Category: மயிலாடுதுறை

இடைவிடாத பரப்புரைகளால் நிறைந்த ‘2025’ கழகத்தின் ஓராண்டு களப்பணிகள்!

இடைவிடாத பரப்புரைகளால் நிறைந்த ‘2025’ கழகத்தின் ஓராண்டு களப்பணிகள்!

சனவரி 12: சென்னை ராயப்பேட்டையில் 25-ஆம் ஆண்டாக தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. திருப்பூர் மாஸ்கோ நகர் பெரியார் திடலில் முழு நாள் நிகழ்வாக தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா எழுச்சியோடு நடைபெற்றது. சனவரி 15: கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பெரியார் விருது வழங்கப்பட்டது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் விருதுடன், ரூ.5 லட்சத்திற்கான காசோலை, ஒரு சவரன் மதிப்பிலான பதக்கம் வழங்கி கவுரவித்தார். பெரியார் விருது பெற்ற கழகப் பொதுச்செயலாளருக்கு ராயப்பேட்டையில் கழகத் தோழர்கள், தோழமை இயக்கத்தினர் பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். சனவரி 22: பெரியார் குறித்து கண்மூடித்தனமாக அவதூறுகளை பரப்பி வந்த சீமான் வீட்டை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி எச்சரித்தது. இதில் திராவிடர் விடுதலைக் கழகம் பெருந்திரளாகப் பங்கேற்று சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. சனவரி 26: பெரியார் விருது...

ஜாதியவாதிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு!   தமிழ்நாடு  அரசை  வலியுறுத்தி  கோவையில்  போராட்டம்

ஜாதியவாதிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு! தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கோவையில் போராட்டம்

2023 ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சேலத்தில் நடைபெற்ற ‘இது தமிழ்நாடு – இளம் தலைமுறையினரின் எச்சரிக்கை’ மாநாட்டில் ‘வைக்கம் போர் முடியவில்லை’ என்ற தலைப்பில் தீர்மானம் இயற்றப்பட்டு அதனடிப்படையில் தீண்டாமைக் கொடுமைகளைப் பட்டியலெடுத்துப் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆணையத்திலும் மனு அளிக்கப்பட்டது. 2025-இல் கழகத் தலைமைக் குழுவில் செப்-17 முதல் செப்-24 வரை “மனிதம் நமது அடையாளம்; ஜாதி நமக்கு அவமானம்” என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது என்றும் நிறைவாக கோவையில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி 200-க்கும் மேற்பட்ட தெருமுனைக் கூட்டங்களைக் கழகம் தமிழ்நாடு முழுவதும் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக கழகத்தின் சார்பில், கோவையில் ஜாதிய தீண்டாமைக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சட்ட நடவடிக்கை கோரி மாநிலம் தழுவிய போராட்டம், டிசம்பர் 29-அன்று காலை 10.30 மணிக்கு...

மயிலாடுதுறை, கடலூரில் சங்கராச்சாரி கண்டித்து ஆர்ப்பாடங்கள்

மயிலாடுதுறை, கடலூரில் சங்கராச்சாரி கண்டித்து ஆர்ப்பாடங்கள்

மயிலாடுதுறை: திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 26.04.25 சனி மாலை கிட்டப்பா அங்காடி அருகில் “இன ஒதுக்கல்” பேசும் சங்கராச்சாரியை கண்டித்து மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன உரையாற்றியோர்: பேராசிரியர் ஜெயராமன் தமிழ்மண் தன்னுரிமை இயக்கம், ராஜசேகர் விடுதலை சிறுத்தைகள் கட்சி, சுப்பு.மகேஷ் தமிழர் உரிமை இயக்கம், இளையராஜா,திராவிடர் விடுதலைக் கழகம். நன்றியுரை: வீரமணி கடலூர்: 21.4.2025 மாலை 6 மணி அளவில் காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திர சரஸ்வதி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கடலூரில் மஞ்சகுப்பம் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அருகில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திவிக அருணாச்சலம் வழக்கறிஞர் வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாநில தேர்தல் பணி குழு செயலாளர் வழக்கறிஞர், இள புகழேந்தி, தமிழ் மீனவர் விடுதலை வேங்கையின் நிறுவனத் தலைவர் தமங்கையர் செல்வன், விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் தி ச திருமார்பன்,...

