Category: நீலகிரி

இடைவிடாத பரப்புரைகளால் நிறைந்த ‘2025’ கழகத்தின் ஓராண்டு களப்பணிகள்!

இடைவிடாத பரப்புரைகளால் நிறைந்த ‘2025’ கழகத்தின் ஓராண்டு களப்பணிகள்!

சனவரி 12: சென்னை ராயப்பேட்டையில் 25-ஆம் ஆண்டாக தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. திருப்பூர் மாஸ்கோ நகர் பெரியார் திடலில் முழு நாள் நிகழ்வாக தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா எழுச்சியோடு நடைபெற்றது. சனவரி 15: கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பெரியார் விருது வழங்கப்பட்டது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் விருதுடன், ரூ.5 லட்சத்திற்கான காசோலை, ஒரு சவரன் மதிப்பிலான பதக்கம் வழங்கி கவுரவித்தார். பெரியார் விருது பெற்ற கழகப் பொதுச்செயலாளருக்கு ராயப்பேட்டையில் கழகத் தோழர்கள், தோழமை இயக்கத்தினர் பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். சனவரி 22: பெரியார் குறித்து கண்மூடித்தனமாக அவதூறுகளை பரப்பி வந்த சீமான் வீட்டை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி எச்சரித்தது. இதில் திராவிடர் விடுதலைக் கழகம் பெருந்திரளாகப் பங்கேற்று சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. சனவரி 26: பெரியார் விருது...

பாராட்டத்தக்க முயற்சி!  பெரியார் முழக்க வளர்ச்சிக்கு வாட்ஸ்அப் குழு

பாராட்டத்தக்க முயற்சி! பெரியார் முழக்க வளர்ச்சிக்கு வாட்ஸ்அப் குழு

ஆசிரியர் சிவகாமி முன்னெடுப்பில் புரட்சிப் பெரியார் முழக்க வளர்ச்சிக் குழு ஒன்று உருவாக்கப்பட்டு ஒரு வருட செயல் திட்டமாக மாதம் 500 ரூபாய் நிதி பங்களிப்பு செய்வதாக தீர்மானித்து செயல்பட்டு வருகிறது. முதல் தவணையாக ஜூன் மாதம் ரூ.8000 வழங்கியள்ளனர். குழுவில் இணைந்து ஒரு வருடத்திற்கு வளர்ச்சி நிதி வழங்க விருப்பமுள்ள தோழர்கள் தகவல் தெரிவிக்குமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம். பெரியார் முழக்கம் 26062025இதழ்

மேற்கு மண்டல கழகக் கலந்துரையாடலின் முடிவுகள்

மேற்கு மண்டல கழகக் கலந்துரையாடலின் முடிவுகள்

திராவிடர் விடுதலைக் கழக சத்தியமங்கலம் நகர அமைப்பாளர் மூர்த்தி – பூங்கொடி இல்லத் திறப்பு விழா  கெம்பநாயக்கன்பாளையம் சத்தியில், 03.11.2019 அன்று காலை 10 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்தார். நிகழ்வில் ஈரோடு தெற்கு, வடக்கு, கோவை திருப்பூர் மாவட்டத் தோழர்கள் பெருந்திரளாய் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். திராவிடர் விடுதலைக் கழக மேற்கு மண்டல கலந்துரையாடல் கூட்டம் 3.11.2019 அன்று சத்தி கெம்பநாயக்கம் பாளையம் திரு. கிட்டுசாமி தோட்டத் தில் நடைபெற்றது. கழக அமைப்புச் செயலாளர்  இரத்தினசாமி தலைமை யேற்று நோக்கவுரை ஆற்றினார். கழகத்தின் அடுத்த செயல் திட்டமாக மக்கள் சந்திப்பு இயக்கமும், கிராமங்கள் தோறும் பரப்புரைப் பயணமும், மருத்துவ முகாம் மற்றும் சட்ட ஆலோசனை முகாம் உள்ளிட்டவைகளை நடத்த ஆலோசனை வழங்கினார். கழக மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மேற்கு மண்டலம் உள்ளடக்கிய ஈரோடு தெற்கு, வடக்கு, கோவை புறநகர், கோவை, நாமக்கல் மற்றும் திருப்பூர்...

