Category: ஈரோடு வடக்கு

பெரியார் பிறந்தநாள் : கழகத் தோழர்கள் எழுச்சி

பெரியார் பிறந்தநாள் : கழகத் தோழர்கள் எழுச்சி

சேலம் மேற்கு: சேலம் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 146 வது பிறந்தநாள் விழா எழுச்சியுடன் நடைபெற்றது. மேட்டூர் டி.கே.ஆர் இசைக் குழுவின் பறை முழக்கத்தோடு தொடங்கிய இந்நிகழ்விற்கு மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார் தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக மேட்டூரில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்கள் சுதா, சரசுவதி, அறிவுமதி, தேன்மொழி, காயத்ரி ஆகியோர் மாலை அணிவித்தனர். பின்னர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தோழர்கள் அனைவரும் தந்தை பெரியாரின் சிலைக்கு மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மேட்டூர் நகரச் செயலாளர் குமரப்பா கொள்கை முழக்கங்களை எழுப்ப.. தொடர்ந்து தோழர்கள் கொள்கை முழக்கங்களை எழுப்பினர். அதன் பிறகு தோழர்கள் அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து இருசக்கர வாகனப் பேரணி சமத்துவபுரம் பெரியார் சிலையில் தொடங்கி நங்கவள்ளி, மேட்டூர் RS, மேட்டூர், கொளத்தூர், காவலாண்டியூரில் நிறைவுபெற்றது. நங்கவள்ளி...

ஒன்றிய அரசுக்கு எதிராகக் கழகம் போர் முழக்கம்

ஒன்றிய அரசுக்கு எதிராகக் கழகம் போர் முழக்கம்

கோவை: மாநில உரிமையைக் காப்போம்! கல்வி உரிமையை மீட்போம்! என்ற முழக்கத்துடன் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியைத் தடை செய்ய நினைக்கிற – பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து 12.9‌.2024 அன்று கோவை உக்கடம் வள்ளியம்மை பேக்கரி அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர அமைப்பாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநகரச் செயலாளர் வெங்கட் வரவேற்புரையாற்றினார். கழகத் தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், கோவை மாவட்டத் தமிழ்நாடு மாணவர் கழகப் பொறுப்பாளர் நவீன், திமுக மாணவரணிப் பொறுப்பாளர் மதிவாணன், மக்கள் அதிகாரம் பொறுப்பாளர் மூர்த்தி, பெண்ணிய செயற்பாட்டாளர் லோகநாயகி, மாநகரத் தலைவர் நிர்மல்குமார், CPIML ரெட்ஸ்டார் இனியவன், புரட்சிகர இளைஞர் முன்னணிப் பொறுப்பாளர் மலரவன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். நிறைவாக மாவட்ட அமைப்பாளர் சூலூர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார். முன்னதாக மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரிக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இதில்...

ஜாதி – குடி போதைக்கு எதிரானப் பரப்புரைக்குத் தயாராகும் கழகம்! மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்களில் பேரெழுச்சி!

ஜாதி – குடி போதைக்கு எதிரானப் பரப்புரைக்குத் தயாராகும் கழகம்! மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்களில் பேரெழுச்சி!

தர்மபுரி: தர்மபுரி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 07.08.2024 அன்று தர்மபுரி B.அக்ரகாரத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்துரையாடல் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கழகத்தின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகள் நடைபெற்றது. நிறைவாகக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தர்மபுரி மாவட்டத் தலைவராக வெ.வேணுகோபால், தர்மபுரி மாவட்டச் செயலாளராக கு.நாகராஜ், மாவட்ட அமைப்பாளராக மா.பரமசிவம், பென்னாகரம் ஒன்றிய அமைப்பாளராக இரா.சரவணன் (B.அக்ரஹாரம்), காரிமங்கலம் ஒன்றிய அமைப்பாளராக கோ.செந்தில்குமார், நல்லம்பள்ளி ஒன்றிய அமைப்பாளராக மு.இராமதாஸ், தர்மபுரி ஒன்றிய அமைப்பாளராக பி.முத்துலட்சுமி, அரூர் ஒன்றிய அமைப்பாளராக பெருமாள், ஏரியூர் ஒன்றிய அமைப்பாளராக மா.அசோக்குமார், தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப்பாளராக சா.வையாபுரி ஆகியோரை நியமனம் செய்தார். சேலம் கிழக்கு: சேலம் கிழக்கு மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 07.08.2024 அன்று மாலை 6 மணியளவில் கருப்பூரில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கடவுள் மறுப்பு வாசகத்துடன் தொடங்கிய இந்தக் கலந்துரையாடல் கூட்டத்தில்...

“பாண்டியாறு – மோயாறு” இயக்கத்தினர் தலைவருடன் சந்திப்பு

“பாண்டியாறு – மோயாறு” இயக்கத்தினர் தலைவருடன் சந்திப்பு

கோபி: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பளையத்திற்கு வருகைபுரிந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம், பாண்டியாறு – மோயாறு இணைப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் கழக முன்னோடியுமான அக்ரி அ.நே.ஆசைத்தம்பி சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் ஈரோடு, திருப்பூர், கரூர், கோவை ஆகிய 4 மாவட்டங்களில், உள்ள சுமார் ஒரு கோடி பொதுமக்களுக்கும், லட்சக்கணக்கான கால் நடைகளுக்கும், 5 இலட்சம் ஏக்கர் பயிர் சாகுபடிக்கும் பெரிதும் பயனளிக்கும் “பாண்டியாறு – மோயாறு” இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற கழகத்தின், ஆதரவு கோரியும், உரிய முன்னெடுப்புகள் மேற்கொள்ள வலியுறுத்தியும் கோரிக்கை மனுவினை வழங்கினார். இந்தச் சந்திப்பில் கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன், ஈரோடு வடக்கு மாவட்ட அமைப்பாளர் நிவாஸ், அருளானந்தம் ஆகியோர் உடனிருந்தனர். பெரியார் முழக்கம் 08.08.2024 இதழ்

ரூ.5,000 வளர்ச்சி நிதி

ரூ.5,000 வளர்ச்சி நிதி

கோபி : ஓய்வுபெற்ற வேளாண் இயக்குநரும், கழக முன்னோடியுமான ஆசைத்தம்பி – கற்பகம் இணையரின் மகளான தமிழ்ப்பாவை – அருண் இணையருக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. இதனையொட்டி 28.07.2024 அன்று கோபியில் உள்ள அவரது இல்லத்திற்குக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நேரில் சென்று வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். குழந்தை பிறந்ததன் மகிழ்வாக கழக ஏடான புரட்சிப் பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக ரூ. 5000/-யைக் கழகத் தலைவரிடம் வழங்கினார்கள். பெரியார் முழக்கம் 01.08.2024 இதழ்

தோழர் விசு படத்திறப்பு; தலைவர் பங்கேற்பு

தோழர் விசு படத்திறப்பு; தலைவர் பங்கேற்பு

பெருந்துறை ஒன்றிய திவிக செயலாளர் தோழர் விசு அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு 23.05.2024 அன்று, மேட்டுப்புதூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன் தலைமை தாங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விசுவின் படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். பெரியார் முழக்கம் 30.05.2024 இதழ்

சத்தியமங்கலத்தில் பெரியார் படிப்பகம் திறப்பு

சத்தியமங்கலத்தில் பெரியார் படிப்பகம் திறப்பு

ஈரோடு வடக்கு : தந்தை பெரியார் படிப்பகம் திறப்பு விழா 26.05.2024 சத்தி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. நிகழ்விற்கு வழக்கறிஞர் தமிழரசன் தலைமை தாங்கினார். சத்தி ஒன்றிய செயலாளர் சிதம்பரம் வரவேற்புரையாற்றினார். வழக்கறிஞர் செகதீஸ்வரன், மாவட்டத் தலைவர் நாத்திக சோதி, மாவட்ட அமைப்பாளர் கோபி நிவாசு, மாவட்டச் செயலாளர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தந்தை பெரியார் படிப்பகத்தை கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். நிறைவாக தமிழ்நாடு அறிவியல் மன்றத் தோழர் கிருட்டிணசாமி நன்றி கூறினார். இதில் கோபி, நம்பியூர், தூ.நா.பாளையம் மற்றும் சத்தி ஒன்றிய கழகத் தோழர்கள், பொதுமக்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 30.05.2024 இதழ்

விஜயமங்கலம் விசு முடிவெய்தினார்

விஜயமங்கலம் விசு முடிவெய்தினார்

ஈரோடு வடக்கு : கழக பெருந்துறை ஒன்றியச் செயலாளர் விஜயமங்கலம் விசு உடல்நலக்குறைவால் 11.05.2024 அன்று அவரது இல்லத்தில் காலமானார். மறைந்த தோழர் விசுவின் உடலுக்கு கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வகுமார், வடக்கு மாவட்ட அமைப்பாளர் நிவாஸ், இரமேசு மற்றும் கழகத் தோழர்கள் மரியாதை செலுத்தினர். பின்னர் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். குறிப்பு : விஜயமங்கலம் விசு அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வு 23.05.2024 அன்று காலை மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. இதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்று நினைவேந்தல் உரையாற்றுகிறார். பெரியார் முழக்கம் 16.05.2024 இதழ்

