Category: ஜாதி மறுப்பு மணவிழா

மதுரையில் மணிமேகலை – மா.பா.மணி அமுதன் சுயமரியாதை இணையேற்பு விழா

மதுரையில் மணிமேகலை – மா.பா.மணி அமுதன் சுயமரியாதை இணையேற்பு விழா

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மதுரை மாவட்டச் செய லாளர் மா.பா மணியமுதன் – மணிமேகலை ஆகியோரின் சுயமரியாதை இணையேற்பு விழா 26.02.23 ஞாயிறு அன்று மதுரை மேலூர் ரஹ்மா திருமண மண்டபத்தில் காலை 10.30 மணியளவில் துவங்கி நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்தார். இணையேற்பு விழாவிற்கு ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் இரா.அதியமான் முன்னிலை வகித்தார். விழாவின் துவக்க நிகழ்வாக வானவில் இன உணர்வுப் பாடலைப் பாடினர். மணமக்களை வாழ்த்தி அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் பசும்பொன் பாண்டியன், தமிழ் தேச மக்கள் முன்னணியின் தலைவர் மீ.த.பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர்கள் வன்னி அரசு, கனியமுதன், தமிழ்மண் தன்னுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. ஜெயராமன், கழகத்தின் பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், கழகப் பொருளாளர் துரைசாமி ஆகியோர் பேசினர். தோழர்களின் வாழ்த்துரைகளுக்கு பின்பு கழகத் தலைவர்...

ஜாதி மத மறுப்புத் திருமணம் செய்து கொள்ள விருப்பமா?

ஜாதி மத மறுப்புத் திருமணம் செய்து கொள்ள விருப்பமா?

¨  மணமுறிவு பெற்றவர்கள் ¨   துணையை இழந்தவர்கள் ¨  மாற்றுத் திறனாளிகள் – ஆகியோரும் Manitham Matrimony இணையதளத்தில் இலவசமாகப் பதிவு செய்து பயன் பெறலாம். இச்சேவையை Google Play  அலைப்பேசி செயலியாகவும் (Mobile Apps) பதிவிறக்கம் செய்து பயன் பெறலாம். மனிதம் திருமண தகவல் நிலையம் எண்.5/9, பாலமுத்துகிருஷ்ணா தெரு தர்மாபுரம், தியாகராய நகர், சென்னை – 600 017. அலைபேசி எண். 7604977781 மின்னஞ்சல் : manithammatrimonial@gmail.com web: http//manithammatrimony.com பெரியார் முழக்கம் 16022023 இதழ்

கழகத் தலைமையகத்தில் நடந்த ஜாதி மறுப்பு – புரட்சிகர மணவிழா

கழகத் தலைமையகத்தில் நடந்த ஜாதி மறுப்பு – புரட்சிகர மணவிழா

கணவனை இழந்த இரண்டு குழந்தைகளுடன் வாழும் சித்ராவிற்கும்- ஹரிகிருஷ்ணனுக்கும் 25.04.22 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் தலைமை அலுவலகத்தில் சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. இணையர் கழக வார ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு நன்கொடையாக 1000 ரூபாய் வழங்கினர்.   பெரியார் முழக்கம் 05052022 இதழ்

குமாரபாளையத்தில் பெரியாரிய – இடதுசாரி அமைப்பினர் இணைந்து நடத்திய மணவிழா

குமாரபாளையத்தில் பெரியாரிய – இடதுசாரி அமைப்பினர் இணைந்து நடத்திய மணவிழா

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் குமாரபாளையம் கம்பன் நகரில் 05.02.2021 அன்று காலை 11 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழக நகரத் தலைவர் மீ.த.தண்டபாணி தலைமையில் தலித்குமார் வரவேற்புரை நிகழ்த்த, மு. கேப்டன் அண்ணாதுரை, வழக்கறிஞர் கார்த்திகேயன், ஏ. தேவி, எழில்சேரன், பி.ஏ., பி.எல்., பி.லிட்., வழக்குரைஞர் முன்னிலை வகிக்க வாழ்த்துரையாக மு.சாமிநாதன், ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் வேணுகோபால், அன்பழகன் (இலக்கியத் தளம்), பொன் கதிரவன், மார்க்சிய கம்யூனிஸ்ட் (மார்க்சிய-லெனினிஸ்ட்) வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக மணமக்கள் சரண்யா, பி.ஏ., ச. நந்தக்குமார், பி.ஏ.,  ஆகியோருக்கு உறுதிமொழி கூறி நகரத் தலைவர் வாழ்க்கை இணையேற்பு விழாவை நடத்தி வைத்தார். குருவை வேல்முருகன், முருகாண்டி, வடிவேல் மற்றும் குமாரபாளையம் கழகத் தோழர்களும், கழகக் குடும்பங்களும், மாவட்டச் செயலாளர் மு.சரவணன், முத்துப்பாண்டி மற்றும் தோழர்களும் கலந்து கொண்டனர். இணையேற்பு விழாவில் அனைவருக்கும் தேநீர் விருந்து வழங்கப்பட்டது. தேவி-மாதேஸ்வரன் நன்றி கூற நிகழ்வு நிறைவடைந்தது. ‘புரட்சிப்...

மா.வேழவேந்தன் இல்ல ஜாதி-மத மறுப்பு மணவிழா

மா.வேழவேந்தன் இல்ல ஜாதி-மத மறுப்பு மணவிழா

சென்னை மாவட்ட கழகத் தலைவர் வேழ வேந்தன்-பேபி இணையரின் மகள் இளவரசி – ஆம்பூர் முபீன் வாழ்க்கை ஒப்பந்த நிகழ்வு 3.2.2021 அன்று சென்னை இராயப் பேட்டை பகல் 11 மணியளவில் நடந்தது. இது ஜாதி-மத மறுப்பு திருமணமாகும். மண விழாவில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் சரசுவதி பங்கேற்று வாழ்த்தினர். சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் பங்கேற்றனர். மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு நன் கொடையாக ரூ.5,000/- பொதுச்செயலாளரிடம் வேழவேந்தன் வழங்கினார். பெரியார் முழக்கம் 11022021 இதழ்

இணையம் வழியாக கழகத் தோழர்களின் மண விழாக்கள்

இணையம் வழியாக கழகத் தோழர்களின் மண விழாக்கள்

கொரோனா ஊரடங்கில் இணையதளம் வழியாக இரண்டு கழகத் தோழர்களின் சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. 01-06-2020, திங்கள் காலை 11:30 மணிக்கு ஹரிஷ்குமார் – ரூபஸ்ரீ ஆகியோரின் இணையேற்பு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்விற்கு தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி வரவேற்புரையாற்றினார். கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி தலைமை வகித்தார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். Team Link வாயிலாக இணையேற்பை நடத்தி வைத்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப் புரையாற்றினார். இறுதியாக தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் தென்றல் நன்றி கூறினார். 27.08.2020 அன்று காலை 10 மணியளவில், சென்னை தலைமை அலுவலகத் தில் அருண்குமார்-சிவஜோதி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு நிகழ்வு நடை பெற்றது. தென் சென்னை மாவட்ட செய லாளர் உமாபதி தலைமை வகித்தார். பேரா சிரியர் சரஸ்வதி இணை யேற்பை நடத்தி வைத்தார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர்...

