி : மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான சீரிய பகுத்தறிவாளர் வி.பி. சண்முகசுந்தரம் 20.07.2024 அன்று முடிவெய்தினார். இந்நிலையில் 28.07.2024 அன்று கோபியில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துக் கொண்டார். மேலும் அன்பழகன் IAS, மதிமுக மாவட்டச் செயலாளர் கந்தசாமி, கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் செல்வக்குமார் உள்ளிட்ட கழகத் தோழர்களும் ஆறுதல் தெரிவித்தனர். பெரியார் முழக்கம் 01.08.2024 இதழ்

புதிய குற்றவியல் சட்டங்களின் ஆபத்துகள் விளக்கக் கருத்தரங்கம்

புதிய குற்றவியல் சட்டங்களின் ஆபத்துகள் விளக்கக் கருத்தரங்கம்

பொள்ளாச்சி: சமஸ்கிருத பெயரிலான நஞ்சு தடவிய மூன்று குற்றவியல் சட்டங்களை அனுமதியோம்! சிறப்புக் கருத்தரங்கம் 28.07.2024 அன்று பொள்ளாச்சி பர்வானா அரங்கில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு பொள்ளாச்சி யாழ்.வெள்ளிங்கிரி தலைமை தாங்கினார். சபரிகிரி வரவேற்புரையாற்றினார். அரிதாசு முன்னிலை வகித்தார். இக்கருத்தரங்கில் கலந்துகொண்ட கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மக்கள் சிவில் உரிமைக் கழக தேசியச் செயலாளர் வழக்குரைஞர் ச.பாலமுருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். மேலும் இந்நிகழ்வில் பொள்ளாச்சி நகர மன்றத் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச்செயலாளர் கா.சு.நாகராசன், மக்கள் விடுதலை முன்னணி தலைவர் கா.மாரிமுத்து, தமிழ்நாடு தன்னுரிமை மீட்புக் கழகம் வழக்குரைஞர் சேதுபதி, திராவிடர் கழகம் மாரிமுத்து, தமிழ்ப்புலிகள் கட்சி தெற்கு மாவட்டச் செயலாளர் வானுகன், புரட்சிகர இளைஞர் முன்னணி வழக்குரைஞர் மலரவன் ஆகியோர் பங்கேற்று கருத்துரையாற்றினார்கள். நிறைவாக வினோதினி நன்றி கூற கருத்தரங்கம் நிறைவு பெற்றது. இதில் தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி,...

கோவையில் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கம்; கழக ஏட்டுக்கு 75,000 நன்கொடை

கோவையில் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கம்; கழக ஏட்டுக்கு 75,000 நன்கொடை

திராவிட இயக்கத் தலைமகன் பேரறிஞர் அண்ணாவின் 55ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்டக் கழக சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கம் 02.03.2024 அன்று கோவை அண்ணாமலை அரங்கில் நடைபெற்றது. எம்.ஆர்.இராதா கலைக்குழுவின் பகுத்தறிவுப் பாடல்களுடன் கருத்தரங்கம் தொடங்கியது. சூலூர் தமிழ்செல்வி கருத்தரங்கை தொகுத்து வழங்கினார். மாவட்ட அமைப்பாளர் புரட்சித் தமிழன் தலைமை தாங்கினார், மாதவன் சங்கர் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து “கோயில்களும் சமூகநீதியும்” என்ற தலைப்பில் மக்கள் சிவில் உரிமைக் கழக தேசிய செயலாளர் வழக்கறிஞர் ச.பாலமுருகன், திராவிட முன்னேற்றக் கழக கோவை மாநகர் மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் அன்புச் செழியன், திராவிட இயக்க செயல்பாட்டாளர் லோகநாயகி ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “அறிஞர் அண்ணாவும் தமிழ்நாடும்” என்ற தலைப்பில் நிறைவுரையாற்றினார். கருத்தரங்கின் முடிவில் ஜெகதீசன், கார்த்திக் ஆகியோர் கழகத் தலைவர் முன்னிலையில் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு கழகத்...

