Category: கட்டுரைகள்

தீபாவளி வாழ்த்து கிடையாது போயா! – கோடங்குடி மாரிமுத்து

தீபாவளி வாழ்த்து கிடையாது போயா! – கோடங்குடி மாரிமுத்து

விஜயதசமி நாளில் இராவணன் படத்தைத் தீயிட்டுக் கொளுத்துகிறார்கள். இராவணன் எரிவதைப் பார்த்து கைத்தட்டி கும்மாளம் அடிக்கிறார்கள். இராவணன் மீது அம்புகள் ஏவப்படுகின்றன. தொலைக்காட்சிகள் இதை ஒளிபரப்புகின்றன. மோடியும், அதன் பரிவாரங்களும் மட்டுமல்ல, ராகுல், சோனியாவும் இதில் பங்கேற்கிறார்கள். ஏன் இந்த எரிப்புகள் நடக்கின்றன? தொலைக்காட்சியில் பார்த்த இருவர் இதுகுறித்து உரையாடுகிறார்கள். (விவாதம் தொடங்குகிறது) கேள்வி : தசரா என்பது இந்துப் பண்டிகை. இதுல எதுக்கு இராவணனை எரிக்கனும்? இராமனைக் கொண்டாடனும்? இராமாயணக் காலத்துலயே இந்துமதம் வந்துடுச்சா? பதில் : அப்படியெல்லாம் ஒன்னுமில்ல… இந்து என்ற பெயரே பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்துல தான் வந்துச்சு. ஆனால் பிராமணர் தெய்வம், அவர் பேச்சை மீறுவது குற்றம், மற்றவர்கள் சூத்திரர்கள், பிராமணர்களுக்கு அடிமை என்ற கருத்து இராமாயணக் காலத்துலேயே வந்துருச்சு. அதனால் தான் இராமன், சூத்திரன் சம்பூகனின் தலையை வெட்டி வீசினான். இந்துமதம் அப்போது வரல, ஆனால் வர்ணாசிரம தர்மம் வந்துருச்சு. கேள்வி : இந்துமதம்...

கொள்கைகளைக் கொண்டு செல்வதற்கு அடக்குமுறைகளை வரவேற்றார் பெரியார்! ஆதாரங்களுடன் விடுதலை இராசேந்திரன் பேச்சு (2)

கொள்கைகளைக் கொண்டு செல்வதற்கு அடக்குமுறைகளை வரவேற்றார் பெரியார்! ஆதாரங்களுடன் விடுதலை இராசேந்திரன் பேச்சு (2)

குடிஅரசு சமூகத்தில் உருவாக்கிய தாக்கத்தையும், மதவாதிகள் மிரண்டு போய் அரசிடம் பாதுகாப்பு கேட்ட வரலாறுகளையும் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் சுட்டிக்காட்டினார். சென்னைக் கழகத் தலைமையகத்தில் ஆகஸ்டு 12ஆம் தேதி நடந்த குடிஅரசு நூற்றாண்டு ஆய்வு நூலகத் திறப்பு விழாவில் ஆற்றிய உரையின் சுருக்கம்.. வள்ளலார் விழா ஒன்றில் பேசிய கலைஞர், வள்ளலார் சாமிகளைப் போல மென்மையானக் கருத்துகளை எல்லாம் சொல்லி இந்த மக்களைத் திருத்த முடியாது. இந்தத் தமிழன் கும்பகர்ணனாகத் தூங்கிக் கொண்டிருக்கிறான். தூங்கிக் கொண்டிருக்கிற இந்தக் கும்பகர்ணன் விழிப்பதற்குப் பெரியார் என்ற யானை மிதித்தால் தான் நடக்கும் என்று பேசினார். சுயமரியாதைக்காரர்கள் தேவஸ்தானக் கமிட்டியில் இருக்கலாமா? என்ற கேள்விக்குப் பெரியார் இப்படி பதிலளித்தார். சுயமரியாதைக்காரர்கள் தேவஸ்தானக் கமிட்டியில் தாராளமாக இருக்கலாம். கோயில் சொத்துக்களை மக்களுக்கு பயன்படுத்துகிற முயற்சியில் நீங்கள் பங்களிக்கலாம். ஆனால் வெறும் மூடநம்பிக்கைகளையும், வர்ணாசிரமத்தை மட்டும் பரப்புவதற்காக மட்டும் அந்தக் கமிட்டி இருக்கிறது என்று சொன்னால் அதில் இருப்பதற்கான...

முடிவெய்தினார் மக்கள் உரிமைப் போராளி ஜி.என்.சாய்பாபா

முடிவெய்தினார் மக்கள் உரிமைப் போராளி ஜி.என்.சாய்பாபா

மக்கள் உரிமைப் போராளி ஜி.என்.சாய்பாபா முடிவெய்தினார். அவரது உடலில் 90 சதவீத உறுப்புகள் செயலிழந்தவை. சக்கர நாற்காலியிலேயே அவரது வாழ்க்கை நகர்ந்தது. மாவோயிஸ்ட் நூல்களை தனது வீட்டில் வைத்திருந்தார் என்பதற்காக ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா காவல்துறை இணைந்து அவரை உஃபா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது. 3592 நாட்கள் சிறையில் கழித்தார். அவர் செய்த குற்றமே மாவோயிசம் சம்பந்தப்பட்ட நூல்களை தனது அறையில் வைத்திருந்தார் என்பது தான். அந்த நூல்களை ரகசியமாக சுற்றுக்கு அனுப்பி நாட்டை உடைப்பதற்கு சதி செய்தார் என்று கூறி அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. 3592 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு அவரிடம் அப்படி நூல்கள் கைப்பற்றுவதற்கான ஆதாரமே இல்லை என கூறி உச்சநீதிமன்றம் அவரை கடந்த 7 மாதங்களுக்கு முன்பு விடுதலை செய்தது. சிறைக்கு சென்ற பின் கடுமையான நோய் உபாதைகளுக்கு உள்ளானார். எந்தவித மருத்துவ வசதிகளும் இல்லாத நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கழிவறைக்கு...

நவராத்திரி கொலுவில் இப்படி ஓர் கலகம்

நவராத்திரி கொலுவில் இப்படி ஓர் கலகம்

நவராத்திரி கொலுவில் சரசுவதி, லட்சுமி, கிருஷ்ணன், இராமன், சீதை, பிள்ளையார் உள்ளிட்ட கடவுள் பொம்மைகள் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன. தனது வீட்டுக்கு வந்த நவராத்திரி விருந்தினருக்கு சுண்டல், தயிர் சாதம் வழங்கினார், கோபால அய்யர். இரவு ஓ.டி.டி-யில் நடிகர்கள், கடவுள் வேடமிட்டு நடித்த பக்திப் படம் ஒன்றைப் பார்த்து உறங்கச் சென்றார். கனவில் கொலுவில் இருந்த கடவுள் பொம்மைகளும், உருவங்களாகப் பேசத் தொடங்கின…. கிருஷ்ணன் கீழே இறங்கி வந்து அய்யர் ‘ஆத்து’ சமையலறைக்குப் போகிறான். பாத்திரங்களை உருட்டுகிறான். சத்தம் கேட்ட விநாயகன், கிருஷ்ணனைப் பின் தொடருகிறான். கிருஷ்ணன் : டேய், யானைத் தலையா! இங்கே, ஏண்டா வந்தே? விநாயகன் : நிறுத்துடா, வெண்ணெய் திருடா; நீ எதையெதை எல்லாம் உருட்டப் போகிறாய், திருடப் போகிறாய் என்பதைப் பார்க்கத்தான் வந்தேன். கிருஷ்ணன் : நான் திருடினாலும் சரி; குளிக்கும் பெண்களின் ஆடைகளை உருவி மரத்தில் போய் உட்கார்ந்து கொண்டாலும்; நான் எப் போதுமே பக்தர்களுக்கு...

ஆர்.எஸ்.எஸ் நடத்திய ‘ஆண்கள் பேரணி’

ஆர்.எஸ்.எஸ் நடத்திய ‘ஆண்கள் பேரணி’

‘அது என்னப்பா! ஆர்.எஸ்.எஸ் பேரணியில அமைச்சர் முருகன் சீருடையுடன் போஸ் குடுக்குறாரு. தமிழிசையும், வானதியும் காணோமே என்றார் ஒரு நண்பர். ஆமாம் அப்படித்தான். ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பை ஊடகங்கள் ஒளிபரப்பின. காக்கி பேண்ட் – குல்லாவுடன் நடந்தார்கள். ஒரு பெண்ணை மருந்துக்குக் கூட காணவில்லை . அது ‘ஆர்.எஸ்.எஸ் ஆண்கள்’ மட்டும் பேரணி. ஏதோ ஒரு சுயம் சேவக்கைப் பிடித்து அவருக்கு பெண் வேடம் போட்டுக்கூட அழைத்து வந்திருக்கலாம். அதற்கும் தயாராக இல்லை. பெண்கள் விண்வெளிக்குப் போகிறார்கள். பல மாதங்கள் சந்திர மண்டலத்தில் எங்களால் வாழ முடியும் என்று சாதனை படைக்கிறார்கள். இராணுவக் கமாண்டர்களாக வருகிறார்கள். குடியரசுத் தலைவராகக் கூட வரலாம், ஆனால் அதே பெண் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக மட்டும் முடியாது. சனாதன தர்மம் அப்படி ஒரு இரும்புக் கோட்டை. ‘என்னப்பா இது; தமிழிசையும் வானதியும் ஒவ்வொரு நாளும் இந்து தர்மத்துக்காக முழங்குறாங்க, ஆனா அவங்க தாய் அமைப்பு பேரணிக்குள் வராதே என்று...

‘அய்யங்கார்’ புடிச்ச லட்டு

‘அய்யங்கார்’ புடிச்ச லட்டு

“பாவம்! பாவம்! அனாச்சாரம் பகவான் பிரசாதத்துலேயே மாமிசம் கலந்துடுச்சு! இது அடுக்குமா? எதுல கலப்படம்னு ஒரு விவஸ்தை வேண்டாமோ? இதுக்கெல்லாம் என்ன பரிகாரம் செய்யுறது? நேக்கு எதுவுமே பிடிக்கல” என்று பதறுகின்றன வைஷ்ணவ ஆன்மீக வட்டாரங்கள். “ஆபத்து வந்துடுச்சு, நாட்டுக்கே ஆபத்து, சங்கராச்சாரிகளே, வேதப் பண்டிதர்களே, முன்னாள், இன்னாள் ஏழுமலையான் அர்ச்சகர்களே! இதற்கு ஒரு பரிகாரம் காணுங்கள், ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக இருந்த போது தான் இந்த பாவம் நடந்திருக்கு. அவரை சிறையில் தள்ள ஆகமத்தில் ஏதேனும் விதி இருக்கிறதா? என்று பார்த்து சொல்லுங்க” என்கிறார் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு. “ஆமாம்! அவா ஆட்சிக்காலத்திலே தான் இந்த அநியாயம் நடந்துடுச்சு, அப்பவே சொன்னேன்” என்கிறார் ரிட்டையர்டு தலைமை அர்ச்சகர். “ஓய் ஒன்றும் குடி முழுகிப் போயிடல நம்ம வைஷ்ணவ ஆகம ஆராய்ச்சிக்காரர்களெல்லாம் இதற்கு தீர்வு கண்டுட்டுடோம். அண்மையில் தான் சாமிக்கு மலையில் ‘பவித்ரோட்சவம்’ செய்து முடுச்சுருக்கோம். இது ஒன்றே போதும்....

