கழக வளர்ச்சி நிதி
மயிலாடுதுறை மாவட்டக் கழகம் சார்பில் ரூ.25,000 கழக வளர்ச்சி நிதியாக தோழர்கள் தந்துள்ளனர். – நன்றியுடன் பெற்றுக்கொண்டோம். பெரியார் முழக்கம் இதழ் 30042026
மயிலாடுதுறை மாவட்டக் கழகம் சார்பில் ரூ.25,000 கழக வளர்ச்சி நிதியாக தோழர்கள் தந்துள்ளனர். – நன்றியுடன் பெற்றுக்கொண்டோம். பெரியார் முழக்கம் இதழ் 30042026
கடந்த ஒரு மாதங்களாக வருகின்ற புரட்சிப் பெரியார் முழக்கங்கள் எல்லாம் வண்ணப் புகைப்படங்களோடு வந்து கொண்டிருக்கிறது. 1973-ல் பெரியாருக்கு பிரச்சார வாகனம் அளிக்கப்பட்டது குறித்து செய்திகள் படிப்பதற்கு களத்தில் நாங்கள் நிற்பதைப் போல் இருந்தது. அதே போல் தலையங்கத்தில் சட்டத்தின் ஆட்சியா? பார்ப்பன ஆட்சியா? என்று அந்த செய்தியை எவ்வளவு அயோக்கியத்தனமாக இந்த பார்ப்பனர்கள் செய்கிறார்கள் என்பதை தெளிவாக எடுத்துக் காட்டியது. டெல்லிக்கு எதிரான போராட்டங்களின் முதல் வெற்றி என்ற தலைப்பில் எழுதப்பட்ட செய்தியும், உலகிலேயே குடும்பத் தலைவிகளின் உழைப்புக்கு ஊதியம் வழங்கிய ஒரே ஆட்சி தமிழ்நாடு தான் என்ற செய்தி மிகவும் சிறப்பானது. திராவிட மாடல் ஆட்சி நாயகன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை பெரியார் முழக்கத்துடன் நாங்களும் பாராட்டி மகிழ்கிறோம். மு.சாமிநாதன் (நாமக்கல் மாவட்டத் தலைவர், திவிக) பெரியார் முழக்கம் இதழ் 30042026
கழகத் தோழர் அருண்பாண்டியன்-குமுதா ஆகியோரின் ஆண் குழந்தைக்கு 05.04.2026 ஞாயிற்றுக்கிழமை சேலம் குரங்குச்சாவடி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பெயர் சூட்டும் விழா நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அருண்பாண்டியன் – அமுதா ஆகியோரின் ஆண் குழந்தைக்கு “தமிழ்சமரன்” என பெயர் சூட்டி மகிழ்ந்தார். பிறந்தநாள் மகிழ்வாக ரூ.2000 பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக தந்துள்ளனர். சக்திவேல்( கிழக்கு மாவட்டத் தலைவர்), டேவிட் (கிழக்கு மாவட்டச் செயலாளர்), கிருஷ்ணன் ( மாவட்ட ஒருங்கிணைப்பாளர்), மாவட்ட அமைப்பாளர்கள் அன்பு, பெருமாள், தேவபிரகாஷ் (மாவட்ட இளைஞரணி தலைவர்), பிரபாகரன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), தங்கதுரை (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), தேவராஜ் (சேலம் மாநகர அமைப்பாளர்), ராஜேந்திரன் (நங்கவள்ளி ஒன்றிய அமைப்பாளர்), கார்த்தி (ஏற்காடு ஒன்றியப் பொறுப்பாளர்), பிரபு (சேலம் மாநகர பொருளாளர்), லோகநாதன், அவினாசி, செய்தியாளர் கோகுல், தீபா, யாழினி, முத்துராஜ், இந்திராணி, ஈழ பிரபாகரன், ஆனந்த், கார்த்திகேயன், முரளி ஆகிய தோழர்கள்...
கழகத் தலைவர் கொளத்தூர் மணி 29.03.2026 அன்று சென்னை, அண்ணாமலை காலனி, சத்தியமூர்த்தி தெருவில் உள்ள டிவி ஸ்டுடியோவில் “வாழ்” குறும்படத்தின் சிறப்புக் காட்சியை பார்வையிட்டு குறும்பட குழுவிற்கு வாழ்த்துகளை தெரிவித்தார். தாய் தந்தை தமிழ் படைப்பகம் மற்றும் JOKERKING’S PRODUCTION – NILOFER NISHA இணைந்து வழங்கும் “வாழ்” குறும்படம், இயக்குநர் ஆர். சமீர் அவர்களின் சிந்தனையிலும் சமூகப் பொறுப்புணர்விலும் உருவான ஓர் அர்த்தமிக்க படைப்பு. இந்த குறும்படத்தின் உருவாக்கத்தில் பங்களித்த கலைஞர்கள்: ஒளிப்பதிவாளர் சித்தார்த் தமிழ் செல்வன், இசை அமைப்பாளர் அபிஷேக் வாசகன், படத்தொகுப்பாளர் அசோக் சார்லஸ், வசனம் அருணகிரி மற்றும் இயக்குநர் சமீர். “சாவதற்கு ஆயிரம் வழிகள் இருக்கும்போது, வாழ்வதற்கு ஒரு வழியும் இல்லையா?” என்ற தாக்கமிக்க வசனம், இந்த குறும்படத்தை கண்ட ஒவ்வொருவரின் மனதையும் உலுக்கியது. சமூக அவலங்களையும் மனஅழுத்தங்களையும் எதிர்கொள்ளும் இன்றைய தலைமுறைக்கு உரியவர்களிடம் உரையாடலே தீர்வாக அமையும் என்ற அழகான செய்தியை இக்குறும்படம்...
நங்கவள்ளியில் 22.03.2026 ஞாயிறு மாலை 6.00 மணியளவில் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் இல்லத்தில் கழகத் தோழர்கள், இளைஞர்கள் சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பில் “தொடரட்டும் தமிழ்நாட்டில் சாதனைகள்” திமுக ஆட்சியை உறுதி செய்வோம்.. மதவெறி கூட்டணியை விரட்டி அடிப்போம் என்கிற தலைப்பில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டங்களின் நிறை குறை குறித்தும், வரவு செலவு குறித்தும் விவாதிக்கப்பட்டது. முதல் கட்ட பரப்புரை நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட பரப்புரைக்கான திட்டம் குறித்தும் இதில் ஆலோசிக்கப்ட்டது. அடுத்கக்கட்ட வேலைத் திட்டங்களாக இதுவரை கூட்டங்கள் நடைபெறாத இடங்களாக தேர்வு செய்து (வாரம் 2 கூட்டங்கள்) கிராமப்புற பிரச்சாரங்கள் நடத்துவது எனவும், 2026 சட்டமன்ற தேர்தல் முடிந்த உடன் நூல் திறனாய்வும், பயிற்சி வகுப்புகளும், வாசகர் வட்டமும் நடத்தலாம் என தோழர்கள் ஆலோசனை வழங்கினர். சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், நங்கவள்ளி நகரச் செயலாளர் சந்திரசேகரன், வனவாசி நகரச் செயலாளர் உமாசங்கர், சேலம் மாவட்ட இளைஞர் அணி...