கழக ஏடுகளுக்கு நன்கொடை

கழக ஏடுகளுக்கு நன்கொடை

ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட வடசென்னை கழக  இணையர்கள் தினகரன்-ஜெயந்தி ஆகியோர் குழந்தைப் பிறந்த மகிழ்வாக கழக ஏடுகளின் வளர்ச்சிக்கு ரூ.10,000/-த்தை பெரியார் பிறந்த நாளான செப். 17 அன்று பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனிடம் வழங்கினர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்) பெரியார் முழக்கம் 03102019 இதழ்

பெரியார் யுவராஜ்-லீலாவதி  ஜாதி-தாலி சடங்கு மறுப்பு மணவிழா

பெரியார் யுவராஜ்-லீலாவதி ஜாதி-தாலி சடங்கு மறுப்பு மணவிழா

சென்னை மாவட்ட ‘நிமிர்வோம்’ வாசகர் வட்ட அமைப்பாளரும் கழக செயற்பாட்டாளருமான பெரியார் யுவராஜ்-லீலாவதி ஜாதி-சடங்கு-தாலி மறுப்பு மணவிழா, செப். 22, 2019 அன்று மயிலாடுதுறை சோழம்பேட்டை கே.ஜி.ஆர். திருமண மண்டபத்தில் மாலை 7 மணியளவில் நிகழ்ந்தது. நாகை மாவட்ட கழகச் செயலாளர் மகேஷ் வரவேற்புரையாற்றினார். தஞ்சை மாவட்டக் கழகத் தலைவர் சாக்கோட்டை இளங்கோவன், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வாழ்த்துரை வழங்கினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று மணவிழாவை நடத்தி வைத்தார். முன்னதாக கோவை கழகத் தோழர் இசைமதி – பெண்ணுரிமைப் பாடல் பாடினார். கோவை கழக செயல்பாட்டாளர் நிர்மல்குமார், கழகத் தோழர் இசைமதி ஆகியோர் ஜாதி மறுப்பு மணவிழாவை பொதுக் கூட்ட மேடையில் நடத்திக் கொண்டனர். தோழர் இசைமதியின் சகோதரியே லீலாவதி என்பது குறிப்பிடத்தக்கது. கொள்கையை உறவாக்கிக் கொள்ளும் பண்பாட்டுப் புரட்சியை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் நிகழ்த்தி கழகத்துக்கு பெருமை சேர்த்து வருகிறார்கள். கோவையிலிருந்து தனி...

லீலாவதி-பெரியார் யுவராஜ் ஜாதி – தாலி – சடங்கு மறுப்பு சுயமரியாதை வாழ்க்கை இணையேற்பு விழா !

லீலாவதி-பெரியார் யுவராஜ் ஜாதி – தாலி – சடங்கு மறுப்பு சுயமரியாதை வாழ்க்கை இணையேற்பு விழா !

கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. 22.09.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மயிலாடுதுறை, சோழம்பேட்டை, கே.ஜி.ஆர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விணையேற்பு விழாவில் இருவீட்டார், கழகத்தின் முன்னணி நிர்வாக்கிகள், தோழர்கள் உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூல் வழங்கப்பட்டது.

கனிமொழி- பத்மநாதன் திருமணம்

கனிமொழி- பத்மநாதன் திருமணம்

கோவை போத்தனூரில் உள்ள சங்கம் திருமண மண்டபத்தில் 8.9.2019 அன்று மாலை 7 மணிக்கு தோழர்கள் கனிமொழி – பத்மநாதன் ஆகியோருக்கு சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. திருமணத்தை கழகத் தலைவர் கொளத்தூர்மணி தலைமையேற்று நடத்தி வைத்தார். திமுகவின்  முன்னாள் அமைச்சர்கள் பொங்கலூர் பழனிச்சாமி, அந்தியூர் செல்வராஜ், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான்,  தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தி உரையாற்றினர். திருமணத்தில் கோவை பகுதி திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். திருமணத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூல் வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 19092019 இதழ்

தேன்மொழி – மணிகண்டன் ஜாதி-சடங்கு மறுப்பு மணவிழா

தேன்மொழி – மணிகண்டன் ஜாதி-சடங்கு மறுப்பு மணவிழா

கழகத்தின் மாவட்ட செயலாளர் மேட்டூர் கி.கோவிந்தராஜ்-மு.கீதா இணையரின் மகள் கீ.கோ. தேன்மொழி – திருப்பூர் நா. பரமசிவம்-ப. மாலதி ஆகியோரின் மகன் கழகத் தோழர் ப. மணிகண்டன் ஆகியோர் ஜாதி-சடங்கு மறுப்பு மண விழா ஜன. 3, 2019 பகல் 11 மணியளவில் மேட்டூர் அணை அரசப்பா திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி மணவிழாவை நடத்தி வைத்தார். மாவட்ட கழகத் தலைவர் ப.கு. சூரிய குமார் வரவேற்புரையாற்றினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் அ. தமிழரசு, காவல் உதவி ஆய்வாளர் (ஓய்வு) நா. முனியன் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவினர் இசை நிகழ்ச்சியும் பறை இசையும் நடைபெற்றது. தமிழ்நாடு முழுதுமிருந்தும் கழகத் தோழர்கள் மணவிழாவுக்கு வந்திருந்தனர். அனைவரும் ‘தமிழின உரிமைக்கு எதிரி யார்?’ நூல் பரிசாக வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 07022019 இதழ்

பாரி சிவா-ஜெயந்தி ஜாதி மறுப்பு மணவிழா

பாரி சிவா-ஜெயந்தி ஜாதி மறுப்பு மணவிழா

தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் பாரி சிவா எனும் சிவக்குமார் – ஜெயந்தி (கழகத் தோழர் முழக்கம் உமாபதியின் சகோதரி) ஜாதி மறுப்பு மணவிழா ஜனவரி 27ஆம் தேதி பெண்ணாடம் வள்ளலார் மண்டபத்தில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடந்தது. இயக்குனர் கவுதமன் வாழ்த்துரை வழங்கினார்.  கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன், பரப்புரைச் செயலாளர் பிரபாகரன், தலைமைக் குழு உறுப்பினர் உமாபதி, இளையராஜா, சூலூர் பன்னீர் செல்வம் மற்றும் தலைமைக் கழகப் பொறுப்பாளர்களும், தமிழகம் முழுதுமிருந்தும் கழகத் தோழர்களும் ஏராளமாகத் திரண்டு வந்திருந்தனர். சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் தனிப் பேருந்தில் மணவிழாவுக்கு வந்திருந்தனர். மணமக்கள் வரவேற்பு சென்னை இராஜா அண்ணாமலைபுரம் சமூக நலக் கூடத்தில் பிப்ரவரி 3ஆம் தேதி மாலை சிறப்புடன் நிகழ்ந்தது. கழகத் தோழர்கள் உறவினர்கள் ஏராளமாகத் திரண்டு வந்திருந்தனர். மணவிழா மகிழ்வாக கழக வளர்ச்சி நிதிக்கு மணமக்கள்...

தியாகி இம்மானுவேல் பேரவைச் செயலாளர் சந்திரபோசு இல்ல ஜாதி மறுப்பு மண விழாக்கள்

தியாகி இம்மானுவேல் பேரவைச் செயலாளர் சந்திரபோசு இல்ல ஜாதி மறுப்பு மண விழாக்கள்

21-4-2018 சனிக்கிழமை அன்று காலை 10-00 மணிக்கு, இராமநாதபுரம் மாவட்டம், பரமக் குடி, லேனா மகாலில், தியாகி இமானுவேல் பேரவைப் பொதுச் செயலாளர் சந்திர போசு-சரசுவதி இணையரின் மகன் களான ச.ச.அனீசு குமார், அம்பேத்ராஜ் ஆகியோருக்கு, ஜாதி, சடங்கு, தாலி மறுப்பு சுயமரியாதை வாழ்க்கை இணையேற்பு விழா கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது.  கழகத் தலைவர் கொளத்தூர் மணி வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த உறுதிமொழிகளைக் கூறிட, ஆணவக் கொலையில் தனது இணையர் சங்கரைப் பறிகொடுத்த உடுமலை கவுசல்யா மாலைகளை எடுத்துக் கொடுக்க நடந்தேறியது. விழாவின் சிறப்பாக – திருமண முறை, பெண்ணுரிமை, ஜாதியொழிப்பு குறித்த கட்டுரைகள் அடங்கிய  ‘தமிழ்த்தேசிய விடுதலைக்கான வாழ்வியல் பண்பாடு’ எனும் நூல் வெளியிடப்பட்டது. தமிழ்த் தேசிய முன்னணி பொழிலன், தமிழ்த்தேச விடுதலை முன்னணி மீ.த.பாண்டியன், கிருஷ்ணஜோதி ஆகியோர்  இணையேற்பு விழா விளக்கவுரையாற்றினர். விழாவினை தியாகி இமானுவேல் பேரவையின் இளைஞரணிச் செயலாளர் புலி.பாண்டியன் தொகுத்து...

