Category: காஞ்சிபுரம்

கழகத் தலைவரின் சுற்றுப்பயணம் தொடங்கியது போதைக்கு எதிரான பரப்புரைக்குத் தயாராக அறிவுரை

கழகத் தலைவரின் சுற்றுப்பயணம் தொடங்கியது போதைக்கு எதிரான பரப்புரைக்குத் தயாராக அறிவுரை

19.07.2024 அன்று தலைமைக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கழகத் தலைவரின் மாவட்ட வாரியான சுற்றுப்பயணம் சென்னையில் தொடங்கியது. சென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 04.08.2024 அன்று மயிலாப்பூரில் உள்ள கழகத் தலைமை அலுவலகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது. முதல் நிகழ்வாக அண்மையில் மறைந்த கழகச் செயல்வீரர் மதிவாணன் அவர்களின் படத்தைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்தார். பின்னர் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவரது மகன் தமிழரசன் மாவட்டக் கழக வளர்ச்சி நிதியாக ரூ.5000/- வழங்கினார். மேலும் தற்போது போதைப்பொருள் கலாச்சாரம் இளைஞர்கள் மத்தியில் வேகமாகப் பரவி வரும் சூழலில் அதற்கு எதிரான பரப்புரைகளைக் கழகத் தோழர்கள் திவிரமாக மேற்கொள்ள வேண்டும் எனக் கழகத் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டுப் பேசினார். கழகப் பொதுச்செயலாளர் பேசுகையில் ஊடகங்களும், பத்திரிகைகளும்...

காஞ்சி பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர்!

காஞ்சி பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர்!

காஞ்சிபுரம் : பாசிச பாஜகவை வீழ்த்துவோம்! ஜனநாயக இந்தியாவைக் கட்டமைப்போம்! என்ற கொள்கை முழக்கத்தோடு காஞ்சி மக்கள் மன்றத்தின் பேரணி – பொதுக்கூட்டம் – கலை நிகழ்ச்சிகள் 09.03.2024 அன்று காஞ்சி பெரியார் நினைவுத் தூண் அருகில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் ரவிபாரதி, பெங்களூர் சித்தார்த்தன், அருண்குமார், எட்வின் பிரபாகரன், சூர்யா, மயிலை குமார், அன்னூர் விஷ்ணு, உதயா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 15032024 இதழ்

குடந்தை – கீழப்பாவூர்-குடியாத்தத்தில் சிறப்புடன் நடந்த மண்டல மாநாடுகள்

குடந்தை – கீழப்பாவூர்-குடியாத்தத்தில் சிறப்புடன் நடந்த மண்டல மாநாடுகள்

குடந்தையில்: ‘நமக்கான அடையாளம் திராவிட மாடல்’ என்ற முழக்கத்தை முன் வைத்து கும்பகோணம் மீன் மார்க்கெட் திடலில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மண்டல மாநாடு 16.5.2022 அன்று மாலை சிறப்புடன் நடைபெற்றது. மாவட்டக் கழகத் தலைவர் மு. இளங்கோவன் தலைமையில் சா.வெங்கடேசன் (ஒன்றிய அமைப்பாளர்) முன்னிலையில் நடைபெற்றது. கு. பாரி (தஞ்சை மாவட்ட செயலாளர், தி.வி.க.), தெ. மகேசு (மாவட்டச் செயலாளர்), திருச்சி நாகம்மையார் இல்லத்துப் பெண்ணைத் திருமணம் செய்தவரும், திராவிடர் கழகத் தோழருமான பவுண்டரீகபுரம் முருகேசன், பொறியாளர் திருநாவுக்கரசு (உழவர் இயக்கம்), சி.த. திருவேங்கடம் (மாவட்ட அமைப்பாளர்), சா. விவேகானந்தன் (மண்டல செயலாளர் வி.சி.க.) உள்ளிட்டோர் மாநாட்டில் பேசினர். முன்னதாக, பெரம்பலூர் தாமோதரன், ‘மந்திரமா-தந்திரமா’ நிகழ்ச்சி நடைபெற்றது. திராவிடர் கழக மாவட்ட மகளிரணி செயலாளர் திரிபுரசுந்தரி மற்றும் தி.க. தோழர்கள் குணா, சங்கர், கழகத் தலைவர்-பொதுச் செயலாளருக்கு துண்டுகளை அணிவித்து மகிழ்ந்தனர். கரிகாலன் நன்றி கூறினார். தொடர்ந்து 20...

பார்ப்பன எதிர்ப்பு ஆன்மீகத்தையும் அரவணைத்ததே திராவிடக் கோட்பாடு

பார்ப்பன எதிர்ப்பு ஆன்மீகத்தையும் அரவணைத்ததே திராவிடக் கோட்பாடு

மே 21இல் குடியாத்தத்தில் நடந்த கழக மண்டல மாநாட்டில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையிலிருந்து: குடியாத்தம், வேலூர் மாவட்டங்கள் திராவிடத்தின் கொள்கை வேர்களைத் தாங்கி நிற்கிறது, ஆரிய எதிர்ப்பு என்ற சனாதன வர்ணாஸ்ரம பார்ப்பன எதிர்ப்புக்கு களமாடிய முன்னோடிகள் இந்த மாவட்டத்தில் உண்டு. பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி, சமூக சீர்த்திருத்தப் படை ஒன்றை இப்பகுதியில் உருவாக்கி, தேனீர்க் கடை இரட்டைக் குவளைத் தீண்டாமை – பார்ப்பன உயர்ஜாதியினர் வீதிகளில் தீண்டப்படாத மக்கள் நடக்கும் உரிமை மறுக்கப்பட்ட சமூகக் கொடுமைகளை எதிர்த்து நேரடி நடவடிக்கையில் இறங்கினார். சாவு சேதி சொல்லவும், பறை அடிக்கவும் தீண்டப்படாத மக்கள் மீது அவமானங்கள் சுமத்தப்பட்டதை எதிர்த்து பறை எரிப்புப் போராட்டம் நடத்தியபோது திராவிடர் கழகத் தோழர்கள் அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற வேண்டும் என்று பெரியார் ‘விடுதலை’யில் அறிக்கை விடுத்தார். 1954இல் ஈரோட்டில் பெரியார் நடத்திய புத்தர் கொள்கை பரப்பு மாநாடு – குலக் கல்வி திட்ட எதிர்ப்பு மாநாடுகளில்...