தோழர் பேரறிவாளன் மற்றும் கழகத் தலைமைக் குழு உறுப்பினர் கு. அன்பு தனசேகர் ஆகியோர் ஏப்ரல்-27 அன்று வழக்கறிஞர்களாக பதிவு செய்து கொண்டனர். மகிழ்வாக, இராயப்பேட்டை பத்ரி நாரயணன் நினைவு படிப்பகத்துக்கு வந்து, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவர்களை திவிக, திமுக, விசிக தோழர்கள் வரவேற்றனர்! தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன், திமுக வட்டச் செயலாளர் ஆர்.என் துரை, திருவல்லிகேணி பகுதி பொறுப்பாளர்கள் கோபிநாத, ராஜேஷ், சூர்யா மற்றும் கழகத் தோழர்கள் பிரகாஷ் மாஸ்டர், இனியவன் அசோக், எழுத்தாளர் சரவணக்குமார், ஊடகவியலாளர் கவின் மலர் ஆகியோர் உடன் இருந்தனர். பெரியார் முழக்கம் இதழ் 30042026
என்சியன்ட் சோடா கான் கராத்தே நடத்திய மாநில அளவிலான கராத்தே போட்டி 01.03.2026 ஞாயிறு அன்று காலை 10 மணியளவில் சேலம் மாவட்டம், ஓமலூர் முன்சீப் கந்தசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.ஏன்சியன்ட சோட்டாகான் கராத்தே – டோ துணை தலைவர் சிவ மகேந்திரன் (எ) குட்டி தலைமை வகித்தார். ஏன்சியன்ட சோட்டாகான் கராத்தே – டோ பொதுச்செயலாளர், தலைமை பயிற்சியாளர் கோ. சிவபெருமாள், ஜே.டி.எஸ். சரவணன் மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கராத்தே வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். கழகத் தலைவர், தமிழ்நாடு கிக் பாக்சிங் அசோசியேசன் தலைவருமான கொளத்தூர் மணி சிறப்புரையாற்றி, போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கினார். சட்டமன்ற உறுப்பினர் ஆர். மணி, சவுத் இந்தியன் பள்ளி தாளாளர் சௌந்தர்ராஜன், நார்த்பாக் பள்ளி தாளாளர் முத்து, சுவாமி மெட்ரிக் பள்ளி தாளாளர் கஞ்சமலை மற்றும் பொருளாளர் கோவிந்த ரெட்டி,...
`ஆர்.எஸ்.எஸ் விழுமியங்களை தனக்கே உரிய பாணியில் பொதுமக்களிடம் கொண்டு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அதன் மிகச் சிறந்த பிரதிநிதியாகவும் திகழ்கிறார்’ என, அந்த அமைப்பின் பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொசபலே புகழாரம் சூட்டியுள்ளார். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பொதுச்செயலராக உள்ள தத்தாத்ரேய ஹொசபலே, அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமூக நல்லிணக்கம், காலனித்துவ ஆதிக்க மனப்பான்மையில் இருந்து விடுதலை, குடும்ப விழுமியங்களை வலுப்படுத்தல், சமூக நல்லொழுக்கம் மற்றும் நிலையான வளர்ச்சி திட்டங்கள் ஆகிய ஐந்து அம்சங்களை, அடுத்த 25 ஆண்டுகளுக்கான இலக்காக ஆர்.எஸ்.எஸ்., நிர்ணயித்துள்ளது. இந்த இலக்குகளை நோக்கி பிரதமர் மோடி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதே வார்த்தைகளை பிரதமர் பயன்படுத்தாமல் இருக்கலாம். ஆனால், தனக்கே உரிய தனித்துவ பாணியில் ஆர்.எஸ்.எஸ், கருத்துக்களை அவர் செயல்படுத்தி வருகிறார். உதாரணமாக, ஒவ்வொருவரும் மரம் நட வேண்டும் என நாங்கள் சொல்கிறோம். பிரதமரோ, ‘தாயின் பெயரில்...
வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். அன்னூர் நல்லிச்செட்டிபாளையத்தில் நடந்த போராட்டம் குறித்த கட்டுரை. கோவை மாவட்டம், அன்னூர் ஒன்றியத்தில் உள்ள சுற்றுவட்ட கிராமங்களில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக எண்ணற்ற தீண்டாமைக் கொடுமைகள் நிலவி வந்தன. பொதுக்குழாயில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடிநீர் பிடிக்கத் தடை, செல்போன் பேசத் தடை, இரட்டைக் குவளை முறை, சலூன்களில் தாழ்த்தப்பட்டோருக்கு முடிவெட்டத் தடை, பொது சுடுகாட்டில் தாழ்த்தப்பட்டோரை புதைக்கத் தடை, மோட்டார் பைக் ஓட்டத் தடை என விதவிதமான தீண்டாமைக் கொடுமைகளுக்கு அப்பகுதி மக்கள் ஆளாகியிருந்தனர். 2000-க்குப் பிந்தைய நவீன உலகிலும்கூட இத்தகைய ஜாதியக் கொடுமைகள் தலைவிரித்தாடுவதை சகித்துக்கொள்ள முடியாமல், இவற்றுக்கெதிராகப் போராட வேண்டுமென்ற எண்ணம் அங்குள்ள நல்லிசெட்டிபாளையம் பகுதி இளைஞர்களுக்கு ஏற்பட்டது. ஈஸ்வரன், ஜோதிராம், ராமன்...
ஆகம சாஸ்திர விதிகள், சிருங்கேரி சாரதா பீட வழிகாட்டுதல்கள் மற்றும் கடந்த காலத்தில் மாநில அறநிலையத்துறையால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ஆகியவற்றை கடுமையாக அமல்படுத்த உத்தரவிடக்கோரி ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இதை உயர்நீதிமன்ற நீதிபதி நிம்மகடா வெங்கடேஸ்வரலு விசாரித்தார். அப்போது, மனுதாரர் தரப்பில், விதிகளின்படி அர்ச்சகர்கள் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் அவசர தேவைக்காக சென்றாலும், திரும்பி வந்தவுடன் கருவறையில் பூஜைகள் செய்யும் உரிமையை இழந்துவிடுவார்கள் என்றார். சிருங்கேரி பீடத்தின் விதிமுறையின்படி, மூன்று நாள் சந்தியா வந்தனத்தை கடைபிடிப்பவர்கள், வேதங்களை படிப்பவர்கள், குருவின் மந்திரங்களை உச்சரிப்பவர்கள் மற்றும் கடுமையான உணவு விதிகளை பின்பற்றுபவர்கள் மட்டுமே கருவறையில் பூஜைகள் செய்ய தகுதியுடையவர்கள். பாரம்பரியத்திற்கு மாறாக வெளிநாடு சென்று, சவரம் செய்து, தலைமுடியை வெட்டிக் கொண்டவர்களும் தகுதியற்றவர்கள் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. வாதங்களை கேட்டறிந்த நீதிபதி அமர்வு, இந்த வழிகாட்டுதல்களை செயல்படுத்துமாறு அறநிலையத் துறையின் முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையருக்கு...
தேர்தல் முடிந்தவுடன் பாஜக தனது உண்மையான முகத்தை காட்டத் துவங்கி இருக்கிறது. புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் ஏற்கனவே மும்மொழிக் கொள்கையை முதல்வர் ரங்கசாமி அனுமதித்து விட்டார். மூன்றாவது மொழியாக இந்தியும் படிக்கலாம் ; பிரெஞ்சும் படிக்கலாம் என்ற நிலை இருந்தது; இப்போது ஆறாம் வகுப்பில் இருந்து இந்தி கட்டாயம் என்றும், ஒரு வாரத்திற்குள் இதை அமல்படுத்த வேண்டும் என்றும் ஒன்றிய அரசு உத்தரவிட்டதோடு பிரெஞ்சு மொழியும் படிக்கலாம் என்ற வாய்ப்பை பறித்து விட்டது. இந்திய ரயில்வேயில் 29,608 வேலை வாய்ப்புகளை குறைப்பதாக ஒன்றிய ஆட்சி அறிவித்துள்ளது. இதனால் தெற்கு ரயில்வேயில் 2,000 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட இருக்கிறார்கள். மற்றொரு மாநில உரிமை பறிப்பு அறிவிப்பு வந்திருக்கிறது. இந்தியாவில் உள்ள ஒன்றிய அரசுக்கு சொந்தமான அனல் மற்றும் அணு மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் பெரும் பகுதியை அந்த மின் நிலையங்கள் அமைந்துள்ள மாநில அரசுகளுக்கே குறைந்த விலையில் வழங்கப்பட்டு வந்த நிலையை...
கர்நாடகாவில் இன்ஜினியரிங், விவசாயம் உள்ளிட்ட படிப்புகளில் சேர மாணவர்களுக்கு, சி.இ.டி., என்ற, பொது நுழைவுத்தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்காக பெங்களூரு மடிவாளாவில் உள்ள கிருபாநிதி கல்லுாரியிலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. தேர்வு எழுதச் சென்ற மாணவ, மாணவியர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது, ஆனந்த் சுதிர் ராவ் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பூணுால் அணிந்திருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் பூணுாலை அகற்றி விட்டு தேர்வு எழுத செல்லும்படி, கல்லுாரி ஊழியர்கள் சுதாகர், கிரிஜம்மா, சரிதா ஆகியோர் கூறியுள்ளனர். `ஐந்து மாணவர்களும் பூணுால் தங்களது சம்பிரதாயம்; அதனை அகற்ற முடியாது’ என்று கூறியும் ஊழியர்கள் கேட்கவில்லை. பூணுாலை அகற்றினால் தான் தேர்வு எழுத அனுமதிப்போம் என்று கறாராக கூறியுள்ளனர். இதனால், வேறு வழியின்றி ஐந்து மாணவர்களும் பூணுாலை அகற்றி விட்டு தேர்வு எழுதச் சென்றனர். தேர்வு முடிந்து வீட்டிற்கு சென்றதும் பூணுாலை அகற்றியது பற்றி, பெற்றோரிடம் கூறினர். அதனைக் கேட்டு அதிர்ச்சி...
