Category: நாமக்கல்

குமாரபாளையத்தில் குடிஅரசு – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

குமாரபாளையத்தில் குடிஅரசு – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

நாமக்கல் : தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாள் விழா மற்றும் குடிஅரசு – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டம் 22.09.2024 அன்று குமாரபாளையம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. கழக நாமக்கல் மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன் தலைமை தாங்கினார். மாவட்டக் காப்பாளர் கேப்டன் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். முதல் நிகழ்வாக பெரியாரியலாளர் சிற்பி இராசனின் மந்திரமா? தந்திரமா? பகுத்தறிவு நிகழ்ச்சி நடைபெற்றது. குமாரபாளையம் நகரக் கழகத் தலைவர் தண்டபாணி, சேலம் மேற்கு மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி சீ.அன்பு ஆகியோர் தொடக்கவுரையாற்றினார்கள். நிறைவாகக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். மேலும் கழகத் தலைவருக்கு திராவிடர் கழக மாவட்டத் தலைவர் ஆர்.கே.குமார், நகரச் செயலாளர் சரவணன் ஆகியோர் பயணாடை அணிவித்து மகிழ்ந்தனர். இதில் மேட்டூர், கொளத்தூர், நங்கவள்ளி, வெண்ணந்தூர், காளிப்பட்டி, ராசிபுரம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். நகரத் துணைச் செயலாளர் பி.மாதேஸ்வரன் நன்றி...

எழுச்சியுடன் நடைபெற்ற மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்கள் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்பு

எழுச்சியுடன் நடைபெற்ற மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்கள் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்பு

நாமக்கல் : நாமக்கல் மாவட்ட திவிக கலந்துரையாடல் கூட்டம் பள்ளிபாளையம் ஐந்து பனையில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட சமுதாயக் கூடத்தில் 14.08.2024 மாலை 05.00 மணி அளவில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார். கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலந்துரையாடல் கூட்டத்தில் நாமக்கல் மாவட்டச் செயலாளர் மு.சரவணன், மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன், மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி, ராசிபுரம் நகரச் செயலாளர் பிடல் சேகுவாரா, காளிப்பட்டி பெரியண்ணன், திருச்செங்கோடு பொறுப்பாளர் பூபதி, கீற்று இணையதளப் பொறுப்பாளர் கார்த்தி, குமாரபாளையம் நகரத் தலைவர் மீ.தா.தண்டபாணி, செயலாளர் செ வடிவேல், தோழர்கள் மோகன், சந்திரா, மணியம்மை, மாதேஸ்வரன், ஆ பிரகாஷ், நாகராஜ், கடச்சநல்லூர் அமைப்பாளர் செல்வகுமார் ஐந்து பனை வாசகர் வட்ட சக்திவேல் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைக் பகிர்ந்து கொண்டனர். ஜாதி ஆணவப் படுகொலைகளைத்...

பெரியார் நினைவுநாள்; கழகத்தின் சார்பில் மரியாதை

பெரியார் நினைவுநாள்; கழகத்தின் சார்பில் மரியாதை

தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு கழக சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அது பின்வருமாறு:- சென்னை : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை மாவட்டக் கழக சார்பில்  இராயப்பேட்டை, சிம்சன், எம்ஜிஆர் நகர், தியாகராயர் நகர், மயிலாப்பூர், கலைஞர் கருணாநிதி நகர், நங்கநல்லூர், பிவி நகர், சேத்துப்பட்டு உள்ளிட்ட இடங்களில் கழகம் சார்பில் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது.   இந்நிகழ்வில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமார் மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், பகுதிக் கழக பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். கோவை : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு கோவை மாவட்டக் கழக சார்பில் காந்திபுரம் பெரியார் சிலைக்கு கழகத் தோழர் கண்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை...

இராசிபுரம் – கொளத்தூரில் திராவிட இயக்க சாதனை விளக்கக் கூட்டங்கள்

இராசிபுரம் – கொளத்தூரில் திராவிட இயக்க சாதனை விளக்கக் கூட்டங்கள்

கழகம் சார்பில் எது திராவிடம்? எது சனாதனம்? தெருமுனைக் கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்றுவருகிறது. கொளத்தூர் : கொளத்தூர் ஒன்றியக் கழக சார்பில் எது திராவிடம்? எது சனாதனம்? தெருமுனைக் கூட்டம் 11-12-2023 அன்று மாலை 5மணிக்கு 9வது தெருமுனைக் கூட்டம் கோவிந்தப்பாடியிலும், 10வது தெருமுனைக் கூட்டம் கத்திரிப்பட்டி மலையாள தெருவிலும் நடைபெற்றது. டி.கே.ஆர் இசைக் குழுவின் பகுத்தறிவுப் பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. திமுக கொளத்தூர் ஒன்றியச் செயலாளர் மிதுன் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார், மாணவர் அணி துணை அமைப்பாளர் சதாசிவம், முன்னாள் தலைவர் முனுசாமி, கிளைச் செயலாளர் கணேசன், செட்டிப்பட்டி கிளைச் செயலாளர் பழனிச்சாமி, குள்ளவீரன்பட்டி ஈஸ்வரன், கண்ணன் நெசவாளர் அணி, சுப்பிரமணி, தேவராஜ், பரத், இளங்கோ, கார்த்தி, குமார், கோகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொளத்தூர் நகரத் தலைவர் இராமமூர்த்தி, தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், வழக்கறிஞர் கண்ணகி,...

நன்கொடை

நன்கொடை

குமாரபாளையம் தமிழன் இன்ஜினியரிங் லேத் தோழர் மாது ராஜி சரசுவின் மகன் திலகன்-சந்தியா தம்பதியருக்கு 29.1.2023 பெண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்வான தருணத்தில் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழுக்கு வளர்ச்சி நிதியாக நன்கொடை ரூ.1000/- காவலாண்டி ஊர் சார்பாக வழங்கி உள்ளார். பெரியார் முழக்கம் 09022023 இதழ்

உடல் மற்றும் கண்கள் கொடை

உடல் மற்றும் கண்கள் கொடை

திராவிடர் விடுதலைக் கழக குமாரபாளையம் நகரச் செயலாளர் செ .வடிவேலு தந்தையார் செல்லமுத்து உடல் நலக்குறைவால் 28.11.2022 மதியம் அன்று சுமார் 2.45 மணியளவில் இயற்கை எய்தினார். அவர் இறந்த ஆறுமணி நேரத்திற்குள் அவரின் இரண்டு கண்களும் பார்வை இழந்தவர்களுக்கு பார்வை கிடைக்கும் வகையில் ஈரோடு அரசன் கண் மருத்துமனைக்குக் கொடையாகக் கொடுக்கப்பட்டது. அவரின் உடல் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்கு உதவும் விதமாக கொடையாக நாமக்கல் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் பொறுப்பாளர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது அங்கிருந்து மருத்துவப் பேராசிரியர்கள் மிகுந்த மகிழ்வுடன் பெற்று கொண்டது மட்டுமில்லாமல் இது தான் இந்த மருத்துவக் கல்லூரிக்குக் கிடைத்த முதல் உடற்கொடை ஆகும். தொடர்ச்சியாக பெரியார் இயக்கத்தை சார்ந்தவர்கள் இப்பணியைச் செய்வது பாராட்டத்தக்கது என்று பாராட்டினார். தோழர் வடிவேல் மட்டும்தான் அவருடைய குடும்பத்தில் பெரியாரிய கொள்கையை ஏற்றுக் கொண்டவர். இருப்பினும் வடிவேல் மற்றும் கழகத் தோழர்களின் வேண்டு கோளையேற்று அவருடைய...