குருவரெட்டியூர் மகேஸ்வரி காலமானார் பெண்கள் முன்னின்று இறுதி நிகழ்வுகளை செய்தனர்

குருவரெட்டியூர் மகேஸ்வரி காலமானார் பெண்கள் முன்னின்று இறுதி நிகழ்வுகளை செய்தனர்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் குருவரெட்டியூர் தோழர் நாத்திகசோதி அவர்களின் இணையர் தோழர் மகேஸ்வரி அவர்கள் 13.03.2024 காலை மறைவுற்றார். அவரது கண்கள் ஈரோடு அரசன் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழக பெண் தோழர்கள் மறைந்த அம்மையாரின் உடலை சுமந்து சென்று இறுதி ஊர்வலத்தை தலைமை ஏற்று நடத்தினர். இறந்தவர்களின் உடலை பெண்கள் சுமக்க கூடாது, சுடுகாடு வரை பெண்கள் வர கூடாது என்ற மூடத்தனத்தை மறுத்து. மத, ஜாதிய சடங்குகளை மறுத்து பெண்களே முன்னின்று இறுதி நிகழ்வுகளை நடத்தினர். இந்நிகழ்வு குருவரெட்டியூர் பகுதி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. இறுதி நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி மற்றும் திராவிடர் கழக, திராவிடர் விடுதலைக் கழக, மாநில மாவட்ட நிர்வாகிகள், தோழர்கள் கலந்து கொண்டனர். தொடர்ச்சியாக மறைந்த தோழர் மகேஸ்வரி அவர்களின் பட திறப்பும் நினைவேந்தல்...

பெரியார் நினைவுநாள்; கழகத்தின் சார்பில் மரியாதை

பெரியார் நினைவுநாள்; கழகத்தின் சார்பில் மரியாதை

தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு கழக சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அது பின்வருமாறு:- சென்னை : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை மாவட்டக் கழக சார்பில்  இராயப்பேட்டை, சிம்சன், எம்ஜிஆர் நகர், தியாகராயர் நகர், மயிலாப்பூர், கலைஞர் கருணாநிதி நகர், நங்கநல்லூர், பிவி நகர், சேத்துப்பட்டு உள்ளிட்ட இடங்களில் கழகம் சார்பில் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது.   இந்நிகழ்வில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமார் மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், பகுதிக் கழக பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். கோவை : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு கோவை மாவட்டக் கழக சார்பில் காந்திபுரம் பெரியார் சிலைக்கு கழகத் தோழர் கண்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை...

கழக வெளியீடுகளுக்கு ரூ.3 லட்சம் நன்கொடை ; கோபி இராம.இளங்கோவன் வழங்கினார்

கழக வெளியீடுகளுக்கு ரூ.3 லட்சம் நன்கொடை ; கோபி இராம.இளங்கோவன் வழங்கினார்

ஈரோடு வடக்கு மாவட்டக் கழகம் சார்பில் பெரியாரின் 50-வது நினைவு நாள் பொதுக்கூட்டம், 24.12.2023 அன்று மாலை 6.00 மணிக்கு குருவரெட்டியூர் பெரியார் திடல், தோழர் பிரகலாதன் நினைவரங்கில் சிறப்பாக நடைபெற்றது. ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திகசோதி கூட்டத்திற்கு தலைமை வகிக்க, வேல்முருகன் வரவேற்புரையாற்றினார். மறைந்த தோழர் பிரகலாதன் படத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார். நிகழ்வின் தொடக்கத்தில் கோபி யாழ் திலீபன், அறிவுக்கனல் ஆகியோர் பாடல்கள் பாடினர். தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமிக்கு அடுத்ததாகப் பேசிய, கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், திராவிடம் – சனாதனம் குறித்து உரையாற்றினார். அப்போது, தோழர்கள் கழக வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்ய முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொண்ட இராம. இளங்கோவன், அதற்கு முன்னுதாரணமாக கழக நூல் வெளியீட்டு திட்டங்களுக்காக தனது தனிப்பட்ட நிதியாக ரூ. 3,00,000. (மூன்று இலட்சம் ) வழங்குவதாக அறிவித்து, தலைவர் கொளத்தூர்...

நம்பியூரில் சனாதன மோசடிகள் விளக்கம்

நம்பியூரில் சனாதன மோசடிகள் விளக்கம்

ஈரோடு வடக்கு : ஈரோடு வடக்கு மாவட்டக் கழக சார்பாக  03.12.2023  ஞாயிறு மாலை 04.30 மணியளவில் நம்பியூர் அஞ்சானூர் சமத்துவபுரத்தில் எது திராவிடம்? எது சனாதனம்? தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. கூடக்கரை கலைச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்டக் கழக அமைப்பாளர் கோபி நிவாசு, நம்பியூர் ரமேசு ஆகியோர் தொடக்க  உரையாற்றினார். தொடர்ந்து தலைமைக் கழக பேச்சாளர் கா.சு.வேலுச்சாமி, கழகப் பொருளாளர் துரைசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். அடுத்தக் கூட்டம் கூடக்கரையில் மாலை 6 மணியளவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கூடக்கரை பகுதி திமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுப்பு (எ) சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தொடர்ந்து கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன் நிறைவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எலத்தூர் செல்வக்குமார், கோபி அருளானந்தம், சத்தி முத்து, சித்தா பழனிச்சாமி, சின்னதம்பி, நம்பியூர் ஒன்றியச் செயலாளர் இரமேஷ், சிவராஜ், கூடக்கரை செல்வன், வழக்குரைஞர் தமிழரசன், பன்னீர் செல்வம், இராவணன், ராஜன் பாபு, குட்டி, புலவன்சிறை நடராஜன்,...

இந்தியா கூட்டணியை ஆதரித்து கோபியில் பரப்புரை

இந்தியா கூட்டணியை ஆதரித்து கோபியில் பரப்புரை

ஈரோடு வடக்கு மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 28.01.2024 அன்று கோபி நாகப்பன் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோபி ஈசுவரமூர்த்தி தலைமை தாங்கினார். கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன் முன்னிலை வகித்தார். திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு மற்றும் மேட்டூர் ராஜா அகியோரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புரட்சிப் பெரியார் முழக்கம் சந்தாவை விரைந்து அனுப்புவது, பரப்புரைக் கூட்டங்கள் நடத்துவது, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திராவிடர் விடுதலைக் கழகம் I.N.D.I.A கூட்டணியை ஆதரிக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. மாவட்ட செயல்பாடுகளுக்கு கட்டுப்படாமல் தொடர்ந்து செயல்பட்டு வந்ததால் சதுமுகை பழனிச்சாமி கழகத்தின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார் என்பது தோழர்கள் அனைவரின் ஒப்புதலோடு முடிவு செய்யப்பட்டது. கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன், மாவட்டத் தலைவர் நாத்திகஜோதி, மாவட்ட அமைப்பாளர் கோபி நிவாசு, மாவட்டச் செயலாளர் எலத்தூர் செல்வகுமார், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்...

‘தினமலம்’ பார்ப்பன ஏட்டுக்கு தீ!

‘தினமலம்’ பார்ப்பன ஏட்டுக்கு தீ!

காலை சிற்றுண்டி வழங்குவதன் காரணமாக பள்ளிக் கழிவறைகள் நிரம்பி வழிகின்றன என்ற வர்ணாசிரம திமிரோடு தலைப்பு செய்தி வெளியிட்ட தினமலம் நாளேட்டை கழகத் தோழர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். சென்னை : பள்ளி மாணவர்களுக்கு “காலை சிற்றுண்டி” திட்டத்தை இழிவுபடுத்தி செய்தி வெளியிட்ட சனாதன வெறி பிடித்த தினமலரை கண்டித்து தினமலம் நாளிதழ் எரிப்பு போராட்டம் இன்று 01.09.2023 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் தினமலம் நாளேடு அலுவலகம் அருகே இராயப்பேட்டை மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் போராட்டத்திற்கு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தினமலம் நாளிதழை தீயிட்டு கொளுத்தி தினமலம் நிர்வாகத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்க வளர்மதி, தமிழ்நாடு மாணவர் கழக இரண்யா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிறைவுரையாற்றினார். கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கரு.அண்ணாமலை, சேத்துப்பட்டு இராசேந்திரன், மயிலை...