“யாருடைய தயவுக்கோ, சுயநல வாழ்வுக்கோ ‘குடிஅரசு’ இல்லை” பெரியாரின் உருக்கமான கட்டுரை

“யாருடைய தயவுக்கோ, சுயநல வாழ்வுக்கோ ‘குடிஅரசு’ இல்லை” பெரியாரின் உருக்கமான கட்டுரை

சகோதர வாசகர்களே ! நமது “குடி அரசு” ஆரம்பமாகி இரண்டு வருஷம் முடிந்து மூன்றா வது வருஷத்தின் முதல் இதழ் இன்று வெளியாகிறது. “குடி அரசு” ஆரம்ப இதழில் “குடி அரசு” என்று ஒரு தலையங்கமும், ஆறு மாதம் கழிந்து “நமது பத்திரிகை” என்று ஒரு தலையங்கமும் ஒரு வருஷம் முடிந்து இரண்டாவது வருஷ ஆரம்பத்தில் “நமது பத்திரிகை” என்று ஒரு தலையங்கமும் எழுதி இருக்கிறோம். இப்போது இரண்டு வருஷம் முடிந்து மூன்றாவது வருஷ ஆரம்ப முதல் இதழிலும் அவ்வாறே “நமது பத்திரிகை” என்று தலையங்கமிட்டு ஒரு குறிப்பு எழுத ஆசைப்படுகிறோம். நமது நாட்டு மக்களுக்குள் சுயமரியாதையும் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் உண்டாக்கக் “குடி அரசு” என்னும் ஒரு பத்திரிகை யை ஆரம்பிக்க வேண்டும் என்பதாக முதல் முதல் நானும் எனது நண்பர் ஸ்ரீமான் தங்கப்பெருமாள் பிள்ளையும் 1922ல் கோயமுத்தூர் ஜெயிலில் சிறைவாசம் செய்யும் போதே நினைத்தோம். அதுபோலவே வெளியில் வந்த கொஞ்ச...

புதிய கல்விக்கொள்கை – பாஜக பதில் சொல்லுமா? – ர.பிரகாசு

புதிய கல்விக்கொள்கை – பாஜக பதில் சொல்லுமா? – ர.பிரகாசு

கல்வித் தரத்தில் இந்தியாவில் உயர்ந்து நிற்கும் கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய 5 மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நிதி தர மறுப்பதாக தி இந்து பத்திரிகையில் செப்டம்பர் 9ஆம் தேதி ஆதாரத்துடன் செய்தி வெளியாகியிருந்தது. அந்த செய்தியை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “புதிய கல்விக்கொள்கையை ஏற்க மறுப்பதால் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் தண்டனை. ஒன்றிய பாஜக அரசு தரமான கல்வி மற்றும் சமத்துவத்தை ஊக்குவிப்பது இப்படித்தானா? இதை முடிவு செய்ய நம் தேசம் மற்றும் நம் மக்களின் அறிவுக்கே விட்டுவிடுகிறேன்” என்று காட்டமாகப் பதிவிட்டிருந்தார். ஒன்றிய அரசு நியாயமாக நடந்துகொள்வதென்றால் நிலுவை நிதியை விடுவித்திருக்க வேண்டும். ஆனால் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானோ, முதலமைச்சரின் பதிவைப் பகிர்ந்து சில அபத்தமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார். புதிய கல்விக்கொள்கையை எதிர்ப்ப தென்றால், 1. தமிழ் உள்ளிட்ட தாய்மொழிக் கல்வியை எதிர்க்கிறீர்களா?...

காவிமயத்தில் கரையும் கல்வித்துறை! – ர.பிரகாசு

காவிமயத்தில் கரையும் கல்வித்துறை! – ர.பிரகாசு

ஒன்றிய அரசின் புதியக் கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு நிராகரித்ததால் கட்டாயக் கல்வி (சர்வ சிக்சா அபியான்) சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. இத்திட்டத்திற்கான நிதியில் 60 விழுக்காடு ஒன்றிய அரசும், 40 விழுக்காடு மாநில அரசும் பங்களிப்புச் செய்கின்றன. அதன்படி பார்த்தால் 2024-25 கல்வி ஆண்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்த ஒன்றிய அரசு 4 தவணைகளில் ரூ.2,152 கோடி வழங்க வேண்டும். கடந்த ஜூன் மாதமே ஒன்றிய அரசு முதல் தவணையாக ரூ.573 கோடியை வழங்கியிருக்க வேண்டும். இதை வழங்கக்கோரி தமிழ்நாடு அரசு பல முறை கடிதம் எழுதியுள்ளது. ஆனால் ஒன்றிய அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை, என்றும் கடந்த சில மாதங்களாக மாநில அரசின் முழுமையான நிதியில்தான் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குற்றச்சாட்டை வைத்துள்ளார். கைவிரிக்கும் பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி...

முருகனை சு-பிராமணனிடம் இருந்து உலக மாநாடு மீட்டெடுக்குமா? – விடுதலை இராசேந்திரன்

முருகனை சு-பிராமணனிடம் இருந்து உலக மாநாடு மீட்டெடுக்குமா? – விடுதலை இராசேந்திரன்

தமிழ்நாடு முதல்வர் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி தமிழகத்தின் தொழில் கட்டமைப்புகளை வளர்க்கத் துடிக்கிறார். ஆனால் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முருகனுக்கு ‘உலக மாநாடு’ நடத்த முனைப்புக் காட்டுகிறார். கோயில் நிர்வாகப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டிய அறநிலையத்துறை முருக பக்தியை மக்களிடம் பரப்புவதில் ஏன் இப்படி முனைப்புக் காட்ட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. ‘திராவிட மாடல்’ ஆட்சி இந்து விரோதமானது என்ற பார்ப்பனியப் பரப்புரைகளை முறியடித்து அமைச்சர் சேகர்பாபு நடத்திவரும் கோயில் திருப்பணிகளே இதற்கு சரியான பதிலாக இருக்கும் போது இப்போது ஏன் இந்த மாநாடு? என்ற கேள்வியுடன் இந்த மாநாட்டை பரிசீலிப்போம். தமிழ்க் கடவுள் என்று போற்றப்படும் முருகன் ஆகமப் பிடிக்குள் தான் சிக்கியிருக்கிறான். அன்றாடம் வேத மந்திரங்கள், அபிஷேகம், அர்ச்சனை, கும்பாபிஷேகம் என்று வேத சடங்குகள் நடத்தப்படுகின்றன. ஆகமப் பிடிக்குள் இருந்து ஆராய்ச்சிக் கருத்தரங்கிற்குள் முருகன் கொண்டுவரப்பட்டிருப்பதைக்கூட ஒரு வகையில் ஆகம எதிர்ப்பு தான் என்று...

மோடியின் போலித் தமிழ்ப்பாசம்; அம்பலப்படுத்திய ஆர்.டி.ஐ.!

மோடியின் போலித் தமிழ்ப்பாசம்; அம்பலப்படுத்திய ஆர்.டி.ஐ.!

ஒன்றிய பாஜ அரசு தொடர்ச்சியாக தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது.. ரயில்வே நிதி, வெள்ள நிவாரண நிதி, வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி, மெட்ரோ ரயில் திட்ட நிதி என எதற்கும் தமிழ்நாட்டுக்கு நிதியை ஒதுக்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டி வருகிறது. தேவையான நிதிகளைகூட வழங்காமல் ஏதோ தமிழ்நாட்டினர் அந்நியர்கள் என்ற அளவில்தான் ஒன்றிய அரசு வைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் தமிழ்நாட்டு மக்கள் பாஜவைப் புறந்தள்ளி வைத்திருப்பதால்தான். எதிர்க்கட்சியினர் ஆளும் மாநிலமாக இருப்பதால் தமிழ்நாட்டுக்கு எதுவுமே செய்யக்கூடாது என்ற மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தலின்போது தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வந்து தமிழர்கள் மீது பாசம் கொண்டவர்போல பிரதமர் காட்டிக்கொண்டார். ஆனால் அவர்கள் நினைத்தது எதுவும் நடக்காததால் தற்போது தமிழ்நாட்டில் நடைபெறும் திட்டப்பணிகளுக்கு ஒதுக்கிய நிதியைக்கூட குறைத்திருப்பது தெரியவந்துள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும் அடிக்கடி வந்து ஒரு திருக்குறளைச் சொல்லியும், உலகின் மூத்த மொழி தமிழ் என்று பெருமை...

ஹிந்துஸ்தானில் கரையும் காஷ்மீர்! – அபூர்வானந்த்

ஹிந்துஸ்தானில் கரையும் காஷ்மீர்! – அபூர்வானந்த்

(நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு 2019ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து மற்றும் மாநில அந்தஸ்தைப் பறித்தது. 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர், 5 ஆண்டுகளில் காஷ்மீர் மிகப்பெரிய வளர்ச்சிக் கண்டிருப்பதாகப் பாஜகவும், சங்கிகளும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் காஷ்மீரத்து அமைதியின் பின்னால் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் அரச வன்முறைகளை விவரித்து டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் அபூர்வானந்த் தி வயரில் எழுதிவரும் தொடரின் ஒரு பாகம் தமிழில்) அவமானம், அநீதி மற்றும் அடக்குமுறையின் மற்றொரு ஆண்டு கடந்துவிட்டது. காலண்டர் ஆண்டில் ஏற்படும் மாற்றம் இந்தச் சூழ்நிலைகளில் மாற்றத்தைக் கொண்டு வருமா? நான் ஒரு காஷ்மீரியாக இருந்திருந்தால், ஆகஸ்ட் 5 தேதியைக் காலண்டரில் பார்த்ததும் இதுதான் என் நினைவுக்கு வந்திருக்கும். இந்த அவமானத்தையும், அநீதியையும், அடக்குமுறையையும் என்னால் எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணம் என் பார்வையிலேயே என்னைச் சிறுமைப்படுத்துகிறது. இத்தகைய அவமானம் மற்றும் அடக்குமுறையை எனக்கு நினைவூட்டும் தேதி இந்தியாவின் பிற பகுதிகளுக்கு...

