Category: தருமபுரி

ஜாதி – குடி போதைக்கு எதிரானப் பரப்புரைக்குத் தயாராகும் கழகம்! மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்களில் பேரெழுச்சி!

ஜாதி – குடி போதைக்கு எதிரானப் பரப்புரைக்குத் தயாராகும் கழகம்! மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்களில் பேரெழுச்சி!

தர்மபுரி: தர்மபுரி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 07.08.2024 அன்று தர்மபுரி B.அக்ரகாரத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்துரையாடல் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கழகத்தின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகள் நடைபெற்றது. நிறைவாகக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தர்மபுரி மாவட்டத் தலைவராக வெ.வேணுகோபால், தர்மபுரி மாவட்டச் செயலாளராக கு.நாகராஜ், மாவட்ட அமைப்பாளராக மா.பரமசிவம், பென்னாகரம் ஒன்றிய அமைப்பாளராக இரா.சரவணன் (B.அக்ரஹாரம்), காரிமங்கலம் ஒன்றிய அமைப்பாளராக கோ.செந்தில்குமார், நல்லம்பள்ளி ஒன்றிய அமைப்பாளராக மு.இராமதாஸ், தர்மபுரி ஒன்றிய அமைப்பாளராக பி.முத்துலட்சுமி, அரூர் ஒன்றிய அமைப்பாளராக பெருமாள், ஏரியூர் ஒன்றிய அமைப்பாளராக மா.அசோக்குமார், தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப்பாளராக சா.வையாபுரி ஆகியோரை நியமனம் செய்தார். சேலம் கிழக்கு: சேலம் கிழக்கு மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 07.08.2024 அன்று மாலை 6 மணியளவில் கருப்பூரில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கடவுள் மறுப்பு வாசகத்துடன் தொடங்கிய இந்தக் கலந்துரையாடல் கூட்டத்தில்...

திருப்பூர், கோவை, திண்டுக்கல்லில்  மக்கள்  பேராதராவுடன் தெருமுனைக் கூட்டங்கள்

திருப்பூர், கோவை, திண்டுக்கல்லில் மக்கள் பேராதராவுடன் தெருமுனைக் கூட்டங்கள்

திருப்பூர்: ஆகஸ்ட் 7,8 ஆகிய தேதிகளில் மங்கலம் நான்கு வழி சந்திப்பு, சுல்தான் பேட்டை, பெரியாண்டிபாளையம் பிரிவு, குமரன் கல்லூரி, ஊத்துக்குளி ஆர்.எஸ், கூழிபாளையம், மன்னரை, காங்கேயம் பேருந்து நிலையம், நத்தக்காடையூர், படியூர், பொங்கலூர், அருள்புரம், வீரபாண்டி பிரிவு, உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. ஆகஸ்ட் 21,22 ஆகிய தேதிகளில் பல்லடம் பகுதிகளுக்கு உட்பட்ட மகாலட்சுமி நகர், வடுகபாளையம், கேத்தனூர், காமநாயக்கன்பாளையம், லட்சுமி மில்ஸ், காரணம்பேட்டை, அனுப்பட்டி, எம்.ஜி.ஆர் சாலை ஆகிய இடங்களில் நடைபெற்றது. ஆகஸ்ட் 22 அன்று பல்லடம் லட்சுமி மில்ஸ் பகுதியில் 50வது தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. அதனையொட்டி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு, கழக முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சுப்பிரமணியம், திமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு ஒன்றிய தலைவர் முஜிபுர் ரகுமான், மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, மாநகர...

நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ மக்கள் பேராதரவுடன் நடந்த சேலம்-தருமபுரி- கிருட்டிணகிரி மாவட்ட பரப்புரைப் பயணம்

நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ மக்கள் பேராதரவுடன் நடந்த சேலம்-தருமபுரி- கிருட்டிணகிரி மாவட்ட பரப்புரைப் பயணம்

ட         பறை இசைப் பாடல்கள்; வீதி நாடகங்களுடன் திராவிட மாடல் மக்களிடம் விளக்கம். ட         கெலமங்கலம் மண்டல மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் பேச்சு. ட         கழகச் செயல்பாட்டாளர்களுக்கு உற்சாகத்தைத் தந்த பரப்புரை நிகழ்வுகள். முதல் நாள் : 01.05.2022 ஞாயிறு காலை 10.00 மணியளவில் சேலம் – தருமபுரி – கிருட்டிணகிரி மாவட்ட திராவிட மாடல் தொடர் பரப்புரைப் பயண தெருமுனைக் கூட்டம் ஏற்காட்டில் தொடங்கியது. கூட்டத்தில் முதல் நிகழ்வாக பறை முழக்கம், பாடல்கள், வீதி நாடகம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.     முதல் நிகழ்வு ஏற்காடு ரவுண்டானா, இரண்டாவது நிகழ்வு ஏற்காடு டவுன், மூன்றாவது நிகழ்வு ஏற்காடு பேருந்து நிலையம், நிறைவாக மஞ்சக்குட்டை ஆகிய பகுதிகளில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன.   மஞ்சக்குட்டை நிகழ்வில் திமுக பொறுப்பாளர் பாபு கலந்து கொண்டு உரையாற்றினார். மாலை 6.00 மணிக்கு கூட்டம் நிறைவடைந்தது. தெருமுனைக் கூட்டத்தில் ஏற்காடு...

