Category: செங்கல்பட்டு

“நாம் தொப்புள் கொடி உறவுகள்’’            கழக மாநாட்டில் தோழர் நல்லகண்ணுவின் பேச்சு

“நாம் தொப்புள் கொடி உறவுகள்’’ கழக மாநாட்டில் தோழர் நல்லகண்ணுவின் பேச்சு

இந்த நல்ல வாய்ப்பைத் தந்த ‘தந்தை பெரியார் திராவிடர் கழக’த்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது பெரியார் ‘குடிஅரசு’ கட்டுரைகளின் இரண்டாவது தொகுதி. ஏற்கனவே 1925 ஆம் ஆண்டுக்கான முதல் தொகுதியை தந்தை பெரியார் திராவிடர் கழகம் 2003-ல் வெளியிட்டிருக்கிறது. தந்தை பெரியாருடைய சிந்தனைகள் மனித சமூகத்துக்கு மிகவும் அடிப்படையானவை. அந்த சிந்தனைகள், தமிழகம் மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும் மனித சமூகத்துக்கு வழிகாட்டும் சிந்தனைகள். அத்தகைய சிந்தனைகளினால் தந்தை பெரியார் வரலாறு படைத்தார். வரலாறு படைத்தது மட்டுமல்ல, வரலாறாகவே வாழ்ந்தார். எதிர்கால வரலாற்றுக்கும் அவர் வழிகாட்டியாக விளங்குகிறார். அதனால்தான் கட்சி வேறுபாடின்றி, நாம் அனைவரும் தந்தை பெரியாரை வணங்குகிறோம்; பாராட்டுகிறோம்; வழிகாட்டியாக ஏற்றுக் கொள்கிறோம். பெரியார் ‘குடிஅரசு’ பத்திரிகை நடத்திய காலங்களில் – அதில் தொடர்ந்து பொதுவுடைமை இயக்கத்தைச் சார்ந்த சிங்காரவேலர், ஜீவா, சாத்தான்குளம் ராகவன் போன்றவர்கள் அதில் தொடர்ந்து எழுதி வந்தார்கள். பகத்சிங் ஆங்கிலத்தில் எழுதிய “நான் ஏன் நாத்திகன்...

இடைவிடாத பரப்புரைகளால் நிறைந்த ‘2025’ கழகத்தின் ஓராண்டு களப்பணிகள்!

இடைவிடாத பரப்புரைகளால் நிறைந்த ‘2025’ கழகத்தின் ஓராண்டு களப்பணிகள்!

சனவரி 12: சென்னை ராயப்பேட்டையில் 25-ஆம் ஆண்டாக தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. திருப்பூர் மாஸ்கோ நகர் பெரியார் திடலில் முழு நாள் நிகழ்வாக தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா எழுச்சியோடு நடைபெற்றது. சனவரி 15: கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பெரியார் விருது வழங்கப்பட்டது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் விருதுடன், ரூ.5 லட்சத்திற்கான காசோலை, ஒரு சவரன் மதிப்பிலான பதக்கம் வழங்கி கவுரவித்தார். பெரியார் விருது பெற்ற கழகப் பொதுச்செயலாளருக்கு ராயப்பேட்டையில் கழகத் தோழர்கள், தோழமை இயக்கத்தினர் பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். சனவரி 22: பெரியார் குறித்து கண்மூடித்தனமாக அவதூறுகளை பரப்பி வந்த சீமான் வீட்டை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி எச்சரித்தது. இதில் திராவிடர் விடுதலைக் கழகம் பெருந்திரளாகப் பங்கேற்று சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. சனவரி 26: பெரியார் விருது...

