Category: செய்திகள்

திராவிட இயக்க இதழ்கள் – புரட்சிப் பெரியார் முழக்கம்

திராவிட இயக்க இதழ்கள் – புரட்சிப் பெரியார் முழக்கம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் இதழ் புரட்சிப் பெரியார் முழக்கம். இது திராவிடர் விடுதலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ ஏடாக வெளியாகி வருகிறது. 1997-ஆம் ஆண்டின் முதல் 2001-ஆம் ஆண்டின் இறுதிவரை மாத இதழாக வெளிவந்து கொண்டிருந்த இது, 2002-ஆம் ஆண்டு முதல் வார ஏடாக வெளிவரத் தொடங்கியது. தற்போது அது மின்னிதழாகவும் வெளிவருகிறது. முந்தைய இதழ்களும் மின்னிதழ்களாக மாற்றப்பட்டு, அவை திராவிடர் விடுதலைக் கழகத்தின் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பெரும்பாலும் அரசியல் கட்டுரைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவருகிறது. அவற்றில் பெரும்பாலான கட்டுரைகளை இதழின் ஆசிரியரே படைக்கிறார். கட்டுரைகள் தவிர, வினா விடை – துணுக்குப் பத்திகள் – தலையங்கம் – ஆசிரியரது பொது நிகழ்ச்சி உரைகள் ஆகியவையும் இடம்பெற்றுவருகின்றன. நன்றி : முரசொலி – 15.10.2024 இதழ் பெரியார் முழக்கம் 17.10.2024 இதழ்

“ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்”

“ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்”

நூற்றாண்டைத் தொடங்கி இருக்கிற ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அதன் கரங்களுக்கு எட்டாக்கனியாக இருந்த தமிழ் மண்ணில் இன்று தடியோடு ஊர்வலம் போகும் அளவிற்கு வந்திருக்கிறது. ஒரு நூறாண்டு கால சமூகநீதி கொள்கைகளுக்கான போராட்ட வரலாறு கொண்ட திராவிட நிலத்தில் தன் விதையினை ஊன்றிவிட ஆர்.எஸ்.எஸ். மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இதனை ஒரு தொடக்கப்புள்ளியாகவே பார்க்க வேண்டி உள்ளது. முழுக்க முழுக்க சித்பவன பார்ப்பனர்களைத் தலைமையாகக் கொண்ட ஓர் இயக்கம் மதத்தின் பெயரைச்சொல்லி மக்களைப் பிளவுபடுத்த மட்டும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகத்து இளைஞர்களைப் பயன்படுத்திக் கொள்கிறது. ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்பட்ட பின்னணி மற்றும் வரலாறு, ஒட்டு மொத்த இந்தியாவும் விடுலைக்காகப் போராடிக் கொண்டிருந்தபோது அவர்களது செயல்பாடு என்னவாக இருந்தது? அந்த அமைப்பின் தலைமை எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறது? காந்தியின் கொலை வழக்கில் அவர்களின் பங்கு, வரலாறு முழுக்கவே முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் என ஆர்.எஸ்.எஸ்-ஸைப் பற்றிய முழுமையான தகவல்களைத் தரும் நூல். அனைத்துத் தகவல்களையும் ஆதாரங்களோடு அம்பலப்படுத்திய...

மனிதம் தழைத்தோங்கும் தமிழ்நாடு!

மனிதம் தழைத்தோங்கும் தமிழ்நாடு!

இந்தியாவிலேயே முதன்முறையாகத் தமிழ்நாட்டில் 2008ஆம் ஆண்டு கலைஞர், மூளைச்சாவு அடைந்தவர்களின் உடலுறுப்பு தானம் பெறும் மகத்தான திட்டத்தினைத் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாகப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, உடல் உறுப்புகளைத் தானம் செய்பவர்களுக்கு, இறுதி நிகழ்வின்போது அரசு மரியாதை அளிக்கப்படும் என்று கடந்த ஆண்டு செப்டம்பரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இத்தகைய முன்னெடுப்புகளால், தமிழ்நாட்டில் உடல் உறுப்புகள் தானம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. கடந்த 8 மாதங்களில் 1086 உடல் உறுப்புகள் அரசுக்குத் தானமாகக் கிடைத்துள்ளது. குறிப்பாக முதலமைச்சர் அறிவித்த முதல் 11 மாதத்தில் மட்டும் இதுவரை 192 பேர், உடல் உறுப்புகள் தானம் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து சிறுநீரகம், நுரையீரல், இதயம், கல்லீரல், கார்னியா என மொத்தம் 1086 உடல் உறுப்புகள் பெறப்பட்டுள்ளன. இது கடந்த 6 ஆண்டுகளை ஒப்பிடுகையில் சாதனை ஆகும். 2023ஆம் ஆண்டு 178 நபர்களும், 2022ஆம் ஆண்டு 156 நபர்களும், 2021ஆம்...

பெரியாரின் உருக்கமான கட்டுரை (2) விலக நினைக்கிறேன்; விலகுவதால் என்ன இலாபம்?

பெரியாரின் உருக்கமான கட்டுரை (2) விலக நினைக்கிறேன்; விலகுவதால் என்ன இலாபம்?

“ஆரம்பத்திலிருந்து இதுவரை முன்னாற் குறிப்பிட்ட கொள்கைகளில், அது ஒரு சிறிதும் தவறாமல் ஏற்றுக்கொண்டபடி நடந்து வந்திருக்கிறது என்பதையும் மெய்ப்பித்து விட்டோம். ஆகவே, “குடிஅரசு” குறைந்தது ஒரு பதினாயிரம் பிரதிகளாவது அச்சிட்டு வெளியாக வேண்டும் என்கிற ஆசை நமக்கு இருந்தாலும் இந்நாலாயிரத்து ஐந்நூறைக் கொண்டு நான் சந்தோஷமடைகிறேனே தவிர, ஒரு சிறிதும் அதிருப்தி அடையவில்லை. அன்றியும், எமது விருப்பத்தை நிறைவேற்ற அநேக நண்பர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். 250 சந்தாதாரர் களை ஏற்படுத்திக் கொடுத்தும் இனியும் இருநூற்றைம்பது சந்தாதாரர்களை ஒரு மாதத்தில் சேர்ப்பதாய் வாக்களித்த சிங்கப்பூர் நண்பர்களுக்கும், மற்றும் 250 சந்தாதாரர்களை எதிர்பார்க்கும் மலேயா நண்பர்களுக்கும் எனது மன மார்ந்த நன்றியைச் செலுத்துகிறேன். தமிழ்நாட்டிலும், ஊர்கள் தோறும் “குடி அரசின்” வளர்ச்சியையும் பரவுதலையும் எம்மைவிட அதிக கவலை கொண்டு எதிர்பார்க்கும் நண்பர்கள் பலர் இருக்கிறார்கள், என்பதும் எனக்குத் தெரியும். அவர்கள் “குடி அரசு”க்காக உழைத்து வந்ததற்கும், சந்தாதாரர் களைச் சேர்த்துக் கொடுத்ததற்காகவும்...

கவனம் ஈர்க்கும் கழகம்!

கவனம் ஈர்க்கும் கழகம்!

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஓராண்டுக்கும் மேல் திராவிடர் விடுதலைக் கழகம் மாநிலம் தழுவிய அளவில் தீவிர பரப்புரை மேற்கொண்டு, பாஜக ஆட்சியின் பேராபத்துகளை மக்கள் மத்தியில் எடுத்துரைத்தது. அரசியல் கட்சிகளுக்கு முன்பாகவே பரப்புரைக் களத்தில் முதலில் இறங்கிய இயக்கம் திராவிடர் விடுதலைக் கழகம். எது “சனாதனம்? எது திராவிடம்” என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுக்க சுமார் ஆயிரம் தெருமுனைக் கூட்டங்களும், தேர்தல் நெருங்கிய சமயத்தில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் ஜனநாயகம் காப்போம்” என்ற தலைப்பில் சுமார் 300 தெருமுனைக் கூட்டங்களும் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டன. 2 ஆண்டுகளுக்கு முன்பு திராவிட மாடல் என்றால் என்ன என்பதை விளக்கி தெருமுனைக் கூட்டங்களும், அதனையொட்டிய மண்டல மாநாடுகளும் நடத்தப்பட்டன. இதில் தலைநகர் சென்னையில் மட்டும் ஒட்டுமொத்தமாக கடந்த 2 ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. கழகம் முன்னெடுக்கும் இந்தப் பணிகளுக்கு களத்தில் இருந்து கிடைத்த பேராதரவுக்கு அடையாளமாக மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில்...