‘திராவிட மாடல்’ பரப்புரைப் பயணத்துக்குத் தோழர்கள் தயாராகிறார்கள்

‘திராவிட மாடல்’ பரப்புரைப் பயணத்துக்குத் தோழர்கள் தயாராகிறார்கள்

நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ மண்டல மாநாடு ஒட்டி மாவட்ட கழகங்களின் கலந்துரையாடல்களை நடத்தி தோழர்கள் பயணத்துக்கு திட்டமிட்டு வருகிறார்கள். சென்னை : கடந்த ஏப்ரல் 02, 03 ஆகிய நாட்களில், ஈரோட்டில் நடைபெற்ற தலைமைக்குழு, செயலவையில், மண்டலம் வாரியாக மாநாடு நடத்துவது என்றும், மாநாட்டிற்கு முன்னதாக 15 தெருமுனைக் கூட்டங்கள் மாவட்டம் வாரியாக நடத்த வேண்டும் என்றும், முடிவுகள் எடுக்கப்பட்டன. செயலவை முடிவுகளின் படி, சென்னை மாவட்டம் சார்பாக மாநாடு மற்றும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது பற்றி சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துரையாடல், 05.04.2022 செவ்வாய் கிழமை மாலை 6 மணிக்கு, சென்னை இராயப்பேட்டை வி.எம் தெரு பெரியார் படிப்பகத்தில், மாவட்ட செயலாளர் உமாபதி தலைமையில் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், அன்பு தனசேகர், மாவட்டத் தலைவர் வேழவேந்தன் ஆகியோர் உட்பட மாவட்ட, பகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். சேலம் – தருமபுரி...

கழகப் பொறுப்பாளர்கள் மூன்றாம் கட்ட பயணம்: கழக ஏட்டுக்கு  சந்தா சேர்ப்பதில் தோழர்கள் ஆர்வம்

கழகப் பொறுப்பாளர்கள் மூன்றாம் கட்ட பயணம்: கழக ஏட்டுக்கு சந்தா சேர்ப்பதில் தோழர்கள் ஆர்வம்

மூன்றாம் கட்ட பயணமாக 1, 2, 3.12.2021 ஆகிய தேதிகளில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி பரப்புரைச் செயலாளர் பிரபாகரன் தலைமைக் குழு உறுப்பினர் விழுப்புரம் அய்யனார் ஆகியோர் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களிடத்தில் கலந்துரையாடினர். தர்மபுரியில் 1.12.2021 அன்று காலை 11 மணி அளவில் பி அக்கரகாரம் நஞ்சப்பன் இல்லத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் வேணுகோபால், சந்தோஷ்,பரமசிவம் உள்பட பல பகுதிகளில் இருந்து தோழர்கள் பங்கேற்றனர் கழக செயல்பாடுகள் மற்றும் அரசு செயல்பாடுகள் குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள புரட்சிப்பெரியார் முழக்கம் பெரும் உதவியாக இருந்தது என்றும், இந்த ஆண்டு கூடுதல் சந்தா சேர்ப்போம் என்றும் தோழர்கள் கூறினர். இதனைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் சிகர்ந்தப்பள்ளி மாவட்டச் செயலாளர் குமார் இல்லத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர்கள் ப.வாஞ்சிநாதன், குமார், கிருஷ்ணன் உள்பட 35 தோழர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர் மாவட்ட கழக...

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தேசிய கல்விக் கொள்கை அறிக்கை, இஸ்ரோ முன்னாள் அதிகாரி கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவால் 2018 டிசம்பர் மாதம் தயாரிக்கப்பட்டு, 2019 ஜூன் 1ஆம் தேதி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வலைதளத்தில் தேசிய கல்வி கொள்கை அறிக்கை ஆங்கிலம், இந்தியில் மட்டும் வெளியானது. வெளியானதிலிருந்து 30 நாட்களுக்குள் கருத்து சொல்ல வேண்டும் என்று அரசு கால நிர்ணயமும் அறிவித்திருந்தது. பல மொழிகள் பேசக்கூடிய மாநிலங்கள் இருந்தும் மாநில மொழிகளில் அறிக்கை வெளியாகவில்லை என்று எதிர்ப்பு வந்தவுடன் தேசிய கல்வி கொள்கை சுருக்கமான வரைவை தமிழில் வெளியிட்டார்கள். இந்த நிலையில் திராவிடர் விடுதலைக் கழகம்  ஓராண்டுக்கு முன்பே 2019 செப்டம்பர் 17 இல் பரப்புரை பயணத்தை நடத்தியது. ‘சமூக நீதியை பறிக்காதே; புதிய கல்வித் திட்டத்தை திணிக்காதே’ என்ற முழக்கங்களுடன் தமிழகம் முழுவதும் கழகம் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான பரப்புரை பயணத்தை மேற் கொண்டது. பயணம் பள்ளிபாளையத்தில் நிறைவுற்றது. செப்டம்பர் 20ஆம்...