சென்னை, கோவை, ஈரோடு மாவட்டங்களில் தொடர் கூட்டங்கள் திண்டுக்கல் 40 கூட்டங்களை நிறைவு செய்தது

சென்னை, கோவை, ஈரோடு மாவட்டங்களில் தொடர் கூட்டங்கள் திண்டுக்கல் 40 கூட்டங்களை நிறைவு செய்தது

சென்னை : சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பாக 21.08.2023 திங்கள் மாலை 5 மணிக்கு கோடம்பாக்கம் மார்கெட் அருகிலும், மாலை 7 மணிக்கு தர்மாபுரம் மாரியம்மன் கோவில் அருகிலும், 23.08.2023 செவ்வாய் மாலை 5 மணிக்கு, மடுவாங்கரை புதியத் தெருவிலும் இரவு 7:30 மணிக்கு, பழைய பூந்தமல்லி சாலை, கங்கை அம்மன் கோவில் அருகிலும், 23.08.2023 புதன்கிழமை மாலை 5 மணிக்கு ஜாபர்கான்பேட்டை, கங்கையம்மன் கோயில் அருகிலும், மாலை 7 மணி ஜோன்ஸ் சாலை சாரதி நகர் சந்திப்பிலும், 24.08.2023 வியாழன் அன்று மாலை 5.30 மணிக்கு ஜோன்ஸ் சாலை கூத்தாடும் பிள்ளையார் கோயில் தெருவிலும், மாலை 7.30 மணிக்கு சைதாப்பேட்டை, குயவர் வீதியிலும், 25/08/2023 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு சைதாப்பேட்டை கலைஞர் பொன்விழா வளைவு அருகிலும், மாலை 7.30 மணிக்கு அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகிலும், 26.08.2023 சனிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையிலும்,...

சனாதனம் தோலுரிப்பு : திராவிட மாடல் சாதனை விளக்கம் தெருமுனைக் கூட்டங்களுக்கு பேராதரவு!

சனாதனம் தோலுரிப்பு : திராவிட மாடல் சாதனை விளக்கம் தெருமுனைக் கூட்டங்களுக்கு பேராதரவு!

எது சனாதனம்? எது திராவிடம்? தெருமுனைக் கூட்டங்கள் சென்னை மாவட்டக் கழகம் சார்பாக இரண்டாவது வாரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அது பின்வருமாறு :- ஜுலை 15-ஆம் தேதியன்று ராயப்பேட்டை இலாயிட்ஸ் காலனி மற்றும் வி.எம்.தெருவிலும், ஜுலை 17-ஆம் தேதியன்று இராயபேட்டை பகுதிகளில் உள்ள கொலைகாரப்பேட்டை மற்றும் ராயப்பேட்டை பெருமாள் கோயில் வீதியிலும், ஜுலை 18-ஆம் தேதியன்று ஐஸ் ஹவுஸ் NKT பள்ளி அருகில் மற்றும் திருவல்லிக்கேணி பி.வி.நாயக்கன் சாலையிலும், ஜுலை 19-ஆம் தேதியன்று ஐஸ் ஹவுஸ் இஸ்ஸபா தெரு மற்றும் ஷேக் தாவூத் தெருவிலும் ஜூலை 20-ஆம் தேதியன்று மீசார்பேட்டை மார்கெட் மற்றும் ஜாம் பஜார் சிட்டிபாபு சாலையிலும், ஜுலை 21-ஆம் தேதியன்று திருவல்லிக்கேணி மாணிக்கவாசகம் தெரு மற்றும் தேவராஜ் தெருவிலும் ஜுலை 22-ஆம் தேதியன்று ஆயிரம் விளக்கு மாடர்ன் பள்ளி அருகில் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை அருகிலுள்ள மக்கிஸ் கார்டனிலும் நடைபெற்றது. நாத்திகன் – உமாபதி குழுவின் அரசியல்...

ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பில் 1 லட்சம் மாநாட்டு நிதி!

ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பில் 1 லட்சம் மாநாட்டு நிதி!

முதல் தவணையாக கழகத் தலைவரிடம் வழங்கினார்கள் ஈரோடு வடக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக வருகின்ற  ஏப்ரல் 29, 30 சேலத்தில் நடைபெறும் இது தமிழ்நாடு! இளைய தலைமுறை யின் எச்சரிக்கை மாநாட்டிற்காக கழகத் தோழர்கள் ஈரோடு வடக்கு மாவட்டத் திற்கு உட்பட்ட கோபி, கொளப்பலூர், காசிபாளையம், அளுக்குளி, அந்தியூர், குருவரெட்டியூர், பவானி ஆகிய பகுதிகளில் கழக ஆதராவாளர்களிடம் துண்டறிக்கை அளித்தல் மற்றும் நன்கொடை திரட்டும் பணிகளில் சிறப்பாக செயல்பட்டனர்.  மாநில வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன் தலைமையில் மாவட்ட தலைவர் நாத்திகசோதி, மாவட்ட செயலாளர் எலத்தூர் செல்வக்குமார் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இரமேசு, அழகிரி, கிருஷ்ணமூர்த்தி, இராவணன், அருளானந்தம், வேணுகோபால், வீரகார்த்திக், சுந்தரம், வினோத், வேலுச்சாமி, கருப்பணன், சுப்பிரமணியம், ரகுநாதன், மூர்த்தி, நிவாஸ் ஆகியோர் கலந்து கொண்டு நன்கொடை திரட்டும் பணியில் இணைந்து செயல்பட்டனர். அவ்வாறு நன்கொடையாக பெறப்பட்ட மாநாட்டு நிதியை முதல் தவணையாக ரூ. 1,00,000 (ஒரு லட்சம்...

கரைபுரளும் உற்சாகம்; விளிம்புநிலை மக்களின் எளிய நன்கொடைகள் முழு வீச்சில் மாநாட்டுப் பணிகள்

கரைபுரளும் உற்சாகம்; விளிம்புநிலை மக்களின் எளிய நன்கொடைகள் முழு வீச்சில் மாநாட்டுப் பணிகள்

ஏப். 29, 30 தேதிகளில் கழக மாநாட்டுப் பணிகளில் கழகச் செயல் வீரர்கள் முழு வீச்சில் களத்தில் இறங்கியுள்ளனர். கோவை : கோவை மாவட்டக் கழகத்தினர் ஏப்ரல் 8-ஆம் தேதி மாலை 5 மணியளவில் வ.உ.சி மைதானத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிச்செல்வன், மண்டலக்குழுத் தலைவர் கதிர்வேல், மாநகராட்சி கல்விக் குழுத் தலைவர் நா.மாலதி, கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.ஆ.ரவி, வடவள்ளி சண்முகசுந்தரம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளை சந்தித்து மாநாட்டு அழைப்பிதழை வழங்கினார்கள். கலந்து கொண்டோர்: தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், நிர்மல் குமார், கிருட்டிணன், வெங்கட், மாதவன் சங்கர், துளசி, நிலா. ஏப்ரல் 7-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் துண்டறிக்கை பரப்புரை நடைபெற்றது. பொள்ளாச்சி : கழக மாநாட்டு விளக்க தெருமுனைக்...

ஈரோட்டில் கழகப் பெண்கள் சந்திப்பு

ஈரோட்டில் கழகப் பெண்கள் சந்திப்பு

திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் மன்றம் இணைந்து நடத்திய “பெண்கள் சந்திப்பு” நிகழ்வு 5.2.2023 ஞாயிறு அன்று ஈரோடு பிரியாணிபாளையம் உணவக அரங்கில் நடைபெற்றது. ஈரோடு மணிமேகலை நிகழ்விற்கு தலைமையேற்று சுவையான கவிதை நடையில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். திருப்பூர் கார்த்திகா வரவேற்புரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தொடக்கவுரையாற்றினார். பெரியார் தனது இயக்கத்தில் பெண்களுக்கு அளித்த முக்கியத்துவம் பற்றியும் பெரியார் நடத்திய மாநாடுகளில் தொடக்க உரையாகவோ கொடியேற்றி தொடங்கி வைப்பவராகவோ கட்டாயம் ஒரு பெண் தோழர் இருக்கும் படி பார்த்துக் கொண்டார் என்பதையும் பெண்களின் பங்களிப்பு அதிகம் இருக்கும் இயக்கங்கள் தங்களது பணியை சிறப்பாக செய்ய முடியும் என்பதை வலியுறுத்தி பேசினார். தொடர்ந்து ‘அம்பேத்கரும் பெரியாரும்’ என்ற தலைப்பில் திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, ‘மூடநம்பிக்கைகளை முறியடிப்போம்’ என்ற தலைப்பில் சேலம் மாநகரச் செயலாளர் ஆனந்தி, ‘பெண் கல்வியும் தமிழ்நாடும்’ என்ற தலைப்பில் கொளத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர்...