பரப்புரையில் பம்பரமாய்ச் சுழலும் திண்டுக்கல் – சென்னை மாவட்டங்கள்

பரப்புரையில் பம்பரமாய்ச் சுழலும் திண்டுக்கல் – சென்னை மாவட்டங்கள்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டக் கழக சார்பில் 2024 பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! பரப்புரை இயக்கம் 11.02.2024 அன்று நெய்காரபட்டி, காவலப்பட்டி, வேலாயுதம்பாளையம் புதூர், பாப்பம்பட்டி, ஆண்டிபட்டி, அய்யம்பாளையம், வயலூர், மிடாப்பாடி, குமாரபாளையம், குருவன்வலசு, தாழையூத்து, சின்னக்கலையம்புத்தூர், மானூர், நரிக்கல்பட்டி, மேல்கரைப்பட்டி, கீரனூர், தொப்பம்பட்டி, வாகரை, புளியம்பட்டி, அமரபூண்டி, விருப்பாச்சி, சத்திரப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, மாட்டுப்பாதை, கணக்கன்பட்டி, பொருளூர், கள்ளிமந்தயம், கொ.கீரனூர், I.வாடிப்பட்டி, சக்கம்பட்டி, சிந்தலப்பட்டி, அம்பிளிக்கை, இடையகோட்டை, மார்கம்பட்டி, சின்னக்காம்பட்டி, வெரியப்பூர், கேதையறும்பு, லெக்கயன்கோட்டை, அத்திக்கோம்பை, தும்பிச்சம்பட்டி, ஒட்டன்சத்திரம் இரயில் நிலையம், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம், மூலச்சத்திரம், ஸ்ரீராமபுரம், கன்னிவாடி, தருமத்துப்பட்டி, ஆத்தூர், சித்தயன்கோட்டை, செம்பட்டி உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் பத்து நாட்களாக தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றது. புளியம்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தை கவனித்த பெரியார் தொண்டர் ஒருவர் மாலை ஒன்றை வாங்கி பெரியார் படத்திற்கு மாலை அணிவித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது....

பெரியார் நினைவுநாள்; கழகத்தின் சார்பில் மரியாதை

பெரியார் நினைவுநாள்; கழகத்தின் சார்பில் மரியாதை

தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு கழக சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அது பின்வருமாறு:- சென்னை : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை மாவட்டக் கழக சார்பில்  இராயப்பேட்டை, சிம்சன், எம்ஜிஆர் நகர், தியாகராயர் நகர், மயிலாப்பூர், கலைஞர் கருணாநிதி நகர், நங்கநல்லூர், பிவி நகர், சேத்துப்பட்டு உள்ளிட்ட இடங்களில் கழகம் சார்பில் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது.   இந்நிகழ்வில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமார் மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், பகுதிக் கழக பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். கோவை : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு கோவை மாவட்டக் கழக சார்பில் காந்திபுரம் பெரியார் சிலைக்கு கழகத் தோழர் கண்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை...

குடும்ப விழாக்கள் நடத்த கோவை மாவட்டக் கழகம் முடிவு

குடும்ப விழாக்கள் நடத்த கோவை மாவட்டக் கழகம் முடிவு

கோவை மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் 11.01.2024, வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு கோவை அசோக் அலுவலகத்தில் நடைபெற்றது. கழக மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம் அவர்கள் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வருகிற மார்ச் மாதம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் கருத்தரங்கம், தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது, கோவை மாவட்டக் கழகத்திற்கு மாவட்ட அலுவலகம் அமைப்பது, ஆண்டிற்கு ஒருமுறை கோவை மாவட்டத் தோழர்கள் ஒன்றிணைந்து குடும்ப விழா நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. கலந்துரையாடல் கூட்டத்தின் முடிவில் புரட்சிப் பெரியார் முழக்கம் சந்தா தொகையாக ரூ.25,000 வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 18012024  இதழ்

கழகத் தோழர் நித்தியானந்தம் காலமானார்!

