பிரேம் நாத் பசாஸ் எழுதிய இந்திய வரலாற்றில் பகவத் கீதை நூலிலிருந்து ‘நிமிர்வோம்’ வெளியிட்ட செய்திகள் மிகவும் சிறப்பானவை. தோழர்கள் இந்த வரலாற்றுக் குறிப்புகளைப் படித்து மேடைகளில் பேச வேண்டும். தொடர்ச்சியான வரலாற்றோடு இத்தகைய பார்ப்பனக் கொடுமைகளை விளக்கும்போதுதான் அது மக்களை சென்றடையும். – இளம் பரிதி, திருச்செங்கோடு ‘நிமிர்வோம்’ தலையங்கம் சிறப்பாக இருந்தது. “இந்தியாவை ஒற்றை ஆட்சி அதிகாரக் கட்டமைப்புக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்பது அவர்களின் முன்னுரிமைத் திட்டம். அந்த நோக்கத்தோடு மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு அதிகாரமற்றவைகளாக்கப்படுகின்றன. அதற்கான சட்டங்கள் வேகவேகமாக அதிரடியாக வந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆபத்துகளை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? மாநிலங்களின் முழுமையான உரிமைக்கான சுயஆட்சி உரிமைகளை வலியுறுத்தி, அதை மக்கள் இயக்கமாக்க வேண்டும். தமிழ் நாட்டை வடவர் மயமாக்கி சமஸ்கிருதம், இந்தி, பார்ப்பனிய வேத கலாச்சார மரபுகளை திணிக்கிறார்கள். இவற்றிற்கு எதிரான இயக்கத்தை மாநில சுயாட்சி முழக்கங்களோடு இணைக்க வேண்டும். தமிழ்நாடு மட்டுமே...
காஷ்மீர் பற்றிய வரலாற்றை எளிமையாக விளக்கியது நிமிர்வோம் கட்டுரை சிறப்பு உரிமை காஷ்மீர் மாநிலத்துக்கு மட்டுமல்ல; வடகிழக்கு மாநிலங்களுக்கும் இருக்கிறது என்பதை ஆதாரங் களுடன் கட்டுரை சுட்டிக் காட்டியுள்ளது. காஷ்மீரில் அமைதி திரும்பிவிட்டதாக பா.ஜ.க. அரசு செய்து வரும் பொய்ப் பிரச்சாரத்தக்கு தேசிய பார்ப்பன ஊடகங்களும் துணை போவது கடும் கண்டனத்துக்கு உரியது. பி.பி.சி. போன்ற சர்வதேச ஊடகங்கள் காஷ்மீரில் மக்கள் நடத்தும் போராட்டத்தை வெளிப்படுத்துவதையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இதில் அம்பலமாவது தேசிய பார்ப்பன ஊடகங்கள் தான்! அறிவழகன், சென்னை-42 இசை நாடகத் துறையில் பெரியார் இயக்கத்தின் கலகங்களை முனைவர் வே. இராமசாமி, குடிஅரசு இதழ்களிலிருந்து ஏராளமான செய்திகளுடன் எடுத்துக் காட்டியிருந்தார். பெரியாரே இரணியன் வேடம் போட்டு நடிக்க விரும்பிய செய்தி பெரியார் ஏதோ கலையையே வெறுத்தவர் என்ற தவறான புரிதலுக்கு நல்ல மறுப்பு அது மட்டுமின்றி நாடகம் 2 மணி நேரத்துக்குள் முடிவடைய வேண்டும். நாடகக் காட்சி தரும்...
முனைவர் இராமசாமி எழுதிய “இசை நாடகத்துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்” கட்டுரை பல வரலாற்றுத்தகவல்களை விவரிக்கிறது. பார்ப்பனரல்லாத கலைஞர்களின் சுயமரியாதைக்கு பெரியார் இயக்கம் எவ்வளவு கவலைப்பட்டிருக்கிறது என்பதை உணர வைத்தது. 1930இல் ‘குடிஅரசு’ ஏட்டில் பார்ப்பனரல்லாத ‘சங்கீத வித்வான்’களின் பெயர்ப் பட்டியலையே பெரியார் வெளியிட்டிருக்கிறார். “சங்கீத மாநாட்டை சுயமரியாதை இயக்கம் நடத்துவதற்குக் காரணம் கலையின் மேன்மையை உணர்த்துவதற்காக அல்லவென்றும் பார்ப்பனரல்லாத கலைஞர்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியை ஊட்ட வேண்டும் என்பதே நோக்கம் என்றும் பெரியார் தெளிவுபடுத்துகிறார். சுயமரியாதை இயக்கம் சார்பில் நடந்த முதல் நாடகமே ‘தீண்டாமை’ ஒழிப்பை முன் வைத்து தான் என்பது மற்றொரு முக்கியமான செய்தி. செங்கல்பட்டில் நடந்த முதல் சுயமரியாதை மாநாடு இரண்டு நாளில் முடிவடைந்து விட்டது, அது பலருக்கும் ஏமாற்றமாகி விட்ட தால் இரண்டாவது சுயமரியாதை மாநாட்டை ஈரோட்டில் ஒரு வார காலம் நடத்தத் திட்டமிட் டுள்ளதாக ‘குடிஅரசு’ வெளியிட்ட செய்தி வியப்பூட்டுகிறது. மாநாடுகளை மக்களிடம் சமுதாயப் புரட்சிக்...