சென்னை-விழுப்புரம்-கோபியிலிருந்து பரப்புரைப் பயணம் தொடங்கியது பொது மக்கள் பேராதரவு

சென்னை-விழுப்புரம்-கோபியிலிருந்து பரப்புரைப் பயணம் தொடங்கியது பொது மக்கள் பேராதரவு

‘தமிழ்நாட்டை வஞ்சிக்காதே; சமூக நீதியை பறிக்காதே; புதிய கல்வி என்ற பெயரில் குலக் கல்வியைத் திணிக்காதே; தமிழ்நாட்டை வடநாடாக்காதே!’ என்ற முழக்கங்களுடன் திராவிடர் விடுதலைக் கழகத்தின் 6 முனை பரப்புரைப் பயணங்கள் தொடங்கின. சென்னையிலிருந்து சென்னை பரப்புரைக் குழு ஆகஸ்டு 25 காலை 10 மணிக்கு இராயப்பேட்டை பெரியார் சிலையிலிருந்து பயணத்தைத் தொடங்கியது. மே 17, இயக்கத் தோழர்களின் பறை இசையுடன் நிகழ்வுகள் தொடங்கின. பயணத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், பயணக் குழுவினரை வாழ்த்தி உரையாற்றி கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். பொதுச் செயலாளர்விடுதலை இராசேந்திரன் பயணத்தின் நோக்கங்களை விளக்கிப் பேசினார். சென்னை மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் துரை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் ரூதர் கார்த்திக் பயணக் குழுவினரை வாழ்த்தி உரையாற்றினர். தொடர்ந்து பல்லாவரம், அனகாபுத்தூர், தாம்பரத்தில் பரப்புரை நடந்தது. மக்கள் திரளாகக் கூடி நின்று கருத்துகளைக் கேட்டனர். துண்டறிக்கைகளை விருப்பத் துடன்...

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

  ‘மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப் பறிக்காதே; புதிய கல்வி என்ற பெயரால் குலக் கல்வியைத் திணிக்காதே’ என்ற முழக்கத்துடன் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழகத்தில்  முனைகளிலிருந்து பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறது. ஆகஸ்டு 26இல் தொடங்கி நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி பயண நிறைவு விழா நடைபெறுகிறது. திருப்பூர், விழுப்புரம், ஈரோடு (கோபி), மயிலாடு துறை, சென்னை, மேட்டூர் என 6 முனைகளிலிருந்து தொடங்கும் பயணம், 150 ஊர்களில் பரப்புரையை நடத்துகிறது. நூறுக்கும் மேற்பட்ட கழக செயல்பாட்டாளர்கள், பயணங்களில் முழு அளவில் பங்கேற்கிறார்கள். பரப்புரைக்கான துண்டறிக்கை, கழக வெளியீடுகள் தயாராகி வருகின்றன. கலைக் குழுக்கள், பரப்புரைப் பயணங்களில் இசை, வீதி நாடகம் வழியாக மண்ணின் மைந்தர்கள் வேலை  வாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுவது குறித்தும் வடநாட்டுக்காரர்கள் தமிழக வேலை வாய்ப்புகளில் குவிந்துவரும் ஆபத்துகள் குறித்தும் மக்களிடையே பரப்புரை செய்வார்கள். ஒத்த கருத்துடைய அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள் பயணத்துக்கு ஆதரவு தர ஆர்வத்துடன்...

கழகக் கட்டமைப்பு நிதி

கழகக் கட்டமைப்பு நிதி

மதுரை மாவட்டம் மருத்துவர் சௌந்திர பாண்டியன் –            ரூ.   20,000 காமாட்சி பாண்டி தி.வி.க – ரூ.   10,000 தளபதி –      ரூ.   5,000 அழகர் பிரபாகரன் – தி.வி.க. –      ரூ.   4,000 நாக பாலன் – ரூ.   2,000 செயராமன் –      ரூ.   1000 விசு – ஆடிட்டர் –      ரூ.   1000 ராஜா – சிம்மக்கல்       –      ரூ.   1000 விஜயன் – சமூக நீதி பண்பாட்டு மையம் –      ரூ.   1000 கருப்பையா –     ரூ.   1000 சான் பெனடிக் – திருப்பரங்குன்றம் –      ரூ.   500 விஜய் – சிம்மக்கல் –      ரூ.   500 டேவிட் –      ரூ.   500 குமரேசன்...

கழக சார்பில் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை

கழக சார்பில் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை

சென்னையில் : டாக்டர் அம்பேத்கர் 128ஆவது பிறந்தநாளான 14.04.2019 காலை 9 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக அடையாறில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர்  சிலைக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தோழர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கழகத் தோழர்கள் ஜாதி, மத எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்பின் இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில் கழகத்  தோழர்கள் ராஜீ, சங்கீதா, அம்பிகா, பூர்ணிமா ஆகியோர் அம்பேத்கர் படத்திற்கும், பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து வீரவணக்க முழக்கங்களை எழுப்பினர். திருப்பூரில் :  திருப்பூரில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஜாதி ஒழிப்பு உறுதியேற்பு நிகழ்வாக 14.04.2019 ஞாயிறு காலை 11.00 மணியளவில் மாநகராட்சி எதிரில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்றது. கழகப் பொரு ளாளர்...

காஞ்சி, சென்னை மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள்

காஞ்சி, சென்னை மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள்

கழகத் தலைவர், பொதுச் செயலாளர், அமைப்புச் செயலாளர், பொருளாளர் மாவட்டம் தோறும் கழகத் தோழர்களை சந்தித்து உரையாடி வருகிறார்கள். சில பகுதிகளில் மாவட்டக் கழக அமைப்புகள் மாற்றியமைக்கப்பட்டன. கழக ஏடுகளுக்கு ‘சந்தா’க்களை தோழர்களிடமிருந்து பெற்று வருகின்றனர். இது குறித்து ஏற்கனவே பல மாவட்ட கலந்துரையாடல் செய்திகள் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டில் வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் டிசம்பர் 20ஆம் தேதி மாலை கூடுவாஞ்சேரி தலைநகர் தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது. கழகப் பொறுப்பாளர்கள் உரையாற்றியதைத் தொடர்ந்து கீழ்க்கண்ட பொறுப்பாளர் களை கழகத் தலைவர் அ றிவித்தார். மாவட்டத் தலைவர் செ.கு. தெள்ளமிழ்து; மாவட்ட செயலாளர் மு. தினேசுகுமார்; மாவட்ட அமைப்பாளர் கா. இரவிபாரதி; மாவட்ட துணைத் தலைவர் சி. சிவாஜி; மாவட்ட துணை செயலாளர் சு. செங்குட்டுவன்; மாவட்ட இளைஞரணி தலைவர் மூ. ராஜேஷ்; மாவட்ட இளைஞரணி செயலாளர் ஊமைத்துரை; மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ந. இராமஜெயம்;...