கழகத் தோழர் நித்தியானந்தம் காலமானார்!

கோவை மாவட்டம், பனப்பட்டியை சேர்ந்த கழகத் தோழர் நித்தியானந்தம் (37) 25.01.2024 அன்று உடல்நலக்குறைவால் காலமானார். மறைந்த நித்தியானந்தம் கடந்த 2015ஆம் ஆண்டு தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டு தொடர்ந்து பணியாற்றி வந்தார். ஜாதி ஒழிப்பு இயக்கத்தில் இணைந்ததற்காக தனது குடும்பத்தில் இருந்து புறக்கணிக்கப்பட்ட இவர். இரட்டைக் குவளை முறை உள்ளிட்ட தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக எந்தவித சமரசமின்றி போராடி வந்தார். ஊரின் எதிர்ப்பையும் மீறி கழகப் பரப்புரைக் கூட்டங்களை பனப்பட்டியில் கழகத் தோழர் முருகேசனுடன் இணைந்து நடத்தியவர். தொடர்ந்து தனது நண்பர்களுக்கு தனது சொந்த பணத்தை செலுத்தி புரட்சிப் பெரியார் முழக்கம் இதழை வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரியார் முழக்கம் 01.02.2024 இதழ்

ஆகம உருட்டு

ஆகம உருட்டு

குலக்கல்வி திட்டத்தை ராஜாஜி திணிக்க முயன்றபோது, வருணாசிரம தர்மத்தை வேரறுக்க பிள்ளையார் பொம்மையை உடைக்கும் போராட்டத்தை அறிவித்தார் பெரியார். 27.05.1953 அன்று திராவிடர் கழகத்தினரால் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் பிள்ளையார் பொம்மைகள் உடைக்கப்பட்டன. “கடவுள் பொம்மையை உடைக்கிறார்களே” என்று ராஜாஜியிடம் சிலர் கேட்க, “அது ஆகம விதிப்படி வைக்கப்பட்ட சிலை அல்ல, களிமண்ணால் செய்யப்பட்ட பொம்மை” என்றார். ஆனால் சேலத்தில் 1971-இல் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்டதோ அட்டையால் செய்யப்பட்ட ராமன் படம். அப்போதும் ராஜாஜியிடம் கேட்டார்கள், “அது பரங்கிமலை போன்ற சின்ன விஷயம், இது இமயமலை போன்ற பெரிய விஷயம். இரண்டையும் ஒப்பிடக் கூடாது” என்றாராம் ராஜாஜி. ஆக இடத்திற்கேற்றால் போல் மாற்றிக்கொள்ளும் பார்ப்பன ‘உருட்டு’தான் ஆகமம் என்பதை அப்போதே தெளிவுபடுத்திவிட்டார் ராஜாஜி. பெரியார் முழக்கம் 01.02.2024 இதழ்

திருப்பூர், கோவை, திண்டுக்கல்லில்  மக்கள்  பேராதராவுடன் தெருமுனைக் கூட்டங்கள்

திருப்பூர், கோவை, திண்டுக்கல்லில் மக்கள் பேராதராவுடன் தெருமுனைக் கூட்டங்கள்

திருப்பூர்: ஆகஸ்ட் 7,8 ஆகிய தேதிகளில் மங்கலம் நான்கு வழி சந்திப்பு, சுல்தான் பேட்டை, பெரியாண்டிபாளையம் பிரிவு, குமரன் கல்லூரி, ஊத்துக்குளி ஆர்.எஸ், கூழிபாளையம், மன்னரை, காங்கேயம் பேருந்து நிலையம், நத்தக்காடையூர், படியூர், பொங்கலூர், அருள்புரம், வீரபாண்டி பிரிவு, உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. ஆகஸ்ட் 21,22 ஆகிய தேதிகளில் பல்லடம் பகுதிகளுக்கு உட்பட்ட மகாலட்சுமி நகர், வடுகபாளையம், கேத்தனூர், காமநாயக்கன்பாளையம், லட்சுமி மில்ஸ், காரணம்பேட்டை, அனுப்பட்டி, எம்.ஜி.ஆர் சாலை ஆகிய இடங்களில் நடைபெற்றது. ஆகஸ்ட் 22 அன்று பல்லடம் லட்சுமி மில்ஸ் பகுதியில் 50வது தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. அதனையொட்டி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு, கழக முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சுப்பிரமணியம், திமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு ஒன்றிய தலைவர் முஜிபுர் ரகுமான், மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, மாநகர...