கலைஞர் நூல்கள் நாட்டுடமை

கலைஞர் நூல்கள் நாட்டுடமை

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமை யாக்கப்படுவதாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கலைஞர் தனது 15 வயது முதல் 15 புதினங்கள், 20 நாடகங்கள், 15 சிறுகதைகள், 210 கவிதைகளை எழுதியுள்ளார். அதனை நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்கள் கலைஞர் கருணாநிதியின் நூல்களை படிக்க வாய்ப்பாக அமையும் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், கலைஞர் தனியொருவரால் வாழ்நாள் காலத்தில் இத்தனை படைப்புகளை வழங்க இயலுமா என வியப்புறும் வண்ணம் சாதனை 108 தமிழறிஞர்கள் நூல்களை நாட்டுடைமையாக்கி மரபுரிமையருக்கு ரூ.7.76 கோடி தந்தவர் கலைஞர் என்றும் கூறியிருக்கிறார். பெரியார் முழக்கம் 22.08.2024 இதழ்

கழகத் தலைவரின் சுற்றுப்பயணம் தொடங்கியது போதைக்கு எதிரான பரப்புரைக்குத் தயாராக அறிவுரை

கழகத் தலைவரின் சுற்றுப்பயணம் தொடங்கியது போதைக்கு எதிரான பரப்புரைக்குத் தயாராக அறிவுரை

19.07.2024 அன்று தலைமைக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கழகத் தலைவரின் மாவட்ட வாரியான சுற்றுப்பயணம் சென்னையில் தொடங்கியது. சென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 04.08.2024 அன்று மயிலாப்பூரில் உள்ள கழகத் தலைமை அலுவலகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது. முதல் நிகழ்வாக அண்மையில் மறைந்த கழகச் செயல்வீரர் மதிவாணன் அவர்களின் படத்தைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்தார். பின்னர் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவரது மகன் தமிழரசன் மாவட்டக் கழக வளர்ச்சி நிதியாக ரூ.5000/- வழங்கினார். மேலும் தற்போது போதைப்பொருள் கலாச்சாரம் இளைஞர்கள் மத்தியில் வேகமாகப் பரவி வரும் சூழலில் அதற்கு எதிரான பரப்புரைகளைக் கழகத் தோழர்கள் திவிரமாக மேற்கொள்ள வேண்டும் எனக் கழகத் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டுப் பேசினார். கழகப் பொதுச்செயலாளர் பேசுகையில் ஊடகங்களும், பத்திரிகைகளும்...

ஆழ்ந்து உறங்கும் ஒன்றிய சுகாதாரத்துறை

ஆழ்ந்து உறங்கும் ஒன்றிய சுகாதாரத்துறை

கொரோனா பேரிடருக்குப் பிறகு உலக நாடுகள் அனைத்தும் சுகாதாரத்துறைக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கும் மனநிலைக்கு வந்திருக்கின்றன. ஆனால் பாஜக ஆளும் இந்திய ஒன்றியம், கொரோனா பேரிடரில் இருந்து துளியும் பாடம் கற்கவில்லை. நடப்பு நிதியாண்டில் சுகாதாரத் துறைக்கான நிதியை 3 விழுக்காடு குறைத்திருக்கிறது ஒன்றிய அரசு. கடந்த நிதியாண்டில் மட்டும் சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 10 விழுக்காடு பயன்படுத்தப்படவில்லை. பயன்படுத்தப்படாமல் விடப்பட்ட தொகை ரூ.8,550.21 கோடி. இது மதுரை உட்பட 16 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டிய தொகையை விட அதிகம். ஒன்றிய அரசு 16 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு கடந்த நிதியாண்டில் ஒதுக்குவதாக, நிர்மலா சீதாராமனால் அறிவிக்கப்பட்ட தொகையே ரூ.6800 கோடிதான். வீணாய்க் கிடந்தாலும் பரவாயில்லை, மக்கள் நலனுக்குப் பயன்பட்டுவிடக்கூடாது என்பது மோடி அரசின் எண்ணமா? பெரியார் முழக்கம் 01.08.2024 இதழ்

பகுத்தறிவு சிந்தனையை வளர்க்கக்கோரி தனி மசோதா

பகுத்தறிவு சிந்தனையை வளர்க்கக்கோரி தனி மசோதா

கேரளா, சாலக்குடி தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பென்னி பெஹனன். காங்கிரஸ் எம்பியான பென்னி பகுத்தறிவு சிந்தனை மற்றும் விமர்சன சிந்தனைகளை ஊக்குவிப்பதற்கான மசோதா 2024-யைக் கடந்த வெள்ளியன்று மக்களவையில் அறிமுகப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பென்னி பெஹனன் கூறுகையில் ‘‘சமூகத்தில் அதிகரித்து வரும் மூட நம்பிக்கைகளையடுத்து பகுத்தறிவு சிந்தனையை ஊக்குவிப்பதற்கான அவசரத் தேவை எழுந்துள்ளது. கடந்த 2014 முதல் விமர்சன சிந்தனைகள் ஊக்குவிக்கப்படவில்லை. நான் உயிரியல் ரீதியாகப் பிறக்கவில்லை, கடவுள்தான் என்னை இங்கு அனுப்பினார் என்று மோடி பேசும் நிலையில் பகுத்தறிவு சிந்தனைகளை ஏற்படுத்துவதற்கான முக்கிய மசோதாவாகும் இது. நாட்டின் முதல் பிரதமரான நேரு தான் பகுத்தறிவு சிந்தனை மற்றும் அறிவியல் மனப்பான்மையை ஊக்குவித்தார். பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு, விமர்சன சிந்தனைகள், மாறுபட்ட கருத்துகள் ஏற்கப்படுவது இல்லை. ஏனெனில் பிரதமரும் அவரது கட்சியினரும் பகுத்தறிவில்லாத, மூட நம்பிக்கைகளையே ஊக்குவித்து வருகின்றனர்.அரசின் கொள்கைகள், திட்டங்கள், சமூக திட்டங்களில் அனுபவ ஆதாரங்கள், பகுத்தறிவு பகுப்பாய்வை...

யுபிஎஸ்சி தலைவர் ராஜினாமா பின்னணி!

யுபிஎஸ்சி தலைவர் ராஜினாமா பின்னணி!

ஒன்றிய பாஜக அரசின் சிந்தனையில் உருவானதுதான் தேசிய தேர்வு முகமை. வெறும் ஒரு குடியிருப்போர் நலச்சங்கம் போல சொசைட்டியாகப் பதிவு செய்யப்பட இந்த முகமை நீட், ஜேஇஇ என முக்கியமான பல தேர்வுகளை நடத்துகிறது. அதில் பலப்பல மோசடிகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் நடந்த நீட் மருத்துவ நுழைவுத்தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம் என பல வகையான மோசடிகள் அம்பலமாகி நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து தினமும் பல மோசடி நபர்களைக் கைது செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணி இடங்களை நிரப்புவதற்கான ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்திலும் (யுபிஎஸ்சி) பல மோசடிகள் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையே பிரதமர் மோடிக்கு நெருக்கமானவரான யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இவரது ராஜினாமா பின்னணி குறித்து பல பரபரப்பு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன....

தலையங்கம் – ஜாதிவாரி கணக்கெடுப்பு ஏன் தேவை?

தலையங்கம் – ஜாதிவாரி கணக்கெடுப்பு ஏன் தேவை?

2011ஆம் ஆண்டிலேயே நடத்தப்பட்டிருக்க வேண்டியது மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வேண்டுமென்றே தாமதித்துக் கொண்டிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. கடந்த 150 ஆண்டுகால வரலாற்றில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தாமதப்படுத்தப்படுவது இதுவே முதல்முறை. கொரோனாவைக் காரணம்காட்டி தள்ளிப்போடப்பட்டு, அதுவே தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது வெறுமனே மக்கள் தொகையை அறிந்துகொள்வதற்கான கணக்கெடுப்பு அல்ல. சமூக – பொருளாதார தரவுகள் அதற்குள் அடங்கியுள்ளது. அதைவைத்துதான் கொள்கை முடிவுகள், பொருளாதாரத் திட்டமிடல்கள் மேற்கொள்ளப்படும். அரசு நிர்வாகத்திற்கும் அத்தியாவசியத் தேவை. அதுமட்டுமின்றி, கல்வி- வேலைவாய்ப்பில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைய, இடஒதுக்கீட்டைச் செழுமைப்படுத்தவும் ஜாதி வாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மிக அவசியமானது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் ஜாதி வாரியான கணக்கெடுப்பு விவரங்களும் எடுக்கப்பட்டபோதிலும் இன்னும் வெளியிடப்படவில்லை. எனினும் கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடஒதுக்கீட்டிற்கான போராட்டங்கள், கோரிக்கைகளும் மிகப்பெரிய அளவில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அதற்குரிய தீர்வுகளைக் காண, ஜாதி...

அப்பட்டமான மதவெறி!

அப்பட்டமான மதவெறி!