பயணத்தில் பங்கேற்ற தோழர்களுக்கு பாராட்டு

பயணத்தில் பங்கேற்ற தோழர்களுக்கு பாராட்டு

தமிழர்களின் தன்மான மீட்பர் தலைவர் பெரியார் மீது அவதூறுகளை வீசி, தமிழ்நாட்டில் அவரைத் தனிமைப்படுத்தலாம் என்ற சதித்திட்டத்தை முறியடிக்கவும், அந்தத் துரோகக் கும்பலின் முகத்திரையைக் கிழித்தெறிந்து, மக்களிடத்தில் பெரியாரைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடும் திராவிடர் விடுதலைக் கழகம் இந்த பயணத்திற்குத் திட்டமிட்டது. தன்னல மறுப்போடு, பெரியார் லட்சியத்தில் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் கழகத் தோழர்கள் ஆர்வத்துடன் இந்த பயணத்தில் பங்கேற்றனர். கொளுத்தும் வெயிலில் தங்களை வருத்திக் கொண்டு நாள் ஒன்றுக்கு குறைந்தது நான்கு கூட்டங்கள் வழியாக பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்தித்துப் பரப்புரை, நூல் விற்பனை, நிதி திரட்டல் என்ற பணிகளை ஏற்று ‘பெரியார் பணி செய்வதே என் கடன்’ என்ற லட்சிய வெறியோடு ஒரு வாரகாலம் பயணித்த கழகச் செயல் வீரர்களை இம்மாநாடு பாராட்டுகிறது, மகிழ்கிறது.இந்தப் பயணத்தில் தோழர்கள் செலுத்திய உழைப்பு வீண் போகாது; வரலாற்றில் பதியப்படும் என்று இந்த மாநாடு பெருமை அடைகிறது. பெரியார் முழக்கம் 27032025இதழ்

காஞ்சி சங்கராச்சாரி “பிராமண” வெறிப் பேச்சு-நடவடிக்கை எடுக்கக் கோரி கழகம்

காஞ்சி சங்கராச்சாரி “பிராமண” வெறிப் பேச்சு-நடவடிக்கை எடுக்கக் கோரி கழகம்

பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார்?” “வாருங்கள் வரலாறு பேசுவோம்!!” என்ற‌ தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகம் மார்ச் 15-ல் தொடங்கி மார்ச் 22- வரை தமிழ்நாடு தழுவிய பரப்புரைப் பயணங்களை நடத்தி நிறைவு விழா மாநாட்டை மயிலாடுதுறையில் மார்ச் 22.03.2025 மாலையில் நடத்தியது. மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசியல் சட்டத்திற்கு எதிராக இனவெறியைத் தூண்டி காஞ்சி சங்கராச்சாரி பேசிய பேச்சுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஏப்ரல் 21-இல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த மாநாடு முடிவு செய்தது. தீர்மானத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்தார். பலத்த கரவொலி எழுப்பி, தோழர்கள் வரவேற்றனர். கடந்த ஜனவரி 19-ஆம் தேதி பெங்களூரில் “கர்நாடக பிராமண மகாசபையில்” பேசிய‌‌ காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திர சரஸ்வதி, அரசியல் சட்டத்திற்கு‌ எதிராக இன‌வெறியை தூண்டிவிட்டிருக்கிறார். வேத மதத்தை காப்பாற்ற “பிராமணர்களால்” மட்டுமே முடியும் எனவே “பிராமணியத்தை” நாம் காப்பாற்றியாக வேண்டும். “பிராமணர்களை” அடையாளப்படுத்தும் சந்திய...