‘போலி அறிவியல்’ கும்பலுக்கு சில கேள்விகள்

‘போலி அறிவியல்’ கும்பலுக்கு சில கேள்விகள்

மகாபாரத காலத்திலேயே சோதனைக் குழாய் குழந்தை பிறப்பு முறை வந்து விட்டது என்றால் பிறகு அது ஏன் நடைமுறையில் இல்லை? வெளி நாட்டுக்காரர்கள் இந்த அறிவியல் முறையை கண்டுபிடிக்கும் வரை, ‘இந்தப் புராண அறிவியல்’ எந்தப் புற்றுக்குள் பதுங்கிக் கிடந்தது? சோதனைக் குழாய் குழந்தைகளுக்கு-பெண்-ஆண் விந்துக்களை பரிசோதிக்கும் சோதனைச் சாலைகள் இருந்தனவா? ‘ஸ்டெம் செல்’ அறிவியல் புராண காலத்திலேயே இருந்தால் அந்த ‘ஸ்டெம்செல்’ மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்பட்டதா? அதற்கான மருத்துவர்கள் இருந்தார்களா? தசரதன் மனைவிக்கு குழந்தை இல்லாததால் அசுவமேத யாகம் நடத்தி ‘குதிரை’யுடன் தசரதன் மனைவி உறவு கொண்டு இராமன் பிறந்ததாக இராமாயணம் கூறுகிறதே? அப்போது ஏன் ‘சோதனைக் குழாய்’ முறை – இராமன் பிறப்புக்குப் பயன்படுத்தவில்லை? அலுமினியம் இரப்பர் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு தான் விமானக் கண்டுபிடிப்பே வந்தது? இராவணன் போர் விமானங்களைப் பயன்படுத்தினான் என்றால் – இரப்பர், அலுமினியம் இல்லாமலே விமானம் வந்து விட்டதா? இராம – இராவண யுத்தம்...

நெமிலியில் மக்கள் மன்றம் நடத்திய அம்பேத்கர் நினைவு நாள்

நெமிலியில் மக்கள் மன்றம் நடத்திய அம்பேத்கர் நினைவு நாள்

மக்கள் மன்றம் சார்பில் காஞ்சி மாவட்டம் நெமிலியில் அம்பேத்கர் நினைவு நாள் கூட்டம் டிசம்பர் 17ஆம் தேதி மக்கள் மன்ற கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தது. காவிப் பயங்கரவாதிகளுக்கு எதிராக சமத்துவம்-சகோதரத்துவம் காண உறுதி ஏற்போம் என்கிற முழக்கத்தோடு நிகழ்வு நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அம்பேத்கரின் இந்து எதிர்ப்பு, இராமாயண எதிர்ப்பு பார்ப்பன எதிர்ப்புகளையும் ஜாதி – ஜாதியமைப்பு – ஜாதி ஆணவப் படுகொலை குறித்தும் உரையாற்றினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நிறைவுரையாற்றினார். மக்கள் மன்றத்தில் பத்தாண்டுகளாக இணைந்துள்ள தோழர் உமாவின் தந்தையார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது அம்பேத்கர் – பெரியார் சிலைகளுக்கு பறை முழக்கத்துடன் மாலைகள் அணிவிக்கப் பட்டன. பெரியார் முழக்கம் 10012019 இதழ்

மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டங்கள்

மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டங்கள்

காஞ்சிபுரம் : திராவிடர் விடுதலைக் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்  18-10-2018 அன்று மாலை 5 மணிக்கு தினேஷ்குமார் தலைமையில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் மற்றும் தென்சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி முன்னிலையில் நடைபெற்றது . புரட்சிப் பெரியார் முழக்கம், நிமிர்வோம் இதழ்களுக்கு சந்தா சேர்த்தல், தெருமுனைக் கூட்டம், கருத்தரங்கம்  நடத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் தென்சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், செங்குட்டுவன், தெள்ளமிழ்து, ரவிபாரதி, கரிகாலன், ஆண்டனி, ராஜேஷ், அருண் ஆகியோர் கலந்து கொண்டனர். சங்கராபுரம் :  18.10.2018 வியாழன் மாலை 4மணி அளவில் திராவிடர் விடுதலை கழக மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் சங்கராபுரம் வட்டம் கடுவனூரில் சி. சாமி துரை இல்லத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கழகத் தலைமைக் குழு உறுப்பினர் நா.அய்யனார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அரசியல் சூழல்களும், பி.ஜே.பி.யினால் மக்கள் படும் அவலம் , பெரியாரியல் பற்றிய தமிழ்...

முதலில் மனிதர்களாக வாழப் பழகுங்கள் வடகலை-தென்கலை அய்யங்கார்களுக்கு உயர்நீதிமன்றம் இடித்துரை

முதலில் மனிதர்களாக வாழப் பழகுங்கள் வடகலை-தென்கலை அய்யங்கார்களுக்கு உயர்நீதிமன்றம் இடித்துரை

வைணவக் கோயிலான காஞ்சிபுரம் தேவ ராஜசாமி கோயிலில் தென்கலை அய்யங்கார் களுக்கும் வடகலை அய்யங்கார்களுக்கும் தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது. வடகலை அய்யங்கார் பார்ப்பனர்கள் ‘தமிழ் பிரபந்தங்களை’ பாடக் கூடாது என்கிறார்கள். தென்கலை அய்யங்கார்கள், ‘ஆச்சாரியா வேதாந்த தேசிகரின்’ தமிழ் பிரபந்தங்களைப் பாட வேண்டும் என்று கூறி வருகிறார்கள். தமிழ் பிரபந்தம் பாட அனுமதிக்கக் கோரி சுரேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், தமிழ் பிரபந்தத்தைப் பாடலாம் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்து, வழக்கு விசாரணையை அக்.22ஆம் தேதி தள்ளி வைத்தார். இந்த நிலையில் சீனிவாசன் என்பவர் தமிழ் பிரபந்தத்தை ஒரு நாள் மட்டும் பாடாமல், தொடர்ந்து பாடுவதால் தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ‘சரசுவதி பூஜை’ நாளன்று நீதிமன்றம் விடுமுறை. மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் கோரியதால் வழக்கு, நீதிபதி வைத்தியநாதன் வீட்டிலேயே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது....

கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள்

கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள்

ஈரோடு வடக்கு – ஈரோடு வடக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 02.09.2018 அன்று மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. தலைமைக் கழக பேச்சாளர் வேலுச்சாமி  தலைமையில் மாவட்ட செயலாளர் வேணுகோபால் முன்னிலை வகித்தார்.  கலைஞர் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாள் விழாவை கோபியில் அனைத்து இயக்கங்களும் இணைந்து ஊர்வலம் நடத்துவது எனவும், மாவட்ட முழுவதும் அய்யா பிறந்த நாள் விழாவினை தமிழர் கல்வி மீட்பு பரப்புரை பயணமாக வாரந்தோறும் ஞாயிறன்று ஒவ்வொரு ஒன்றியங்களாக நடத்துவது எனவும், பரப்புரை பயணத் தொடக்க நிகழ்வாக செப்டம்பர் 23 அன்று குருவரெட்டியூரில் பொதுக்கூட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கலந்துரையாடல் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள கிளைக் கழகத்தின் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர். காஞ்சி மாவட்ட கலந்துரையாடல் 02.09.2018 அன்று மாலை 5 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம் கிராமத்தில் காஞ்சி மாவட்ட...