திராவிட இயக்கங்களின் பகடி இலக்கியங்கள் குறித்து பேராசிரியர் ராஜ் கவுதமன் கட்டுரை மிக அருமை. இத்தகைய சிறப்பான கட்டுரையை வெளியிட்ட ‘நிமிர்வோம்’ இதழுக்கு நன்றி தெரிவிக்கிறேன். “உன்னதமானவற்றை உன்னதமில்லாதவர்கள் கேலி செய்து சிரிக்கிறபோது, உடன் நிகழ்ச்சியாக உன்னதங்கள் தலைகீழாகப் புரட்டப்படுகின்றன. சர்வ வல்லமை பெற்றவையாக உள்ளவை இந்தப் பகடியின் மூலமாக சாமானியமானவையாக ஆக்கப்படுகின்றன. உயர்ந்தவற்றின் அசாதாரணத் தன்மைகள் அகற்றப்படுகின்றன. மாற்றத்துக்காகக் குரலிடும் சாமானியர்களின் மருகிப்போன தன்னிலைகள் களிப்படைகின்றன. மனச்சுமை, குத்தல், குற்ற உணர்வு, பயம் எல்லாம் கழன்று, தன்மானமும் சுயமரியாதையும் ஏற்படுகின்றன. குழு உணர்வும் போர்க் குணமும் இணக்கமும் கைகூடுகின்றன. ……………… இந்துப் பண்பாட்டில் சீரியஸானவையாகக் கருதி, மதிக்கப்பட்ட அனைத்தையும் அனைவரையும் நகைப்புக் குள்ளாக்கும் கலகத்தைத் திராவிட இலக்கியமே தொடங்கி வைத்தது. இதற்கு முன் தமிழகத்தில் சித்தர்கள் இதனைச் செய்தார்கள்தான். ஆனால், இவர்களின் பகடி, மதத்துக் குள்ளேயே மற்றொரு மாற்று மதத்தை உண்டாக்கும் இலக்கினையே கொண்டிருந்தது. ஆனால், திராவிட இலக்கியத்தின் பகடி,...
‘செம்மொழித் தமிழ் மீது நஞ்சு கக்கும் நாகசாமி’ தலைப்பில் வெளி வந்த இரண்டு தொடர்களும் நாகசாமிக்கு மறுப்பு என்பதையும் தாண்டி மொழியியல் குறித்த சிறப்பான தகவல்களைக் கொண்டிருந்தன. ‘மனு நீதிக்கும் திருக்குறளுக்கும்’ உள்ள வேறுபாட்டை நாவலர் நெடுஞ்செழியன் நூல்களிலிருந்து ஓ. சுந்தரம் எடுத்துக் காட்டியிருப்பது சிறப்பு. ‘பிராமி’ எனும் பண்டைய எழுத்து வடிவ முறையை ‘பிராமணர்கள்’ தான் கண்டுபிடித்தார்கள் என்றால், தங்கள் வேத மொழியான சமஸ்கிருதத்துக்கு, ஏன் தனியாக எழுத்து வடிவத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற கேள்விக்கு பார்ப்பனர்கள் என்ன பதிலைக் கூறுவார்கள்? – மலர்விழி, மஞ்சக்குப்பம் மருத்துவமனையிலிருந்து பெரியார் பொதுக் கூட்டம் பேசச் சென்ற நிகழ்வை அவரது உதவியாளர் புலவர் இமயவரம்பன் பதிவு செய்திருந்ததைப் படித்தேன். இப்படியும் ஒரு தலைவரைப் பெற்றிருந்தோமே என்ற பெருமித உணர்வுதான் மேலிட்டது. பார்ப்பனர்களை எதிர்த்த போராட்டத்தில் பெரியார் வெற்றி பெற்றதற்கு அவர் பொது வாழ்க்கையில் உறுதியாகப் பின்பற்றிய நேர்மை, பொது ஒழுக்கம், ஒளிவு மறைவு...
‘திராவிடத்துக்கு முகவரி தந்த கால்டுவெல்’ என்ற கவிஞர் வைரமுத்துவின் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்ட ‘நிமிர்வோம்’ இதழுக்கு நன்றி சொல்ல வேண்டும். கால்டுவெல் குறித்து சுருக்கமாக அவரது ஆழமான கருத்துகளை வெளிக்கொண்டு வந்துள்ள மிகச் சிறந்த கட்டுரை. திராவிடம் என்பதே ஆரியக் குறியீட்டுச் சொல் தான் என்று பேசி வரும் சில தமிழ்த் தேசியர்களுக்கு வைரமுத்து கட்டுரையின் கீழ்க்கண்ட பகுதி சரியான பதிலைத் தருகிறது. “இலக்கிய இலக்கண புராண முற்கட்டுகளெல்லாம் திராவிடம் என்பதைத் தங்கள் வசதிக்கேற்பப் பொருள் கட்ட, கால்டுவெல் மட்டுமதான் திராவிடம் என்பது ஓர் இனக்குழு நாகரிகத்தின் மூத்த மொழிச் சுட்டு என்பதை அறிவியல் அடிப்படையில்மெய்ப்பித்தார்” என்பது மிகச் சரியான விளக்கமாகும். – சந்தோஷ், சேலம் உயர்ஜாதியினருக்கு 10 சதவீத பொருளாதார இட ஒதுக்கீடு குறித்து இரா. மன்னர்மன்னன் கட்டுரை மிகச் சிறப்பு. “கடந்த 2017இல் நடைபெற்ற நீட் தேர்வுகளில் ஒரு பாடத்தில் 9 மதிப்பெண்ணுக்ககும் கீழான மதிப்பெண் பெற்ற சுமார்...