மேட்டுபாளையத்தில் சமஸ்கிருத திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ! நடுவண் அரசின் சமஸ்கிருத திணிப்பை கண்டித்து மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு 09.07.2016 அன்று மாலை 5 மணிக்கு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு புறநகர் மாவட்ட தலைவர் பா. இராமச்சந்திரன் தலைமை தாங்கினார், முன்னிலை- கள்ளகரை சுந்தரமூர்த்தி கண்டன உரை- தோழர்கள் நிர்மல்குமார், பன்னீர்செல்வம், சுதாகர் இயற்கை நல் வாழ்வு சங்கம், தோழர்மூர்த்தி தலைவர்இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , sdpi நகர தலைவர் பாருக்அப்துல, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்திய நகர தலைவர் பீர் முகமது, நே்ருதாஸ், கலந்துக்கொண்ட தோழர்கள் கிருஷ்ணன், கணேஷ், இனியவன், அலெக்ஸ்,விஷ்ணுபிரசாந்த், தேவபிரசாத், வசந்தகுமார், தேவா ஆகியயோர் கலந்துகொண்டனர் முருகேஷ் நன்றி தெரிவித்தார்

தந்தை பெரியார் மற்றும் தலைவர் காமராஜர் அவர்களின் நினைவலைகள் -கருத்தரங்கம் மேட்டுப்பாளையம் 20032016

தமிழ்நாடு அறிவியல் மன்றம் சார்பில் ”தந்தை பெரியார் மற்றும் தலைவர் காமராஜர் அவர்களின் நினைவலைகள்” எனும் கருத்தரங்கம் பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள் பிறந்த நாளான 20.03.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.30 மணிக்கு மேட்டுப்பாளையம் அன்னபூர்ணா அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் மன்ற மாநில அமைப்பாளர் தோழர் ஆசிரியர் சிவகாமி அவர்கள் தலைமை தாங்கினார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை புறநகர் மாவட்ட தலைவர் தோழர் பா.இராமச்சந்திரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். கழக மாநில பொருளாளர் தோழர் திருப்பூர் துரைசாமி,மாநகர் மாவட்டத் தலைவர் தோழர் நேரு தாசு,மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் நிர்மல் குமார்,பகுத்தறிவாளர் கழக தோழர் கள்ளக்கரை சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓவியர் தோழர் தூரிகை சின்னச்சாமி அவர்கள் கைரேகையிலேயே வரைந்த கை’நாட்டுக்காக’ உழைத்த காமராஜர் எனும் ஓவியத்தை கருத்தரங்கில் கழக தலைவர் அவர்களிடம் வழங்கினார். ”கல்வி கற்காத காமராஜரின் கல்விப்புரட்சி” எனும் தலைப்பில் கழக தலைவர் ‘தோழர் கொளத்தூர்...

தந்தை பெரியார் மற்றும் தலைவர் காமராஜர் அவர்களின் நினைவலைகள் கருத்தரங்கம் மேட்டுப்பாளையம் 20032016

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும், ”தந்தை பெரியார் மற்றும் தலைவர் காமராஜர் அவர்களின் நினைவலைகள்” கருத்தரங்கம். பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள் பிறந்த நாளில், இடம் : அன்னபூர்ணா அரங்கம்,மேட்டுப்பாளையம். நேரம் : மாலை 4.30 மணி. நாள் 20.03.2016 ஞாயிற்றுக்கிழமை. தலைமை : ஆசிரியர் சிவகாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றம் மாநில அமைப்பாளர். வரவேற்புரை : பா.இராமச்சந்திரன்,புறநகர் மாவட்ட தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். முன்னிலை : திருப்பூர் துரைசாமி, மாநில பொருளாளர், திராவிடர் விடுதலைக் கழகம். நேரு தாசு,மாநகர் மாவட்டத் தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். நிர்மல் குமார்,மாநகர் மாவட்ட செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். கள்ளக்கரை சுந்தரமூர்த்தி,பகுத்தறிவாளர் கழகம், கருத்துரை : ”கல்வி கற்காத காமராஜரின் கல்விப்புரட்சி” எனும் தலைப்பில் கழக தலைவர் ‘தோழர் கொளத்தூர் மணி’ அவர்கள். ”தமிழகத்தில் தந்தை பெரியாரின் சமுதாயப்புரட்சி” எனும் தலைப்பில் ‘ரெயின்போ வெங்கட்ராமன்’, மேட்டுப்பாளையம் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத் தலைவர். நன்றியுரை...