Category: பொள்ளாச்சி

பெரியார் பிறந்தநாள் : கழகத் தோழர்கள் எழுச்சி

பெரியார் பிறந்தநாள் : கழகத் தோழர்கள் எழுச்சி

சேலம் மேற்கு: சேலம் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 146 வது பிறந்தநாள் விழா எழுச்சியுடன் நடைபெற்றது. மேட்டூர் டி.கே.ஆர் இசைக் குழுவின் பறை முழக்கத்தோடு தொடங்கிய இந்நிகழ்விற்கு மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார் தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக மேட்டூரில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்கள் சுதா, சரசுவதி, அறிவுமதி, தேன்மொழி, காயத்ரி ஆகியோர் மாலை அணிவித்தனர். பின்னர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தோழர்கள் அனைவரும் தந்தை பெரியாரின் சிலைக்கு மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மேட்டூர் நகரச் செயலாளர் குமரப்பா கொள்கை முழக்கங்களை எழுப்ப.. தொடர்ந்து தோழர்கள் கொள்கை முழக்கங்களை எழுப்பினர். அதன் பிறகு தோழர்கள் அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து இருசக்கர வாகனப் பேரணி சமத்துவபுரம் பெரியார் சிலையில் தொடங்கி நங்கவள்ளி, மேட்டூர் RS, மேட்டூர், கொளத்தூர், காவலாண்டியூரில் நிறைவுபெற்றது. நங்கவள்ளி...

கழகத்தின் தேர்தல் பரப்புரைகள் தீவிரம் பாஜகவுக்கு எதிரான பரப்புரைகளுக்கு அமோக ஆதரவு!

கழகத்தின் தேர்தல் பரப்புரைகள் தீவிரம் பாஜகவுக்கு எதிரான பரப்புரைகளுக்கு அமோக ஆதரவு!

சேலம் : மேட்டூர் நகரக் கழக சார்பில் “மோடி ஆட்சி தொடரலாமா?” பொதுக்கூட்டம் 06.04.2024 அன்று மேட்டூர் சின்ன பார்க் திடலில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு மேட்டூர் நகரத் தலைவர் செ. மார்ட்டின் தலைமை தாங்கினார், கீ.கோ.தேன்மொழி வரவேற்புரையாற்றினார். கூட்டத்தின் தொடக்க நிகழ்வாக பாடகர் கோவன் கலைக் குழுவின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர் செல்வேந்திரனின் இயக்கத்தில் “கலகக்காரன்” நையாண்டி தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழக சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தராஜ், மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, ம.க.இ.க பாடகர் கோவன் ஆகியோர் மோடி ஆட்சி தொடரலாமா? என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார்கள். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். மேட்டூர் நகர தி.வி.க.செயலாளர் சு.குமரப்பா நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மேட்டூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் சிவக்குமார் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து கழகத்...

எதிர்வரும் நிகழ்வுகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

• பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி அவர்களை ஆதரித்து தெருமுனைக் கூட்டங்கள் ஏப்ரல் 6,7,8,9 ஆகிய 4 நான்கு நாட்கள் நடைபெற உள்ளன. இந்நிகழ்வின் இறுதியில், 7,8 ஆகிய நாட்களில் நடைபெறும் பொது கூட்டங்களில் தலைவர் கொளத்துர் மணி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சிகள் திராவிட இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக நடைபெறுகின்றன. • திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் “மோடி ஆட்சி தொடரலாமா?” என்ற தலைப்பில் இந்தியா கூட்டணியை ஆதரித்து நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டங்கள் ஏப்ரல் 06,09 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மேட்டூர், கொளத்தூர், மேட்டூர் ஆர்.எஸ் உள்ளிட்ட மூன்று இடங்களில் நடைபெறவுள்ளது. இதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இதில் பாடகர் கோவன் குழுவினர் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி நடைபெறும். பெரியார் முழக்கம் 04.04.2024 இதழ்

திமுக வேட்பாளர்களுக்கு நேரில் வாழ்த்து!

திமுக வேட்பாளர்களுக்கு நேரில் வாழ்த்து!

மதுரை : இந்தியா கூட்டணியின் மதுரை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசனை மதுரை மாவட்டச் செயலாளர் மா.பா.மணிஅமுதன் தலைமையில் 31.03.2024 அன்று கழகத் தோழர்கள் நேரில் சந்தித்து ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். மேலும் இந்திராநகர் பிடி.காலனி, தகர பிள்ளையார் கோவில் தெரு, செல்லூர், மேலத் தோப்பு, கீழத் தோப்பு, மதிச்சியம், நெல்பேட்டை, ஒபுளாபடித்துறை, முனிச்சாலை, அந்தோணி மூப்பனார் தெரு, அனுப்பானடி உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்தனர். இதில் மாவட்டத் தலைவர் காமாட்சிப் பாண்டி, மேலூர் பொறுப்பாளர் சத்திய மூர்த்தி, முருகேசன், கண்ணன் காமாட்சி உள்ளிட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர். சென்னை : எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் திருமதி தமிழச்சி தங்கபாண்டியனை 30.03.2024 அன்று கழகத் தோழர்கள் சந்தித்து தங்களது ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். கடந்த 8 மாதங்களாக சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம்...