கடலூர்: ஏப்ரல்-14 புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் கடலூர் மாவட்டக் கழகத்தின் சார்பாக கடலூர் மஞ்ச குப்பத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு பெரியார் சிவா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி, ராஜேந்திரன், திராவிட மகிழன், சத்யா, சதீஷ், திருமூர்த்தி, அசோக், வீரா, அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டனர். நங்கவள்ளி: ஒன்றிய கழகத்தின் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் 135 வது பிறந்தநாளையொட்டி ஏப்ரல்-14 காலை 11.00 மணியளவில் நங்கவள்ளியில், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் தலைமையில் நங்கவள்ளி பேருந்து நிலையத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கம் எழுப்பப்பட்டது. நங்கவள்ளி நகரச் செயலாளர் சந்திரசேகரன், சேலம் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தங்கதுரை, சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் பிரபாகரன், தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் கவியரசு, நங்கவள்ளி பகுதி புகழேந்தி, பிரபாகரன், ஹரி, தினேஷ், சித்திக் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். சென்னை:...
மறைந்த பெரியார் தொண்டர் பாடகர் தேனிசை செல்லப்பா அவர்களுக்கு, ஏப்ரல்-28 மாலை 7 மணிக்கு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், போராசிரியர் சரசுவதி ஆகியோருடன், கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செய்தனர். பெரியார் முழக்கம் இதழ் 07052026
இராயப்பேட்டையை பெரியார் பாசறையாக மாற்றிய கழகச் செயல் வீரர் பத்ரி நாராயணன் அவர்களின் 22-வது நினைவு நாளை முன்னிட்டு இரா.உமாபதி தலைமையில் கழகத் தோழர்கள் மயிலாப்பூரில் உள்ள அவரது நினைவிடத்துக்கு 30.04.2026 அன்று ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தோழர் பத்ரி நாரயணனின் நினைவுகளை பாடலாக தோழர்கள் பொன்ராஜ், சத்யா, லதா ஆகியோர் இணைந்து பாடினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசுகையில் சென்னையில் தலித்துக்களையும், இஸ்லாமியர்களையும் பெரியார் இயக்கத்தின் பக்கம் ஒன்றிணைத்தவர்களில் பத்ரி முதன்மையானவர். மேலும் கொண்ட கொள்கையில் துடிப்போடு பணியாற்றிய ஆற்றல்மிகு இளைஞர் என்று கூறினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசுகையில் அனைத்து இயக்கங்களையும், அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து தமிழர் திருநாள் பொங்கல் விழாவை எழுச்சியுடன் நடத்தி வந்தவர். பத்ரியின் நினைவு நாளில் தோழர்கள் இன்றைய தலைமுறையினரை திராவிடர் இயக்கம் நோக்கி அணிதிரட்ட சூளுரைத்தனர். ஆர்.என் துரை (திமுக மாவட்டத் துணை.செயலாளர்), க.வே...
மறைந்த கழக செயல்வீரர் பத்ரி நாராயணனின் 22வது நினைவு நாளான ஏப்ரல்-30 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளர் சே. ராஜேஷ் தலைமையில், பகுதி அமைப்பாளர் த.நா. சூர்யா முன்னிலையில், பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. பகுதித் தலைவர் சு. கோபிநாத் வரவேற்புரையாற்றினார். சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி – சத்யா – லதா, பொன்ராஜ் குழுவினரின் பாடல்கள் சிந்திக்க வைத்தன. “அமைப்பாக திரள வேண்டியதின் அவசியம் என்ன?” எனும் தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். ஒரே நாளில், ஒரே நேரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டத்தை ஒருங்கிணைப்பதன் காரணத்தை விளக்கினார். “சமகால சிக்கல்களில் பெரியாரிய பார்வை” குறித்து கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றினார். கம்யூனிச இயக்கங்களும் பெரியார் இயக்கமும் ஒன்றிவரும் புள்ளிகளையும் – வேறுபடும் புள்ளியையும் எடுத்துரைத்தார். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திரகுமார் தேரடி, “பெரியாரியலும்...
தோழர் ஜீவா அவர்கள் தனது ‘ஈரோட்டுப் பாதை சரியா?’ என்ற நூலில் முன் வைத்திருக்கும் வேறொரு குற்றச்சாட்டைப் பற்றியும் பார்ப்போம். “1.8.1927இல் சென்னையில் நால்வர் சந்திப்பு நடந்தது. அது குறித்து அடுத்த வார குடிஅரசில் வெளியான “பிராமணிய சடங்கை விலக்கியவர்” பட்டியலில் ஈ.வெ.ரா., திரு.வி.க., டாக்டர் நாயுடு, ஷண்முகம் ஆகிய நால்வரின் பெயர்களும் முன் வரிசையில் இடம்பெற்றன. இவ்வாறு காங்கிரஸ்காரரோடு இணைந்து சமூக சீர்திருத்தத்திற்கு ஆதரவு தேடுவதாகக் காட்டி காங்கிரஸ் ஒழிப்பு வேலைக்கு மறைமுகமாகப் பணம் திரட்ட முனைந்தார் ஈ.வெ.ரா.” என்னதான் உண்மை? 25.7.1926 குடிஅரசு இதழின் 9ஆம் பக்கத்தில் ‘சென்னையில் நால்வர்’ என்ற தலைப்பில் ஒரு குறிப்பு காணப்படுகிறது.அதில் “காங்கிரஸ் பார்ப்பனரல்லாத தலைவர்களான ஸ்ரீமான்கள் திரு.வி.கல்யாணசுந்தர முதலியார், ஈ.வெ. ராமசாமி நாயக்கர், டாக்டர் வரதராஜுலு நாயுடுகார், ஆர்கே சண்முகம் செட்டியார் ஆகிய நால்வரும் அரசியல் சமுதாய விஷயங்களில் தற்காலம் இருக்கும் நிலைமையில் இனி தாங்கள் நடந்து கொள்ள வேண்டிய விஷயத்தைப்...
வரலாற்றுப் பதிவுகள் இல்லாத எத்தனையோ போராட்டங்களை பெரியார் இயக்கம் நடத்தி இருக்கிறது. உள்ளூர் மட்டத்தில் நடந்த அந்த சமூகப் புரட்சிகளை, கருஞ்சட்டை வீரர்களை வெளிச்சப்படுத்தும் கட்டுரைத் தொடரை முரசொலியில் ஊடகவியலாளர் ர.பிரகாசு எழுதி வருகிறார். திருவாதிரை மங்கலம் குறித்தும் திராவிட தொழிலாளர் சங்கம் குறித்தும் விவரிக்கிறது இக்கட்டுரை தொடர். நெடுங்காட்டன்குடி, சூரனூர், சோழிங்கநல்லூர், வடகுடி, எழுமுக்கால், கீழவைப்பூர், குரும்பேரி, தேராகுளம் உள்ளிட்ட 18 கிராமங்களை உள்ளடக்கிய ஊராட்சி, திருவாதிரை மங்கலம். அதன் தலைகிராமம் திருவாதிரை மங்கலம்தான். 1950-க்கு முன்பு, ஊராட்சி முழுவதுமே ஆண்டான் – அடிமை, முதலாளி – தொழிலாளி, ‘ஆதிக்கஜாதி – ஒடுக்கப்பட்ட ஜாதி’ என வர்க்கமும் வர்ணமும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த சூழலே நிலவியது. பண்ணையார்கள் வீட்டிற்குள்கூட தாழ்த்தப்பட்டவர்கள் நுழைய முடியாது. உணவோ, தண்ணீரோ திண்ணையில் அமர்ந்துகூட உண்ண முடியாது. கொல்லைப்புறத்தில் வைத்து கொடுப்பார்கள். பள்ளி செல்லவும் தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதி கிடையாது. இந்தச் சூழலில் 1950-களின் பிற்பகுதியில், நாகை...