கோவை – சென்னை மாவட்டக் கழக கலந்துரையாடல் மாநாட்டுத் தீர்மானங்களை செயல்படுத்த – தோழர்கள் தீவிரம்

கோவை – சென்னை மாவட்டக் கழக கலந்துரையாடல் மாநாட்டுத் தீர்மானங்களை செயல்படுத்த – தோழர்கள் தீவிரம்

சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம், 28.05.2023 ஞாயிறு மாலை 6 மணியளவில், முருகேசன் திருமண மண்டபத்தில்  சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் நடைபெற்றது.   கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் நோக்கவுரையாற்றினார்.  மாவட்டத் தலைவர் வேழவேந்தன் முன்னிலை வகித்தார்.   நிகழ்வில் சேலத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கான வரவு செலவு கணக்குகள் குறித்தும் செயலவையில் இயற்றப்பட்ட தீர்மானம் குறித்தும் “எது திராவிடம்! எது சனாதானம்!” சென்னையில் 200 தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அன்பு தனசேகரன், கரு.அண்ணாமலை உட்பட்ட சென்னை மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள், பகுதி கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். கோவை மாவட்ட தலைவர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் 25.5.2023 அன்று கோவை இரயில் நிலையம் அருகேயுள்ள வழக்கறிஞர் கார்கி அலுவலகத்தில் மாலை 5 மணிக்கு கலந்துரையாடல் கூட்டம்  நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு...

காவல்துறை அதிகாரிகள், அரசு அலுவலர்களை தோழர்கள் சந்தித்து நிதி திரட்டினர்

காவல்துறை அதிகாரிகள், அரசு அலுவலர்களை தோழர்கள் சந்தித்து நிதி திரட்டினர்

சேலம் கழக மாநாட்டை ஒட்டி நன்கொடை திரட்டும் பணி ஏப்ரல் 17, அந்தியூரில் கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன் தலைமையில் ஈரோடு மாவட்டத் தலைவர் நாத்திகஜோதி முன்னிலையில் நடைபெற்றது. வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் மாநாட்டு நிதியை வழங்கினார்கள். அந்தியூரில் ரூ.13,030 நன்கொடை திரட்டப்பட்டது. பங்கேற்றோர் : இராம.இளங்கோவன், நாத்திகஜோதி, காவை ஈசுவரன், சித்துசாமி, இளவரசன், இளம்பிள்ளை தங்கதுரை, தங்கமாபுரிபட்டினம் ராமசந்திரன், நங்கவள்ளி கிருஷ்ணன், பிரபாகரன், வனவாசி உமாசங்கர், நந்தினி , கே.ஆர்.தோப்பூர். அஜித்குமார் ஆகியோர். சேலம் மேற்கு : தனிநபர் வசூல் பணி சுசீந்திரன், சாரா தலைமையில் ஏப்ரல் 17 ஆம் தேதி சங்ககிரியில் நடைபெற்றது. சங்ககிரி பேரூராட்சி தலைவர், பேரூராட்சி செயல் அலுவலர், காவல்துறை உயர் அதிகாரி மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் மாநாட்டு நிதி வழங்கினார்கள். ரூ. 25,300 வசூலானது. இளைஞர்கள் அதிகளவில் பெரியாரிய இயக்கத்தில் இருப்பதை பார்த்து அரசு அதிகாரிகள் பாராட்டி...