தர்மபுரி மாவட்டக் கழக சார்பில் ரூ.35,000 கட்டமைப்பு நிதி

தர்மபுரி மாவட்டக் கழக சார்பில் ரூ.35,000 கட்டமைப்பு நிதி

கழக செயலவை யில் கழகக் கட்டமைப்பு நிதி யாக ரூ.35,000/- தர்மபுரி மாவட்டத் தலைவர் வேணுகோபால், அமைப்பாளர் சந்தோஷ் ஆகியோர் கழகத் தலைவர், பொதுச் செய லாளரிடம் வழங்கினர்.   பெரியார் முழக்கம் 02012020 இதழ்

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

  ‘மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப் பறிக்காதே; புதிய கல்வி என்ற பெயரால் குலக் கல்வியைத் திணிக்காதே’ என்ற முழக்கத்துடன் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழகத்தில்  முனைகளிலிருந்து பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறது. ஆகஸ்டு 26இல் தொடங்கி நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி பயண நிறைவு விழா நடைபெறுகிறது. திருப்பூர், விழுப்புரம், ஈரோடு (கோபி), மயிலாடு துறை, சென்னை, மேட்டூர் என 6 முனைகளிலிருந்து தொடங்கும் பயணம், 150 ஊர்களில் பரப்புரையை நடத்துகிறது. நூறுக்கும் மேற்பட்ட கழக செயல்பாட்டாளர்கள், பயணங்களில் முழு அளவில் பங்கேற்கிறார்கள். பரப்புரைக்கான துண்டறிக்கை, கழக வெளியீடுகள் தயாராகி வருகின்றன. கலைக் குழுக்கள், பரப்புரைப் பயணங்களில் இசை, வீதி நாடகம் வழியாக மண்ணின் மைந்தர்கள் வேலை  வாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுவது குறித்தும் வடநாட்டுக்காரர்கள் தமிழக வேலை வாய்ப்புகளில் குவிந்துவரும் ஆபத்துகள் குறித்தும் மக்களிடையே பரப்புரை செய்வார்கள். ஒத்த கருத்துடைய அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள் பயணத்துக்கு ஆதரவு தர ஆர்வத்துடன்...

பெரியார் பெரும் தொண்டர் வி.ஆர். வேங்கன் தனி முயற்சியில் நிறுவிய பெரியார் சிலை திறப்பு

பெரியார் பெரும் தொண்டர் வி.ஆர். வேங்கன் தனி முயற்சியில் நிறுவிய பெரியார் சிலை திறப்பு

தருமபுரி மாவட்டம், பாப்பி ரெட்டிபட்டியை அடுத்த வெங்கட சமுத்திரத்தில் பெரியார் முழு உருவ வெண்கலச் சிலை, 2.6.2018 சனிக் கிழமை காலை 10.00 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியால் திறந்து வைக்கப்பட்டது. பெரியார் பெருந்தொண்டரும், தமிழ்நாடு அரசால் பெரியார் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டவருமான வி.ஆர்.வேங்கன் தனிமுயற்சியில் அவரால் நிலம் வழங்கப்பட்டு இயங்கிவரும் வெங்கடசமுத்திரம் அரசினர் மேனிலைப் பள்ளியின் எதிர்ப்புறத்தில் உள்ள அவரது சொந்த நிலத்தில் நிறுவப்பட்டுள்ளது. தனியார் நிலத்தில் நிறுவப்படும் சிலைகளுக்கு எவ்வித அரசு அனுமதியும் தேவையில்லை என ஏற்கனவே உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் இருந்தும் மாவட்ட ஆட்சித் தலைவராலும், காவல்துறையாலும் கொடுக்கப்பட்ட கடும் நெருக்கடிகள் காரணமாக இருமுறை உயர்நீதி மன்றத்தில் ஆணை பெற்று வந்த நிலையிலும் மாவட்ட ஆட்சியரும், காவல்துறையும் சிலையை நிறுவ தடைசெய்து வந்தனர். ஆனால் புதிய மாவட்ட ஆட்சியராய் மலர்விழி அவர்கள் பொறுப்பேற்றவுடன் சிலையை நிறுவ உரிய ஒத்துழைப் புகள் வழங்குமாறு வருவாய், காவல் துறையினருக்கு அறிவுறுத்தினார்....