ஒன்றிய ஆட்சிக்கு எதிராக கழகம் ஆர்பாட்டம் கல்வி உரிமையை பறிக்காதே

ஒன்றிய ஆட்சிக்கு எதிராக கழகம் ஆர்பாட்டம் கல்வி உரிமையை பறிக்காதே

ஒன்றிய அரசு தமிழ்நாட்டின்‌ பள்ளிக்கல்வி மற்றும் பல்கலைக்கழக கல்வி உரிமைகளைப் பறிப்பதை எதிர்த்து தமிழ்நாடு போர்க்கோலம் பூண்டுள்ளது. திமுக சார்பில் டெல்லியில் கண்டன‌ ஆர்ப்பாட்டம்‌ நடந்து முடிந்துள்ளது. திராவிடர் விடுதலைக் கழகம்‌ தமிழ்நாடடின்‌ முக்கிய நகரங்களில் பிப்.13 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. பல்கலைக் கழக பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு உருவாக்கப்பட்டுள்ள புதிய விதிகளை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இந்த புதிய விதிகளில் பல்கலைக்கழகங்கள் ஒன்றிய அரசின்‌ நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஆபத்து அடங்கியுள்ளது. ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி துண்டறிக்கை அச்சிடப்பட்டு மக்களிடம் வழங்கப்பட்டன. கழகம்‌ ஆர்ப்பாட்டங்களின் தொகுப்பு… சேலம்: மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் யூஜிசி விதிகளில் திருத்தம் செய்து மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறிக்கிற, இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்கிற ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து 13.02.2025 அன்று காலை 10.00 மணியளவில் சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர்...

ஒன்றிய அரசுக்கு எதிராகக் கழகம் போர் முழக்கம்

ஒன்றிய அரசுக்கு எதிராகக் கழகம் போர் முழக்கம்

கோவை: மாநில உரிமையைக் காப்போம்! கல்வி உரிமையை மீட்போம்! என்ற முழக்கத்துடன் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சியைத் தடை செய்ய நினைக்கிற – பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து 12.9‌.2024 அன்று கோவை உக்கடம் வள்ளியம்மை பேக்கரி அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர அமைப்பாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநகரச் செயலாளர் வெங்கட் வரவேற்புரையாற்றினார். கழகத் தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், கோவை மாவட்டத் தமிழ்நாடு மாணவர் கழகப் பொறுப்பாளர் நவீன், திமுக மாணவரணிப் பொறுப்பாளர் மதிவாணன், மக்கள் அதிகாரம் பொறுப்பாளர் மூர்த்தி, பெண்ணிய செயற்பாட்டாளர் லோகநாயகி, மாநகரத் தலைவர் நிர்மல்குமார், CPIML ரெட்ஸ்டார் இனியவன், புரட்சிகர இளைஞர் முன்னணிப் பொறுப்பாளர் மலரவன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். நிறைவாக மாவட்ட அமைப்பாளர் சூலூர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார். முன்னதாக மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரிக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இதில்...

மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்கள் நிறைவு!

மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்கள் நிறைவு!

திண்டுக்கல்: திண்டுக்கல் – தேனி மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 22.08.2024 அன்று பழனி அ.கலையம்புத்தூரில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், கழகப் பொருளாளர் சு.துரைசாமி, கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசிகுமரன், கழகத் தலைமைக்குழு உறுப்பினர்கள் சூலூர் பன்னீர்செல்வம், இரா.உமாபதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கடந்த ஒரு ஆண்டாகத் திண்டுக்கல் மாவட்டக் கழகச் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது என்றும், இணையதள செயல்பாடுகளில் கழகத்திற்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது என்றுப் பேசினார். கூட்டத்தின் முடிவில் திண்டுக்கல் – தேனி மாவட்டப் பொறுப்பாளர்களைக் கழகத் தலைவர் அறிவித்தார். அவை பின்வருமாறு:- திண்டுக்கல் மாவட்டத் தலைவராக மருதமூர்த்தி, மாவட்டச் செயலாளராக மாக்சிம் கார்க்கி, மாவட்ட அமைப்பாளர் மற்றும் இணையதளப் பொறுப்பாளராக ராஜா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக நாச்சிமுத்து, தமிழ்நாடு மாணவர் கழகப் பொறுப்பாளராக ஆயுதன், ஒட்டன்சத்திரம் ஒன்றியத் தலைவராக கபாலி, ஒன்றியச் செயலாளராக ஜோசப், ஒன்றிய அமைப்பாளராக...