திருச்செங்கோட்டில் பெரியார் பிறந்த நாள் விழா

திருச்செங்கோட்டில் பெரியார் பிறந்த நாள் விழா

பெரியார் பிறந்தநாளை ஒட்டி, 17.09.2022 அன்று காலை 9 மணியளவில், திருச்செங்கோடு புதிய  பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள பெரியார் சிலைக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்தனர். பின்னர்  10 மணியளவில், திருச்செங் கோடு நகர செயலாளர் பூபதி தலைமையில், அண்ணாசிலை அருகில் திராவிடர் விடுதலைக் கழகம்  சார்பில்  வைக்கப்பட்ட பெரியார் படத்திற்கு, திராவிட முன்னேற்ற கழகம், ஆதித்தமிழர் பேரவை, விடுதலை சிறுத்தைகள் மற்றும் தோழமை இயக்கங்கள் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர்  சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. திமுக சார்பில் திருச்செங்கோடு நகர் மன்றத் தலைவர் நளினி, துணைத் தலைவர் கார்த்தி, ஒன்றிய கவுன்சிலர் திருநங்கை ரியா, ஆதித்தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் செல்வ வில்லாளன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பெரியார் முழக்கம் 06102022 இதழ்    

பெரியார் பிறந்த நாள் எழுச்சி; பரப்புரைக் கூட்டங்கள்

பெரியார் பிறந்த நாள் எழுச்சி; பரப்புரைக் கூட்டங்கள்

  பெரியார் பிறந்த நாளான செப்.17 அன்று கொடி ஏற்றம்; தெருமுனைப் பரப்புரை; பொதுக் கூட்டங்களை கழகம் நடத்தியது. தூத்துக்குடியில் பால் பிரபாகரன் உரை : ஆரிய விசம் முறிக்கும் அருமருந்து தந்தை  பெரியாரின் 144வது பிறந்த நாளில் சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்பீர் என்று தி.வி.க பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் அறைகூவல் விடுத்தார். தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் 17.09.2022 தந்தை பெரியாரின் 144வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் சனாதன எதிர்ப்பு விளக்கப் பொதுக் கூட்டமாக தூத்துக்குடி வடக்கு சோட்டையன்தோப்பு தருவைகுளம் முதன்மை சாலையில் நடைபெற்றது. நிகழ்விற்கு தி.வி.க.மாவட்ட துணைத் தலைவர் ச.கா.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். வே.பால்ராசு, ச.ரவிசங்கர், ம.அசோக் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சா.த.பிரபாகரன் வரவேற்புரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழக பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அவர் தனது உரையில் “தந்தை பெரியாரின் உழைப்பால் சமத்துவ சமூக மாற்றம் ஏற்பட்டு...

பள்ளிப்பாளையத்தில் மண்டல மாநாடு எழுச்சி ஆரியத்துக்கு எதிராக உருவானதே திராவிடம்

பள்ளிப்பாளையத்தில் மண்டல மாநாடு எழுச்சி ஆரியத்துக்கு எதிராக உருவானதே திராவிடம்

ஈரோடு மண்டல மாநாடு – பள்ளிப்பாளை யத்தில் எழுச்சியுடன் நடந்தது. நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ என்ற கோட்பாட்டை விளக்கி 33 தெருமுனைக் கூட்டங்களைத் தொடர்ந்து மண்டல மாநாடு நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக, ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய ஈரோடு மண்டல மாநாட்டின் நோக்கங்களை விளக்கி, ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பாக 8 இடங்களில் தெருமுனைக் கூட்டங்களும், ஈரோடு தெற்கு மாவட்டம் சார்பாக 25 இடங்களில் தெருமுனைக் கூட்டங்களும், நாமக்கல் மாவட்டம் சார்பாக 10 இடங்களில் தெருமுனைக் கூட்டங்களும் நடைபெற்று முடிந்திருந்தன. தெருமுனைக் கூட்டங்களில், மாவட்ட இயக்க முன்னோடிகளும் ,திரளான தோழர்களும், தோழமை அமைப்புகளின் பொறுப்பாளர்களும் பங்கேற்றனர். பள்ளிபாளையத்தில் மண்டல மாநாடு : ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய ஈரோடு மண்டல மாநாடு 09.05.22 திங்கள் மாலை 5 மணிக்கு, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நேரு திடலில் தொடங்கியது. மாநாட்டையொட்டி பள்ளிபாளையம் நகர் முழுவதும் சுவரொட்டிகளும்...

இராசிபுரத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

இராசிபுரத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

இராசிபுரம் நகர திராவிடர் விடுதலைக் கழக சார்பில், அம்பேத்கர் பிறந்த நாள் விழா, ஆணவப் படு கொலைக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த வழக்கறிஞர் ப.பா மோகன் பாராட்டு விழா, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற (தி.மு.க.கூட்டணி) முதல் நகர்மன்ற பெண் தலைவர், மற்றும் நகர்மன்ற பெண் உறுப்பினர்களுக்கு நினைவு பரிசு வழங்கும் விழா நடைபெற்றன. இம்முப்பெரும் விழா 25.04.2022 அன்று மாலை 5 மணியளவில், ராசிபுரம் கன்னட சைனியர் மண்ட பத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு, திராவிடர் விடுதலைக் கழக நகரச் செயலாளர் பிடல் சே குவேரா தலைமை வகித்தார்.திராவிடர் விடுதலை கழக நகர அமைப் பாளர் சுமதி மதிவதனி வரவேற்பு கூறினார். நிகழ்விற்கு, மாவட்டத் தலைவர் சாமிநாதன், மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி, இராசிபுரம் நகரத் தலைவர் அன்பரசன், வெண்ணந்தூர் ஒன்றிய பொறுப்பாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய...

நாமக்கல் மாவட்டம் வழி காட்டுகிறது; கழக ஏட்டுக்கு 86 சந்தாக்கள்

நாமக்கல் மாவட்டம் வழி காட்டுகிறது; கழக ஏட்டுக்கு 86 சந்தாக்கள்

நாமக்கல் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 4.3.2022 அன்று காலை 11 மணி யளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், மாநில அமைப்புச் செயலாளர் ப. ரத்தினசாமி, மாநிலப் பொருளாளர் சு.துரைசாமி, தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், காவை ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தின் சார்பில் முதல் கட்டமாக ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கான 86 சந்தா தொகை 21500 கழகத் தலைவரிடம் வழங்கப்பட்டது. கலந்துரையாடலில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மடத்துக்குளம் மோகன், தலித் சுப்பையா ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இயக்க வளர்ச்சிக்கு மாதம் ஒருமுறை தெருமுனை கூட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. புதிய பொறுப்பாளர்கள் மற்றும் நாமக்கல் மாவட்ட அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். குமாரபாளையம் நகர செயலாளராக செ.வடிவேல் செயல்படுவார் மற்றும் திருச்செங்கோடு ஒன்றிய அமைப்பாளராக விஜயகுமார் மட்டுமே செயல்படுவார் என தீர்மானிக்கப்பட்டது. கலந்துரையாடல் கூட்டத்தில், நாமக்கல் மாவட்டத் தலைவர் சாமிநாதன்,...

கழகம் முன்னெடுத்த பெரியார் நினைவு நாள் நிகழ்வுகள்

கழகம் முன்னெடுத்த பெரியார் நினைவு நாள் நிகழ்வுகள்

சென்னை : பெரியாரின் 48ஆவது நினைவு நாள் நிகழ்வு 24.12.2021 அன்று காலை 8:30 மணியளவில் சென்னை இராயப்பேட்டை வி.எம். தெரு பெரியார் படிப்பகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. முதலாவதாக தோழர்கள் கிருத்திகா, லீலா ஆகியோர் பெரியாரின் சிலைக்கு, தோழர்களின் கொள்கை முழக்கங்களுடன் மாலை அணிவித்தனர். அருகில் அமைத்திருந்த பெரியார் நினைவு மேடையில், களப்பணியில் உயர்நீத்த, கண்ணா – குமார் உருவப் படத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை அணிவித்தார். பின் பெரியார் நினைவு நாள் உரை நிகழ்த்தினார். தொடர்ந்து, சிம்சன், தியாகராயர் நகர், எம்.ஜி.ஆர். நகர், கிண்டி, மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்வில், தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர்கள் அய்யனார், அன்பு தனசேகர் ஆகியோர் உட்பட சென்னை கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்....

கழகப் பொறுப்பாளர்கள் இரண்டாம் கட்டப் பயணம்:  தோழர்களுடன் சந்திப்பு

கழகப் பொறுப்பாளர்கள் இரண்டாம் கட்டப் பயணம்: தோழர்களுடன் சந்திப்பு

இரண்டாம் கட்டப் பயணமாக, 23,24, 25.11.2021 ஆகிய தேதிகளில், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், திருப்பூர் அய்யப்பன் ஆகியோர், மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களிடத்தில் கலந்துரையாடினர். திண்டுக்கல் : 23.11.2021 காலை 11 மணியளவில் திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையம் அருகில் உள்ள வேலன் விடுதியில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி, பெரியார் செல்வம் உள்ளிட்ட மாவட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர். நிகழ்கால அரசியல் செயல்பாடுகள், கழக ஏடுகளுக்கு சந்தா சேர்த்தல், எதிர்வரும் காலங்களில் இயக்க செயல்பாடுகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டது. மதிய உணவு பழனி கழக தோழர்களால் வழங்கப்பட்டது. மடத்துக்குளம் : மாலை 4 மணியளவில் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மோகன் இல்லத்தில் தோழர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்பகுதியைச் சார்ந்த சிவானந்தம், இராசேந்திரன், கணக்கன் மற்றும் மடத்துக்குளம் மோகன் இணையர் ஜோதி ஆகியோர்...