வெங்கட சமுத்திரத்தில் தந்தை பெரியார் முழு உருவ வெண்கலச் சிலை திறப்பு விழா 02062018

வெங்கட சமுத்திரத்தில் தந்தை பெரியார் முழு உருவ வெண்கலச் சிலை திறப்பு விழா 02062018

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டியை அடுத்த வெங்கட சமுத்திரத்தில் தந்தை பெரியார் அவர்களின் முழு உருவ வெண்கலச் சிலை, 2-6-2018 சனிக்கிழமை காலை 10-00 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியால் திறந்துவைக்கப்பட்டது. பெரியார் பெருந்தொண்டரும், தமிழ்நாடு அரசால் பெரியார் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டவருமான வி.ஆர்.வேங்கன் அவர்களின் தனிமுயற்சியில் அவரால் நிலம் வழங்கப்பட்டு இயங்கிவரும் வெங்கடசமுத்திரம் அரசினர் மேனிலைப் பள்ளியின் எதிர்ப்புறத்தில் உள்ள அவரது சொந்த நிலத்தில் நிறுவப்பட்டுள்ளது. தனியார் நிலத்தில் நிறுவப்படும் சிலைகளுக்கு எவ்வித அரசு அனுமதியும் தேவையில்லை என ஏற்கனவே உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் இருந்தும் மாவட்ட ஆட்சித் தலைவராலும், காவல்துறையாலும் கொடுக்கப்பட்ட கடும் நெருக்கடிகள் காரணமாக இருமுறை உயர்நீதிமன்றத்தில் ஆணை பெற்றுவந்த நிலையிலும் (வழக்குரைஞர் திருமூர்த்தி அவர்கள்  உயர்நீதி மன்றத்தில் வழக்காடி இருமுறையும் சாதகமான தீர்ப்புகளைப் பெற்றுக் கொடுத்தார்) மாவட்ட ஆட்சியரும், காவல்துறையும் சிலையை நிறுவ தடைசெய்து வந்தனர். ஆனால் புதிய மாவட்ட ஆட்சியராய் திருமதி.மலர்விழி அவர்கள் பொறுப்பேற்றவுடன் சிலையை நிறுவ...

4 நாட்கள்; 30 பரப்புரைக் கூட்டங்கள்; மக்கள் பேராதரவு

4 நாட்கள்; 30 பரப்புரைக் கூட்டங்கள்; மக்கள் பேராதரவு

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி – உரிமை முழக்க ஊர்திப் பேரணி மே 9ஆம் தேதி ஈரோட்டில் பெரியார் இல்லத்திலிருந்து தொடங்கி மே 12ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் நிறைவடைந்தது. ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நான்கு நாட்களில் 25 தெருமுனைக் கூட்டங்களில் பரப்புரைக் குழு பல ஆயிரம் மக்களை சந்தித்து தெருமுனைக் கூட்டங்களை நடத்தியது. சேலம், கிருட்டிணகிரி, வேலூர், கூடுவாஞ்சேரியில் ஒவ்வொரு நாள் மாலையும் பொதுக் கூட்டங்களும் நடந்தன. பா.ஜ.க. – சங் பரிவாரங்களின் பார்ப்பனிய மதவெறித் திணிப் புகள், நீட் திணிப்பு, தமிழக வேளாண் மண்டலத்தை நஞ்சாக்கும் நடுவண் அரசின் திட்டங்கள், காவிரி நீர் பிரச்சினையில் பா.ஜ.க. ஆட்சியின் துரோகம் ஆகியவற்றை விளக்கி மக்களிடம் பேசியபோது மக்கள் பெரிதும் வரவேற்றனர். உரிமை முழக்க ஊர்திப் பேரணி குறித்த செய்திகளின் தொகுப்பு: டி           பேரணியில் 65 தோழர்கள்...

‘பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி’  உரிமை முழக்க ஊர்திப் பேரணிக்கு உற்சாக வரவேற்பு

‘பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி’ உரிமை முழக்க ஊர்திப் பேரணிக்கு உற்சாக வரவேற்பு

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய உரிமை முழக்க ஊர்திப் பேரணியின் பரப்புரை குறித்த ஓர் தொகுப்பு: 9.5.2018 காலை 12 மணியளவில் ஈரோடு பெரியார் நினைவு இல்லம் அருகில் பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி – உரிமை முழக்க ஊர்திப் பேரணி ஆரம்பமானது. மதியம் 2 மணிக்கு பவானியில் பயண நோக்கம் குறித்து நாமக்கல் மாவட்ட தலைவர் மு.சாமிநாதன் பேசினார். அம்மாபேட்டையில் 3 மணியளவில் மாவட்டத் தலைவர் நாத்திக சோதி, பாட்டாளி மக்கள் கட்சி வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, கழக ஒன்றிய செயலாளர் வேல் முருகன், வழக்கறிஞர் பிரகாஷ், திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் பிரகலாதன், மணிகண்டன் (தி.க.), மகாலிங்கம் (தி.க.), வை. இராமன் (தமிழ்நாடு அறிவியல் மன்றம்), செல்வராஜ் (தமிழ்நாடு அறிவியல் மன்றம்) உரையாற்றினர். மேட்டூர் காவேரி கிராஸ் பகுதியில் 3 மணிக்கு பறை முழக்கத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. 3.30 மணிக்கு மேட்டூர் நகர தி.வி.க. சார்பில் உணவு ஏற்பாடு...