ஆதினங்களின்  பல்லக்கு சவாரியை  தடை  செய் மயிலாடுதுறையில் கழகம் – தோழமை அமைப்புகள் ஆர்ப்பாட்டம், கைது

ஆதினங்களின் பல்லக்கு சவாரியை தடை செய் மயிலாடுதுறையில் கழகம் – தோழமை அமைப்புகள் ஆர்ப்பாட்டம், கைது

சைவத்தையும் தமிழையும் பரப்புவதற்காக சைவ மதங்கள் உருவாக்கப்பட்டன என்று கூறப்படுகிறது. ஆனால் ஆதீனங்கள் இன்றைக்கு அந்த பணியை விட்டுவிட்டு இந்துத்துவாவின் தூதர்களாக மாறிப் போய் இருக்கிறார்கள். மோடிக்கு நாடாளுமன்ற திறப்பு விழாவின்போது நேரு சென்று செங்கோல் ஒன்றை ஆதீனங்கள் பரிசாக அளித்து இருக்கின்றன.   அந்த செங்கோல் மவுண்ட் பேட்டன்  பிரபுவிடம் இந்தியாவில் ஆட்சி  மாற்றத்திற்கு அடையாளமாக தரப்பட்டது என்று  ஒன்றிய ஆட்சியும், அமித்ஷாவும் கட்டிவிட்ட கற்பனைகளை திருவாடுதுறை ஆதீனம் இந்து நாளேட்டில் அளித்த பேட்டியில் மறுத்துவிட்டார். அப்படி எந்த ஆதாரமும் இல்லை என்றும், எதற்காக மவுண்ட் பேட்டனிடம் போய் செங்கோலை கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டிருக்கிறார். ஆக பாஜகவின் பொய்யான கதை வசனம் கிழிந்து தொங்கி இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்கட்டும்.   இந்த மடாதிபதிகள் மோடியின் ஆட்சி தான் இந்த காலம் முழுவதும் நீடித்திருக்க வேண்டும் என்று அரசியலும் பேசி இந்துத்துவாவின் பரப்புரையாளர்களாக மாறிப்போய் இருப்பதோடு  தருமபுரம்...

இரசாயன வினாயகன் சிலைகளைக் கரைப்பதைத் தடுக்க அமைச்சரிடம் மயிலாடுதுறை கழகம் மனு

இரசாயன வினாயகன் சிலைகளைக் கரைப்பதைத் தடுக்க அமைச்சரிடம் மயிலாடுதுறை கழகம் மனு

மயிலாடுதுறையில், தமிழ்நாடு அரசு மற்றும் உயர்நீதி மன்ற உத்தரவை மீறி விநாயகர் சிலைகள் பிளாஸ்ட ஆப் பாரீஸ் என்ற வேதிப் பொருளால் செய்யப்பட்டு வர்ணம் பூசி  விநாயகர் சதுர்த்திக்காக தயாராகி வருகின்றன. நீர் நிலைகளை மாசுபடுத்தும் இந்தச்  செயலை தடுத்து நிறுத்த கோரி 05.09.2022 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்  மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் வீ.மெய்யநாதனிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அப்பொழுது பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன்  உடனிருந்தார். இந்நிகழ்வில் திவிக மாவட்ட தலைவர் மகாலிங்கம், செயலாளர் மகேஷ், அமைப்பாளர் செந்தில்குமார், பொருளாளர் விஜயராகவன், நகர தலைவர் நாஞ்சில் சங்கர், செயலாளர் நடராஜன், தோழர்கள் தில்லைநாதன், கார்த்திக், ராகவன், வழக்குரைஞர் சந்தோஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறை கண்காணிப் பாளர், இந்துசமய அறநிலையத் துறை இணை ஆணையர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகியோரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது....

