நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால் நான் எப்போதும் ஒரு வேட்டையாடப்படும் மிருகமாக இருக்கிறேன் நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால் இணக்கமாக வாழும் பொறுப்பு எனக்குத்தான் முழுமையாக தரப்பட்டிருக்கிறது நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால் எப்போதும் நிபந்தனையற்று விட்டுக்கொடுப்பவனாக இருந்திருக்கிறேன் நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால் நான் பேச வேண்டிய நேரத்தில் எல்லாம் மௌனமாக இருக்க நிர்பந்திக்கப்பட்டிருக்கிறேன் நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால் என் தேசபக்தியை நிரூபிக்க எப்போதும் என் நெஞ்சைப்பிளந்து காட்டி வந்திருக்கிறேன் நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் என்றால் பயங்கரவாதிகளைத் தேடுபவர்களால் முதலில் ஆடை கழற்றிப்பார்க்கப்படுபவனாக இருந்திருக்கிறேன் ஆயினும் நான் ஒரு இஸ்லாமியனாகவே இருக்க விரும்புகிறேன் என் நெஞ்சில் நீங்கள் கடைசியாகப் பாய்ச்சப்போகும் ஈட்டியின் கூர்மையை நான் காண விரும்புகிறேன் உங்களை முகம் சுழிக்க வைக்கும் அத்தரை உடலெங்கும் பூசிக்கொண்டு ஒரு இஸ்லாமிய கதகதப்போடு...
நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா? நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு? நரகன் என்பவன் நல்லனா? தீயனா? அசுரன்என் றவனை அறைகின் றாரே? இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே? இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பது? இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர் பன்னு கின்றனர் என்பது பொய்யா? இவைக ளைநாம் எண்ண வேண்டும். எண்ணா தெதையும் நண்ணுவ தென்பது படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா? வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல் கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம். ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும் தூயது தூயதாம் துரும்பிரும் பாகாது! ‘உனக்கெது தெரியும் உள்ளநா ளெல்லாம் நினத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா? ‘ என்று கேட்பவனை ‘ஏனடா குழந்தாய்! உனக்கெது தெரியும் உரைப்பாய் ‘என்று கேட்கும்நாள் மடமை கிழிக்கும்நாள் அறிவை ஊட்டும்நாள் மானம் உணருநாள் இந்நாள். தீவா வளியும் மானத் துக்குத் தீ-வாளி ஆயின் சீஎன்று விடுவீரே! நிமிர்வோம் அக்டோபர் 2019 மாத இதழ்
ஒரே… ஒரே.. என்றாக்குவதே ஒரே லட்சியம் என்றிருப்பவரைச் சுற்றி ஒரே மாதிரி சிந்திப்போரே ஒரே கூட்டமாய் இருந்தனர் அங்கு ஒரே கூச்சல்… ஒரு நாடு ஒரே மதம் என்றார் ஒரு நாடு ஒரே மொழி என்றார் ஒரு நாடு ஒரே பண்பாடு என்றார் ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு என்றார் ஒரு நாடு ஒரே தேர்தல் என்றார் ஒரு நாடு ஒரே ஆட்சி என்றார் ஒரு நாடு ஒரே பதவி என்றார் ஒரு நாடு ஒரே தட்பவெப்ப நிலை என்றார்… கூட்டம் ஆம்… ஆம்… ராம்… ராம்… என்று கூச்சல் போட்டது… வேறெதையெல்லாம் ‘ஒரே’ ஆக்கலாம் என்ற விளம்பினார் விளம்பர நாயகர்…! கிளம்பின ‘ஒரே’ குறித்த வெவ்வேறு யோசனைகள்…! பிரபோ…? “வெவ்வேறு நாள்களில் குழந்தைகள் பிறப்பது வேற்றுமையை வளர்க்கும்… எனவே ஒரு நாடு ஒரே பிறந்தநாள்” என அறிவிக்கலாம்… என்றார் வினயமாய் ஒருவர். ஆவேசமாய் எழுந்த அடுத்த அறிவாளி “ஒரு...
தொட்டில் தொடங்கிச் சுடுகாடு வரைக்கும் சடங்குகளாலே வாழ்க்கை கனத்தது. ஒவ்வொரு சடங்கிலும் உருவிய பூணூலுடன் பணத்தையும் மலத்தையும் பறிமுதல் செய்தான். அதிகார மாதிரி அறிவு மாதிரி ஆதிக்கம் அனைத்துக்கும் அவன் முன்மாதிரி. எந்த ஒரு புயலிலும் வேர் பெயராத் தர்ப்பையாய் ஒவ்வொரு மூளையிலும் பார்ப்பான் வளர்ந்தான். வேதம் படித்தாலும் மறுக்கப்பட்டாலும் பூணூல் போட்டாலும் போடாவிட்டாலும் ஆதிக்கக்காரன் ஒவ்வொருவனுக்குள்ளும் ஆணவம் பிடித்த பார்ப்பான் இருக்கிறான். அடங்கிக் கிடக்கும் ஒவ்வொரு அடிமைக்கும் அந்த பார்ப்பானே குறிக்கோள் ஆகிறான். நந்தனின் குறிக்கோள் பார்ப்பனியம் நமக்கும் குறிக்கோள் பார்ப்பனியம் இந்தச் சூழலில் தந்தை பெரியார்….. **** மானுடம் சுமந்த துயரம் அனைத்தையும் வரித்துக் கொண்டதுபோல் கறுத்த சட்டையுடன் தள்ளாடும் உடம்பைத் தாங்கும் கைத்தடியால் தள்ளாடும் மானுடத்தைத் தாங்க வந்ததுபோல். நிமிரவே மறந்து நெடுநாள் கிடந்தேன்… முதுகில் அந்தக் கைத்தடி தட்டத் திரும்பினேன்… அந்த ஞாயிறு சுட்டது. “நிமிர் நிமிரத் தெரியாதது விலங்கு மனித அடையாளம் நிமிர்வது” தோளில்...