‘நிமிர்வோம்’ வாசகர் வட்ட 9ஆவது கூட்டம் மார்ச் 3, 2019 மாலை சென்னை இராயப்பேட்டை முருகேசன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இலட்சுமணன் தலைமை தாங்க, இராஜேஷ் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் ஜெயப்பிரகாஷ் நிகழ்வை ஒருங்கிணைத்தார். அருண் – ‘சங்க காலத்தில் வைதிக ஊடுறுவல்’ எனும் தலைப்பிலும், சென்னைப் பல்கலைக் கழக அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்தைச் சார்ந்த பிரவீண்குமார், ‘பவுத்த தத்துவ சிந்தனையும்-கடவுள் மறுப்பும்’ என்ற தலைப்பிலும், கருந்தமிழன் கலைமதி, ‘உணர்வு-உரிமை-ஒழுக்கம்-பெரியாரியல் பார்வை’ என்னும் தலைப்பிலும், சங்கீதா, ‘பெண்களின் உரிமைகளை நோக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்புகள்’ என்ற தலைப்பிலும், நாத்திகன் இடஒதுக்கீட்டுக்கு எதிரான வாதங்கள்’ என்ற தலைப்பிலும், இளம் தமிழகம் ஒருங்கிணைப்பாளர் செந்தில், ‘புல்வாமா தாக்குதல்களும் – காஷ்மீர் பிரச்சினைகளும்’ என்ற தலைப்பிலும், கழக தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் ‘மத்திய அரசின் வேலை வாய்ப்புகளும்-மறுக்கப்படும் மாநில உரிமைகளும்’ என்ற தலைப்பிலும் ஆழமான கருத்துகளை முன் வைத்துப் பேசினர்....
திருச்சி கருஞ்சட்டைப் பேரணியின் சிறப்பிதழாக ‘நிமிர்வோம்’ மிகச் சிறப்பாக வெளி வந்திருக்கிறது. 1946இல் மதுரையில் நடந்த கருஞ்சட்டைப் படை மாநாட்டு வரலாற்றையும் பார்ப்பனர்கள் மாநாட்டுப் பந்தலை தீ வைத்து எரித்ததையும் விளக்கி திராவிட இயக்கத்தின் மூத்த பத்திரிகையாளர் மா. செங்குட்டுவன் எழுதிய கட்டுரை பல அரிய தகவல்களைத் தந்தது. அப்போது பெரியார்-அண்ணாவுக்கு இடையே கருத்து மாறுபாடுகள் – அது குறித்து நடிகவேள் எம்.ஆர். ராதா, கலைஞர் விமர்சனங்களையும் ‘நிமிர்வோம்’ நேர்மையுடன் பதிவு செய்திருந்ததையும் பாராட்டு கூறுகிறேன். – பெ. கார்த்திக், திண்டுக்கல் பாரதி குறித்து பெரியாரின் எழுத்துகளைப் படித்த போது பெரியார் எவ்வளவு துல்லியமாக பாரதியை ஆய்வு செய்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. சர்.பிட்டி தியாகராயர், நடேசனார், டி.எம். நாயர், பார்ப்பனரல்லாதாருக்காக தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தைத் தொடங்கியபோது பாரதி அதற்கு எதிர்வினையாக முன் வைத்த கருத்துகளை நினைவூட்ட விரும்புகிறேன். “பொய்யும் புனைவுமாகத் திராவிடர்கள் என்றும் ஆரியர்கள் என்றும் பழைய...
தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் என தொடர் படுகொலைகளை நடத்திய ‘சனாதன சன்ஸ்தா’வின் பயங்கரவாத பின்னணியை ‘நிமிர்வோம்’ இதழில் படித்தபோது அதிர்ச்சி யடைந்தேன். விரிவாக அம்பலப்படுத்திய ‘நிமிர்வோம்’ இதழைப் பாராட்ட வேண்டும். இவ்வளவு படுகொலைகள் செய்த அமைப்பை தடை செய்யாமல், மதவெறியை எதிர்த்தாலே ‘தேச விரோதிகள்’, ‘அர்பன் கொரில்லாக்கள்’ என்று அரசு அடக்குமுறைச் சட்டங்களை ஏவிவிடுவதை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். – செந்தில், வேலூர் பட்டியல் இனப் பிரிவினரில் முதல் முதலாக ‘கிரிமிலேயரை’ப் புகுத்தி பொருளாதார வரம்பை உச்சநீதிமன்றம் திணித்திருப்பதை ‘நிமிர்வோம்’ இதழ் அம்பலப்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் பல சமூக நீதித் தலைவர்கள் இந்த ஆபத்தைப் புரிந்து கொள்ளாமல் எப்படி தீர்ப்பை வரவேற்றார்கள்? – மனோஜ், நாமக்கல் ‘நேர்மைக்கு ஓர் இலக்கணம்’ பெரியார் பற்றிய கட்டுரை அரிய தகவல்களைக் கொண்டிருந்தது. இளைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டிய வரலாற்றுத் தகவல்கள் ஏராளம் இடம் பெற்றிருந்தன. – தென்றல், சென்னை நிமிர்வோம்...
திருச்சி கருஞ்சட்டைப் பேரணியின் சிறப்பிதழாக ‘நிமிர்வோம்’ மிகச் சிறப்பாக வெளி வந்திருக்கிறது. 1946இல் மதுரையில் நடந்த கருஞ்சட்டைப் படை மாநாட்டு வரலாற்றையும் பார்ப்பனர்கள் மாநாட்டுப் பந்தலை தீ வைத்து எரித்ததையும் விளக்கி திராவிட இயக்கத்தின் மூத்த பத்திரிகையாளர் மா. செங்குட்டுவன் எழுதிய கட்டுரை பல அரிய தகவல்களைத் தந்தது. அப்போது பெரியார்-அண்ணாவுக்கு இடையே கருத்து மாறுபாடுகள் – அது குறித்து நடிகவேள் எம்.ஆர். ராதா, கலைஞர் விமர்சனங்களையும் ‘நிமிர்வோம்’ நேர்மையுடன் பதிவு செய்திருந்ததையும் பாராட்டு கூறுகிறேன். – பெ. கார்த்திக், திண்டுக்கல் பாரதி குறித்து பெரியாரின் எழுத்துகளைப் படித்த போது பெரியார் எவ்வளவு துல்லியமாக பாரதியை ஆய்வு செய்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. சர்.பிட்டி தியாகராயர், நடேசனார், டி.எம். நாயர், பார்ப்பனரல்லாதாருக்காக தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தைத் தொடங்கியபோது பாரதி அதற்கு எதிர்வினையாக முன் வைத்த கருத்துகளை நினைவூட்ட விரும்புகிறேன். “பொய்யும் புனைவுமாகத் திராவிடர்கள் என்றும் ஆரியர்கள் என்றும் பழைய...