பகவத்கீதை பெண்களைத் துப்பாக்கி ஏந்த அனுமதிக்கிறதா?

பகவத்கீதை பெண்களைத் துப்பாக்கி ஏந்த அனுமதிக்கிறதா?

பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலப் பதக்கத்தை வென்றிருக்கிறார். பெண் ஒருவர் துப்பாக்கிச் சுடுதலில் பதக்கம் வென்றிருப்பது நாட்டிற்கும் பெண் இனத்திற்கும் பெருமை சேர்க்கக் கூடிய வகையில் அமைந்திருக்கிறது. இதை நாம் பாராட்டி வரவேற்கிறோம். ஆனால், தனது வெற்றிக்கு காரணம் பகவத் கீதை தான், நான் பகவத்கீதையை ஆழமாகப் படித்தேன். பலனை எதிர்பார்க்காதே கடமையை செய்! உன்னுடைய தலைவிதி உன் கையில் இல்லை. இலக்கு நோக்கி முன்னேறிச் செல் என்ற இந்த மூன்று கருத்துக்களும் தான் என்னை ஊக்கப்படுத்தியது. எனவே பகவத்கீதை தான் இந்த வெற்றிக்கு காரணம் என்று கூறியிருக்கிறார். ஒலிம்பிக்கில் பகவத்கீதைக்கு தங்கப் பதக்கம் கிடைத்ததை போல ஊடகங்கள் இதை கொண்டாடி வருகின்றனர். இந்த கருத்து நியாயம் தானா என்பது குறித்து நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பகவத் கீதை எப்போது உருவானது. புத்த மதம் செல்வாக்குமிக்கதாக திகழ்ந்த காலத்தில் அதனுடைய சாக்கிய தத்துவம் மக்களால்...

பள்ளிக்கல்வித்துறையை முடக்கும் ஒன்றிய அரசு!

பள்ளிக்கல்வித்துறையை முடக்கும் ஒன்றிய அரசு!

பி.எம். ஸ்ரீ திட்டத்தில் இணையாத மாநிலங்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்துக்கு அனுப்பப்படும் நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வருகிறது. இதனால் பள்ளிக் கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 5ல் பிரதமர் மோடியால் பி.எம். ஸ்ரீ பள்ளிகள் (வளரும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள்) என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நாடு முழுவதிலும் பள்ளிகள் மேம்பாட்டுக்கு ரூ.27,360 கோடி செலவிடப்பட உள்ளது. இதற்கு 60% நிதிச்சுமையை ஒன்றிய அரசும், 40% மாநில அரசுகளும் ஏற்க வேண்டும். ஒன்றிய அரசின் பங்காக ரூ.18,128 கோடி உள்ளது. இதன்மூலம் 14,500 பள்ளிகளில் சுமார் 1.87 கோடி குழந்தைகள் பலன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பி.எம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த தயக்கம் காட்டுவதால், டெல்லி, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்திற்கு சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நிதியை ஒன்றிய கல்வி அமைச்சகம் நிறுத்தியுள்ளதாக...

பெரியாரின் நாத்திகம் தமிழர் நலன் சார்ந்தது அய்யாவுடன் கைகோர்த்த குன்றக்குடி அடிகளார்!

பெரியாரின் நாத்திகம் தமிழர் நலன் சார்ந்தது அய்யாவுடன் கைகோர்த்த குன்றக்குடி அடிகளார்!

பெரியாரின் பகுத்தறிவு இயக்கத்திற்கு என்றென்றும் துணைநின்ற தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு ஜூலை 11-ஆம் தேதி தொடங்கியுள்ளது. திராவிட மாடலின் அடித்தளமான ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற சமத்துவக் கோட்பாட்டில் உறுதியோடு இருந்த குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டை நினைவுகூர்ந்து அவருடைய மானுடப் பணிகளை போற்ற வேண்டியது திராவிட இயக்கத்தின் கடமை. குன்றக்குடி அடிகளார் குறித்து 2018ஆம் ஆண்டு நிமிர்வோம் இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையை அவருடைய நூற்றாண்டின் தொடக்கதில் பகிர்கிறது புரட்சிப் பெரியார் பெரியார் முழக்கம். கடவுள் – மத மறுப்புகளைக் கடுமையாகப் பேசிய பெரியார், போராட்ட வடிவங்களிலும் கடுமையான அணுகுமுறைகளையே பின்பற்றினார். பார்ப்பனியத்தில் ஊறிப் போய் நிற்கும் மக்களுக்கு இத்தகைய ‘அறுவை சிகிச்சை’ முறையே தேவை என்று கருதினார் பெரியார். ஆனால், தமிழ்நாட்டில் கொள்கை முரண் பாடுகளுக்கிடையே உரையாடல்களைத் தொடங்கி விவாதங்களுக்கு வழி திறந்து விட்டதுதான் பெரியார் இயக்கம், மாற்றுக் கருத்தாளர்களை எதிரிகளாக்கி வன்முறைக்கு தூபம் போட்டது இல்லை. இன்று எச். ராஜாக்களும்,...

கடத்தூரில் குடிஅரசு நூற்றாண்டு விழா

கடத்தூரில் குடிஅரசு நூற்றாண்டு விழா

கடத்தூர் புதூரில் குடிஅரசு நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டம் – கொடியேற்றம் – இல்லத் திறப்பு விழா நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஒன்றியம் கடத்தூர் புதூரில் குடி அரசு நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டம் 06.07.2024 சனிக் கிழமை மாலை 6.00 மணிக்கு மடத்துகுளம் ஒன்றியக் கழகத் தோழர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது. தொடக்கமாக காவை இளவரசனின் மந்திரமா தந்திரமா எனும் அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பகுதி வாழ் பொதுமக்கள் திரளாக பங்கேற்று ஆர்வத்துடன் இந்நிகழ்ச்சியை கவனித்தனர். பொதுக்கூட்டத்திற்கு மடத்துக்குளம் ஒன்றியத் தலைவர் கணக்கன் தலைமை தாங்கினார். ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன் வரவேற்புரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் சிவானந்தம், கழகத் தோழர்கள் சரவணன், இலக்கியா, சங்கீதா, செல்வி, ஆரியமாலா, சிந்தனை செல்வி, தாரணி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். நிகழ்வில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, விசிக மாவட்ட செயலாளர் சதீசு, திராவிடத் தமிழர் கட்சி கொள்கை பரப்புச்...

வீரப்பனிடம் இருந்து ராஜ்குமாரை மீட்டதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் பங்கு – மூத்த பத்திரிகையாளர் சிவசுப்பிரமணியம் விவரிக்கிறார் (2)

வீரப்பனிடம் இருந்து ராஜ்குமாரை மீட்டதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் பங்கு – மூத்த பத்திரிகையாளர் சிவசுப்பிரமணியம் விவரிக்கிறார் (2)

23.06.2024 அன்று கொளத்தூரில் நடைபெற்ற கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் 77வது பிறந்தநாள் விழாவில் மூத்த பத்திரிகையாளர் சிவசுப்ரமணியம் ஆற்றிய வாழ்த்துரை. கடந்த இதழின் தொடர்ச்சி… காலை 7:30 மணிக்கு தொடங்கி மாலை 5:30 மணி வரைக்கும் இருவரும் பேசினார்கள். அந்த பேச்சில் ராஜ்குமார் கடத்தப்பட்டது தொடர்பாக எதுவும் இல்லை. முழுக்க முழுக்க உக்கம்பருத்திக்காடு, செங்கப்பாடி என சுற்றுவட்டார ஊர்களைப் பற்றியே பேசினார்கள். கடைசியாக மணி அண்ணன், ராஜ்குமாரை எப்போது வெளியில் விடுவீர்கள் என்று வீரப்பனை பார்த்து கேட்டார். நீங்கள் வேண்டுமானால் இப்போதே கூட்டிச் செல்லுங்கள் என்றார் வீரப்பன். அப்போது அண்ணன், வேண்டாம் நான் வந்ததே யாருக்கும் தெரியாது. தமிழ் (சிவசுப்பிரமணியம்) வரச் சொன்னார் என்று வந்தேன். நாம் சந்திச்சதுக்கு அடையாளமாக ஆடியோ கேசட் மட்டும் பேசி பதிவு செய்து கொடுங்கள் என்று மணி அண்ணன் கேட்டுக்கொண்டார். கேசட்டை வாங்கிக் கொண்டு அண்ணன் புறப்பட்டார். கொளத்தூர் மணியின் அணுகுமுறை வீரப்பனின் இந்த...

நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்க! – மருத்துவர் எஸ்.காசி

நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்க! – மருத்துவர் எஸ்.காசி

நீட் 2024 தேர்வு முடிவுகள், இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. கடந்த வரு டங்களில் ஒன்று அல்லது இரண்டு மாணவர்கள் மட்டுமே 720/720 மதிப்பெண் பெற்று வந்த நிலை யில், இந்த வருடம் 67 பேர் 720/720 மதிப்பெண் பெற்றுள் ளனர். தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்ட ‘இறுதி விடைகளுடன்’ மாணவர்கள் தனது OMR (Optical Mark Recognition Sheet) நகலை ஒப்பிட்டுப் பார்த்த போது கிடைத்த மதிப்பெண்ணுக்கும், அறிவிக்கப்பட்ட மதிப்பெண்ணுக்கும் இடையே பெரிய வேறுபாடு இருந்ததால், முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்தன. இதனையடுத்து உச்சநீதி மன்றத்திலும், பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்க ளிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. குஜராத் மற்றும் பீகார் மாநிலங்களில், ‘நீட் தேர்வு மைய’ அதிகாரிகளே பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்று கேள்வித்தாளைக் கசியவிட்டது, ஹரியானா மாநிலத்தில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்களில் தொடர்ச்சியான தேர்வு எண் கொண்ட 6 பேர் 720/720 பெற்றது, 1563...