கழகம் எடுத்த புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

கழகம் எடுத்த புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

வேலூர்: புரட்சியாளர் அம்பேத்கர் 132ஆவது பிறந்தநாள் விழா வேலூர் மாவட்டக் கழக சார்பில் மாவட்டச் செயலாளர் சிவா தலைமையில் குடியேற்றம், கொண்டசமுத்திரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு திராவிடர்  விடுதலைக் கழகம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் இணைந்து மாலை அணிவித்து முழக்கங்கள் எழுப்பி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பின்பு அனைவரும் ஜாதி ஒழிப்பு உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். நண்பகல் 12 மணிக்கு வேலூர் மாநகரில் விசிக ஒருங்கிணைத்த “ஜனநாயகம் காப்போம்! சனாதனத்தை வேரறுப்போம்!”பேரணியில் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். நண்பகல் 2 மணிக்கு ராமாலையில் திராவிட் மற்றும் பகுதித் தோழர்கள் ஒருங்கிணைப்பில் அம்பேத்கருடைய புகைப்படத்திற்கு மாலை அணிவித்து பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் சிறப்பு உணவு வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு  வேலூர் மாவட்டம் புட்டவாரபள்ளி கிராமத்தில் அமல்ராஜ், ஒருங்கிணைப்பில் பொதுமக்களோடு இணைந்து அம்பேத்கர்  பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.   இரவு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது....

கரைபுரளும் உற்சாகம்; விளிம்புநிலை மக்களின் எளிய நன்கொடைகள் முழு வீச்சில் மாநாட்டுப் பணிகள்

கரைபுரளும் உற்சாகம்; விளிம்புநிலை மக்களின் எளிய நன்கொடைகள் முழு வீச்சில் மாநாட்டுப் பணிகள்

ஏப். 29, 30 தேதிகளில் கழக மாநாட்டுப் பணிகளில் கழகச் செயல் வீரர்கள் முழு வீச்சில் களத்தில் இறங்கியுள்ளனர். கோவை : கோவை மாவட்டக் கழகத்தினர் ஏப்ரல் 8-ஆம் தேதி மாலை 5 மணியளவில் வ.உ.சி மைதானத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிச்செல்வன், மண்டலக்குழுத் தலைவர் கதிர்வேல், மாநகராட்சி கல்விக் குழுத் தலைவர் நா.மாலதி, கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.ஆ.ரவி, வடவள்ளி சண்முகசுந்தரம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளை சந்தித்து மாநாட்டு அழைப்பிதழை வழங்கினார்கள். கலந்து கொண்டோர்: தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், நிர்மல் குமார், கிருட்டிணன், வெங்கட், மாதவன் சங்கர், துளசி, நிலா. ஏப்ரல் 7-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் துண்டறிக்கை பரப்புரை நடைபெற்றது. பொள்ளாச்சி : கழக மாநாட்டு விளக்க தெருமுனைக்...

1929 – சுயமரியாதை மாநாடும் தமிழ்நாட்டின் அரசியலும் கோவையில் கழகம் நடத்திய எழுச்சிக் கருத்தரங்கு

1929 – சுயமரியாதை மாநாடும் தமிழ்நாட்டின் அரசியலும் கோவையில் கழகம் நடத்திய எழுச்சிக் கருத்தரங்கு

கோவை மாநகரக் கழகம் ஏற்பாடு செய்த “1929 செங்கல் பட்டு முதல் சுயமரியாதை மாநாடும் தமிழ்நாட்டின் அரசிய லும்” கருத்தரங்கம் கோவை அண்ணாமலை அரங்கில் பிப்ரவரி 18, மாலை 5 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. நிகழ்விற்கு கழகத் தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம் தலைமை வகித்தார், கருத்தரங்கின் முதல் நிகழ்வாக பகுத்தறிவு பாடல்களை கழகத் தோழர்கள் கிருஷ்ணன், புரட்சித் தமிழன், யாழினி, தமிழினி, சுருதி, அம்பிகா, இசைமதி ஆகியோர் பாடினார்கள். சிவராசு வரவேற் புரையாற்றினார், அதைத் தொடர்ந்து மாநகரத் தோழர் வெங்கட் , மாவட்டத் தலைவர் இராமச்சந்திரன், மாவட்டச் செயலாளர் யாழ். வெள்ளிங்கிரி, கழகப் பொரு ளாளர் துரைசாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றப் பொறுப் பாளர் சிவகாமி ஆகியோர் உரையாற்றினர் . தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி “பெண்களை கைப்பிடித்து அழைத்து வந்த தலைவர் பெரியார்” என்று தனது உரையில் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து சிறப்புரையாற்ற வந்த...