1.3.1948இல் ‘குயில்’ ஏட்டில் எழுதிய கவிதை பெருநிலையில் இருக்கின்றீர் காமராசப் பெருந்தகையீர்! உம்பெருமை அவர்கள் கண்ணில் கருவேலின் முள்போல உறுத்தும், நீவீர் கடுகளவும் அஞ்சாதே கோட்சே கூட்டம் திரைமறைவில் நோக்கத்தை வைத்திருக்கும் வெளிப்புரத்தில் செல்வாக்கை வளர்க்கு மிந்த விரிவுதனை நீர் அறிவீர் அஞ்சவேண்டா; கோட்சேக்கள் செல்வாக்கை வீழ்த்த வேண்டும் ஏழைக்கும் செல்வனுக்கும் பன்மதத்தார் எல்லார்க்கும் எதிலும் நலம்புரிய எண்ணி வாழ்ந்ததுவும் குற்றமெனக் காந்தி அண்ணல் மார்பு பிளந்தார்; காமராசரே, எம் தோழரே! திராவிடரே உமது மேன்மை தொலைப்பதற்கும் வழிபார்க்கும் கோட்சே கூட்டம்! ஆழ்ந்திதனை எண்ணிடுக கோட்சே கூட்டத் ததிகாரம் ஒழியுமட்டும் மீட்சி இல்லை! வரலாற்றுக் குறிப்பு: ……………. காந்தியை கோட்சே சுட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ் முதல்வராக இருந்த ஓமாந்தூர் இராமசாமி (ரெட்டியார்) மற்றும் காமராசர் ஆகிய இருவருக்கும் சேர்த்து – புரட்சிக் கவிஞர் எழுதிய கவிதை இது. காமராசர் மீதான பகுதியை மட்டும் இங்கு வெளியிட்டுள்ளோம். புரட்சிக் கவிஞர்...
விவசாயிகளுக்கு ‘வாய்க்கரிசி’ போடுவதுதான் புதிய இந்தியா நெசவாளர்களுக்கு ‘சவத்துணி’ நெய்வதுதான் புதிய இந்தியா சில்லறை வணிகர்களுக்கு ‘நெற்றிக்காசு’ வைப்பதுதான் புதிய இந்தியா மாட்டுக்கறி உண்பவரைக் கொன்று கொன்று ‘மனிதக்கறி’ உண்பதுதான் புதிய இந்தியா இல்லாதவனின் ‘கோவணத்தைப் பிடுங்கி’ இருக்கிறவனுக்கு கம்பளம் விரிப்பதுதான் புதிய இந்தியா மருத்துவமனைகளில் ‘மழலைகளின் மூச்சறுத்து’ வீடுகளில் ‘கிருஷ்ண பாதம்’ வரைவதுதான் புதிய இந்தியா மாநிலக் கல்வி உரிமை பறித்து சமூகநீதி புத்தகம் ‘கிழித்து’ உலக மூலதனத்துக்கு விசிறி விடுவதுதான் புதிய இந்தியா பெண்களின் ‘தீட்டுத்துணிக்கும்’ வரிவிதித்து பத்து லட்சம் ரூபாய் ‘கோட்டு’ அணிந்து சுதந்திரக்கொடி ஏற்றுவதுதான் புதிய இந்தியா செத்துச் செத்துப் பிறக்கிறது புதிய இந்தியா பிறந்து பிறந்து சாகிறது புதிய இந்தியா. நிமிர்வோம் ஏப்ரல் 2019 மாத இதழ்
அன்பின் அடைக்கலமே தூய ஆற்றலின் பிறப்பிடமே மாதர் போற்றும் மங்கையரான மாசில்லாத மணியம்மையே மங்கையர் உலகமே நூற்றாண்டின் திலகமே மதித்திடும் பெண்மையே மணியான அம்மையே – அன்பின் சிறுவயதிலே தொண்டுகள் செய்யும் தொண்டராகவே நீயானாய் சிறுபிள்ளையாக ஈவேராவை கண்போல் காத்துத் தாயானாய் ஏச்சையும் பேச்சையும் ஏற்றுக் கொண்டு எல்லோர் நலனும் நீ காத்தாய் எளிய உடையில் பவனி வந்துநீ பகுத்தறிவினிலே நீ பூத்தாய் – மங்கையர் உலகமே ஈவேராவின் ஆயுட்காலத்தை நீட்டித்தவளும் நீயம்மா நீடில்லாத தியாகச் சுடராய் ஈகை அளித்த தாயம்மா இராவணலீலா நிகழ்விலேயே இராமனை எரித்தத் தீயம்மா இராவும் பகலும் இயக்கப் பணியை இணைந்து செய்த மணியம்மா – மங்கையர் உலகமே சுயமரியாதைப் பிரச்சாரத்தை சுற்றிச் சுற்றி செய்தவளே அனைவரும் அர்ச்சக ராகஎண்ணியே மறியல் கிளர்ச்சி செய்தவளே இயக்க நூல்களை சுமந்து சென்று பல இதயத்தில் சேர்த்தவளே இந்த சமூகம் ஏற்றம்பெறவே எறும்பாய் உழைத்துக் காத்தவளே – மங்கையர் உலகமே...