ஒவ்வொரு ஆண்டும் சிவபக்தர்கள் டெல்லியில் இருந்து ஜூலை மாதத்தில் முதல் உத்தரப்பிரதேசம் வழியாக உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்திரிக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொள்கிறார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் செல்லும் இந்தப் பயணத்தை கான்வார் யாத்திரை என்று அழைக்கிறார்கள். இந்த பக்தர்கள் வசதிக்காக அவர்கள் செல்லும் வழியில் பலர் தற்காலிக உணவு மையம் அமைப்பது வழக்கம். இந்த முறை அப்படி உணவு கூடம் அமைப்பவர்கள் தங்கள் உரிமையாளரின் பெயர், முகவரி, செல்போன் ஆகியவற்றை கடைகளில் நன்றாக தெரியும்படி, கடை போர்டுகளில் எழுத வேண்டும் என்று உபி மாநிலம் முசாபர்நகர் போலீசார் அறிவுறுத்தி இருந்தனர். பயணம் செல்லும் வழியில் இசுலாமியர்கள் அதிகம் வசிக்கின்றனர். அதனால் இயல்பாகவே இசுலாமியர்களின் கடைகளோ அல்லது, கடைகளில் பணிபுரிபவர்கள் இசுலாமியர்களாகவோ இருக்க வாய்ப்புகள் அதிகம். சிவபக்தர்கள் அத்தகைய கடைகளை தவிர்க்க வேண்டும் என்கிற உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டமிட்ட நோக்கத்தோடு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக கண்டனங்கள் எழுந்தன. அகிலேஷ் யாதவ், மாயாவதி...

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு!

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு!

நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது தோல்வியை பரிசாகக் கொடுத்த தமிழர்கள் மீதும், தமிழ்நாட்டின் மீதும் பாஜக கொண்டிருக்கிற கோபத்தை தெள்ளத்தெளிவாக வெளிக்காட்டியிருக்கிறது 2024 – 25 நிதியாண்டுக்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை. ஜூலை 23ஆம் தேதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், ஒரு வார்த்தை கூட தமிழ் என்றோ, தமிழ்நாடு என்றோ இடம்பெறவில்லை. மாறாக, ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரை உருவாக்க ரூ.15,000 கோடி, கோப்பர்த்தியில் தொழில் முனையம் என ஆந்திராவுக்கு நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. அதேபோல பீகாரில் நெடுஞ்சாலைகளை மேம்படுத்த ரூ.26,000 கோடி, வெள்ள நிவாரணப் பணிகளுக்காக 11,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பாஜகவின் ஆட்சியை கவிழாமல் இருபுறமும் தாங்கிப் பிடிக்க, சந்திரபாபுவுக்கும், நிதிஷ் குமாருக்கும் தரப்பட்ட முக்கியத்துவமே தவிர, அம்மாநில மக்களின் நலன் மீது கொண்ட அக்கறை அல்ல இது என்பது தெளிவாகிறது. உண்மையில் மக்களின் நலனில் அக்கறை கொண்ட அரசாக இருந்திருந்தால் கலவரத்தால்...

அம்பலமாகும் பி.எம்.கேர்ஸ் மோசடிகள்

அம்பலமாகும் பி.எம்.கேர்ஸ் மோசடிகள்

கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்தபோது கடந்த 2021ம் ஆண்டு மே 29ம் தேதி சிறுவர்களுக்கான பிஎம் கேர்ஸ் நிதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலமாக 2020ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி முதல் 2023ம் ஆண்டு மே 5ம் தேதி வரை கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளைத் தத்தெடுப்போர் அல்லது பாதுகாவலர்களுக்கு இந்த நிதி உதவி வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களில் 51சதவீத மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் பகிர்ந்துள்ள தரவுகளின்படி, 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 613 மாவட்டங்களில் இருந்து மொத்தம் 9331 மனுக்கள் பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் நிதியுதவி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 32 மாநிலங்களில் 558 மாவட்டங்களில் இருந்து 4532 விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 4781 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. 18 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது. நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என தெரியவந்துள்ளது....

பள்ளிகளில் ஜாதி மோதல்களைத் தவிர்க்க வழி ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அறிக்கை சமர்பிப்பு!

பள்ளிகளில் ஜாதி மோதல்களைத் தவிர்க்க வழி ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அறிக்கை சமர்பிப்பு!

கடந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் அரசுப் பள்ளி மாணவரை, சக மாணவர்களே வீடு புகுந்து வெட்டினார்கள். இந்த சம்பவத்தை அடுத்து பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இடையே ஜாதி, இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், அதற்கான வழிமுறைகளை வகுக்கவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அவர் விரிவாக ஆய்வு செய்து அறிக்கையை தயாரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார். பள்ளிச்சூழலில் ஜாதிய மோதல்கள், விவாதங்களைத் தவிர்க்கும் பொருட்டு பல நல்ல ஆலோசனைகள் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. அவை பின்வருமாறு : • ‘கள்ளர் மறுசீரமைப்புப் பள்ளி, ஆதிதிராவிடர் நலப்பள்ளி போன்றவற்றை நீக்கி, அரசுப் பள்ளி என அழைக்க அரசாணை வெளியிட வேண்டும். • பள்ளிப் பெயரில் ஜாதி அடையாளங்கள் இருக்கக்கூடாது என்ற உறுதிமொழி பெற்ற பின்னரே, புதிய பள்ளித் துவங்க அனுமதி அளிக்க...

பழிவாங்கப்படுகிறார் அருந்ததி ராய்

பழிவாங்கப்படுகிறார் அருந்ததி ராய்

ஒன்றியத்தில் மைனாரிட்டி பாஜக அதிகாரத்துக்கு வந்தவுடனே தனது அடக்குமுறைகளை ஏவத் தொடங்கிவிட்டது. உலகப் புகழ்ப்பெற்ற எழுத்தாளரும், புக்கர் பரிசைப் பெற்றவருமான அருந்ததி ராய் மீது உஃபா சட்டத்தை ஏவுவதற்கான பணிகளை தற்போது தொடங்கிவிட்டனர். அவர் மட்டுமின்றி காஷ்மீர் பேராசிரியர் சேக் சவுகத் உசைன் என்பவர் மீதும் இந்த சட்டத்தை ஏவுவதற்கான வேலைகளை செய்துவருகின்றனர். அப்படி என்ன குற்றத்தை செய்துவிட்டார் அருந்ததிராய்… சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு 2010ஆம் ஆண்டு டெல்லியில் காஷ்மீர் விவகாரம் குறித்து நடைப்பெற்ற கருத்தரங்கம் ஒன்றில் அருந்ததி ராய் பேசினார். அப்போது காஷ்மீர் குறித்த தனது கருத்துகளை அங்கு பதிவு செய்தார். பேராசிரியர் சேக் சவுகத் உசைனும் இதே கருத்தை தான் பதிவுசெய்தார். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக இந்த கருத்தரங்கை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால் அப்போது ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், சட்டவிரோதமாக அங்கு எதுவும் பேசப்படவிடவில்லை. தேச விரோத சட்டங்கள் பாயும்...

ஒரு நீதிபதியின் லவ் ஜிகாத் தீர்ப்பு

ஒரு நீதிபதியின் லவ் ஜிகாத் தீர்ப்பு

சங்கிகள் நீதிபதிகளாக அமர்ந்து கொண்டு சட்டத்தின் நோக்கத்தையே சிதைத்து வருகிறார்கள். ம.பி மாநிலத்தில் ஒரு கூத்து நடந்திருக்கிறது. 1954ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிறப்புத் திருமணச் சட்டத்தின் நோக்கமே ”வெவ்வேறு மதத்தினருக்கு இடையில் நிகழும் திருமணங்களை சட்டப்படி பாதுகாப்பது தான். ஆனால் இப்படி நடக்கும் திருமணங்கள் செல்லாது என்று தீர்ப்பளித்திருக்கிறார் ஒரு சங்கி நீதிபதி. இந்துப் பெண்ணும், முஸ்லிம் ஆணும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடிவு செய்கிறார்கள். பெண் வீட்டாரின் கொலை மிரட்டலால் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தை அணுகினார்கள் அந்த தம்பதியினர். ஆனால் வழக்கை விசாரித்த நீதிபதி, பாதுகாப்பு வழங்க முடியாது என்று கூறியதோடு, முஸ்லீம் மத சட்டத்தின் படி உருவ வழிபாட்டை ஏற்றுக்கொள்ளாத இந்த திருமணம் செல்லாது என்று வழக்கின் நோக்கத்திற்கு அப்பால் சென்று தீர்ப்பு வழங்குகிறார். திருமணம் என்பது கூட ஒரு பக்கம் இருக்கட்டும், தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது...

எச்சிலில் உருள்வது யாரால்?

எச்சிலில் உருள்வது யாரால்?

அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்ற அரசியலமைப்புச் சட்டத்தின் அடிநாதத்தின்படி மக்களுக்கு பகுத்தறிவூட்டி மானமும் அறிவும் மிக்க சமுதாயமாய் இந்த திராவிட சமுதாயத்தை உலகிலுள்ள பிற சமுதாயங்களுக்கு ஒப்பாக கொண்டு வர தன் வாழ்நாளெல்லாம் உழைத்த தந்தை பெரியாரின் வழியில் இயங்கும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் கோரிக்கை மனுவை உள்ளடக்கியதே இந்த சிறு வெளியீடு. உயர்நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சாமிநாதன் அவர்களின் மூடத்தனமான திர்ப்பை கேள்விக்குள்ளாக்கி உச்சநீதிமன்ற நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்ற கோரிக்கை மனுவும் அதோடு பார்ப்பனர் உண்ட எச்சில் இலையில் உருண்டு புரள்வது புண்ணியம் என்று கட்டமைத்து வைத்திருக்கும் சனாதனத்தை கேள்விக்குள்ளாக்கி மக்களை கண்ணியத்தோடு வாழ வைக்க வேண்டிய முயற்சியின் ஓர் அங்கமே இந்த வெளியீடு. 32 பக்கங்கள், 30 ரூபாய். நிமிர்வோம் வெளியீடு புத்தகம் பெற ஜி பே – வாட்ஸ் அப் 94986 56683 பெரியார் முழக்கம்...