அருந்ததிய இளைஞர் மீது தாக்குதல் நடத்திய ஜாதி வெறியர்கள் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு…

அருந்ததிய இளைஞர் மீது தாக்குதல் நடத்திய ஜாதி வெறியர்கள் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு…

அருந்ததிய இளைஞர் மீது தாக்குதல் நடத்திய ஜாதி வெறியர்கள் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு… பள்ளிபாளையம் ஐந்து பனையில் கவுண்டர் சமூகத்தைச் சார்ந்த மனோகரன் அவரது மகன் இருவரும் சேர்ந்து இரண்டு நாட்கள் முன்பு சக்திவேல் என்ற அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த இளைஞரை ஜாதியை இழிவுபடுத்தி கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள்.. உடனடியாக திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் முத்து பாண்டி மற்றும் தமிழ் புலிகள் கட்சி தோழர்கள் தாக்கப்பட்ட தோழரை சந்தித்து உண்மையறிந்து காவல் நிலையத்தில் குற்றவாளிகள் மீது புகார் கொடுத்தனர்.. தற்போது ஜாதி வெறியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

குமாரபாளையத்தில் பெரியாரிய – இடதுசாரி அமைப்பினர் இணைந்து நடத்திய மணவிழா

குமாரபாளையத்தில் பெரியாரிய – இடதுசாரி அமைப்பினர் இணைந்து நடத்திய மணவிழா

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் குமாரபாளையம் கம்பன் நகரில் 05.02.2021 அன்று காலை 11 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழக நகரத் தலைவர் மீ.த.தண்டபாணி தலைமையில் தலித்குமார் வரவேற்புரை நிகழ்த்த, மு. கேப்டன் அண்ணாதுரை, வழக்கறிஞர் கார்த்திகேயன், ஏ. தேவி, எழில்சேரன், பி.ஏ., பி.எல்., பி.லிட்., வழக்குரைஞர் முன்னிலை வகிக்க வாழ்த்துரையாக மு.சாமிநாதன், ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் வேணுகோபால், அன்பழகன் (இலக்கியத் தளம்), பொன் கதிரவன், மார்க்சிய கம்யூனிஸ்ட் (மார்க்சிய-லெனினிஸ்ட்) வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக மணமக்கள் சரண்யா, பி.ஏ., ச. நந்தக்குமார், பி.ஏ.,  ஆகியோருக்கு உறுதிமொழி கூறி நகரத் தலைவர் வாழ்க்கை இணையேற்பு விழாவை நடத்தி வைத்தார். குருவை வேல்முருகன், முருகாண்டி, வடிவேல் மற்றும் குமாரபாளையம் கழகத் தோழர்களும், கழகக் குடும்பங்களும், மாவட்டச் செயலாளர் மு.சரவணன், முத்துப்பாண்டி மற்றும் தோழர்களும் கலந்து கொண்டனர். இணையேற்பு விழாவில் அனைவருக்கும் தேநீர் விருந்து வழங்கப்பட்டது. தேவி-மாதேஸ்வரன் நன்றி கூற நிகழ்வு நிறைவடைந்தது. ‘புரட்சிப்...

குமாரபாளையத்தில் நடந்த சரண்யா-நந்தகுமார் மணவிழா

குமாரபாளையத்தில் நடந்த சரண்யா-நந்தகுமார் மணவிழா

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த இ.சரண்யா – ச. நந்தகுமார் இணையரின் சுயமரியாதை திருமணம் 05.02.2021 அன்று காலை 11 மணியளவில் குமாரபாளையம் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. திருமணத்திற்கு  திராவிடர் விடுதலைக் கழக குமாரபாளையம் நகரத் தலைவர் மீ.த. தண்டபாணி தலைமையில், கழகத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன் உறுதிமொழி கூறி சுயமரி யாதை திருமணத்தை நடத்தி வைத்தார். நிகழ்வில், நாமக்கல் மாவட்ட செயலாளர் மு.சரவணன், மாவட்ட அமைப்பாளர் அ.முத்துப்பாண்டி மற்றும் கழகத் தோழர்களும் கலந்து கொண்டனர். வாழ்விணையர்கள் சார்பாக புரட்சி பெரியார் முழக்கத்திற்கு நன்கொடையாக ரூ.1000 வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 11022021 இதழ்

ஹத்ராஸ் படுகொலை – சூரப்பா எதேச்சாதிகாரத்தைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டங்கள்

ஹத்ராஸ் படுகொலை – சூரப்பா எதேச்சாதிகாரத்தைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டங்கள்

உ.பி. ஹத்ராஸ் தலித் பெண் படுகொலை – அண்ணா பல்கலை துணை வேந்தர் எதேச்சாதிகார நடவடிக்கை – பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்கள் இடமாற்றத்தைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் ஆர்ப்பாட் டங்கள் நடந்தன. இந்திய ஒன்றியத்தில் தரவரிசைப் பட்டியலில் 12 வது இடத்தைப் பெற்ற புகழ்பெற்ற பல்கலைக் கழகமாக அண்ணா பல்கலைக் கழகம் ஒளிவீசிக் கொண்டு இருக்கும் நிலையில், இந்தப் பல்கலைக் கழகத்தை உயர்ப் புகழ் நிறுவனமாக ஆக்குவது என்ற பெயரில் மத்திய அரசிடம் தாரை வார்ப்பதைக் கண்டித்தும், இதனால் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69ரூ இட ஒதுக்கீடு முறைக்கு வரும் பெரும் ஆபத்தைத் தடுக்கவும் மேலும், ‘‘உயர் புகழ் நிறுவனமாக அண்ணா பல்கலைக் கழகத்தை தரம் உயர்த்த மாநில அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டிய தில்லை” என்று பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு கடிதம்...

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

தேசிய கல்விக் கொள்கை அறிக்கை, இஸ்ரோ முன்னாள் அதிகாரி கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவால் 2018 டிசம்பர் மாதம் தயாரிக்கப்பட்டு, 2019 ஜூன் 1ஆம் தேதி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வலைதளத்தில் தேசிய கல்வி கொள்கை அறிக்கை ஆங்கிலம், இந்தியில் மட்டும் வெளியானது. வெளியானதிலிருந்து 30 நாட்களுக்குள் கருத்து சொல்ல வேண்டும் என்று அரசு கால நிர்ணயமும் அறிவித்திருந்தது. பல மொழிகள் பேசக்கூடிய மாநிலங்கள் இருந்தும் மாநில மொழிகளில் அறிக்கை வெளியாகவில்லை என்று எதிர்ப்பு வந்தவுடன் தேசிய கல்வி கொள்கை சுருக்கமான வரைவை தமிழில் வெளியிட்டார்கள். இந்த நிலையில் திராவிடர் விடுதலைக் கழகம்  ஓராண்டுக்கு முன்பே 2019 செப்டம்பர் 17 இல் பரப்புரை பயணத்தை நடத்தியது. ‘சமூக நீதியை பறிக்காதே; புதிய கல்வித் திட்டத்தை திணிக்காதே’ என்ற முழக்கங்களுடன் தமிழகம் முழுவதும் கழகம் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான பரப்புரை பயணத்தை மேற் கொண்டது. பயணம் பள்ளிபாளையத்தில் நிறைவுற்றது. செப்டம்பர் 20ஆம்...

ஆசிரியருக்குக் கடிதம் வேத மந்திரங்களின் அர்த்தத்தை தமிழில் கூற ஏன் மறுக்கிறார்கள்?

ஆசிரியருக்குக் கடிதம் வேத மந்திரங்களின் அர்த்தத்தை தமிழில் கூற ஏன் மறுக்கிறார்கள்?

பிறப்பின் அடிப்படையில் மட்டுமே ஒருவர் ‘இந்து’ என்று அடையாளப்படுத்தப்படுகிறார். இந்து ‘சனாதன தர்மம்’ இந்துக் கடவுள்களின் பிறப்பு, இந்து மத நூல்கள் குறித்து பெரும்பாலான இந்து மக்களுக்கு எதுவும் தெரியாது. அதன் காரணமாகத்தான் பார்ப்பனர்கள் சூழ்ச்சியாக, தங்கள் பார்ப்பனிய வேத மதத்தை இந்து மதம் என்று கூறி பார்ப்பனரல்லாத மக்களை ஏமாற்றி வருகிறார்கள். அர்ச்சகர் ஆகும் உரிமை தங்களுக்கே உண்டு என்று உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடுகிறார்ககள். ஆனால் வழிபாடுமுறைகள் குறித்து புரோகிதர்களுக்கு தேர்வுகள் எதுவும் நடத்தப்படுவது இல்லை. கல்வித் தரத்தை உயர்த்த ‘நீட்’ தேர்வு 5ஆம் வகுப்புக்கு தேர்வு; 8ஆம் வகுப்புக்கு தேர்வு என்றெல்லாம் பேசுகிறவர்கள் அர்ச்சகர் புரோகிதர் ஆவதற்கும் ‘தகுதி’ வேண்டும். அதற்கான தேர்வு வேண்டும் என்றும் ஏன் வலியுறுத்துவது இல்லை? அதேபோல் சமஸ்கிருதத்தில் புரோகிதப் பார்ப்பனர்கள் ஓதும் மந்திரங்களின் தமிழ்மொழி பெயர்ப்பை ஏன் மக்களிடம் எடுத்துச் சொல்லக் கூடாது? இந்தி திரைப்படம் ஓடினால் புரிந்து கொள்வதற்கு அதற்கு...

