தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு
1879 செப்.17, ஈரோட்டில் பெரியார் பிறந்தார். 1898 13 வயது நாகம்மையாரை மணம் முடித்தார். 1902 சாதி ஒழிப்பு கலப்பு திருமணங்களை நடத்திவைத்தார். அனைத்து சாதியினர், மதத்தினருடன் சமபந்தி போஜனம் நடத்தினார். 1907 காங்கிரசில் ஆர்வம். ஈரோட்டில் பிளேக் நோய் பரவிய போது யாரும் முன்வராத நிலையில் துணிந்து மீட்பு பணி ஆற்றினார். 1909 தனது தங்கையின் மகளுக்கு விதவை மறுமணம் செய்வித்தார். 1917 பொதுநலத் தொண்டர் ஈரோடு நகர் மன்றத் தலைவர் ஆனார். 1920 காங்கிரசில் சேரும்போது 29 புதுப் பொறுப்புகளை தூக்கி எறிந்தார். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றுச் சிறை சென்றார். 1921 கள்ளுக்கடை மறியலில் பங்கேற்றுச் சிறை சென்றார். 1924 வைக்கம் போராட்டம். வ.வே.சு. அய்யரின் சேரன்மாதேவி குருகுலத்தின் வருணாசிரம நடவடிக்கையை எதிர்த்தார். 1925 குடி அரசு ஏடு துவக்கம். காஞ்சிபுரம் காங்கிரசு மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானம் கொண்டுவர முயன்று தோல்வி. காங்கிரசை விட்டு வெளியேறினார். 1927 ...