வர்ணமும் வர்க்கமும் பின்னிப்பிணைந்தது! – ர.பிரகாசு

வர்ணமும் வர்க்கமும் பின்னிப்பிணைந்தது! – ர.பிரகாசு

டிசம்பர் 16-ஆம் தேதி கோவை அண்ணாமலை அரங்கத்தில் நடந்த அனைத்திந்திய சாதி ஒழிப்பு இயக்கத்தின் 5-வது அகில இந்திய மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “வர்க்கமும் ஜாதியும் ஒருங்கிணைந்தது, இரண்டுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. ஜாதியால் அடக்கப்பட்டவர்கள்தான் வர்க்க சுரண்டலுக்கும் ஆளானவர்களாக இருக்கிறார்கள். ஏனென்றால் பெரு முதலாளிகளில் உயர் ஜாதிக்காரர்களே இருக்கிறார்கள். பாம்பே டையிங் நுஸ்லி வாடியா, அசிம் பிரேம்ஜி என 2 இசுலாமியர்கள் மட்டும் தவறிப்போய் வந்துவிட்டார்கள். பிற்படுத்தப்பட்டவர்கள் கூட சொல்லிக்கொள்ள ஆள் இல்லை. வர்க்கத்துக்கும் வர்ணத்துக்கும் இடையிலான உறவு என்னவென்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.” என்று வர்க்கத்துக்கும் வருணத்துக்கும் இடையிலான தொடர்பு குறித்து நீண்ட உரையாற்றினார். அந்த உரையின் கருத்துக்களுக்கு வலுசேர்க்கும் விதமான ஆய்வறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது. “இந்தியாவில் வரி நீதி மற்றும் செல்வ மறுபகிர்வு: சமீபத்திய சமத்துவமின்மை மதிப்பீடுகளின் அடிப்படையில் முன்மொழிவுகள்” என்ற தலைப்பில் World Inequality Lab...

ஜி.ஆர்.சாமிநாதனின் சித்தாந்தப் பின்புலம் – கொளத்தூர் மணி

ஜி.ஆர்.சாமிநாதனின் சித்தாந்தப் பின்புலம் – கொளத்தூர் மணி

பிறர் சாப்பிட்ட எச்சில் இலையில் பக்தர்கள் உருள விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதனின் தீர்ப்பை கண்டித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக Voice of South யூடியூப் சேனலுக்கு கழகத் தலைவர் அளித்த நேர்காணலின் தொடர்ச்சி. இந்த வழக்கு மட்டுமல்ல, பல வழக்குகளில் ஜி.ஆர்.சாமிநாதன் நியாயமாக நடந்துகொள்ளவில்லை. அண்மையில் சவுக்கு சங்கர் என்பவரின் வழக்கில் கூட, 15 வழக்குகளை தள்ளிவைத்துவிட்டு அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். 2 செல்வாக்கு உள்ள நபர்கள் அவருடைய அறைக்குச் சென்று, சவுக்கு சங்கர் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்று வற்புறுத்தினார்கள் என்றும், அது நீதிமன்ற நடவடிக்கைக்கு எதிரானது என்பதால் உடனடியாக விசாரித்தேன் என்றும் ஜி.ஆர்.சாமிநாதன் கூறியிருக்கிறார். அது ஒருவேளை உண்மை என்றால், தானாகவே (suo moto) அவர்கள் மீது விசாரணை நடத்தலாம் அல்லது நடவடிக்கை...

திருமணம் தனிநபரின் உரிமை

திருமணம் தனிநபரின் உரிமை

“திருமணம் என்பதில் சம்மந்தபட்ட ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ தவிர, மற்ற எவருக்கும் அதில் முடிவெடுக்க உரிமையில்லை. கட்டாயத் திருமணங்கள் ஒழிக்கப்பட்டு, மேலை நாடுகளைப் போல நம் நாட்டிலும் அவரவர் வாழ்க்கைத் துணையை அவரவரே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்” என்று ஒரு நூற்றாண்டுக்கு முன்பே பேசியவர் பெரியார். பேசியதோடு மட்டுமில்லாமல் ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் நம்மை அடிமைப்படுத்தும் பார்ப்பன மதச் சடங்குகளில் இருந்து விடுவித்துக் கொண்டு, சுயமரியாதை உணர்வோடு இணையர்களாய் கரம் கோர்ப்பதற்கான சுயமரியாதைத் திருமண முறையையும் பெரியார் அறிமுகப்படுத்தினார். முதல் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது 1928ஆம் ஆண்டில். இன்னும் 4 ஆண்டுகளில் சுயமரியாதைத் திருமணங்கள் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்து ஒரு நூற்றாண்டு ஆகப்போகிறது. பேரறிஞர் அண்ணாவின் ஆட்சிக்காலத்தில் இதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரமும் கிடைத்துவிட்டது. ஆனால் இன்றைக்கும் தமிழ்நாட்டைத் தவிர மற்ற எந்த மாநிலங்களிலும் இத்தகைய சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் இல்லை. அதனாலேயே காதல் திருமணங்களோ அல்லது ஜாதி கடந்த திருமணங்களோ...

தரத்தைக் கெடுக்கும் தேர்வு ‘நீட்’

தரத்தைக் கெடுக்கும் தேர்வு ‘நீட்’

தகுதிவாய்ந்த மருத்துவர்களை உருவாக்கு வதற்காக நீட் தேர்வை கொண்டு வருவதாகக் கூறினார்கள். ஆனால் நீட் எத்தகைய தரங்கெட்ட தேர்வு என்பதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. இந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி தான் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்க வேண்டும். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4 ஆம் தேதி அவசர அவசரமாக தேர்வு முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது தேசியத் தேர்வு முகமை. இத்தேர்வில் நடைபெற்றிருக்கிற மோசடிகள் வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதற்காகவே, தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் அரசியல் களேபரங்களுக்கு மத்தியில் தேர்வு முடிவுகளும் வெளியிடப் பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வரவைக்கும் அளவுக்கு எக்கச்சக்கமான குளறுபடிகள் நடந்திருக்கின்றன. தேர்வு நடைபெற்ற 4750 மையங்களில், ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த ஆறு பேர் 720க்கு 720 மதிப்பெண் எடுத்துள்ளார்கள். இந்த ஆறு பேரின் பதிவெண்கள் அடுத்தடுத்து உள்ளன. எனவே இதில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்று எவராலும்...

புதிய பாய்ச்சலுக்கு தயாராகும் பள்ளிக்கல்வித்துறை

புதிய பாய்ச்சலுக்கு தயாராகும் பள்ளிக்கல்வித்துறை

பிரிட்டன் கூட்டமைப்பின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான ஸ்காட்லாந்து தேசிய நூலகத்தை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அங்கு அமர்ந்து ஒரு நூலினை வாசித்தபோது… குழந்தைகளை மையப்படுத்திய கொண்டாட்டமான கல்வி அளிப்பதில் சிறந்து விளங்கும் சுவீடன், நார்வே, டென்மார்க், ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகளின் கல்வி அமைப்பைப் பார்வையிட தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த வாரம் சென்றிருந்தார். அந்நாடுகளின் பள்ளிக்கூட வகுப்பறை செயல்பாடுகள், நூலகங்கள் உள்ளிட்டவற்றை ஒவ்வொன்றாகக் கவனித்தவர் அது தொடர்பான தகவல்களை சமூக ஊடக பக்கங்களில் அவ்வப்போது பகிர்ந்து வந்தார். இதில், 75 மொழிகள் பேசக்கூடிய மக்கள் வசிக்கும் சுவீடன் நாட்டில் அனைவரின் தாய்மொழிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் முறை பின்பற்றப்பட்டு வருவதை வியப்புடன் பகிர்ந்திருந்தார். தமிழ்நாடு அரசு பள்ளிகளை அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயார்ப்படுத்தும் நோக்கில் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவருகிறது. படிப்புக்குப் பசி ஒருபோதும் தடைக்கல்லாக இருத்தலாகாது என்று அரசு பள்ளிக்கூடத்தில் மதிய உணவுத்திட்டத்தை அறிமுகம் செய்து...

நீதித்துறை ஒழுங்கைக் கெடுக்கும் ஜி.ஆர்.சாமிநாதன்! உள்நோக்கத்தோடு வழங்கப்படும் தீர்ப்புகள்

நீதித்துறை ஒழுங்கைக் கெடுக்கும் ஜி.ஆர்.சாமிநாதன்! உள்நோக்கத்தோடு வழங்கப்படும் தீர்ப்புகள்

பிறர் சாப்பிட்ட எச்சில் இலையில் பக்தர்கள் உருள விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதனின் தீர்ப்பை கண்டித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக Voice of South யூடியூப் சேனலுக்கு கழகத் தலைவர் அளித்த நேர்காணல். நெறியாளர்: ஜி.ஆர்.சாமிநாதனின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் புகார் மனு அளித்து உள்ளீர்களே! எதனால்? கொளத்தூர் மணி : கரூர் மாவட்டம் நெரூரில் ஒரு துறவியின் சமாதிக்கு வருகிறவர்கள் உண்ணும் எச்சில் இலைகளில் பக்தர்கள் உருளுவதை ஒரு பழக்கமாக வைத்திருந்துள்ளார்கள். அதை நீண்டகாலமான பழக்கம் என்றுசொல்லி, மனித மாண்புக்கு எதிரான ஒரு செயலை செய்துகொண்டிருந்தார்கள். இதைத் தடை செய்ய வேண்டுமென்று தலித் பாண்டியன் என்பவர் 2015ஆம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி திரு மணிக்குமார், நீதிபதி திரு வேலுமணி ஆகிய இருவர் அடங்கிய...

தப்பிவிடுகிறார்களா சூத்ரதாரிகள்?

தப்பிவிடுகிறார்களா சூத்ரதாரிகள்?

சமூகச் செயல்பாட்டாளர் நரேந்திர தபோல்கர் படுகொலை தொடர்பாகப் பத்தாண்டுகளாக நடைபெற்ற வழக்கில், இருவருக்கு (மட்டும்!) ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம். தீர்ப்பு எழுதிய நீதிபதி பிரபாகர் ஜாதவ், “இந்த இருவர் தங்களுக்கு இடப்பட்ட வேலையைச் செய்து முடித்தவர்கள். ஆனால், அந்தத் திட்டத்தைத் தீட்டியது வேறு யாரோ(வாக இருக்கும்)” என்று குறிப்பிட்டிருந்தார். கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா என்ன? மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வைப் பரப்பிவந்தவர் தபோல்கர். மூடநம்பிக்கைகள், கட்டுக்கதைகள் போன்றவற்றில் இருந்தெல்லாம் சமூகம் விடுபட்டுவிடக் கூடாது என்று நினைப்பவர்கள்தானே தபோல்கரைக் குறிவைத்திருக்க வேண்டும்? அந்தச் சூத்ரதாரிகளுக்கு ஏன் தண்டனை கிடைக்கவில்லை? அடுத்தடுத்துப் படுகொலைகள்: தபோல்கரைத் தனது விரோதி என்று வெளிப்படையாக எச்சரித்தவர், வீரேந்திரசிங் சரத்சந்திர தவாதே. இந்நிலையில்தான் 2013 ஆகஸ்ட் 20 அன்று புணே நகரில் காலை நடைப்பயிற்சியின்போது மிகவும் குறுகிய இடைவெளியில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார் தபோல்கர். ஆனால், தவாதே உள்ளிட்ட மூவர் போதுமான சாட்சியங்கள் இல்லை...