தாம் போகும் வழிகளை மறித்துக் கொண்டிருந்த ஒரு குன்றத்தைக் குந்தி உடைத்துக் கொண்டிருந்த இரண்டு கோள்களைக் கண்டோம். தம்மை நோக்கிச் சீறி வருகின்ற நெருப்பு மழைக்குச் சிரித்துக் கொண்டிருந்த இரண்டு உதடுகளைக் கண்டோம். “தமிழ்நெறி காப்பேன் – தமிழரைக் காப்பேன் – ஆரிய நெறியை அடியோடு மாய்ப்பேன்” என்று அறையில் அல்ல – மலைமேல் நின்று மெல்ல அல்ல, தொண்டை அறையில் அல்ல – மலைமேல் நின்று மெல்ல அல்ல, தொண்டை கிழிய முழக்கமிடும் ஓர் இருடியத்தால் செய்த உள்ளத்தைக் கண்டோம். அதுமட்டுமல்ல குன்று உடைக்கும் தோளும், நெருப்பு மழைக்குச் சிரித்த உதடுகளும் இருடிய உள்ளமும் ஒரே இடத்தில் கண்டோம் – இந்த அணுகுண்டுப் பட்டறைதாம் பெரியார் என்பதும் கண்டோம். யாரைப் புகழ்ந்து எழுதினோம், புகழ்ந்து பாடினோம். ஆயினும் நம் புகழ் நாம் பாட இன்னும் மேலான பொருள் வேண்டுமென்று ஆராய்ந்து கொண்டிருந்தோம். பெரியார் செத்துக் கொண்டிருந்தார். தமிழர் அழுது கொண்டிருந்தார்கள்....
மனதால் இருவர் ஒன்றாக இணைவதல்லக் காதல். இணைகிற இருவருக்கும், இவ்வுலகம் ஒன்றாய் தெரிந்தால்தான் அது காதல்.! – செயின் எக்ஸ்கியூபெரி மணமுறிவுக்காய் எலும்புதேய வழக்காடு மன்றப் பயணம்.. குழந்தையின் அங்ககீனத்திற்கு மனம்நொந்து … நீளும் மருத்துவமனை வாசம் ! சவரன் குறைந்ததால் … எரிந்த பெண்கள் உயிர் ஏராளம். பெட்டி..பெட்டியாய் பொன் கொண்டு போயினும் … பிணமொத்த வாழ்வில் மருகும் மகள்கள் ஏராளம்… ஏராளம்! தரங்கெட்டத் தாய்மாமன்களுக்கும்… முறைகெட்ட முறைமாமன்களுக்கும்… உறவு விட்டுப் போகுமோயென… விறகுபோல் அள்ளித்தந்து, சருகுபோல் கருகிய பெண்ணுயிர் ஏராளம்… ஏராளம் ! சுயஜாதி மணங்களின் லட்சணங்கள் இவை! மணம் எது? மனம் எது? என உணராத ஜாதிவெறி ஜம்பங்களே! நீங்கள் இருதயத்தையும், மூளையையும் விரும்பி நாடுவது, இறைச்சிக் கடையில்தானே ! கலப்பு என்பது மாட்டிலும், பயிரிலும், விதையிலும் மட்டும் எனத் திரியும் ஈனர்களே! அறிவியலுக்கு வாருங்கள் கொஞ்சம்.! கலப்பு விஞ்ஞான விதி. கலப்பு இயற்கை நியதி. கலப்பே...
தலையில் சுமந்த செருப்பை காலில் மிதித்த தலைவர் செருப்புக்குத் தமிழர் சரித்திரத்தில் இடமுண்டு ஈசன் படியளந்த இதிகாசக் காலத்தில் ராமன் செருப்புகளே ராஜ்ஜியத்தை ஆண்டன. அரியாசனத்திலிருந்து ஆட்சி செய்தன செருப்புகள். ராஜராஜனுக்குப் பின் ராஜேந்திரன் வந்ததுபோல் அப்பன் செருப்புக்குப் பின் மகன் செருப்பு… ராம செருப்புக்கு வாரிசுச் செருப்புகள் வந்தன. பேட்டா செருப்புகள் போல வேதச் செருப்புகள் – மத வாதச் செருப்புகள் – பல வருணச் செருப்புகள். மறுபாதிச் செருப்புகள் மனுநீதிச் செருப்புகள்… தமிழ்நாட்டில், ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல் வந்தது ஓர் வார்ச் செருப்பு! ஆரஞ்சு பச்சை அதன் நடுவே வெள்ளையென்று வண்ணம் கொண்ட வார்ச்செருப்பு, பழஞ்செருப்பு! அது, வெள்ளைச் செருப்பின் வாரிசுச் செருப்பு! ராமச் செருப்பும், வெள்ளைச் செருப்பும் தில்லிச் செருப்பும் தமிழனின் காலைக் கடிக்கும் கள்ளச் செருப்பே! எந்தச் செருப்பு எங்களுக்குப் பொருந்தும் என்று தமிழர் நொந்து கிடந்த நோய்க் காலத்தில்,...