மாவட்டக் கழகக் கலந்துரையாடல்கள் எழுச்சி நடை சேலம் மேற்கு, கிழக்கு மாவட்டங்கள், கழக ஏட்டுக்கு  ரூ. 2,48,500 சந்தாத் தொகை

மாவட்டக் கழகக் கலந்துரையாடல்கள் எழுச்சி நடை சேலம் மேற்கு, கிழக்கு மாவட்டங்கள், கழக ஏட்டுக்கு  ரூ. 2,48,500 சந்தாத் தொகை

சேலம் : சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் 05.01.2023 வியாழன் காலை 10.00 மணியளவில் கொளத்தூர் எஸ்.எஸ். மஹாலில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது.  கலந்துரையாடல் கூட்டம் கடவுள் மறுப்பு – ஆத்மா மறுப்புடன் தொடங்கியது. கூட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சி.கோவிந்தராஜ் வரவேற்புரையாற்றினார். அவர் தனது உரையில் சேலம் மேற்கு மாவட்டத்தில் 2023ஆம் ஆண்டிற்கான ‘புரட்சிப் பெரியார் முழக்க’ சந்தா இதுவரை 475 ஆண்டு சந்தாக்களும், 84 ஐந்தாண்டு சந்தாக்களும் பெறப்பட்டுள்ளது எனவும் மீதமுள்ள சந்தாக்களை விரைவில் முடித்து கொடுக்க வேண்டுமாய் தோழர்களிடம் கேட்டுக் கொண்டார். (கிழக்கு மாவட்ட சந்தாக்களையும் சேர்த்து ரூ.2,48,500/- வழங்கப்பட்டது) தொடர்ந்து பேசிய கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், “தமிழ்நாடு அரசு நமது இயக்க செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறதென்றும், தோழர்கள் அனைவரும் நமது இயக்க ஏடான (புரட்சிப் பெரியார் முழக்க’த்தை முழுமையாகப் படிக்க...

சத்தியில் அறிவியல் மன்ற கருத்தரங்கம்

சத்தியில் அறிவியல் மன்ற கருத்தரங்கம்

24.12.2022 சனிக்கிழமை அன்று  சத்தியமங்கலம் எஸ்.பி.சி. மகாலில் நடைபெற்ற பெரியார்-அம்பேத்கர் உருவாக்கிய சமூகப் புரட்சி கருத்தரங்கத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்பான முறையில் கருத்துரை வழங்கினார். இக்கருத்தரங்கத்திற்கு மு.தமிழரசன்  தலைமை தாங்கினார். கூட்டத்தில்  திராவிடர் விடுதலைக் கழக மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள், தோழமை அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சி தொடக்கத்தில் சத்தி முத்துவின் ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் மன்ற தோழர்கள் கே.எ.கிருஷ்ணசாமி,சதுமுகை பழனிசாமி, சித்தா பழனிசாமி மற்றும் சதுமுகை கனகராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக செந்தில்நாதன்  வழக்குரைஞர், தமிழ்நாடு அறிவியல் மன்ற தோழர்கள் சேகர், வேலுச்சாமி, வீரா. கார்த்தி, சுந்தரம், குப்புசாமி, சிவக்குமார் மற்றும் சரத் அருள்மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், தலைமைக் கழகப் பேச்சாளர் கா.சு.வேலுச்சாமி, மாவட்ட தலைவர் நாத்திக ஜோதி, சிவகாமி  (தலைவர், தமிழ்நாடு...

கழகம் முன்னெடுத்த சட்ட எரிப்பு நாள் நிகழ்வுகள் சென்னையில் கழகத் தலைவர் தலைமையில் உறுதி ஏற்பு

கழகம் முன்னெடுத்த சட்ட எரிப்பு நாள் நிகழ்வுகள் சென்னையில் கழகத் தலைவர் தலைமையில் உறுதி ஏற்பு

  திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் நவம்பர் 26 அன்று நடைபெற்ற சட்ட எரிப்பு நாள் பொதுக் கூட்டங்கள் வீர வணக்க நிகழ்வுகளின் தொகுப்பு. சென்னை : திராவிடர் இயக்கத்தின் மிக முக்கிய போராட்டமான ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை தோழர்கள் கொளுத்தி இந்திய ஒன்றியத்தை திரும்பி பார்க்க வைத்தப் போராட்டம் ‘சட்ட எரிப்புப் போராட்டம்’ ஆகும். இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில், பதாகைகள் சட்ட எரிப்பு போராளிகளை நினைவுகூரும் வகையிலும், வீரவணக்கம் செலுத்தும் வகையிலும் அமைக்கப்பட் டிருந்தது.  26.11.2022 அன்று காலை 8 மணியளவில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு  பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பின்பு சட்ட எரிப்பு நாள் குறித்து உரையாற்றினார். முன்னதாக, தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் தேன்மொழி  ‘ஜாதி ஒழிப்பு உறுதிமொழி’ வாசிக்க கழகத் தோழர்கள் உறுதியெடுத்தனர். ஜலகண்டாபுரம் : 26.11.2022 மாலை 6.00 மணியளவில் ஜலகண்டாபுரம் பேருந்து...

ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத்தின் “இல்லம் தேடி சந்திப்பு”

ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத்தின் “இல்லம் தேடி சந்திப்பு”

திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி தோழர்களின் ‘இல்லம் தேடி சந்திப்பு’ நிகழ்வின் முதல் நிகழ்வாக 30.10.2022 ஞாயிறு அன்று, கவுந்தாபாடி இளமதி செல்வம் வீட்டிற்கு தோழர்கள் சென்றனர். தோழர்களின் இல்லத்தில்  அவர்களது குடுபத்தினரோடு கலந்துரையாடல் நடைபெற்றது . அந்த பகுதியில் அமைப்பை கட்டமைப்பது, தோழர்களுக்கு அவர்களது வாழ்வியலில் பகுதியில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அனைவருக்கும்  அசைவ விருந்தினை தோழர் செல்வம் குடுபத்தினர் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர். இரண்டாவது வார நிகழ்வாக 6.11.2022 அன்று அந்தியூர் தமிழ்நாடு அறிவியல் மன்றப் பொறுப்பாளர் வீரா கார்த்திக் இல்லம் சென்றனர். தோழரின் குடும்ப அறிமுகத்திற்குப்  பின் அவர்களின் பணியிடங்களில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து, வருகின்ற மார்ச் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் ஒருங்கிணைந்த குடும்ப விழா நடத்துவது குறித்தும் கலந்துரையாடல் நடைபெறறது. கலந்து கொண்ட அனைவருக்கும் வீரா...

பிரகலாதன் முதலாம் ஆண்டு நினைவு நாள்

பிரகலாதன் முதலாம் ஆண்டு நினைவு நாள்

திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு வடக்கு மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் குருவரெட்டியூரில் பெரியாரின் பெருந் தொண்டர்  திராவிடர் கழக மண்டல செயலாளர் பிரகலாதன்  முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் நாத்திக ஜோதி  தலைமை உரை நிகழ்த்தினார். கழகத்தின் அம்மா பேட்டை ஒன்றிய செயலாளர் வேல்முருகன் வரவேற்பு கூறினார். தொடர்ந்து ஈரோடு வடக்கு மாவட்டத்தின் பிரச்சார அணியின் செயலாளர்  வேணுகோபால், மாநில செயற்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன், தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வேங்கை பொன்னுசாமி, தமிழர் இன உணர்வாளர் கூட்டமைப்பின் சார்பாக  பன்னீர்செல்வம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அம்மாபேட்டை ஒன்றிய பொறுப்பாளர் பெரியநாயகம், கழகத்தின் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழகத்தின் அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகத்தின் வெளியீட்டுச் செயலாளர்  இராம இளங்கோவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிறைவாக, கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரை யாற்றினார். நிகழ்வில்...

ஈரோடு வடக்கு மாவட்டக் கழக செயல் திட்டங்கள்

ஈரோடு வடக்கு மாவட்டக் கழக செயல் திட்டங்கள்

திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு வடக்கு மாவட்ட கழக மாதந்திர கலந்துரையாடல் கூட்டம்  16.10.2022 ஞாயிறு அன்று  கோபி நாகப்பன் இல்லத்தில் நடைபெற்றது.  நிகழ்விற்கு கழக வெளியீட்டுச் செயலாளர்  இராம. இளங்கோவன்  தலைமையேற்க,  அருளானந்தம்  முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட கழகத்திற்கு பொறுப்பாளர்கள் மாற்றப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். மாவட்டத் தலைவர் – நாத்திக சோதி, மாவட்ட செயலாளர் – எலத்தூர் செல்வக்குமார், மாவட்ட அமைப்பாளர் – சதுமுகை பழனிச்சாமி, கோபி நிவாசு,  மாவட்ட பிரச்சார அணி செயலாளர் – வேணுகோபால், கோபி ஒன்றிய செயலளர் – செகநாதன், கோபி நகர தலைவர் – ரகுநாதன், கோபி நகர செயலாளர் – அருளானந்தம், நம்பியூர் ஒன்றிய செயலாளர் – ரமேசு, நம்பியூர் ஒன்றியத் தலைவர் – அழகிரி, சத்தி ஒன்றிய செயலாளர் – புதுரோடு சிதம்பரம், கூசூ பாளையம் ஒன்றிய செயலாளர் – கருப்பணன், அந்தியூர் ஒன்றிய...