எச்சில் இலை தீர்ப்பு

எச்சில் இலை தீர்ப்பு

எச்சில் இலையில் அங்கபிரதிஷ்டம் செய்வது குற்றமல்ல, அது 500 ஆண்டுகால சடங்கு, மகாபாரதத்திலேயே இதுகுறித்து சொல்லப்பட்டிருக்கிறது. எனவே இதை யாரும் தடைசெய்யமுடியாது என்று புரட்சிகரமான தீர்ப்பை வழ்ங்கியிருக்கிறார் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன். நாம் வணங்கும் கடவுள் கூட பிராமண எச்சில் இலை என்று சொன்னால் அதை உடனே ஏற்றுக்கொண்டு பக்தனின் கோரிக்கையை உடனடியாக தீர்த்துவைத்துவிடுவார்கள். ஆனால் சூத்திரன் எச்சில் இலை என்றால் மட்டும் அது தெய்வ குத்தம் ஆகிவிடும். இப்படி பிராமணர்களே ஒரு சடங்கை உருவாக்கிவிட்டார்கள். அதற்கு இப்போது சட்டமும் துணையாக வந்துநிற்கிறது. பிராமணர்களுக்கும் போஜனத்திற்கும் உள்ள தொடர்புக்கு ஏராளமான வரலாறுகள் இருக்கின்றன. பிராமண போஜன விருந்து போட்டால் அடுத்த ஜென்மத்தில் புண்ணியம் கிடைக்கும் என்று அந்த காலத்தில் பிராமண போஜனங்கள் நடந்தன. பெரியாரின் தந்தை கூட அப்படி பிராமண போஜனம் நடத்தியவர் தான். அந்த போஜன விருந்திற்கு ஒரு மோசடி பார்ப்பான் வந்தான். ஊரை ஏமாற்றிய அந்த...

அமலாக்கத்துறைக்கு கடும் கட்டுப்பாடு

அமலாக்கத்துறைக்கு கடும் கட்டுப்பாடு

கடந்த 10 ஆண்டுகளில் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பல்வேறு திருத்தங்களை செய்திருக்கிறது. பணமோசடியின் வரையறை மாற்றப்பட்டது. பிரிவு 19-இன் கீழ் அமலாக்கத்துறைக்கு கைது செய்வதற்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்துக்கு பிறகு சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடை சட்டம் ஆளும் கட்சிக்கு வேண்டாத எதிர்க்கட்சியினர், தொழிலதிபர்கள் மீது அதிகம் பாய்ந்திருக்கிறது. இந்த நிலையில், சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் அதிரடியாக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர், அந்த சட்டத்தின் பிரிவு 45ன் கீழ் ஜாமீன் பெறுவதற்கான இரட்டை நிபந்தனைகள் என்பது பொருந்தக் கூடியதா என்று தெரிவிக்க வேண்டும் என்று ஜலந்தரை சேர்ந்த தர்சம் லால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. “ஜாமீன்...

யானையின் மதம்

யானையின் மதம்

தெருவில் யானை வருகிறது என்றால் அவ்வளவுதான் உற்சாகம் கரைபுரண்டு ஓடும். ஆண், பெண் அனைவரும் வீதிக்கு ஓடிவந்துவிடுவார்கள். யானை மணியோசையுடன் நடந்து செல்லும் அழகே அழகு. அந்த கம்பீரமான யானைகள் இப்போது வாழ்வுரிமைக்கு போராடுகிறதே சார் என்றார் நண்பர் ஒருவர்… உண்மைதான், போர்க்களத்தில் நின்ற யானைகள் இப்போது வாழ்விடங்களை பறிகொடுத்து நிற்கின்றன. கூட்டம் கூட்டமாக சென்று இனப்பெருக்கம் செய்ய வேண்டிய யானைகள் ஏன் பாதைத் தடுமாறுகின்றன. அதற்கு மனிதர்களின் ஆக்கிரமிப்புகள் தான் காரணம். இந்தியா முழுவதும் 150 யானை வழிப்பாதைகள் இருப்பதாகவும், அதிகபட்சமாக மேற்கு வங்காளத்தில் 26 வழிப்பாதைகள் இருப்பதாகவும் கடந்த ஆண்டு ஒன்றிய அரசு அறிவித்தது. ஆனால் தமிழ்நாடு அரசின் வனத்துறை தமிழ்நாட்டில் மொத்தம் 42 வழிப்பாதைகள் இருப்பதைக் கண்டறிந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பாதிக்கும் மேற்பட்ட யானை வழிப்பாதைகளை கண்டறியாமல் போய்விட்டதா? என்று தெரியவில்லை. யானைகள் இயற்கையோடு இணைந்தே வாழ்கின்றன. இரத்த அழுத்தம், மன அழுத்தம், கொரோனா, டைபாய்டு,...

ராகுல்– – மோடி நேரடி விவாதம்

ராகுல்– – மோடி நேரடி விவாதம்

ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி.லோகுர், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அஜித் பி ஷா மற்றும் பத்திரிகையாளர் என்.ராம் ஆகிய மூவரும் இணைந்து ராகுல்காந்திக்கும் நரேந்திர மோடிக்கும் நேரடி விவாதத்தை ஏற்பாடு செய்தனர். அந்த அழைப்பை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டார். ஆனால் மோடி தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை. இவர்கள் இருவரும் சந்தித்து உரையாடினால் எப்படி இருக்கும். ஒரு கற்பனை… ராகுல் : நமஸ்தே.. விவாதத்திற்கு வந்துட்டிங்களே.! சபாஷ்!! மோடி : விவாதமா? அதுக்கெல்லாம் நான் வரல, அப்படினா எனக்கு என்னென்னே தெரியாது. பத்து வருட நாடாளுமன்ற அனுபவத்தில சொல்றேன். நான் எந்த விவாதத்திலாவது பேசிருக்கேனா? சொல்லுங்க பாப்போம். வாய்ப்பில்லை ராஜா, சாரி இளவரசரே..! ராகுல் : அப்போ இங்க எதுக்கு வந்துருக்கீங்க, ஷோ நடத்தவா? மோடி : பயந்துக்கிட்டேனு நெனைச்சு மக்கள் உண்மையை புரிஞ்சுகிட்டாங்கன்னா, நான் விவாதத்துக்கு அஞ்சாத சிங்கம் என்று ஷோ காட்ட வந்துருக்கேன்.. ராகுல் :...

தபோல்கர் கொலையாளிகளை தப்பவிட்ட சிபிஐ! சிசிடிவி ஆதாரங்கள் கூட சேகரிக்கப்படாத அவலம்!

தபோல்கர் கொலையாளிகளை தப்பவிட்ட சிபிஐ! சிசிடிவி ஆதாரங்கள் கூட சேகரிக்கப்படாத அவலம்!

சமூக செயற்பாட்டாளரும், மகாராஷ்டிரா மூடநம்பிக்கை ஒழிப்புக் குழுவின் தலைவருமான நரேந்திர தபோல்கர் 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி காலை நேரத்தில் புனேவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவருடைய மூடநம்பிக்கை ஒழிப்புப் பணிகளுக்கு இந்துத்துவ அமைப்பான சனாதன் சன்ஸ்தா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இக்கொலை நடந்தது. தபோல்கர் கொலை வழக்கை முதலில் புனே போலீசார் விசாரித்தனர். பின்னர் பம்பாய் உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, 2014-ல் சிபிஐ விசாரணையை மேற்கொண்டது. இந்த வழக்கில் சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் வீரேந்திரசிங் தவாடேவை 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிபிஐ கைது செய்தது. மேலும், சச்சின் அன்டுரே, ஷரத் கலாஸ்கர் ஆகியோர் தபோல்கரை சுட்டுக் கொன்றதாக சிபிஐ குற்றம்சாட்டியது. நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்ட அதே பாணியில் கோவிந்த் பன்சாரே (2015), கல்புர்கி (2015), கவுரி லங்கேஷ் (2017) என முற்போக்காளர்கள் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்து மதத்தின் ஏற்றத்தாழ்வுகளுக்கு, மூட நம்பிக்கைகளுக்கு...

உடைந்து தொங்கும் மோடி பிம்பம்

உடைந்து தொங்கும் மோடி பிம்பம்

10 ஆண்டுகால மோடி ஆட்சியில் உலக நாடுகள் கண்டு அஞ்சுகிற அளவுக்கு மிகப்பெரிய வல்லாதிக்க சக்தியாக இந்தியாவை வளர்த்துவிட்டார் என பார்ப்பனக் கூட்டம் தங்களுக்கு தாங்களே குதூகலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் உலக நாடுகளின் புள்ளி விவரங்கள் அனைத்தும் மோடி ஆட்சி இந்தியாவின் இருண்ட காலம் என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டிக்கொண்டிருக்கின்றன. • உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்த ஆண்டு இந்தியா 159வது இடத்துக்கு பின்தங்கிவிட்டதாக உலகளாவிய ஊடக கண்காணிப்பு நிருபர்கள் ஆய்வறிக்கை கூறுகிறது. தரவரிசையில் உள்ள மொத்த நாடுகளின் எண்ணிக்கையே 176-தான். இந்த பட்டியலில் 2022ஆம் ஆண்டில் 150-வது இடத்தில் இந்தியா இருந்தது. ஆண்டுக்கு ஆண்டு நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கிறது. • 2023ஆம் ஆண்டுக்கான சர்வதேச வறுமைக் குறியீட்டுப் பட்டியலில் இந்தியா 111-வது இடத்திற்கு பின் தங்கியுள்ளது. மொத்த நாடுகளின் எண்ணிக்கை 125. இந்த பட்டியலிலும் முந்தைய ஆண்டில் இந்தியா 107-வது இடத்தில் இருந்தது. • 2022ஆம் ஆண்டு...

நஞ்சு விதைக்கும் மாதவி!

நஞ்சு விதைக்கும் மாதவி!

மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் ஐதராபாத் தொகுதியில் போட்டியிடுபவர் மாதவி. இவர், தேர்தல் பிரசாரத்தின் போது மசூதியை நோக்கி அம்பு விடுவது போல செய்கை செய்து வெறுப்பு அரசியலை தூண்டியதுடன், அது சர்ச்சையானதும் ‘’நான் மசூதியை பார்த்து அம்பு விடவில்லை’ என்று பின்வாங்கினார். இவரை சமீபத்தில் ஊடகர் பர்கா தத், ஒரு பேட்டி எடுத்தார். அந்த பேட்டியில் இடஒதுக்கீடுக்கு எதிரான வன்மத்தையும், இட ஒதுக்கீட்டில் பாஜக அரசியல் நிலையையும் தெளிவுபடுத்துகிறார் மாதவி. அரசியலுக்கு எப்படி வந்தீர்கள் என்கிற கேள்விக்கு, “தான் ஏழ்மையான சூழலில் வளர்ந்தேன். ஆனால், எஸ்.சி, எஸ்.டி இல்லை. கல்லூரியில் எனக்கு எந்த உதவித்தொகையும் கிடைக்கவில்லை. நான் படித்துக்கொண்டே பல்வேறு வேலைகளை செய்து என்னுடைய தேவைகளை நிறைவேற்றிக்கொண்டேன். அதேநேரத்தில், பொருளாதாரத்தில் வசதியான தாழ்த்தப்பட்ட மாணவனுக்கு கல்வி உதவித்தொகை கிடைத்தது. அதை அறிந்த நேரத்தில்தான் நான் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் வலுவாக தோன்றியது’’ என்று கூறுகிறார் மாதவி. வசதி...

இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது! பெரியாரியலுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி

இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது! பெரியாரியலுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், “அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஒருபோதும் எதிர்த்ததில்லை. பாகுபாடுகள் அகற்றப்படாத வரையில், இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்க வேண்டும். தேவை இருக்கும் வரை இடஒதுக்கீட்டை தொடர வேண்டும்” என்று பேசியிருக்கிறார். இடஒதுக்கீடு ஒழிக்கப்பட வேண்டுமென்று மோகன் பகவத் ஏற்கெனவே பேசிய காணொளி ஒன்று, தற்போது தேர்தல் சமயத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து இக்கருத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடே இருக்காது என்ற காங்கிரஸ் கட்சியின் விமர்சனத்துக்கு அசாம் மாநிலம் கவுகாத்தியில் பதிலளித்திருக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “எஸ்.சி.,, எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினரின் இடஒதுக்கீட்டை பாஜக என்றைக்கும் ஆதரிக்கும். அவர்களின் உரிமையை என்றைக்கும் பாதுகாப்போம்” எனக் கூறியுள்ளார். ஆனால் ஆர்.எஸ்.எஸ்., பாஜக இரண்டுமே கடந்த காலங்களில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக உறுதியாகச் செயல்பட்டுள்ளன. இடஒதுக்கீட்டுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் 2015ஆம் ஆண்டில் ‘தி இந்து’ ஊடகத்திற்கு பேட்டி அளித்த...

ரூ.12,000 கோடிக்கு மேல் சுருட்டிய பாஜக அடுத்தடுத்து அம்பலமாகும் மெகா ஊழல்கள்!

ரூ.12,000 கோடிக்கு மேல் சுருட்டிய பாஜக அடுத்தடுத்து அம்பலமாகும் மெகா ஊழல்கள்!

அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை மூலம் நிறுவனங்களை மிரட்டி தேர்தல் பத்திர திட்டம் மூலம் ரூ.12,000 கோடிக்கு மேல் ஒன்றிய பாஜ சுருட்டிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததை தொடர்ந்து, ‘பிஎம் கேர்ஸ்’ நிதித் திட்டம் மூலம் பாஜ செய்த முறைகேடுகளை முழுமையாக வெளிக் கொணர வேண்டும் என எதிர்க்கட்சிகள் சட்டப்போராட்டத்தைத் துவக்கியுள்ளன. தேர்தல் பத்திர திட்டம் மூலம் திரட்டிய நிதி விவரத்தை மறைக்க ஒன்றிய பாஜ அரசும், பாரத ஸ்டேட் வங்கியும் சேர்ந்து எந்த அளவுக்கு முட்டுக்கட்டை போட்டனவோ, அதைவிட தீவிரமாக பிஎம் கேர்ஸ் திட்ட நிதி விவரத்தை மறைக்க முயற்சி செய்து வருகிறது பாஜ. இது தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்கள் நோட்டீஸ் அனுப்பியும் ஒன்றிய அரசு வாய் திறப்பதாக இல்லை. நீதித்துறையையே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதை போல, எந்த நோட்டீசுக்கும் முறையான பதில் தராமல் அலட்சியம் காட்டி வருகிறது. கொரோனா தொற்று இந்தியாவில் பரவியது 2020 ஜனவரி 30ம் தேதி...

பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது? (2) – விடுதலை இராசேந்திரன்

பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது? (2) – விடுதலை இராசேந்திரன்

வேலை இல்லாத் திண்டாட்டம் மிக மோசம் வேலைவாய்ப்பு ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தருவேன் என்று உறுதி கூறி பதவிக்கு வந்தார் மோடி. ஆனால் இன்றைக்கு என்ன நிலைமை? ஒரு உதாரணத்தை சுட்டிக்காட்டுவோம். இஸ்ரேல் நாடு இப்பொழுது காசா மக்கள் மீது மிகப்பெரிய போரை தொடுத்துக் கொண்டிருக்கிறது. ஏராளமானவர்கள் அங்கே உயிர் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். இஸ்ரேல் ஜியோனிசம் என்ற கொள்கையை பின்பற்றுகிறது. இது இஸ்லாமிய வெறுப்பை அடிப்படையாகக் கொண்டது. மோடி ஆட்சி பேசுகிற இந்து ராஷ்டிரமும் இஸ்லாமிய வெறுப்பை அடிப்படையாகக் கொண்டது. எனவே சித்தாந்த ரீதியில் இருவரும் ஒரே தளத்தில் பயணிக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் அங்கே கடுமையான போர் நடந்து கொண்டிருக்கும்போது இஸ்ரேலுக்கு இந்தியாவில் இருந்து வேலைக்கு ஆட்களை அனுப்புகிற முயற்சியில் ஒன்றிய ஆட்சி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இதற்காக இஸ்ரேல் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சரும் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சரும் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கிக் கொண்டு 45 ஆயிரம்...

காங்கிரஸ் கட்சியின்  ‘திராவிட’ வாக்குறுதிகள்! பாஜகவை வீழ்த்த வழிகாட்டும் ‘தமிழ்நாடு’

காங்கிரஸ் கட்சியின் ‘திராவிட’ வாக்குறுதிகள்! பாஜகவை வீழ்த்த வழிகாட்டும் ‘தமிழ்நாடு’

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி பெரியார் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி ஒரு நூற்றாண்டு ஆகிறது. அதன்பிறகு பெரியார் சுயமரியாதை இயக்கம் கண்டது முதல் இப்போது வரை தமிழ்நாடு அடைந்திருக்கிற சமூக வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, கட்டமைப்பு வளர்ச்சி என அனைத்துக்குமே மையப்புள்ளி இடஒதுக்கீடுதான். அதனால்தான் இந்தியாவின் மற்றெந்த மாநிலங்களையும் விட இடஒதுக்கீடு, சமூக நீதி சிந்தனைகளில் இன்றளவிலும் தமிழ்நாடுதான் முன்னோடியாக இருக்கிறது. நீட், புதிய கல்விக்கொள்கை போன்ற பாஜகவின் சூழ்ச்சிகரமான திட்டங்களை உடனுக்குடன் எதிர்த்த ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். மதவாத வெறுப்புணர்வை உள்வாங்காத மாநிலம் தமிழ்நாடு. ஒட்டுமொத்தத்தில் சமூகநீதி களத்துக்கான சிந்தனைப் போக்கைக் கட்டமைக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. தமிழ்நாட்டின் இந்த ‘திராவிட மாடல்’ சிந்தனைப்போக்குதான் பாஜகவுக்கு பெரும் நெருக்கடியாகவும், சவாலாகவும் இருந்து கொண்டிருக்கிறது. எனவே பாஜகவை வீழ்த்த இந்த சிந்தனைப்போக்கு கையிலெடுக்க தேவை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் இருக்கிறது. இதை காங்கிரஸ் கட்சி நன்கு உணர்ந்திருக்கிறது என்பதை வெளிக்காட்டும் ஆவணமாக, அக்கட்சியின்...

பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது?

பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது?

கடந்த 10 ஆண்டுகால மோடியின் தலைமையிலான பாஜக ஒன்றிய ஆட்சி நாட்டை சர்வாதிகார பாதையில் கொண்டு சென்றிருக்கிறது. இதனுடைய தாய்ச் சபையான ஆர்.எஸ்.எஸ் இந்தியாவை இந்துராஷ்டிரமாக மாற்ற வேண்டும் என்ற லட்சியத்தை முதன்மையாகக் கொண்டது. அந்த லட்சியத்தை செயல் வடிவமாக்கும் முயற்சியில் தான் பாஜக ஆட்சி தீவிரம் காட்டி செயல்பட்டு வருகிறது. மக்கள் பிரச்சனைகள் அவர்களுக்கு ஒரு பெரிய பிரச்சனைகளே அல்ல. மதச்சார்பற்ற கொள்கையோடு நாடாளுமன்ற ஜனநாயகம் நிலவும் ஒரு நாட்டை மதச் சார்புள்ள ஒரு நாடாக மாற்ற வேண்டும் என்று சொன்னால் அவர்களுக்கு இங்கே ஜனநாயகமும் ஜனநாயகக் கட்டமைப்புகளும் மிகப்பெரிய தடையாக இருக்கின்றன. எனவே ஜனநாயகத்தையும் ஜனநாயகத்தின் நிறுவனங்களையும் சீர்குலைத்து அவைகளை பலவீனம் ஆக்க வேண்டும். முதலில் நாடாளுமன்றத்தை பார்ப்போம். நாடாளுமன்ற நடவடிக்கைகள் முற்றிலுமாக சீர் குலைக்கப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகளின் கருத்துக்கள் ஒட்டுமொத்தமாக நசுக்கப்படுகின்றன. ஒரே நேரத்தில் 116 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வராமல் வெளியேற்றப்பட்டார்கள். இப்படிப்பட்ட ஒரு மோசமான...

பார்ப்பனர்களை புறக்கணிக்கிறதா பாஜக?

பார்ப்பனர்களை புறக்கணிக்கிறதா பாஜக?