மனதால் இருவர் ஒன்றாக இணைவதல்லக் காதல். இணைகிற இருவருக்கும், இவ்வுலகம் ஒன்றாய் தெரிந்தால்தான் அது காதல்.! – செயின் எக்ஸ்கியூபெரி மணமுறிவுக்காய் எலும்புதேய வழக்காடு மன்றப் பயணம்.. குழந்தையின் அங்ககீனத்திற்கு மனம்நொந்து … நீளும் மருத்துவமனை வாசம் ! சவரன் குறைந்ததால் … எரிந்த பெண்கள் உயிர் ஏராளம். பெட்டி..பெட்டியாய் பொன் கொண்டு போயினும் … பிணமொத்த வாழ்வில் மருகும் மகள்கள் ஏராளம்… ஏராளம்! தரங்கெட்டத் தாய்மாமன்களுக்கும்… முறைகெட்ட முறைமாமன்களுக்கும்… உறவு விட்டுப் போகுமோயென… விறகுபோல் அள்ளித்தந்து, சருகுபோல் கருகிய பெண்ணுயிர் ஏராளம்… ஏராளம் ! சுயஜாதி மணங்களின் லட்சணங்கள் இவை! மணம் எது? மனம் எது? என உணராத ஜாதிவெறி ஜம்பங்களே! நீங்கள் இருதயத்தையும், மூளையையும் விரும்பி நாடுவது, இறைச்சிக் கடையில்தானே ! கலப்பு என்பது மாட்டிலும், பயிரிலும், விதையிலும் மட்டும் எனத் திரியும் ஈனர்களே! அறிவியலுக்கு வாருங்கள் கொஞ்சம்.! கலப்பு விஞ்ஞான விதி. கலப்பு இயற்கை நியதி. கலப்பே...
நடப்பவைகளை சகித்துக் கொள்ளாதபோது நான் நரகாசுரன் எங்கிருந்தோ வரும் தேவர்கள் எங்கள் கதிராமங்கலத்தில் துளையிடுவதை எதிர்த்துக் கேட்டால் நான் நரகாசுரன். மூலதன கூர்மாவதாரங்கள் எனது நெடுவாசலைப் பாயாய் சுருட்டிக் கொண்டு ஓட வருகையில், வீதிக்கு வந்து விரட்டினால் நான் நரகாசுரன். தமிழகத்தையே மத்தாக்கி கெயில் ஆதிசேஷன் இறுக்குகையில் – அமிர்தம் மேல் லோகத்திற்கு, விஷம் எங்களுக்கா? என ஆர்த்தெழுந்துப் போராடினால் நான் நரகாசுரன். பசுந்தளிர் அகலிகையை அபகரிக்க ‘மேக் இன் இந்தியா’ மாறுவேடத்தில் வரும் பன்னாட்டு இந்திரனைத் தடுத்து நிறுத்தினால் நான் நரகாசுரன். அழகிய தாமிரவருணியை ஆக்கிரமிக்க வரும் அமெரிக்க பிரகஸ்பதியை – என்னைக் கொன்றுவிட்டு தீபாவளி, என் ஆற்றைக் கொன்றுவிட்டு கொக்கோகோலாவா? என எதிர்த்துக் கேட்டால் நான் நரகாசுரன் வல்லினம், மெல்லினம், இடையினம், உயிர்மெய், அணியாய், இலக்கணமாய் இலக்கியமாய் என் குருதி கலந்த தாய்த்தமிழை ஆதிக்கம் செய்ய வரும் சமஸ்கிருதத்தை அடித்துத் துரத்தினால் நான் நரகாசுரன். கருவறைக்குள் வந்தால் தீட்டு,...
1970ஆம் ஆண்டு சென்னை வானொலிக்கு பெரியார் ஒரு பேட்டி அளித்தார். பெரியாரின் பல்வேறு வரலாற்றுத் தடங்களை விரிவாக பெரியாரே பதிவு செய்த முக்கியத்துவமான பேட்டி அது. பேட்டி கண்ட செய்தியாளர் மாறன். பெரியாருடன் வைக்கம் போராட்டம், கதர் இயக்கம் உள்ளிட்ட இயக்கங்களில் உடன் பயணித்தவரும், காங்கிரஸ்காரரும் பெரியாரின் உற்ற நண்பருமான கோவை அய்யாமுத்து, பெரியாரின் பேட்டியை குரல் வழியாக வானொலியில் கேட்டவுடன், உணர்வுக் குள்ளாகி உடனே எழுதிய கவிதை இது. வானொலி தன்னில் மாறன் வழுத்திய கேள்விக் கெல்லாம் வான்மழைபோன்று தாங்கள் வழங்கிய சொற்கள் கேட்டு நானும் என்மனையாள் தானும் நன்மனம் நிறைவுற் றோமே! நீங்கிலா நினைவு பூட்டு நித்தமும் நினைப்ப தோடு ஓங்குமுன் புகழைக் கேட்டு உள்ளமும் மகிழ்வுற் றோமே! எண்ணிய கருத்தைத் தாங்கள் எவரெல்லாம் எதிர்த்த போதும் திண்ணிய மாகச் சொல்லும் திறத்தினை எண்ணி எண்ணிச் சிறியனேன் இறும்பூ தெய்தித் திளைத்திடல் இன்றும் உண்டே! உத்தமி நாகம் மாவும்...