கோபியில் 144 இடங்களில் கிராமப்புறப் பிரச்சாரம்

கோபியில் 144 இடங்களில் கிராமப்புறப் பிரச்சாரம்

ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம் 4.09.2022  ஞாயிறு காலை 10 மணியளவில் கோபியில் நாகப்பன் இல்லத்தில் நடைபெற்றது. அலிங்கியம் பகுதி செந்தில்குமார் தலைமை ஏற்க மாவட்ட செயலாளர்  வேணுகோபால், கழகத்தின் வெளீயீட்டு செயலாளர் இராம இளங்கோவன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் பெரியார் பிறந்தநாள் நிகழ்வுகள் பற்றி கலந்து ஆலோசிக்கப் பட்டது. செப்.17 தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவினை மாவட்டத்தில் உள்ள ஒன்றிய பகுதிகளில் சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டது. பெரியரின் 144 வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு மாவட்ட கழகத்தின் சார்பில் சனாதனத்தை வேரறுப்போம் என்ற தலைப்பில் 144 இடங்களில் கிராமப்புறப் பிரச்சாரப் பயணம் நடத்துவது எனவும், அதன் இறுதியில் நிறைவுவிழா பொதுகூட்டம் சத்தி அல்லது நம்பியூரில் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின்  ஒன்றிய,நகர ,கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 08092022 இதழ்

மகிழ் உணவகம் : கழகத் தலைவர் திறந்தார்

மகிழ் உணவகம் : கழகத் தலைவர் திறந்தார்

ஈரோடு வெள்ளோட்டில் மகிழ் உணவகத்தை 17.07.2022 ஞாயிறு அன்று  கழகத் தலைவர் கொளத்தூர் மணி  திறந்து வைத்தார். பெயர்ப் பலகையை திமுக வின் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர்  வி.சி. சந்திரகுமார் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் திமுக மாநகர பகுதி செயலாளர் அக்னி சந்திரன், கொங்கு இளைஞர் பேரவை லிங்கேஸ்வரன், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழக தலைமைக் குழு உறுப்பினர் காவலாண்டியூர் ஈஸ்வரன் மற்றும் கழகத் தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 21072022 இதழ்

பள்ளிப்பாளையத்தில் மண்டல மாநாடு எழுச்சி ஆரியத்துக்கு எதிராக உருவானதே திராவிடம்

பள்ளிப்பாளையத்தில் மண்டல மாநாடு எழுச்சி ஆரியத்துக்கு எதிராக உருவானதே திராவிடம்

ஈரோடு மண்டல மாநாடு – பள்ளிப்பாளை யத்தில் எழுச்சியுடன் நடந்தது. நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ என்ற கோட்பாட்டை விளக்கி 33 தெருமுனைக் கூட்டங்களைத் தொடர்ந்து மண்டல மாநாடு நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக, ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய ஈரோடு மண்டல மாநாட்டின் நோக்கங்களை விளக்கி, ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பாக 8 இடங்களில் தெருமுனைக் கூட்டங்களும், ஈரோடு தெற்கு மாவட்டம் சார்பாக 25 இடங்களில் தெருமுனைக் கூட்டங்களும், நாமக்கல் மாவட்டம் சார்பாக 10 இடங்களில் தெருமுனைக் கூட்டங்களும் நடைபெற்று முடிந்திருந்தன. தெருமுனைக் கூட்டங்களில், மாவட்ட இயக்க முன்னோடிகளும் ,திரளான தோழர்களும், தோழமை அமைப்புகளின் பொறுப்பாளர்களும் பங்கேற்றனர். பள்ளிபாளையத்தில் மண்டல மாநாடு : ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய ஈரோடு மண்டல மாநாடு 09.05.22 திங்கள் மாலை 5 மணிக்கு, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நேரு திடலில் தொடங்கியது. மாநாட்டையொட்டி பள்ளிபாளையம் நகர் முழுவதும் சுவரொட்டிகளும்...

திருப்பூர்-ஈரோடு மாவட்டங்களில் திராவிட மாடல் விளக்கம்

திருப்பூர்-ஈரோடு மாவட்டங்களில் திராவிட மாடல் விளக்கம்

திருப்பூரில் தெருமுனை கூட்டங்கள் :  திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் “நமக்கான அடையாளம் – திராவிட மாடல்” எனும் முழக்கத்தோடு திருப்பூரில் தெருமுனைக் கூட்டங்கள் 01.05.22 அன்று காலை 11 மணியளவில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பு உள்ள பெரியார் சிலை அருகிலிருந்து துவங்கியது. நிகழ்வு பெரியார் பிஞ்சு யாழினி மற்றும் து.சோ.பிரபாகர் ஆகியோரின் பகுத்தறிவு பாடல்களுடன் துவங்கியது. மாவட்டக் கழகத் தலைவர் முகில்ராசு தெருமுனை கூட்டத்தில் துவக்க நிகழ்விற்கு தலைமை தாங்கினார். மதிப்பிற்குரிய திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார், தெருமுனைக் கூட்டங்களை துவக்கி வைத்து தமிழ் நாட்டில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சி குறித்தும் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத ஆட்சி குறித்தும் சிறப்பானதொரு கருத்துரையை வழங்கினார். கழகப் பொருளாளர் துரைசாமி, தெருமுனை கூட்டங்களின் நோக்கம் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார். தொடர்ந்து தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் தலைவர் ஆசிரியர் சிவகாமி, மாவட்டக் கழகச் செயலாளர்...

நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ கழகப் பரப்புரை இயக்கங்கள் தொடங்கின

நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ கழகப் பரப்புரை இயக்கங்கள் தொடங்கின

நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ என்ற முழக்கத்தை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் பரப்புரை இயக்கங்கள் தொடங்கி எழுச்சி நடைபோட்டு வருகின்றது. சென்னை : முதல் நாள் தெருமுனைக் கூட்டம் : மாநில உரிமையைப் பறிக்கும், கல்வி உரிமையைத் தடுக்கும், மதவெறியைத் திணிக்கும் பாஜகவை எதிர்த்து, தமிழ்நாடு அரசின் ‘திராவிட மாடல்’-அய் ஆதரித்து, நமக்கான அடையாளம் “திராவிட மாடல்” மண்டல மாநாட்டை விளக்கி, தெருமுனைப் பிரச்சாரம், சென்னை இராயப்பேட்டை, திருவல்லிக்கேணி பகுதிகளில், (19.04.2022 மாலை 5:30 மணிக்கு மீர்சாகிப் பேட்டை மார்கெட் பகுதியில் 119ஆவது வட்ட கவுன்சிலர் திமுக கமலா செழியன் தொடங்கி வைத்தார். அடுத்ததாக அய்ஸ்ஹவூஸ்ஷேக் தாவூத் தெரு, இறுதியாக அய்ஸ்ஹவூஸ்கிருஷ்ணாம்பேட்டை பள்ளி ஆகிய மூன்று இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்ட செயலாளர் உமாபதி, பிரகாசு, ஜெய பிரகாசு, தேன்மொழி ஆகியோர் மக்களிடம்  ‘திராவிட மாடல்’-அய் ஏன் ஆதரிக்க வேண்டும்...

செயலவைக்கு உதவியோருக்கு நன்றி!

செயலவைக்கு உதவியோருக்கு நன்றி!

தலைமைக்குழு செயலவை நிகழ்ச்சிகளை அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி முன்னின்று ஒருங்கிணைத்தார். அவருடன் ஈரோடு மாவட்டத் தோழர்கள் இணைந்து பணியாற்றினர். கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி ரூ.10,000; ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திகஜோதி ரூ.5,000,  ஈரோடு சீனிவாசன் ரூ.5000, பொறியாளர் அன்பு செல்வன் ரூ.10,000 ஆகியோர் நன்கொடை வழங்கினர். பிரியாணிபாளையம் ஓட்டல் உரிமையாளரும் கரூர் மாவட்ட கழக முன்னாள் மாவட்ட தலைவருமான பாபு, தலைமைக் குழுவுக்கு இடம் வழங்கி மிகக் குறைந்த விலைச் சலுகையில் இரு நாளும் பிரியாணி உணவு வாங்கினார். சென்னிமலை கழகத் தோழர் ஜோதி ரவி 15 கிலோ இறைச்சியையும், ‘அன்பு மிக்சர்’ உரிமையாளர் அனைவருக்கும் சிற்றுண்டிகளையும் தின்பண்டங் களையும் வழங்கினார். கே.கே.எஸ்.கே. திருமண மண்டபத்தில் செயலவைக் கூட்டம் இலவசமாக நடத்திக் கொள்ள அனுமதி வழங்கினர்.  அனைவருக்கும் அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி நன்றி தெரிவித்துக் கொள்கிறார். பெரியார் முழக்கம் 07042022 இதழ்

அ.பி. அறிவுமதி ரூ.10,000/- நன்கொடை, நாத்திக ஜோதி மகேசுவரி ரூ.5,000/- நன்கொடை

அ.பி. அறிவுமதி ரூ.10,000/- நன்கொடை, நாத்திக ஜோதி மகேசுவரி ரூ.5,000/- நன்கொடை

அ.பி. அறிவுமதி ரூ.10,000/- நன்கொடை ஈரோடு கொங்கம்பாளையம் பிரகாஷ் -அமுதா இணையரின் மகன் அ.பி. அறிவுமதி, தனது முதல் மாத சம்பளமான ரூ.10,000/-ஐ கழக வளர்ச்சி நிதியாக 26.11.2021 அன்று மாலை சித்தோட்டில் அரசியல் சட்ட எரிப்பு போராட்ட நாள் கருத்தரங்கில் கழகத் தலைவரிடம் வழங்கினார். நாத்திக ஜோதி மகேசுவரி ரூ.5,000/- நன்கொடை ஈரோடு வடக்கு மாவட்ட தி.வி.க. தலைவர் ஜோதி முருகன் என்கிற க. நாத்திகஜோதி மகேசுவரி, 39ஆவது திருமண நாள் மகிழ்வாக கழக வளர்ச்சிக்கு ரூ.5000/- நன்கொடை வழங்கினார். (நன்றியுடன் பெற்றுக் கொண்டோம்) பெரியார் முழக்கம் 02122021 இதழ்

