Category: புதுக்கோட்டை

தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம் 10012019

தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம் 10012019

திராவிடர் விடுதலைக் கழகம் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் தலைமையில் பேராவூரணியில் நடைபெற்றது. கூட்டத்தில், இயக்க பணிகள் கிராமங்கள் தோறும் எடுத்து சென்று மக்களை இயக்கமாக்குவது குறித்து ஆலோசித்து அதற்கான செயல் வரைவுகள் முன்வைக்கப்பட்டது, புரட்சி பெரியார் முழக்கம் ஏடு, நிமிர்வோம் இதழ் சந்தா சேர்ப்பு அதிகப்படுத்துவது குறித்த ஆலோசனைகள் பதிவு செய்யபட்டன. கூட்டத்தில் தலைமைக் கழக உறுப்பினர்கள் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய கழக தோழர்கள் தவறாது வந்திருந்து பெரியார், அம்பேத்கர் கொள்கையினை ஒவ்வரிடத்திலும் கொண்டு செல்வோம் என உறுதி மொழி எடுத்துக் கொண்டு கூட்டத்தினை நிறைவு செய்தார்கள்.

மாணவி அனிதாவிற்கு நீதி வேண்டி பேராவூரணி வேதாந்தம் திடலில் உண்ணாவிரதம் 10092016

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் 150 மருத்துவ மாணவர்களுக்கான சேர்க்கையில் 15 மாணவர்கள் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் – மருத்துவர் ஜெயராமன் தகவல். “நீட் தேர்வுக்குப்பின் அரசு மருத்துவக்கல்லூரிகளில் ஏழை மாணவர்கள் சேர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு நடத்தும் மருத்துவக்கல்லூரிகளில் 85 விழுக்காடு மாணவர்களுக்கான சேர்க்கையை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைக் கொண்டே நிறைவு செய்ய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. ஆனால் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள 150 மாணவர்களுக்கான இடங்களில் 15 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள். எல்லா மாநிலங்களிலிலும் நீட்டை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்று இங்கு பொய் பரப்புரை செய்யப்படுகிறது. சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ள ஆந்ரா மாநிலத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேலூர் சி.எம்.சி மருத்துவக்கல்லூரி நீட் தேர்வை புறந்தள்ளிவிட்டது. தமிழ்நாட்டில் மாவட்டந்தோறும் மருத்துவக்கல்லூரி என்ற அடிப்படையில் 24 மருத்துவக்கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது. தமிழக ஏழை எளிய மாணவர்கள் சேர்ந்து படிக்க...