ஈஷா மய்ய மர்மங்கள் : கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த கோவை மாவட்டக் கழகம் முடிவு

ஈஷா மய்ய மர்மங்கள் : கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த கோவை மாவட்டக் கழகம் முடிவு

கோவை மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் சனவரி 26, காலை 10 மணிக்கு கோவை ஆதித்தமிழர் பேரவை அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் பா. இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் அண்மையில் மறைந்த தூத்துக்குடி மாவட்ட தலைவர் பால்ராசு, தபெதிக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் இணையர் வசந்தி, தியாகி இம்மானுவேல் சேகரன் பேரவைப் பொதுச்செயலாளர் சந்திரபோஸ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஈசா யோகா மையத்தில் தொடரும் மர்மங்களைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்துவது, பெரியார் கொள்கைகளை விளக்கி புதிய இடங்களில் தெருமுனைக் கூட்டம் நடத்துவது, தலைமைக் கழக வெளியீடுகளை மக்களிடத்தில் பரவலாக கொண்டு சேர்ப்பது, பெரியாரியல், திராவிடர் இயக்க பயிலரங்கங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு நூலகங்களில் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ செல்கிறதா என்பதில் தோழர்கள் கவனம் செலுத்தி இதழ் செல்வதற்கு வழி செய்ய தோழர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 2023ஆம் ஆண்டிற்கான கழக வார...

திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் விடுதலை : வழக்கு நடத்திய திராவிடர் கழக வழக்கறிஞர் திருப்பூர் பாண்டியனுக்கு கழகம் நன்றி

திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் விடுதலை : வழக்கு நடத்திய திராவிடர் கழக வழக்கறிஞர் திருப்பூர் பாண்டியனுக்கு கழகம் நன்றி

2014ஆம் ஆண்டு அறிவுக்கு ஒவ்வாத ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை ஆபாசங்களை விளக்கி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன், தோழர்கள் அன்னூர் முருகேசன், முடுக்கந்துறை இரவிச்சந்திரன் துண்டறிக்கை வழங்கி பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தனர். இந்து முன்னணி கும்பல் சிலர் துண்டறிக்கை தரக்கூடாது என ஆபாசமாகப் பேசி ரகளையில் ஈடுபட்டு மோதலில் முடிந்த நிலையில் தோழர்கள் அன்னூர் முருகேசன், முடுக்கந்துறை இரவிச்சந்திரன் ஆகியோரை மேட்டுப்பாளையம் காவல்துறை கைது செய்தது. இந்து முன்னணியினர் சிலரையும் காவல்துறை கைது செய்தனர்.  கழகத் தோழர்கள் 15 நாள் சிறைக்கு பின் பிணையில் வெளிவந்தனர். இந்த வழக்கு 8 வருடமாக நடந்து வந்தது. திராவிடர் விடுதலைக் கழக தோழர்களுக்காக திராவிடர் கழகத்தின் வழக்கறிஞர் திருப்பூர் பாண்டியன் வழக்கறிஞராக தொடர்ந்து வாதாடினார். இந்நிலையில்  11.1.2023 இன்று திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.  இந்த வழக்குக்காக தொகை ஏதும் பெறாமல்...