எவ்வளவோ சூறையாடி விட்டீர்கள் எவ்வளவோ கொள்ளையிட்டு விட்டீர்கள் விதைகள் முளைப்பாரி வரும் -எமது நிலத்தை மட்டுமாவது விட்டுவிடுங்கள் நிலத்தை விட்டுத் தூரச்செல்லுங்கள் வரப்பில் கூட நிற்கக் கூடாது ஆளில்லாத களத்து மேட்டில் தானியங்களை அள்ளிச் செல்லும் உங்களை விட்டுவிட மாட்டோம் நாங்கள் வந்து விட்டோம் நாங்கள் வழி மறிப்போம் எங்கள் மலைகளைத் துளையிட வேண்டாம் அளவு கருவிகளை சுருட்டிக் கொள்ளுங்கள் எல்லைக் கற்களை எடுத்துச் சென்று விடுங்கள் எங்கள் ஈரக்குலையை தோண்டியெடுத்து யாருக்குக் கொண்டு செல்கிறீர்கள் ? இலைகளின் இதயம் படபடக்க பச்சை மரத்தை அறுக்காதே அன்னையைப் போன்ற தென்னையை வெட்டிக் கொன்றுவிட்டு என்ன தரப்போகிறாய் இழப்பீடு ? தென்னஞ் சில்லாடைக்குக் கூட தேறாது உன் நிவாரணத் தொகை உழுது கொண்டு போகும்போது மண்ணுக்குள் செல்லும் மரத்தின் வேர் தட்டி விழுந்த நிலத்தின் பிள்ளைகள் நாங்கள்...
நீயின்றி இயங்காது எம் உலகு! பேசுவதை நிறுத்திக்கொண்டாய். “உங்களிடம் பேசி என்ன ஆகப்போகிறது” என்று நினைத்துவிட்டாயா? பேசிப் பேசி அலுத்து விட்டதா? சொல்வதற்கு இருந்ததை எல்லாம் சொல்லிவிட்டேன் என்றா? உன் வார்த்தைகளின் எசமானர்கள் நாங்கள் என்று உனக்குத் தெரியாதா? மௌனம் கனத்துக்கிடக்கிறது எங்கள் பாதையை அடைத்துக்குக்கிடக்கும் அசைக்க முடியாத பாறையாய்… வெடித்துக் கிடக்கும் வறண்ட வயலின் வரப்பில், செய்வது அறியாது நிலைகுலைந்து நிற்கும் குடியானவனைப் போல நாங்களும் காத்துக்கிடக்கிறோம் கார்முகிலாய் திரளும் சொற்களுக்காக. கடல் பிளந்து மறுகரை சேர்க்கிறேன் என்ற கிழவனை, பறித்துச் சென்றது யார்? உன் சக்கர நாற்காலி உருளும் சத்தம்… வண்டியில் இருந்து இறங்கி, நீ வீசும் சினேகப் புன்னகை… அதற்குப் பின்னால், எப்போதும் ததும்பும் நகைச்சுவை… மேடையில் இருந்து, “உடன் பிறப்பே” என்று அழைக்கும்போது, ஒரு கோடி இதயங்கள் ஒரு வினாடி உறைந்து துடிக்குமே அந்தக் கணம்… இதற்கு மாற்றாய் எதைத் தருவாய், நாளை முதல்...
‘என் மகனை கருணைக்கொலை செய்துவிடுங்கள்’ என்று மன்றாடுகிறாள் அற்புதம் அம்மாள். `என் மகனைத் தூக்கு மேடையிலிருந்து காப்பாற்றுங்கள்’ என்று மன்றாடிய அதே அற்புதம் அம்மாள். இப்போது ‘என் மகனைக் கொன்றுவிடுங்கள்’ என்று கேட்கிறாள் மரணத்தைவிடவும் கொடிய மரணங்கள் இருக்கின்றன தண்டனைகளை விடவும் கொடிய தண்டனைகள் இருக்கின்றன ஒருவனைக் கொல்லவேண்டும் என்பதில்லை ஆனால் அழிக்கலாம் நிதானமாக எந்தக் குழப்பமும் இல்லாமல் சட்டத்தின் சிலந்தி வலைக்குள் தன் மகனை ஒப்புக்கொடுத்தாள் அற்புதம் அம்மாள். நீதியின் புதிர்ப் பாதைகளுக்குள் அவளுக்கு வழி தவறிவிட்டது எங்கும் போய்ச் சேராத கருணையின் இருட்டில் மீட்சியின் திசைகள் அவளுக்குப் புலப்படவில்லை இருபத்தேழு வருடங்களாக வீடு திரும்பாத மகனுக்காக சிறிய மெழுகுவத்திகளின் துணையுடன் காத்திருக்கிறாள் அற்புதம் அம்மாள். அவள் மகனுக்குப் பின் நிறையபேர் குற்றம் சாட்டப்பட்டார்கள் நிறையபேர் விடுதலையானார்கள் நிறையபேருக்கு நிறைய கருணை கிடைத்தது மனிதர்களைக் கொன்றவர்கள் மானைக்கொன்றவர்கள் ஆயுதங்களை விநியோகித்தவர்கள் கலவரங்களில் கர்ப்பத்திலிருந்த சிசுவைக்...