ஒவ்வொரு முறையும் கொளத்தூர் தொகுதிக்கு போகும்போதெல்லாம் மக்களை சந்திக்கும் போது மிகவும் உற்சாகம் பெறுவதாக மு.க ஸ்டாலின் பெருமையுடன் கூறுவார்; மிகவும் கவலை எடுத்து தனது தொகுதியை வளர்த்தெடுத்து அடுக்கடுக்கான திட்டங்களைக் கொண்டு வந்தார். அதே கொளத்தூர் தொகுதி இன்று முதல்வரை கைவிட்டதை அறியும்போது இதயம் வலிக்கிறது. தனது ஐந்தாண்டு ஆட்சியை சாதனைகளின் சரித்திரம் ஆக்கினார் மு. க.ஸ்டாலின். இந்திய வரைபடத்தில் தமிழ்நாட்டை பல்வேறு துறைகளில் முதலிடத்தில் கொண்டு வந்த நிறுத்தினார். ஒன்றிய ஆட்சி வஞ்சகத்தை இவரைப் போல் துணிவுடன் வேறு எந்த மாநில முதல்வரும் எதிர் கொள்ளவில்லை. இவர் செயல்படுத்திய பெண்களுக்கான உரிமை திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல; இந்தியாவின் பல்வேறு மாநிலங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. தமிழ்நாட்டுப் பெண்களுக்கு கிடைத்த உரிமை பல்வேறு மாநில பெண்களுக்கும் இவரால்தான் கிடைத்தது. பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டிற்கும் ஆளுநரின் அத்துமீறல்களிலிருந்து மாநில உரிமைகளை காப்பாற்றுவதற்கும் இவர் மேற்கொண்ட சட்டப் போராட்டங்களும் ;அதில் கிடைத்த வெற்றிகளும் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல; இந்தியாவின்...
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம் எனவும், வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் என்றும், சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம் எனவும், திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உண்மையான ஆட்சியைத் தந்தேன்! திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட் டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். நான் எனது சக்தியை மீறி...
தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை என்றே சொல்ல வேண்டும். எவ்வித அரசியல் அனுபவமோ, பயிற்சியோ இல்லாத நடிகர் விஜய் ஒரு கட்சியைத் தொடங்கி இரண்டே ஆண்டுகளில் நேரடியாக முதலமைச்சர் பதவியில் அமரப் போகிறார். இதற்கு தமிழ்நாட்டு வாக்காளர்கள் பெருமளவுக்கு ஆதரவு வழங்கியுள்ளார்கள். 75 ஆண்டுகால வரலாறு கொண்ட திமுக வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது. முதல் தலைமுறை வாக்காளர்கள் பெருமளவு நடிகர் விஜய்க்கு வாக்குகளைக் குவித்துள்ளார்கள். நடிகர் விஜய் மக்களிடம் முன்வைத்த ஒரே கொள்கை “திமுக தீய சக்தி” என்பது மட்டுமே! இது தவிர தனது கொள்கை இதுதான் என்று ஒரு வார்த்தையைக் கூட அவர் உச்சரிக்கவில்லை. ’மாற்றம் வேண்டும்’ என்ற ஒரே கொள்கைக்காக வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். எதை நோக்கிய மாற்றம் என்பது குறித்த புரிதலோ, தெளிவோ வாக்காளர்களுக்கும் இல்லை; அந்த கட்சிக்கும் இல்லை. தமிழ்நாடு வரலாற்றில் கடந்த ஐந்து ஆண்டுகள் நடந்த திராவிட மாடல் ஆட்சி அடுக்கடுக்கான சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. சமூகத்தில் எந்த...
கை விலங்கோடு குற்றம் சாட்டப்பட்டவராக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட பேரறிவாளன், அதே நீதிமன்றத்தில் வழக்கறிஞராக படியேறுகிறார். ராசீவ் கொலையில் குற்றவாளியாக அபாண்டமாக குற்றம் சாட்டப்பட்டு 31 ஆண்டுகள் சிறைவாசத்தை ஏற்றவர் பேரறிவாளன். நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவராக நிறுத்தப்பட்டார். பூந்தமல்லியிலும் வேலூரிலும் பிறகு சென்னையிலும் அவர் சிறைவாசம் தொடர்ந்தது. சிறைக்குள் இருந்து கொண்டே மன உறுதியோடு சட்டப் போராட்டம் நடத்தினார். மரண தண்டனை அறிவிக்கப்பட்டது; மரண தண்டனைக்கு எதிராக மக்கள் இயக்கம் தமிழ்நாட்டில் நடந்தது. எழுவர் விடுதலைக்கான தொடர் பரப்புரைகள், கருத்தரங்குகள், மாநாடுகள், போராட்டங்கள் தமிழ்நாடு முழுதும் தீவிரமாக நடந்தன. மரண தண்டனையை எதிர்த்து தனக்கு மரண தண்டனையைத் தந்து கொண்டார் செங்கொடி என்ற வீரப்பெண். மரண தண்டனைக்கு எதிராக உலகில் தமிழ்நாட்டில் நடந்தது போல் வேறு எந்தப் பகுதியிலும் இயக்கங்கள் நடந்த வரலாறு இல்லை. இந்த மக்கள் இயக்கம் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளையும், புலன் விசாரணை செய்த தலைமை இயக்குனரையும், வாக்குமூலம் வாங்கிய...
குமரி மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் 05.04.2026 ஞாயிறு அன்று மாலை 03.00 மணியளவில் தக்கலை ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு கழக பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால். பிரபாகரன் தலைமை வகித்தார். குமரி மாவட்டக் கழகச் செயலாளர் நீதியரசர் முன்னிலை வகித்தார். கலந்துரையாடல் கூட்டத்தில் எதிர்வரும் ஏப்ரல் 23, தமிழ்நாடு சட்ட தேர்தலில் கழகத் தலைமைக்குழு எடுத்த தீர்மானத்தின் படி குமரி மாவட்டத்தில் எப்படி களப்பணியற்றுவது என கலந்துரையாடப்பட்டது. நிகழ்வில் மஞ்சுகுமார், நாஞ்சில் சூசையப்பா, தமிழ்மதி, அணைக்கரை பால் வண்ணன், ரமேஷ் பாபு அன்டன் பாலசிங்கம், ரெவி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கழகம் எடுத்துள்ள தேர்தல் நிலைபாட்டின்படி குமரி மாவட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய களப்பணியாற்றுவது என்றும் குறிப்பாக பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகளில் முழுகவனம் செலுத்தி பா.ஜ.க. இல்லாத குமரி மாவட்டம்...
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பரப்புரையில் தோழர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். திருப்பூர், அவினாசி, கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, மொடக்குறிச்சி, சேலம் (மேட்டூர், எடப்பாடி) புதுக்கோட்டை, பெரம்பலூர், கடலூர் (திண்டிவனம்), புதுச்சேரி, சென்னை (மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு, தியாகராயர் நகர், சைதை, பெரம்பூர், வில்லிவாக்கம், ஆர்.கே நகர், எழும்பூர்), காஞ்சிபுரம், உத்திரமேரூர், வேலூர், குடியாத்தம், கே.வி குப்பம், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் தோழர்களே நட்சத்திர பேச்சளார்களாக வலம் வந்தனர். தமிழ்நாட்டில் பாஜகவை காலூன்ற விடக்கூடாது என்ற நோக்கத்தில் முற்போக்கு அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் Zero BJP என்ற பெயரில் பாஜக போட்டியிடும் தொகுதிகளான திருச்செந்தூர், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர், நாகர்கோவில் ஆகிய தொகுதிகளில் கிராமங்கள்தோறும் பாஜக எதிர்ப்பு பிரச்சாரத்தைத் தோழர்கள் மேற்கொண்டனர். பாஜகவை வீழ்த்த களமிறங்கிய கழகத் தோழர்கள்! 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில்...