தோழர் சந்திரபோசு குடும்ப இணையேற்பு விழா ! பரமக்குடி 21042018

தோழர் சந்திரபோசு குடும்ப இணையேற்பு விழா ! பரமக்குடி 21042018

தோழர் சந்திரபோசு குடும்ப இணையேற்பு விழா ! 21-4-2018 அன்று காலை 10-00 மணிக்கு, இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, லேனா மகாலில், தியாகி இமானுவேல் பேரவைப் பொதுச்செய்லாளர் சந்திர போசு-சரசுவதி இணையரின் மகன்களான ச.ச.அனீசுகுமார், அம்பேத்ராஜ் ஆகியோருக்கு, ஜாதி,சடங்கு,தாலி மறுப்பு சுயமரியாதை வாழ்க்கை இணையேற்பு விழா கழகத் தலைவர் கொளத்துர் மணி தலைமையில் நடைபெற்றது. கழகத்தலைவர் கொளத்தூர் மணி வாழ்க்கைத்துணைநல ஒப்பந்த உறுதிமொழிகளைக் கூறிட, ஆணவக்கொலையில் தனது இணையர் சங்கரைப் பறிகொடுத்த தோழர் உடுமலை கவுசல்யா மாலைகளை எடுத்துக் கொடுக்க இணையேற்பு விழா நடந்தேறியது. விழா சிறப்பாக திருமண முறை, பெண்ணுரிமை, ஜாதியொழிப்பு குறித்த கட்டுரைகள் அடங்கிய ‘தமிழ்த்தேசிய விடுதலைக்கான வாழ்வியல் பண்பாடு’ எனும் நூல் வெளியிடப்பட்டது. தமிழ்த் தேசிய முன்னணியின் தோழர் பொழிலன், தமிழ்த்தேச விடுதலை முன்னணியின் தோழர் மீ.த.பாண்டியன்,தோழர் கிருஷ்ணஜோதி ஆகியோர் இணையேற்பு விழா விளக்கவுரையாற்றினர். விழாவினை தியாகி இமானுவேல் பேரவையின் இளைஞரணிச் செயலாளர் புலி.பாண்டியன் தொகுத்தார் பல்வேறு அரசியல்,...

மாநாட்டு மேடையில் சிறப்பு நிகழ்வாக நடைபெற்ற  ”ஜாதி மறுப்புத்திருமணங்கள்’

மாநாட்டு மேடையில் சிறப்பு நிகழ்வாக நடைபெற்ற ”ஜாதி மறுப்புத்திருமணங்கள்’

மாநாட்டு மேடையில் சிறப்பு நிகழ்வாக நடைபெற்ற ”ஜாதி மறுப்புத்திருமணங்கள்” 12-3-2018 திருப்பூரில் நடைபெற்ற மகளிர் தின மாநாட்டில் இரண்டு ஜாதிமறுப்புத் திருமணங்கள் நடைபெற்றன. வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்தத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவேற்றிவைத்தார். சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், ஆவணியூர், வி.என்.பாளையம் தங்கம்மாள்-அண்ணாமலை ஆகியோரின் மகன் செல்வகுமார் – எடப்பாடி வட்டம்,ஜலகண்டபுரம் சாலை காவலர் குடியிருப்பில் வசிக்கும் சின்னராசு-மயில் ஆகியோரின் மகள் ஸ்வாதிப்பிரியா ஆகியோருக்கும், சேலம்,உடையாப்பட்டி, சாந்தி-கிருஷ்ணன் ஆகியோரின் மகன் பிரபு – பழனியில் வசிக்கும் செல்வி-வடிவேல் ஆகியோரின் மகள் பிரியதர்ஷினி ஆகியோருக்கும் மாநாட்டு மேடையில் வாழ்க்கை இணையேற்பு நிகழ்ந்தது. இரண்டு இணையேற்பும் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் ஆகியோர் இடையே நிகழ்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தலைமைக் கழகத்தில்  ஜாதி – தாலி மறுப்பு மணவிழா

தலைமைக் கழகத்தில் ஜாதி – தாலி மறுப்பு மணவிழா

சென்னை திராவிடர் விடுதலைக் கழக தலைமை நிலையத்தில் 26.2.2018 பகல் 12 மணியளவில் ஜாதி-தாலி மறுப்பு வாழ்க்கை ஒப்பந்த விழா சிறப்புடன் நடைபெற்றது. சென்னை எம்.கணேசன்-மீனாட்சி ஆகியோரின் மகன் ஜி. இராமகிருஷ்ணன், சென்னை சைதாப்பேட்டை ஜே.ஏ.பார்த்திபன்-ஜூலி ஆகியோரின் மகள் பி.நிவேதா ஆகியோரின் மணவிழாவை உறுதி ஏற்புக் கூறி பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நடத்தி வைத்தார். தென்சென்னை மாவட்டக் கழகத் தலைவர் வேழவேந்தன், செயலாளர் இரா. உமாபதி, தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் ந. அய்யனார், வடசென்னை மாவட்டச் செயலாளர் செந்தில், உள்ளிட்ட தோழர்களும் நண்பர்களும் திரண்டிருந்தனர். மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு ரூ.2000 நன்கொடை வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 01032018 இதழ்

கழகம் துணை நிற்கும்

ஈரோடு மாநாட்டு மேடையில் மற்றொரு நிகழ்வும் நடந்தது. 10 ஆண்டுகளுக்கு முன் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து  கொண்ட ரவிக்குமார்-ஜோதி இணையரை குடும்பத்தினர் ஒதுக்கி வைத் திருந்தனர். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பெண்ணின் பெற்றோர்களான பாலசுப்பிரமணியன்-மீனாட்சி, திருமணத்தை அங்கீகரித்து இருவரையும் குடும்பத்தில் இணைத்துக் கொண்டனர். இதனால் பெண்ணின் பெற்றோரை அவரது ஜாதியினர் (பிற்படுத்தப்பட்ட ஜாதி) சமூகத்திலிருந்து விலக்கி வைத்துள்ளனர். இந்த நிலையில் ஜாதி விலக்குக் குள்ளான பெற் றோர்களையும் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட இணை யர்களையும் மேடையில் ஏற்றி “இங்கே திரண் டிருக்கும் கழகக் குடும்பங்கள் இவர்களுக்கு என்றும் துணை நிற்கும்” என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவித்தார்.  வேறு மிரட்டல்கள் வந்தாலும் அதை கழகம் எதிர்கொள்ளும் என்றும் அறிவித்தார். பலத்த கரவொலி எழுப்பி கூட்டத்தினர் ஆதரவை வெளிப்படுத்தினர். பெரியார் முழக்கம் 21122017 இதழ்