உள்ளாட்சியில் வெற்றி பெற்ற முதல் திருநங்கை: கழகத் தோழர்கள் நேரில் வாழ்த்து

உள்ளாட்சியில் வெற்றி பெற்ற முதல் திருநங்கை: கழகத் தோழர்கள் நேரில் வாழ்த்து

தமிழகத்தில் முதன் முதலாக தேர்தலில் நின்று, தமிழகத்தின் முதல் திருநங்கை ஒன்றியக் (கருவேப்பம்பட்டி) கவுன்சிலராக திமுக சார்பில் வெற்றி பெற்ற ரியா அவர்களை அவரது இல்லத்தில், திராவிடர் விடுதலைக் கழகம் திருச் செங்கோடு நகரம் சார்பாக, நகரச் செயலாளர் பூபதி, சோம சுந்தரம், விஜய்குமார், பிரகாஷ், மனோஜ் ஆகியோர் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்ததுடன்,  கழகத்தின் வெளியீடுகளான இவர்தான் பெரியார், கருஞ்சட்டைக் கலைஞர் புத்தகங்கள் மற்றும் நிமிர்வோம் மாத இதழ்களை வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தனர். பெரியார் முழக்கம் 30012020 இதழ்

நினைவு நாளில் பெரியார் சிலைகளுக்கு மாலை

நினைவு நாளில் பெரியார் சிலைகளுக்கு மாலை

கோவை : கோவை மாநகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பெரியார் 46 வது நினைவு நாளில் தலைமை செயற்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் தலைமையில் பெரியார் சிலைக்கு  மாலை அணிவித்து, மாநகர துணை தலைவர் வெங்கட் கொள்கை முழக்கங்கள் எழுப்பி, விஷ்ணு உறுதிமொழி வாசிக்க தோழர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் சுரேஷ்-தர்ஷினி இணையர்  தேனீர் வழங்கினர். சென்னை :  24.12.2019 அன்று காலை 9 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன்  தலைமையில் சென்னை சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. உடன் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தென் சென்னை மாவட்ட செயலாளர் வேழவேந்தன், தென் சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி, வட சென்னை மாவட்ட செயலாளர் இராஜீ, தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் சுகுமார் மற்றும் கழகத் தோழர்கள் திரளாக பங்கேற்றனர்....

பள்ளிபாளையம் மாநாட்டில் கொளத்தூர் மணி உரை

பள்ளிபாளையம் மாநாட்டில் கொளத்தூர் மணி உரை

தமிழர் வேலை வாய்ப்புகளைப் பறித்த தமிழக அரசின் ஆபத்தான சட்டத்திருத்தம் பள்ளிபாளையத்தில் 20.9.2019 அன்று நடந்த திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழா மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை. (சென்ற இதழ் தொடர்ச்சி) முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போது தமிழ்நாட்டின் அரசு வேலை வாய்ப்புகளை பிற மாநிலத்தவர் – பிற நாட்டினர் அபகரிக்கும் ஆபத்தான திருத்தச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்ததை கழகத் தலைவர் கொளத்தூர் மணி சுட்டி காட்டினார். இந்தியாவில் தற்போது உயர்கல்விக்குச் செல்கிறவர்கள் ( 18 வயது முதல் 23 வயதுவரை) எண்ணிக்கை  சராசரி 25.2% என்று உள்ளது. இதை 2035ற்குள் 50% ஆக உயர்த்தப் போவதாக கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 25% ஆக இருக்கும் போதே 50,000 உயர்கல்வி நிலையங்கள் உள்ளன. 2035இல் 50% ஆக உயரும் போது 12,300 கல்லூரிகளாக இருக்குமாம். எவ்வளவு அறிவுப்பூர்வமான...

நாமக்கல் மாவட்டத்தில் கட்டமைப்பு நிதி வழங்கியோர்

நாமக்கல் மாவட்டத்தில் கட்டமைப்பு நிதி வழங்கியோர்

சேலம் மேட்டூரில் 2019 மே 25 ஆம் தேதி  நடைபெற்ற நாத்திகர் பேரணி விழாவில் நாமக்கல் மாவட்டத்தின் சார்பில் ரூ 1,11,400 கட்டமைப்பு நிதி வழங்கப்பட்டது. அதில் குமாரபாளையம் பகுதியில் நிதி அளித்தவர்கள் விவரம்: குமாரபாளையம் மாதுராசு   ரூ. 5000 ஆ.சுப்பிரமணி, கல்லிபாளையம்    ரூ. 5000 மோகன் கிருட்டிணவேணி   ரூ. 5000 பா.செல்வராஜ்   ரூ. 5000 T.சேகர், ஏஜென்சி பவானி   ரூ. 5000 மு.சாமிநாதன் சந்திரா ரூ. 5000 உதயம் ஆப்டிக்கல்ஸ்     ரூ. 1500 ஸ்ரீராம் கார்மென்ட்ஸ்      ரூ. 2000 லோகேஸ் கங்கா      ரூ. 1000 மாயாவி, காளிப்பட்டி   ரூ. 1000 M.G நாத், பவானி     ரூ. 1000 கௌதம், G L லூம்ஸ்                 ரூ. 2000 EB AD சீனிவாசன்     ரூ. 1000 செல்வராஜ்      ரூ. 2000 திராவிடமணி கௌதம்      ரூ. 1000 மோகன்   ரூ. 1000 காந்தகுரு...

புரட்சியாளர் அம்பேத்கர் சிலைகளுக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை

புரட்சியாளர் அம்பேத்கர் சிலைகளுக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை

சென்னை : புரட்சியாளர் டாக்டர்அம்பேத்கர் 63 ஆவது நினைவு நாளான டிசம்பர் 6 அன்று திராவிடர் விடுதலைக் கழகம்  சார்பில், சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் காலை 9 மணிக்கு கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் கழகத் தோழர்கள் மாலை அணிவித்தனர். அதன் பின் மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு வட சென்னை மாவட்ட செயலாளர் இராஜீ மாலை அணிவித்தார். இராயப்பேட்டை, பத்ரி நாராயணன் நினைவு நூலகத்தில் உள்ள அம்பேத்கர் படத்திற்கு சைதை அன்பரசன் மாலை அணிவித்தார், கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கோவை : கோவை திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் வடகோவை, உணவு கிடங்கில் உள்ள  அம்பேத்கர் சிலைக்கு கொள்கை முழக்கங்கள் எழுப்பி  மாலை அணிவிக்கப்பட்டது, இராதாகிருஷ்ணன் சாலையில் வாழக்காய் மண்டியில் அம்பேத்கர் அவர்களின் உருவப் படத்திற்கு மரியாதை செய்யப்பட்டது. தோழர்கள் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன், நிர்மல் குமார், வெங்கட், லோகு, மாதவன் சங்கர்,  இயல்,  விஷ்ணு, பார்த்திபன் ...

இராசிபுரத்தில் கழகம் நடத்திய பெரியாரியல் பயிலரங்கம்

இராசிபுரத்தில் கழகம் நடத்திய பெரியாரியல் பயிலரங்கம்

திராவிடர் விடுதலைக் கழகம் இராசிபுரம் சார்பில் 10.11.2019 அன்று காலை 10 மணியளவில் இராசிபுரம் பட்டணம் பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில்  பெரியாரியல் பயிலரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சுமதி மதிவதனி வரவேற்புரையாற்றினார். இராசிபுர நகர அமைப்பாளர் பிடல் சேகுவேரா தலைமை வகிக்க, நாமக்கல் மாவட்ட செயலாளர் மு.சரவணன் முன்னிலை வகித்தார். மேலும் நிகழ்வில், பொன். நல்லதம்பி (தி.மு.க பேரூர் செயலாளர்), சுந்தரம் (அ.தி.மு.க முன்னாள் நகர கூட்டுறவு வங்கி இயக்குனர்), இரத்தினம் (வழக்கறிஞர் உயர்நீதிமன்றம் மதுரை), மோகன் தாஸ் (தி.மு.க மாவட்ட மாணவரணி அமைப்பாளர்), கைலாஷ் (இராசிபுரம் ஒன்றிய செயலாளர் ம.தி.மு.க.) ஆகியோர் சிறப்பு அழைப்பாளர் களாகக் கலந்து கொண்டனர். காலை அமர்வில், ‘பெரியார்-அம்பேத்கர் ஓர் அறிமுகம்’ என்ற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினார். உணவு இடைவேளைக்கு பின், ‘இட ஒதுக்கீடு மற்றும் சட்ட எரிப்பு போராட்ட வரலாறு’ குறித்து கழகப் பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன் உரையாற்றினார்....