‘எழுத்தில் வராத வரலாறுகள் – களப்பணி யாளர்களின் வாய்மொழியாக பதிவு செய்யப்படும்போது இயக்கச் செயல்பாடுகளையும் தோழர்களின் உணர்வுகளை யும் உணர முடிகிறது. 14 வயதில் பெரியாரிடம் வந்து 23ஆவது வயதில் அரசுப் பணியில் சேர்ந்து ஓய்வுக்குப் பிறகு சைவ சித்தாந்தத்தில் ஈடுபட்ட நிலையிலும் தன்னை ஆட்கொண்ட தலைவர் பெரியார்தான் என்று கூறம் மா.கோபாலின் வாய்மொழி வரலாறு மெய்சிலிர்க்க வைத்தது. அன்று சென்னையில் திராவிடர் கழகம் எப்படி செயல்பட்டது; கூட்டங்கள் எப்படி நடத்தப்பட்டன என்ற வரலாறுகளை இளைய தலைமுறைக்கு உணர்த்தியது, இந்த வாய்மொழி வரலாறு. – மணி, திருச்சி ‘பிரம்மத்தைப் பார்த்த பிரமாணன் உண்டா?’ என்ற புத்தர் இயக்கம் பற்றிய கட்டுரை பல தகவல்களை அறிய உதவியது. முடிதிருத்தும் நாவிதர் சமூகத்தைச் சார்ந்த உபாலி – பவுத்த சங்கத்தில் புத்தருக்கு அடுத்த இடத்தில் உயர்த்தப்பட்டதோடு பவுத்த நூலான திரிபிடகத்தைப் படித்து மற்றவர்களுக்கு விளக்கக்கூடிய நிலையிலும் இருந்திருக்கிறார் என்பது அந்த காலத்தில் புத்தர் செய்த...
‘கருப்பும் காவியும் இணைந்தபுள்ளி’ கட்டுரை பல அரிய தகவல்களைத்தந்தது. பார்ப்பனியத்தை முதன்மையான எதிரியாக தமிழினத்துக்கு அடையாளம் காட்டிய பெரியார், அதற்குக் கருத்தியலை வழங்கும் பார்ப்பனர்களைக்கூட அவர்கள் மேலாதிக்கத்தை எதிர்த்தாரே தவிர, தனிப்பட்ட பார்ப்பனர்களிடம் பகைமை பாராட்டியதில்லை. அனல் வீசும் கருத்துக் களங்களும் அதன் வழியாக நடந்த உரையாடல்களுமே தமிழ் நாட்டைப் பண்படுத்தி உயர்ந்தன. பெரியாரின் அத்தகைய அணுகுமுறைக்கு சான்றாக பெரியார்-அடிகளார் உறவு நிலவியது. 1971ஆம் ஆண்டு சேலத்தில் “இராமனை செருப்பாலடித்த” திராவிடர் கழக ஊர்வலத்தைத் தொடர்ந்து பார்ப்பனர் -பார்ப்பனரல்லாதார் எழுச்சியைத் தமிழகம் பார்த்தது. அப்போது பெரியார் உருவப் படத்தை பார்ப்பன சக்திகள் பல பகுதிகளில் செருப்பாலடித்தபோது பெரியார் ஆத்திரப்படவில்லை. குறைந்த விலையில் எனது செருப்பையும் படத்தையும் அனுப்புகிறேன்; நன்றாக அடியுங்கள்; அதன் வழியாக எனது கொள்கைதான் பரவும் என்றார். அக்காலகட்டத்தில் காவி உடை தரித்த குன்றக்குடி அடிகளார் கூறியதுதான் மிகவும் முக்கியமானது. “இன்று ஆத்திகம் என்பது உயர்சாதி நலன் காப்பது; நாத்திகம்...
வளர்ச்சித் திட்டமா? அழிவுத் திட்டமா? அணுக்கழிவுகளை ஒரு இலட்சம் ஆண்டுகள் பாதுகாக்க வேண்டும் என்ற சுந்தரராஜன் உரையைப் படித்தபோது அதிர்ந்து போனேன். வளர்ச்சிக்கான திட்டங்கள் என்ற பெயரில் மக்களின் உயிர் வாழ்க்கையே வளர்ச்சிக்கு விலையாகக் கேட்கும் திட்டங்களை எப்படி ஏற்க முடியும்? தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்தினாலும் 13 உயிர்களை துப்பாக்கிச் சூட்டுக்குப் பலி கொடுத்ததினாலும் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது. இப்போது பசுமைத் தீர்ப்பாயத்தின் வழியாக தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, மீண்டும் தூத்துக்குடியில் நுழைய ஸ்டெர்லைட் நிறுவனம் முயற்சிக்கிறது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திலும் வரதட்சணை ஒழிப்புச் சட்டத்திலும் ஓட்டையைப் போட்டு சட்டத்தின் வலிமையை சிதைக்கும் தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதி கோயல் பதவி ஓய்வு பெற்ற அடுத்த சில மணி நேரங்களிலேயே நடுவண் ஆட்சியால் பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவராக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்றவுடன் வேதாந்தா நிறுவனம் தனக்கு சாதகமான உத்தரவுகளைப் பெறத் தொடங்கி விட்டது. லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு...