மாநாட்டு மேடையில் ஜாதி மறுப்புத் திருமணம்

வழமையாக கழக நிகழ்வுகளில் நடக்கும் ஜாதி மறுப்புத் திருமணம் ஈரோடு பெண்கள் சுயமரியாதை மாநாட்டு மேடையிலும் நடந்தது. திருமணத்தை உறுதிமொழி கூறி நடத்தி வைத்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘இந்தத் திருமணம் ஜாதி ஆணவம் பேசும் ஜாதியைச் சார்ந்த பிற்படுத்தப்பட்டவருக்கும் தாழ்த்தப்பட்டவருக்கும் நடக்கும் திருமணம்” என்று பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார். சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் திண்ணப்பட்டி கிராமம் தங்கவேலு-வெண்ணிலா இணை யரின்மகன் பிரபாகரன்,  ஓமலூர் வட்டம் பண்ணப்பட்டி கிராமம் குணசேரகன், இலட்சுமி இணையரின் மகள் நந்தினி ஆகியோர் மாலை மாற்றி இருவரும் இணைந்து வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியை ஏற்றனர். பெரியார் முழக்கம் 21122017 இதழ்

கோகுல்-பிரேமா இணையேற்பு விழா

கோகுல்-பிரேமா இணையேற்பு விழா

12-11-2017 அன்று காலை 11-00 மணிக்கு, சேலம், சிவதாபுரம் மாணிக்கம் திருமண மண்டபத்தில், தோழர் கோகுலக் கண்ணனுக்கும், கழகப் பொறுப்பாளர் ஏற்காடு பெருமாளின் அக்கா மகள் பிரேமாவுக்கும், ஜாதி, தாலி, சடங்கு மறுப்பு இணையேற்பு விழாவை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் வீரபாண்டி ஆ. இராசா தலைமையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நடத்திவைத்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கில் கழகத் தோழர்கள் அரங்கு நிரம்பி வழியும் வண்ணம் திரளாகத் திரண் டிருந்தனர். விழா நிறைவில் அனைவருக்கும் அசைவ உணவு வழங்கப்பட்டது. இளம்பிள்ளை கழகத் தோழர்கள் மணவிழாப் பரிசாக ஒரு மோட்டார்  சைக்கிளை வழங்கினர். கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு மணமகன் கோகுலக்கண்ணன் ரூ.10,000/- நன்கொடை வழங்கினார். பெரியார் முழக்கம் 23112017 இதழ்

தோழர் கோகுலக் கண்ணன் – தோழர் பிரேமா வாழ்க்கை இணையேற்பு விழா சேலம் 12112017

12-11-2017 அன்று காலை 11-00 மணிக்கு, சேலம்,சிவதாபுரம் மாணிக்கம் திருமண மண்டபத்தில், தோழர் கோகுலக் கண்ணனுக்கும், ஏற்காடு தோழர் பெருமாளின் அக்கா மகள் பிரேமாவுக்கும், ஜாதி, தாலி, சடங்கு மறுப்பு இணையேற்பு விழா முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் வீரபாண்டி ஆ.இராசா தலைமையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நடத்திவைத்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கழகத் தோழர்கள் அரங்கு நிரம்பி வழியும் வண்ணம் திரளாகத் திரண்டிருந்தனர். விழா நிறைவில் அனைவருக்கும் அசைவ உணவு வழங்கப்பட்டது. இளம்பிள்ளை கழகத் தோழர்கள் மணவிழாப் பரிசாக ஒரு மோட்டார்  சைக்கிளை வழங்கினர். மேலும் படங்களுக்கு  

பெரியார் சிலை முன் நடந்த சுயமரியாதை திருமணம்

செப்டம்பர்-17 தந்தை பெரியாரின் 139 –வது பிறந்தநாள் விழா அன்று கோபி பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் சிலை முன்பு அளுக்குளி சேர்ந்த விஜய சாரதிக்கும் கொளப்பலூர் பகுதியை சார்ந்த அபிராமிக்கும், சாதிமறுப்பு மற்றும் சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. மாநில வெளியிட்டு செயலாளர் இராம.இளங்கோவன் வாழ்க்கை துணைநல ஒப்பந்தத்தை வாசிக்க மணமக்கள் இருவரும் அவ்வுறுதி மொழியை ஏற்றுக்கொண்ட பின் மாலை மாற்றிக்கொண்டனர். இவ்வாறு நடந்த எளிமையான நடந்த திருமணத்தை அப்பகுதி பொதுமக்கள் பெருந்திரளாக வியப்புடன் பார்த்தனர். திருமணத்திற்காண ஏற்பாடுகளை அளுக்குளி கிளைக்கழக தோழர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.

தமிழ்ப்பிரியன் – ராஜநந்தினி இணையேற்பு விழா

தமிழ்ப்பிரியன் – ராஜநந்தினி இணையேற்பு விழா

திராவிடர் விடுதலைக் கழக ஈரோடு மாவட்டச் செயலாளர் சண்முகப் பிரியன் மகன் தமிழ்ப் பிரியன் – ராஜநந்தினி ஆகியோர் வாழ்க்கை இணையேற்பு விழா 03.09.2017 அன்று ஈரோடு அசோகபுரம் கே.கே.எஸ்.கே மகால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வாழ்க்கை இணையேற்பு நிகழ்விற்கு, கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி தலைமை தாங்கினார். ஆசிரியர் சிவக்குமார் வரவேற்புரையாற்றினார். ஈ.கே.எம் நிறுவனங்களின் உரிமையாளர் “முகமது தாஜ்“, “வெங்காயம்” திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராச்குமார், மருத்துவர் சக்திவேல், தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், மாநில வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், விடுதலைச் சிறுத்தை கட்சியின் மாநில மருத்துவரணி துணைச் செயலாளர் மருத்துவர் கலைச்செல்வன், ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் செல்லப்பன், ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் நாத்திகசோதி, நாமக்கல் மாவட்டத் தலைவர் சாமிநாதன், மூத்த பெரியார் தொண்டர் அய்யா இனியன் பத்மநாபன்,  இந்தியப் பிரியன் ஆகியோர் வாழ்த்துரை...

அசுவிதா – நாகராசு மண விழா !

கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் அசுவிதா – நாகராசு ஜாதி மறுப்பு இணையர் வாழ்க்கை ஒப்பந்த விழா 10.09.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் திருப்பூர் ஸ்ரீஸ்டி மஹால், (சிக்கண்ணா கல்லூரி பின்புறம்) கல்லூரி சாலையில் நடைபெற்றது. நிகழ்வில் கழக பொருளாளர் துரைசாமி,  தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி, திருப்பூர் மாவட்ட தலைவர் முகில்ராசு வாழ்த்துரை வழங்கினர். பெரியார் முழக்கம் 14092017 இதழ்

தோழர்.தமிழ்ப்பிரியன் – ராஜநந்தினி இணையேற்பு விழா ஈரோடு 03092017

திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளர் தோழர் சண்முகப்பிரியன் அவர்களின் மகன் தோழர் தமிழ்ப்பிரியன் – ராஜநந்தினி ஆகியோர் வாழ்க்கை இணையேற்பு விழா , 03.09.2017 அன்று ஈரோடு அசோகபுரம் கே.கே.எஸ்.கே மகால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.. வாழ்க்கை இணையேற்பு நிகழ்விற்கு, திராவிடர் விடுதலைக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் தோழர் இரத்தினசாமி தலைமை தாங்கினார். ஆசிரியர் சிவக்குமார் வரவேற்புரையாற்றினார். ஈ.கே.எம் நிறுவனங்களின் உரிமையாளர் “EKM முகமது தாஜ்”, “வெங்காயம்” திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராச்குமார், மருத்துவர் சக்திவேல், தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, திராவிடர் விடுதலைக் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் தோழர் பால்.பிரபாகரன், மாநில வெளியீட்டுச் செயலாளர் தோழர் இராம.இளங்கோவன், விடுதலைச் சிறுத்தை கட்சியின் மாநில மருத்துவரணி துணைச் செயலாளர் மருத்துவர் கலைச்செல்வன், திராவிடர் விடுதலைக் கழக ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் செல்லப்பன், ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் நாத்திகசோதி, நாமக்கல்...

