Category: திவிக

வி.பி.சிங் சிலைக்கு மரியாதை!

வி.பி.சிங் சிலைக்கு மரியாதை!

சமூக நீதிக் காவலரும், முன்னாள் ஒன்றியப் பிரதமருமான வி.பி.சிங் அவர்களின் 94ஆவது பிறந்தநாளையொட்டி, சார்பில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அவரது சிலைக்கு கழக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன் மற்றும் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 27.06.2024 இதழ்

தோழர் விஜயன் தந்தை நினைவேந்தல் நிகழ்வு

தோழர் விஜயன் தந்தை நினைவேந்தல் நிகழ்வு

வட சென்னை கழகத் தோழர் விஜயனின் தந்தை ஏகாம்பரம் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு 23.06.2024 அன்று புளியந்தோப்பு கே.பி.பார்க்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.. தோழர் அருள்தாஸ் தலைமையில், தட்சிணாமூர்த்தி முன்னிலையில் கூட்டம் தொடங்கியது. நிகழ்வில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், ஏகாம்பரம் அவர்களின் படத்தை திறந்துவைத்து நினைவேந்தல் உரையாற்றினார். மேலும் கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், வட சென்னை மாவட்ட அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன், சிபிஐ (எம்) அன்பு, விசிக தமிழ்மணி, உள்ளிட்டோர் நினைவேந்தல் உரையாற்றினார்கள். தோழர் விஜயன் நன்றி கூற கூட்டம் நிறைவுபெற்றது. கூட்டத்தை மாவட்டக் கழகச் செயலாளர் இரா. உமாபதி தொகுத்து வழங்கினார். பெரியார் முழக்கம் 27.06.2024 இதழ்

கடலூர் மாவட்ட அமைப்பாளராக மதன்குமார் நியமனம்

கடலூர் மாவட்ட அமைப்பாளராக மதன்குமார் நியமனம்

கடலூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம், 28.5.2024 அன்று கருவேப்பிலங்குறிச்சி வசந்தம் மகாலில் மாவட்டத் தலைவர் அ.மதன்குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் நா.கொளஞ்சி வரவேற்புரை யாற்றினார். மாவட்டத் தலைவர் அ.மதன்குமார், மாவட்ட துணைத் தலைவர் செ.பிரகாஷ் ஆகியோர் கூட்டத்தின் நோக்கம் குறித்தும், தற்போதைய சூழல் குறித்தும் உரையாற்றினார்கள். மாவட்ட அமைப்பாளர் நா.கொளஞ்சி இயக்க நிலை குறித்தும், தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் ப.அறிவழகன் கழகத்தின் கடந்த கால செயல்பாடுகள் குறித்தும் தற்போதைய சூழல் குறித்தும் பேசினார். நிறைவாக கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, கழகத் தலைமைக்குழு உறுப்பினர் ந.அய்யனார் ஆகியோர் “இன்றைய அரசியல் சூழலில் பெரியார் இயக்கத்தின் தேவை, எதிர்கால செயல்பாடுகள், இயக்க தோழர்களின் செயல்பாடுகள்” குறித்து விரிவாக உரையாற்றினார்கள். நிறைவாக முத்துகிருஷ்ணன் நன்றி கூற கூட்டம் நிறைவுபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் கடலூர் மாவட்டத்தில் பொறுப்புகள் அனைத்தும் கலைக்கப்பட்டு தோழர் மதன்குமார் மாவட்ட அமைப்பாளராக நியமனம்...

தலைவர் பிறந்தநாளையொட்டி உடற்கொடை வழங்கும் தோழர்கள் தாரமங்கலம் பொதுக்கூட்டத்தில் படிவம் வழங்கினர்

தலைவர் பிறந்தநாளையொட்டி உடற்கொடை வழங்கும் தோழர்கள் தாரமங்கலம் பொதுக்கூட்டத்தில் படிவம் வழங்கினர்

தாரமங்கலம் நகரக் கழகத்தின் சார்பில் “குடிஅரசு இதழ் மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா” பொதுக்கூட்டம் 20.06.2024 அன்று தாரமங்கலம் அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பவளத்தனூர் சரவணன் தலைமை தாங்கினார், கே.ஆர்.தோப்பூர் கண்ணன் வரவேற்புரையாற்றினார், தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈசுவரன், சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராசு, நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் கிருஷ்ணன், கொளத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர் விஜயகுமார், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் தங்கதுரை, குடந்தை பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் முதல் நிகழ்வாக உமாபதி – பொன்ராஜ் குழுவின் அரசியல் நையாண்டி மற்றும் மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏற்காடு தேவபிரகாஷ் தொடக்கவுரையாற்றினார். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். கே.ஆர்.தோப்பூர் கணேசன் நன்றி கூற கூட்டம் நிறைவு...

கீரனூரில் இரண்டு நாள் பயிலரங்கம்! திண்டுக்கல் மாவட்டக் கழகம் சிறப்பான ஏற்பாடு

கீரனூரில் இரண்டு நாள் பயிலரங்கம்! திண்டுக்கல் மாவட்டக் கழகம் சிறப்பான ஏற்பாடு

திண்டுக்கல் மாவட்டக் கழக சார்பில் இரண்டு நாள் பெரியாரியல் பயிலரங்கம் பழனி கீரனூரில் 11.06.2024 – 12.06.2024 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. பயிலரங்கை கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் ஒருங்கிணைத்தார். கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி வாழ்த்துரை வழங்கினார். பின்னர் “பெரியார் அம்பேத்கர் மார்க்ஸ் பொருத்தப்பாடு” மற்றும் ”பெரியார் மீதான அவதூறுகளும்” என்கிற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியும், பெரியாரின் பெண் விடுதலை என்கிற தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் மன்றப் பொருப்பாளர் சிவகாமியும், பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலில் (இந்திய) பார்ப்பனர்களின் பங்கு என்கிற தலைப்பில் ம. கி. எட்வின் பிரபாகரனும் உரை நிகழ்த்தினார்கள். பின்னர் டெலஸ்கோப் மூலம் நிலவைக் குறித்து அறியும் அறிவியல் வகுப்பினை பேராவூரணி கலைச்செல்வன் நடத்தினார். முதல்நாள் நிறைவாக் சமூக ஊடகங்கள் குறித்து முகநூல் பொறுப்பாளர் பரிமளராசனும், இணையதள பொறுப்பாளர் விஜயகுமாரும் உரை நிகழ்த்தினார்கள். இரண்டாம் மற்றும் நிறைவு நாளான 12.06.2024 அன்று திராவிடர் இயக்கத்தின்...