அரசியலமைப்பின் மீது உறுதியேற்ற அமைச்சர்கள்!

அரசியலமைப்பின் மீது உறுதியேற்ற அமைச்சர்கள்!

நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவை ஜூன் 9ஆம் தேதி பதவியேற்றது. இசுலாமிய வெறுப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் மோடி, இப்போது தனது அமைச்சரவையிலும் ஒரு இசுலாமியருக்கு கூட இடம் அளிக்கவில்லை. அதுமட்டுமின்றி பாஜகவின் சார்பாக அமைச்சர்களாகி இருக்கும் அனைவரும் கடவுளின் பெயராலேயே பதவியேற்றுக் கொண்டனர். ஆனாலும் இது முழுமையான பாஜக ஆட்சி இல்லை. கூட்டணி ஆட்சிதான் என்பதை உணர்த்தும் விதமான நிகழ்வுகளும் பதவியேற்பில் நடந்திருக்கின்றன. இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) கட்சியின் ஜிதன்ராம் மாஞ்சி, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ராஜிவ் ரஞ்சன், அப்னா தளம் கட்சியின் அனுப்பிரியா, தெலுங்குதேசம் கட்சியின் சந்திரசேகர், இந்தியக் குடியரசு கட்சியின் ராம்தாஸ் அத்வாலே ஆகிய 5 பேரும் அரசியலமைப்பின் மீது உறுதியேற்று ஒன்றிய அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். இவர்கள் யாரும் பதவியேற்பின்போது கடவுளின் பெயரைக் குறிப்பிட்டுக்கொள்ளவில்லை. இவர்கள் அனைவருமே பாஜகவின் கூட்டணிக் கட்சிகள் சார்பாக...

பாஜகவின் வாரிசு அரசியலைப் பாரீர்

பாஜகவின் வாரிசு அரசியலைப் பாரீர்

திமுக, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் குறித்து பாஜகவினர் விமர்சனங்களை வைக்கும்போதெல்லாம் தவறாமல் குறிப்பிடுவது ‘வாரிசு அரசியல்’. வாரிசு அரசியலால் இக்கட்சிகள் நாட்டையே சீரழித்துவிட்டன என்பதுபோல மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜகவை சேர்ந்த பலரும் பேசியிருக்கிறார்கள். ஆனால் இப்போது மோடியின் மூன்றாவது ஆட்சியிலும், அமைச்சரவையிலும் வாரிசுகளாக நிரம்பிக் கிடக்கிறார்கள். அந்த பட்டியலை ராகுல் காந்தி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். “பல தலைமுறைகளாக போராட்டம், சேவை, தியாக உணர்வுடன் உள்ள பாரம்பரியத்தை வாரிசு அரசியல் என சொல்லும் மோடியின் 3.0 அரசில் 20 வாரிசுகள் உள்ளனர். இது மோடியின் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தையே காட்டுகிறது. என்று அவர் காட்டமாக பதிவிட்டுள்ளார். பட்டியல் 1. எச்.டி.குமாரசாமி – முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன். 2. ஜெயந்த் சவுத்ரி – முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் பேரன். 3. ராம்நாத் தாக்கூர் –...

ஜி.ஆர்.சாமிநாதன் தீர்ப்புக்கு அதிருப்தி!

ஜி.ஆர்.சாமிநாதன் தீர்ப்புக்கு அதிருப்தி!

பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார் கமலா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை ஜி.ஆர்.சாமிநாதன், பாலாஜி ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதில் ஜி.ஆர்.சாமிநாதன் மட்டும் குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது என்று தனிப்பட்ட முறையில் தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதால் உடனே விசாரணைக்கு எடுத்ததாகக் கூறினார் ஜி.ஆர்.சாமிநாதன். அத்துடன் சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தையும் ரத்து செய்தார். நீதிபதி பாலாஜி குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யாததால், வழக்கு மூன்றாவது நீதிபதி ஜெயச்சந்திரனுக்கு மாற்றப்பட்டது. “நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவரசர கதியில் உத்தரவு பிறப்பித்துள்ளார். மற்றொரு நீதிபதி பாலாஜியுடன் கலந்து ஆலோசிக்கவில்லை. காவல்துறைக்கு எதிராக பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளார். பதில்மனு தாக்கல் செய்ய அரசுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எந்தவொரு...

சர்வாதிகாரத்துக்கு கடிவாளம்! மாநில உரிமைகளுக்கு பச்சைக் கொடி!

சர்வாதிகாரத்துக்கு கடிவாளம்! மாநில உரிமைகளுக்கு பச்சைக் கொடி!

தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன? சர்வாதிகாரத்துக்கு கடிவாளம்! மாநில உரிமைகளுக்கு பச்சைக் கொடி! தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன? இந்தியாவை ஒற்றை சர்வாதிகார மதவெறி ஆட்சியை நோக்கி இழுத்துசென்ற பாசிச சக்திகளுக்கு கடிவாளம் போட்டிருக்கிறது இந்த தேர்தல் முடிவுகள். மாநிலங்கள் இல்லாமல் இந்தியா என்ற நாடு இல்லை என்பதையும் இந்த தேர்தல் முடிவுகள் உறுதியாக்கியிருக்கிறது. நடந்து முடிந்த தேர்தல் உணர்த்தும் பாடங்கள் என்ன? 1. ஒரே நாடு, ஒரே பண்பாடு, ஒரே வரி, ஒரே மோடி என்ற ஆணவத்திற்கு மக்கள் சம்மட்டி அடிக் கொடுத்திருக்கிறார்கள். இந்தமுறை நானூறு இடங்கள் என்று முழங்கிவந்த பாஜக, கடந்தமுறை பெற்ற இடங்களை விட 59 இடங்களை இழந்திருக்கிறது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் மற்றும் பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணியமைத்து ஆட்சியமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது பாஜக. 2. தேசியக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் தேர்தல்...

தோழர் விசு படத்திறப்பு; தலைவர் பங்கேற்பு

தோழர் விசு படத்திறப்பு; தலைவர் பங்கேற்பு

பெருந்துறை ஒன்றிய திவிக செயலாளர் தோழர் விசு அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு 23.05.2024 அன்று, மேட்டுப்புதூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன் தலைமை தாங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விசுவின் படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். பெரியார் முழக்கம் 30.05.2024 இதழ்

இனப்படுகொலை செய்யும் இஸ்ரேல்!

இனப்படுகொலை செய்யும் இஸ்ரேல்!

காசாவில் கூடாரங்களில் தஞ்சம் புகுந்திருந்த பாலஸ்தீனர்களின் மீது நேரடியாக குண்டு வீசி படுகொலை செய்துள்ளது இஸ்ரேல் ராணுவம். குண்டு வீச்சினால் கூடாரங்களில் தீப்பிடித்ததால் அங்கி ருந்த மக்கள் உயிருடன் எரிந்து பலியாகினர். அதோடு பல குழந்தைகள் தலைசிதறி பலியான கொடூரத்தை கண்டு உலகமே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. காசா மீதான போர் மற்றும் அங்கு இஸ்ரேல் நடத்திடும் கொடூர நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்த வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் மே 24 அன்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு வழங்கப்பட்ட பின்பும் கூட இஸ்ரேல் ராணுவம் ஒரு நாள் கூட போர் நடவடிக்கைகளை நிறுத்தாமல் தொடர்ந்து இனப்படுகொலைகளை அரங்கேற்றி வருகிறது. குறிப்பாக பாலஸ்தீன மக்களின் கடைசிப் புகலிடமாக இருக்கும் ரஃபா நகரிலும் இஸ்ரேல் ராணுவம் சில வாரங்களுக்கு முன்பு தரைவழித் தாக்கு தல்களை துவங்கியது. இதற்கு உலகம் முழுவதும் இருந்து பாலஸ்தீன ஆதரவுக் குழுக்களும், சில ஆதரவு நாடுகளும் எதிர்ப்புத் தெரிவித்தன. இது ரஃபா பகுதியில்...

