இறுதி நிகழ்வுகளை முன்னின்று நடத்தும் பெண்கள்! மரபை உடைக்கும் கழகப் பெண்களுக்கு பாராட்டு
ஆரம்பத்தில், பெண் தோழர்கள் யாரேனும் இறக்கும் சூழலில், பெண் தோழர்களே அந்தச் சடலத்தை தூக்கிச் செல்வது என்று செயல்படுத்தினோம். இறந்தவருக்கு பெண் பிள்ளை இருந்தால், அவரைக் கொள்ளி வைக்கச் செய்தோம் ‘ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் சம உரிமை பெற, கல்வியே அடிப்படை’ என்று முழங்கிய பெரியார், பாலின பேதம் கடக்க வலியுறுத்திய கொள்கைகள், முன்னெடுப்புகள் பற்பல. அதையடுத்து, ஆணுக்கு இணையாக அனைத்திலும் தங்களின் உரிமைகளைத் தொடர்ந்து கைப்பற்றி வருகின்றனர், பெண்கள். என்றாலும், இன்றளவும் அவர்களால் அதிகம் பங்கு இயலாத ஒன்றாக இருந்து வருவது… வாழ்வின் வழியனுப்பலுக்கான இறுதி மரியாதை நிகழ்வுகள்தான். இன்றும் ஆண்கள் மட்டுமே பெரும்பாலும் அதில் புழங்குகிறார்கள். பெண்கள் தரப்பிலிருந்து, ‘நாங்களும் செய்தால் என்ன?’ என்ற கேள்வியே உரக்க எழுப்பப்படவில்லை. இத்தகைய சமூகச் சூழலில்தான் அதி முக்கியத்துவம் பெறுகிறது, கொளத்தூரில் பெண்கள் குழு ஒன்று செய்து வரும் இறுதி மரியாதை நிகழ்வுகள் நடைமுறை. சேலம் மாவட்டம், கொளத்தூர் கிராமத்தில், பெரியாரின்...