‘நட்புத் திருவிழா’வாக நடந்த பாமரன் இல்ல மண விழா

‘நட்புத் திருவிழா’வாக நடந்த பாமரன் இல்ல மண விழா

சீரிய பெரியாரியலாளரும் எழுத்தாளருமான பாமரன் – யாழ்மொழி ஆகியோரின் மகன் சேகுவேரா-கனிமொழி ஜாதி மறுப்பு இணை ஏற்பு விழா, ‘பீடை மாதம்’ என்று மூடநம்பிக்கையாளர்களால் கருதப்படும் ஆடி 28ஆம் தேதி (ஆகஸ்ட் 13) மாலை கோவை பி.எம்.என். திருமண மண்டபத்தில் ‘நண்பர்கள் கூடும் திருவிழா’வாக சிறப்புடன் நடந்தது. நிமிர்வு கலையகத்தின் பறை இசை யுடன் நிகழ்வுகள் தொடங்கின. கலைஞர்களுக்கு கவிஞர் அறிவுமதி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நினைவு பரிசுகளை வழங்கினர். ஈழப் போராளி பாலகுமார் துணைவியார், பாமரனின் வயது முதிர்ந்த தாயார் முன்னிலையில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மணமக்களுக்கு சுயமரியாதை திருமணத்துக்குரிய உறுதி மொழிகளைக் கூற, மணமக்கள் உறுதியேற்று மாலை மாற்றிக் கொண்டனர். பெரியாரியலாளரும் ஆய்வாளருமான தொ. பரமசிவம், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க தலைவர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் கலை, இலக்கிய, திரை உலக நண்பர்கள்,...

அமுதவர்சினி – சிவகுமார் இல்லற ஏற்பு விழா! சூலூர் 25082017

சூலூரில் 25082017 இல்லற ஏற்பு விழா ! ”அமுதவர்சினி – சிவகுமார்.”ஆகியோரின் இணையேற்பு விழா கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது . நாளை 25.8.2017 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி, சூலூர், கே.எஸ்.வி.திருமண அரங்கில் கழகத்தலைவர் தலைமையிலும், பல்வேறு தோழமை அமைப்புகளின் தலைவர்கள் வாழ்த்துரையுடன் நடைபெற உள்ளது.

திருப்பூரில் ஜாதி, சடங்கு மறுப்புத் திருமணம்

திருப்பூரில் ஜாதி, சடங்கு மறுப்புத் திருமணம்

20.02.2017 அன்று காலை திருப்பூர் அம்மாபாளையம்,பெரியார் படிப்பகத்தில் க.விஜயலட்சுமி-ச.வீரகுமார் ஆகியோரின் ஜாதி மறுப்பு, சடங்கு மறுப்புத் திருமணம் திருப்பூர் திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட கழகத் தலைவர் முகில்ராசு தலைமையில் நடை பெற்றது. இத்திருமணத்திற்கு அதிமுக பகுதி செயலாளர் இரா.கோபிநாதன், கழகத் தோழர் நகுலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்தத்தை இணை யர்கள் கழகத் தோழர்கள் முன்னிலையில் உறுதிமொழியாக ஏற்றுக்கொண்டனர். குட்டி பிரசாந்த், மாநகர தலைவர் தனபால், அமைப்பாளர் முத்து, ஜெயா, நசீர், பாலு சந்தர் கணேசன்  இந்நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். பெரியார் முழக்கம் 16032017 இதழ்

புதுவையில்  சாதி மறுப்பு மண விழா

புதுவையில் சாதி மறுப்பு மண விழா

புதுவை அரியாங்குப்பம் ‘தீர்க்க சுமங்கலி’ திருமண நிலையத்தில் 22.1.2012 காலை 8 மணியளவில் டாக்டர் ம.பா. மதிவாணன், எம்.டி. (த.பாண்டுரங்கன்-பா.மல்லிகா இணையரின் மகன்) – டாக்டர் சு.சிவரஞ்சனி, எம்.எஸ்., (கே.சுப்ரமணியன் – சு.ஜெயா இணையரின் மகள்) ஆகியோர் சாதி மறுப்பு மணவிழா கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் சிறப்புடன் நடந்தது. புதுவை கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் வரவேற்றுப் பேசினார். பெரியார் முழக்கம் 16022012 இதழ்

பனிமலர்-சதீஷ் சாதி மறுப்பு மணவிழா

பனிமலர்-சதீஷ் சாதி மறுப்பு மணவிழா

கோவை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் இரா.பன்னீர்செல்வம் – தமிழ்ச் செல்வி ஆகியோரின் மகளும், சூலூர்  கழகத் தோழர் வீரமணியின் தங்கையுமான ப. பனிமலர் – இரா. சதீஷ் நாராயணன் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா 27.2.2012 அன்று பேராசிரியர் சரசுவதி தலைமையில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி வாழ்க்கைத் துணை ஏற்பு நிகழ்வை நடத்தி வைத்தார். பொதுச் செயலாளர்கள் விடுதலை இராசேந்திரன், கு.இராமகிருட்டிணன், பேராசிரியர் புரட்சிக்கொடி, சூலூர் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் சூ.ர. தங்கவேலு, வழக்கறிஞர் தடா சந்திரசேகர், வழக்கறிஞர் மகாலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இது ஒரு சாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணமாகும். மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு ரூ.1000நன்கொடை வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 08032012 இதழ்

ஜாதி மறுப்பு,சடங்கு மறுப்புத்திருமணம் ! திருப்பூர் 20022017

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 20.02.2017 அன்று காலை திருப்பூர் அம்மாபாளையம்,பெரியார் படிப்பகத்தில் க.விஜயலட்சுமி-ச.வீரகுமார் ஆகியோரின் ஜாதி மறுப்பு,சடங்கு மறுப்புத்திருமணம் மாவட்டகழகத்தலைவர் முகில்ராசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இத்திருமணத்திற்கு அதிமுக பகுதிசெயலாளர் இரா.கோபிநாதன், கழகத்தோழர் நகுலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்தந்தத்தை இணையர்கள் கழகத்தோழர்கள் முன்னிலையில் உறுதிமொழியாக ஏற்றுக்கொண்டனர். குட்டி பிரசாந்த்,மாநகர தலைவர் தனபால்,அமைப்பாளர் முத்து, தோழர் ஜெயா,நசீர்,பாலுசந்தர் கணேசன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

சென்னையில் ஜாதி மறுப்பு இணையர்களுக்கு பாராட்டு விழா

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் காதலர் தினத்தை யொட்டி ஜாதிமறுப்பு திருமணம் செய்த காதல் இணையர்களுக்கு பாராட்டு விழா 14.02.2017 அன்று மாலை 6 மணியளவில் கழக தலைமை அலுவலகத்தில் நடை பெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்டச்செயலாளர் உமாபதி தலைமை தாங்கினார். செந்தில் குனுடு முன்னிலை வகித்தார். 10 ஜாதி மறுப்பு இணையர்களைப் பாராட்டி நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அரங்க. குணசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், மாவட்ட தலைவர் வேழவேந்தன் ஆகியோர் உரையாற்றினார்கள். ரவிபாரதி, தாஜ் நிஷா ஆகியோர் கவிதை வாசித்தனர்.  அருள்தாஸ் பாடல்களை பாடினார். இந்நிகழ்வில் 70க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு அளிக்கப்பட்டது. பாராட்டு விழா 9 மணியளவில் நிறை வடைந்தது. பாராட்டுப் பெற்ற  ஜாதிமறுப்பு திருமணம் செய்த காதல் இணையர் ஜெயமாலா-மனோகர்;...