கழகப் பொறுப்பாளர்கள் இரண்டாம் கட்டப் பயணம்:  தோழர்களுடன் சந்திப்பு

கழகப் பொறுப்பாளர்கள் இரண்டாம் கட்டப் பயணம்: தோழர்களுடன் சந்திப்பு

இரண்டாம் கட்டப் பயணமாக, 23,24, 25.11.2021 ஆகிய தேதிகளில், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், திருப்பூர் அய்யப்பன் ஆகியோர், மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களிடத்தில் கலந்துரையாடினர். திண்டுக்கல் : 23.11.2021 காலை 11 மணியளவில் திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையம் அருகில் உள்ள வேலன் விடுதியில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி, பெரியார் செல்வம் உள்ளிட்ட மாவட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர். நிகழ்கால அரசியல் செயல்பாடுகள், கழக ஏடுகளுக்கு சந்தா சேர்த்தல், எதிர்வரும் காலங்களில் இயக்க செயல்பாடுகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டது. மதிய உணவு பழனி கழக தோழர்களால் வழங்கப்பட்டது. மடத்துக்குளம் : மாலை 4 மணியளவில் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மோகன் இல்லத்தில் தோழர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்பகுதியைச் சார்ந்த சிவானந்தம், இராசேந்திரன், கணக்கன் மற்றும் மடத்துக்குளம் மோகன் இணையர் ஜோதி ஆகியோர்...

திராவிடர் கழக செயல்பாட்டாளர் ஈரோடு பிரகலாதன் நினைவேந்தல் நிகழ்வு கழக சார்பில் நடந்தது

திராவிடர் கழக செயல்பாட்டாளர் ஈரோடு பிரகலாதன் நினைவேந்தல் நிகழ்வு கழக சார்பில் நடந்தது

மறைந்த திராவிடர் கழக ஈரோடு மண்டலத் தலைவர் பெரியார் தொண்டர் ப.பிர கலாதன் நினைவேந்தல் கூட்டம், 21.11.2021 அன்று மாலை 6:30 மணியளவில் ஈரோடு குருவரெட்டி யூர், தந்தை பெரியார் திடலில் நடைபெற்றது. ஈரோடு வடக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் நாத்திகஜோதி கூட்டத்திற்கு தலைமை வகித்தார். கு.வேல் முருகன் (அம்மா பேட்டை ஒன்றிய செய லாளர்), காவை ஈஸ்வரன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), ப. ரத்தின சாமி (மாநில அமைப்பு செயலாளர்), சு. துரைசாமி (மாநில பொருளாளர்), ப. சத்தியமூர்த்தி (திராவிடர் கழகம்), வேணுகோபால் (மாவட்ட செயலாளர்), அரங்க-இராசகோபால் (வழக்குரைஞர்), சாமிநாதன் (நாமக்கல் மாவட்ட தலைவர்), பெரியநாயகம் (அம்மாபேட்டை பேரூர் கழக செயலாளர் திமுக.), வெ.கிருஷ்ணமூர்த்தி (வழக்குரைஞர்- பாமக), வேங்கை பொன்னுசாமி (தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர்), விஸ்வநாதன் (முன்னாள் ராணுவ வீரர் குருவை) ஆகியோர் நிகழ்விற்கு முன்னிலை வகித்தனர். கழக பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழக...

கழக ஏடுகளுக்கு சந்தா: கோபி இளங்கோவன் பாராட்டத் தக்க பணி

கழக ஏடுகளுக்கு சந்தா: கோபி இளங்கோவன் பாராட்டத் தக்க பணி

கொரோனா காலத்தைப் பயன்படுத்தி கழக வெளியீட்டு செயலாளர் கோபி இராம. இளங்கோவன் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழ்களுக்கு தலா 108 சந்தாக்களை சேர்த்து முகவரிப் பட்டியலுடன் உரிய தொகை ரூ.54,000/-த்தை அனுப்பியுள்ளார். ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு மாவட்டம் தோறும் நன்கொடை வழங்க தலைமைக் குழுவில் முடிவெடுக்கப்பட்டதைத்  தொடர்ந்து இதுவரை சேலம் (மேற்கு), சென்னை மாவட்டம் தலா ரூ.10,000/- வழங்கியுள்ளது. பெரியார் முழக்கம் 25022021 இதழ்

மார்ச் 8 – கழகக் குடும்ப சந்திப்பு: ஈரோடு வடக்கு மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

மார்ச் 8 – கழகக் குடும்ப சந்திப்பு: ஈரோடு வடக்கு மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

ஈரோடு வடக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகத்தின் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 7.02.2021 அன்று ஞாயிறு மாலை 4 மணியளவில் கோபி நாகப்பன் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில வெளியீட்டு செய லாளர் இராம. இளங்கோவன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் நாத்திக சோதி, மாவட்ட செயலாளர் வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும், போராடும் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டியும், வீரப்பன் வழக்கில் பெரும் சிக்கலுக்கு ஆளாகி சிறையில் வாடுபவர்களையும் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வருகின்ற மார்ச் 8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு மாவட்டக்...

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தேசிய கல்விக் கொள்கை அறிக்கை, இஸ்ரோ முன்னாள் அதிகாரி கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவால் 2018 டிசம்பர் மாதம் தயாரிக்கப்பட்டு, 2019 ஜூன் 1ஆம் தேதி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வலைதளத்தில் தேசிய கல்வி கொள்கை அறிக்கை ஆங்கிலம், இந்தியில் மட்டும் வெளியானது. வெளியானதிலிருந்து 30 நாட்களுக்குள் கருத்து சொல்ல வேண்டும் என்று அரசு கால நிர்ணயமும் அறிவித்திருந்தது. பல மொழிகள் பேசக்கூடிய மாநிலங்கள் இருந்தும் மாநில மொழிகளில் அறிக்கை வெளியாகவில்லை என்று எதிர்ப்பு வந்தவுடன் தேசிய கல்வி கொள்கை சுருக்கமான வரைவை தமிழில் வெளியிட்டார்கள். இந்த நிலையில் திராவிடர் விடுதலைக் கழகம்  ஓராண்டுக்கு முன்பே 2019 செப்டம்பர் 17 இல் பரப்புரை பயணத்தை நடத்தியது. ‘சமூக நீதியை பறிக்காதே; புதிய கல்வித் திட்டத்தை திணிக்காதே’ என்ற முழக்கங்களுடன் தமிழகம் முழுவதும் கழகம் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான பரப்புரை பயணத்தை மேற் கொண்டது. பயணம் பள்ளிபாளையத்தில் நிறைவுற்றது. செப்டம்பர் 20ஆம்...

சட்ட எரிப்பு நாளில் கழகத் தோழர்கள் ஜாதி ஒழிப்பு உறுதி ஏற்றனர்

சட்ட எரிப்பு நாளில் கழகத் தோழர்கள் ஜாதி ஒழிப்பு உறுதி ஏற்றனர்

திருச்சி : சட்ட எரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைச் சென்று சிறையிலேயே உயிர்நீத்த பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகியோரின் நினைவிடத்தில் திருச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் மீ.இ. ஆரோக்கியசாமி தலைமையில் ஜாதி ஒழிப்பு உறுதிமொழி ஏற்பும், அண்மையில் முடிவெய்திய இராவணனுக்கு வீரவணக்க நிகழ்வும் 26.11.2019 அன்று காலை 10:30 மணியளவில் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழகக் கொள்கைப் பரப்புரைச் செயலாளர் சீனி. விடுதலையரசு பங்கேற்று வீர வணக்க உரை நிகழ்த்தினார். மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் புதியவன் உறுதி மொழி வாசிக்க தோழர்கள் உறுதி மொழி ஏற்றனர். இறுதியாக மனோகர் நன்றி கூறினார். நிகழ்வில், திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சி, மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கிய பண்பாட்டு...