தோழர் திலீபன் பெற்றோர் படத்திறப்பு

தோழர் திலீபன் பெற்றோர் படத்திறப்பு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டக் கழகத் தலைவர் திலீபனின் பெற்றோர் பச்சையப்பன் – தாயாரம்மாள் ஆகியோரது படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம் 15.06.2024 அன்று நெமிலி பெரப்பேரி கிராமத்தில் நடைபெற்றது.. இந்நிகழ்விற்கு வேலூர் மாவட்டக் கழகச் செயலாளர் வழக்கறிஞர் இரா.சிவா தலைமை தாங்கினார். நிகழ்வில் பச்சையப்பன் – தாயாரம்மாள் ஆகியோரது படத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். மேலும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி, கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன், காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் இரவிபாரதி ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினார்கள். நரேன் நன்றி கூறினார். இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, வேலூர் மாவட்டத் தலைவர் திலீபன், அன்பு, மற்றும் தோழர்கள், தோழமை இயக்கத்தினர், குடும்பத்தினர் திரளாக கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 20.06.2024 இதழ்

தோழர் விஜயன் தந்தை முடிவெய்தினார்!

தோழர் விஜயன் தந்தை முடிவெய்தினார்!

வட சென்னை மாவட்டத் தோழர் விஜயன் அவர்களின் தந்தை கோ. ஏகாம்பரம் அவர்கள் 11.06.2024 அன்று முடிவெய்தினார். அவரது இறுதி நிகழ்வில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், வட சென்னை மாவட்டக் கழக அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன், தட்சிணாமூர்த்தி, அருள்தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மறைந்த ஏகாம்பரம் அவர்களின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்கள். பின்னர் அவரது உடல் கொள்கை முழக்கங்களுடன் எடுத்துச் செல்லப்பட்டு, எந்தவித இந்து மதச் சடங்கு சம்பிரதாயங்களின்றி நல்லடக்கம் செய்யப்பட்டது. இதுபோன்ற நிகழ்வு கே.பி.பார்க் பகுதியில் நடந்தது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. பெரியார் முழக்கம் 20.06.2024 இதழ்

வினா விடை

வினா விடை

• அயோத்தி ராமன் கோயிலுக்கு விடப்பட்ட அனைத்து விமான சேவைகளும் ரத்து – செய்தி ஆமாம், பூரி ஜெகநாதன் கோயிலுக்கு திருப்பி விடப் போகிறோம். இராமன் இனி சுத்த வேஸ்ட். • விருதுநகர் மறையூரில் உள்ள கிராமக் கோயிலில் கறி விருந்தில் ஆண்கள் மட்டுமே சாப்பிட்டார்கள். பெண்கள் பங்கேற்க கூடாது – செய்தி ஆமாம் நாங்கள் மாமிசம் சாப்பிடுவோம், ஆனால் பெண்களை மதிக்க மாட்டோம். இதுதான் எங்கள் நாட்டார் தெய்வப் பெருமை. • பதவியேற்பு விழாவில் அரசியலமைப்பு புத்தகத்தை கையில் எடுத்து வணங்கினார் மோடி – செய்தி என்ன இருந்தாலும் முதல்முறையாக ஒன்றை பார்க்கும் போது உணர்ச்சிப் பொங்கத்தானே செய்யும். • நீட் தேர்வு தேவையில்லாதது – அன்புமணி ஆனால் நீட் தேர்வை திணிக்கும் மோடி ஆட்சி தேசத்திற்கு தேவையானது • சித்திரையில் குழந்தை பிறந்ததால் குடும்பத்திற்கு ஆபத்து என்பதால் பேரக் குழந்தையை கொன்ற தாத்தா கைது – செய்தி ஜாதி...

தோழர் திலீபனின் தாயார் முடிவெய்தினார்!

தோழர் திலீபனின் தாயார் முடிவெய்தினார்!

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் திலீபனின் தாயார் தாயாரம்மாள் 03.06.2024 திங்கட்கிழமை இரவு 11.30 மணி அளவில் முடிவெய்தினார். இறுதி நிகழ்வு இன்று 04.06.2024 மாலை 4.30 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட்டம் பெரப்பேரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. அம்மையாரின் உடலுக்கு வேலூர் மாவட்டக் கழகத் தோழர்கள் மரியாதை செலுத்தினார்கள். அம்மையாரின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம், 15.06.2024 அன்று அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. இதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி, கழக மாநிலப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழமை இயக்கத்தினர் பங்கேற்கின்றனர். பெரியார் முழக்கம் 13.06.2024 இதழ்

திண்டுக்கல்லில் பயிலரங்கம்

திண்டுக்கல்லில் பயிலரங்கம்

திண்டுக்கல் மாவட்டக் கழக சார்பில் இரண்டு நாள் “பெரியாரியல் பயிலரங்கம்” ஜுன் 11,12 ஆகிய தேதிகளில் பழனி – தாராபுரம் சாலையில் அமைந்துள்ள கீரனூர் S.M மினி மகாலில் நடைபெறவுள்ளது. இதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பெரியார் – அம்பேத்கர் – மார்க்ஸ் இன்றைய பொருத்தப்பாடு என்ற தலைப்பிலும், பெரியார் மீதான அவதூறுகளும், திராவிட இயக்கத்தின் இன்றைய தேவைகளும் என்ற தலைப்பிலும் வகுப்பு நடத்தவுள்ளார். மேலும் கழக முன்னணியினர் வகுப்பெடுக்கவுள்ளனர். பயிலரங்கில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளவும் மருதமூர்த்தி – 9940969803 மாவட்ட அமைப்பாளர், திண்டுக்கல் பெரியார் முழக்கம் 05.06.2024 இதழ்

தோழர் விசு படத்திறப்பு; தலைவர் பங்கேற்பு

தோழர் விசு படத்திறப்பு; தலைவர் பங்கேற்பு

பெருந்துறை ஒன்றிய திவிக செயலாளர் தோழர் விசு அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு 23.05.2024 அன்று, மேட்டுப்புதூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன் தலைமை தாங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விசுவின் படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். பெரியார் முழக்கம் 30.05.2024 இதழ்

ஈட்டியாய் கருத்தியல் பாய்ச்சிய மடத்துக்குளம் பயிலரங்கம்!

ஈட்டியாய் கருத்தியல் பாய்ச்சிய மடத்துக்குளம் பயிலரங்கம்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பெரியாரியல் பயிலரங்கம் மடத்துக்குளம் சூர்யா மகாலில் மடத்துக்குளம் மோகன் அரங்கில் மே 21, 22 ஆகிய இரண்டு நாட்கள் மிக சிறப்பாக நடைபெற்றது. முதல் நாள் மே 21ஆம் தேதி காலை 9:30க்கு தோழர்கள் அறிமுக நிகழ்ச்சி தொடர்ந்து பயிலரங்கின் நோக்கம் குறித்து எடுத்துரைத்து தோழர்களை வரவேற்று கழகத்தின் வெளியீட்டுச் செயலாளர் கோபி இராம.இளங்கோவன் உரையாற்றினார். முதல் வகுப்பு காலை 10.00 மணிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் “வகுப்புவாரி பிரதிநிதித்துவம்” என்னும் தலைப்பிலும், இரண்டாவது அமர்வாக பிற்பகல் 12.15 மணிக்கு தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் தலைவர் சிவகாமி “கடவுள் மறுப்பு தத்துவம்” என்னும் தலைப்பிலும், மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மூன்றாவது அமர்வாக மாலை 03.15 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் அவர்கள் “திராவிடர் இயக்க வரலாறு” எனும் தலைப்பில் வகுப்புகள் எடுத்தனர். நான்காம் அமர்வாக இரவு 07.00...

