நடுகாட்டில் பிரபாகரனுடன் சில நாட்கள் தங்கியிருந்தேன் – தோழர் கொளத்தூர் மணி நேர்காணல் ஜுனியர் விகடன் 31.01.90
திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர்களில் ஒருவர் டி.எஸ். மணி. இவர் சேலம் குளத்தூரைச் சேர்ந்தவர். இவரது நிலத்தில்தான் 1984-ல் எல்.டி.டி.ஈ யினருக்குப் போர் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மலைப்பகுதியும் – பச்சைப்பாளி காட்டுப்பகுதியும் கலந்த அந்த இடத்தில் விடுதலைப் புலிகள் ரகசியமாகப் பயிற்சி பெற்ற நாட்களை பிரபாகரன் மறந்ததில்லை . பிற்பாடு மரணமடைந்த லெப். கர்னல் பொன்னம்மான், புலேந்திரன் மற்றும் அருணா இந்த முகாமில் பயிற்சியாளர்களாக இருந்தனர். டி.எஸ். மணிக்குச் சொந்தமான இந்த இடத்தை அன்று தேர்ந்தெடுத்து, பயிற்சியை முறைப்படி செயல்படுத்திக் கண்காணித்தவர் மாத்தையா! இந்த முறையில் டி.எஸ். மணி எப்போதும் பிரபாகரனுக்கு நெருங்கியவர். பிரபாகரனின் அழைப்பின் பேரில், டி.எஸ். மணி சமீபத்தில் ஈழம் சென்றார். பிரபாகரனுடன் நடுக்காட்டில் சில நாட்கள் தங்கிவிட்டு மகிழ்ச்சி பொங்கத் திரும்பியிருக்கிறார். டி.எஸ். மணி தன் அனுபவத்தைக் கூறுகிறார்; “1989 டிசம்பர் பத்தாம் தேதி நான் புறப்பட்டு, பதினோராம் தேதி ஈழம் அடைந்தேன். பன்னிரண்டாம் தேதி...