‘தலித் வீரர்களைப் புறக்கணிக்கும் கிரிக்கெட் பார்ப்பனியம்’ கட்டுரை மிகவும் சிறப்பு. “பூனா கிரிக்கெட் சங்கத்தில் 100 மணி நேரம் பந்து வீசியும், ஒரு முறைகூட மட்டை வீச வாய்ப்பு அளிக்கப்படவில்லை. தண்ணீர் அருந்துவதற்கும் தனிக் குவளை தந்தார்கள்” என்று தலித் கிரிக்கெட் வீரர் பல்வன்கர் பாலூ, தன் மகனிடம் கூறியிருந்த செய்தியைப் படித்தபோது கண்ணீர் வந்தது. தென்னாப்பிரிக்காவில் கறுப்பின வீரர்களுக்கு கிரிக்கெட்டில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது போல் ஏன் இந்தியாவிலும் ‘தலித்’ வீரர்களுக்கு வழங்கக் கூடாது? இதே கருத்தை வலியுறுத்தி ‘இந்து’ ஆங்கில நாளேட்டின் ஞாயிறு மலரில் (ஆகஸ்ட் 12, 2018) ஒருவர் கட்டுரை எழுதியுள்ளார். “கிரிக்கெட்டில் இடஒதுக்கீடு வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரைக்கு கடும் எதிர்ப்புகள் வந்தன. இந்தியாவில் 27 சதவீத மக்கள் இப்போதும் தீண்டாமையைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று ‘மனித வளமேம்பாட்டுத்’ துறை நடத்திய ஆய்வு கூறுகிறது. இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளில் ஒரு...
‘நிமிர்வோம்’ ஜூன் 2018 இதழ் வி.பி.சிங் சிறப்பிதழாகவே வெளி வந்திருப்பது மிகச் சிறப்பு. உ.பி.யில் வடநாட்டில் பிறந்தவராக இருந்தாலும், வட நாட்டவருக்கே உரிய வழமையான இந்து வெறி மதவாதம், பழமைவாதம் என்ற சிந்தனையிலிருந்து தன்னை முற்றாக விடுவித்துக் கொண்டு, சமூக நீதி – சமத்துவம் என்று சிந்தித்த வி.பி.சிங், உண்மையிலேயே ஒரு அதிசய மனிதர் தான். தனது பிரதமர் பதவியையே தூக்கி எறிந்து, அவர் பாதுகாத்துத் தந்த 27 சதவீத இட ஒதுக்கீட்டில்தான் ஒவ்வொரு பிற்படுத்தப்பட்ட அரசு ஊழியரும் பயன் பெற்று வருகிறார்கள். அந்த நன்றி உணர்ச்சி இல்லாத சமூகத்தில் ‘நிமிர்வோம்’ நன்றி உணர்வுடன் அவருக்கு சிறப்பிதழை வெளியிட்டிருப்பதைப் பாராட்ட வேண்டும். சொல்லப் போனால் தமிழ்நாட்டிலிருந்து தி.மு.க.வுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கூட இல்லாத நிலையில் முரசொலி மாறனுக்கு அமைச்சர் பதவி வழங்கியவர் அவர். தி.மு.க.கூட அவரை மறந்து விட்டது என்பது ஒரு சோகம் தான். – நா. கண்மணி, திருச்சி ஏ.ஜி.நூராணி...
மே 2018 ‘நிமிர்வோம்’ இதழில் இடம் பெற்றிருந்த ‘சுயமரியாதை-சமதர்மக் கட்டுரைகள்’ மிகவும் சிறப்பு. ‘பணக்காரன்-ஏழை’ முரண்பாடுகளைக் கோட்டையாக இருந்து பாதுகாப்பதே இந்தியாவின் ‘மேல்ஜாதி-கீழ்ஜாதி’ அமைப்புதான் என்று 1931ஆம் ஆண்டிலேயே பெரியார் எவ்வளவு சரியாகக் குறிப்பிட்டிருக்கிறார் என்பது பெரும் வியப்பைத் தருகிறது. இந்தியாவில் ‘வர்க்கப் போராட்டம்’ என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு ஜாதிய ஒடுக்குமுறை காரணமாக நடக்கும் மோதல்களுக்கு முகம் கொடுக்கும் காலகட்டத்திலேதான் இருந்து கொண்டிருக்கிறோம். “நான் ஏன் நாத்திகனானேன்?” என்ற பகத்சிங் நூலை தமிழில் மொழி பெயர்த்த ப. ஜீவானந்தம் மீது தேசத் துரோக வழக்கை அன்றைய பிரிட்டிஷ் அரசு போட்டபோது அதற்கு ‘மன்னிப்புக் கேட்டு’ எழுதச் சொன்னது நான்தானே தவிர, ப.ஜீவானந்தம் அல்ல என்று பெரியார் எழுதியதைப் படித்தபோது அவரது நேர்மை வியக்க வைத்தது. இத்தகையத் தலைவர்களை இப்போது பார்க்க முடியுமா? – தமிழ்நேசன், திருச்சி ஜாதி-மதப் பண்பாட்டை எதிர்க்காமல், ஆணாதிக்க எதிர்ப்பு மட்டுமே சமத்துவத்தை உறுதி செய்யாது என்ற...
ந.பிரகாசு எழுதிய ‘அய்.பி. எல்.லுக்கு தமிழ் நாட்டில் தடை கேட்டது அவமானமா’ கட்டுரை அரிய தகவல்களைத் தந்தது. யாரையும் தொடாமல் விளையாடும் விளையாட்டாக கிரிக்கெட் இருப்பதுதான் பார்ப் பனர்கள், இந்த விளையாட்டை அதிகம் நேசிக்கக் காரணம் என்று ஆய்வாளர் இராமச்சந்திர குகா கூறியுள்ள கருத்து மிகவும் சரியானது. கிரிக்கெட்டையும் அரசியலையும் ஏன் இணைத்துப் பார்க்க வேண்டும் என்று கேட் போருக்கு, சூதாட்டப் புகாரில் சிக்கிய ஒரு விளையாட்டை தமிழ்நாட்டில் விளையாட அனுமதிப்பது தமிழ்நாட்டுக்கே அவமானமில்லையா என்று கட்டுரையாளர் அளித்த பதில் மிகவும் சிறப்பு. – மணிவண்ணன், திருச்சி உச்சநீதிமன்ற தலைமை பார்ப்பன நீதிபதி தீபக் மிஸ்ரா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ‘நிமிர்வோம்’ இதழில் படித்த போது அதிர்ச்சியாக இருந்தது. அருணாசலப் பிரதேச ஆட்சியை மத்திய அரசு கலைத்தபோது முதல்வராக இருந்த காலிக் கோ புல்லின் 60 பக்கம் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதும், அந்தக் கடிதத்தில் ஆட்சிக்கு ஆதரவாக...
திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம் 4ஆவது சந்திப்பு ஏப்ரல் 30, 2018 அன்று மாலை 6 மணிக்கு விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடைபெற்றது. அண்மையில் முடிவெய்திய ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் படத்தை விடுதலை இராசேந்திரன் திறந்து வைத்தார். நிகழ்வில் ‘நிமிர்வோம்’ ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத இதழ்களில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளைக் குறித்து தங்களது பார்வைகளை தோழர்கள் ஜெயபிரகாஷ், மதன்குமார், துரை, அருண், கார்த்திக், இராசேந்திரன் ஆகியோர் எடுத்துரைத்தனர். அதைத் தொடர்ந்து இந்நிகழ்வில் அம்பேத்கர் காண விரும்பிய சமூக ஜனநாயகம் என்ற தலைப்பில் புனித பாண்டியன் (‘தலித் முரசு’ ஆசிரியர்) சிறப்புரையாற்றினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கட்டுரைகளைக் குறித்து தோழர்கள் கேட்ட கேள்விகளுக்கு தெளிவான விளக்கத்தைக் கூறினார். இதில் 35க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 10052018 இதழ்
நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் நான்காவது சந்திப்பு ! வருகிற ஞாயிற்றுக்கிழமை (29.04.18) மாலை 5 மணிக்கு திவிக தலைமை அலுவலகத்தில் நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் நான்காவது கூட்டம் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் நிமிர்வோம்,ஆக.,செப். இதழ்களை குறித்து வாசகர் விமர்சனமும், தலித் முரசு ஆசிரியர் தோழர். புனிதபாண்டியன் அவர்கள் ‘அம்பேத்கர் காண விரும்பிய சமூக ஜனநாயகம்’ தலைப்பின் கீழும் கருத்துரையாற்றுகிறார்கள்.
கவிஞர் வைரமுத்து “Indian Movement some aspects of dissent, protest & reform” என்ற அரிய ஆய்வு நூலில் இருந்து, ஆண்டாள் பற்றி கூறிய கருத்துகளை வைத்து, அவருக்கு எதிராக பல அருவருக்கத்தக்க செயல்களை சங் பரிவார் அமைப்புகள் செய்தன. தமிழ்நாட்டின் கருத்துரிமை மரபுக்கு சவால் விடும் விதமாக எச்.ராஜா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பேசினார். இதற்கு எதிர்வினையாக, சென்னை மாவட்ட திவிக, ஆண்டாளை பற்றிய கருத்தரங்கத்தை நடத்தியது. இக்கருத்தரங்கத்தில், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சியின் சென்னை மாவட்ட செயலாளரும், சீரிய சிந்தனையாளருமான தோழர் வாலாஜா வல்லவன், ஆண்டாளை குறித்து பேசினர். அவர் பேசியவை கட்டுரையாக “நிமிர்வோம்” இதழில் வெளியிடப்பட்டுள்ளது. தேவரடியார் மரபு எப்போது உருவானது? அதில் சோழர் ஆட்சியின் பங்கு என்ன? உடன்கட்டை ஏறுதல் தமிழ்நாட்டில் இருந்ததா? நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் என்ன சொல்லியிருக்கிறார்? ஆகிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக பல அரிய வரலாற்று கருத்துகள் கட்டுரையில்...
தோழர்கள் ஆங்காங்கே ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டங்களை உருவாக்கி இதழில் வெளிவரும் கட்டுரைகளை விவாதித்து வருகிறார்கள். சென்னை, திருப்பூர், கொளத்தூர், நாமக்கல் உள்ளிட்ட நகரங்களில் நிகழ்வுகள் விவாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வாசகர் வட்டம் விரிவடையட்டும். – ஆசிரியர் குழு நிமிர்வோம் பிப் 2018 இதழ்
‘நிமிர்வோம்’ மாத இதழை தொடர்ந்து வாசித்து வருகிறேன். வரலாற்றுச் செய்திகளையும் தற்கால அரசியல் பொருளியல் பிரச்சினைகளையும் பெரியார் பார்வையில் பதிவு செய்து வருகிறது. குறிப்பாக நவம்பர் மாத இதழில் வந்த கட்டுரைகள். காந்தி ஜாதியை ஆதரித்தாரா? எதிர்த்தாரா? என்ற கட்டுரை காந்தி பற்றிய புதிய புரிதலைத் தந்தது. காஞ்சா அய்லய்யா பேட்டியில் ‘சமூகக் கடத்தல்’ குறித்து விரிவாக விளக்கியிருந்தார். அந்த சொற்றொடரே சிந்தனையைக் கிளறிவிட்டது. குழந்தை பெற்றுக்கொள்ளாவிட்டால் ஆண் ஆண்மையற்றவன், பெண் மலடியானவள் சொத்துக்கு வாரிசு இல்லாமல் போய்விடும் வயதானால் பார்த்துக்கொள்ள ஆள் இருக்கமாட்டார்கள் என்பதையெல்லாம் அடித்து நொறுக்கி குழந்தை வேண்டாம் என்று முடிவெடுத்து வாழும் தம்பதிகள் குறித்து வெளிவந்த கட்டுரை மிகவும் சிறப்பு. 1957 நவம்பர் 26 சாதியை ஒழிக்க சட்டத்தை எரித்து சிறை சென்ற கருஞ்சட்டைத் தோழர்களின் தியாகத்தை வாசிக்கும் போது உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது. களப்பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்ற உந்துதலைக் கொடுத்தது. ஜனவரி மாத இதழ் கார்ப்பரேட்...