சத்தியமங்கலத்தில் பெரியார் படிப்பகம் திறப்பு

சத்தியமங்கலத்தில் பெரியார் படிப்பகம் திறப்பு

ஈரோடு வடக்கு : தந்தை பெரியார் படிப்பகம் திறப்பு விழா 26.05.2024 சத்தி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. நிகழ்விற்கு வழக்கறிஞர் தமிழரசன் தலைமை தாங்கினார். சத்தி ஒன்றிய செயலாளர் சிதம்பரம் வரவேற்புரையாற்றினார். வழக்கறிஞர் செகதீஸ்வரன், மாவட்டத் தலைவர் நாத்திக சோதி, மாவட்ட அமைப்பாளர் கோபி நிவாசு, மாவட்டச் செயலாளர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தந்தை பெரியார் படிப்பகத்தை கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். நிறைவாக தமிழ்நாடு அறிவியல் மன்றத் தோழர் கிருட்டிணசாமி நன்றி கூறினார். இதில் கோபி, நம்பியூர், தூ.நா.பாளையம் மற்றும் சத்தி ஒன்றிய கழகத் தோழர்கள், பொதுமக்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 30.05.2024 இதழ்

நீதிமன்றத்தில் மத விழா!- கழகம் புகார்

நீதிமன்றத்தில் மத விழா!- கழகம் புகார்

ஈரோட்டில் அரசுக்கு சொந்தமான ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வலம்புரி கற்பக விநாயகர் திருக்கோவிலில் 19.05.2024 அன்று கும்பாபிஷேக விழா நடத்த திட்டமிடப்பட்டது. “அரசுக்கு சொந்தமான நீதிமன்ற வளாகத்திற்குள் குறிப்பிட்ட மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை முன்னெடுப்பது, இந்திய அரசமைப்புச் சட்டம் சொல்லும் மதச்சார்பற்ற தன்மையை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே மத வழிபாட்டு விழாவை தடுத்த வேண்டும்” என்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி ஈரோடு மாவட்ட தலைமை நீதிபதி அவர்களிடம் 17.05.24 அன்று விண்ணப்பம் அளித்திருந்தார். எனினும், அரசு விதிமுறைகளை மீறி கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டிருக்கிறது. ஊடகங்களிலும் அதுகுறித்த செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இதுதொடர்பாக சட்ட ரீதியிலான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி தெரிவித்துள்ளார். பெரியார் முழக்கம் 30.05.2024 இதழ்

கழகத்தில் இணைத்துக்கொண்ட பெரம்பூர் விஷால்

கழகத்தில் இணைத்துக்கொண்ட பெரம்பூர் விஷால்

பெரம்பூர் விஷால், கழகத்தின் செயல்பாடுகளை இணையம் வழியாக அறிந்து கழகத்தில் இணைய விருப்பப்பட்டு 19.05.2024 அன்று மயிலாப்பூர் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற 21வது நிமிர்வோம் வாசகர் வட்ட சந்திப்பில் மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி தலைமையில் தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டார். உடன் கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், வட சென்னை அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன். பெரியார் முழக்கம் 23.05.2024 இதழ்

தோழர் விக்னேஷ் படத்திறப்பு நிகழ்ச்சி

தோழர் விக்னேஷ் படத்திறப்பு நிகழ்ச்சி

மறைந்த கழக செயல்வீரர் தோழர் போரூர் விக்னேஷ் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி 19.05.2024 அன்று கழகத் தலைமை அலுவலகத்தில், நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 21வது சந்திப்பில் நடைபெற்றது. வட சென்னை மாவட்டக் கழக அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன் விக்னேஷ் படத்தை திறந்துவைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், மடிப்பாக்கம் பகுதிக் கழகச் செயலாளர் எட்வின் பிரபாகரன். பெரியார் முழக்கம் 23.05.2024 இதழ்

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் 21-வது சந்திப்பு

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் 21-வது சந்திப்பு

“குடிஅரசு இதழ் மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு” விழாவை முன்னிட்டு நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 21வது சந்திப்பு 19.05.2024 அன்று மயிலாப்பூரில் உள்ள திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு அருண் கோமதி தலைமை தாங்கினார், சேத்துப்பட்டு இராசேந்திரன் வரவேற்புரையாற்றினார். நிகழ்வில் சிறப்பு அழைப்பார்களாக பங்கேற்ற ஊடகவியலாளர் சுகுணா திவாகர் ‘தமிழ்நாட்டின் சுடரொளி சுயமரியாதை இயக்கம்’ என்ற தலைப்பிலும், காஞ்சிபுரம் மாவட்டக் கழக அமைப்பாளர் இரவிபாரதி ‘தமிழ்ச்சூழலில் குடிஅரசு ஏற்படுத்திய அதிர்வலைகள்’ என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள். காவை அஜித் நன்றி கூற கூட்டம் நிறைவுபெற்றது. இந்நிகழ்வில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், ஆய்வாளர் பழ.அதியமான், மாவட்டச் செயலாளர் உமாபதி, கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 23.05.2024 இதழ்

தீவட்டிப்பட்டி கலவரத்தில் காவல்துறை பாரபட்சம்! பாதிக்கப்பட்டவர்கள் மீதே பாயும் நடவடிக்கை! உண்மை கண்டறியும் குழுவின் பரிந்துரைகள்

தீவட்டிப்பட்டி கலவரத்தில் காவல்துறை பாரபட்சம்! பாதிக்கப்பட்டவர்கள் மீதே பாயும் நடவடிக்கை! உண்மை கண்டறியும் குழுவின் பரிந்துரைகள்

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி மே 2/2024 அன்று நடந்த சாதிய வன்முறைகளைத் தொடர்ந்து, முற்போக்கு, சனநாயக அமைப்புத் தோழர்கள் மே 11 ஆம் நாளன்று நேரடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று நாச்சினாம்பட்டி ஆதிதிராவிடர் குடியிருப்பு மக்களையும், தீவட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களையும், தீவட்டிப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் (Investigation Officer – I.O.) திரு.ஞானசேகரன் அவர்களையும் சந்தித்து ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வின் அடிப்படையில் உண்மை அறியும் குழு அரசுக்கு முன்வைக்கும் பரிந்துரைகள்: • ஆதிதிராவிடர் பகுதியில் தேவையில்லாமல் பலர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. அவை திரும்பப் பெறப்பட வேண்டும். எடுத்துக் காட்டாகப் பெருமாயி மகன் அருண்குமார் (வயது 23) , குணா ( 21 ) தா/பெ பழநியம்மாள் போன்ற பல அப்பாவி இளைஞர்கள் கலவரத்தில் காயம் அடைந்ததோடு ஆத்தூர் சிறையிலும் அடைக்கப் பட்டுள்ளனர். • காவல்துறை தாக்குதலால்...