டிசம்.24 பெரியார் நினைவு நாள் : தோழர்கள் ஊர்வலம்

டிசம்.24 பெரியார் நினைவு நாள் : தோழர்கள் ஊர்வலம்

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டத்தின் சார்பாக பெரியாரின் 49 ஆவது நினைவு நாளை ஒட்டி, இராயப்பேட்டை வி.எம்.தெரு பெரியார் படிப்பகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு காலை 9 மணி யளவில் மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தியாகராயர் நகர் பெரியார் சிலை, எம்.ஜி.ஆர். நகர், ஆலந்தூர், வன்னியம்பதி, மயிலாப்பூர் சென்மேரிஸ் பாலம், சுப்பராயன் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள பெரியார் சிலை, உருவபடங்களுக்கு தோழர்கள் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்தனர். ஒவ்வொரு பகுதியிலும் பெரியார் நினைவு மற்றும் கொள்கை முழக் கங்கள் எழுப்பப்பட்டன. நிகழ்வுகள் மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் நடை பெற்றது. தலைமைக் கழக பொறுப் பாளர்கள், மாவட்டம், பகுதி கழக பொறுப்பாளர்கள் மற்றும் சென்னை கழக தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். சேலம்: சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக தந்தை பெரியார் 49ஆவது நினைவு நாள் 24-12-2022 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் மாவட்டச்...

கழகம் முன்னெடுத்த சட்ட எரிப்பு நாள் நிகழ்வுகள் சென்னையில் கழகத் தலைவர் தலைமையில் உறுதி ஏற்பு

கழகம் முன்னெடுத்த சட்ட எரிப்பு நாள் நிகழ்வுகள் சென்னையில் கழகத் தலைவர் தலைமையில் உறுதி ஏற்பு

  திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் நவம்பர் 26 அன்று நடைபெற்ற சட்ட எரிப்பு நாள் பொதுக் கூட்டங்கள் வீர வணக்க நிகழ்வுகளின் தொகுப்பு. சென்னை : திராவிடர் இயக்கத்தின் மிக முக்கிய போராட்டமான ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை தோழர்கள் கொளுத்தி இந்திய ஒன்றியத்தை திரும்பி பார்க்க வைத்தப் போராட்டம் ‘சட்ட எரிப்புப் போராட்டம்’ ஆகும். இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில், பதாகைகள் சட்ட எரிப்பு போராளிகளை நினைவுகூரும் வகையிலும், வீரவணக்கம் செலுத்தும் வகையிலும் அமைக்கப்பட் டிருந்தது.  26.11.2022 அன்று காலை 8 மணியளவில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு  பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பின்பு சட்ட எரிப்பு நாள் குறித்து உரையாற்றினார். முன்னதாக, தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் தேன்மொழி  ‘ஜாதி ஒழிப்பு உறுதிமொழி’ வாசிக்க கழகத் தோழர்கள் உறுதியெடுத்தனர். ஜலகண்டாபுரம் : 26.11.2022 மாலை 6.00 மணியளவில் ஜலகண்டாபுரம் பேருந்து...

பெரியார் பிறந்த நாள் எழுச்சி; பரப்புரைக் கூட்டங்கள்

பெரியார் பிறந்த நாள் எழுச்சி; பரப்புரைக் கூட்டங்கள்

  பெரியார் பிறந்த நாளான செப்.17 அன்று கொடி ஏற்றம்; தெருமுனைப் பரப்புரை; பொதுக் கூட்டங்களை கழகம் நடத்தியது. தூத்துக்குடியில் பால் பிரபாகரன் உரை : ஆரிய விசம் முறிக்கும் அருமருந்து தந்தை  பெரியாரின் 144வது பிறந்த நாளில் சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்பீர் என்று தி.வி.க பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் அறைகூவல் விடுத்தார். தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் 17.09.2022 தந்தை பெரியாரின் 144வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் சனாதன எதிர்ப்பு விளக்கப் பொதுக் கூட்டமாக தூத்துக்குடி வடக்கு சோட்டையன்தோப்பு தருவைகுளம் முதன்மை சாலையில் நடைபெற்றது. நிகழ்விற்கு தி.வி.க.மாவட்ட துணைத் தலைவர் ச.கா.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். வே.பால்ராசு, ச.ரவிசங்கர், ம.அசோக் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சா.த.பிரபாகரன் வரவேற்புரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழக பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அவர் தனது உரையில் “தந்தை பெரியாரின் உழைப்பால் சமத்துவ சமூக மாற்றம் ஏற்பட்டு...