திராவிட முன்னேற்றக் கழகம் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் ஒரு இசுலாமியரைக் கூட தேர்வு செய்யவில்லை என்று அதிமுகவினரும், பாஜகவினரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்கள். அதிமுக வேட்பாளர் பட்டியலிலும் ஒரு இசுலாமியர் கூட இல்லாததை அடுத்து, இந்த விவாதம் தானாக ஓய்ந்துவிட்டது. இசுலாமியர்களுக்கு திமுக இடம் ஒதுக்கியிருக்க வேண்டுமென்பது நியாயமான கேள்விதான். இராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இசுலாமியர்களுக்கு ஏன் சீட் ஒதுக்கவில்லை என பாஜக ஆதரவாளர்கள் கேட்கும் கேள்விதான் நகைப்பை ஏற்படுத்துகிறது. நாமும் அவர்களை நோக்கி ஒரு கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியில் ஒரு பார்ப்பனர் கூட வேட்பாளர்களாக இல்லை. ஆனால் பார்ப்பனக் கட்சியான பாஜகவும் ஒரு தொகுதியில்கூட பார்ப்பனர்களை நிறுத்த முன்வரவில்லையே ஏன்? எந்த பார்ப்பனராவது பாஜகவை நோக்கி இக்கேள்வியை எழுப்பினார்களா என்றால் நிச்சயம் இல்லை. வேட்பாளராக தங்களை நிறுத்தாவிட்டாலும், பாஜக...

அமலாக்கத்துறை சுதந்திரமாகச் செயல்படுகிறதா? மோடியின் அண்டப் புளுகு! ஆகாசப் புளுகு!

அமலாக்கத்துறை சுதந்திரமாகச் செயல்படுகிறதா? மோடியின் அண்டப் புளுகு! ஆகாசப் புளுகு!

எதிர்க்கட்சியினரை ஒடுக்குவதற்கான ஆயுதமாக அமலாக்கத்துறையை மோடி அரசு பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு புதிதல்ல. சமீபத்தில் தந்தி தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில் நெறியாளர் இதை கேள்வியாக வைத்திருந்தார். அதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, அமலாக்கத்துறையை நாங்களா உருவாக்கினோம்? பணமோசடி தடுப்புச் சட்டத்தை (PMLA) நாங்களா கொண்டு வந்தோம்? அமலாக்கத்துறை ஒரு சுதந்திரமான அமைப்பு. சுதந்திரமாக அவர்களுடைய பணிகளை மேற்கொள்கிறார்கள். நாங்கள் அமலாக்கத்துறையை நிறுத்தவும் இல்லை, அனுப்பவும் இல்லை. அமலாக்கத்துறை சுமார் 7,000 வழக்குகள் பதிவு செய்திருக்கிறது. அதில் அரசியல் சார்பான வழக்குகள் 3 விழுக்காட்டுக்கும் குறைவுதான். காங்கிரஸ் ஆட்சியில் 35 லட்சம் ரூபாய் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் பாஜக ஆட்சியில் 2,200 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். அமலாக்கத்துறையின் தரவுகள் அடிப்படையில் மோடியின் பேச்சு குறித்து சில கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கிறது. இந்த PMLA சட்டமானது 2002ஆம் ஆண்டு பாஜக ஆட்சியில்தான் இயற்றப்பட்டது. சர்வதேச போதைப்பொருள்...

ஊழலற்ற உத்தமக் கட்சியா பாஜக?

ஊழலற்ற உத்தமக் கட்சியா பாஜக?

தேர்தல் பத்திரங்கள் என்ற மோசடித் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்து, ஒட்டுமொத்த விவரங்களையும் வெளியிட வேண்டுமென்று எஸ்.பி.ஐ.-க்கு இட்ட உத்தரவால், மெகா ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்து ஆட்டம் கண்டிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. பணம் கொடுக்காத நிறுவனங்களை அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்ற நிறுவனங்களை வைத்து மிரட்டுவதும், தாராளமாக நன்கொடைகள் வழங்கும் நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் அள்ளிக் கொடுக்கப்பட்டிருப்பதும் அம்பலமாகியிருக்கிறது. சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறையின் விசாரணை வளையத்தில் இருக்கிற 41 நிறுவனங்கள் 2,471 கோடி ரூபாயை பாஜகவுக்கு வழங்கியிருக்கின்றன. இதில் சோதனைக்கு பிறகு மட்டுமே 1,698 கோடி ரூபாயை தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக வாரி வழங்கியிருக்கின்றன. 121 கோடி ரூபாய் சோதனை நடந்த 3 மாதங்களுக்குப் பிறகு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல 33 நிறுவனக் குழுமங்கள் 172 முக்கியமான திட்டங்கள் மற்றும் திட்ட அனுமதிகளை அரசிடம் இருந்து பெற்றிருக்கின்றன. இந்த திட்டங்கள் மட்டும் ஒப்பந்தங்களின் மதிப்பு 3.7 லட்சம் கோடி...

விவாதத்தில் வெல்ல முடியாதவர் அண்ணா – கொளத்தூர் மணி

விவாதத்தில் வெல்ல முடியாதவர் அண்ணா – கொளத்தூர் மணி

கோவை மாவட்டக் கழக சார்பில் 02.03.2024 அன்று கோவை அண்ணாமலை அரங்கில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை :- 14.03.2024 இதழின் தொடர்ச்சி… கலை வடிவத்தை விரிவுபடுத்தினார் அண்ணா சுயமரியாதை இயக்கத்தில் பணியாற்றியபோது பெரியாருக்கும், அவருக்கும் உண்டான மொழி நடை, உரை ஆகியவை வேறுபட்டிருந்தது. அண்ணாவின் வருகைக்கு பிறகு திராவிடர் கழகத்தில் கலை வடிவம் மேலும் விரிவுபடுத்தப்பட்டது. திராவிட நடிகர் சங்கம், திராவிட நாடக சபை மூலமாக நாடகங்களை அரங்கேற்றினார்கள். அண்ணா எழுதிய சில முக்கியமான நூல்களைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன். குறிப்பாக சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம். இந்து ராஜ்ஜியம் அமைந்தால் என்ன பலன் ஏற்படும் என்பதுதான் அந்த நாடகத்தின் கரு. சிவாஜி பெரிய வீரன், மராட்டியத்தையே வெற்றிகொண்டான். ஜோதிபாபூலே போன்றோர் மராட்டியத்தின் அடையாளமாக சிவாஜியைப் போற்றினார்கள். சங் பரிவார கும்பல் இந்துக்களின் எழுச்சி சின்னமாக சிவாஜியை மாற்றிவிட்டனர். ஆனால்...

டி.எம்.கிருஷ்ணாவின் கலகக்குரல் ஓங்கி ஒலிக்கட்டும்

டி.எம்.கிருஷ்ணாவின் கலகக்குரல் ஓங்கி ஒலிக்கட்டும்

கர்நாடக இசைக் கலைஞரான டி.எம்.கிருஷ்ணாவுக்கு ‘சங்கீத கலாநிதி’ பட்டம் வழங்குவதாக மியூசிக் அகாடெமி அறிவித்தவுடன்இரண்டு பெண் பார்ப்பன கர்நாடக இசைக் கலைஞர்கள் பொங்கி எழுந்துவிட்டார்கள். மியூசிக் அகாடெமி சங்கராச்சாரிகளை எதிர்க்கும் டி.எம்.கிருஷ்ணாவுக்கு எப்படி விருது வழங்கலாம் என்று மியூசிக் அகாடெமியின் தலைவர் முரளி அவர்களுக்கு கடிதம் எழுதியிருப்பதோடு டி.எம்.கிருஷ்ணா தலைமை தாங்கும் இசை மாநாட்டை தாங்கள் புறக்கணிக்கப்போவதாகவும் அறிவித்து ள்ளனர். அகாடெமியின் தலைவருக்கு அவர்கள் எழுதிய கடிதத்தை முகநூலிலும் வெளியிட்டுள்ளனர். இதற்கு அகாடெமியின் தலைவர் முரளி, நாங்கள் விருது வழங்குவதற்கு ஒருவரது இசைத் திறமையைத் தான் மதிப்பிடுகிறோமே தவிர அவர் எந்த கருத்தைக் கொண்டிருக்கிறார் என்பதின் அடிப்படையில் அல்ல என்று பதிலடி கொடுத்துள்ளார். எனக்கு எழுதியுள்ள கடிதத்தை எப்படி முகநூலில் வெளியிட்டீர்கள். உங்களுடைய கருத்தை ஏற்றுக் கொண்டு மியூசிக் அகாடெமி தன்னுடைய கருத்தை மாற்றிக் கொள்ளாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார் அகாடெமியின் தலைவர் முரளி. இதற்காக நாம் அவரைப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்....

தேர்தல் பத்திரங்கள் மூலம் மெகா மோசடி பாஜகவின் ஊழல்கள் அம்பலமாகின

தேர்தல் பத்திரங்கள் மூலம் மெகா மோசடி பாஜகவின் ஊழல்கள் அம்பலமாகின

தேர்தல் பத்திரங்கள் என்ற மோசடித் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து, ஒட்டுமொத்த விவரங்களையும் வெளியிட எஸ்.பி.ஐ.-க்கு சமீபத்தில் உத்தரவிட்டது. அதன்படி எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு பத்திரங்களை வாங்கின, எந்தெந்த கட்சிகள் எவ்வளவு நன்கொடை பெற்றன என்ற விவரங்களை எஸ்.பி.ஐ. மார்ச் 13ஆம் தேதி வெளியிட்டது. 2018ஆம் ஆண்டிலேயே தேர்தல் பத்திரங்கள் நடைமுறைக்கு வந்திருந்தாலும் 2019 ஏப்ரல் 12 முதல் நடப்பாண்டு ஜனவரி 11ஆம் தேதி வரையிலான விவரங்கள் மட்டுமே முதலில் வெளியிடப்பட்டன. எஸ்.பி.ஐ. தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்டு, அதற்கு அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தலையில் கொட்டிய பின்பே, இந்த அரைகுறை விவரங்களும் வெளியிடப்பட்டன. தொடக்கம் முதலே இந்த விவகாரத்தில் பாஜகவை காக்கும் நோக்கிலேயே எஸ்.பி.ஐ. செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அதற்கேற்ப, எந்த கட்சிக்கு எந்த நிறுவனம் நிதி கொடுத்தது என்பதை கண்டுபிடிப்பதை தடுக்க தேர்தல் பத்திரத்தின் எண் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது,...