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகர கழக சார்பில் “குடிஅரசு இதழ்” மற்றும் “சுயமரியாதை இயக்க” நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. நாள் : 25.05.2024 சனி நேரம் : மாலை 5 மணி இடம் : தாரமங்கலம் அண்ணா சிலை அருகில் சிறப்புரை : கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு : தாராமங்கலம் நகர கழகம் பெரியார் முழக்கம் 16.05.2024 இதழ்

விஜயமங்கலம் விசு முடிவெய்தினார்

விஜயமங்கலம் விசு முடிவெய்தினார்

ஈரோடு வடக்கு : கழக பெருந்துறை ஒன்றியச் செயலாளர் விஜயமங்கலம் விசு உடல்நலக்குறைவால் 11.05.2024 அன்று அவரது இல்லத்தில் காலமானார். மறைந்த தோழர் விசுவின் உடலுக்கு கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வகுமார், வடக்கு மாவட்ட அமைப்பாளர் நிவாஸ், இரமேசு மற்றும் கழகத் தோழர்கள் மரியாதை செலுத்தினர். பின்னர் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். குறிப்பு : விஜயமங்கலம் விசு அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வு 23.05.2024 அன்று காலை மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. இதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்று நினைவேந்தல் உரையாற்றுகிறார். பெரியார் முழக்கம் 16.05.2024 இதழ்

மாநிலத்தில் 4-வது இடம்பெற்ற கழக மாணவர்

மாநிலத்தில் 4-வது இடம்பெற்ற கழக மாணவர்

கழகத் தோழர்கள் கொளத்தூர் சுதா – ராஜா இணையரின் மகன் இரா.சு. கதிரவன் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 496/500 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார். மாணவர் கதிரவன் கோவிலுக்கு போனதில்லை, வேண்டுதல் வைத்ததில்லை, பாதபூஜை நடத்தவில்லை, சிறப்பு யாக பூஜையில் பங்கேற்கவில்லை ஆசிரியர்களின் வழிகாட்டுதலோடு, தன்னம்பிக்கையோடு படித்து பத்தாம் வகுப்பில் 496 மதிப்பெண்களை பெற்று மாநிலத்தில் நான்காவது இடம் பிடித்திருக்கிறார். தேர்வில் வென்றதை அடுத்து கழகத் தலைவர் கொளத்தூர் மணியை தனது பெற்றோர்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற்றார். பெரியார் முழக்கம் 16.05.2024 இதழ்

கழகக் கலந்துரையாடல் கூட்டம்

கழகக் கலந்துரையாடல் கூட்டம்

சேலம் : தாரமங்கலம் நகர கழக கலந்துரையாடல் கூட்டம் 11.05.2024 அன்று பவளத்தானூர் சரவணன் இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சரவணன் தலைமை தாங்கினார். பவளத்தானூர் தனசேகர் முன்னிலை வகித்தார். இதில் தாராமங்கலம் நகர கழக சார்பில் மே மாத இறுதிக்குள் “குடிஅரசு இதழ்” மற்றும் “சுயமரியாதை இயக்க” நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பவளத்தானூர் சரவணன், தனசேகர், கே.ஆர்.தோப்பூர் கண்ணன், நங்கவள்ளி ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணன், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தங்கதுரை, இளம்பிள்ளை சேகர், நங்கவள்ளி நகர செயலாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 16.05.2024 இதழ்

மேட்டூர் ஆர்.எஸ். மாதையன் காலமானார்

மேட்டூர் ஆர்.எஸ். மாதையன் காலமானார்

சேலம் மாவட்டம் மேட்டூர் RS பகுதி திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் சௌந்தர்ராஜனின் தந்தை மாதையன் (74) 07.05.2024 அன்று உடல் நலக்குறைவின் காரணமாக முடிவெய்தினார். மறைந்த தோழர் மாதையன் அவர்களின் இறுதி நிகழ்வு மேட்டூர் RS,தேங்கல்வாரை,NSK நகரில் உள்ள அவரது இல்லத்தில் மாலை 6 மணியளவில் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டக் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினார்கள். பெரியார் முழக்கம் 09.05.2024 இதழ்

மேட்டூர் பசரியா மறைவு

மேட்டூர் பசரியா மறைவு

மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் அம்ஜத் கானின் தாயார் பசரியா 27.04.2024 அன்று முடிவெய்தினார். மறைந்த அம்மையாரின் இறுதி நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழக சேலம் மாவட்ட பொறுப்பாளர்கள், தோழர்கள் திரளாகப் பங்கேற்று மரியாதை செலுத்தினார்கள். பெரியார் முழக்கம் 09.05.2024 இதழ்

+2 தேர்ச்சி பெற்ற திருநங்கைக்கு பாராட்டு

+2 தேர்ச்சி பெற்ற திருநங்கைக்கு பாராட்டு

சென்னை நடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் திருநங்கை சகோதரி நிவேதா. இவர் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 283/600 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்திருக்கிறார். சகோதரி நிவேதா அவர்களை மாவட்டக் கழகச் செயலாளர் உமாபதி தலைமையில் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். உடன் தோழர்கள் அருண்குமார், இராஜேசு, குமார், எழில், அன்னூர் விஷ்ணு. பெரியார் முழக்கம் 09.05.2024 இதழ்

மடத்துக்குளத்தில் பெரியாரியல் பயிலரங்கம்

மடத்துக்குளத்தில் பெரியாரியல் பயிலரங்கம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் இரண்டு நாள் கோடைக்கால பெரியாரியல் பயிலரங்கம் நடைபெறவுள்ளது. நாள் : மே 21,22 ஆகிய தேதிகளில் இடம் : சூரியா மகால், பழனி ரோடு, மடத்துக்குளம் குறிப்பு : இந்த பயிலரங்கில் திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, ஈரோடு மாவட்டத் தோழர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். முன்பதிவு கட்டாயம். கட்டணம் ரூ.100/- முன்பதிவுக்கு : 9942645497, 9842248174, 9442837666, 7373561014, 9842487766 பெரியார் முழக்கம் 02.05.2024 இதழ்

தேவேந்திரன் – நிஷா இணையேற்பு விழா

தேவேந்திரன் – நிஷா இணையேற்பு விழா

சென்னை : மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனையில் குழந்தைநல மருத்துவராக பணிபுரியும் அ.வா.தேவேந்திரன் அவர்களுக்கும், நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த, மயிலாடுதுறை அறம் குழந்தைகள் சிகிச்சையக இயக்குநர் இராம.ஜெனிஃபர் (எ) நிஷா அவர்களுக்கும் ஜாதி – மத மறுப்புத் திருமணம் 14.04.2024 அன்று பெரியார் திடலில் நடைபெற்றது. இணையேற்பு விழாவுக்கு தலைமைத் தாங்கிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இணையேற்பை நடத்தி வைத்து வாழ்த்துரையாற்றினார். இந்நிகழ்வில் இயக்குநர் கோபி நயினார், கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், மாவட்டத் தலைவர் வேழவேந்தன் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 02.05.2024 இதழ்