வணக்கம். நான் 10 மாதங்களாக “நிமிர்வோம்” இதழை படித்து வருகிறேன். அக்டோபர் மாத இதழ் என்னை மிகவும் கவர்ந்தது. திவிக நடத்திய “பெண் போராளிகளின் அறைகூவல்” நிகழ்வை பற்றிய குறிப்புகள் அருமை. இயல்பாகவே முற்போக்கு சிந்தனைகளோடு இருக்கும் இளைய தலைமுறையினரை ஜாதிசங்கங்களின் வெறியூட்டல்களில் இருந்து காக்க “சுயஜாதி மறுப்பும்”, “ஜாதி பெருமித மறுப்பும்” எவ்வளவு முக்கியமானது என்பதை, நிகழ்வின் குறிப்புகள் உணர்த்தின. “தி ஒயர்” என்ற ஆங்கில இணையதளத்தில் பெரியாருக்கு எதிராக பாபாசாஹேப் அம்பேத்கரை நிறுத்த, ஒரு கட்டுரையின் மூலம் பார்ப்பனர்கள் முயன்று பார்த்தனர். அதை முறியடிக்கும் விதமாக, பேராசிரியர் ஆனந்தி எழுதிய ஆங்கில கட்டுரையை, நிமிர்வோம் இதழ் தமிழில் வெளியிட்டிருந்தது. பெரியாரை கொச்சைப்படுத்தி பலரும் ஆங்கில கட்டுரைகளை எழுதுகின்றனர். இதை படிக்கும் வாசகர்கள் அவை உண்மையா? பொய்யா? என்று கண்டுபிடிக்க முடியாமல் குழம்புகின்றனர். காந்தி, பாபாசாஹேப் போன்ற தலைவர்களின் எழுத்துகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, யாரும் திரிக்கமுடியாத வகையில் பாதுகாக்கப்படுகிறது. ஆனால்,...
டி எம் நாயரின் அற்புதமான பேச்சு நீதிக்கட்சியை உருவாக்கிய சிற்பிகளில் ஒருவரான டாக்டர் டி எம் நாயர், 1917ஆம் ஆண்டு சென்னை சேத்துப்பட்டில் நிகழ்த்திய உரை வரிக்கு வரி அர்த்தம் பொதிந்தது. எல்லாரும் மதிக்கும் என்னை கேரள நாட்டு நம்பூதிரிப் பார்ப்பான், “ஏடா, நாயர்’ என்று கேவலமாகவே அழைப்பார்கள் என்ற வரிகளைப் படித்தபோது கண்ணீர் வந்தது. நீதிக்கட்சி தலைவர்களிலேயே நாயர் ஒரு பகுத்தறிவாளராக இருந்திருக்கிறார். நான் படித்த ஒரு வரலாற்றுச் செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1904ஆம் ஆண்டு நாயர் சென்னை நகராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, “சென்னை பார்த்தசாரதி கோயில் குளத்துக்கு வரி இல்லாமல் தண்ணீர் திறந்துவிட வேண்டும்” என்று தீர்மானத்தை நீதிக்கட்சியின் மற்றொரு முக்கிய தலைவராக பிறகு உருவாகிய சர். பிட்டி தியாகராயர் கொண்டு வந்தபோது நாயர் அதை எதிர்த்தார். “கோயில் வருமானத்திலிருந்து வரி செலுத்தித் தண்ணீர் பெறுவதுதான் முறை; இல்லை என்றால் மற்ற கோயில் குளத்திற்கும் வரி...
சுயநிர்ணய உரிமை “ இந்தியாவில் சுயநிர்ணய உரிமை கோருவது குற்றமா?” என்ற கட்டுரை பல உண்மைகளை வெளிச்சப்படுத்தியுள்ளது; இந்தியாவின்அரசியல் சட்டம் இது குறித்து மவுனம் சாதித்தாலும் உச்சநீதிமன்றம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலங்களைப் பகிர்ந்து கொள்ளும் வழக்கில் வழங்கிய தீர்ப்பின்படி இந்தியாவின் ஒரு பகுதியை பிரித்துக் கொள்வதற்கான உரிமையையும் உறுதிப்படுத்தியிருப்பதை கட்டுரை சுட்டிக் காட்டுகிறது. உண்மையில் பிரிட்டிஷ் ஆட்சியில் தான் இந்தியா என்பதே உருவானது. இந்தியாவின் பெரும்பகுதி பிரதேசங்களை ஒரே குடையின் கீழ் ஆட்சி செய்தது முகலாயமன்னர் அவுரங்கசீப் தான். கி.பி.1707ல் அவர் இறந்தவுடன் மொகலாயப் பேரரசில் அடங்கியிருந்த அனைத்து நாடுகளும் சுதந்திரநாடுகளாகி விட்டன. அனைத்து இந்தியத் தலைமை ஒன்று இல்லாத நிலையில் அந்த வெறுமையை பிரிட்டிஷார்தந்திரமாகப் பயன்படுத்தி நாடு பிடிக்கத் தொடங்கினர். இதைத்தான் “18ம் நூற்றாண்டில்உருவானஅகில இந்திய தேசியம் ஆங்கிலேயேரின் துப்பாக்கி முனையில் உருவாக்கப்பட்டதாகும்“ என்று வரலாற்றுப் பேராசிரியர் கே.எம்.பணிக்கர் கூறுகிறார். உண்மையில் இந்தியாவும் அதற்கு “மத்திய அரசு” என்று...