அப்பா! எல்லா அப்பாக்களையும் போல் நீயும் இருந்திருந்தால் என் தாத்தாவும் பாட்டியும் இந்நேரம் முசிறியில் மூச்சோடு இருந்திருப்பார்கள்! அப்பா! எல்லா அப்பாக்களையும் போல் நீயும் இருந்திருந்தால் என் அக்கா அமெரிக்காவிலும் என் அண்ணன் கனடாவிலும் நான் இலண்டனிலும் சொகுசாகப் படித்துக் கொண்டிருப்போம்! என் அப்பாவா நீ… இல்லையப்பா நீ நீ நீ எங்கள் அப்பா! எங்கள் என்பது… அக்கா அண்ணன் நான் மட்டும் இல்லை! எங்கள் என்பது… செஞ்சோலை காந்தரூபன் செல்லங்கள் மட்டும் இல்லை! எங்கள் என்பது… உலகெங்கிலும் உள்ள என் வயது நெருங்கிய என் அண்ணன்கள் என் அக்காள்கள் என் தங்கைகள் என் தம்பிகள் அனைவருக்குமானது! ஆம்… அப்பா! நீ எங்கள் அனைவருக்குமான ‘ஆண் தாய்’ அப்பா! அதனால்தான் சொல்கிறேன்… நான் மாணவனாக இருந்திருந்தால் என் மார்பில் மதிப்பெண்களுக்கான பதக்கங்கள் பார்த்திருப்பாய்! நான் மானமுள்ள மகனாய் இருந்ததால்தானே அப்பா என் மார்பில் இத்தனை விழுப்புண்கள் பார்க்கிறாய்!...
ஆசிஃபாவை கோயில் பிரகாரத்தின் தூணில் கட்டி வைத்து மயக்க மருந்து கொடுத்து உணவளிக்காமல் வரிசையாக வன்புணர்ச்சி செய்தவர்கள் பிறகு ஏன் அவளது பிஞ்சுக் கால்களை முறித்தார்கள்? ஏன் அவளது தலையில் க.ல்லைப்போட்டுக் கொன்றார்கள்? சிறுமியாக இருந்தாலும் அவள் ஒரு பெண் அதுவும் அழிக்கப்பட வேண்டிய ஒரு இனத்தின் பெண் நாடோடியாக மேய்ச்சல் நிலங்களில் நிராதரவாக தூங்குபவள் அவளை வேட்டையாடுவது சுலபம் பெரும்பான்மையினால் வெகு சுலபமாக துடைத்தழிக்கக்கூடிய சிறுபான்மையினள் n இது மட்டும்தானா அல்லது இன்னும் காரணங்கள் இருக்கின்றனவா? n நம் தெய்வங்கள் எப்போதும்போல கண்களற்றவையாக இருக்கின்றன காதுகளற்றவையாக இருக்கின்றன இதயமற்றவையாக இருக்கின்றன தன் காலடியில் ஒரு சிறுமி கூட்டாக வன்புணர்ச்சி செய்யபடும்போதும் அவை மௌனமாக உறங்கிக் கிடக்கின்றன ஆனால் இந்த தேசம் இப்போது தெய்வத்தின் பெயரால் ஆளப்படுகிறது n குற்றவாளிகளை விடுவிக்கும்படி தேசியக்கொடியுடன் ஊர்வலம் போகிறார்கள் தேச பக்தர்கள் ஆசிஃபா ஒரு நாடோடி அவளது இனக்குழுவின் குதிரைகளை அவர்கள் செல்லுமிடமெல்லாம் நேர்த்தியாக...
தலையை எடுத்த தறுதலையே! தாழ்ந்து கிடந்த தலைமுறை தலையெ டுக்கச் செய்தவரின் தலையை எடுப்ப தாரடா?! சிலையை உடைத்து போட்டுவிட்டால் சிந்தை உடைந்து போகுமோ?! அலையை உடைக்கப் பார்க்கிறாய் அறிவில் லாத மூடனே! எச்சிலையே! எச் சிலையை நீஉடைத்தாய் தெரியுமா? இச்சகத்துள் ளோரெலாம் எதிர்த்து நின்ற போதிலும் அச்ச மில்லை என்றெதிர்த்த அவரை உடைக்க முடியுமா? எச்சில் துப்பும் நாய்களால் இமயச் சிகரம் சரியுமா? எந்தத் தலையை நீஉடைத்தாய் எண்ணிப் பார்க்கத் தெரியுமா? அந்தத் தலையின் சிந்தனையின் ஆழம் உனக்குப் புரியுமா? நொந்து கிடந்த மக்களுக்கு சொந்த வரலாற்றினை முந்தித் தந்து மான உணர்வை மூட்டிச் சென்ற நெருப்படா! உரிமை உடமை பொதுமையாக உழைத்த பெரியார் அவர்! வறுமை யாக அடிமையாக வருணமாகி வீழ்ந்தவரை உரிமைப் போரில் வந்து சேர உணர வைத்த பெருமைக்கு உரியார், அவர் தான்பெரியார்! உணர் வறியா மூடனே! மாறி மாறி வேட மிட்டும் மறத்தமிழர் நாட்டினை...
அவர்கள் ஆதியிலிருந்தே ஐந்தடி தூரம் தள்ளி நின்றவர்கள்தான். எம் நிழல் பட்டால் ஆகாதென விலகிச் சென்றவர்கள் தான். எம் உப்பையும் வியர்வையையும் கண்ணீராக உண்டு கொழுத்தவர்கள் தான். அவர்கள் ஒரு நொடியில் எம் இடுப்பிற்கு இறக்கிய தோள் துண்டை மீண்டும் உயர்த்திப்போட பத்துத் தலைமுறைகளானது எமக்கு. அவர்களுக்குச் சரஸ்வதி கொடுத்த வீணையை விடச் சற்றும் இளைத்ததல்ல எம் பறை என மெய்ப்பிக்க எமது இந்தத் தலைமுறைக்கே வாய்த்திருக்கிறது. தலைமேல் தொங்கும் கத்தியாய் அவர்களது புனிதத்தை எம் இல்லங்களின் வரவேற்பறைகளில் நுழைத்தார்கள். பாத்திருந்தோம். மெதுவாக எமது புத்தகங்களின் பக்கங்களைத் திருடி அவர்களது வரலாற்றைச் சொருகினார்கள். படித்திருந்தோம். சத்தமில்லாமல் இப்போது எம் சமையலறைக்குள் வந்திருக்கிறார்கள். எமது நாக்கின் ருசியை கூர் மழுக்கிடப் புனித நெய்யிட்டு எம் அஞ்சறைப் பெட்டிகளைக் கழுவச் சொல்கிறார்கள். மாமிச ருசியின் குருதி படிந்த எமது ஏப்பத்தில் ‘விடுதலை’யின் வீச்சமடிப்பதாகப் புகார் சொல்கிறார்கள். கவனித்தபடியிருக்கிறோம். புகைபோக்கியின் மேலமர்ந்து மோப்பம் பிடிக்கின்ற அவர்கள்...