மேற்கு மண்டல கழகக் கலந்துரையாடலின் முடிவுகள்

மேற்கு மண்டல கழகக் கலந்துரையாடலின் முடிவுகள்

திராவிடர் விடுதலைக் கழக சத்தியமங்கலம் நகர அமைப்பாளர் மூர்த்தி – பூங்கொடி இல்லத் திறப்பு விழா  கெம்பநாயக்கன்பாளையம் சத்தியில், 03.11.2019 அன்று காலை 10 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்தார். நிகழ்வில் ஈரோடு தெற்கு, வடக்கு, கோவை திருப்பூர் மாவட்டத் தோழர்கள் பெருந்திரளாய் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். திராவிடர் விடுதலைக் கழக மேற்கு மண்டல கலந்துரையாடல் கூட்டம் 3.11.2019 அன்று சத்தி கெம்பநாயக்கம் பாளையம் திரு. கிட்டுசாமி தோட்டத் தில் நடைபெற்றது. கழக அமைப்புச் செயலாளர்  இரத்தினசாமி தலைமை யேற்று நோக்கவுரை ஆற்றினார். கழகத்தின் அடுத்த செயல் திட்டமாக மக்கள் சந்திப்பு இயக்கமும், கிராமங்கள் தோறும் பரப்புரைப் பயணமும், மருத்துவ முகாம் மற்றும் சட்ட ஆலோசனை முகாம் உள்ளிட்டவைகளை நடத்த ஆலோசனை வழங்கினார். கழக மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மேற்கு மண்டலம் உள்ளடக்கிய ஈரோடு தெற்கு, வடக்கு, கோவை புறநகர், கோவை, நாமக்கல் மற்றும் திருப்பூர்...

பெரியார் கொள்கை விளக்கக் கூட்டங்கள்

பெரியார் கொள்கை விளக்கக் கூட்டங்கள்

குமாரபாளையத்தில் : 28.09.2019 அன்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் தந்தை பெரியாரின் 141ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு, மு.கேப்டன் அண்ணாதுரை தலைமை வகிக்க, மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி, மாவட்ட செயலாளர் சரவணன், காளிபட்டி பெரியண்ணன், இராசிபுரம் பிடல் சேகுவேரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வின் தொடக்கமாக காவை இளவரசன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின் கோபி வேலுச்சாமி, பகுத்தறிவுக் கருத்துக்களை நகைச்சுவையாக எடுத்துக் கூறினார். இறுதியாக கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வின் மோசடிகள் போன்றவற்றைப் பற்றி விரிவாக உரை நிகழ்த்தினார். குமாரபாளையம் பகுதி  மோகன் நன்றி கூறினார். பொதுக் கூட்டத்திற்கு காளிப்பட்டி, திருச்செங்கோடு, பள்ளிபாளையம், இராசிபுரம், ஈரோடு, பவானி பகுதிகளைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் இல்லம் திராவிடமணி இல்லத்தில் தோழர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. மதுரையில் :  30...

எழுச்சி நடைபோட்டது பள்ளிபாளையம் கழக மாநாடு

எழுச்சி நடைபோட்டது பள்ளிபாளையம் கழக மாநாடு

‘சமூக நீதியைப் பறிக்காதே; புதிய கல்வித் திட்டத்தைத் திணிக்காதே’ என்ற முழக்கங்களை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மண்ணின் மைந்தர்களுக்கான பரப்புரைப் பயணக் குழுக்கள் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ஒன்று சேர்ந்தன. சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை, திருப்பூர், கோபி, மேட்டூரிலிருந்து கழக செயல்பாட் டாளர்கள், பெண்களும் ஆண்களும் மக்களைச் சந்தித்து தமிழகத்தைச் சூழ்ந்து நிற்கும் வேலை, கல்வி உரிமைகள் பறி போகும் ஆபத்துகளை எடுத்து விளக்கினர். கலை நிகழ்வுகள், மேடைப் பேச்சுகள், துண்டறிக்கைகள், நூல்கள் வழியாக மக்களிடம் கருத்துகள் கொண்டு போய் சேர்க்கப் பட்டன. கட்சிகளைக் கடந்து கிராமங் களிலும் நகரங்களிலும் மக்கள் பேராதரவுடன் இந்தப் பரப்புரைப் பயணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. செப். 20ஆம் தேதிபிற்பகல் பயணக் குழுவினர் பள்ளிப்பாளையம் நோக்கி வரத் தொடங்கினர். நேரு திடலில் நிறைவு விழா மாநாடு மாலை 6 மணியளவில் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. மேட்டூர் டி.கே.ஆர்....

புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு நகல் கிழிப்பு போராட்டம் சேலம்

புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு நகல் கிழிப்பு போராட்டம் சேலம்

புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு நகல் கிழிப்பு போராட்டம் சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டமானது சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலை 11 மணியளவில் துவங்கியது. சேலம் மாநகர அமைப்பாளர் தோழர் பாலு அவர்களின் கண்டன முழக்கங்கள் எழுப்ப அதை தொடர்ந்து கழக தலைவர் அவர்கள் புதிய தேசிய கல்வி கொள்கையின் நகல் கிழித்தெரியும் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி கண்டன உரையாற்றினார். அதை தொடர்ந்து நம் தோழர்களின் கண்டன முழக்கங்களோடு புதிய தேசிய கல்வி கொள்கையின் வரைவு நகல்கள் கிழித்தெரிய பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தை சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் தோழர் டேவிட் ஒருங்கிணைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 110 தோழர்கள் கலந்து கொண்டனர். 5 பெண்கள் 3 குழந்தைகள் உட்பட 85 தோழர்கள் கைது செய்யப்பட்டு கோட்டை கமலா மஹால் மண்டபத்தில்...

மண்ணின் மைந்தர்கள் உரிமை முழக்க பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாட்டு தீர்மானங்கள்

மண்ணின் மைந்தர்கள் உரிமை முழக்க பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாட்டு தீர்மானங்கள்

தீர்மானம் எண் : 1 தமிழ்நாட்டில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 75 விழுக்காடு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக கொண்டுவர வேண்டும் ! தமிழ்நாட்டில் பல இலட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் இல்லாமல் தவிக்கும் நிலையில், மத்திய அரசு பணிகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் வட நாட்டுக்காரர்கள் ஏராளமாக குவிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் அடையாளமே அழிந்துபோகும் ஆபத்தை நாம் சந்திக்க வேண்டி வந்துவிடும். தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை அழிப்பது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டையே வடநாட்டு பண்பாட்டில் மூழ்கச் செய்து விடும். இந்த பேராபத்தைத் தடுக்க, மகாராஷ்டிரா ஆந்திரா இராஜஸ்தான் மாநில அரசுகளைப் பின்பற்றி, தமிழ்நாட்டில் குறைந்தது 75 விழுக்காட்டு வேலைவாய்ப்புகளை – தனியார் தொழில் நிறுவனங்களிலும், உற்பத்தி நிறுவனங்களிலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு உறுதி செய்யும் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக கொண்டுவர வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது. இதுவே தமிழ்நாட்டின் ஒருமித்த உணர்வாக...

மண்ணின் மைந்தர்கள் உரிமை முழக்க பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாடு !

மண்ணின் மைந்தர்கள் உரிமை முழக்க பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாடு !

மண்ணின் மைந்தர்கள் உரிமை முழக்க பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாடு ! 20.09.2019 வெள்ளிக்கிழமை ஈரோடு,பள்ளிபாளையம்,நேரு திடலில் மாநாடு நடைபெற்றது எங்கள் தலைமுறையை வாழவிடு ! தமிழ்நாட்டை வடநாடு ஆக்காதே ! எனும் முழக்கத்துடன் தமிழ்நாட்டின் 5 முனைகளில் இருந்து 2 கட்டங்களாக மக்களை சந்தித்த பரப்புரை பயண குழு தோழர்கள் பறிக்கப்ப்படும் தமிழர்களின் உரிமைகள் குறித்து பரப்புரை செய்து அதன் நிறைவு விழா மாநாடாக இம்மாநாடு நடைபெற்றது. உரிமை முழக்க பாடல்களுடன் துவங்கியது மாநாடு. சிறப்பான வீதி நாடகங்கள் மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றன.அடுத்ததாக பரப்புரை பயண குழு தோழர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். கழக நிர்வாகிகள் உரைகளை அடுத்து கழகத்தலைவர், பொதுச்செயலாளர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மாநாட்டில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பயணம்: நாமக்கல், சென்னை மாவட்டக் கழகங்கள் ஆலோசனை

பயணம்: நாமக்கல், சென்னை மாவட்டக் கழகங்கள் ஆலோசனை

மண்ணின் மைந்தர்களின் உரிமை மீட்பு நிறைவு விழா, பள்ளிபாளையத்தில் நடைபெற உள்ளதால், நாமக்கல் மாவட்ட கலந்துரையாடல், பள்ளிபாளையம் பெரியார் நூல்கடையில், மாவட்டத் தலைவர் சாமிநாதன் தலைமை வகிக்க, மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி முன்னிலை வகிக்க காலை 10:30 மணிக்கு தொடங்கியது. நிறைவு விழாவிற்கான நிதியை, கடை வசூல் மூலம் திரட்டுவது எனவும், மாவட்டம் முழுதும் துண்டறிக்கைகளை வழங்குவது, சுவரொட்டிகளை ஒட்டுவது எனவும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளிலிருந்து தோழர்கள் கலந்து கொண்டனர். திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்ட கலந்துரையாடல், இராயப்பேட்டை விஜய் திருமண மண்டபத்தில் 04.08.2019 அன்று மாலை 6 மணிக்கு, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடைபெற்றது. “மண்ணின் மைந்தர்களின் உரிமை மீட்புப் பயண”த்தில் கலந்து கொள்வது, பயணத்திற்கான திட்டங்கள், மாவட்ட கழகத்தின் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றி  விரிவாக தோழர்களால் கலந்துரையாடப்பட்டது. கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன்,...

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப்பறிக்காதே! புதிய கல்வி என்ற பெயரால் குலக்கல்வியைத் திணிக்காதே! கழகத்தின் 6 நாள் பரப்புரைப் பயணம்: 6 முனைகளிலிருந்து புறப்படுகிறது

  ‘மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்புரிமையைப் பறிக்காதே; புதிய கல்வி என்ற பெயரால் குலக் கல்வியைத் திணிக்காதே’ என்ற முழக்கத்துடன் திராவிடர் விடுதலைக் கழகம், தமிழகத்தில்  முனைகளிலிருந்து பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறது. ஆகஸ்டு 26இல் தொடங்கி நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி பயண நிறைவு விழா நடைபெறுகிறது. திருப்பூர், விழுப்புரம், ஈரோடு (கோபி), மயிலாடு துறை, சென்னை, மேட்டூர் என 6 முனைகளிலிருந்து தொடங்கும் பயணம், 150 ஊர்களில் பரப்புரையை நடத்துகிறது. நூறுக்கும் மேற்பட்ட கழக செயல்பாட்டாளர்கள், பயணங்களில் முழு அளவில் பங்கேற்கிறார்கள். பரப்புரைக்கான துண்டறிக்கை, கழக வெளியீடுகள் தயாராகி வருகின்றன. கலைக் குழுக்கள், பரப்புரைப் பயணங்களில் இசை, வீதி நாடகம் வழியாக மண்ணின் மைந்தர்கள் வேலை  வாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுவது குறித்தும் வடநாட்டுக்காரர்கள் தமிழக வேலை வாய்ப்புகளில் குவிந்துவரும் ஆபத்துகள் குறித்தும் மக்களிடையே பரப்புரை செய்வார்கள். ஒத்த கருத்துடைய அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள் பயணத்துக்கு ஆதரவு தர ஆர்வத்துடன்...

திராவிடர் விடுதலைக் கழக நாமக்கல் மாவட்ட கலந்துரையாடல் 04082019

திராவிடர் விடுதலைக் கழக நாமக்கல் மாவட்ட கலந்துரையாடல் 04082019

திராவிடர் விடுதலைக் கழக நாமக்கல் மாவட்ட கலந்துரையாடல் 04.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் பள்ளிபாளையம் பெரியார் நூல் கடையில், மாவட்ட தலைவர் சாமிநாதன் தலைமையில் நடைபெற உள்ளது. மண்ணின் மய்ந்தர்களின் உரிமை மீட்பு பயணத்தின் நிறைவு மாநாடு ஆகஸ்ட் 30 ம் தேதி பள்ளிபாளையத்தில் நடைபெற உள்ளது. நிறைவு விழா மாநாட்டை பற்றியும், மாவட்ட கழகத்தின் அடுத்த கட்ட நகர்வு பற்றியும் கலந்து ஆலோசிக்கப்படுவதால். மாவட்ட கழக பொருப்பாளர்கள், பகுதி பொருப்பாளர்கள் தோழர்கள் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தோழமையுடன், சரவணன் தொடர்புக்கு: 9842510606

தெருமுனைக் கூட்டங்கள் : திருச்செங்கோடு கழகம் முடிவு

தெருமுனைக் கூட்டங்கள் : திருச்செங்கோடு கழகம் முடிவு

திருச்செங்கோடு நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் கலந்துரையாடல் 30.06.2019 அன்று காலை 10 மணிக்கு பெரியார் மன்றத்தில் தொடங்கி நடைபெற்றது. நிகழ்விற்கு, நகர செயலாளர் பூபதி தலைமை வகிக்க, கழகத் தோழர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். 1) தெருமுனைப் பிரச்சாரங்கள் நடத்துவது; 2) ஹைட்ரோ கார்பன், அணுக்கழிவுக் கூடம், எட்டுவழிச் சாலை போன்ற மக்கள் விரோதத் திட்டங்களை விளக்கும் வகையில் துண்டறிக்கைப் பிரச்சாரம் செய்வது; 3) காமராஜர் பிறந்தநாள் விழாவை ஏதேனும் அரசுப் பள்ளியில் கொண்டாடுவது – ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  கார்த்தி நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 04072019 இதழ்

இராசிபுரம் நகராட்சி பள்ளியில் சேகுவேரா பிறந்த நாள் விழா

இராசிபுரம் நகராட்சி பள்ளியில் சேகுவேரா பிறந்த நாள் விழா

சேகுவேரா 92 ஆவது பிறந்த நாள் விழா ஜூன் 14 வெள்ளிக்கிழமை அன்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் இராசிபுரம் பாரதிதாசன் சாலையில் அமைந்துள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது. பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சேகுவேரா, பெரியார், காரல்மார்க்ஸ், காமராசர், பகத்சிங், அம்பேத்கர், லெனின், புத்தர், பாரதிதாசன் போன்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, சிந்தனைகள் அடங்கிய நூல்கள் மற்றும் எழுதுகோல்கள், இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் பள்ளிக்கு பெரியார் உருவப்படம் வழங்கப்பட்டது. இராசிபுரம் நகர வளர்ச்சி மன்றத்தின் சார்பில் மின்விசிறி வழங்கப்பட்டது. நிகழ்விற்கு, பிடல்சேகுவேரா (நகரஅமைப்பாளர் தி.வி.க.) தலைமை வகித்தார்.  மணிமாறன், நகர செயலாளர் சி.பி.ஐ. முன்னிலை வகித்தார். சுமதி மதிவதனி (தி.வி.க) வரவேற்புரையாற்றினார். சிறப்புஅழைப்பாளர்களாக  வி.பாலு, தி.மு.க. முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர். சுந்தரம், அ.தி.மு.க. மீனா, மாவட்டச் செயலாளர், தேசிய மாதர் சம்மேளன சங்கம், பூபதி, கமல்ஹாசன் நற்பணி இயக்கம் ஆகியோர் பங்கேற்றனர். இறுதியாக  ஆசிரியர் அருணகிரி...

களப்பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன இராசிபுரம் கழகம் எடுத்த மணியம்மையார் நூற்றாண்டு – மகளிர் நாள் விழா

களப்பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன இராசிபுரம் கழகம் எடுத்த மணியம்மையார் நூற்றாண்டு – மகளிர் நாள் விழா

இராசிபுரம் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா –    மகளிர் தினவிழா –  சிறந்த பெண் சேவையாளர்கள், சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா இராசிபுரம் கன்னட சைனீகர் திருமண மண்டபத்தில் 21.4.2019 ஞாயிறு மாலை  5.45 மணியளவில்  தொடங்கியது சுமதி மதிவதனி (தி.வி.க. இராசிபுரம்) தலைமை தாங்கினார். மணிமேகலை (தி.வி.க. ஈரோடு) வரவேற்புரை யாற்றினார். வி.பாலு (தி.மு.க.முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்), கழகத் தலைவர் கொளத்தூர்மணி, முனைவர் சுந்தரவள்ளி (த.மு.எ.க.ச.) நிகழ்வில் சிறப்புரையாற்றினர். 1)     மதவாத சக்திகளுக்கு எதிராகவும், சமூக நீதி காக்கவும் துணிச்சலாக களமாடி வருகிற முனைவர் சுந்தரவள்ளி அவர்களுக்கு ‘மக்கள் அரசியல்’ விருதினையும், 2)     கரூர்மாவட்டம் பள்ளப்பட்டியைச் சார்ந்த பெரியார் பற்றாளரும் இந்தியாவின் தலைசிறந்த 100 இயற்கை வேளாண்மை விவசாயிகளில் ஒருவராக டெல்லியில் தனியார் ஊடகம் ஒன்றால் தேர்ந்தெடுக்கப் பட்டவரும், காடுகளை அழித்தொழித்த ஈஷா யோகா...