கழகத் தோழர் சீ. பிரவீன்குமார் – ஜா. சமீம் மோனிஷா ஆகியோரின் சுயமரியாதை திருமணம், மார்ச்-23, காலை 11 மணிக்கு, தேனாம்பேட்டை சமூகநலக் கூடத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் முன்னிலையில் நடைபெற்றது. மயிலை சுகுமாரின் ஒருங்கிணைப்பில், விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, தலைமைக் குழு உறுப்பினர் கு. அன்பு தனசேகர், மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, விசிக சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சாரநாத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சென்னை மாவட்டத் தலைவர்கள் வேழவேந்தன், சேத்துபட்டு இராசேந்திரன், துணை செயலாளர் இராவணன், மாவட்ட அமைபாளர்கள் தட்சணாமூர்த்தி, ம.கி எட்வின் பிரபாகரன், இளைஞரணி அமைப்பாளர் ப.அருண், திருவல்லிக்கேணி பொறுப்பாளர்கள் கோபிநாத், சூர்யா மற்றும் கழகத் தோழர்கள் பலர் பங்கேற்றனர். கழக ஏட்டுக்கு மணமக்கள் ரூ. 2,000 நன்கொடையாக வழங்கினர். பெரியார் முழக்கம் இதழ் 23042026
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு “மறுக்கப்படும் உரிமைகள், மறைக்கப்பட்ட வரலாறுகளைப் பேசும் .வானதியின் கவிதைகள், வழி, தியாகச்சுடர் அன்னை பூபதி, கஸ்தூரியின் ஆக்கங்கள், மார்ச்-8, அனைத்து உலக பெண்கள் நாள், கனவுக்கு வெளியேயான உலகு, பெண் விடுதலையும் விடுதலைப்புலிகளும், பெண்களும் புரட்சியும், வேர்கள் துளிர்க்கும், காதோடு சொல்லி எழு ஆகிய 9 நூல்கள் வெளியிடப்பட்டன. வெளியீட்டு விழா 29.03.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் சென்னை, வடபழனி திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தில் ம. டேவிட் பெரியார் தலைமையில் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பௌமிகா வரவேற்புரையாற்றினார். இனியாழ், ஆண்டனி ராஜ் (அ. தி. மு. க), அன்பு தனசேகர் (தலைமைக்குழு உறுப்பினர் திவிக), லாரன்ஸ் பிரபாகரன் (தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்), வள்ளலார் நகர் தினகரன், அ. சி. சின்னப்பத்தமிழர் (தமிழ் வழிக்கல்வி இயக்கம்), M. K பிரபாகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேவி இயக்கத்தில் “எங்களின் குரல்” நாடகம்...
கோவை மாவட்டம், சீரபாளையம் பகுதியைச் சார்ந்த (விடியல் பதிப்பகம்) விசயக்குமார் – கற்பகவள்ளி இணையரின் மகள் இலக்கியா அவர்களுக்கும் கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அரசம்பாளையம் பகுதியைச் சார்ந்த பழனிசாமி – பாக்கியலட்சுமி இணையரின் மகன் விஷ்ணுராம் அவர்களுக்கும் திருமண வரவேற்பு விழா 23.02.2026 திங்கள் அன்று மாலை 6 மணி அளவில் பொள்ளாச்சி, ஊஞ்சவேலாம்பட்டியில் உள்ள வேல் மஹாலில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி வாழ்த்துரை வழங்கினார். பொள்ளாச்சி வெள்ளிங்கிரி, கோவை மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம், கோவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்ச்செல்வி, காவை.அவினாசி ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் இதழ் 23042026
தோழர் அறக்கட்டளை நிறுவனர் சாந்தகுமார் – லதா ஆகியோரின் மகள் தமிழ்ஈழம் அவர்களுக்கும் மதுரையைச் சேர்ந்த தினேஷ்குமார் அவர்களுக்கும் வாழ்க்கை துணைநல ஒப்பந்த விழா 22.02.2025 ஞாயிறு அன்று மாலை 6 மணி அளவில் கோவை நல்லாம்பாளையம் பொன்மணி திருமண மண்டத்தில் நடைபெற்றது. புதிய குரல் நிறுவனர் ஓவியா தலைமை வகித்து வாழ்த்துரையாற்றினார். பொள்ளாச்சி உமாபதி (மாநிலச் செயலாளர், தி.மு.க கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை), ஆறுச்சாமி (த.பெ.தி.க தலைமை நிலையச் செயலாளர்), மயூரா தாமோதரசாமி (கல்வியாளர்), முனைவர் தமிழரசி, முகம்மது ஜியாவுதின் (நீதிபதி, மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையம் தமிழ்நாடு அரசு), மோகனசுந்தரம் (ராகவேந்திரா சேவா டிரஸ்ட்), திருப்பூர் தமிழ்ச்செல்வி (கருணா மனோகரன் அறக்கட்டளை), அசோக்குமார் (அறிவுச்சோலை அறக்கட்டளை) ஆகியோர் முன்னிலை வகித்தனர். த.பெ.தி.க பொதுச்செயலாளர் கு.இராமகிருஷ்ணன் மணமக்களுக்கு வாழ்க்கை துணைநல ஒப்பந்தம் செய்து வைத்து வாழ்த்துரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, த. பெ. தி. க...
சேலம்: தமுஎகச சார்பில் எழுத்தாளர் சூர்யா சேவியர் எழுதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வெளியிடப்பட்ட ‘திருப்பரங்குன்றம் முழு வரலாறு’ ஆய்வு நூல் அறிமுக விழா 14.03.2026 சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் சேலம் கோட்டை மைதானத்தில் உள்ள மாநகராட்சி சமுதாயக் கூடம் கலைஞர் கருணாநிதி திருமண மண்டபத்தில், த.மு.எ.க.ச சேலம் மாவட்ட உதவித் தலைவர் மேவை.சண்முகராஜா தலைமையில் நடைபெற்றது. முன்னாள் முத்தவல்லி ஜாமியா மஸ்ஜித் நாசர்,சையத் மூஸா (இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர்), காஜாமொய்தீன் (வி.சி.க இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநிலச் செயலாளர்), ஷேக்முகம்மது (மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர்), சதாம் உசேன் (மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய மாவட்டச் செயலாளர்), ஷரிப் பாஷா (எஸ்.டி.பி.அய் சேலம் மேற்கு மாவட்டத் தலைவர்), சோபனா (த.மு.எ.க.ச மாவட்டச் செயலாளர்), பிரவீன்குமார் (மக்கள் ஒற்றுமை மேடை ) ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக சேலம் மாநகரச் செயலாளர் ரகுபதி வரவேற்புரையாற்றினார்....
வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்விழாவில் அமைச்சர் பெருமக்கள் உரைகளுக்குப் பின்னர் இறுதியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை: இந்தப் பொருள்களை எல்லாம் நான் என்ன செய்யப் போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. கார் ஒன்றுதான் எனக்கு அதிகம் பயன்படும். இந்த புதிய வேனில் சவாரி செய்வதால் ஒன்றும் நான் அதிகம் வாழப் போவதில்லை. ஆனால் இதைப் போன்று விழாக்களை காணும் போது தான் எனக்கு உற்சாகம் ஏற்படுகிறது. இந்த கார் வாங்குவதற்கு தமிழ்நாட்டு மக்கள் ஏராளமாக கேட்டதற்கு மேல் அதிகமாக கொடுத்துள்ளார்கள். அதில் குறிப்பாக தஞ்சை மாவட்டம் 40,000 ரூபாய் அளித்திருக்கிறது. அந்த அளவுக்கு நமது கொள்கைக்கு நாட்டில் வெற்றி கிட்டி இருக்கிறது; செல்வாக்கு பெருகிவிட்டது. எனக்கு இன்றைக்கு வயது 94 அடுத்த மாதம் பிறந்தால் 95 வயது. 60 வருடங்களுக்கு முன்பு எமது மக்களின் யோக்கியதை என்ன அதாவது நாம் முயற்சி எடுப்பதற்கு முன்பு இந்த நாட்டு மக்களின் யோக்கிதை...