துணைவர்களை பறிகொடுத்த நிலையிலும்  கொள்கைக்காகப் போராடும் தோழியர்கள்

துணைவர்களை பறிகொடுத்த நிலையிலும் கொள்கைக்காகப் போராடும் தோழியர்கள்

மேட்டூர் விழாவில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக துணையை இழந்த நிலையிலும் தனித்து நின்று ஜாதி ஒழிப்புக்காக தீரத்துடன் குரல் கொடுக்கும் நான்கு பெண்களுக்கு பாராட்டு விருது வழங்கப்பட்டது. உடுமலை கவுசல்யா, ஈரோடு சுகுணா, பவானி சாகர் கோமதி, இராசிபுரம் மலர் ஆகிய நான்கு தோழியர்களும் நிகழ்வில் பங்கேற்று விருதுகளைப் பெற்றனர். உடுமலை கவுசல்யா: ஜாதி எதிர்ப்புக் குறியீடாக தமிழகத்தில் பேசப்படும் பெயர் உடுமலை கவுசல்யா. தலித் இளைஞரை திருமணம் செய்து கொண்ட காரணத்துக்காக பட்டப்பகலில் கண்ணெதிரே ஜாதி வெறியர்கள் படுகொலைக்கு துணைவரை பறி கொடுத்தவர். பெற்றோர்களின் ஜாதி வெறிக்கு எதிராக துணைவரை இழந்த நிலையிலும் துணைவர் இல்லத்திலேயே வாழ்வேன் என்று வாழ்ந்து காட்டி வருபவர். ஈரோடு சுகுணா : ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியைச் சார்ந்த தோழர் இராஜாகண்ணு என்பவரை காதல் மணம் புரிந்த சுகுணா, மேட்டூர் கழகத் தோழர்களால் 1999ஆம் ஆண்டு திருமணம் செய்து வைக்கப்பட்டார். அதனைத்...

படிப்பகத்தில் சுயமரியாதை, ஜாதி மறுப்புத் திருமணம்

படிப்பகத்தில் சுயமரியாதை, ஜாதி மறுப்புத் திருமணம்

20.1.2017 காலை 10 மணிக்கு மேட்டூர் தந்தை பெரியார் படிப்பகத்தில் ஈரோடு மாவட்டம் சித்தோடு வட்டத்தைச் சேர்ந்த கழக ஆதரவாளர் தங்கவேலு-பங்கஜவள்ளி ஆகியோரின் மகன் த.அருண் பிரச்சன்னாவுக்கும், கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் சாலியந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம்-உஷாராணி ஆகியோரது மகள் ஆ.சுபமங்களத் துக்கும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சுயமரியாதைத் திருமணம் நடத்தி வைத்தார். திருமண விழாவில் கழகத் தோழர்களும், மணமக்களின் பெற்றோர்களும் உறவினர்களும் கலந்து கொண்டனர். மணமக்கள் சார்பாக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வளர்ச்சி நிதியாக ரூ.3000/- கழகத் தலைவரிடம் வழங்கினர். பெரியார் முழக்கம் 09022017 இதழ்

மயிலாடுதுறை மகேஷ் – இளவரசி சாதி மறுப்பு மணவிழா

மயிலாடுதுறை மகேஷ் – இளவரசி சாதி மறுப்பு மணவிழா

நாகை மாவட்டக் கழகச் செயலாளர் தெ.மகேஷ் – செ. இளவரசி ஜாதி மறுப்பு மணவிழா 19.8.2012 ஞாயிறு காலை 9 மணியளவில் மயிலாடுதுறை விமலாம்பிகை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி மணவிழாவை நடத்தி வைத்தார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மண்டல அமைப்பாளர் இளையராசா, பத்திரிகையாளர் சுகுணா திவாகர், ரஷித்கான் வாழ்த்துரை வழங்கினர். கழக ஏட்டுக்கு மணமகன் ரூ.2000 நன்கொடையும், மாவட்டக் கழத்துக்கு ரூ.15000 மதிப்புள்ள புதிய ஒலிபெருக்கி கருவியையும் வழங்கினார். ‘திராவிட’ எதிர்ப்பாளர்களுக்கு ஆதாரங்களுடன் பதிலளிக்கும் தோழர் கவி எழுதிய ‘தமிழ்த் தேசத் தந்தை பெரியார்’ எனும் நூல் மணவிழா பரிசாக அனைவருக்கும் வழங்கப்பட்டது.   கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்ற மணவிழாக்கள் 21.8.2012 செவ்வாய்கிழமை மாலை 6 மணிக்கு கரூர் கொங்கு திருமண மண்டபத்தில் மருத்துவர் பழ. பாலகிருஷ்ணன் மகன் மருத்துவர் பா.பாவேந்தன் – சா. மேகலா இணையரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி...

திருச்சி மாவட்டக் கழகத் தலைவர் இல்ல மணவிழா

திருச்சி மாவட்டக் கழகத் தலைவர் இல்ல மணவிழா

26.8.2012 சனிக்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு திருச்சி தெற்கு காட்டூர் அ.பா. சிவந்தி ஆதித்தனார் சமுதாயக் கூடத்தில் திருச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் ஆரோக்கியசாமி மகள் ஆ. தமிழரசி – எஸ். ஆரோக்கிய அன்னதங்க ராஜா இணையினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட கழகத் தலைவர் துரை தாமோதரன், ‘மந்திரமல்ல தந்திரமே!’ என்ற அறிவியல் விளக்க நிகழ்ச்சியை நடத்தினார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். கழகத் தலைவருடன் மாநில அமைப்புச் செயலாளர் தாமரைக் கண்ணன் மற்றும் திருச்சி மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 30082012 இதழ்

‘காவல்’ தரும் காவலாண்டியூர்

‘காவல்’ தரும் காவலாண்டியூர்

மேட்டூரில் மலை அடிவாரத்தில் அமைந் துள்ள காவலாண்டியூர் கிராமம், கழகக் கட்டமைப் புடன் செயல்படக்கூடிய பகுதி. பெயரிலேயே ‘காவல்’ அடையாளத் தைக் கொண்டிருக்கும் இந்த ஊருக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. குடும்பத் தையும் ஜாதியையும் எதிர்த்து, ஜாதி மறுப்பு திருமணம் புரிந்த ஏராள மான இணையர்களுக்கு புகலிடம் தந்து, ‘காவல்’ காத்த ஊர் காவலாண்டி யூர். மாதக் கணக்கில் அடைக்கலம் பெற்ற இணையர்களும் உண்டு. அண்மையில் வெளி வந்த தமிழ்த் திரைப்படம் ஒன்றில் ஊரை விட்டு ஓடி வந்த ஓர் ஜாதி மறுப்பு இணையர், ‘காவலாண்டி யூர்’ என்ற ஊரின் பெயர்ப் பலகையைப் பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டு, ‘இனி நமக்குப் பயமில்லை’ என்று அவர்கள் கூறுவதாக அந்தக் காட்சி இருக்கும். காவலாண்டியூரில் கடும் எதிர்ப்புக்கிடையே கழகம் கால்பதித்து வளர்ந்த நிகழ்வுகளை காவலாண்டியூர் கழகத் தோழர் ஈசுவரன் முகாமில் நினைவு கூர்ந்தார். தோழர்கள் சித்துசாமி, ஈசுரவன், சுப்ரமணியம் ஆகியோர் முன்னின்று...

தாலி, மெட்டியை அகற்றிய மணமக்கள் !

தாலி, மெட்டியை அகற்றிய மணமக்கள் !

கழகத் தலைவர் தலைமையில் நடைபெற்ற விழாவில் பெண்ணடிமைச் சின்னங்களை அகற்றிய ஜாதி மறுப்பு வாழ்விணையர்கள் கல்கி – தேஜஸ்ஸ்ரீ இருவரும் பி.டெ.க். பட்டதாரிகள். படிக்கும் போது இருவருக்கும் காதல் ஏற்பட திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். தேஜஸ்ஸ்ரீ ஆந்திராவைச் சார்ந்தவர். அவர் தந்தை தெலுங்கு ஆசிரியராக தமிழ் நாட்டில் பணி செய்கிறார். அவர் இவர்களின் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். தந்தையின் எதிர்ப்பு காரணமாக வேறு வழியின்றி வீட்டை விட்டு வெளியேறி தேஜஸ்ஸ்ரீ – கல்கி இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். கல்கியின் பெற்றோர் வினோத்- ஸ்டெல்லா ஆகியோர் இந்த திருமணத்திற்கு ஆதரவளித்தனர். வினோத் – ஸ்டெல்லா இணையர் பகுத்தறிவாளர்களாக பெரியாரியலை ஏற்றுக் கொண்டு வாழ்ந்துவரும் தோழர்கள் ஆவர். இந்நிலையில் கடந்த 20.04.2016 அன்று கொளத்தூரில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தோழர்கள் அவர்களுக்கு ஆதரவாக இருந்தனர். இவர்களின் திருமணம் குறித்து தேஜஸ்ஸ்ரீயின் பெற்றோருக்கு முறைப்படி தகவல்...

