வாக்குறுதிகளை நிறைவேற்றியது திமுகவா? அஇஅதிமுகவா?
அதிமுக நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் திமுக நிறைவேற்றிய வாக்குறுதிகள் ஒரு ஒப்பீடு. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்கின்ற பொழுது மடிக்கணினி திட்டம் நிறுத்தப்பட்டது., 2018- 2019-லேயே மாணவர்கள் போராடினார்கள். மதுரையில் லேப்டாப்பை கொடுங்க, அந்த அம்மா கொடுத்தார்கள் நீங்க கொடுங்க என்று கேட்டார்கள். வழங்கவில்லை. திமுக அரசு வழங்கியது. 20 இலட்சம் மாணவர்களுக்கு வழங்கியது. 5 ஆண்டுகளில் 2016 -2021 வரைக்கு எந்த அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிமுக ஆட்சி குறைக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆவின் பால் விலையில் லிட்டருக்கு 3 ரூவாயும், பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 3 ரூபாயும் குறைத்தது திராவிட மாடல் அரசு. தேவைக்கேற்ப சிறுபான்மையிருக்கான விடுதிகள் துவக்கப்படும். அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியது தொடங்கினார்களா! இல்லை. தற்போது திமுக அரசு ஹ்ஜ் பயணிகளுக்கான விடுதிக்கு அடிக்கல் நாட்டி பணிகள் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு விடுதிகள் கொண்டுவரப்படும் என்றது அதிமுக தேர்தல் அறிகை சொன்னார்கள்....