தருமபுரி மாவட்ட கலந்துரையாடல்

தருமபுரி மாவட்ட கலந்துரையாடல்

தருமபுரி மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 24.4.2018 அன்று நடைபெற்றது. ஈரோடு புதிய கிளைகளுக்கான பொறுப்பாளர்கள் மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பிரச்சாரச் செயலாளர் பிரபாகரன் முன்னிலையிலும் தேர்வு செய்யப்பட்டனர். வரும் மே – 9. முதல் 12 வரை நடைபெறும் ஊர்தி பரப்புரைப் பேரணிக்கு சிறப்பாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது,  பெரியார் முழக்கம், நிமிர்வோம் இதழ்கள் சந்தா சேர்ப்பது; மாதம் ஒரு முறை தோழர்கள் சந்தித்து கலந்துரையாடல் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. 25 தோழர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் கீழ்கண்ட புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்: பாப்பிரெட்டிப்பட்டி – சிவக்குமார், அரூர் – பெருமாள், தர்மபுரி – சுதந்திர குமார், பென்னாகரம் – நஞ்சப்பன், காரிமங்கலம் – செந்தில், நல்லம்பள்ளி – இராமதாசு, மாவட்ட மகளிரணி – பரிமளா, மாவட்ட அறிவியல் மன்றம் – வையாபுரி  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பெரியார் முழக்கம் 03052018 இதழ்

தருமபுரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் ! 24042018

தருமபுரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் ! 24042018

தருமபுரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் ! புதிய கிளை பொறுப்பாளர்கள். மாநில அமைப்பு செயலாளர், பிரச்சாரச் செயலாளர் முன்னிலையிலும் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது, வரும் மே – 9. முதல் 12 வரை நடைபெறும் திராவிடர் ரதம், பெரியார், அம்பேத்கார் கைத்தடி, கண்ணாடி ஊர்வலம் சிறப்பாக வரவேற்பு கொடுத்து தோழர்களும் கலந்து கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது, பெரியார் முழக்கம், நிமிர்வோம் இதழ்கள் சந்தா சேர்த்து அனுப்புவது,மாதம் ஒரு முறை தோழர்கள் சந்தித்து இயக்க வளர்ச்சி கலந்துரையாடல் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.கலந்துரையாடல் கூட்டத்தில் 25 தோழர்கள் கலந்து கொண்டனர்

தமிழர் இன உரிமை மீட்பு பரப்புரை பயணம் – தர்மபுரி

தமிழர் இன உரிமை மீட்பு பரப்புரை பயணம் – தர்மபுரி

தமிழர் இன உரிமை மீட்பு பரப்புரை பயணம் – தர்மபுரி. 22.03.18 பயணக் குழு காலை தீர்த்தமலை பகுதியில் முதல் நிகழ்வாக 10.30 மணிக்கு தோழர் பெருமாள் அவர்கள் துவக்கவுரையுடன் தொடங்கி மாநில செயற்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் சிறப்புரையாக இழந்து வரும் உரிமைகளையும் அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் விரிவாக உரைக்கு பின் நன்றியுரையுடன் முடிந்தது மதியம் 12.30 மணிக்கு சங்கிலி வாடியில் தோழர் பெருமாள் தொடக்கவுரைக்கு பின்மாநில செயற்கு உறுப்பினர் தோழர் விழுப்புரம் அய்யனர் அவர்கள் விரிவாக மக்களை பாதிக்கும் திட்டங்களை விளக்கியுரையாற்றினார்கள் பின் தோழர் பெருமாள், மனோகர் இருவரின் குடும்பத்தினர்களுடன் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்கள், நன்றியுடன்முடித்தது. மதியம் 1.30 க்கு GH கூட்டு ரோடு பகுதியில் தோழர் சந்தோஸ்குமார்தொடங்கி வைத்து உரையற்றினார் பின் சூலூர் பன்னீர்செல்வம், அடுத்து மடத்துக்குளம் மோகன்அந்த பகுதி மக்கள் வாழ்வியலையும் இன்றைய அரசுகளால் ஏற்பட்டு இன்னல்களையும் விரிவாக எடுத்துரைத்தார்கள் 3.00...