விவசாயிகளுக்கு வாய்க்கரிசி போடுவதுதான் புதிய இந்தியா நெசவாளர்களுக்கு சவத்துணி நெய்வதுதான் புதிய இந்தியா சில்லறை வணிகர்களுக்கு நெற்றிக்காசு வைப்பதுதான் புதிய இந்தியா மாட்டுக்கறி உண்பவரை கொன்று கொன்று மனிதக்கறி உண்பதுதான் புதிய இந்தியா இல்லாதவனின் கோவணத்தை பிடுங்கி இருக்கிறவனுக்கு கம்பளம் விரிப்பதுதான் புதிய இந்தியா மருத்துவ மனைகளில் மழலைகளின் மூச்சறுத்து வீடுகளில் ‘கிருஷ்ண பாதம்’ வரைவதுதான் புதிய இந்தியா மாநில கல்வி உரிமை பறித்து சமூகநீதி புத்தகம் கிழித்து உலக மூலதனத்துக்கு விசிறி விடுவதுதான் புதிய இந்தியா பெண்களின் தீட்டுத்துணிக்கும் வரி விதித்து பத்து லட்சம் ரூபாய் ‘கோட்டு’ அணிந்து சுதந்திரக்கொடி ஏற்றுவதுதான் புதிய இந்தியா செத்துச் செத்துப் பிறக்கிறது புதிய இந்தியா பிறந்து பிறந்து சாகிறது புதிய இந்தியா. நிமிர்வோம் செப்டம்பர் 2017 இதழ்
இடியாகப் பெரியார் இறங்காதிருந்தால் அடியோடு ஒழிந்திருப்போம் எங்கள் அடிச்சுவடும் அழிந்திருக்கும். மதம்பிடித்தால் யானைக்கு வலிமை அதிகரிக்கும் ஆனால் மதம் பிடிக்க வைத்தே எம் வலிமையெல்லாம் அழித்துவிட்ட பாதகரைப் பெரியார் படையன்றோ ஒழித்தது! அவர் தன்மானம் என்ற முதுகெலும்பைத் தந்திரா விட்டால் நிமிர்ந்து தமிழினம் நின்றிருக்க முடியாது ! அவரால்தான் ‘காலில் பிறந்தவன்’ தலைமைக்கு வந்தான் அவரால்தான் ‘மனிதர்கள்’ என்ற மரியாதை பெற்றோம்’’
ஆதியில் ஒலி இருந்தது எனவும் ஓங்காரமே முதல் ஒலி என்கிற புனைவே.. மனிதம் அந்தமிக்க எறியப்பட்ட முதல் ஆயுதம்! கதை மாந்தர்கள் கடவுளர்களாய் நடவு செய்யப்படுவது மண் மேலல்ல. மனித உயிர்கள் மேல்.! வழிபாடென்னும் மரணவாய், அருவமாகவும்.. உருவமாகவும் வெறிகொண்டு திரிகிறது புவியெங்கும்.மனித ரத்தம் பூசிய முடை வாடையோடு! புனிதங்களும், மோட்சங்களும் ரட்சிப்பும், வரங்களும் பிணக்குவியல் மேல் முளைத்த நச்சுச் செடி! இன்று வேர்பரவி.. கிளை பரப்பி முகடு துளைக்க நிற்கிறது. கொலையுண்ட மனிதனின், வெறித்த விழிகளை .. இலைகளாய் கொண்டு.! உயிர்ப்பலி கேட்டு நெறிபடும் மதங்களின் பற்களில்.. “ஜெய் காளீ” என்ற அலறல் கேட்கிறது. சில சமயம் “அல்லாகூ அக்பர்” என்றும்.. “அல்லேலூயா”எனவும், வெறிமிகுக் கூச்சல் வெளியேறுகிறது.! அருளுகிற.. ஆசிர்வதிக்கிற கரங்களுக்குள்ளே, கூர்வாள் உள்ளது காணாது.. மதத்தை தலையேந்தி மடிந்து சவமாகிறது மனித இனம்.!...