பயணத்தில் பங்கேற்ற தோழர்களுக்கு பாராட்டு

பயணத்தில் பங்கேற்ற தோழர்களுக்கு பாராட்டு

தமிழர்களின் தன்மான மீட்பர் தலைவர் பெரியார் மீது அவதூறுகளை வீசி, தமிழ்நாட்டில் அவரைத் தனிமைப்படுத்தலாம் என்ற சதித்திட்டத்தை முறியடிக்கவும், அந்தத் துரோகக் கும்பலின் முகத்திரையைக் கிழித்தெறிந்து, மக்களிடத்தில் பெரியாரைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடும் திராவிடர் விடுதலைக் கழகம் இந்த பயணத்திற்குத் திட்டமிட்டது. தன்னல மறுப்போடு, பெரியார் லட்சியத்தில் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் கழகத் தோழர்கள் ஆர்வத்துடன் இந்த பயணத்தில் பங்கேற்றனர். கொளுத்தும் வெயிலில் தங்களை வருத்திக் கொண்டு நாள் ஒன்றுக்கு குறைந்தது நான்கு கூட்டங்கள் வழியாக பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்தித்துப் பரப்புரை, நூல் விற்பனை, நிதி திரட்டல் என்ற பணிகளை ஏற்று ‘பெரியார் பணி செய்வதே என் கடன்’ என்ற லட்சிய வெறியோடு ஒரு வாரகாலம் பயணித்த கழகச் செயல் வீரர்களை இம்மாநாடு பாராட்டுகிறது, மகிழ்கிறது.இந்தப் பயணத்தில் தோழர்கள் செலுத்திய உழைப்பு வீண் போகாது; வரலாற்றில் பதியப்படும் என்று இந்த மாநாடு பெருமை அடைகிறது. பெரியார் முழக்கம் 27032025இதழ்

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தேசிய கல்விக் கொள்கை அறிக்கை, இஸ்ரோ முன்னாள் அதிகாரி கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவால் 2018 டிசம்பர் மாதம் தயாரிக்கப்பட்டு, 2019 ஜூன் 1ஆம் தேதி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வலைதளத்தில் தேசிய கல்வி கொள்கை அறிக்கை ஆங்கிலம், இந்தியில் மட்டும் வெளியானது. வெளியானதிலிருந்து 30 நாட்களுக்குள் கருத்து சொல்ல வேண்டும் என்று அரசு கால நிர்ணயமும் அறிவித்திருந்தது. பல மொழிகள் பேசக்கூடிய மாநிலங்கள் இருந்தும் மாநில மொழிகளில் அறிக்கை வெளியாகவில்லை என்று எதிர்ப்பு வந்தவுடன் தேசிய கல்வி கொள்கை சுருக்கமான வரைவை தமிழில் வெளியிட்டார்கள். இந்த நிலையில் திராவிடர் விடுதலைக் கழகம்  ஓராண்டுக்கு முன்பே 2019 செப்டம்பர் 17 இல் பரப்புரை பயணத்தை நடத்தியது. ‘சமூக நீதியை பறிக்காதே; புதிய கல்வித் திட்டத்தை திணிக்காதே’ என்ற முழக்கங்களுடன் தமிழகம் முழுவதும் கழகம் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான பரப்புரை பயணத்தை மேற் கொண்டது. பயணம் பள்ளிபாளையத்தில் நிறைவுற்றது. செப்டம்பர் 20ஆம்...

சிலை உடைப்பைக் கண்டித்து பெரியார் இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

சிலை உடைப்பைக் கண்டித்து பெரியார் இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் களியப்பேட்டை கிராமத்தில் உள்ள  பெரியார் சிலை 23.01.2020 அன்று இரவு மர்ம நபர்களால் மர்மமான முறையில்  உடைக்கப்பட்டது. பெரியாரின் சிலை உடைப்பைக்  கண்டித்து செங்கல்பட்டு பேருந்து நிலையம் எதிரில், செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைப்பில், திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகளின் சார்பில், மர்ம நபர்களை கைது செய்யக்கோரி மாலை 4 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார், செங்கல்பட்டு மாவட்ட கழகத் தோழர்கள் மற்றும் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 30012020 இதழ்