நான் கேரண்டி

நான் கேரண்டி

என் மீது பாசத்தைப் பொழியும் தமிழ் மக்களே! உங்களுக்கு நான் கேரண்டி தருகிறேன். ஒன்றல்ல; இரண்டல்ல; வண்டி வண்டியாக…. • ‘நீட்’டை திரும்பப் பெற மாட்டேன் என்பதற்கு நான் கேரண்டி • வெள்ளம் வந்தால் உங்களை திரும்பி கூட பார்க்க மாட்டேன் என்பதற்கு நான் கேரண்டி • வெள்ள நிவாரண நிதி ஒரு பைசா கூட தர மாட்டேன் என்பதற்கு நான் கேரண்டி • மெட்ரோ ரயில் திட்டமா? எங்கள் நிதிநிலை அறிக்கையில் ஒப்புதல் தந்தார்களா? கவலைப்படாதீர்கள். அதற்கு நிதி ஒதுக்காமல் பார்த்துக் கொள்வதற்கு நான் கேரண்டி • மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் வராது. இப்போது அடிக்கல் நாட்டு விழா நடத்தியிருப்பது ஒரு நாடகம். கவலைப்படாதீங்க, அடுத்தக்கல்லு வராமல் பார்த்துக் கொள்வதற்கு நான் கேரண்டி • கிராமப்புற வேலைத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை முழுமையாக வழங்காமல் முடக்கிப் போடுவதற்கு நான் கேரண்டி • அமலாக்கத்துறை, புலனாய்வுத்துறை, வருமான வரித்துறைகளை எங்களை எதிர்ப்பவர்களுக்கு...

எதையுமே அழுத்தமாகப் பேசுபவர் அறிஞர் அண்ணா! – கொளத்தூர் மணி

எதையுமே அழுத்தமாகப் பேசுபவர் அறிஞர் அண்ணா! – கொளத்தூர் மணி

கோவை மாவட்டக் கழக சார்பில் 02.03.2024 அன்று கோவை அண்ணாமலை அரங்கில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை:- அண்ணாவின் பொதுவுடைமை சிந்தனை அண்ணாவின் நினைவுநாளில் அவரைப் பற்றி பேசுவதும், அவரின் சிந்தனைப் போக்கும் செயல்பாடுகளும் என்னவாக இருந்தன என்பதைப் பற்றி சிலவற்றை பகிர்ந்து கொள்வது நமக்கு நன்மை பயக்கும் என்ற கருத்தில்தான் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கை ஏற்படுத்தியிருப்பார்கள் என்று கருதுகிறேன். 1930-களில் எம்.ஏ என்பது உயர்ந்த படிப்பாக பார்க்கப்பட்டது. ஆனால் அந்த உயர்ந்த படிப்பை முடித்துவிட்டு அரசுப் பணிக்கோ, மற்ற வேலைக்கோ செல்லாமல் சமூகப் பணிக்கு வந்தார் என்பதே அண்ணாவை பற்றிய ஒரு பெரிய மதிப்பை நம் மனதில் ஏற்படுத்தும். அறிஞர் அண்ணா எளிய குடும்பத்தில் பிறந்து முதுநிலை கல்வியை முடித்தவர். அரசியலில் சமூகப்பணியில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் அவர் பெரியாரிடம் வந்த பிறகு ஏற்பட்டது என்று கூட நான்...

தமிழ்நாட்டின் மீதான பாஜகவின் வன்மம்!

தமிழ்நாட்டின் மீதான பாஜகவின் வன்மம்!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் என்பவர் கைது செய்யப்பட்டதை ஒட்டி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் மிக மோசமாக சித்திரிப்பு செய்கிறது வேலையில் இறங்கியிருக்கிறது பாஜக. பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், உத்தரப் பிரதேசத்தில் என்ன நிலைமை என்பது கூட தெரியாமல், தமிழ்நாட்டின் மீது சேற்றை வாரி இறைக்கும் பாஜகவினருக்கு பத்திரிகையாளர் அரவிந்தாக்‌ஷன் தரவுகளால் பதிலடி கொடுத்திருக்கிறார். 15.02.2024 அன்று West Delhi-ல் இருக்கும் Aventa Company-ன் basement -ல் போதை மருந்து தயாரிப்பதற்கான pseudoephedrine எனும் மூலப்பொருள் 50.070 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக ஒன்றிய அரசின் போதைத் தடுப்புப் பிரிவின் (NCB) டெல்லி மண்டல அலுவலகம் வழக்குப் பதிவு செய்துள்ளது. வழக்கு எண்-VIII /03/DZU/2024 – இந்த வழக்குக்கு விகாஷ் ஷர்மா என்ற ஆய்வாளர்தான் விசாரணை அதிகாரி. இது சம்பந்தமாக 23-02-2024 அன்று ஜாபர் சாதிக் என்ற தமிழ்நாட்டைச் சார்ந்தவருக்கு சம்மன் வழங்கப்பட்டு,தொடர் சோதனைகள்...

மோடி ஆட்சியின் மோசமான சர்வாதிகாரம்

மோடி ஆட்சியின் மோசமான சர்வாதிகாரம்

இந்தியாவில் மோடி ஆட்சி படு மோசமான சர்வாதிகாரத்தை நோக்கி சென்றுகொண்டுள்ளது என்று சர்வதேச ஆய்வு நிறுவனம் தனது 2024ஆம் ஆண்டிற்கான ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. ஸ்வீடன் நாட்டின் கோதன்பர்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் V-Dem Institute ஆகும். உலகின் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு வகையான ஜனநாயகங்கள் எப்படி செயல்பட்டு வருகின்றன என்பது குறித்து மிக நுட்பமாக ஆய்வு செய்யும் உலகின் முதன்மையானது இந்த நிறுவனம். இந்த நிறுவனத்தில் மட்டும் 180 நாடுகளை சேர்ந்த 4080 பேர் பணியாற்றுகின்றனர். 201 நாடுகளை பற்றிய 31 மில்லியன் தரவுகள் இந்த நிறுவனத்திடம் உள்ளது. 1789 முதல் 2023 வரை உள்ள தரவுகள் இதில் அடங்கியுள்ளது. மிக துல்லியமாக ஒவ்வொரு நாட்டில் உள்ள வெவ்வேறு வகையான ஜனநாயகப் பண்பு குறித்து அறிக்கை தருவது இந்த நிறுவனம். அத்தகைய நிறுவனம் 2024ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் மோடி ஆட்சி மிக மோசமான சர்வாதிகாரத்தை நோக்கி சென்றுகொண்டுள்ளது....

பத்திரிகையாளர்களை பந்தாடிய பாஜக

பத்திரிகையாளர்களை பந்தாடிய பாஜக

அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 400 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறுவோம் என்று பாஜக கூறத் தொடங்கியிருக்கிறது. அதற்கேற்ப மக்கள் மனநிலையைக் கட்டமைக்கும் விதமாக, பல ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை திணிக்கத் தொடங்கியிருக்கின்றன. தமிழ்நாட்டில் டெபாசிட் வாங்கும் அளவுக்குக்கூட வளர்ந்திடாத பாஜக 18% வாக்குகளுக்கு மேல் பெறும் என்றும், 4 முதல் 6 தொகுதிகள் வரை வெல்லக்கூடும் என்றும் புதிய தலைமுறை ஊடகம் கூட கருத்துத் திணிப்பு செய்தது. இப்படி பாஜகவிற்கு ஆதரவாக கருத்துருவாக்கம் செய்ய முயலும் ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு எப்படி நடத்தியிருக்கிறது என்பது பெரும் விவாதத்துக்கு உரியது. இதுகுறித்து “தி ஸ்கிரால்” ஊடகத்தில் அயூஷ் திவாரி என்பவர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்: 2014ஆம் ஆண்டில் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியா 180 நாடுகளில் 140-வது நாடாக இருந்தது. அதுவே மோசமான நிலைதான் என்றால், இப்போது 163வது இடத்துக்கு மேலும்...

சனாதனம் குறித்த உதயநிதி பேச்சு; உச்சநீதிமன்றத்தின் கருத்து சரியா?

சனாதனம் குறித்த உதயநிதி பேச்சு; உச்சநீதிமன்றத்தின் கருத்து சரியா?

தமிழ்நாட்டு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சிற்கு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து அதிர்ச்சியளிக்கிறது. ஒரு அமைச்சரே இப்படி சனாதனத்தை எதிர்க்கலாமா? என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், கருத்து சுதந்திரத்தை முறைகேடாக பயன்படுத்துவதாக கருத்து தெரிவித்துள்ளது. சனாதனம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது. சனாதன தர்மம் என்றால் என்ன? என்பதை விவாதித்து விளக்கமளிக்காத உச்சநீதிமன்றம், ஒட்டுமொத்தமாக சனாதன தர்மத்தை எதிர்க்க கூடாது, அது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்துவது என்று கூறுவது சற்றும் நியாயமற்ற ஒரு வாதமாகும். சனாதன தர்மத்தை வாழ்க்கை முறை என்கிறார்கள். ஆனால் வேத பண்டிதர்கள் முதல் சங்கராச்சாரியார் வரை சனாதனம் என்பது வர்ணாசிரம தர்மம் தான் என்று கூறியுள்ளனர். பிராமணன் – சத்திரியன் – வைசியன் – சூத்திரன் என்ற நான்கு பிரிவுகளை உள்ளடக்கியது தான் சனாதன தர்மம் என்று கூறுகிறார்கள். கீதையிலே கிருஷ்ணனும் இந்த நான்கு வர்ணத்தை காப்பாற்றுவதற்கு...

வேலையில்லா கொடுமை; உயிரை இழக்கவும் துணியும் இந்தியர்கள்!

வேலையில்லா கொடுமை; உயிரை இழக்கவும் துணியும் இந்தியர்கள்!

உத்தரப் பிரதேச இளைஞர்களை சில விதிகளைத் தளர்த்தி இஸ்ரேலுக்கு வேலைக்கு அனுப்பியிருப்பதாக கடந்த மாதம் செய்திகள் வெளியாகின. பாலஸ்தீன படைகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே சண்டை நடக்கும் சூழலில் இது தேவைதானா என அப்போதே விமர்சனங்கள் எழுந்தன. இப்போது, நூற்றுக்கணக்கான இந்தியர்கள் கடந்த ஓராண்டில் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. இருதரப்பிலும் இழப்புகளும் தாக்குதல்களும் தொடரும் வேளையில் இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் உள்ளிட்ட நாட்டவரையும் தங்கள் நாட்டு ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் சேர்த்துக் கொண்டிருக்கிறது ரஷ்யா. உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்ய படையில் சேர அந்நாட்டு இளைஞர்கள் தயக்கம் காட்டுவதாக கடந்த ஆண்டில் செய்திகள் வெளியாகியிருந்தன. அதனைத் தொடர்ந்து கடந்த 6 மாதங்களாகவே இதுபோல வெளிநாட்டு இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து தங்கள் நாட்டு ராணுவத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறது ரஷ்யா. விடுமுறை இல்லை,...