பயண அனுபவங்கள் : தோழர்களின் பகிர்வு

பயண அனுபவங்கள் : தோழர்களின் பகிர்வு

ஆகஸ்ட் 21 முதல் 26 வரை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய ‘தமிழர் கல்வி உரிமை மீட்பு’ப் பரப்புரைப் பயணத்தில் பங்கேற்ற தோழர்களின் பயண அனுவபங்கள். சென்னை குழுவின் அனுபவங்கள் பற்றி உமாபதி கல்வி உரிமைகள் குறித்த பரப்புரைப் பயணம் என்பதால் கலைக்குழுவுக்கு அதிக நேரத்தை எல்லா இடத்திலும் வழங்கினோம். எங்களுடன் வந்த விரட்டு கலைக் குழுவின் நாடகம் பரப்புரையின் நோக்கத்தை மக்களிடம் மிக எளிமையாக விளக்கியது. தங்களுக்குத் தேவையான செய்திகளைப் பேசுகிறார்கள் என்பதைப் புரிந்து எல்லா இடங்களிலும் மக்கள் தங்களது பேராதரவைத் தந்தனர். சென்ற இடங்களில் கடை வைத்திருந்த ஏழை, எளிய உழைக்கும் மக்கள், நம் நிகழ்ச்சியை முடித்த பிறகு குளிர்பானங்கள், பழங்கள் வாங்கிக் கொடுத்து பல இடங்களில் எங்களை உற்சாகப்படுத்தினர். ஒரு இடத்தில் தோழர்கள் பரப்புரையில் புத்தகம் விற்றுக்கொண்டிருந்தபோது நாடகத்தைப் பார்த்துவிட்டு, “எனக்குப் படிக்கத் தெரியாது, நீங்கள் ஏதோ நல்லது செய்கிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது” என்றுகூறி தனது...

தோழர் செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு !

தோழர் செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு !

தோழர் செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு ! தமிழர் உயிர் காக்க தன்னுயிர் மாய்த்த மக்கள் மன்ற தோழர்.செங்கொடி அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வான 28.08.2018 அன்று கழக பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் மற்றும் கழகத் தோழர்கள் காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தில் அமைந்துள்ள தோழர்.செங்கொடி நினைவிடத்தில் வீரவணக்கத்தை செலுத்தினார்கள்.

தோழர் செங்கொடி அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் 28082018

தோழர் செங்கொடி அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் 28082018

தமிழர் உயிர் காக்க தன்னுயிர் மாய்த்த மக்கள் மன்ற தோழர்.செங்கொடி அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வான இன்று (28.08.2018)… கழக பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் மற்றும் கழகத் தோழர்கள் காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தில் அமைந்துள்ள தோழர்.செங்கொடி நினைவிடத்தில் வீரவணக்கத்தை செலுத்தினார்கள்.

பயணத்துக்கு பக்தர்கள் இன உணர்வாளர்கள் பேராதரவு

பயணத்துக்கு பக்தர்கள் இன உணர்வாளர்கள் பேராதரவு

பரப்புரைப் பயணத்தில் ‘நீட்’ பாதிப்புகளையும் தமிழ்நாட்டின் மத்திய அரசுத் துறைகளில் வடநாட்டார் குவிக்கப்படுவதையும் மக்கள் பேராதரவுடன் வரவேற்கிறார்கள். துண்டறிக்கைகளை, நூல்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கிறார்கள். மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் சென்னைக் குழு பரப்புரை செய்தபோது நெற்றி முழுதும் விபூதி-குங்குமம் அணிந்த தோழர், ஆர்வத்துடன் சைக்கிளில் வந்து இறங்கி கழக வெளியீடுகளை வாங்கி தோழர்களின் கரங்களைப் பிடித்து பாராட்டினார். அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் கண்டிகையில் பரப்புரை முடிந்து தோழர்கள் பயணப்பட்ட பிறகு, ஒரு தோழர் மோட்டார் சைக்கிளில் வேகமாகப் பின் தொடர்ந்து வந்து வாகனத்தை நிறுத்தி ரூ.500 நன்கொடை வழங்கினார். பெரியார் முழக்கம் 23082018 இதழ்

ஜனநாயக காப்புப் பொதுக்கூட்டம் ! காஞ்சிபுரம் 03082018

ஜனநாயக காப்புப் பொதுக்கூட்டம் ! காஞ்சிபுரம் 03082018

ஜனநாயக காப்புப் பொதுக்கூட்டம் ! பேச்சுரிமை,கருத்துரிமை உள்ளிட்ட ஜனநாயக உரிமைகள் மீதான அடக்குமுறையை எதிர்த்து…… நாள் : 03.08.2018,வெள்ளி நேரம் : மாலை 4.00 மணி இடம் : பெரியார் சுடர் காந்தி சிலை,காஞ்சிபுரம். கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி,விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தோழர் பண்ருட்டி வேல் முருகன்,மதிமுக து.பொ.செயலாளர் தோழர் மல்லை சத்யா உள்ளிட்ட தோழர்கள் உரையாற்றுகிறார்கள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : தன்னாட்சித் தமிழகம் அமைப்பு.

‘தமிழ்நாடு மாணவர் கழக’ பயிற்சி முகாம் காஞ்சியில் கருத்துச் செறிவுடன் நடந்தது

‘தமிழ்நாடு மாணவர் கழக’ பயிற்சி முகாம் காஞ்சியில் கருத்துச் செறிவுடன் நடந்தது

தமிழ்நாடு மாணவர் கழகத்தின் சார்பில் மாணவர்களுக்கான பயிற்சி ஜூன் 30, ஜூலை 1, 2018 தேதிகளில் காஞ்சிபுரத்தில் மக்கள் மன்றத்தில் சிறப்புடன் நடைபெற்றது. சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக ஒத்துழைப்புடன் தமிழ் நாடு மாணவர் கழகம் நடத்திய இந்தப் பயிற்சி வகுப்பை மாணவர் கழக அமைப்பாளர் பாரி சிவகுமார் ஒருங்கிணைத்தார். பயிற்சியில் 45 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 20 பேர் மாணவிகள். முதல் நாள் காலை 10 மணியளவில் மக்கள் மன்றத் தோழர்களின் புரட்சிகரப் பாடல்களுடன் வகுப்புகள் தொடங்கின. தோழர்கள் அறிமுகத்தைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மாணவர் பயிற்சியின் நோக்கங்களை விளக்கினார். தொடர்ந்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, ‘கல்வி – நம்முன் உள்ள சவால்கள்’ என்ற தலைப்பில் பேசினார். ‘உயிரினம் சிந்திக்கத் தொடங்கியபோதே உருவாகிவிட்டது கற்றல் செயல்பாடு. மூளையின் புரிதல் சக்தியோடு கற்பது வழியாக செயல்படக் கூடிய கல்வி செயல்பாட்டை பள்ளியில் அடைத்த தால் பள்ளிக்...