1973 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி தஞ்சையில் பெரியாருக்கு புதிய கார் பரிசாக வழங்கப்பட்டது. மேடையில் ஏறுவதற்கு பெரியாருக்கு ஏற்பட்ட இடையூறுகளை தவிர்த்து பிரச்சாரத்திற்கான மேடையை காரின் ஒரு பகுதியாக இணைத்து இந்தக் கார் தயாரிக்கப்பட்டது. இந்தக் காரை 5 மாதங்கள் மட்டுமே பெரியார் பயன்படுத்தினார். தியாகராய நகரில் பெரியாரின் இறுதி உரையை இந்தக் காரில் இணைக்கப்பட்ட மேடையில் தான் ஆற்றினார். பெரியாரின் அந்தக் கார் திருச்சி உறையூரில் உள்ள பெரியார் மாளிகையில் நிறுத்தப்பட்டு இருந்தது. இது குறித்து ‘இந்து’ ஆங்கில நாளேடு (ஏப்ரல்-19) படத்துடன் ஒரு செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. திராவிடர் கழகம் திட்டமிட்டு வரும் ‘பெரியார் உலகத்தில்’ இந்த வேன் காட்சிப் பொருளாக இடம்பெறப்போவதாக செய்தி கூறுகிறது. இந்தக் கார் வழங்கும் விழா, 1973 ஆக-19-ல் தஞ்சையில் எழுச்சியுடன் மாநாடு போல் நடந்தது. அந்த நிகழ்வுகள் குறித்து சில செய்திகளை இளையதலைமுறையின் கவனத்துக் கொண்டு வருகிறோம்....
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பரப்புரையில் மக்களின் இதயங்களோடு உரையாடுகிறார். குறிப்பாக ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டும். பெண்களுக்கான தமிழ்நாடு அரசின் உரிமைத் தொகை திட்டம் அவர்களின் குடும்ப உழைப்புக்கு வழங்கப்படும் ஊதியம் என்பதை உள்ளத்தில் பதிய வைக்கிறார். குடும்பத் தலைவி என்ற பெயரில் அவர்கள் உழைக்கிறார்கள்; அதற்கு ஊதியம் இல்லை; வேலைக்குச் செல்லும் ஆண்கள் தான் ஊதியம் பெறுகிறார்கள் என்று சமூகம் கூறுகிறது. குடும்பத் தலைவிகள் காலையில் தொடங்கி குடும்பத்திற்கு வழங்கும் வேலைகளை முதல்வர் பட்டியலிட்டுக் காட்டும்போது பெண்கள் அந்த எதார்த்தத்தை உணர்ந்து முதல்வரின் உரையோடு ஒன்றிப் போகிறார்கள். குடும்பத் தலைவிகளின் ஊதியமற்ற உழைப்புக்கு ஊதியம் வழங்க வேண்டும்; உரிய அங்கீகாரம் வேண்டும் என்ற இயக்கம் உலகம் முழுதும் நடந்து வருகிறது. பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஜெர்மனி போன்ற நாடுகளில் குடும்பத் தலைவிகளின் ஊதியமற்ற உழைப்புக்கு சட்ட அங்கீகாரம் மட்டுமே கிடைத்திருக்கிறது. குழந்தை வளர்ப்பு, சொத்துரிமை, ஓய்வூதியம் போன்றவற்றில் பெண்களின் குடும்ப...
ஒன்றிய அரசு அவசர அவசரமாகக் கொண்டு வந்த மூன்று மசோதாக்களும் தோல்வி அடைந்து விட்டன. “டெல்லி வீழ்ந்தது! தமிழ்நாடு வென்றது!” என்று முதல்வர் மிகச் சரியாகப் பதிவிட்டு இருக்கிறார். பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை முன்னிறுத்தி கொண்டுவரப்பட்ட இந்த மசோதாவுக்கு எதிர்ப்புகள் இருக்காது என்று ஒன்றிய பாஜக ஆட்சி சூழ்ச்சியாக திட்டமிட்டது. ஆனால் தொகுதி மறு சீரமைப்பு என்ற ஆபத்தையும் இணைத்து இந்த மசோதா கொண்டு வரப்படுவதன் நோக்கம்.தென்னகத்தின் உரிமைகளைப் பறிப்பது தான் என்று முதன் முதலாக எதிர்ப்புக் குரல் கொடுத்தவர் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின். தொடர்ந்து தெலுங்கானா,கர்நாடகா, கேரள முதல்வர்களும் காங்கிரஸ் கட்சியும் சமாஜ்வாதி கட்சியும் தமிழ்நாடு முதல்வரின் எதிர்ப்புக் குரலோடு இணைந்தனர். எடப்பாடி பழனிச்சாமி மட்டும் பச்சையாக தனது துரோகத்தை வெளிப்படுத்தினார். இன்றைய பரப்புரையில் பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை ஸ்டாலின் எதிர்க்கிறார் என்று மோடிக்கு வெட்கமின்றி ஜால்ரா அடித்தார். தொகுதி மறுவரையறை என்ற...
சபரிமலை அய்யப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களை அனுமதிக்க மறுப்பது ‘தீண்டாமைக் குற்றம்’ என்று 2019ல் உச்ச நீதிமன்றத்தில் ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுக்கள் குவிந்தன. இப்போது 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை உச்சநீதிமன்றத் தீர்ப்பினை சபரிமலை அய்யப்பன் கோயிலில் அமல்படுத்தவில்லை. தீர்ப்பை உறுதியாக ஆதரித்த கேரள இடதுசாரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி இப்போது தனது முடிவை தேர்தலுக்காக மாற்றிக் கொண்டு விட்டது பெரும் அவலம். சம்பிரதாயங்கள் தொடர்ந்து நீடிக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி மனு போட்டுள்ளது. 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பெண்கள் உரிமைக்காக கொண்டு வந்ததை எதிர்க்கட்சிகள் தடுத்து விட்டன என்று மோடி “பெண்ணுரிமைக் காவலர்” போல் நீலிக்கண்ணீர் வடிக்கிறார். ஆனால் இதே மோடிஆட்சி உச்ச நீதிமன்றத்தில்...
திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழகத் தோழர்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை இயக்கங்களை நடத்தினர். கடலூர்: புவனகிரி திமுக சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சரவணன் அவர்களை சந்தித்து கடலூர் மாவட்டக் கழகத்தின் சார்பாக பயனாடை அணிவித்து ஆதரவு தெரிவித்தனர். திண்டிவனம் தொகுதி விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னிஅரசு அவர்களை ஆதரித்து பானை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கடலூர் சிவா தலைமையில் உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), பொன்ராஜ், சத்யா, லதா கலைக்குழுவினர் மற்றும் வீரா, அசோக் ஆகியோர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டனர். காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எஸ்.சந்திரகுமாரை ஆதரித்தும் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை: ஏப்ரல் 16, 2026 முதல் ஏப்ரல் 19 வரை 4 நாள் புதுக்கோட்டை சட்டமன்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் மருத்துவர் வை.முத்துராஜா அவர்களை ஆதரித்து கழகம் சார்பாக தெருமுனை பிரச்சாரம் செய்து மக்களிடையே ஓட்டுகளை சேகரித்தனர். உமாபதி (சென்னை...
விஜயபாஸ்கர் அறக்கட்டளை மற்றும் CISS அறக்கட்டளை இணைந்து பெரியார் வரலாற்றை குழந்தைகளுக்கான பட கதையாக வெளியிட்டுள்ளதை பாராட்டி வரவேற்க வேண்டும். ” ஏன் என்று கேட்க சொன்னவர் பெரியார்” ஒரு குருகுல கதை, தமிழ்நாடு தந்த அண்ணா என்ற தலைப்புகளில் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளனர். முனைவர் நா.இல நரேன்குமார் கருத்தாக்கத்தில், முனைவர் கோவி. கனக விநாயகம் தமிழாக்கம் செய்துள்ளார். படம் மற்றும் நூலகத்தை நா.இல நரேன்குமார் ஏ.அய் உதவியுடன் மிகச் சிறப்பாக வடிவமைத்துள்ளார். 32 பக்கங்களில் வெளியிட்ட ஒவ்வொரு நூல்களின் விலை ரூ. 50 மட்டுமே. குழந்தைகளிடம் கருத்துக்களை பதிய வைக்கும் இந்த சிறிய முயற்சிகளை பாராட்ட வேண்டும். தோழர்கள் இந்த நூல்களை அன்பளிப்பாகவும் பரப்புவதற்கு பயன்படுத்தி இத்தகைய முயற்சிகளை ஊக்கப்படுத்த வேண்டும். விஜயபாஸ்கர் அறக்கட்டளை மற்றும் CISS பவுண்டேசன் இணைந்து நடத்திய சிறார்களுக்கான படக்கதைப் புத்தகம் வெளியீட்டு விழா ஏப்ரல்-12, 2026 அன்று மாலை கலப்பை பதிப்பகம் கே.கே நகரில்...
சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலன், ஏப்ரல்-2 மாலை 4 மணிக்கு, தியாகராய நகர் அமுதம் குடியிருப்பு பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக்குழு உறுப்பினர் கு. அன்பு தனசேகர், மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மாவட்டத் தலைவர் மா. வேழ வேந்தன், மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் சு. கோபிநாத், பாரி சிவா, குடிஅரசு, சரண் உள்ளிட்ட பலர் நேரில் சந்தித்து, ஆதரவு தெரிவித்தனர். சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்ததையொட்டி, திமுக பகுதிச் செயலாளர் ஏ. ஆர்.எம். காமராஜ் அவர்களின் அழைப்பின்பேரில், மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மாவட்டத் தலைவர் மா. வேழ வேந்தன், திருவல்லிக்கேணி பகுதித் தலைவர் சு. கோபிநாத், பகுதிச் செயலாளர் சே. ராஜேஷ், பகுதி அமைப்பாளர்...
கடந்த 12.03.2026 வெளிவந்த இதழில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்த 1971 தேர்தல் வரலாற்றைப் பற்றிய கட்டுரையை வாசித்தேன். இன்றைய தலைமுறைக்கு பெரியாரை எடுத்துச் செல்லும் தேவைக்கேற்ப எழுதப்பட்ட அருமையான கட்டுரை அது. சமகாலத்தில் பெரியாரை மலினப்படுத்தும் நோக்கத்தோடு இங்கு பல்வேறு சங் பரிவார்களும், அவர்களின் அடிவறுடிகளும் முழுமூச்சாக செயல்படுவார்களெனில் அவர் வாழ்ந்த காலத்தில் எப்படி இருந்திருக்குமென்பதை புரிந்து கொள்ள உதவியது. கொள்கைத் தெளிவற்றும், கொள்கைப்பிடிப்பின்றி அலையாடிக்கொண்டிருக்கும் பொம்மை அரசியல் தலைவர்களும், அவதூறை மட்டும் அள்ளித்தெளிக்கும் பகுத்தறிவு குன்றியோரும் பெரியாரின் நிகரற்ற கொள்கைப் பிடிப்பிற்கும், இயக்கத்தை கட்டி எழுப்பிய அவரின் இயக்க அரசியலிற்கும் வெகு தூரத்தில் நிற்பதை பிரித்துப் பார்க்க உதவுகிறது. இனியும் இது போன்ற கட்டுரைகள், பெரியாரின் களமாடல்களென சமகாலத்தில் பொருந்திப்போகும் செயல்கள் அனைத்தையும் எழுத வேண்டுகோள் விடுக்கிறேன். இளைய தலைமுறையினர் திராவிட அரசியலைக் கற்கும் ஆர்வத்தை இன்னும் தூண்டுகிறது. -யதிந்தர், மதுரை. பெரியார் முழக்கம் இதழ்...
தேர்தல் ஆணையம் தனது அதிகார வரம்பை மீறி தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர்; காவல்துறை இயக்குனர் ; உளவுத்துறை இயக்குனர் போன்ற உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி அவரிடம் அதிகாரிகள் இடமாற்றலை வலியுறுத்தினார் என்ற செய்தி ஏற்கனவே வந்தது. பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுவது உறுதியாகி உள்ளது. மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் அதிகாரிகளை கண்மூடித்தனமாக இடமாற்றம் செய்வதை எதிர்த்து மம்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உச்ச நீதிமன்றம் அதிகாரிகளின் இடமாட்டத்தை நிறுத்தி வைத்திருக்கிறது. இப்போது தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் இந்த நாடகத்தை துவங்கி இருக்கிறது. உண்மையிலேயே உயர் அதிகாரிகளை இப்படி பந்தாடும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறதா? இதுகுறித்து நாடாளுமன்றத்தின் முன்னாள் செயலாளர் பி.டி.டி ஆச்சாரி `இந்து’ ஆங்கில நாளேட்டில் விரிவான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். (ஏப்ரல்-3,2026) அதில் இடம்பெற்றுள்ள கருத்துக்களை சுட்டிக்காட்டுகிறோம். சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கான முழு அதிகாரத்தையும் தேர்தல் ஆணையத்திற்கு அரசியல்...
பாமக தலைவர் அன்புமணி திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் மதுவால் அதிக சாலை விபத்துக்கள் நடக்கும் மாநிலம் தமிழ்நாடு என்று வாட்ஸ்அப் வதந்தியை பேசியுள்ளார். ஆனால் உண்மை என்ன தெரியுமா? ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளள 2023 ஆண்டு சாலை விபத்துக்கான விவரத்தில் மது போதையில் நிகழ்ந்த வாகன விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை பதிவுகளில் தமிழ்நாடு 7வது இடத்தை பிடித்துள்ளது. ஆண்டுக்கு 320 விபத்துக்கள் நடைபெற்றுள்ளது. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் உ.பியில் 3808-ஆகவும், ம.பி-1209 ஆகவும், ஒடிசா-649 ஆகவும் முதல் 3 இடங்களை பிடித்துள்ளது. மதுபோதை வாகன விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் 74 பேர் இறந்ததாகவும் 14வது இடத்தை பிடித்துள்ளது தமிழ்நாடு. ஆனால் உ.பியில் இறந்தவர்கள் எண்ணிக்கை 1822. ஒடிசாவில் 254 மற்றும் ம.பியில் 219 பேர் மதுபோதையின் காரணமாக வாகன விபத்தில் இறந்துள்ளனர். உண்மையை மறைத்து பொய் பரப்புரையை செய்து வருகிறார் அன்புமணி. பெரியார் முழக்கம் இதழ் 16042026
தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் எந்த ஒரு திட்டத்தை கொண்டு வரவில்லை என்று எடப்பாடி தோல்வி பயத்தில் கதறி வருகிறார். அதிமுக ஆட்சியில் தான் சென்னை போக்குவரத்து குறைக்க மெட்ரோ-2 கட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.63,000 கோடி அனுமதி பெற்று திட்டத்தை கொண்டு வந்ததாக கூறி வருகிறார். இதுவரை இந்தியாவில் ரூ 63,000 கோடிக்கு ஒரு திட்டத்துக்கு ஒன்றிய அரசிடம் இருந்து அனுமதி , கிடைத்தது இல்லை இதுவே முதல் முறை என்று இறுமாப்புடன் பேசுகிறார் எடப்பாடி. உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வைத்து அடிக்கல் நாட்டினர் என்று பெருமிதத்துடன் திமுக ஆட்சியில் இப்படி எதாவது பெரிய திட்டத்தை சென்னைக்கு கொண்டு வந்தீர்களா என்று கேள்வி எழுப்புகிறார் எடப்பாடி. உண்மை என்ன தெரியுமா? சென்னையின் 2-ம் கட்ட மெட்ரோ பணிக்கான மதிப்பீடு 63,246 கோடி. இதற்கு எப்படி வருவாய் வருகிறது என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தந்த ஆண்டறிக்கையின்...
தமிழ்நாட்டு தற்போது 5 இலட்சம் கோடி கடன் இருப்பதாக கதை சொல்லி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது சகாக்கள். 2011-2020 வரை 9 ஆண்டுகள் எடப்பாடி ஆட்சியின் கடனே வாங்காது போலவும் திமுக 5 ஆண்டுகளில் கடன் வாங்கி குவிப்பது போல் பேசி வருகிறார்கள். ஆனால் உண்மை நிலவரம் என்ன தெரியுமா? 2006-2011 திமுக ஆட்சியில் ரூ.43,893 கோடி கடன்; 2011-2016 அதிமுக ஆட்சியில் ரூ.1,09,717 கோடி கடன். அதாவது முந்தைய ஆட்சியை விட 150 விழுக்காடு அதிகம் கடன் வாங்கியது அதிமுக ஆட்சி தான். எடப்பாடி முதலமைச்சராக இருந்த 2016-2021 அதிமுக ஆட்சியில் வாங்கிய கடன் ரூ.2,74,436 கோடி இது முந்தைய ஆட்சியை ஒப்பிட்டு பார்த்தால் 150 விழுக்காடு அதிகம் கடன் வாங்கியது எடப்பாடி ஆட்சி தான். 2021 ஆண்டு அறிக்கையின் படி தமிழ்நாட்டின் மொத்த கடன் ரூ.4,85 இலட்சம் கோடி. தற்போது திமுக ஆட்சி (2021-2026) ஆண்டில்...