சாதி மறுப்பு திருமணம் செய்தால் ரூ.2.50 லட்சம் நிதியுதவி !

சாதி மறுப்பு திருமணம் செய்தால் ரூ.2.50 லட்சம் நிதியுதவி !

டாக்டர் அம்பேத்கர் சமூக ஒருமைப்பாட்டு கலப்புத் திருமண நிதித் திட்டம் (னுச.ஹஅநெனமயச ளுஉhநஅந கடிச ளுடிஉயைட ஐவேநபசயவiடிn வாசடிரபா ஐவேநச-ஊயளவந ஆயசசயைபநள) என்று ஒரு திட்டம் மத்திய அரசால் முடங்கிப் போய் கிடக்கிறது. சாதி மறுப்புத் திருமணம் செய்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் நல்வாழ்வுக்காகவும், சமூக அங்கீகாரத்துக் காகவும் பொருளாதார பாதுகாப்புக்காகவும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரப் பகிர்வு அமைச்சகம் 2013இல் இந்த நிதித்திட்டத்தை உருவாக்கியது. இதை நிர்வகிக்கும் பொறுப்பு இந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அம்பேத்கர் ஃபவுண்டேஷனிடம் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், ஒரு ஆண்டுக்கு இந்தியா முழுவதும் 500 தம்பதிகளைத் தேர்வு செய்து ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுகள் தகுதி வாய்ந்தவர்களின் பட்டியலை மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். அதை அம்பேத்கர் ஃபவுண்டேஷன் இறுதி செய்து நிதியுதவியை அளிக்கும். கொடுமை என்னவென்றால், திட்டம் தொடங்கப்பட்டது முதல் இன்றுவரை இந்த நிதியுதவியைப்ய பெற்றவர்கள், வெறும்...

வெங்கட்-இராஜலட்சுமி ஜாதி மறுப்புத் திருமணம்

4.12.2016 ஞாயிறு அன்று திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் செ.வெங்கட் (எ) வெங்கடேசனுக்கும் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர் இராஜலட்சுமிக்கும் எமகண்ட நேரத்தில் ஜாதி மறுத்து தாலிமறுத்து சுயமரியாதை திருமணமாக கோவையில் நடைபெற்றது. தோழர் சூலூர் பன்னீர்செல்வம் திருமணத்தை நடத்தி வைத்தார். இதில் திக, தபெதிக,திவிக தோழர்கள் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர். இணையர்கள் இணையேற்பின் நினைவாக ‘புரட்சிப் பெரியார் முழக்க’ இதழ் வளர்ச்சி நிதியாக 1000 ரூபாயும் கழக கட்டமைப்பு நிதியாக 1000 ரூபாயும் சேர்த்து 2000 ரூபாயை சூலூர் பன்னீர் செல்வத்திடம் வழங்கினார்கள். பெரியார் முழக்கம் 15122016 இதழ்

வீரமணி-மேரி ஜாதி மத மறுப்பு மணவிழா

திராவிடர் விடுதலைக் கழகத் தின் செயலாற்றல் மிக்க தோழர் சூலூர் பன்னீர் செல்வம்-தமிழ்ச் செல்வி ஆகியோரின் மகன் வீரமணி, பெங்களூர் கழகத் தோழர் ஜார்ஜ்-தாமரை பரணி ஆகியோரின் மகள் மேரி ஆகியோரின் ஜாதி-மத மறுப்பு வாழ்க்கை இணை ஏற்பு நிகழ்வு பெங்களூரில் 5.11.2016 அன்று கேப்டன் ஓட்டலில் சிறப்புடன் நடந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்தார். டாக்டர் எம். வெங்கடசாமி, முனியன் சின்னப்பா, ‘தலித் சமரசேனா’ அமைப்பைச் சார்ந்த கணேஷ் கோலகிரி, கண் மருத்துவர் சுரேந்தர், பெங்களூர் பல்கலைப் பேராசிரியர் முனைவர் சமந்தா தேஷ்மானே, மகாதேவ பிரசாத்,  வழக்கறிஞர் துரை அருண், கழக அமைப்பு செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, அறிவியல் மன்ற பொறுப்பாளர் ஆசிரியர் சிவகாமி, கருநாடக தமிழ் மக்கள் இயக்கத் தலைவர் இராஜன், கழக அமைப்பாளர் இல. பழனி, பெங்களூர் கழகத் தோழர்கள் சித்தார்த்தன், இராவணன், தயாளன், குமார், வேலு, இராமநாதன், ‘பூவுலகின்...

அன்புக்கரசி-திலிப்குமார் ஜாதி-மத மறுப்பு மணவிழா

அன்புக்கரசி-திலிப்குமார் ஜாதி-மத மறுப்பு மணவிழா

மேட்டூர் கழகத் தோழர் செ.மார்ட்டின் -பொ. விஜயலட்சுமி ஆகியோரின் மகள் வி.மா. அன்புக்கரசி, பி.ஈ., டி.அய்.வி., கொளத்தூர் கு.மணி-மணிமேகலை ஆகியோரின் மகன் ம.திலீப்குமார் ஆகியோரின் ஜாதி-மத மறுப்பு வாய்க்கை இணை ஏற்பு விழா 21.8.2016 அன்று பகல் 11 மணியளவில் கொளத்தூர் எம்.எஸ். திருமண மண்டபத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன், டைகர் பாலன் வாய்த்துரை வழங்கினர். இசைமதி, ‘பெண்ணுரிமை’ குறித்தப் பாடல் பாடினார். கணவரை இழந்த மணமகள்மணமகன் பாட்டிமார்கள் வெள்ளை உடையுடன் மேடையில் மணமக்களுக்கு மாலை, தங்க சங்கிலிகளை மண மக்களிடம் எடுத்துத் தந்தபோது மண்டபமே கரவொலியால் அதிர்ந்தது. தமிழகம் முழுதுமிருந்தும் கழகத் தோழர்கள் மணவிழாவுக்கு திரண்டு வந்திருந்தனர். கழக மாநாடு போலவே மணவிழா காட்சி அளித்தது. பெரியார் முழக்கம் 01092016 இதழ்

சூத்திரனுக்கு சட்டப்படி திருமண உரிமையே மறுக்கப்பட்டது

சூத்திரனுக்கு சட்டப்படி திருமண உரிமையே மறுக்கப்பட்டது

மேட்டூர் கழகத் தோழர் செ. மார்ட்டின்-விஜயலட்சுமி மகள் வி.மா.அன்புக்கரசி, பி.ஈ., கொளத்தூர் கு. மணி-மணிமேகலை ஆகியோரின் மகன் ம.திலிப்குமார், எம்.பி.ஏ. ஆகியோரின் ஜாதி-மத மறுப்பு மணவிழா 21.8.2016 அன்று கொளத்தூர் எஸ்.எஸ். திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடந்தது. இதில் மணவிழா அழைப்பிதழ் மிகவும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. 1958இல் பெரியார் பேச்சு தொகுப்பாக ‘வாழ்க்கைத் துணை நலம்’ என்ற தலைப்பில் வெளி வந்த நூலோடு இணைத்து, அழைப்பிதழ் தயாரிக்கப்பட் டிருந்தது. தந்தை பெரியாரின் சிறப்பான கருத்துகள் இடம் பெற்றிருந்த இந்த நூலில், ‘சூத்திரனுக்கு திருமண உரிமையே கிடையாது’ என்று பிரிட்டிஷ் இந்தியாவில் நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பை பெரியார் எடுத்துக் காட்டியிருக்கிறார். உரையின் அந்தப் பகுதி: ‘இந்து லா’வில் பிராமணன், சூத்திரன் என்ற பிளவுகள் உண்டே தவிர – நாயுடு, செட்டியார், படையாட்சி, பிள்ளை என்ற தனி வகைகள் இல்லை. ஆகையால் பார்ப்பனரைத் தவிர்த்து நாம் எல்லோரும் ஒரே சாதிதான். திராவிடர் என்று...