தூத்துக்குடி படுகொலை-வேல்முருகன் கைதைக் கண்டித்து  கழகம் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி படுகொலை-வேல்முருகன் கைதைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்

மேட்டூரில் : தூத்துக் குடி படுகொலைகளைக் கண்டித்து கண்டன ஆர்ப் பாட்டம்  23.5.2018 அன்று மேட்டூர் பெரியார் பேருந்து நிலையம் முன்பு சேலம் மேற்கு மாவட்டம் சார்பில்  நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி.கோவிந்த ராசு தலைமை தாங் கினார். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் அப்துல்கபூர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருப்பண்ணன், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கோ. சூரியக்குமார், தமிழக வாழ்வுரிமைக் கட்சி  மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ், நாம் தமிழர்க் கட்சி நகர செயலாளர் மூர்த்தி, கழகத் தோழர் மா.சுந்தர் ஆகியோரின் கண்டன உரைகளைத் தொடர்ந்து இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி கண்டன உரையாற்றினார். குமரேசன் நன்றி கூற கூட்டம் நிறைவுபெற்றது. கூட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தோழர்களும் பொறுப்பாளர்களும் திரளாகக் கலந்து கொண்டனர். காஞ்சியில்  : திராவிடர் விடுதலைக் கழகம் காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் பாலாறு விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம்...

4 நாட்கள்; 30 பரப்புரைக் கூட்டங்கள்; மக்கள் பேராதரவு

4 நாட்கள்; 30 பரப்புரைக் கூட்டங்கள்; மக்கள் பேராதரவு

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி – உரிமை முழக்க ஊர்திப் பேரணி மே 9ஆம் தேதி ஈரோட்டில் பெரியார் இல்லத்திலிருந்து தொடங்கி மே 12ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் நிறைவடைந்தது. ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நான்கு நாட்களில் 25 தெருமுனைக் கூட்டங்களில் பரப்புரைக் குழு பல ஆயிரம் மக்களை சந்தித்து தெருமுனைக் கூட்டங்களை நடத்தியது. சேலம், கிருட்டிணகிரி, வேலூர், கூடுவாஞ்சேரியில் ஒவ்வொரு நாள் மாலையும் பொதுக் கூட்டங்களும் நடந்தன. பா.ஜ.க. – சங் பரிவாரங்களின் பார்ப்பனிய மதவெறித் திணிப் புகள், நீட் திணிப்பு, தமிழக வேளாண் மண்டலத்தை நஞ்சாக்கும் நடுவண் அரசின் திட்டங்கள், காவிரி நீர் பிரச்சினையில் பா.ஜ.க. ஆட்சியின் துரோகம் ஆகியவற்றை விளக்கி மக்களிடம் பேசியபோது மக்கள் பெரிதும் வரவேற்றனர். உரிமை முழக்க ஊர்திப் பேரணி குறித்த செய்திகளின் தொகுப்பு: டி           பேரணியில் 65 தோழர்கள்...

‘பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி’  உரிமை முழக்க ஊர்திப் பேரணிக்கு உற்சாக வரவேற்பு

‘பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி’ உரிமை முழக்க ஊர்திப் பேரணிக்கு உற்சாக வரவேற்பு

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய உரிமை முழக்க ஊர்திப் பேரணியின் பரப்புரை குறித்த ஓர் தொகுப்பு: 9.5.2018 காலை 12 மணியளவில் ஈரோடு பெரியார் நினைவு இல்லம் அருகில் பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி – உரிமை முழக்க ஊர்திப் பேரணி ஆரம்பமானது. மதியம் 2 மணிக்கு பவானியில் பயண நோக்கம் குறித்து நாமக்கல் மாவட்ட தலைவர் மு.சாமிநாதன் பேசினார். அம்மாபேட்டையில் 3 மணியளவில் மாவட்டத் தலைவர் நாத்திக சோதி, பாட்டாளி மக்கள் கட்சி வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, கழக ஒன்றிய செயலாளர் வேல் முருகன், வழக்கறிஞர் பிரகாஷ், திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் பிரகலாதன், மணிகண்டன் (தி.க.), மகாலிங்கம் (தி.க.), வை. இராமன் (தமிழ்நாடு அறிவியல் மன்றம்), செல்வராஜ் (தமிழ்நாடு அறிவியல் மன்றம்) உரையாற்றினர். மேட்டூர் காவேரி கிராஸ் பகுதியில் 3 மணிக்கு பறை முழக்கத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. 3.30 மணிக்கு மேட்டூர் நகர தி.வி.க. சார்பில் உணவு ஏற்பாடு...

புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அமைப்பு பொதுக்கூட்டம் ! திருமுடிவாக்கம் 19042018

புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அமைப்பு பொதுக்கூட்டம் ! திருமுடிவாக்கம் 19042018

புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அமைப்பு பொதுக்கூட்டம் ! சென்னையை அடுத்த திருமுடிவாக்கத்தில் அப்பகுதி மக்களின் முயற்சியில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டுள்ளது. அதனையொட்டி 19-4-2018 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக அம்பேத்கர் சிலைக்கு கழகத் தலைவர் மாலை அணிவித்தார். பொதுக்கூட்டத்தில் காஞ்சி மக்கள் மன்றத் தோழர் மகேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்றச் செயலாளர் பாசறை செல்வராசு, தந்தை பெரியார் திரவிடர்க் கழகத்தின் தோழர் குன்றத்தூர் பரந்தாமன் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

காஞ்சிபுரத்தில்  புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

காஞ்சிபுரத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

காஞ்சிபுரத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! திராவிடர் விடுதலைக் கழகம் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பில் 14.04.2018 அன்று காலை அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அம்பேத்கர் சிலைக்கு கழகத்தினர் மாலை

அம்பேத்கர் சிலைக்கு கழகத்தினர் மாலை

திருப்பூர் : மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கரின் 127 வது பிறந்த நாள் விழா 14.04.2018 சனிக் கிழமை காலை 10.00 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி எதிரில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கரின் சிலை அருகே நடைபெற்றது. கழக பொருளாளர் துரைசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ் வில் புரட்சியாளரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கவிஞர் கனல் மதி வாசிப்பில் கழகத் தின் ‘ஜாதி ஒழிப்பு உறுதிமொழி’ ஏற்பு கழகத் தோழர்களால் ஏற்கப்பட்டது. நிகழ்வின் இடையே பெரியார் பிஞ்சுகள் யாழினி, முத்தமிழ் ஆகி யோரின் பிறந்த நாள் அவ்விடத் திலேயே கேக் வெட்டி கொண்டாடப் பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. கழகத்தின் மாவட்டத் தலைவர் முகில் ராசு, மாநில அறிவியல் மன்ற தலைவர் சிவகாமி, மாவட்டக் கழகச் செயலாளர் நீதிராசன், மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, மாநகர பொறுப்பாளர் மாதவன், மாணவர் கழக தேன்மொழி, இணைய தள...