கட்டமைப்பு நிதி : மாவட்டங்கள் தீவிரம்

கட்டமைப்பு நிதி : மாவட்டங்கள் தீவிரம்

விழுப்புரம் கழகம் தீவிரம் விழுப்புரம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்தாய்வு கூட்டம்  20.04.2019 அன்று காலை 10.30 மணிக்கு  நடைபெற்றது மாவட்ட கழகத் தலைவர் பூஆ. இளையரசன் ஒருங்கிணைத்தார், மாவட்டச்  செயலாளர் பெரியார் சாக்ரட்டீஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். கூட்டத்திற்கு தலைமைக் குழு உறுப்பினர் ந. அய்யனார் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்.   கழகத்தின் அடுத்தகட்ட செல்பாடு மற்றும் தலைமைக் கழக அலுவலகத்திற்கான நிதியை விரைவாக. மே 15 க்குள் வசூலித்து கொடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. மே மாத இறுதியில் பொதுக்கூட்டம் மற்றும்  பயிற்சி வகுப்பு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது மாவட்ட துணைத் தலைவர் சிறீதர், ஒன்றிய பொறுப்பாளர்கள் பாபு,  கிருஷ்ணராஜ், மூர்த்தி மற்றும் தோழர்கள் கெஜராஜ், சிலம்பரசன், அருண், திருமாவளவன், சிறீநாத், மதியழகன், வசந்த்  ஆகியோர் கலந்து கொண்டனர். திருச்செங்கோடு கழகம் தீவிரம் கழகக் கட்டமைப்பு நிதி தொடர்பான, திருச்செங்கோடு  நகர திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் 28.04.2019 மாலை...

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் பள்ளிபாளையம் 17032019

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் பள்ளிபாளையம் 17032019

தமிழகத்தையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், அனைத்து குற்றவாளிகளையும் அரசியல் தலையீடு இல்லாமல் கைது செய்யவும், இனிமேல் இதுபோல் குற்றங்கள் நடக்காமலிருக்க நிரந்தர தீர்வான “பாலியல் கல்வியை” பள்ளி பாடங்களில் நடைமுறைபடுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளைய நகர திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் அனைத்து தோழமை அமைப்புகளையும் ஒருங்கிணைத்து  ஞாயிறு(17.03.2019) மாலை 5 மணிக்கு பள்ளிபாளையம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு பள்ளிபாளையம் நகரத் தலைவர் தோழர் மீனா தலைமை வகிக்க, திருச்செங்கோடு நகர அமைப்பாளர் தோழர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். நாமக்கல் மாவட்ட தலைவர் தோழர் சாமிநாதன் வரவேற்புறையாற்றினார். பாலியல் குற்றவாளிகளை கண்டித்து, CPIML நகரச்செயலாளர் மாரியப்பன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச்செயலாளர் அஜ்மீர், திராவிடர் கழகம் மாவட்ட துணைச்செயலாளர் பொன்னுசாமி, DYFI ஒன்றியக்குழு செயலாளர் பிரபாகரன், புரட்சிகர இளைஞர் முன்னணி அமுதன், திராவிடர் விடுதலைக் கழக நாமக்கல்...

திருச்செங்கோட்டில் மூடப்பட்ட தந்தை பெரியார் சிலை மீண்டும் திறப்பு

திருச்செங்கோட்டில் மூடப்பட்ட தந்தை பெரியார் சிலை மீண்டும் திறப்பு

திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் பின்புறம் வைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் சிலை தேர்தல் அதிகாரிகளால் கடந்த 13.03.2019(புதன்) அன்று மூடப்பட்டிருந்த நிலையில், திருச்செங்கோடு நகர திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள், வட்டாட்சியர் அவர்களிடம் முறையிட்டதன் எதிரொளியால் 14.03.2019(வியாழன்) இரவு மீண்டும் திறக்கப்பட்டது.  

கழக ஏட்டுக்கு மாதந்தோறும்  கழகத் தோழர் ரூ.1000 நன்கொடை

கழக ஏட்டுக்கு மாதந்தோறும் கழகத் தோழர் ரூ.1000 நன்கொடை

திருச்செங்கோட்டில் தம்பி தேனீர் விடுதி நடத்தும் கழகத் தோழர் சோமசுந்தரம், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’இதழுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000/- நன்கொடை வழங்குவதாக அறிவித்துள்ளார். தோழரின் பங்களிப்பைப் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. – ஆசிரியர் பெரியார் முழக்கம் 10012019 இதழ்

பெரியார் நினைவு நாள் நிகழ்வு

பெரியார் நினைவு நாள் நிகழ்வு

இராசிபுரத்தில் : தந்தைபெரியாரின் 45 வது நினைவேந்தல் நிகழ்வு இராசிபுரம் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில்  இராசிபுரம் ஜபாரதிதாசன் சாலையில் உள்ள தி.வி.கழக அலுவலகம்முன் நடைபெற்றது. பகுத்தறிவு பகலவனுக்கு முழக்கங்கள் எழுப்பி வீரவணக்கம் செலுத்திய நிகழ்வில்  ர. சுமதிமதிவதனி  (தி.வி.க.), திலகா (இராசிபுரம்) வரவேற்புரையாற்றினார். இரா. பிடல்சேகுவேரா (நகரஅமைப்பாளர் தி.வி.க) தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டவர்கள் : வி.பாலு  நுஒ. ஆஊ, தி.மு.க.முன்னாள் மாவட்ட இளைஞரணி துணைஅமைப்பாளர், தலைவர், இராசிபுரம் நகரவளர்ச்சி மன்றம். முன்னிலை: மணிமாறன் (நகர செயலாளர் சி.பி.ஐ.), ஜி.கே. வைகறை சேகர் (மாநில துணைச் செயலாளர் விவசாயஅணி, வி.சி.க.),  கண்ணன் (மாவட்டச் செயலாளர், ஆதித் தமிழர் பேரவை), தட்சிணாமூர்த்தி (மாவட்டத் தலைவர், தமிழர் தேசிய முன்னணி), நாணற்காடன் (மாநிலதுணைசெயலாளர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்), சுமன் (மா.துணை செயலாளர், ஆதி தமிழர்பேரவை), அண்ணாதுரை (ஒ.செயலாளர், ஆதிதமிழர் பேரவை), பாலகிருட்டிணன் (புரட்சிகர இளைஞர் முன்னணி), கீதாலட்சுமி...

அம்பேத்கர் நினைவு நாளில் கழகத்தினர் சூளுரை ஜாதி அடையாளம் அல்ல; அவமானம்

அம்பேத்கர் நினைவு நாளில் கழகத்தினர் சூளுரை ஜாதி அடையாளம் அல்ல; அவமானம்

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 6ஆம் தேதி அம்பேத்கர் சிலைகளுக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்து ஜாதி ஒழிப்பு சூளுரை எடுத்தனர். விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு பேரணியாக வந்து மு.நாகராஜ் (அறிவியல் மன்ற அமைப்பாளர்) தலைமையில்  மாலை அணிவித்து ஜாதி ஒழிப்பு சூளுரை எடுத்தனர். இந்நிகழ்வில் கழகத்தின் மாவட்ட அமைப் பாளர் சி.சாமிதுரை முன்னிலை வகித்தார். ஜாதி ஒழிப்பு, ஆணவப் படுகொலைக்கு தனி சட்டம் ஆகியவற்றை வலியுறுத்தி முழக்க மிட்டனர். இரா.துளசிராஜா, குமார், பாரதிதாசன், ராமச்சந்திரன் கார்மேகம், நீதிபதி மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். சேலம் : திவிக சேலம் மாநகரம் சார்பாக 6.12.2018 அன்று சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட் மற்றும் சேலம் மாநகர செயலாளர் பரமேஸ்குமார் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு  மாலை அணிவித்து ஜாதி ஒழிப்பு உறுதி ஏற்றனர். நிகழ்வில் மாநகர தோழர்கள் கலந்து கொண்டனர். கோவை: இந்திய...