திவிக செயலவையில் ஜாதி மறுப்பு திருமணம்

இன்று மேட்டூர் பாப்பம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திவிக செயலவையில் ஜாதி மறுப்பு திருமணத்தோடு நிகழ்ச்சி துவங்கியது

திராவிடர் வாழ்வியல் உறுதிமொழி ஏற்பு !

பொள்ளாச்சி ஆனைமலை,கா.க.புதூரில் கிருத்திகா – ஸ்டாலின் இணையருக்கு, கழக தலைவர் தலைமையில் நடைபெற்ற ஜாதி மறுப்பு சுயமரியாதை திருமணம் ! ஜாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிராக ஆணவப்ப டுகொலைகள் நடந்து வருகிற இந்த நேரத்தில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் கா.க.புதூர் கிராமத்தில் 29.05.2016 ஞாயிற்றுக்கிழமை 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிறப்பித்த கிருத்திகா – ஸ்டாலின் ஜாதி மறுப்பு சுயமரியாதை திருமணம் கழக தலைவர் தலைமையில் எழுச்சியோடு நடைபெற்றது. மதியம் 12 மணியளவில் கா.க. புதூர் ஜாதி ஒழிப்பு போராளிகள் நினைவுத் தூண் முன்பிருந்து ஊர்வலமாக சென்ற பின் மதியம் 12.30 மணியளவில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் மணவிழா துவங்கியது.பெரியார் திராவிடர் கழக அமைப்பாளர் தோழர் காசு.நாகரஜ்.அவர்கள் அனைவரையும் வரவேற்றுப்பேசினார். தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி பெரியார் சரவணன்,தோழர் அறக்கட்டளை சாந்த குமார் கோவை கதிரவன்,அறிவியல் மண்ரம் ஆசிரியர் சிவகாமி, பொள்ளாச்சி வெள்ளியங்கிரி, பேராசிரியர்...

காதலர்களுக்கு ‘காவல்’ தரும் காவலாண்டியூர் !

சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பாலமலையில் மே 17, 18 தேதிகளில் பெரியாரியல் பயிலரங்கம் மிகச்சிறப்பாகவும் கருத்துச் செறிவாகவும் நடைபெற்றது.அந்த பயிரங்கத்தின் இடையே ஜாதிமறுப்பு காதல் திருமணம் நடைபெற்றது. குமாரபாளையம் சக்தி (தந்தை பெயர் முருகன்), ஓசூரைச் சேர்ந்த பிரீத்தி (தந்தை பெயர் ஆனந்த்) ஆகியோரின் ஜாதி மறுப்பு திருமணத்தை கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் அவர்கள் மணி நடத்தி வைத்தார். மேட்டூரில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள காவலாண்டியூர் கிராமம்,கழகக் கட்டமைப்புடன் செயல்படக்கூடிய பகுதி. பெயரிலேயே‘காவல்’அடையாளத்தைக் கொண்டிருக்கும் இந்த ஊருக்கு ஒருதனி சிறப்பு உண்டு. குடும்பத்தையும் ஜாதியையும் எதிர்த்து, ஜாதி மறுப்பு திருமணம் புரிந்த ஏராளமான இணையர்களுக்கு புகலிடம் தந்து, ‘காவல்’ காத்த ஊர் காவலாண்டியூர். மாதக் கணக்கில் அடைக்கலம் பெற்ற இணையர்களும் உண்டு. அண்மையில் வெளி வந்த சின்னத்துரை எனும் தமிழ்த் திரைப்படம் ஒன்றில் ஊரை விட்டு ஓடி வந்த ஓர் ஜாதி மறுப்பு இணையர், ‘காவலாண்டியூர்’...

தாலி,மெட்டியை அகற்றிய மணமக்கள் !

கழக தலைவர் தலைமையில் நடைபெற்ற விழாவில் பெண்ணடிமைச் சின்னங்களை அகற்றிய ஜாதி மறுப்பு வாழ்விணையர்கள் ! ”கல்கி – தேஜஸ்ஶ்ரீ” இருவரும் பி.டெ.க். பட்டதாரிகள்.படிக்கும் போது இருவருக்கும் காதல் ஏற்பட திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். தேஜஸ்ஶ்ரீ அவர்கள் ஆந்திராவைச் சார்ந்தவர்.அவர் தந்தை தெலுங்கு ஆசிரியராக தமிழ் நாட்டில் பணி செய்கிறார்.அவர் இவர்களின் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். தந்தையின் எதிர்ப்பு காரணமாக வேறு வழியின்றி வீட்டை விட்டு வெளியேறி தேஜஸ்ஶ்ரீ – கல்கி இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.கல்கி அவர்களின் பெற்றோர் வினோத்- ஸ்டெல்லா ஆகியோர் இந்த திருமணத்திற்கு ஆதரவளித்தனர்.வினோத் – ஸ்டெல்லா இணையர் பகுத்தறிவாளர்களாக பெரியாரியலை ஏற்றுக்கொண்டு வாழ்ந்துவரும் தோழர்கள் ஆவார்கள். இந்நிலையில் கடந்த 20.04.2016 அன்று கொளத்தூரில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.தோழர்கள் அவர்களுக்கு ஆதரவாக இருந்தனர். இவர்களின் திருமணம் குறித்து தேஜஸ்ஶ்ரீ அவர்களின் பெற்றோருக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைக்கப்பெற்ற...

ஜாதி மறுப்பு திருமண இணையருக்கு பாதுகாப்பு வழங்கிய கழக தோழர்கள் !

ஜாதி மறுப்பு திருமண இணையருக்கு பாதுகாப்பு வழங்கிய கழக தோழர்கள் ! திருப்பூரைச் சேர்ந்த ”சக்திகாமாட்சி – ஆனந்த் இணையர்” தங்கள் காதலுக்கு ஜாதியை காரணம் காட்டி பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் வீட்டை விட்டு வெளியேறி நாமக்கல் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் சாமிநாதன் அவர்களிடம் பாதுகாப்பு கோரிவந்தனர்.ஆனந்த் ”இந்துமுண்ணனி”யின் தீவிர உறுப்பினர் என்பது இங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. கழக தோழர்கள் அவர்களுக்கு பாதுகாப்பளித்து சட்டப்படி 25.03.2016 அன்று திருமணம் செய்து வைத்தனர். இவர்களின் ஜாதி மறுப்பு திருமணத்திற்கு பெண் வீட்டார் மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இணையருக்கு மிரட்டல் விடுத்தும் இவர்களை பிரிக்காமல் விடமாட்டோம் எனவும் 70க்கும் மேற்பட்டோர் இவர்களை பல்வேறு ஊர்களில் தேடி அலைந்தனர். இந்நிலையில் சக்தி காமாட்சியின் பெற்றோர் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் தங்கள் பெண்ணை கடத்தி சென்றுவிட்டதாக புகார் அளித்ததை அடுத்து இணையர்கள் காவல்நிலையத்திற்கு நேரில் ஆஜராகி தன் தரப்பை விளக்க...