விஜயேந்திரன்-எச். ராஜா பார்ப்பனத் திமிர் காஞ்சி சங்கர மடம் முற்றுகை

சமஸ்கிருத விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மறுத்த காஞ்சி விஜயேந்திரன், நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த எச். ராஜா மன்னிப்புக் கேட்கக் கோரி தமிழகம் முழுதும் கழகத்தினரும், இன உணர்வாளர்களும் முற்றுகை ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். சேலம்: சேலம் மாவட்ட தி.வி.க. சார்பில் 25.1.18 மாலை 4.30 மணியளவில் சேலம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சி.கோவிந்தராசு தலைமையில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை அவமரியாதை செய்த காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரனின் ஆணவத்தைக் கண்டித்தும், திருவள்ளுவர் சிலை முன் மன்னிப்பு கேட்கக் கோரியும்   சேலம் சங்கர மடம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் விஜயேந் திரன், எச்.ராஜா செயலுக்கு எதிரான முழங்கங்கள் எழுப்பப்பட்டன. தோழர்கள் சக்திவேல், டேவிட், சூரியகுமார், ஏற்காடு பெருமாள், மேட்டூர் தேன்மொழி, இளம்பிள்ளை வசந்தி உட்பட 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது. கொளத்தூர், காவலாண்டியூர்,  மேட்டூர், நங்கவள்ளி, இளம்பிள்ளை, ஏற்காடு ஆகிய பகுதியைச் சேர்ந்த தோழர்கள் கலந்து...

காஞ்சி சங்கர மடம் முற்றுகைப் போராட்டம் !

          காஞ்சி சங்கர மடம் முற்றுகைப் போராட்டம் ! நாளை (25.01.2018) திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் காஞ்சி மக்கள் மன்றம் ஒருங்கிணைந்து…. #காஞ்சி_சங்கர_மடம்_முற்றுகைப்_போராட்டம்… நாளை (25.01.2018) காலை 10 மணிக்கு… இடம்: பெரியார் சிலை எதிரில், சங்கர மடம், காஞ்சிபுரம். தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்காமல் பார்ப்பனியத் திமிரோடு தமிழ்த் தாய் வாழ்த்தை இழிவுபடுத்திய விஜயேந்திர சரஸ்வதியை கண்டித்து.. தமிழையும், தமிழர்களையும் அவமதித்தற்காக விஜயேந்திர சரஸ்வதி மற்றும் எச்.ராஜா ஆகிய இருவரும் திருவள்ளுவர் சிலை முன்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற முழக்கத்தோடு… #முற்றுகைப்_போராட்டம்… பார்ப்பனீய கொட்டத்தை அடக்க தோழர்களே அணிதிரள்வீர்.! திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் ! காஞ்சிபுரம் 22012018

தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் ! காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் படம் அகற்றப்பட்டத்தை கண்டித்து போராடிய மக்கள் மன்றம், விடுதலை சிறுத்தைகள்,பகுஜன் சமாஜ் கட்சி,தமுமுக தோழர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பபெற வலியுறுத்தி தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் ! நாள் : 22.01.2018 திங்கட்கிழமை நேரம் : காலை 10.00 மணி. இடம் : பெரியார் தூண் காஞ்சிபுரம். கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் மற்றும் தோழமை அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார்கள்.

சட்டமேதை புரட்சியாளர் அம்பேத்கர் உருவ படத்தை நீக்கியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் 04012018

காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் வைக்கப்பட்ட சட்டமேதை புரட்சியாளர் அம்பேத்கர் உருவ படத்தை நீக்கியதை கண்டித்தும் பட்டு நகரம்பேரறிஞர் அண்ணா படத்தை தவிர்த்தும் மற்ற மத அடையாளங்கள் இடம் பெறாமல் ஒரு குறிப்பிட்ட மத அடையாளத்தை மட்டும் முன்னிறுத்தி வரைந்த படங்களை அகற்றிய காஞ்சி மக்கள் மன்ற தோழர்களை கைது செய்த காவல்துறையை கண்டித்தும், வழக்குகளை திரும்ப பெற கோரியும் திராவிடர் விடுதலைக்கழக காஞ்சி மாவட்டம் சார்பாக 4/1/18 அன்று பெரியார் தூண் காஞ்சிபுரம் அருகே நடைப்பெற்றது காஞ்சி மாவட்ட பொறுப்பாளர் தோழர் இரவிபாரதி தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு இயக்கங்களை சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர் சென்னை மாவட்ட செயலாளர் தோழர் உமாபதி, தலைமை கழக உறுப்பினர் தோழர் அய்யனார், வேலூர் மாவட்டம் பா சிவா மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் சிறை சென்ற மீண்ட காஞ்சி மக்கள் மன்ற தோழர்கள் நால்வருக்கும் கறுப்பாடை அணிவித்து...

சென்னை பரப்புரைக் குழுவின் பயண எழுச்சி

சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் பங்கேற்ற  சமூக நீதி – சமத்துவப் பரப்புரைப் பயணம் குறித்த செய்தித் தொகுப்பு. 7.8.2017 அன்று காலை 10 மணியளவில் தாம்பரம் அம்பேத்கர் சிலை அருகில் பரப்புரை நடைபெற்றது. இதில் இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் (காஞ்சிபுரம்) அக்பர் அலி தலைமையில் பரப்புரைக் குழுவினருக்கு வரவேற்பு அளித்து ஜாகீர் உசேன் உரை நிகழ்த்தினார். பின் இரா. உமாபதி, விரட்டுக் கலைக் குழு ஆனந்த், விழுப்புரம் அய்யனார் ஆகியோருக்கு சால்வை அணிவித்தனர். ம.தி.மு.க.வை சார்ந்த தாம்பரம் மணி வண்ணன் நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.2000 நன்கொடை அளித்தார். பிறகு 12 மணியளவில் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகில் பரப்புரை  நடைபெற்றது. பொத்தேரியில் தெள்ளமிழ்து, தினேஷ் ஆகியோர் தலைமையில் பரப்புரைக் குழுவினருக்கு பறை முழக்கத்துடன் வரவேற்பு அளித்தும், மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்தனர். கூடுவாஞ்சேரி ராஜேஷ் ரூ.500 நன்கொடை அளித்தார். மாலை 4 மணியளவில் சிங்கபெருமாள் கோயில்...

