தமிழீழ எழுத்தாளர்களின் நூல்கள் அறிமுகம்!
புதுச்சேரி மாநில திராவிடர் விடுதலைக் கழக இளைஞரணி சார்பில் 2009 மே-18 தமிழ் இன அழிப்பு நாள் நினைவுகளோடு, “தமிழீழ வரலாற்றில் பெண் புலிகள் நூல்கள் அறிமுகம் நிகழ்ச்சி” 18.05.2026 திங்கட்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் புதுச்சேரி, மறைமலை அடிகள் சாலை, தோழமை ஒன்றுகூடல் அலுவலகத்தில் நடைபெற்றது. புதுச்சேரி மாநில திராவிடர் விடுதலைக் கழக இளைஞரணி தலைவர் அன்பு எழிலன் வரவேற்புரையாற்றினார். எந்த வித எதிர்பார்ப்புமின்றி பெரியாரிய கொள்கைக்காக கழகப் பணிகளை செய்தும், கொள்கைக்காக பல வழக்குகளை சந்தித்து சிறைக்குச் சென்ற தோழர்.கடலூர் தாமரைகண்ணன் முயற்சியில் தமிழ் ஈழ எழுத்தாளர்களின் எழுத்துக்கள் நூல் வடிவம் பெறுகின்றன. அவருக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் புதுச்சேரி மாநில தலைவர் லோகு. அய்யப்பன் பாராட்டி சால்வை அணிவித்தனர். “கஸ்தூரியின் ஆக்கங்கள், வானதியின் கவிதைகள், மேஜர் பாரதி எழுதிய காதோடு சொல்லிவிடு, தமிழீழ தியாகச்சுடர் அன்னைபூபதி, கனவுக்கு வெளியேயான உலகு, தமிழீழ...