ஆனைமலையில் – கழகத் தலைவர் நடத்தி வைத்த திருமணம்

ஆனைமலையில் – கழகத் தலைவர் நடத்தி வைத்த திருமணம்

பொன்னமராவதி திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் ஆறுமுகம் – அமுதா ஆகியோரது மகன் அ.ஆ.பாலச்சந்தர் (எ) இனியவன், ஆனைமலை வெல்ஃபேர் கட்சி மாநில துணைத் தலைவர் மணிமாறன் – திலகவதி ஆகியோரது மகள் ம.தி.புனிதா ஆகியோரது “ வாழ்க்கை இணை ஏற்பு விழா” ஆனைமலையில் 25.06.2023 ஞாயிறு அன்று நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. ம.தி. பிரபு அம்பேத்கர் வரவேற்புரை ஆற்றினார். இரா அதியமான், நிறுவனத் தலைவர் – ஆதித் தமிழர் பேரவை. கே.எஸ். அப்துல் ரஹ்மான், மாநிலத் தலைவர் – வெல்ஃபேர் கட்சி. பேராசிரியர் சுந்தரவள்ளி, த.மு.எ.க.ச. சி.விசயராகவன், பெரியாரியல் சிந்தனையாளர். காசு.நாகராசன், அமைப்பு செயலாளர் – தி.இ.த.பே. இரா.கருப்புச்சாமி, கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையம். முகமது கவுஸ், மாநில செயலாளர் – வெல்ஃபேர் கட்சி. ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கழகத் தோழர் ம.ஏ. இளங்கோவன் நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 06072023 இதழ்

பொள்ளாச்சியில் கழக மாநாட்டு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்

பொள்ளாச்சியில் கழக மாநாட்டு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், இது தமிழ்நாடு இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநில மாநாட்டின் விளக்கப் பொதுக்கூட்டம், திருவள்ளுவர் திடலில் மடத்துக்குளம் மோகன் நினைவு மேடையில், 24.06.2023 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வின் தொடக்கமாக கோவன் தலைமையிலான ம.க.இ.க மய்யம் தோழர்களின் புரட்சிகரப் பாடல்களுடனும், கண்ணையா திவிக-விற்கு என்று அவரே எழுதிய பாடலுடன் நிகழ்வுகள் தொடங்கியது. சபரிகிரி வரவேற்புரையாற்ற, பொள்ளாச்சி நகரமன்ற தலைவர். சியாமளா நவநீதகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். அவரைத் தொடர்ந்து மாரிமுத்து மக்கள் விடுதலை முன்னணி, தி.செ.கோபால் ஆதித்தமிழர்பேரவை, வானுகன் தமிழ்ப்புலிகள்கட்சி, வழ.சேதுபதி தமிழ்நாடு தன்னுரிமை மீட்பு இயக்கம், ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர். அதைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சுந்தரவள்ளி – த.மு.எ.க.ச, இராஜீவ் காந்தி தலைவர் – திமுக மாணவரணி, காசு. நாகராசன் – அமைப்புச் செயலாளர் – தி.இ.த.பே., இரா.நவநீதகிருஷ்ணன் – நகரசெயலாளர் – திமுக ஆகியோர்...

ரூபாஸ்ரீ – சபரிகிரி ஜாதி மறுப்பு சுயமரியாதை இணையேற்பு விழா

ரூபாஸ்ரீ – சபரிகிரி ஜாதி மறுப்பு சுயமரியாதை இணையேற்பு விழா

தோழர்கள் ரூபாஸ்ரீ – சபரிகிரி ஆகியோரின் ஜாதி மறுப்பு சுயமரியாதை இணையேற்பு விழா பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி விவாஹா திருமண மண்டபத்தில்  30.10.2022 ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணியளவில் கழகத் தலைவர்  கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. நிகர் கலை குழுவினரின் பறை இசை நிகழ்ச்சியுடன் நிகழ்வுகள் தொடங்கின. முன்னதாக மணமக்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். அப்பொழுது கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டது. முதல் நிகழ்வாக பகுத்தறிவு பாடல்களை ஆனைமலை வினோதினி, திருப்பூர் யாழிசை, யாழினி, கண்ணையா ஆகியோர் பாடினர். இணையேற்பு விழாவிற்கு கோவை மாவட்டக் கழகச் செயலாளர் வே.வெள்ளிங்கிரி முன்னிலை வகித்தார். கழகத் தோழரும் மணமகனுமான  கோ. சபரிகிரி  வரவேற்பு கூறினார்.  கழகத் தலைவர்  கொளத்தூர் மணி  தலைமையில் மணமக்கள் உறுதிமொழி ஏற்றனர். மணமக்களை வாழ்த்தி பேராசிரியர் சுந்தரவள்ளி (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்), கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பொறியாளர் தி.பரமசிவம், (திராவிடர் கழகம்), காசு.நாகராசன்...

மத சார்ப்பற்ற அரசு அலுவலகங்களில் கடவுள் படங்களை வைப்பதும் , ஆயுத பூஜை செய்வதும் சட்டப்படி குற்றமாகும் – பொள்ளாச்சி ஆனைமலை

திராவிடர் விடுதலைக் கழகம்- பொள்ளாச்சி & ஆனைமலை பகுதியில் மதசார்பற்ற அரசு அலுவலகங்களில் கடவுளர் படங்கள் வைப்பதும் ஆயுதபூஜை வழிபாடு நடத்துவதும் சட்ட விரோதமாகும் என்றும், அரசு மற்றும் காவல்துறையை நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்காதே என்றும் கழகத் தோழர்களின் பதாகை மற்றும் சுவரொட்டிகள்