மேற்கு மண்டல கழகக் கலந்துரையாடலின் முடிவுகள்

மேற்கு மண்டல கழகக் கலந்துரையாடலின் முடிவுகள்

திராவிடர் விடுதலைக் கழக சத்தியமங்கலம் நகர அமைப்பாளர் மூர்த்தி – பூங்கொடி இல்லத் திறப்பு விழா  கெம்பநாயக்கன்பாளையம் சத்தியில், 03.11.2019 அன்று காலை 10 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்தார். நிகழ்வில் ஈரோடு தெற்கு, வடக்கு, கோவை திருப்பூர் மாவட்டத் தோழர்கள் பெருந்திரளாய் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். திராவிடர் விடுதலைக் கழக மேற்கு மண்டல கலந்துரையாடல் கூட்டம் 3.11.2019 அன்று சத்தி கெம்பநாயக்கம் பாளையம் திரு. கிட்டுசாமி தோட்டத் தில் நடைபெற்றது. கழக அமைப்புச் செயலாளர்  இரத்தினசாமி தலைமை யேற்று நோக்கவுரை ஆற்றினார். கழகத்தின் அடுத்த செயல் திட்டமாக மக்கள் சந்திப்பு இயக்கமும், கிராமங்கள் தோறும் பரப்புரைப் பயணமும், மருத்துவ முகாம் மற்றும் சட்ட ஆலோசனை முகாம் உள்ளிட்டவைகளை நடத்த ஆலோசனை வழங்கினார். கழக மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மேற்கு மண்டலம் உள்ளடக்கிய ஈரோடு தெற்கு, வடக்கு, கோவை புறநகர், கோவை, நாமக்கல் மற்றும் திருப்பூர்...

சென்னை-விழுப்புரம்-கோபியிலிருந்து பரப்புரைப் பயணம் தொடங்கியது பொது மக்கள் பேராதரவு

சென்னை-விழுப்புரம்-கோபியிலிருந்து பரப்புரைப் பயணம் தொடங்கியது பொது மக்கள் பேராதரவு

‘தமிழ்நாட்டை வஞ்சிக்காதே; சமூக நீதியை பறிக்காதே; புதிய கல்வி என்ற பெயரில் குலக் கல்வியைத் திணிக்காதே; தமிழ்நாட்டை வடநாடாக்காதே!’ என்ற முழக்கங்களுடன் திராவிடர் விடுதலைக் கழகத்தின் 6 முனை பரப்புரைப் பயணங்கள் தொடங்கின. சென்னையிலிருந்து சென்னை பரப்புரைக் குழு ஆகஸ்டு 25 காலை 10 மணிக்கு இராயப்பேட்டை பெரியார் சிலையிலிருந்து பயணத்தைத் தொடங்கியது. மே 17, இயக்கத் தோழர்களின் பறை இசையுடன் நிகழ்வுகள் தொடங்கின. பயணத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், பயணக் குழுவினரை வாழ்த்தி உரையாற்றி கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். பொதுச் செயலாளர்விடுதலை இராசேந்திரன் பயணத்தின் நோக்கங்களை விளக்கிப் பேசினார். சென்னை மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் துரை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் ரூதர் கார்த்திக் பயணக் குழுவினரை வாழ்த்தி உரையாற்றினர். தொடர்ந்து பல்லாவரம், அனகாபுத்தூர், தாம்பரத்தில் பரப்புரை நடந்தது. மக்கள் திரளாகக் கூடி நின்று கருத்துகளைக் கேட்டனர். துண்டறிக்கைகளை விருப்பத் துடன்...

கழகக் கட்டமைப்பு நிதி ஈரோடு வடக்கு மாவட்டம்

கழகக் கட்டமைப்பு நிதி ஈரோடு வடக்கு மாவட்டம்

நாத்திக சோதி குருவை, மாவட்ட தலைவர் ரூ. 20,000.00 வேல்முருகன், குருவை. ஒன்றிய செயலாளர் ரூ. 10,000.00 செல்வம், குருவை கிராம நிர்வாக அலுவலர் ரூ. 10,000.00 சரவணன், தரணி காட்டன் மில், காசிபாளையம் ரூ. 25,000.00 பழனிச்சாமி, மருந்தாளுநர், காசிபாளையம் ரூ. 25,000.00 இரா.காளியண்ணன், மாவட்ட கல்வி அலுவலர் (ஓய்வு) ரூ. 25,000.00 மருத்துவர் நடராஜன், அசோக் கிருஷ்ணா மருத்துவமனை ரூ. 25,000.00 வேணுகோபால், மாவட்ட செயலாளர் ரூ. 25,000.00 வை. இராமன், குருவை ரூ. 25,000.00 குமார், கட்டிடப் பொறியாளர் ரூ. 25,000.00 கருப்புசாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றம், சத்தி ரூ. 25,000.00 பழனிச்சாமி, சித்தா மருந்தாளுநர் சத்தி ரூ. 25,000.00 பி.எல். சுந்தரம். முன்னாள் எம்.எல்.ஏ., சத்தி  ரூ. 23,000.00 இராமகிருஷ்ணன், தமிழன் ஸ்டிக்கர்ஸ், சத்தி ரூ. 22,500.00 பாலகிருஷ்ணன் குருசாமி நாயுடு சன்ஸ் ரூ. 22,500.00 இரவிக்குமார், வழக்குரைஞர் ரூ. 22,000.00 சத்தி முத்து தமிழ்நாடு...

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

  ‘மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப் பறிக்காதே; புதிய கல்வி என்ற பெயரால் குலக் கல்வியைத் திணிக்காதே’ என்ற முழக்கத்துடன் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழகத்தில்  முனைகளிலிருந்து பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறது. ஆகஸ்டு 26இல் தொடங்கி நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி பயண நிறைவு விழா நடைபெறுகிறது. திருப்பூர், விழுப்புரம், ஈரோடு (கோபி), மயிலாடு துறை, சென்னை, மேட்டூர் என 6 முனைகளிலிருந்து தொடங்கும் பயணம், 150 ஊர்களில் பரப்புரையை நடத்துகிறது. நூறுக்கும் மேற்பட்ட கழக செயல்பாட்டாளர்கள், பயணங்களில் முழு அளவில் பங்கேற்கிறார்கள். பரப்புரைக்கான துண்டறிக்கை, கழக வெளியீடுகள் தயாராகி வருகின்றன. கலைக் குழுக்கள், பரப்புரைப் பயணங்களில் இசை, வீதி நாடகம் வழியாக மண்ணின் மைந்தர்கள் வேலை  வாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுவது குறித்தும் வடநாட்டுக்காரர்கள் தமிழக வேலை வாய்ப்புகளில் குவிந்துவரும் ஆபத்துகள் குறித்தும் மக்களிடையே பரப்புரை செய்வார்கள். ஒத்த கருத்துடைய அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள் பயணத்துக்கு ஆதரவு தர ஆர்வத்துடன்...

கழகக் கட்டமைப்பு நிதி

கழகக் கட்டமைப்பு நிதி

ஈரோடு மாவட்டம் (தெற்கு) ஈஸ்வர மூர்த்தி, திருப்பூர் ரூ. 25,000/- ஆசிரியர் சிவக்குமார், ஈரோடு   ரூ. 20,000/- வேணுமெஸ், மேட்டூர்    ரூ. 20,000/- தென்னரசு, சட்டமன்ற உறுப்பினர்     ரூ. 15,000/- பவானிடெக்ஸ் பெரியார் தொழிற்சங்க உறுப்பினர்கள்     ரூ. 15,000/- காசிபாளையம் வேலுச்சாமி வழியாக  ரூ. 15,000/- டாக்டர் சக்திவேல் (சக்தி மருத்துவமனை)    ரூ. 10,000/- டாக்டர் சுதாகரன் (சுதா மருத்துவமனை)     ரூ. 10,000/- மா. சீனிவாசன் (தமிழ்நாடு பேக்கர்ஸ்) ரூ. 10,000/- பெரியசாமி, குன்னத்தூர்  ரூ. 10,000/- கொடிவேரி ஜெயக்குமார்  ரூ. 10,000/- பெரியார் முழக்கம் 18072019 இதழ்

நியூ செஞ்சுரி 25 புதிய நூல்கள் வெளியீட்டு விழா ஈரோடு 07082019

நியூ செஞ்சுரி 25 புதிய நூல்கள் வெளியீட்டு விழா ஈரோடு 07082019

ஈரோடு புத்தகத் திருவிழாவை ஒட்டி, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 25 புதிய நூல்கள் வெளியீட்டு விழா கழகத் தலைவர் புத்தக வெளியிட்டு பாராட்டுரை நாள் 07.08.2019 நேரம் காலை 11.30 மணி இடம் விபிவி மகால், ஈரோடு  

கழகத்தின் நடவடிக்கையால் குன்னத்தூர் காவல்துறை விநாயகர் கோயில் அகற்றம்

கழகத்தின் நடவடிக்கையால் குன்னத்தூர் காவல்துறை விநாயகர் கோயில் அகற்றம்

குன்னத்தூர் காவல் நிலைய வளாகத்தில் சட்டவிரோதமாக இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராய் தனியொரு மத வழிபாட்டுத் தலம் கட்டி வணங்கி வந்த நிலையில், திராவிடர் விடுதலைக் கழக குன்னத்தூர் நகர பொறுப்பாளர் தோழர் சின்னசாமி அவர்கள் 20.06.2019 அன்று புகார் மனு நேற்று அளிக்கப்பட்டது அதனை தொடர்ந்து விநாயகர் கோயிலில் இருந்த சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். உயர்நீதிமன்ற அறிவுரைப்படி அரசு அலுவலகங்களில் மதவழிபாட்டு தலங்களை உடனடியாக நீக்கிய குன்னத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கும், காவல் துறை கண்காணிப்பாளருக்கும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்வதோடு மேலும் கோயில் கட்ட எழுப்பிய சுவற்றையும் அப்புறப்படுத்தி இனி அந்த இடம் காவல்நிலைய பயன்பாட்டிற்கு ஏற்றவகையில் மாறுதல் செய்யவும் சட்டவிரோத வேறு கோயில்கள் அங்கே அமைவதை தடுக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிக்கொள்கிறோம் குன்னத்தூர் நகர திவிக

இராவண காவியம் தொடர் சொற்பொழிவு !