தமிழர் இன உரிமை மீட்பு பரப்புரை பயணம் – தர்மபுரி 21032018

தமிழர் இன உரிமை மீட்பு பரப்புரை பயணம் – தர்மபுரி 21032018

தமிழர் இன உரிமை மீட்பு பரப்புரை பயணம் – தர்மபுரி. (21.03.2018) தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற தமிழர் இன உரிமை மீட்பு பரப்புரை பயணம் ! நல்லம்பள்ளி பேருந்து நிலையத்தில் மதியம் 12.30 மணிக்கு தொடங்கி சந்தோஸ் குமார்.மடத்துக்குளம் மோகன். கரைக்குடி முத்து உரைக்கு பின் அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி அவர்கள் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும். ஹைட்ரோகார்ப்பன். மீதேன். TNPSC தேர்வு நிலைபாடுகள் போன்றனவகளை விரிவாக உரையாற்றினர் இறுதியாக மாவட்ட செயலாளர் பரமசிவம் நன்றியுரையுடன் முடிந்து. அடுத்து 3.30 மணிக்கு தருமபுரி பூங்கா அருகில் உள்ள பிரபாகரன் சர் கிள் பகுதியில் மாவட்ட தலைவர் வேணுகோபல் தலைமையில் தொடங்கி திமுக தோழர் பச்சியப்பன்.ஆரூர் பகுதி தி வி க தோழர் பெருமாள் அவர்கள் இன்றைய இளைஞர்களின் கல்வி வேலைவாய்ப்பு எவ்வாறு எல்லாம் பதிக்கப்பட்டு உள்ளது TNPSC தேர்வில் வெளி மாநிலத்தவர்களை ‘ தவிர்க கோரியும் விரிவாக உரையாற்றிய...

தருமபுரியில் கழகப் பரப்புரைப் பயணம்

தருமபுரியில் கழகப் பரப்புரைப் பயணம்

20.03.2018 காலை 10.30 மணிக்கு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பரப்புரைப் பயணம் பென்னாகரம் பேருந்து நிலையத்தில் ஜிரிஸி இசைக் குழுவின் பறை முழக்கத்துடன் துவங்கியது. நிகழ்வின் நோக்கத்தைத் தொடக்க வுரையாக மாவட்ட அமைப்பாளர் சந்தோசுக்குமார் விளக்கினார். அடுத்து மடத்துக்குளம் மோகன் மந்திரமல்ல. தந்திரமே என்று அறிவியல் விளக்க  நிகழ்ச்சியுடன் பல்வேறு கருத்துகளை தொகுத்து வழங்கினார். கல்வி வேலை வாய்ப்பில் பறி போகும் உரிமைகள் பற்றி ஆரூர் பெருமாள் உரையாற்றினார். அடுத்து பொருளாளர் திருப்பூர் துரைசாமி – விவசாயிகளின் பறிபோகும் உரிமைகள் பற்றிய உரைக்குப் பின் தருமபுரி மாவட்ட செயலாளர் நன்றியுரையுடன் நிறைவு பெற்றது. மதிய உணவு சந்தோசு குமாரின் தொழிலகத்தில் வழங்கப் பட்டது. பி.அக்ரகாரம் பகுதியில்  சந்தோஸ் குமார் (மாவட்ட அமைப்பாளர்) தொடக்கவுரையாற்றினார். கொளத் தூர் பகுதி மாணவர் அமைப்பாளர் சந்தோஸ் கல்வி வேலை வாய்ப்புகள் பற்றி உரையாற்றினார், ஆருர் பெருமாள் உரையைத் தொடர்ந்து, இறுதியாக காரைக்குடி முத்து விரிவாக...

மக்கள் கண்காணிப்பகம் நடத்திய பொது உரையாடல் தருமபுரி 07042017

செம்மரக் கடத்தல் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரால், ஆந்திர காவல், வனத்துறை அதிகாரிகளால் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டு, ஆந்திர வனப்பகுதிக்குள் கொண்டு சென்று 20 அப்பாவிக் கூலித் தொழிலாளர்கள் 06042015 அன்று சுட்டுக் கொள்ளப்பட்டனர். அவர்களது இரண்டாம் ஆண்டு நினைவாய் 07042017 அன்று மாலை, தருமபுரி வள்ளலார் திடலில் மதுரை மக்கள் கண்காணிப்பகம் மற்றும் மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் பல்வேறு அமைப்பு, கட்சித் தலைவர்களை ஒருங்கிணைத்து பொது உரையாடல் நடைபெற்றது. கலை நிகழ்வுகளுடன் தொடங்கிய அந்நிகழ்வில் மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குநர் வழக்கறிஞர் ஹென்றி திபேன் தேசிய மனித உரிமை ஆணையத்தின் ஆணைகள், திருப்பதி, ஆந்திர உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் நடந்துகொண்டுள்ள வழக்கின் நிலவரம், தேவைப்படும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக உரையாற்றினார். அந்நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், ம.தி.மு.க.வின் துணைப் பொதுச் செய்லாளர் மல்லை சத்யா,...

மக்கள் கண்காணிப்பகம் நடத்தும் “பொது விவாதம்”

மக்கள் கண்காணிப்பகம் நடத்தும் “பொது விவாதம்” நாள் : 07.04.2017. வெள்ளி. நேரம் : மாலை 6 மணி. இடம்: தர்மபுரி கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் மற்றும் தோழமை அமைப்பின் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 அன்று ஆந்திரமாநில செம்மரக்கட்டை தடுப்பு சிறப்பு அதிரடிப்படையினரால் கடத்தப்பட்டு சுட்டுபடுகொலை செய்யப்பட்ட அப்பாவி20 தமிழக கூலி தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான ஆதரவு மற்றும்பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் 20 தமிழர்கள் படுகொலையான வழக்கில் தமிழக அரசு தலையீடு செய்யக் கோரியும் புலம் பெயரும் தமிழக கூலிதொழிலாளர்களின் பாதுகாப்பைஉறுதிப்படுத்தக் கோரியும் 07.04.2017 தர்மபுரியில் பொதுஉரையாடல் நடைபெற உள்ளது.  

தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 09112016

திருப்பூர் துரைசாமி மாநில பொருளாளர் ரத்தினசாமி மாநில அமைப்புச் செயலாளர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது கலந்து கொண்டவர்கள் சூலூர் பன்னிர் செல்வம். தி.குமார் தலைவர் கிருட்டிணகிரி மாவட்டம் செயலாளர் காகுமார் அலேசீபம் இல்லத்தில் நடைபெற்றது துணைச் செயலாளர் ப வஞ்சிநாதன் சங்கர் அனுமந்தப்பா.இராஜேஷ் பிரபு மற்றும் 20 பேர் கலந்து கொண்டனர் டிசம்பர் 24 தஞ்சை நிகழ்வு கட்டமைவு நிதி . முழக்கம் சந்தா அமைப்பு செயல்பாடுகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது கா.குமார் நன்றி யுரை 2.00 முடிந்தது

20 தமிழர் படுகொலை வழக்கு: தமிழக அரசுக்கு கோரிக்கை 0

20 தமிழர் படுகொலை வழக்கு: தமிழக அரசுக்கு கோரிக்கை

தர்மபுரி செயலவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: செம்மரக் கடத்தல் தொடர்பாக -ஆந்திர காவல்துறை 20 தமிழர்களை கொடூரமாக சித்திரவதை செய்து சுட்டுக் கொன்ற வழக்கை, மத்திய புலனாய்வு நிறுவனம் (சி.பி.அய்.) விசாரிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் செய்த பரிந்துரைக்கு ஆந்திர காவல்துறை அம் மாநில உயர்நீதிமன்றத்தில் தடை வாங்கி விட்டது. வழக்கு விசாரணை முடங்கிப் போய் நிற்கும் நிலையில், தடையை நீக்கு வதற்கும், படுகொலை செய்யப்பட்ட தமிழர் களுக்கும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2000 அப்பாவித் தமிழர்களுக்கும் நீதி கிடைப்பதற்கும் தமிழக அரசு, அலட்சியம் காட்டாமல், இந்த வழக்கில், தன்னையும் ஒரு தரப்பினராக இணைத்துக் கொண்டு கடமையாற்ற வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது. கையெழுத்து இயக்கம் தீவிரமாகட்டும் ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசு இழைத்த இனப்படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கை தமிழகம் உள்ளிட்டு உலகம் முழுதும் வாழும் தமிழர்களால், மனித உரிமை அமைப்புகளால் வலியுறுத்தப்படுகிறது. எதிர்வரும் செப்டம்பர் மாதம், அய்.நா. மனித உரிமை அவையில் இது குறித்த விவாதம் வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அண்மையில் நீண்ட நெடுங்காலமாக போர்க்குற்றத்துக்கு உள்ளாகி வரம் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது...

தர்மபுரி மாவட்ட பெரியார் பிறந்தநாள் விழா

  தந்தை பெரியார் 137வது பிறந்தநாள் விழா 17.09.2015 தர்மபுரி மாவட்டத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் வேணுகோபால், செயலாளர் பரமசிவம், அமைப்பாளர் சந்தோஷ்குமார் மற்றும் நகர தலைவர் நாகராசன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து எழுச்சியுடன் பிறந்தநாளை கொண்டாடினார்கள்

0

தருமபுரி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

29-8-2015 அன்று காலை 11-00 மணிக்கு, பி.அக்ராகரம், சமுதாயக் கூடத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தருமபுரி மாவட்டக் கலந்துரையாடல் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழக மாவட்டக் கலந்துரையாடல்களின் இறுதிச் சுற்றுப்பயணம், தர்மபுரி மாவட்டத்திலிருந்து தொடங்கியது. பி. அக்ரகாரம் சமுதாயக்கூடத்தில் பகல் 11 மணியளவில் நடந்த கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, ‘கடவுள் ஆத்மா மறுப்பு’ கூறி அறிமுக உரையாற்றினார். கழகத் தோழர்கள் வெ.வேணுகோபால், எம். அசோக்குமார், ம. பரமசிவம்,பேராசிரியர் சீனிவாசன், கு. நாகராஜன், ஆசிரியர் வையாபுரி,சந்தோஷ்குமார், செந்தில்குமார், எம். இராமதாஸ், சுதந்திரகுமார், நதியா தேவி,மு.ஜோதி, நடராஜன், நதிவர்மா ஆகியோர் கருத்துகளைத் தெரிவித்தனர். தெருமுனைக் கூட்டங்களை நடத்த வேண்டும்; கல்லூரி, பள்ளிகள் முன்மாணவர்களிடையே கொள்கை விளக்க துண்டறிக்கைகளை வழங்க வேண்டும்என்ற கருத்துகளை முன் வைத்த தோழர்கள், பா.ம.க. வளர்த்து விடும் ஜாதி வெறி ஆபத்துகளையும் சுட்டிக் காட்டினர். கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமிஉரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் நிறைவுரையாற்றி, பொறுப்பாளர்களை அறிவித்தார். பெரியார்...