உலகின் அழகை உணரவும் நுகரவும் மனந்தான் வேண்டும் மதம் ஏன் வேண்டும்? மணக்கும் பூவில் முகங்கள் பதிக்க மதங்கள் தேவையில்லை வானில் சுடரும் மீனை அளக்க மதங்கள் தேவையில்லை விடுதலை வானில் விரியும் சிறகில்… மதங்களின் குறிகளில்லை வீசும் காற்று மதங்கள் பார்த்து நம்மைத் தொடுவதில்லை கரைகளில் நின்று அலைகளை நோக்கவும் கவிதை வரியில் கடல்களைத் தேக்கவும் தரையில் புல்லின் பசுமையை அணைக்கவும் தூரிகை முனையில் திரும்ப நினைக்கவும் மனந்தான் வேண்டும் மதம் ஏன் வேண்டும்? காலைக் கழுவிக்குடிக்கச் சொல்லும் மதங்களின் ஆசாரம் கங்கையைக் கழிவுக் கூவமாய் மாற்றும் மதங்களின் ஆசாரம் ஆயுதங்களுக்குப் பூசை நடத்தும் மதங்களின் ஆசாரம் ஆனால் மனிதனைச் சாதியால் மிதிக்கும் மதங்களின் ஆசாரம்! நரகல் கண்டால் மிதியாமல் நடக்க மதங்கள் தேவையில்லை நாறும் சகதியில் குளியாதிருக்க மதங்கள் தேவையில்லை… மணக்கும் பூவில் முகங்கள் பதிக்க மதங்கள்...
முதன் முதலாக பெண்ணை வருணிக்கத் தேர்ந்தெடுத்த வார்த்தை எது? ஆதாமின் முத்தம் ஏவாளின் எந்த பாகத்திற்கு முதலில் கிடைத்திருக்கும்? பெண்ணின் கூந்தலுக்கு முதன் முதலில் சூட்டப்பட்ட பூ எது? பெண் முதன் முதலில் எதற்காக ஆடைக்குள் தன்னை மறைத்துக்கொண்டாள்? பெண்ணின் கண்ணீர் முதன் முதலில் எதன் பொருட்டு சிந்தப்பட்டிருக்கும்? வரதட்சிணையால் வதைக்கப்பட்ட முதல் முதிர்கன்னி மாத விலக்கும் நின்றுபோனதை யாரிடம் சொல்லியிருப்பாள்? தாளிணிப்பாலுக்குப் பதில் கள்ளிப் பால் ஊட்டப்பட்ட முதல் பெண் சிசு எது? ஆண்களின் தேசத்தில் கேள்விகளுக்குள் சிக்கிய பெண்ணை மீட்க எந்தப் பெண் முதன் முதலில் போராளியானாள்? அவளின் கடைசி வாரிசிடம் கொடுத்து கிழித்தெறியச் சொல்லுங்கள் இந்தக் கவிதையை நிமிர்வோம் மார்ச் 2017 இதழ்
இரைத்துப் பாய்ச்சிவிட கிணற்றுப் பால் கசியவில்லை தோகை உச்சியில் கால்வைத்து விளையாட மழையும் வரவில்லை அடித்தூரில் வாய்வைய்க்க அருங் குளத்து நீரில்லை இறந்தவனின் மக்காச் சோள வயல் ஒரு முழத்திற்கு மேல் வளரவில்லை அறுத்து மாட்டுக்குப் போட யாரும் முன்வரவில்லை ஆடு பத்திவிட ஆட்டுக்காரர்கள் துணியவில்லை பட்டுப்போன பயிரென்றால் பத்திவிட்டு விடலாம் எப்படி மேய்ப்பது இறந்தவனின் புஞ்சையை வெம்பரப்பு பூமியில் பிணத்தின் வாசனை பரவப் பரவ அடைபட்ட காட்டில் ஆநிரைகள் விக்கி நிற்கின்றன இறந்தவனின் மக்காச்சோள வயல் ஒரு முழத்திற்கு மேல் வளரவில்லை காட்டு முயல்கள் காலெடுத்து ஒடித்து ஒடித்து விளையாடுகின்றன ஒன்றும் புரியாமல் நிமிர் பிப்ரவரி 2017 இதழ்
ஆன்ற தமிழ்ச் சான்றோரே தொல்காப்பியம் பத்துப்பாட்டு எட்டுத்தொகை சிலப்பதிகாரம் மணிமேகலை சீவகசிந்தாமணி வளையாபதி குண்டலகேசி கம்பராமாயணம் பெரிய புராணம் மறந்துவிட்டேன் திருக்குறள் எல்லாவற்றாலும் சுட்டப்பட்டவள் நான் தாய்மொழி -தமிழ் பெயர் -மருதாயி தொழில் பரத்தை என்னைக் கடமைகள் எனலாம் மதுரையைக் கொளுத்திய கற்பரசியே தலையாய கற்பினள் அல்லன் உங்கள் முத்தமிழ் அளவுகோலில் கற்புத் தோன்றிய அன்றே நானும் தோன்றி விட்டேன் ஐயா ஆன்ற தமிழ்ச் சான்றோரே என்னிடம் முதலில் வந்தவன் உங்கள் கொள்ளுப்பாட்டன் இப்போது வந்துபோனவன் கொள்ளுப் பேரன் என்றாலும் பாட்டன் எதிர்பார்த்தான் பாட்டியிடம் ‘பெய்யெனப் பெய்ய’ தன் சடலம் எரியும்போது உடல் வேக பாட்டி ஒருபோதும் பாட்டனிடம் கேட்கவில்லை பெய்யெனச் சொல்க உடல் வேக இருக்கையிலே சில சமயங்களிலும் போகையிலே சிலசமயங்களிலும் பாட்டி தன் தங்கையைத் தாரமாக்குபவள் இல்லாவிடினும் இவன் மேய்வான் பத்தினியைப் பறிகொடுத்த பாட்டனுக்கு மச்சினியை கைப்பிடித்த ஆறுதல் இல்லத்தரசி இருக்க என்னிட ம் ...