சத்தியமங்கலத்தில் பெரியார் படிப்பகம் திறப்பு

சத்தியமங்கலத்தில் பெரியார் படிப்பகம் திறப்பு

ஈரோடு வடக்கு : தந்தை பெரியார் படிப்பகம் திறப்பு விழா 26.05.2024 சத்தி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. நிகழ்விற்கு வழக்கறிஞர் தமிழரசன் தலைமை தாங்கினார். சத்தி ஒன்றிய செயலாளர் சிதம்பரம் வரவேற்புரையாற்றினார். வழக்கறிஞர் செகதீஸ்வரன், மாவட்டத் தலைவர் நாத்திக சோதி, மாவட்ட அமைப்பாளர் கோபி நிவாசு, மாவட்டச் செயலாளர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தந்தை பெரியார் படிப்பகத்தை கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். நிறைவாக தமிழ்நாடு அறிவியல் மன்றத் தோழர் கிருட்டிணசாமி நன்றி கூறினார். இதில் கோபி, நம்பியூர், தூ.நா.பாளையம் மற்றும் சத்தி ஒன்றிய கழகத் தோழர்கள், பொதுமக்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 30.05.2024 இதழ்

நீதிமன்றத்தில் மத விழா!- கழகம் புகார்

நீதிமன்றத்தில் மத விழா!- கழகம் புகார்

ஈரோட்டில் அரசுக்கு சொந்தமான ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வலம்புரி கற்பக விநாயகர் திருக்கோவிலில் 19.05.2024 அன்று கும்பாபிஷேக விழா நடத்த திட்டமிடப்பட்டது. “அரசுக்கு சொந்தமான நீதிமன்ற வளாகத்திற்குள் குறிப்பிட்ட மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை முன்னெடுப்பது, இந்திய அரசமைப்புச் சட்டம் சொல்லும் மதச்சார்பற்ற தன்மையை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே மத வழிபாட்டு விழாவை தடுத்த வேண்டும்” என்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி ஈரோடு மாவட்ட தலைமை நீதிபதி அவர்களிடம் 17.05.24 அன்று விண்ணப்பம் அளித்திருந்தார். எனினும், அரசு விதிமுறைகளை மீறி கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டிருக்கிறது. ஊடகங்களிலும் அதுகுறித்த செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இதுதொடர்பாக சட்ட ரீதியிலான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி தெரிவித்துள்ளார். பெரியார் முழக்கம் 30.05.2024 இதழ்

புத்துயிர் பெறும் சமத்துவபுரங்கள்!

புத்துயிர் பெறும் சமத்துவபுரங்கள்!

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முக்கியப் பணிகள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதில் முந்தைய 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் முடங்கிக் கிடந்த “பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்” புதுப்பொலிவு பெற்று வருவது குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன. “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 2021ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி சட்டப்பேரவையில் தமிழ்நாட்டில் கட்டப்பட்ட 238 சமத்துவபுரங்களும் சீரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மக்களின் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்படாத 4 சமத்துவபுரங்கள் உட்பட 149 சமத்துவபுரங்களை முதற்கட்டமாக 2021-22ம் ஆண்டில் சீரமைப்பதற்காக ரூ.194.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 98% பணிகள் முடிவுற்று மீதமுள்ள சில பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன. மேலும், இரண்டாம் கட்டமாக 2022-2023ம் ஆண்டில் மீதமுள்ள 88 சமத்துவபுரங்களைச் சீரமைக்க ரூ. 67.01 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் 99% பணிகள் முடிவுற்று மீதமுள்ள சில பணிகள் முடிவுறும் தருவாயில்...

தீவட்டிப்பட்டி கலவரத்தில் காவல்துறை பாரபட்சம்! பாதிக்கப்பட்டவர்கள் மீதே பாயும் நடவடிக்கை! உண்மை கண்டறியும் குழுவின் பரிந்துரைகள்

தீவட்டிப்பட்டி கலவரத்தில் காவல்துறை பாரபட்சம்! பாதிக்கப்பட்டவர்கள் மீதே பாயும் நடவடிக்கை! உண்மை கண்டறியும் குழுவின் பரிந்துரைகள்

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி மே 2/2024 அன்று நடந்த சாதிய வன்முறைகளைத் தொடர்ந்து, முற்போக்கு, சனநாயக அமைப்புத் தோழர்கள் மே 11 ஆம் நாளன்று நேரடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று நாச்சினாம்பட்டி ஆதிதிராவிடர் குடியிருப்பு மக்களையும், தீவட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களையும், தீவட்டிப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் (Investigation Officer – I.O.) திரு.ஞானசேகரன் அவர்களையும் சந்தித்து ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வின் அடிப்படையில் உண்மை அறியும் குழு அரசுக்கு முன்வைக்கும் பரிந்துரைகள்: • ஆதிதிராவிடர் பகுதியில் தேவையில்லாமல் பலர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. அவை திரும்பப் பெறப்பட வேண்டும். எடுத்துக் காட்டாகப் பெருமாயி மகன் அருண்குமார் (வயது 23) , குணா ( 21 ) தா/பெ பழநியம்மாள் போன்ற பல அப்பாவி இளைஞர்கள் கலவரத்தில் காயம் அடைந்ததோடு ஆத்தூர் சிறையிலும் அடைக்கப் பட்டுள்ளனர். • காவல்துறை தாக்குதலால்...

மசூதிகளை குறிவைக்கும் மலிவு அரசியல்!

மசூதிகளை குறிவைக்கும் மலிவு அரசியல்!

அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த பிறகு, அங்கே ராமர் கோயிலை கட்டுவோம் என்று கூறி வடமாநிலங்களில் 30 ஆண்டுகளாக இந்துத்துவ அரசியலில் குளிர்காய்ந்தது பாஜக. ஆனால் இப்போது ராமர் கோயில் கட்டப்பட்டுவிட்டதால், இனி அயோத்தி அரசியல் எடுபடாது என்பதையும் உணரத் தொடங்கிவிட்டார்கள். புதிதுப் புதிதாக மசூதியைத் தேடத் தொடங்கிவிட்டார்கள் சங் பரிவார்கள். அவர்கள் இப்போது புதிதாகக் குறி வைத்திருக்கும் மசூதி ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் அஜ்மெர் மசூதி. கி.பி. 1236-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இம்மசூதி இந்தியாவில் மிகப் பழமையான மசூதிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த மசூதியை தற்போது பார்வையிட்டுச் சென்றிருக்கும் சங் பரிவார் கும்பல், ஜெயின் கோயிலும், சமஸ்கிருதப் பள்ளியும் அவ்விடத்தில் இருந்ததாக சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர். அங்கே இந்து கடவுள் சிலைகளை கண்டதாகவும், மேலும் பல சிலைகள் அப்பகுதியில் எரிக்கப்பட்டிருக்கலாம் என்பதால், அப்பகுதியில் அகழாய்வு நடத்த வேண்டுமென்று பாஜகவைச் சேர்ந்த சாகர் என்பவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மசூதிக்குள் சென்று வந்த குழுவில்...

ஊழல்… ஊழல்… ஊழல்… பாஜக ஆட்சியில் எல்லாமே ஊழல்!

ஊழல்… ஊழல்… ஊழல்… பாஜக ஆட்சியில் எல்லாமே ஊழல்!

ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி ரூ.60,000 கோடிக்கு மேல் செலவு செய்திருப்பதாக புள்ளிவிவரம் ஒன்று வெளியாகியிருக்கிறது. இதுதொடர்பாக “தி வயர்” இணைய ஊடகத்தில் மே 2-ஆம் தேதி பல்வேறு ஆதாரங்களுடன் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி பாரதிய ஜனதா கட்சி, மாவட்ட அலுவலங்கள் கட்டுவதற்காக 2,661 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. மற்ற அலுவலகங்கள் கட்டுவதற்காக பாரதிய ஜனதா கட்சி செலவிட்ட தொகை 900 கோடி ரூபாய். மாநில தேர்தல்களுக்காக 16,492 கோடி ரூபாயும், நாடாளுமன்றத் தேர்தல்களுக்காக 54,000 கோடி ரூபாயில் இருந்து 87,750 கோடி ரூபாய் வரை பாஜக செலவிட்டிருப்பதாக அந்த கட்டுரை கூறுகிறது. ஒட்டுமொத்தத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பாஜக செலவிட்ட தொகை 74,053 கோடி ரூபாயில் இருந்து 107,803 கோடி ரூபாய் வரை இருக்கலாம். இது அந்த கட்சி அறிவித்திருக்கிற மொத்த வருவாயின் மதிப்பை விட 5 முதல் 7 மடங்கு வரை அதிகமாகும்....

‘தகுதி’ ‘திறமையை’ தோலுரிக்கும் ராகுல் காந்தி பெரியாரின் சிந்தனைகளுக்கு கிடைத்த வெற்றி

‘தகுதி’ ‘திறமையை’ தோலுரிக்கும் ராகுல் காந்தி பெரியாரின் சிந்தனைகளுக்கு கிடைத்த வெற்றி

உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டை பெற்று விட்ட பிறகும், பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சமூகத்தினரை நோக்கி ‘கோட்டா ஜாதி’ என்று இழிவுபடுத்தும் போக்கை இன்னும் பார்ப்பனர்கள் விட்டுவிடவில்லை. இச்சூழலில் ‘மெரிட்’ குறித்து ராகுல் காந்தி அளித்திருக்கும் மிக எளிமையான விளக்கம் சமூகநீதியின்பால் அவர் கொண்டிருக்கும் அக்கறையை வெளிகாட்டுவதாய் உள்ளது. இடஒதுக்கீடு ஏன் அவசியம்? ஜாதி வாரி கணக்கெடுப்பு ஏன் அவசியம்? கல்வி உரிமைகள் – மாநில உரிமைகள் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும்? என்றெல்லாம் தமிழ்நாட்டின் பார்வையில், குறிப்பாகத் திராவிட இயக்கத்தின் பார்வையில் மிகத் தெளிவாக, ஆழமான கருத்துக்களை கடந்த காலங்களில் தெரிவித்திருக்கும் ராகுல் காந்தி, இப்போது ‘மெரிட்’ குறித்து அளித்திருக்கும் விளக்கம் அவர் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்வதாக உள்ளது. இதுதொடர்பாக ராகுல் காந்தி சமீபத்தில் பேசியிருக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அதில் அவரிடம் எழுப்பப்பட்ட கேள்வியும், அதற்கு அளித்த பதிலும்… கேள்வி: மெரிட் என்றால் என்ன...

