தடை, அதை உடை!
இடிப்போம் ஜாதிச் சுவரை! உடைப்போம் இந்த பழைய பூட்டை! ஒரே குரலில் முழங்குவோம்! “நாமெல்லாம் ஒன்று” இப்படி நாம் கூறினால் எதிர்ப்பு வருகிறது. நீ வேறு; நான் வேறு; எப்படி சமமாக முடியும்? இப்படித்தான் நமது சமூகம் கேட்கிறது. 3,000 ஆண்டுகளுக்கு மேலாக தீர்க்கப்படாத கணக்கு இது . இந்தத் தடை உடைய வேண்டாமா? இந்தக் கேள்வியுடன் தான் நாங்கள் உங்களிடம் வருகிறோம். கல்வியும் கால மாற்றமும் இளையோருக்கு இட ஒதுக்கீடு வழங்கியுள்ள வேலை வாய்ப்பு, சம வாய்ப்பு, சந்திப்பு காதலை நோக்கி நகர்த்துகிறது. ஆனால் ஜாதி அதற்குத் தடை போடுகிறது. வாழ வேண்டிய இளையோர் வாழ்க்கையையே தடுக்கிறது; இல்லையேல் ஆணவக் கொலை என்று வாழ்க்கையே முடிக்கிறது. ஜாதி பிறப்பிலிருந்து இறப்பு வரை ஒவ்வொரு இந்து மீதும் பிரிக்க முடியாமல் ஒட்டப்படும் ஸ்டிக்கர். ஜாதி விலை கொடுத்து பத்திரம் எழுதி வாங்கிய சொத்தா? பல்கலைக்கழகத்தில் படித்து வாங்கிய பட்டமா? இல்லை இல்லை;...