தோழர் பத்ரியின் 20-ஆம் ஆண்டு நினைவேந்தல்

தோழர் பத்ரியின் 20-ஆம் ஆண்டு நினைவேந்தல்

சென்னை : வாழ்க்கையை கொள்கையாக்குவோம்! கொள்கையை சமூகமாக்குவோம்!! என்ற இலட்சிய வேட்கையோடு களப்பணியாற்றிய செயல்வீரர் பத்ரி நாராயணனின் 20வது நினைவுநாளை ஒட்டி மயிலாப்பூரில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் திராவிட முன்னேற்றக் கழக சென்னை மேற்கு மாவட்டத் துணைச் செயலாளர் ஆர்.என்.துரை, விசிக மண்டலச் செயலாளர் ரூதர் கார்த்திக், திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிச் செயலாளர் வெங்கடேசன், கழக மாவட்டத் தலைவர் வேழவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து நினைவேந்தல் கூட்டம் இராயப்பேட்டை வி.எம் தெரு பத்ரி நாராயணன் நினைவுப் படிப்பகம் முன்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், பத்ரி அவர்களின் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். தொடர்ந்து அவருடன் பயணித்த கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக்குழு உறுப்பினர் அன்பு தனசேகர், விசிக மைய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் சாரநாத்,...

திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்

திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது ஜிஎஸ்டி குறித்து பாஜகவினரிடம் கேள்வி எழுப்பிய திருப்பூர் மாநகர கழக அமைப்பாளர் சங்கீதா மீது தாக்குதல் நடத்திய பாஜக நிர்வாகிகள் சின்னச்சாமி, சீனிவாசன், ரவிச்சந்திரன் ஆகியோர் மீது 15 வேலம்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். வழக்குப்பதிவான நிலையில் தலை மறைவான குற்றவாளிகள் முன்பிணைக் கோரி தாக்கல் செய்த மனுவை திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் குற்றவாளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். 29.04.2024 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.‌ பாதிக்கப்பட்ட சங்கீதாவுக்கு ஆதரவாக கழக வழக்கறிஞர் திருமூர்த்தி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். இருப்பினும் குற்றவாளிகளான பாஜக நிர்வாகிகளுக்கு முன்பிணை வழங்கி உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். குற்றவாளிகளை கைது செய்யாமல் காலம் தாழ்த்தியதோடு, திருப்பூர் மாநகர அமைப்பாளர் சங்கீதா மீது பொய் வழக்கினை பதிவு செய்த 15 வேலம்பாளையம் காவல் ஆய்வாளருக்கு திருப்பூர் மாவட்ட திராவிடர்...

கழக செயல்வீரர் போரூர் விக்னேஷ் மறைவு

கழக செயல்வீரர் போரூர் விக்னேஷ் மறைவு

சென்னை மாவட்டக் கழக செயல்வீரர் போரூர் ‌‌‍விக்னேஷ் கடந்த ஆண்டு கழகத்தில் இணைந்த நாள் முதலே கழகம் நடத்திய ஒவ்வொரு நிகழ்வுகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். ஐடி ஊழியர், வாசிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் தோழர் விக்னேஷ். அவர் 16.04.2024 அன்று முடிவெய்தினார். போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த தோழர் விக்னேஷின் உடலுக்கு கழகத்தின் சார்பில் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் தோழர் உமாபதி, எட்வின் பிரபாகரன், இரண்யா, அருண்குமார், அன்னூர் விஷ்ணு, அட்டி அருண், புகழ் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினார்கள். சொந்த ஊரான திண்டிவனத்தில் தோழர் விக்னேஷின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பெரியார் முழக்கம் 25.04.2024 இதழ்

எதிர்வரும் நிகழ்வு

எதிர்வரும் நிகழ்வு

இயக்கத்தின் கருப்பு மெழுகுவர்த்தி, கழக செயல்வீரர் தோழர் பத்ரி நாராயணன் அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி ஏப்ரல் 30ஆம் தேதி காலை 9 மணியளவில் மயிலாப்பூர் மயானத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து இராயப்பேட்டை பத்ரி நாராயணன் நினைவுப் படிப்பகம் முன்பு நினைவேந்தல் கூட்டம் நடைபெறுகிறது எனவே தோழர்கள் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இரா.உமாபதி மாவட்டச் செயலாளர் – சென்னை திராவிடர் விடுதலைக் கழகம் பெரியார் முழக்கம் 25.04.2024 இதழ்

தோழர் சி.சுப்பிரமணியன் மறைந்தார் சடங்குகளை மறுத்து உடல் அடக்கம்

தோழர் சி.சுப்பிரமணியன் மறைந்தார் சடங்குகளை மறுத்து உடல் அடக்கம்

சேலம் : திராவிடர் விடுதலைக் கழகத் தோழர், கொளத்தூர், அய்யம்புதூர் சி.சுப்பிரமணியன் அவர்கள் 21.04.2024 அன்று முடிவெய்தினார். அவரது உடலை கழகப் பெண் தோழர்கள் சுமந்து சென்று இறுதி ஊர்வலத்தை முன்னின்று நடத்தினார்கள். இறுதி ஊர்வலத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திராவிடர் விடுதலைக் கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள், தோழமை இயக்கத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமாக கலந்து கொண்டனர். இறந்தவர்களின் உடலை பெண்கள் சுமக்க கூடாது. சுடுகாடு வரை பெண்கள் வரக்கூடாது என்ற மூடத்தனத்தை மறுத்து, ஜாதி – மத சடங்குகளை மறுத்து பெண்களே முன்னின்று இறுதி நிகழ்வுகளை நடத்தியது அப்பகுதியில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு மறைந்த சி.சுப்பிரமணியம் அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வு அவரது இல்லத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மறைந்த தோழர் சி.சுப்பிரமணியன் படத்தை திறந்துவைத்து நினைவேந்தல் உரையாற்றினார். இந்நிகழ்வில் கழக ஈரோடு வடக்கு...

சென்னை, மதுரை, கோவையில் கழகம் பரப்புரை

சென்னை, மதுரை, கோவையில் கழகம் பரப்புரை

சென்னை : இந்தியா கூட்டணியின் தென் சென்னை மக்களவைத் தொகுதி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றது. இதில் உமாபதி – கார்மேகம் – பொன்ராஜ் குழுவின் அரசியல் நையாண்டி நிகழ்ச்சி நடைபெற்றது. கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், எட்வின் பிரபாகரன், அன்னூர் விஷ்ணு ஆகியோர் கருத்துரையாற்றினார்கள். மதுரை : இந்தியா கூட்டணியின் மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மதுரை மாவட்டக் கழக சார்பாக 16.04.2024 அன்று அழகர் கோவில், கிடாரிப்பட்டி, வள்ளாலபட்டி, சாணிப்பட்டி, கருங்காலக்குடி, கொட்டாம்பட்டி, தும்பைப்பட்டி, சந்தைப் பேட்டை, நொண்டிகோவில் பட்டி, மேலூர் உள்ளிட்ட கிராமப்புறங்களில் பரப்புரை செய்தனர். இதில் மாவட்டச் செயலாளர் மா.பா.மணிஅமுதன், மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி, மேலூர் பொறுப்பாளர் சத்திய மூர்த்தி, முருகேசன், ஆசிரியர் நடராசன், பிரகாஷ், சந்துரு உள்ளிட்ட கழகத் தோழர்களும், பவானி,...