தமிழ்நாட்டின் தனித்துவ அடையாளமான சுயமரியாதை திருமணங்களுக்கு ஆபத்தில்லை!

தமிழ்நாட்டின் தனித்துவ அடையாளமான சுயமரியாதை திருமணங்களுக்கு ஆபத்தில்லை!

திருமணத்தின் போது அக்னி குண்டத்தை 7 முறை சுற்றி வராததால், தங்களின் திருமணம் செல்லாது என அறிவிக்கக்கோரி தம்பதி ஒன்று தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு சர்ச்சையைக் கிளப்பியது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், இந்து திருமண முறைப்படி 7 முறை அக்னி குண்டத்தை சுற்றி வர வேண்டியது அவசியம், அப்படி சுற்றி வராத திருமணங்கள் பதிவு செய்யப்பட்டாலும் செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பால் சுயமரியாதைத் திருமணங்கள் செல்லுபடியாகுமா? ஆகாதா என்ற விவாதங்கள் வலுத்தன. இந்நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு இதுதொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் விவரித்து கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால், தமிழ்நாட்டில் மட்டுமே பின்பற்றப்படுகின்ற சுயமரியாதைத் திருமணங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அவர் விளக்கியிருக்கிறார். அதில் இருந்து சுருக்கமானப் பகுதியைக் காணலாம். 1952 பொதுத் தேர்தலுக்குப் பிறகு, புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கம் புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கிய இந்துக்களுக்கான திருமண வாரிசு...

தமிழ்நாடு மாடல் வளர்ச்சி மாடல்

தமிழ்நாடு மாடல் வளர்ச்சி மாடல்

தேர்தல் கள ஆய்வுக்காக தமிழ்நாடு வந்திருந்த மூத்த ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய் எக்ஸ் தளத்தில் இட்டிருக்கும் பதிவுகள் கவனம் பெற்றுள்ளன. “தமிழ்நாடு அரசியல் எப்போதுமே என்னை ஈர்த்திருக்கிறது. ஏனெனில் தமிழ்நாடு தனக்கென ஒரு தனி வழி அமைத்து, அதில் முன்னேறி வந்திருக்கிறது. இந்தியா கொண்டிருக்கும் பன்மைத்துவமே அதன் வலிமை. தமிழ்நாடு அதற்கு நல்ல உதாரணம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான பரந்த கூட்டணியை வீழ்த்துவது எளிதல்ல. யார் எதிர்க்கட்சி என்பதற்கு இங்கே போட்டி நடக்கிறது” என்று பதிவிட்டுள்ளார். மேலும், “ஒன்றிய பாஜக அரசின் ஜிஎஸ்டி, பணமதிப்பழிப்பு நடவடிக்கைகளால் கோவை 30% சிறு, குறு நிறுவனங்கள் மூடுவிழா கண்டுவிட்டன. தொழில் நிறுவனங்கள் வைத்திருந்த சிலர் இப்போது ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். பெரிய நிறுவனங்கள் மட்டுமே சிறிய அளவிலான ஆதாயம் பெற்றுள்ளன. தமிழ்நாட்டு களத்தை ஆய்வு செய்ததில் நான் புரிந்துகொண்ட விஷயம் இதுதான். குஜராத் மாடலைப் பற்றி பேசும் நாம், சமூகநீதி மற்றும்...

அமலாக்கத்துறை சுதந்திரமாகச் செயல்படுகிறதா? மோடியின் அண்டப் புளுகு! ஆகாசப் புளுகு!

அமலாக்கத்துறை சுதந்திரமாகச் செயல்படுகிறதா? மோடியின் அண்டப் புளுகு! ஆகாசப் புளுகு!

எதிர்க்கட்சியினரை ஒடுக்குவதற்கான ஆயுதமாக அமலாக்கத்துறையை மோடி அரசு பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு புதிதல்ல. சமீபத்தில் தந்தி தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில் நெறியாளர் இதை கேள்வியாக வைத்திருந்தார். அதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, அமலாக்கத்துறையை நாங்களா உருவாக்கினோம்? பணமோசடி தடுப்புச் சட்டத்தை (PMLA) நாங்களா கொண்டு வந்தோம்? அமலாக்கத்துறை ஒரு சுதந்திரமான அமைப்பு. சுதந்திரமாக அவர்களுடைய பணிகளை மேற்கொள்கிறார்கள். நாங்கள் அமலாக்கத்துறையை நிறுத்தவும் இல்லை, அனுப்பவும் இல்லை. அமலாக்கத்துறை சுமார் 7,000 வழக்குகள் பதிவு செய்திருக்கிறது. அதில் அரசியல் சார்பான வழக்குகள் 3 விழுக்காட்டுக்கும் குறைவுதான். காங்கிரஸ் ஆட்சியில் 35 லட்சம் ரூபாய் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் பாஜக ஆட்சியில் 2,200 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். அமலாக்கத்துறையின் தரவுகள் அடிப்படையில் மோடியின் பேச்சு குறித்து சில கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கிறது. இந்த PMLA சட்டமானது 2002ஆம் ஆண்டு பாஜக ஆட்சியில்தான் இயற்றப்பட்டது. சர்வதேச போதைப்பொருள்...

மணமகள் தேவை

மணமகள் தேவை

பெயர் : கார்த்திகேயன் வயது : 40 கல்வித் தகுதி : எம்.எஸ்.சி பணி : வெளிநாட்டில் தனியார் டெக்ஸ்டைல் நிறுவனம் (ஆண்டு வருமானம் ரூ.24-30 லட்சம்) தொடர்புக்கு : 98416 53200 பெரியார் முழக்கம் 28032024 இதழ்

பெரியாரை தாக்குவதா? முதலமைச்சர் கண்டனம்!

பெரியாரை தாக்குவதா? முதலமைச்சர் கண்டனம்!

சிறந்த பாடகர் டி.எம்.கிருஷ்ணா அவர்கள் The Music Academy-ன் ‘சங்கீத கலாநிதி’ விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. கிருஷ்ணா அவர்கள் கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது. இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல. பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள். திரு கிருஷ்ணா அவர்கள் இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடெமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள். டி.எம்.கிருஷ்ணா எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத...

ட்ரெண்டிங்கில் பெரியார்

ட்ரெண்டிங்கில் பெரியார்

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பன்றி உருவம் போல பெரியாரை சித்தரித்து சமூக வலைத்தளங்களில் ஒரு படம் பரப்பப்பட்டது. அந்த படத்தைப் பார்த்தால் பெரியாரியவாதிகளின் மனம் புண்படும், அதில் ஆனந்தமடையலாம் என்று கருதி எவரோ பரப்பியிருக்கிறார். ஆனால் நடந்ததோ வேறு. “இந்த படம் அழகாக இருக்கிறது, படத்தை வரைந்தவருக்கு பாராட்டுக்கள், பெரியார் இருந்திருந்தால் அவரும் நிச்சயம் பாராட்டியிருப்பார். ஆடு, மாடு, கோழி, சிங்கம், புலி போன்ற மற்ற விலங்குகளைப் போல பன்றியும் ஒரு விலங்கு. அந்த விலங்கைப் போல பெரியாரை சித்தரித்தால் அதில் என்ன அவமானம் இருக்கிறது? அப்படியானால் விஷ்ணுவின் வராக அவதாரமும் இழிவானது தானா?” என பெரியாரியவாதிகள் எழுப்பிய கேள்விகள் சமூக வலைத்தளங்களை 2 நாட்கள் ஆக்கிரமித்துவிட்டன. வாய்ப்பை ஏற்படுத்தியாவது பெரியாரை அவ்வப்போது டிரெண்டிங்கில் வைத்துவிடுகிறார்கள் கொள்கை எதிரிகள். “எனக்கு விளம்பரமே எனது எதிரிகள்தான்” என பெரியார் சொன்னது அவர் மறைந்து அரைநூற்றாண்டுகள் ஆகியும் நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது....

குஜராத் மாடலின் அவலத்தை பாரீர்!

குஜராத் மாடலின் அவலத்தை பாரீர்!

