மனுஸ்மிருதி வேண்டாம்- ராகுல்; அது நமது பாரம்பர்யம்-ஆதித்யநாத்
ராகுல்காந்தி பெண்களை அடிமைப்படுத்தும் மனுசாஸ்திரம் ஒழிக்கப்பட வேண்டும்; ஆணாதிக்கத்திலிருந்து பெண்கள் விடுபட வேண்டும் என்றும் பேசினார். இதற்கு பதிலளித்த உ.பி. முதல்வர் ஆதித்யநாத் ‘மனுசாஸ்திரம்’ புனிதமானது; இதை எதிர்த்துப் பேசுவதைக் கண்டிக்கிறேன் என்று பேசியிருக்கிறார். புனேயில் நடைபெற்ற தனது நான்காவது ‘சாத்ரோன் கி பி கூஞ்ச்’ (மாணவர் குரல்) நிகழ்ச்சியில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, Gen Z தலைமுறையைச் சேர்ந்த பெண்கள் “ஆணாதிக்க அமைப்பைத் தகர்த்தெறிய வேண்டும்” என்று வலியுறுத்தினார். AISSMS மைதானத்தில் உற்சாகமான வரவேற்புக்கு மத்தியில், மாணவிகளிடம் உரையாற்றிய அவர், “உரக்கப் பேசுங்கள்; பெருமையுடன் நில்லுங்கள்; சமூகத்தில் உங்களுக்கான இடத்திற்காகப் போராடுங்கள்” என்று கூறினார். மராத்தி மொழியில் பேசிய அவர், “புனே என்றாலே அன்பு” (Pune mhanje prem) என்றார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த அவரது உரையில், இளம் பெண்களுடன் பல்வேறு கலந்துரையாடல்களும் இடம்பெற்றன. அவர்கள் தங்களது கவலைகள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து...