தோழர் சங்கீதாவை தாக்கியவர்களுக்கு பிணை மறுப்பு!

தோழர் சங்கீதாவை தாக்கியவர்களுக்கு பிணை மறுப்பு!

பாஜகவினர் கழகத் தோழர் சங்கீதாவை தாக்கிய வழக்கில் குற்றவாளிகளுக்கு முன் பிணை மறுத்து திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பாஜகவினரிடம் அப்பகுதி மக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். அப்போது அங்கிருந்த தோழர் சங்கீதாவும் பாஜகவினரிடம் ஜி.எஸ்.டி. குறித்து கேள்விகள் எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் தோழர் சங்கீதாவின் கடையை தேடிச் சென்று, தனியாக இருந்த அவரை தரம் தாழ்ந்த வார்த்தைகளால் வசைபாடியதுடன், கொலைவெறித் தாக்குதலும் நடத்தியுள்ளனர். இத் தாக்குதலில் ஈடுபட்ட பாஜக பொறுப்பாளர் சின்னச்சாமி உள்ளிட்ட 5 பேரை கைது செய்த கோரி 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில் குற்றவாளிகள் தங்களுக்கு முன் பிணை தர வேண்டும் என்று கூறி திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கோரிக்கை மனு சமர்ப்பித்திருந்தனர். இந்த...

கொளத்தூரில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்!

கொளத்தூரில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்!

கொளத்தூர் : கொளத்தூர் நகரக் கழக சார்பில் “மோடி ஆட்சி தொடரலாமா?” நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் 09.04.2024 அன்று கொளத்தூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. பாடகர் கோவன் குழுவின் கலை நிகழ்ச்சி மற்றும் கலகக்காரன் குழுவின் தெருக்கூத்து நாடகத்துடன் பொதுக்கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு கொளத்தூர் நகரத் தலைவர் ராமமூர்த்தி வரவேற்புரையாற்றினார். சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கு.சூரியகுமார் தலைமை தாங்கினார். இதில் திராவிடர் முன்னேற்றக் கழக கொளத்தூர் ஒன்றிய செயலாளர் மிதுன் சக்கரவர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி கொளத்தூர் ஒன்றிய செயலாளர் சேட்டு குமார், தமிழ்ப் புலிகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் தீனரட்சகன், திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி மாவட்ட து. அமைப்பாளர் முருகேசன், ஆதிதிராவிடர் நலத்துறை மாவட்ட தலைவர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். கழக கொளத்தூர் நகரச் செயலாளர் அறிவுச்செல்வன் நன்றி கூற பொதுக்கூட்டம்...

புரட்சியாளர் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள் விழா! பல்வேறு மாவட்டங்களில் கழகம் மரியாதை

புரட்சியாளர் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள் விழா! பல்வேறு மாவட்டங்களில் கழகம் மரியாதை

புரட்சியாளர் அம்பேத்கரின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு கழக சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மரியாதை செலுத்தப்பட்டு சமத்துவநாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. அது பின்வருமாறு:- சென்னை : புரட்சியாளர் அம்பேத்கரின் 134வது பிறந்தநாளை முன்னிட்டு 14.04.2024 அன்று காலை 9 மணிக்கு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கொள்கை முழக்கங்கள் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், மாவட்டச் செயலாளர் உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன் மற்றும் பகுதிக் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். மடிப்பாக்கம் பகுதிக் கழக சார்பில் ஆதம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கழகத் தோழர்கள் – ஆதரவாளர்கள் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். ஈரோடு : புரட்சியாளர் அம்பேத்கர் அவரது 134வது பிறந்த நாளை முன்னிட்டு பன்னீர்செல்வம் பூங்காவில் அமைந்துள்ள அம்பேத்கர்...

சேத்துப்பட்டு இராசேந்திரன் இல்லத் திறப்பு விழா

சேத்துப்பட்டு இராசேந்திரன் இல்லத் திறப்பு விழா

வட சென்னை : வட சென்னை மாவட்டக் கழக அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன் – அலமேலு ஆகியோரின் இல்லத் திறப்பு விழா 14.04.2024 காலை 11:30 மணியளவில் அயனாவரம் முனுசாமி தெருவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தபெதிக தலைவர் ஆனூர் ஜெகதீசன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இதில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக்குழு உறுப்பினர் அன்பு தனசேகர், மாவட்டச் செயலாளர் உமாபதி, இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார் மற்றும் தோழர்கள் – குடும்ப உறவுகள் திரளாக கலந்து கொண்டனர்.. நிறைவாக கழகம் சார்பில் நினைவு பரிசாக புத்தர் சிலையை கழகத் தலைவர் வழங்கினார். பெரியார் முழக்கம் 18.04.2024 இதழ்

இந்தியாவா? பாரதமா?

இந்தியாவா? பாரதமா?

சென்னை : நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 20வது சந்திப்பு “இந்தியாவா? பாரதமா?” என்ற தலைப்பில் புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு கழகத் தலைமை அலுவலகத்தில் அன்னூர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் ஆர்.எஸ்.எஸ்-ம் – ‘பாரதமும்’ என்ற தலைப்பில் ஊடகவியலாளர் பிரகாசும், ‘பாரதத்தில்’ தீண்டத்தகாதவர்களின் நிலை என்ற தலைப்பில் ஆர்த்தியும் சிறப்புரையாற்றினார்கள். அடுத்ததாக ‘பாரதத்தை’ எதிர்க்கும் தெற்கு என்ற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றினார். இதில் 40க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 18.04.2024 இதழ்

மேட்டூர் ஆர்.எஸ்-இல் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்!

மேட்டூர் ஆர்.எஸ்-இல் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்!