குஜராத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 41,632 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. திமுக எம்.பி.கள் தனுஷ் எம்.குமார், ஜி.செல்வம் ஆகியோர் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளது. நாடு முழுவதும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 4.25 லட்சம் பேர், கடந்த 3 ஆண்டுகளில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் குஜராத்தில் மட்டும் 3 ஆண்டுகளில் 41,632 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு குழந்தைகளின் இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளது. கடந்த 2020-21 நிதியாண்டில் 9,606 குழந்தைகளும், 2021-22 நிதியாண்டில் 13,048 குழந்தைகளும், 2022-23 நிதியாண்டில் 18,978 குழந்தைகள் என ஊட்டச்சத்து குறைபாடு பாதிப்பு குஜராத்தில் இரட்டிப்பாகி வருகிறது. குஜராத்தில் ஆண்டுக்கு சராசரியாக 12 லட்சம் குழந்தைகள் பிறப்பதாக குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் கட்சி அதில் 30,000 குழந்தைகள் இறக்கும் அவலம் தொடர்வதாக குற்றம் சாட்டியுள்ளது. குஜராத்தில்...

உயர்நீதிமன்றங்களில் (2018 முதல் 2023 டிசம்பர் 02 வரை) 650 நீதிபதிகள் நியமனம்

உயர்நீதிமன்றங்களில் (2018 முதல் 2023 டிசம்பர் 02 வரை) 650 நீதிபதிகள் நியமனம்

உயர் ஜாதியினர் 75.69% (492 பேர்) ஓபிசி பிரிவினர் 11.7% (76 பேர்) எஸ்.சி பிரிவினர் 3.54% (23 பேர்) எஸ்.டி பிரிவினர் 1.54% (10 பேர்) சிறுபான்மை சமூகங்களை சேர்ந்தவர்கள் – 5.54% (36 பேர்) எந்த பிரிவிலும் வராத நீதிபதிகள் எண்ணிக்கை – 13 (பேர்) உயர்நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகள் – 14.1% (111 பேர்) உச்சநீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் – 8.82% (03 பேர்) அதிக பெண் நீதிபதிகளைக் கொண்ட உயர்நீதிமன்றங்கள் பஞ்சாப் – ஹரியானா உயர்நீதிமன்றம் – 12 பேர் சென்னை உயர்நீதிமன்றம் – 12 பேர் மும்பை உயர்நீதிமன்றம் – 11 பேர் Source : RS/MINISTRY OF LAW (TILL DEC 2023) பெரியார் முழக்கம் 14.12.2023 இதழ்

பெரியார் பல்கலை துணைவேந்தருக்கு இராமதாஸ் கண்டனம்

பெரியார் பல்கலை துணைவேந்தருக்கு இராமதாஸ் கண்டனம்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: சமூக அநீதிக்கும், மூட நம்பிக்கைகளுக்கும் எதிராக தந்தை பெரியார் நடத்திய போராட்டங்கள் மற்றும் அவற்றின் பயனாக ஏற்பட்ட சமூக மாற்றங்கள் ஆகியவற்றை தொகுத்து ‘பெரியாரின் போர்க்களங்கள்’ என்ற தலைப்பில் நூல் வெளியிட்டதற்காக இரா.சுப்பிரமணி என்ற பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. அவர், இதழியல் துறை இணைப் பேராசிரியராகவும், பெரியார் இருக்கையின் பொறுப்பு இயக்குநராகவும் உள்ளார். மக்கள் நலன் மற்றும் சமத்துவத்தை ஏற்படுத்தவே பெரியாரின் போராட்ட வரலாறுகளை தொகுத்திருக்கிறார். அதை பாராட்டுவதற்கு மாறாக அவரை பழிவாங்க பல்கலைக்கழக நிர்வாகம் துடிப்பது தவறு. இது தந்தை பெரியாருக்கு எதிரானது. பெரியார் பெயரிலான பல்கலை நிர்வாகிகளாக இருந்து கொண்டு, பெரியாருக்கு எதிராக செயல்படும் இவர்கள் யாருடையாக கருவிகளாக இருப்பார்கள் என்ற ஐயம் எழுகிறது. எனவே பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று அந்த பல்கலைக்கழகத்திற்கு...

பெரியார் குறித்து நூல் வெளியிட்ட பேராசிரியர் மீது நடவடிக்கையாம்! எல்லை மீறுகிறார் ஆர்.எஸ்.எஸ் துணைவேந்தர்

பெரியார் குறித்து நூல் வெளியிட்ட பேராசிரியர் மீது நடவடிக்கையாம்! எல்லை மீறுகிறார் ஆர்.எஸ்.எஸ் துணைவேந்தர்

‘பெரியாரின் போர்க்களங்கள்’ ‘மெக்காலே பழமைவாதக் கல்வியின் பகைவன்’ என்ற நூல்களை எழுதியதற்காக சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் சுப்பிரமணிக்கு பல்கலை துணைவேந்தர் ‘மெமோ’ அனுப்பியுள்ளார். பெரியார் குறித்து நூல் எழுதியதற்காக, சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியருக்கு மெமோ வழங்கியதற்கு, பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சேலம் கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. சேலம் உள்பட 4 மாவட்டங்களைச் சேர்ந்த கலை, அறிவியல் கல்லூரிகள் இணைவு பெற்று செயல்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக சமயம் சார்ந்த நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, பல்கலைக்கழக நிர்வாகத்தினர் தமிழக அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், ஆர்எஸ்எஸ், பாஜகவுக்கு ஆதரவாகவும் நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், பெரியார் குறித்து நூல் எழுதியதற்காக, பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம், அங்கு பணிபுரிந்து வரும் பேராசிரியருக்கு மெமோ வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகத்தின் இதழியல் துறை இணை பேராசிரியரான சுப்பிரமணி, அங்குள்ள பெரியார்,...

4 மாநில தேர்தல் மொத்த வாக்குகள் விபரம்

4 மாநில தேர்தல் மொத்த வாக்குகள் விபரம்

மத்திய பிரதேசம் : காங்கிரஸ் – 1,75,64,353 பாஜக – 2,11,13,278 ராஜஸ்தான் :  காங்கிரஸ் – 1,56,66,731 பாஜக – 1,65,23,568 தெலுங்கானா : காங்கிரஸ் – 92,35,792 பாஜக – 32,57,511 சத்தீஸ்கர் : காங்கிரஸ் – 66,02,586 பாஜக – 72,34,968 வாக்கு சதவீதம் சத்தீஸ்கர் : காங்கிரஸ் 42.23% பாஜக 46.27% மத்திய பிரதேசம் : காங்கிரஸ் 40.40% பாஜக 48.55% ராஜஸ்தான் : காங்கிரஸ் 39.53% பாஜக 41.69% தெலுங்கானா : காங்கிரஸ் 39.40% பாஜக 13.90%. காங்கிரஸ் – 4.91 கோடி வாக்குகள். பாஜக   – 4.8 கோடி வாக்குகள். நாடு காங்கிரசை விரும்புகிறது என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்துகிறது

புலியூரில் ‘மாவீரர் நாள்’

புலியூரில் ‘மாவீரர் நாள்’

சேலம் : கொளத்தூர் ஈழ ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் “மாவீரர் நாள்” நிகழ்ச்சி 27.11.2023 திங்கள் மாலை 5.30 மணியளவில் சேலம் மாவட்டம் கொளத்தூர் புலியூர் பிரிவில் அமைந்துள்ள பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் கடைப்பிடி க்கப்பட்டது. நிகழ்விற்கு தார்க்காடு செ. தர்மலிங்கம் தலைமை தாங்கினார். புலியூரைச் சேர்ந்த தோழர்கள் சரவணன், வாசு, சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொளத்தூர் திவிக நகரச் செயலாளர் அறிவுச்செல்வன் வரவேற்புரையாற்றினர். மாலை 6.05 மணிக்கு தமிழீழ விடுதலைக்காக போர்க்களத்தில் வீரச் சாவடைந்த விடுதலைப் புலி மாவீரர்கள் – பொதுமக்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் “மாவீரர் பாடல்” ஒளிபரப்பு செய்யப்பட்டது. மாவீரர் பாடல் ஒளிபரப்பிற்கு பிறகு “மாவீரர் உரை” நிகழ்த்தும் பொதுக்கூட்டம் ஆரம்பமானது. கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழக வெளியீட்டுச் செயலாளர் கோபி இராம இளங்கோவன், மூத்த வழக்கறிஞர் இரத்தினம் ஆகியோர் உரையாற்றினார்கள். நிறைவாக கழகத்...