சனாதனத்தை வீழ்த்துவோம் – பெரியார் பிறந்தநாள் தோழர்கள் தயாராகிறார்கள்

சனாதனத்தை வீழ்த்துவோம் – பெரியார் பிறந்தநாள் தோழர்கள் தயாராகிறார்கள்

கோவை மாநகர  திராவிடர் விடுதலைக் கழக  கலந்துரையாடல் கூட்டம் 27.8.2022 மாலை 4மணி முதல் 6.30 வரை  வழக்கறிஞர்  கார்கி  அலுவலகத்தில்  நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: எதிர்வரும் செப் – 17 பெரியார் 144ஆவது பிறந்தநாளில் காலை 9 மணிக்கு கோவை காந்திபுரம் பெரியார் சிலைக்கு மாநகர தலைவர் நேருதாசு தலைமையில்  மாலை அணிவித்து   துண்டறிக்கை வழங்குவதெனவும் தொடர்ந்து சித்தாபுதூர், ரத்தினபுரி ஆறு முக்கு, பீளமேடு, காந்தி நகர், சவுரிபாளையம், உக்கடம், டுழு தோட்டம், பனைமரத்தூர், சூலூர், வடபுதூர், அன்னூர், மேட்டுப்பாளையம்  பகுதிகளில்  படத்திறப்பு விழா நடத்துவது. 2 .        செப் – 17 பெரியார் பிறந்தநாள் முடிந்த பிறகு கோவை மாவட்டத்திற்குட்பட்ட நகர கிராமப் பகுதிகளில்  தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது. பெரியார் பிறந்தநாள் விழா சனாதனத்தை வேரறுக்க உறுதி ஏற்போம் சுவரொட்டிகள்  800 அச்சடித்து கோவை மாவட்டத்தில் ஒட்டுவது. சனாதனத்தை வேரறுக்க உறுதி ஏற்போம் துண்டறிக்கை...

மேட்டூர் – சேலம் – சென்னை – கோவை – திருப்பூரில் கழகத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு விழா தெருமுனைக் கூட்டங்கள்

மேட்டூர் – சேலம் – சென்னை – கோவை – திருப்பூரில் கழகத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு விழா தெருமுனைக் கூட்டங்கள்

சேலம் மேற்கு மாவட்ட திவிகவின் சார்பில் கழகத்தின் 11ம் ஆண்டு துவக்க நாளில் தெருமுனைக் கூட்டங்கள் 12.08.2022 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு கொளத்தூர் பேருந்து நிலையத்தில் பறை முழக்கம்,மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவின் கொள்கைப் பாடல்களுடன் துவங்கியது. முதலாவதாக வழக்கறிஞர் கண்ணகி “பெரியாரின் தேவை, பெண்ணுரிமை” ஆகியவை குறித்து உரை நிகழ்த்தினார். அடுத்து கழகத்தின் பரப்புரைச் செய லாளர் பால்.பிரபாகரன்,  “திராவிடர் விடுதலைக் கழகம் கடந்து வந்த பாதைகளையும், தமிழக உரிமை களுக்காக கழகம் செய்த போராட்டங்கள், பரப்புரைகள் மற்றும் ஒன்றிய பிஜேபி அரசினால் நாம் எவ்வாரெல்லாம் வஞ்சிக்கப்படுகிறோம்” என்பதை பொதுமக்களுக்கு விளக்கிக் கூறினார். கொளத்தூர் பேருந்து நிலையத்தில் திரளான பொதுமக்கள் உரையை கேட்டனர். பொது மக்களுக்கு திராவிடர் விடுதலைக்கத்தின் கடந்த 10 ஆண்டு கால பரப்புரை, போராட்டங்கள், பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றை விளக்கி துண்டறிக்கை வழங்கப்பட்டது. நிறைவாக கொளத்தூர் நகர செயலாளர்  அறிவுச்செல்வன் நன்றியுரை கூற தெருமுனைக் கூட்டம் 11...