மாட்டிறைச்சி தடைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் 21062017

மாட்டுக்கறியை தடைக்கு தடை விதிக்கும் மதவாத மோடி அரசைக் கண்டித்து…. பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில் ஒன்றை பண்பாட்டை திணிக்க முயற்சிக்கும் மோடி அரசே.! மாட்டுக்கறி மீதான தடை நீக்கப்படவில்லை எனில் திராவிட நாடு மலர்ந்தே தீரும்.! என்ற கண்டன முழக்கத்தோடு காஞ்சி மக்கள் மன்றம் சார்பாக காஞ்சிபுரம், தாலுக்கா அலுவலகம் எதிரில்…திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர்.இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) மற்றும் இயக்க தோழர்களும் இணைந்து இன்று (21.06.2017) காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு காஞ்சிபுரம் யாதவ சாஷில பரிபரன சபை மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

நுகும்பல் தோழர்கள் ஜானகி – இளையராஜா இணை ஏற்பு விழா காஞ்சி – 04092016

தமிழ்நாடு மாணவர் இயக்கத் ( CP ML மக்கள் விடுதலை மாணவர்  அமைப்பு ) தலைவர் தோழர் இளையராஜா திருமணம். விழுப்புரம் மாவட்டம், நுகும்பல், போரூரில் 4-9-2016 அன்று மாலை 7-00 மணியளவில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று நடத்திவைத்தார். தோழர்கள் மீ.தா.பாண்டியன், சி பி எம் எல் மக்கள் விடுதலைப்  பொதுச்செயலாளர் பாலன், திருநங்கை பானு, மனிதநேய மக்கள் கட்சிப் பொதுச்செயலாளர் அப்துல் சமது, எழுத்தாளர் பிரேமா ரேவதி, தமிழ்த்தேச குடியசு கட்சிப் பொதுச் செயலாளர் தமிழ்நேயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்

தோழர் செங்கொடி நினைவு நாள் !

மரண தண்டனைக்கு எதிராக 3 தமிழர் உயிர்காக்க தன்னுயிரை ஈந்த தோழர் செங்கொடியின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள் 28.08.2016 அன்று காஞ்சிமக்கள் மன்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கழக தலைவர்,கழக பொதுச்செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். தோழர்கள் வேல்முருகன்,இயக்குனர்கள் மு.களஞ்சியம்,ஜோக்கர் பட இயக்குனர் ராஜு முருகன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு உரையாற்றினர்.

சென்னை அணி காஞ்சிபுரத்தில் பரப்புரை

காஞ்சியில் சங்கரமடம் எதிரில் கழகம் தன் முழுவீச்சில் அறிவியல் பரப்புரையை தோழர்கள் வீதி நாடகம் பகுத்தறிவு பாடல்கள் மூலம் ‘ மதம் மனிதனை மிருகமாக்கும்’ ஜாதி மனிதனை சாக்கடையாக்கும்’ என்றும் அச்சம் போக்கி நம்பாதீர்கள் போலி சாமியார்களை அம்பலப்படுத்தி மாலை பரப்புரை அதிக கூட்டத்தின் இடையே படுத்திய நேரம் ஒரு இஸ்லாமிய சவ ஊர்வலத்திற்கு மதிப்பளித்து பரப்புரையை நிறுத்தி மீண்டும் கழகப் பொதுச் செயலாளர் உரையை தொடர்ந்து மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தினார். காஞ்சி மக்கள் மன்ற தோழர்கள் திரளாக வந்து ஆதரவு தெரிவித்தனர். செய்தி குகநந்தன்

பெரியாரே  சமூகத்தின் ஞாயிறு

பெரியாரே சமூகத்தின் ஞாயிறு

இதுவரை முகநூலில் மூழ்கி முடிப்பேன் ஞாயிறை … இம்முறை முகங்களில் மூழ்கி முடித்தேன் ஞாயிறை … இயந்திர வாழ்வில் இயக்க ஓய்வாய் இரக்கம் பேச ஞாயிறு … இயல்பு மீறிய இயக்க வாழ்வில் இதயம் பேசிட ஞாயிறு … வீதிதனில் இறங்கி பரப்புரையில் கலந்தே மக்களதில் கலந்த ஜாதி புழுதியதை சுட்டெரிக்கும் முயற்சியதில் ( தி.வி.க )பெரியாரின் ஞாயிறுகள் … காஞ்சி மாவட்டமெங்கும் காலடி பதித்தே கருத்ததனை விதைத்தே பெரியாரின் கனவெனவே நின்ற ஞாயிறு … தோழர்களின் பணியதுவோ கடினமன்றோ மக்களின் அறியாமையோ கொடுமையன்றோ சுட்டெரிக்கும் வேளையிலும் சுடாமல் கையேந்திய ஞாயிறு …. களமாடும் கருப்புகளின் கம்பீரம் கண்கொண்டு கண்டேனே கருத்தாடும் கரும்புலிகள் சொல்கீரி சிலிர்த்ததோர் ஞாயிறு … பெரியாரே சமூகத்தின் ஞாயிறு என்றுணர்ந்த எனக்கும் மறக்காதே இந்த ஞாயிறு …. இரா. செந்தில் குமார் ………………. செய்தி : திராவிடர் விடுதலை கழகம் சார்பில் எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்...

காஞ்சி மாவட்டத்தில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

ஏன் இந்த முழக்கம்? எதற்காக இந்த பரப்புரை? நமது இளைய தலைமுறையின் கவனத்திற்க்கு சில சிந்தனைகளை முன் வைக்கிறோம். தமிழர்களாகிய நாம்,தாழ்த்தபட்ட ஜாதிகளாக, பிற்படுத்தபட்ட ஜாதிகளாக எப்போது ஆனோம்? நமது பாட்டன்,முப்பாட்டன், காலங்களில் நாம் எப்படி வாழ்ந்தோம். பார்பனருக்கும், பண்ணையார்களுக்கும் அடிமைகளாகக் கிடந்தார்கள் நமது முன்னோர்கள்.அவர்களுக்கு எழுத படிக்க தெரியாது.உழைப்பு ,அடிமை வேலை ,குல தொழில் – இவற்றை மட்டுமே செய்ய வேண்டும் என்பது அன்று சமூதாயம் விதித்த காறாரான கட்டளை. ஜாதியின் பெயரால் திணிக்கப்பட்ட இந்த இழிவுகளை எப்படி தகர்த்தோம். ஜாதியத்தை எதிர்த்த பெரியாரும்,அம்பேத்கரும் போராடிப் பெற்று தந்த கல்வி, வேலை வாய்ப்புகளுக்கான உரிமைகளை பெற்றதால் தகர்தோம். இந்த இடஒதுக்கீடுகளை அமல்படுத்துவதில் காமராசர் ஆட்சியில் தொடங்கி தமிழகத்தில் தொடர்ந்தது. அதிகாரத்துக்கு வந்த ‘திராவிட’ கட்சிகள் ஆர்வம் காட்டின. ‘ஜாதி’ யை காட்டி, ‘படிக்ககூடாத ஜாதி’;  ‘உழைக்க வேண்டிய ஜாதி’ என்றார்கள். அத்தகைய ஜாதி தடைகளை, அதே ஜாதி அடிப்படையில் கன்டறிந்து...