எழுச்சியுடன் நடந்த தர்மபுரி கழக செயலவை 0

எழுச்சியுடன் நடந்த தர்மபுரி கழக செயலவை

திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம் 19.7.2015 காலை 11 மணியளவில் தர்மபுரி பெரியார் மன்றத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நடந்தது.கழகத் தோழர் கிணத்துக்கடவு நிர்மல் குமார்,கடவுள்,ஆன்மா மறுப்பு கூற, மாவட்டக் கழக சார்பில் நிகழ்ச்சிக்கு பொறுப்பேற்று ஏற்பாடுகளை செய்த பரமசிவம் வரவேற்புரையாற்றினார். சென்னை மாவட்டக் கழகத் தோழர் சரவணன்,நெல்லை மாவட்டத் தலைவர் குறும்பலபேரிசு. வடிவேலு (3.11.2014), தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் க.மதன் (16.4.2015), மதுரை கைவண்டி கருப்பு, கழக ஓவியர் மேட்டூர் சாதகப் பறவை சேகர், கரூர் இராஜா ஆகியோர் மறைவுக்கு ஒரு நிமிடம் மவுனம் காத்து இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், செயலவை முன் விவாதிக்க வேண்டிய பிரச்சினைகள், கழக செயல் பாடுகளை விளக்கி தொடக்க உரையாற்றினார்.பின்னர், மாவட்ட வாரியாக தோழர்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். ஈரோடு வடக்கு – நாத்திக ஜோதி, ஈரோடு தெற்கு – சண்முகபிரியன், சேலம்...

0

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநில செயலவைக்கூட்டம்

கழகத்தின் செயலவைக்கூட்டம் 19.07.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணிக்கு தருமபுரி,பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையிலும்,கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை இராஜேந்திரன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. ஆரம்ப உரை நிகழ்த்திய கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை இராஜேந்திரன் அவர்கள் தோழர்கள் பேசவேண்டிய கருத்துக்கள்,இயக்கத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து பேசினார். தொடர்ந்து கழகத்தின் எதிர்காலத் திட்டங்கள்.பயிற்சி வகுப்புகள்,செயல்திட்டங்கள்,கழக அமைப்பு முறைகள் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மாவட்ட பொறுப்பாளர்கள் தங்கள் கருத்துக்களை செயலவையின் முன் வைத்தனர். மேலும் அச்செயலவையில் தனியார் துறை இடஒதுக்கீடு,எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம் பயண நோக்கங்களை ஒருங்கிணைத்த பரப்புரை பயணத்தை மேற்கொள்ள – தங்கள் மாவட்டத்தின் பகுதி /ஒன்றிய,கிளைக்கழகங்களுடன் விவாதித்து எடுக்கப்பட்ட முடிவுகளையும், எந்தெந்த பாதை வழியாக பயணம் மேற்கொள்வது,எங்கெங்கு தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது என்கிற முன்மொழிவுகளையும் தோழர்கள் எடுத்துரைத்தனர். இறுதியில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் செயலவையில்...

0

திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலவவைக் கூட்டம்

”திராவிடர் விடுதலைக் கழக தோழர்களுக்கு கழக தலைமையின் அறிவிப்பு” அன்பு தோழர்களுக்கு, வணக்கம், எதிர்வரும் 19.07.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணிக்கு தருமபுரி,பெரியார் மன்றத்தில் (பெரியார் சிலை அருகில்) திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலவவைக் கூட்டம் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமையிலும்,கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை இராஜேந்திரன் முன்னிலையிலும் நடைபெற உள்ளது. அதில் கழகத்தின் எதிர்காலத் திட்டங்கள்.பயிற்சி வகுப்புகள்,செயல்திட்டங்கள்,கழக அமைப்பு முறைகள் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்க குறித்த நேரத்தில் தவறாது வருமாறு தோழமையுடன் அழைக்கிறோம். மேலும் அச்செயலவையில் தனியார் துறை இடஒதுக்கீடு,எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம் பயண நோக்கங்களை ஒருங்கிணைத்த பரப்புரை பயணத்தை மேற்கொள்ள – தங்கள் மாவட்டத்தின் பகுதி /ஒன்றிய,கிளைக்கழகங்களுடன் விவாதித்து எந்தெந்த பாதை வழியாக பயணம் மேற்கொள்வது,எங்கெங்கு தெருமுனைக்கூட்டங்கள் நடத்துவது என்கிற முன்மொழிவுகளுடன் வருமாறும் வேண்டுகிறோம். – கையொப்பம்- கொளத்தூர் மணி, (தலைவர்) விடுதலை ராசேந்திரன்,(பொதுச்செயலாளர்)