தோழர் தேவ.சீனி சுந்தரம் மறைந்தார் உடல் கொடையாக வழங்கப்பட்டது
மதுரை: பெரியார் திராவிடர் கழகத்தின் சிவகங்கை முன்னாள் மாவட்டத் தலைவரும், மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகக் காப்பாளருமான தளபதி அவர்களின் தந்தையுமான தேவ.சீனி.சுந்தரம் 21.09.2024 அன்று முடிவெய்தினார். 23.09.2024 அன்று நடைபெற்ற இறுதி நிகழ்வை பெண்களே முன்னின்று நடத்தினர்.சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அவரது “உடல் கொடை”யாக வழங்கப்பட்டது. முன்னதாக கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் த.தே.ம.மு. தலைவர் மீ.த.பாண்டியன், த.தே.பே, தி.க உள்ளிட்ட தோழமை அமைப்பினரும் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 03.10.2024 இதழ்