மேட்டூர் ஆர்.எஸ் நகரக் கழக சார்பில் “மோடி ஆட்சி தொடரலாமா?” நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் 10.04.2024 அன்று மேட்டூர் ஆர்.எஸ் வணிக வளாகம் முன்பு நடைபெற்றது. பாடகர் கோவன் குழுவின் கலை நிகழ்ச்சி மற்றும் கலகக்காரன் குழுவின் தெருக்கூத்து நாடகத்துடன் பொதுக்கூட்டம் தொடங்கியது. பொதுக் கூட்டத்திற்கு கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அ.சக்திவேல் தலைமை தாங்கினார், RS பகுதித் தலைவர் முரளிதரன் வரவேற்புரையாற்றினார். திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் கவிஞர் வைரமணி, கழக மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு ஆகியோர் உரையாற்றினார்கள். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். நிறைவாக RS பகுதி செயலாளர் கு.விவேக் நன்றி கூற பொதுக் கூட்டம் நிறைவுபெற்றது. பெரியார் முழக்கம் 18.04.2024 இதழ்

திருப்பூர் சங்கீதா மீது பாஜகவினர் தாக்குதல்! ஜி.எஸ்.டி. குறித்து கேள்வி எழுப்பியதால் வெறிச்செயல்

திருப்பூர் சங்கீதா மீது பாஜகவினர் தாக்குதல்! ஜி.எஸ்.டி. குறித்து கேள்வி எழுப்பியதால் வெறிச்செயல்

திருப்பூர் : திராவிடர் விடுதலைக் கழகத்தின் திருப்பூர் மாவட்ட அமைப்பாளரான தோழர் சங்கீதா ஆத்துப்பாளையம் பகுதியில் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். கழக நிகழ்வுகளிலும், ஆர்ப்பாட்டங்களிலும் குடும்பத்தோடு பங்கேற்பவர் தோழர் சங்கீதா. கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி அன்று திருப்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ஏ.பி.முருகானந்தத்திற்கு ஆதரவாக பாஜகவினர் ஆத்துப்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்திருந்தனர். அப்போது அங்கு துணிக்கடை நடத்தி வந்த சங்கீதாவிடம் பாஜகவினர் வாக்கு சேகரிக்க சென்ற போது நாப்கின், அரிசி, பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்திற்கும் ஒன்றிய அரசு ஜிஎஸ்டி விதித்தது குறித்து சங்கீதா கேள்வி எழுப்பினார். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத பாஜகவினர் சங்கீதாவின் கடைக்குள் வந்து “நீ யார் கேள்வி கேட்க?” என்று கேட்டு தகாத வார்த்தைகளில் பேசி கடுமையாக தாக்கினார்கள். அப்போது ‘‘நான் கேள்விதானே கேட்கிறேன். பதில் சொல்ல முடியவில்லை என்றால் தாக்குவீர்களா?’’ என...

ஜாதி வன்கொடுமை காரணமாக மாணவர் அஜித் குமார் மரணம் !”  “உரிய விசாரணை நடத்தி மாணவர் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும் !”  *கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் அறிக்கை !*

ஜாதி வன்கொடுமை காரணமாக மாணவர் அஜித் குமார் மரணம் !” “உரிய விசாரணை நடத்தி மாணவர் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும் !” *கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் அறிக்கை !*

“ஜாதி வன்கொடுமை காரணமாக மாணவர் அஜித் குமார் மரணம் !” “உரிய விசாரணை நடத்தி மாணவர் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும் !” *கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் அறிக்கை !* ஜாதிய வன்கொடுமை காரணமாக தஞ்சை மருத்துவக் கல்லூரியில் நிகழ்ந்துள்ள கல்வி நிறுவனக் கொலை என்று சந்தேகிக்கப்படும் ஒரு மாணவரின் மரணம் குறித்து அனைவரின் கவனத்தை ஈர்க்கவும், உரிய தீர்வு கிடைக்கவும் இவ்வறிக்கையை முன்வைக்கிறேன். கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், பாபு குளம் என்ற ஊரைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் ஏ.அஜித்குமார். இவர் பத்தாம் வகுப்பில் மாவட்டத்தின் முதல் மாணவராக தேறியவர். அதுபோலவே பன்னிரண்டாம் வகுப்பிலும் பள்ளியின் முதல் மாணவர். மருத்துவக் கல்வி அனுமதிக்கான கட் ஆப் மதிப்பெண் 97.75 பெற்றவர். 2014 ஆம் ஆண்டு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் படித்து வந்த அவர் நான்காம் ஆண்டு படிக்கும் போது அப்போது நடந்த...

கழகத்தின் தேர்தல் பரப்புரைகள் தீவிரம் பாஜகவுக்கு எதிரான பரப்புரைகளுக்கு அமோக ஆதரவு!

கழகத்தின் தேர்தல் பரப்புரைகள் தீவிரம் பாஜகவுக்கு எதிரான பரப்புரைகளுக்கு அமோக ஆதரவு!

சேலம் : மேட்டூர் நகரக் கழக சார்பில் “மோடி ஆட்சி தொடரலாமா?” பொதுக்கூட்டம் 06.04.2024 அன்று மேட்டூர் சின்ன பார்க் திடலில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு மேட்டூர் நகரத் தலைவர் செ. மார்ட்டின் தலைமை தாங்கினார், கீ.கோ.தேன்மொழி வரவேற்புரையாற்றினார். கூட்டத்தின் தொடக்க நிகழ்வாக பாடகர் கோவன் கலைக் குழுவின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர் செல்வேந்திரனின் இயக்கத்தில் “கலகக்காரன்” நையாண்டி தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழக சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தராஜ், மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, ம.க.இ.க பாடகர் கோவன் ஆகியோர் மோடி ஆட்சி தொடரலாமா? என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார்கள். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். மேட்டூர் நகர தி.வி.க.செயலாளர் சு.குமரப்பா நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மேட்டூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் சிவக்குமார் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து கழகத்...

தயாநிதி மாறன் பெரியார் சிலைக்கு மரியாதை!

தயாநிதி மாறன் பெரியார் சிலைக்கு மரியாதை!

தென் சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர் தயாநிதிமாறன் 09.04.2024 அன்று திருவல்லிக்கேணி பகுதியில் வாக்கு சேகரிக்க வருகைதந்தார். அவருக்கு சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் கழக படிப்பகம் முன்பு அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பெரியார் முழக்கம் 11.04.2024 இதழ்

ஈரோடு இரத்தினசாமியின் தாயார் காலமானார்!

ஈரோடு இரத்தினசாமியின் தாயார் காலமானார்!