“இஸ்ரேல் முதல் பாலஸ்தீனம்” வரை நூல் வெளியிட்ட கழகத் தலைவர்

“இஸ்ரேல் முதல் பாலஸ்தீனம்” வரை நூல் வெளியிட்ட கழகத் தலைவர்

எழுத்தாளர் விஜயபாஸ்கர் புதிதாக எழுதியுள்ள “பாலஸ்தீனம் முதல் இஸ்ரேல் வரை – ஒரு வரலாற்றுச் சுருக்கம்” நூலை சென்னை புத்தகக் காட்சியில் பெரியார் புக்ஸ்.காம் அரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட கருப்புப் பிரதிகள் நீலகண்டன், பத்திரிகையாளர் நீரை.மகேந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். எழுத்தாளர் விஜயபாஸ்கர் “உயர்ஜாதியினருக்கு EWS இடஒதுக்கீடு சரியா? தவறா?” என்ற நூலை தொகுத்து  கவனம் ஈர்த்தவர். நிகழ்வில் அற்புதம்மாள், கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ர.பிரகாசு, அன்னூர் விஷ்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 11012024 இதழ்

RSS-அய் அச்சுறுத்தும் 5M

RSS-அய் அச்சுறுத்தும் 5M

சங் பரிவார் கும்பல்கள் தங்களது கொள்கை எதிரிகளை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது இந்நூல். திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் கருத்தரங்கு ஒன்றில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசிய உரையுடன், தகவல்கள் சேர்க்கப்பட்டு நூல் வடிவம் பெற்றுள்ளது. சென்னை புத்தகக் காட்சியில் கருஞ்சட்டை பதிப்பகம் அரங்கு எண் 332-இல் இந்நூல் கிடைக்கும். கழக வெளியீடுகள் கிடைக்குமிடம் சென்னை புத்தகக் காட்சியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெளியீடுகள் அனைத்தும் பெரியார் புக்ஸ்.காம் அரங்கு எண் 88-இல் கிடைக்கும். பெரியார் முழக்கம் 11012024 இதழ்

2014ஆம் ஆண்டில் “முழக்கம்” உமாபதி மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட வழக்கு! குற்றமிழைத்த போலீசார் மீது சி.பி.சி.ஐ.டி. விசாரணை – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

2014ஆம் ஆண்டில் “முழக்கம்” உமாபதி மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட வழக்கு! குற்றமிழைத்த போலீசார் மீது சி.பி.சி.ஐ.டி. விசாரணை – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு பிராபகரன் அவர்களின் 60-வது பிறந்தநாளையொட்டி, 2014-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி சென்னை மயிலாப்பூர் பகுதி கழகத் தோழர்களும், பொதுமக்களும் இணைந்து கொண்டாட்ட நிகழ்வுக்கு தயாராகினர்.  E-4 அபிராமபுர காவல் நிலைய அதிகாரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மயிலாப்பூர் பகுதி மக்கள் காவல்துறையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முற்பட்டனர். தகவல் அறிந்து செய்தி சேகரிக்க அங்கு சென்ற “பெரியார் முழக்கம்” நிருபர் உமாபதி. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் போலீசார் அத்துமீறி நடந்துகொண்டதை தன்னுடைய கைபேசியில் படம் பிடித்துக்கொண்டிருந்தார். காவல் நிலைய அதிகாரிகள் இளையராஜா, வடிவேலு, கலைச்செல்வி ஆகியோர் கைபேசியை பிடுங்க முற்பட்டனர். பெண்களிடம் தவறான முறையில் நடந்து கொண்ட போலீசாரின் அராஜகப் போக்கை நிருபர் உமாபதி கேள்வி கேட்டார். அப்போது நிருபர் என்றும் பாராமல் முழக்கம் உமாபதியை போலீசார் லத்தியால் கடுமையாகத் தாக்கத் தொடங்கினர். ஆபாச வார்த்தைகளால் திட்டியபடி, காவல்நிலையத்திற்கு தூக்கிச்சென்று அடித்துத் துன்புறுத்தி...

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலம்  மாநாட்டு உரை நூலாக வெளி வந்து விட்டது

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலம் மாநாட்டு உரை நூலாக வெளி வந்து விட்டது

சேலம் மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்த்திய உரை; சென்னையில் கழகம் நடத்திய தமிழர் திருநாள் விழாவில் நிகழ்த்திய உரைகளை இணைத்து “இது தமிழ்நாடு!” எனும் தலைப்பில் நூலாக கழகம் வெளியிட்டுள்ளது. கடந்த மே 7ஆம் தேதி திருவல்லிக்கேணி பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையில் சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி நூலையும் மாநாட்டு செய்திகள் அடங்கிய “புரட்சிப் பெரியார் முழக்கம்” இதழையும் அமைச்சரிடம் நேரில் வழங்கினார். நூல் விலை : ரூ.30/- நூல் தேவைப்படுவோர் கழக தலைமை நிலையத்தை தொடர்பு கொள்ளவும். தொடர்பு எண் :  + 91 98416 53200 / +91 8973341377 பெரியார் முழக்கம் 11052023 இதழ்

‘நிமிர்வோம்’ புதிய வெளியீடுகள் வாங்குவீர்-படிப்பீர்-பரப்புவீர்

‘நிமிர்வோம்’ புதிய வெளியீடுகள் வாங்குவீர்-படிப்பீர்-பரப்புவீர்

நமக்கான அடையாளம் “திராவிட மாடல்” எனும் முழக்கத்தோடு கழகம் நடத்தும் 400 தெருமுனைக் கூட்டங்கள், 11 மண்டல மாநாடுகளில் பொது மக்களிடம் பரப்ப கழகத்தின் வெளியீடுகள்…. 1)         பறிக்கப்பட்ட மாநில உரிமைகள்(விடுதலை இராசேந்திரன்) – ரூ. 100 2)         மோடி ஆட்சி ‘இந்து’க்களுக்கு என்ன செய்தது? (ர.பிரகாசு) – ரூ. 30 3)         50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தமிழ்நாடு (ஜெயரஞ்சன்)         – ரூ. 30 4)         மக்களை குழப்பும் ‘போலி அறிவியல்’(எட்வின் பிரபாகரன்) -ரூ. 60 5)         தில்லை தீட்சதர்கள் – முறைகேடுகள்                 – ரூ.  30 6)         பெரியார் சந்தித்த அடக்குமுறைகள்(விடுதலை இராசேந்திரன்)       – ரூ. 60 7)         திராவிடர் இயக்கத்தின் சுருக்கமான வரலாறு (1912 முதல் 1973 வரை)      – ரூ. 60 8)         கீழ் வெண்மணியும் பெரியாரும்         – ரூ. 60 9)...

கழகத்தின் புதிய வெளியீடு (1) ‘மோடி ஆட்சி இந்துக்களுக்கு என்ன செய்தது?’

கழகத்தின் புதிய வெளியீடு (1) ‘மோடி ஆட்சி இந்துக்களுக்கு என்ன செய்தது?’

பரப்புரைப் பயணத்துக்கான 15 வெளியீடுகளில் ஒன்று “மோடி ஆட்சி இந்துக்களுக்கு என்ன செய்தது?” பெரியாரியவாதியும் ஊடக வியலாளருமான ர. பிரகாஷ் மிகச் சிறப்பாக ஏராளமான தகவல்கள் தரவுகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். பெட்ரோல், டீசல் விலை உயர்வில் மக்களை எப்படி ஏமாற்று கிறார்கள்? ஜி.எஸ்.டி. கொள்கையால் மாநிலங்கள் வருவாய் எப்படி சுரண்டப் படுகின்றன? ஏர் இந்தியா, எல்.அய்.சி. பங்கு விற்பனைக்கு ஒன்றிய ஆட்சி கூறும் மக்களை ஏமாற்றும் போலி வாதங்கள் என்ன? அதில் உண்மை இருக்கிறதா? பொதுத் துறை நிறுவனங்கள் ஏன் தனியாருக்கு தாரை வார்க்கப் படுகிறது? பயனடைவது யார்? எப்படி விதிமீறல்கள் நடக்கின்றன? கார்ப்பரேட்டுகளுக்கு மக்கள் வரிப்பணம் கொட்டி அழப்படுவதோடு வங்கிகள் கடன்களை வாரி வாரிக் கொடுத்து வரும் அதிர்ச்சித் தகவல்கள். கார்ப்பரேட் சேவைகளுக்காக பா.ஜ.க.வுக்கு கிடைக்கும் பரிசுகள்; பரிவர்த்தனைகள் என்ன? ஊழல் எதிர்ப்புக் கட்சியாக காட்டிக் கொள்ள விரும்பும் பா.ஜ.க.வின் போலி முகமூடியைக் கிழித்துக் காட்டும் ‘தேர்தல் பத்திரங்களின்’ கதை!...

கருஞ்சட்டைப் பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள்

கருஞ்சட்டைப் பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள்

கருஞ்சட்டைப் பதிப்பகம் தொடர்ந்து திராவிடர் இயக்கக் கொள்கைகளைப் பரப்பும் நூல்களை வெளியிட்டு வருகிறது. அண்மையில் வெளி வந்துள்ள புதிய வெளியீடுகள்: ஆதிப் பெண்ணின் அடிதடி – ஓவியா குறளும் கீதையும் –  அருள்மொழி மற்றும் சுப. வீரபாண்டியன் திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு – வெற்றிச் செல்வன் திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம் – பெரியார் சரவணன் ஏன், பெரியார் மதங்களின் விரோதி? – வெற்றிச் செல்வன் – உதய குமார் இடைவேளை – சுப. வீரபாண்டியன் (நாவல்) ஆளுமைகள் சாரதாதேவி, குண. சந்திரசேகர், இக்லாஸ் உசேன்.   தொடர்புக்கு : 9840336688 பெரியார் முழக்கம் 03022022 இதழ்