கொளத்தூர் மணி குழந்தைக்கு சூட்டிய ‘திப்பு சுல்தான்’ பெயர்

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா ஒருங்கிணைப்புக் குழு சார்பில் காஞ்சிபுரத்தில் 17.09.2015 அன்று காஞ்சி மக்கள் மன்றத்தை சார்ந்த தோழர் பாலமுருகன் -உமா இணையரின் ஆண் குழந்தைக்கு பெயர் சூட்ட கழகத் தலைவர் கொளத்தூர்மணியிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் ‘திப்பு சுல்தான்’ என்று பெயர் சூட்டினார். அதைத் தொடர்ந்து அவர் பேசுகையில் குறிப்பிட்டதாவது: “மனு சாஸ்திரம் சொல்லுகிறது பார்ப் பனர்களுக்கு மங்கலமான பெயர்களை யும், சத்ரியர்களுக்கு வீரமான பெயர் களையும், வைசியர்களுக்கு பணத்தை, தனத்தை குறிக்கிற பெயர்களையும் சூத்திரர்களுக்கு இழிவான பெயர்களை யும் வைக்கச் சொல்லி சொல்லுகிறது. காலம் காலமாக குப்பனாய், பிச்சை யாய், மண்ணாங்கட்டியாய் வாழ்ந்த வருக்கு மனுசாஸ்திரம் தடைகளுக்கு மாறாக பின்னாளில் பெரியார் புரட்சிகரப் பெயர்களை வைத்தார். புராணத்தின் பெயரால் ராமனை தூக்கி பிடிக்கிற இந்த சமுதாயத்தில் இயக்க தோழர்களுக்கு இராவணன் என்று பெயர் வைத்தார். பார்ப்பனியத் திற்கு எதிராக நின்ற புத்தரின் பெயரை சித்தார்த்தன் என்று பெயர்...

பெரியார் பிறந்தநாள் விழா – காஞ்சிபுரம் மாவட்டம்

தந்தை பெரியார் 137வது பிறந்தநாள் விழா காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பாக கொண்டாடப்பட்டது மாவட்ட தலைவர் செங்குட்டுவன் தலைமையில், செயலாளர் தினேஷ்குமார், அமைப்பாளர் தெள்ளமிழ்து மற்றும் திராவிட விடுதலைக் கழக தோழர்கள், தந்தை பெரியாரின் சமுதாயப் பணிகளை விளக்கி பேருந்து நிலையம், அங்காடிகளில் துண்டறிக்கை விநியோகித்தனர். பொதுமக்கள் ஆர்வமுடன் துண்டறிக்கை படித்து தோழர்களிடம் விளக்கம் கேட்டனர். பின்பு மாலை தந்தை பெரியார் பிறந்தநாள் கூட்டமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பிறந்தநாள் பேரணியில் கலந்துகொண்டனர்.

பெரியார் விழா : காஞ்சி மாநகர் குலுங்கியது

செப்.17 அன்று காஞ்சியில் பெரியார் பிறந்த நாள் ஒருங்கிணைப்புக் குழு, பெரியார் பிறந்த நாள் விழா பேரணியையும், பொதுக் கூட்டத்தையும் எழுச்சியுடன் நடத்தியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். காஞ்சி மாநகரையே கலக்கிய பேரணி-பொதுக் கூட்டக் காட்சிகள்.

0

காஞ்சி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

காஞ்சி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் வண்டலூர் ‘தலைநகர் தமிழ்ச் சங்க அரங்கத்தில்’ 30.8.2015 ஞாயிறு பிற்பகல் 5 மணியளவில் நடந்தது. சு.செங்குட்டுவன், கடவுள்-ஆத்மா மறுப்பு கூறினார். செ.க. தெள்ளமிழ்து வரவேற்புரையாற்ற, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தொடக்க உரையாற்றினார். மேடவாக்கம் இரவிக் குமார், கூடுவாஞ்சேரி பன்னீர்செல்வம்,குகன், செங்கல்பட்டு சரவணன், சு. செங்குட்டுவன், தினேசுகுமார் ஆகியோர் கருத்துகளைத் தெரிவித்தனர். “பகவத் கீதையில் ‘பெண்களை’ இழிவுபடுத்தும் சுலோகங்களையும்,‘வர்ணா°ரமத்தை’ நியாயப்படுத்தும் சுலோகங்களையும் தீயிட்டு எரிக்கும்போராட்டத்தை நடத்த வேண்டும்” என்றும், “ராமலீலாவுக்கு எதிர்ப்பாக ‘ராமன்’உருவத்தை எரிக்கும் ‘இராவணலீலா’ நடத்த வேண்டும்” என்றும் தோழர்கள்கருத்து தெரிவித்தனர். 3 நாள்கள் காஞ்சி மாவட்டத்தில் பரப்புரைப் பயணம் நடத்துவதாக தினேசுகுமார் தெரிவித்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையில், “தோழர்கள் கூறிய போராட்டங்களை திடீர் என நடத்துவதில் பயனில்லை. இது குறித்து மனுசாஸ்திர எரிப்புப் போராட்டத்தில் நடத்தியதுபோல் மக்களிடையே தொடர்ந்து பரப்புரை இயக்கங்களை நடத்தி, இறுதிக்கட்டமாக போராட்டம் நடத்த வேண்டும்” என்று...

காயத்ரி-ராஜேஷ் ஜாதி மறுப்பு மணவிழா 0

காயத்ரி-ராஜேஷ் ஜாதி மறுப்பு மணவிழா

காஞ்சி மாவட்ட திராவிடர் விடுதலைக்கழக செயலாளர் தினேஷ்குமார் சகோதரரும், மு. ரமணி -கு.குருசாமி மகனுமான மு.இராஜேஷ், மறைமலை நகர் கே.நாகலட்சுமி-சு.கேசவன் ஆகியோரின் மகள் கே. காயத்ரி ஆகியோரின் ஜாதி மறுப்பு வாழ்க்கை ஒப்பந்த விழா 4.1.2015 ஞாயிறு மாலை 5 மணியளவில் கூடுவாஞ்சேரி சாரதாம்பாள் திருமண மண்டபத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் சரசுவதி, வே. மதிமாறன், வ. வேம்பையன், மு.பிச்சைமுத்து, மா. சமத்துமணி, சு. செங்குட்டுவன் (மாவட்ட தலைவர்) வாழ்த்துரை வழங்கினர். பெண் வீட்டார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள். தி.வி.க. – தி.க. தோழர்கள் ஏராளமாக வந்திருந்தனர். கழக ஏட்டுக்கு ரூ.2000 நன்கொடை வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 15012015 இதழ்