பள்ளத்தூர் நாவலரசன் – தாமோதரன் – மந்திரமா தந்திரமா நிகழ்வுகளோடு மயிலாடுதுறையில் களை கட்டியது மாநாடு!

பள்ளத்தூர் நாவலரசன் – தாமோதரன் – மந்திரமா தந்திரமா நிகழ்வுகளோடு மயிலாடுதுறையில் களை கட்டியது மாநாடு!

மயிலாடுதுறை கடலூர் நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்கள் இணைந்து மே 4ஆம் தேதி மயிலாடுதுறையில் மாநாட்டினை நடத்துவதென முடிவு செய்யப்பட்டது மயிலாடுதுறை மாவட்டத்தில் மாநாட்டின் நோக்கத்தினை வலியுறுத்தி 16 இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. 10000 வண்ண துண்டறிக்கைகள் அச்சடிக்கப்பட்டு மக்களிடையே பரப்புரை செய்யப் பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 இடங்களில் சுவர் விளம்பரமும் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து 500 சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன. மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் மாலை 5 மணி அளவில் பள்ளத்தூர் நாவலரசு குழுவினரின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சியுடன் மாநாட்டு நிகழ்வு தொடங்கியது. மாநாட்டிற்கு  மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமை ஏற்றார். வரவேற்புரை கடலூர் மாவட்ட தலைவர் மதன்குமார் வழங்க, நமக்கான அடையாளம் திராவிட மாடல் என்ற மாநாட்டின் கோரிக்கையை வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் வழக்கறிஞர் வேலு. குணவேந்தன், தமிழர் உரிமை இயக்கத்தின் அமைப்பாளர் சுப்பு மகேஷ் பேசினார்கள். மந்திரம் இல்லை தந்திரமே என்ற...

முற்றுகை; இரயில் மறியல்; ஆர்ப்பாட்டங்கள் ஆளுநருக்கு எதிராகக் கழகம் போர்க்கோலம்

முற்றுகை; இரயில் மறியல்; ஆர்ப்பாட்டங்கள் ஆளுநருக்கு எதிராகக் கழகம் போர்க்கோலம்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட’ நீட் விலக்கு’ மசோதாவை, திருப்பி அனுப்பிய,  ஆளுநரைக் கண்டித்தும், ஆளுநரை பதவி விலகக் கோரியும், கழக சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. சென்னை : 04.02.2022 அன்று மாலை 4 மணியளவில் சென்னை சின்னமலை இராஜீவ் காந்தி சிலை அருகில், ஆளுநர் மாளிகை செல்லும் வழியில், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் ஆளுநர் மாளிகை முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலை இராசேந்திரன் : ஆர்ப்பாட்டத்தில், கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் செய்தியாளர் களிடத்தில், “நீதிபதி ஏ.கே இராஜன் தலைமையில் தமிழ்நாடு அரசு ஒரு குழுவை நியமித்து அந்தக் குழு நீட் தேர்வு குறித்து, பல மருத்துவர்களை, சமூகவியலாளர்களைக் கொண்டு ஆய்வு நடத்தி இந்த தேர்வு கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு எதிரானது என்று பரிந்துரை வழங்கியுள்ளது. ஆனால் ஆளுநர் கூறுகிறார், ‘இந்த நீட் தேர்வை இரத்து செய்தால், ஏழை எளிய மாணவர்களும், கிராமப்புற...