‘அடக்குமுறைகளையும் கொள்கைக்கு பயன்படுத்தும் தலைவர்’ நிமிர்வோம் மார்ச் இதழில் ஈஷா மய்யம் மோசடி குறித்த தகவல்கள் பல உண்மைகளை அம்பலப்படுத்தின. “ஜக்கி அவர்களே பதில் சொல்லுங்கள்” என்ற தலைப்பில் ஜக்கியிடம் எழுப்பப்பட்ட கேள்விகள் அனைத்தும் அர்த்தமுடையவை. -த.முகுலன், ஆக்கூர் 1932ல் குடிஅரசு ஏட்டில் இந்த ஆட்சி முறை ஏன் ஒழிய வேண்டும் என்ற கட்டுரைக்காக பெரியார் கைது செய்யப்பட்டவரலாற்றுப் பின்னணியையும் -அது குறித்த பெரியார் உரையையும் படித்தபோது மெய்சிலிர்த்துப் போனேன். பெரியார் தன் மீதும் தனது இயக்கத்தின் மீதும் அடக்குமுறைகள் வரும் போது அடக்குமுறைகளுக்கு கண்டனம் தெரிவிப்பதைத் தவிர்த்து விட்டு, அவற்றை மேலும் தனது லட்சியத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்புகளாக மாற்றியிருக்கிறார்.இதுபெரியாருக்கே உள்ள தனித்தன்மை. வரலாறு நெடுக அவரிடம் இதைப் பார்க்க முடிகிறது. அடக்குமுறை சட்டம் பாய்ந்தது குறித்து பெரியார் எழுதும் போது “இதுபற்றி தான் வருத்தப்படவுமில்லை. அரசை கோபிக்கவும் இல்லை. இதுவரை இப்படி கைது செய்யாமல் இருந்தார்களே என்பதற்காக...
நன்னன் நேர்காணல் நிமிர்வோம் இதழில் பேராசிரியர் நன்னன் அவர்களின் பேட்டி -இளைஞர்களுக்கு உந்து சக்தியாக இருந்தது. பெரியார் இயக்கம் எதிர் நீச்சலில் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சென்ற வரலாற்றை -இளைய தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். பேராசிரியர் நன்னன் –மொழியியல் அறிஞர் என்ற பார்வை மட்டுமே எங்களிடம் இருந்தது. அவர் பெரியாரியச் சிந்தனையில் ஆழமானப் பற்றுகொண்டு -அந்த நெறியை வாழ்க்கையாக்கிக் கொண்டவர் என்பதை பேட்டியிலிருந்து அறிந்தோம். -வே.கண்ணன், வில்லிவாக்கம் மேக்நாட் சாகா பஞ்சாங்கமும்அறிவியலும் பஞ்சாங்கம் அறிவியலுக்கு எதிரானது என்பதை விஞ்ஞானி மேக்நாட் சாகா அறிக்கையிலிருந்து வெளி யிட்டிருந்தது மிகவும் சிறப்பு. ‘நிமிர்வோம்’ கட்டுரையை படித்தபிறகு தேவிகாபுரம் சிவா நூலை தேடிப்போய் வாங்கிப் படித்தேன். கல்வியில்மிகச்சிறந்தமாணவனாகஇருந்தாலும் -சமூகத்தின் தீண்டாமைக் கொடுமையை அவர் அனுபவித்திருக்கிறார். காலில் செருப்பு அணியாமலே சொந்த ஊருக்குநடந்தேசென்றிருக்கிறார். சொந்தகிராம மான சியாத்தாலி (இப்போது வங்கதேசம்) யில் சரசுவதி கோயிலுக்கு வழிப்படச் சென்ற அவரை பார்ப்பன அர்ச்சகர் விரட்டி அடித்த போதுதான்...
அரசு தந்த வீட்டை வாங்க மறுத்த விந்தன்! ‘நிமிர்வோம்’ இதழ் கண்டு மகிழ்ந்தேன்; ஆழமான கட்டுரைகள் இதழை அலங்கரிக்கின்றன. நமக்கு இலக்கியம் உண்டா என்ற பெரியாரின் கேள்வி-சிந்திக்க வைக்கிறது. வ.கீதா,ஜெயராணி இருவரின் பொதுவுடைமை -ஜாதி ஒழிப்பு குறித்த கட்டுரைகள். பெரியார் அம்பேத்கர் இயக்கங்கள் மீது விமர் சனங்களை முன்வைக்கின்றன. சுய விமர்சனங்களுக்கு ‘நிமிர்வோம்’ இட மளிப்பது வரவேற்கத்தக்க அணுகுமுறை. ‘நிமிர்வோம்’ மகிழ்வையும் நம்பிக்கைகளையும் ஊட்டுகிறது. -சி.அம்புரோசு, மாவட்டத்தலைவர், தி.வி.க. தூத்துக்குடி. படைப்பாளி விந்தன் குறித்து பேராசிரியர் வீ.அரசு கட்டுரை, இளைய தலைமுறைக்கு மறைக்கப்பட்ட சிறந்த படைப்பாளியை அறிமுகப்படுத்தும் சிறந்த கட்டுரை. நடிகவேள் எம்.ஆர்.ராதா சிறையிலிருந்தபோது உரையாடி – அவரது வரலாற்றை நூலாக்கிய பெருமையும் அவருக்குண்டு. ‘கூண்டுக்கிளி’ திரைப்படத்தில் காதல் செய்த குற்றம் கண்கள் செய்த குற்றமானால், கண்களைப் படைத்த கடவுள் செய்கை சரியா, தப்பா’ என்று பாடல் எழுதியவர் மக்கள் செல்வாக்குடன் திகழ்ந்த நடிகர் எம்.கே. தியாகராஜ பாகவதரைப் பார்ப்பன...