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி ஷபி பரம்பில் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலில், கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிந்த 5 ஆண்டுகளில் மட்டும் விளம்பரத்துக்கு ரூ2,447 கோடியை ஒன்றிய அரசு செலவிட்டுள்ளது. இதன்படி நாளொன்றுக்கு ரூ.1.34 கோடி செலவாகியுள்ளது. மின்னணு, அச்சு ஊடகங்கள், விளம்பர பலகைகள் உள்ளிட்டவை இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வாரியாக 2020-21 நிதியாண்டில் ரூ.409.55 கோடி, 2021-22 ஆண்டு ரூ.317.48 கோடி, 2022-23 ஆண்டு ரூ.408.37கோடி, 2023-24 ஆண்டு ரூ.656.6 கோடி, 2024-25 ஆண்டு ரூ.654.9 கோடி செலவிடப்பட்டுள்ளது. மோடி அரசின் விளம்பர செலவில் 5 அமைச்சகங்கள் மூலம் மேற்கொண்ட விளம்பரங்கள் மட்டுமே 60 சதவீதத்தை தாண்டிவிட்டன. கடந்த 2024-26 நிதியாண்டில் ரூ.526.90 கோடி விளம்ப ரத்துக்கு செலவிடப்பட்டுள்ளது. இதில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ரூ.208.35 கோடி, நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகம் ரூ.42.51 கோடி, பாதுகாப்பு அமைச்சம் ரூ.31 கோடி,...
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. வங்கிகள் மற்றும் நாட்டின் பெரு முதலாளிகளுக்கு வாராக் கடனை தள்ளுபடி செய்தது ரூ. 14 இலட்சம் கோடியா? ரூ.25 இலட்சம் கோடியா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. கடந்த ஆகஸ்-7, 2023 நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திமுக எம்.பி கனிமொழி வாராக் கடன் குறித்து எழுப்பிய கேள்விக்கு நிதித்துறை இணையமைச்சர் பகவத் காரத் இவ்வாறு பதில் அளித்துள்ளார். 2014-ம் நிதியாண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை ரூ.14,56,226 வாராக் கடனை தள்ளுபடி செய்ததாக தெரிவித்தார். இந்த தகவலை ஒப்பிட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வழியாக ரிசர்வ் வங்கிக்கு உண்மையில் வாராக் கடன் தள்ளுபடி எவ்வளவு? என்று குஜராத்தை சேர்ந்த சஞ்சய் என்பவர் மனு அளித்திருந்தார். ரிசர்வ் வங்கி கடந்த 9 ஆண்டுகளில் ரூ.25 இலட்சம் கோடி ரூபாய் வாராக் கடனை தள்ளுபடி செய்ததாக தெரிவித்திருந்தது. ஆகவே நாடாளுமன்றத்தில்...
தொகுதி மறு வரையால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் வராது என்று மோடியே கூறிவிட்டார் என்கிறார் எடப்பாடி பழனிசாமி. கட்சியை பாஜகவிடம் அடகு வைத்த எடப்பாடி, இப்போது தமிழ்நாட்டின் உரிமையையும் வெட்கப்படாமல் அடகு வைக்கிறார். இதனால் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் மிக மோசமாக பாதிக்கப்படுவதை கவலையோடு சுட்டிக்காட்டி கண்டனக் குரலை எழுப்பி வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் உரிமைகளையே அடகு வைத்துவிட்டு முதலமைச்சர் நாற்காலியில் உட்கார துடிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. தேர்தல் ஆதாயத்திற்காக ஏற்கனவே அறிவித்த தனது கொள்கைகளை திடீரென்று மாற்றிக் கொண்டு, நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டி பெண்களுக்கான மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீட்டை கொண்டு வர ஒன்றிய ஆட்சி துடிக்கிறது. 2023 ஆம் ஆண்டு செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கும் 106 ஆவது சட்டத் திருத்தத்தை மோடி ஆட்சி கொண்டு வந்தது. அப்போது இதை அமல்படுத்தும் காலத்தை தள்ளிப் போட்டது. 2006...
எடப்பாடி ஆட்சியில் நடைபெற்ற மக்கள் விரோத செயல்கள் ஒரு தொகுப்பு: தமிழ்நாட்டில் எடப்பாடி முதலமைச்சர் ஆக இருந்த காலத்தில் பாஜகவின் பினாமி ஆட்சி தான் நடந்தது. இதற்கு ஏராளமான சான்றுகளை பட்டியலிட முடியும். தமிழ்நாடு பாஜகவினரே எடப்பாடியை மிரட்டி வேலை வாங்கினார்கள். அவர்கள் வைத்த ஒவ்வொரு கோரிக்கைக்கும் எடப்பாடி பணிந்து போனார். உதாரணத்திற்கு சிலவற்றை மட்டும் சுட்டிக் காட்டுகிறோம். தலைமைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட முக்கிய அதிகார பொறுப்புகளில் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களே இருந்தனர். தமிழ் தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் அரசு பணிகளில் சேரலாம் என்று அரசு தேர்வாணைய விதிகளை திருத்தி எழுதி தமிழ்நாட்டில் அரசு பணிகளிலும் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிகளிலும் பொறியியல் கல்லூரி பேராசிரியர் பணிகளிலும் ஏராளமான வடநாட்டுக்காரர்கள் தமிழ்நாட்டிற்கு உள்ளே நுழைய அதிமுக ஆட்சி எடப்பாடி ஆட்சி அனுமதித்தது. 12 பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,058 விரிவுரையாளர் பதவிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் 80 விழுக்காடு வெளி மாநிலத்தவர்களையே தேர்வு...
ஆசிரியர்கள் சிவகாமி, சிவக்குமார் முன்னெடுப்பில் பெரியார் முழக்க வளர்ச்சிக்குழு உறுப்பினர்கள் ரூ.13, 500 வளர்ச்சி நிதியாக வழங்கியுள்ளனர். ஆத்தூர் தோழர் கணபதி 17 பெரியார் முழக்கத்துக்கான ஆண்டு சந்தா ரூ.5,100 வழங்கியுள்ளார். தோழர் துரைராசு ரூ.3000 பெரியார் முழக்க சந்தா வழங்கியுள்ளார். பெரியார் முழக்கம் இதழ் 09042026
தோழர் மேட்டூர் கிட்டு அவர்களின் தந்தையார் காளியப்பன் 28.03.2026 அன்று இயற்கை எய்தினார். அவருடைய மறைவிற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி 30.03.2026 மேட்டூர் பாரதி நகரில் உள்ள இல்லத்திற்கு சென்று இரங்கல் தெரிவித்தார். கழகப் பொருளாளர் துரைசாமி, கழக மாநில அமைப்புச்செயலாளர் ப. இரத்தினசாமி, கோவை மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கதுரை, சேலம் மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் சுதா, கொளத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர் விஜயக்குமார், திருப்பூர் மாநகர அமைப்பாளர் முத்து, திருப்பூர் வடக்கு ஒன்றிய அமைப்பாளர் ஐயப்பன், முத்துராஜ், ராஜா, அவினாசி ஆகியோர் கலந்துகொண்டு இரங்கல் தெரிவித்தனர். பெரியார் முழக்கம் இதழ் 09042026
கடலூர்: மாவட்டக் கழகத்தின் சார்பில் 28.03.2026 சனிக்கிழமை அன்று மாலை 6 மணியளவில் கடலூர் மஞ்சகுப்பம் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை அருகில் கடலூர் பெரியார் சிவா தலைமையில் பொதுகூட்டம் நடைப்பெற்றது. கடலூர் ராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார். அறிவழகன் முன்னிலை வகித்தார். பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர் ‘‘தகைசால் தமிழர்’’ தோழர் நல்லகண்ணு மற்றும் திராவிட இயக்கத் தலைவரும், சமூக சீர்திருத்தவாதியுமான அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி ஆகியோரின் படத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தி. மு. க தேர்தல் பணிக்குழு செயலாளர் வழக்கறிஞர் இள. புகழேந்தி அவர்களும் படத்தை திறந்து வைத்து வீரவணக்கம் செலுத்தினர். உமாபதி, லதா, சத்யா, திராவிட மகிழன் கலைக்குழு ஆகியோரின் அரசியல் நையாண்டி மற்றும் கலைநிகழச்சி நடைபெற்றது. லோகு. அய்யப்பன் (திராவிடர் விடுகலைக் கழக புதுச்சேரி மாநில தலைவர்), இரா. உமாபதி (தலைமைக் குழு உறுப்பினர்), கே. எஸ். ராஜா...