ஈரோடு : கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமியின் தாயார் மருதாம்பாள் (வயது 90) 08.04.2024 அன்று வயது மூப்பின் காரணமாக முடிவெய்தினார். ஈரோடு முத்தூர் கார்வழி ரைஸ்மில் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி மற்றும் கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினார்கள். பின்னர் 09.04.2024 அன்று அம்மையாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பெரியார் முழக்கம் 11.04.2024 இதழ்

எதிர்வரும் நிகழ்வுகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

• பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி அவர்களை ஆதரித்து தெருமுனைக் கூட்டங்கள் ஏப்ரல் 6,7,8,9 ஆகிய 4 நான்கு நாட்கள் நடைபெற உள்ளன. இந்நிகழ்வின் இறுதியில், 7,8 ஆகிய நாட்களில் நடைபெறும் பொது கூட்டங்களில் தலைவர் கொளத்துர் மணி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சிகள் திராவிட இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக நடைபெறுகின்றன. • திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் “மோடி ஆட்சி தொடரலாமா?” என்ற தலைப்பில் இந்தியா கூட்டணியை ஆதரித்து நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டங்கள் ஏப்ரல் 06,09 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மேட்டூர், கொளத்தூர், மேட்டூர் ஆர்.எஸ் உள்ளிட்ட மூன்று இடங்களில் நடைபெறவுள்ளது. இதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இதில் பாடகர் கோவன் குழுவினர் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி நடைபெறும். பெரியார் முழக்கம் 04.04.2024 இதழ்

திருப்பத்தூரில் இல்ல திறப்பு விழா

திருப்பத்தூரில் இல்ல திறப்பு விழா

திருப்பத்தூர் : வாணியம்பாடியை அடுத்துள்ள புல்லூர் கிராமத்தில் கழக வாணியம்பாடி செயலாளர் சுரேஷ்-இன் இல்லத் திறப்பு விழா மற்றும் கழக கொடியேற்று விழா 17.3.2024 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. விழாவின் தொடக்க நிகழ்வாக ஜெய்கர் – மருது ஆகியோரின் இசை நிகழ்ச்சி அமைந்தது. விழாவை நிலா தொகுத்து வழங்கினார். விழாவிற்கு வேலூர் மாவட்டத் தலைவர் திலிபன், மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இரா.ப.சிவா, மாவட்டப் பொருளாளர் த.சதிஷ் சமத்துவன், பேர்ணாம்பட்டு நகரச் செயலாளர் பார்த்திபன், கஜேந்திரன், ஆசிரியர் பாஸ்கரன், செந்தில், வேலூர் சதிசு, ரேனு, பேர்ணாம்பட்டு ஒன்றிய செயலாளர் அரவிந்த் செயசூர்யா, அமல்ராஜ், முரளி தன்மானன், வழக்கறிஞர் பாலகுமாரன், வழக்கறிஞர் திராவிட பாண்டியன், ஆனஸ்ட், செ.ராஜி, செல்வக்குமார், புருசோத்தமன், செல்வக்குமார், செயக்குமார், சிலம்பரசன், பிரவினா, வைரமணி, சுகந்தி யாழினி, கனல்விழி, கயல்விழி, யாழ்வெண்பா, மோகேஷ் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர். விசிக மண்டலச் செயலாளர் இரா.சுபாசு சந்திர...

திமுக வேட்பாளர்களுக்கு நேரில் வாழ்த்து!

திமுக வேட்பாளர்களுக்கு நேரில் வாழ்த்து!

மதுரை : இந்தியா கூட்டணியின் மதுரை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசனை மதுரை மாவட்டச் செயலாளர் மா.பா.மணிஅமுதன் தலைமையில் 31.03.2024 அன்று கழகத் தோழர்கள் நேரில் சந்தித்து ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். மேலும் இந்திராநகர் பிடி.காலனி, தகர பிள்ளையார் கோவில் தெரு, செல்லூர், மேலத் தோப்பு, கீழத் தோப்பு, மதிச்சியம், நெல்பேட்டை, ஒபுளாபடித்துறை, முனிச்சாலை, அந்தோணி மூப்பனார் தெரு, அனுப்பானடி உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்தனர். இதில் மாவட்டத் தலைவர் காமாட்சிப் பாண்டி, மேலூர் பொறுப்பாளர் சத்திய மூர்த்தி, முருகேசன், கண்ணன் காமாட்சி உள்ளிட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர். சென்னை : எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் திருமதி தமிழச்சி தங்கபாண்டியனை 30.03.2024 அன்று கழகத் தோழர்கள் சந்தித்து தங்களது ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். கடந்த 8 மாதங்களாக சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம்...

ஈரோடு, ஆத்தூரில் தேர்தல் பரப்புரை

ஈரோடு, ஆத்தூரில் தேர்தல் பரப்புரை

ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியக் கழக சார்பில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! என்ற முழக்கத்தோடு 2024 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆனைக்கல் மேடு, மணிக்கூண்டு, உடையம்பட்டி, நரசிங்கபுரம், முல்லைவாடி, ராஜேந்திரா பேக்கரி உள்ளிட்ட ஆறு இடங்களில் பிப்ரவரி 25ஆம் தேதி தொடங்கி மார்ச் 15 வரை நடைபெற்றது. கூட்டத்தின் தொடக்க நிகழ்வாக பெரியார் விழுதுகள் ரிஷிவிந்தன் – அரவிந்தன் ஆகியோரின் பகுத்தறிவுப் பாடல்கள் மற்றும் மகேந்திரன் – கணபதி குழுவின் அரசியல் நையாண்டி நடைபெற்றது. செல்வராஜ், வெங்கடேஷ், கார்த்திகேயன் ஆகியோர் பரப்புரைக் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி உரையாற்றினர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்ப் புலிகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். ஈரோடு : ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியின் ஒரு பகுதியான மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திராவிடர் விடுதலைக் கழகமும் சமூகநீதி கூட்டமைப்பும்...

பாஜகவின் சட்டவிரோத முயற்சி தகர்ப்பு!

பாஜகவின் சட்டவிரோத முயற்சி தகர்ப்பு!

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட இராயப்பேட்டை வி.எம்.தெரு பெரியார் படிப்பகம் அருகில் 27.02.2024 அன்று பாஜகவினர் தேர்தல் பணிமனையை திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். தகவலறிந்த திருவல்லிக்கேணி பகுதிக் கழகப் பொறுப்பாளர்கள் நேரில் சென்று உரிய அனுமதியின்றி இங்கு பாஜகவினர் தேர்தல் பணிமனையை திறக்க முயற்சிக்கின்றனர். எனவே காவல்துறை இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்த பின்பு பாஜக தேர்தல் பணிமனை அமைக்கும் முயற்சியை கைவிட்டது. பெரியார் முழக்கம் 04.04.2024 இதழ்

பெரியார் முழக்கத்திற்கு ரூ.5,000 வளர்ச்சி நிதி

பெரியார் முழக்கத்திற்கு ரூ.5,000 வளர்ச்சி நிதி

சென்னை : வட சென்னை மாவட்ட அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன் குடும்பத்தினரின் இல்லத் திறப்பு விழா 14.04.2024 அன்று அயன்புரம் முனுசாமி தெருவில் நடைபெறுகிறது. இதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்று பெரியார் – அம்பேத்கர் – மார்க்ஸ் கல்வெட்டை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ஆனூர் ஜெகதீசன் தந்தை பெரியார் இல்ல கல்வெட்டை திறந்து வைக்கிறார். இல்லத் திறப்பு விழாவின் மகிழ்வாக கழக வார ஏடான புரட்சிப் பெரியார் முழக்கம் இதழுக்கு ரூ.5000/- வளர்ச்சி நிதி வழங்கியுள்ளார். தொடர்புக்கு : 9445109323, 7550178401 பெரியார் முழக்கம் 04.04.2024 இதழ்