இராவண காவியம் தொடர் சொற்பொழிவு !

இராவண காவியம் தொடர் சொற்பொழிவு ! சொற்பொழிவு : ”புலவர் செந்தலை கெளதமன்” கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி, த,பெ,தி,க பொதுச்செயலாளர் தோழர் கோவை கு.ராமகிருட்டிணன் உள்ளிட்ட தோழர்கள் வாழ்த்துரை வழங்குகிறார்கள். நாள் : 30.12.2018 ஞாயிற்றுக்கிழமை நேரம் : மாலை 5.00 மணி. இடம் : கெளரி திருமண மண்டபம்,சென்டெக்ஸ் அருகில்,சென்னிமலை.

யாவையும் நிறுத்திக் கொள் காவியே!  – பெ. கிருஷ்ணமூர்த்தி

யாவையும் நிறுத்திக் கொள் காவியே! – பெ. கிருஷ்ணமூர்த்தி

வெறிமிகு வேகத்தில் பயணிக்காத வாகனங்கள். தனிமனிதத் துதியும், வெறுப்புமற்ற , சமூகநீதி வேண்டித் தாகமுடன் களம்காணும் வேட்கை பொதிந்தப் பயணம் ! மகிழுந்தும், பெருவாகனமும்… தும்பை வெள்ளையும்… பட்டை மோதிரமும்… அத்தர் நெடியும்… பட்டைச் சங்கிலி சகிதம் மதுக்கடையை மொய்க்காதக் கூட்டம்.! நோட்டுகளை எண்ணுகிறதும், எண்ணுகிற நோட்டுக்காய் எச்சில் விழுங்கிக் கையேந்தாதக் கரங்கள்.! மனமெல்லாம் தாடிக்கிழவனை நிரப்பி… பசியென்னும் உணர்வையே பறையிசையில் நிறைத்து… நரம்பு நாணை சுயமரியாதைப் பாட்டால் மீட்டும் கூட்டம்! எம் கரமேந்தும் கருங்கொடி … சூரியனையும் மிஞ்சும் சுடரொளி! எங்கள் கருந்தேகத்தைக் கிழித்திட்டால் சிவப்பு நட்சத்திரமாய் மினுங்கும் புது ஒளி! வரலாறைச் சுமந்த மூளை. அடக்குமுறை எதிர்க்கும் தேகம். சமூகநீதிக்காய் நடந்து… நடந்து உரமேறியக் கால்கள். தீமைக்கெதிரான சொற்கள். தீர்வு கிட்டும்வரை துஞ்சாதக் கண்கள். இவையே எங்கள் அடையாளம். போதையின் ஆக்கத்தால் ஆட்டமோ.. மாநாடுத் திடலில் குழாய் விளக்குடைக்கும் நாட்டமோயின்றி… அரைக்கல் அளவே இடமாயினும்… நெஞ்சுநிமிர்த்தி அமர்ந்து… பகலவனின்...

ஈரோடு (வடக்கு) மாவட்ட பரப்புரைப் பயணம்

ஈரோடு (வடக்கு) மாவட்ட பரப்புரைப் பயணம்

பெரியார்  140 ஆவது பிறந்த நாள் விழாவினை ஈரோடு வடக்கு மாவட்டம் வாரந்தோறும் தமிழர்கல்வி உரிமை மீட்பு பரப்புரைப் பயணமாக நடத்தி வருகின்றது. மழை  காரணமாக  மற்றும் செயலவைக் கூட்டம் காரணமாக இரு வாரங்கள் ஒத்திவைக்கப்பட்ட  பரப்புரைப் பயணம் இந்தவாரம் நம்பியூர் ஒன்றியம் குருமந்தூர் பகுதியில் துவங்கியது. குருமந்தூர் மேட்டில் அமைக்கப்பட்டுள்ள கழகக் கொடிக்கம்பத்தில் குருமந்தூர் திமுக பகுதி செயலாளர் குழந்தைவேல் கழகக் கொடியினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து பெரியார் பிஞ்சு அறிவுக்கனல் பகுத்தறிவுப் பாடலை பாட பரப்புரை பயணம் தொடங்கியது. பயணத்தின் நோக்கத்தை விளக்கி மாவட்ட செயலாளர் வேணுகோபால் தலைமையில் கழகப் பேச்சாளர் வேலுச்சாமி, மாநில வெளியீட்டு செயலாளர் இராம இளங்கோவன் ஆகியோர் உரையாற்றினர். அலிங்கியம் செந்தில் அனைவருக்கும் நன்றி கூறினார். கழகத் தோழர் செந்தில் அனைவருக்கும் தேனீர் ஏற்பாடு செய்து இருந்தார். பயணக்குழு அடுத்து அளுக்குளி பகுதிக்கு வந்தது. அளுக்குளி தங்கம் வரவேற்புரையாற்ற பெரியார் பிஞ்சு அறிவுக்கனல் பகுத்தறிவு...

கழக ஏடுகளுக்கு சந்தா  சேர்ப்பதில் தோழர்கள் தீவிரம் மாவட்டக் கலந்துரையாடல்களில் எழுச்சி டிசம்பர் 24 கருஞ்சட்டைப் பேரணிக்கு தயாராகிறார்கள்

கழக ஏடுகளுக்கு சந்தா சேர்ப்பதில் தோழர்கள் தீவிரம் மாவட்டக் கலந்துரையாடல்களில் எழுச்சி டிசம்பர் 24 கருஞ்சட்டைப் பேரணிக்கு தயாராகிறார்கள்

டிசம்பர் 24ஆம் தேதி திருச்சி கருஞ்சட்டைப் பேரணிக்கு தயாராகி வரும் கழகத் தோழர்கள் கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழுக்கு சந்தா சேர்க்கும் இயக்கத்திலும் முனைப்போடு  செயல்பட்டு வருகிறார்கள். மாவட்டக் கழகத் தோழர்களுடன் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் நேரில் சந்தித்து கலந்துரையாடல் கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர். முதல் கட்டமாக பயணம் நவம்பர் 21ஆம் தேதி காலை ஈரோடு வடக்கு மாவட்டம் கோபியில் காலை 11.30 மணியளவில் கழகத் தோழர் நிவாஸ் இல்லத்தில் நடந்தது. ஈரோடு வடக்கு மாவட்டமான கோபியில் 7 ஒன்றியங்களில் கழக அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. கல்வி உரிமை பரப்புரைப் பயணத்தைத் தொடர்ந்து ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத் தோழர்கள் பரப்புரைக்காக வாங்கியுள்ள வாகனத்தைப் பயன்படுத்தி கிராமம் கிராமமாக பரப்புரையை தொடர் நிகழ்வாக நடத்தி வருவது...

ஈரோடு வடக்கு மாவட்டக் கழகம் நடத்திய தமிழர் கல்வி உரிமை மீட்பு பரப்புரைப் பயணம் 30.09.2017

ஈரோடு வடக்கு மாவட்டக் கழகம் நடத்திய தமிழர் கல்வி உரிமை மீட்பு பரப்புரைப் பயணம் 30.09.2017

பெரியார்  140 ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு  ஈரோடு வடக்கு மாவட்ட கோபி ஒன்றிய கழகத்தின் சார்பில் கொடி யேற்றம் மற்றும் தமிழர் கல்வி உரிமை பரப்புரை பயணம் ஆகியன 30.09.2018 ஞாயிறு அன்று சிறுவலூரில் நடைபெற்றது. சிறுவலூர் பகுதியில் அமைந்துள்ள கழகத்தின் கொடிக்கம்பத்தில் கழக வழக்குரைஞர் தோழர் செகதீசன் கழகக் கொடி யினை ஏற்றி வைத்து பரப்புரை பயணத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து  தலைமை கழகப் பேச்சாளர் வேலுச்சாமி, மாநில வெளியீட்டுச் செயலாளர் இராம இளங்கோவன் ஆகியோர் பயணத்தின் நோக்கத்தை விளக்கி உரையாற்றினார்கள். அப்பகுதியில் நம் தோழர்களுக்கு கோபி ஒன்றியத்தின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழர்கள் தேனீர் வழங்கி நம் பயணம் தொடர வாழ்த்துகள் தெரிவித்தனர். தொடர்ந்து எலந்தக்காடு பகுதியில் தோழர் சுந்தரம், மூப்பன் சாலையில் நதியா, கிழக்கு தோட்டம் பிரிவில் கிருட்டிணசாமி, மரியன்னை மேல்நிலைப்பள்ளி அருகில் பெரியார் பிஞ்சு அகிலன், கொளப்பலூர் பேருந்து நிலையம் பகுதியில் பெரியார்...