கழக ஏடுகளுக்கு சந்தா  சேர்ப்பதில் தோழர்கள் தீவிரம் மாவட்டக் கலந்துரையாடல்களில் எழுச்சி டிசம்பர் 24 கருஞ்சட்டைப் பேரணிக்கு தயாராகிறார்கள்

கழக ஏடுகளுக்கு சந்தா சேர்ப்பதில் தோழர்கள் தீவிரம் மாவட்டக் கலந்துரையாடல்களில் எழுச்சி டிசம்பர் 24 கருஞ்சட்டைப் பேரணிக்கு தயாராகிறார்கள்

டிசம்பர் 24ஆம் தேதி திருச்சி கருஞ்சட்டைப் பேரணிக்கு தயாராகி வரும் கழகத் தோழர்கள் கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழுக்கு சந்தா சேர்க்கும் இயக்கத்திலும் முனைப்போடு  செயல்பட்டு வருகிறார்கள். மாவட்டக் கழகத் தோழர்களுடன் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் நேரில் சந்தித்து கலந்துரையாடல் கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர். முதல் கட்டமாக பயணம் நவம்பர் 21ஆம் தேதி காலை ஈரோடு வடக்கு மாவட்டம் கோபியில் காலை 11.30 மணியளவில் கழகத் தோழர் நிவாஸ் இல்லத்தில் நடந்தது. ஈரோடு வடக்கு மாவட்டமான கோபியில் 7 ஒன்றியங்களில் கழக அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. கல்வி உரிமை பரப்புரைப் பயணத்தைத் தொடர்ந்து ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத் தோழர்கள் பரப்புரைக்காக வாங்கியுள்ள வாகனத்தைப் பயன்படுத்தி கிராமம் கிராமமாக பரப்புரையை தொடர் நிகழ்வாக நடத்தி வருவது...

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பெரியார் பிறந்த நாள் விழா

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பெரியார் பிறந்த நாள் விழா

தந்தை பெரியாரின் 140 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், 17.09.2018 அன்று (திங்கள்) காலை 10 மணியளவில், எடப்பாடி ரோடு காவேரி நகரில், நகரத் தலைவர் தண்டபாணி பெரியாரின் பிறந்தநாள் விழா ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். காவேரி நகரில் தோழர் பரிமளம் கொடியேற்றினார். பாலம் அருகில், பெரியாரின் பொன்மொழி வாசக பலகையை சஜீனா திறந்து வைத்தார், மீனாட்சி கொடியேற்றினார். பேருந்து நிலையத்தில்  கலைசெல்வி  பொன்மொழி வாசக பலகையை திறந்து வைத்தார்.   கலைவாணி கொடியை ஏற்றினார். அங்கு தோழர்களால் கடவுள் மறுப்பு பாடல் பாடப்பட்டது. பின் நகர காவல் நிலையம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில், தந்தை பெரியாரின் வாசகங்கள் அடங்கிய அட்டை மற்றும் சாக்லேட் வழங்கப்பட்டது. தண்டபாணி, செல்வி சைக்கிள் கடையின்  சின்ன நூலகத்தில் தந்தை பெரியாரின் உருவப்படத்தை ரேணுகா திராவிடமணி திறந்து வைத்தார், இனிப்பு வழங்கப்பட்டது. அங்கு, அறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் நகரில்  ரேணுகா...

குமாரபாளையத்தில் முப்பெரும் விழா

குமாரபாளையத்தில் முப்பெரும் விழா

தந்தை பெரியார் 140ஆவது பிறந்தாள், புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் 138 ஆவது பிறந்தநாள், பெருந்தலைவர் காமராசர் 118 ஆவது பிறந்தநாள் முப்பெரும் விழா பொதுக் கூட்டம்,  13.10.2018 ம் தேதி குமாரபாளையம்  பேருந்து நிலையத்தில்  மாலை 5 மணிக்கு, டி.கே.ஆர். இசைக் குழுவின் பகுத்தறிவுப் பாடல்கள் மற்றும் தலித் மக்களின் உரிமை சார்ந்த பாடல்கள் மூலம் நிகழ்வு தொடங்கியது. இந்நிகழ்விற்கு, கழகத்தின் நாமக்கல் மாவட்ட தலைவர் மு.சாமிநாதன் தலைமை வகித்தார். மேலும், கேப்டன் அண்ணாதுரை மாவட்ட காப்பாளர், சரவணன் மாவட்ட செயலாளர், வைரவேல் மாவட்ட அமைப்பாளர், முத்துப்பாண்டி மாவட்ட பொருளாளர், மோகன் குமாரபாளையம், ரேணுகா திராவிடமணி குமாரபாளையம் ஆகியோர் முன்னிலை வகிக்க, குமாரபாளையம் இரா.மோகன் வரவேற்புரையாற்றினார். மேலும் நிகழ்வில், காமராசர் உருவப்படத்தை அறிவியல் மன்ற தலைவர் சிவகாமி திறந்து வைத்தார், புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் உருவப்படத்தை சாக்கோட்டை இளங்கோவன், தந்தை பெரியார் உருவப்படத்தை திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி...

திருச்செங்கோடு கருத்தரங்கில் கொளத்தூர் மணி பேச்சு (2) இந்தி எதிர்ப்பில் தமிழகம் உருவாக்கிய தாக்கம்

திருச்செங்கோடு கருத்தரங்கில் கொளத்தூர் மணி பேச்சு (2) இந்தி எதிர்ப்பில் தமிழகம் உருவாக்கிய தாக்கம்

1976ஆம் ஆண்டு அவசர நிலை காலத்தில் கூட இந்தித் திணிப்பில் தமிழ்நாட்டை மட்டும் விலக்கி வைத்து ஆட்சி மொழி விதிகளை உருவாக்கியதை கழகத் தலைவர் கொளத்தூர் மணி சுட்டிக் காட்டினார். “கருஞ்சட்டைக் கலைஞர்” என்ற தலைப்பில் திருச்செங்கோட்டில் 30.09.2018 ஞாயிறு அன்று நடந்த கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. சென்ற இதழ் தொடர்ச்சி இந்தியாவைப் பற்றி பல ஆய்வாளர்கள் எழுதியிருக்கிறார்கள். நான்கைந்து ஆண்டு களுக்கு முன்னால் நோபல் பரிசு பெற்ற அறிஞர் அமர்த்தியா சென் ஒரு நூலை எழுதினார். அவர் ஒரு வங்க நாட்டுக்காரர். அவரோடு இணைந்து அந்த நூலை எழுதியவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ழின் தெரசு. அந்த நூலில் இந்தியாவில் வளர்ந்த மாநிலங்களாக தமிழ்நாடு, கேரளா மற்றும் இமாசலப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களைத்தான் அவர்கள் குறிப்பிட் டார்கள். குறிப்பாக தமிழ்நாடும், கேரளாவும் இந்தியாவோடு இல்லாமல் இருந்திருந்தால் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக வளர்ந்திருக்கும் என்று...

திருச்செங்கோடு கருத்தரங்கில் கொளத்தூர் மணி பேச்சு மாறுபாடுகளை மறந்து இனத்தின் உரிமைக்காக இணைந்து நின்றார்கள் பெரியாரும்-அண்ணாவும்

திருச்செங்கோடு கருத்தரங்கில் கொளத்தூர் மணி பேச்சு மாறுபாடுகளை மறந்து இனத்தின் உரிமைக்காக இணைந்து நின்றார்கள் பெரியாரும்-அண்ணாவும்

“கருஞ்சட்டைக் கலைஞர்” என்ற தலைப்பில் திருச்செங்கோட்டில் 30.09.2018 ஞாயிறு அன்று நடந்த கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. நீண்ட நெடிய காலம் தன்னுடைய அரசியலால், எழுத்துகளால், இலக்கியப் பணிகளால், கலை செயல்பாடுகளால் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கலைஞரை நாம் இழந்து நிற்கிறோம். இதில் தலைப்பே கூட கருஞ்சட்டைக் கலைஞர் என்பதாக அறிவித்திருக்கிறார்கள். ஒரு காலகட்டத்தில் பெரியார் இயக்கத்தில், சுயமரியாதை இயக்கத்தில் பணியாற்றிய கலைஞர், அதற்குப் பின்னால் திராவிட முன்னேற்றக் கழகமாக உருப்பெற்ற பிறகு தன்னுடைய வீரியமிக்க சொற் பொழிவுகளால் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் எழுச்சியை, இன எழுச்சியை ஏற்படுத்தியதில் ஒரு பங்கு உடையவர் என்பதையும் தாண்டி அவர் ஒரு பெரியாரின் தொண்டர் என்ற அடிப்படையில், பெரியாரிய பார்வையில் அவர் ஆற்றிய பணிகள், அவருடைய செயல்பாடுகளைப் பற்றி நாம் பேசுவதைத்தான் நோக்கமாகக் கொண்டு தோழர்கள் ’கருஞ்சட்டைக் கலைஞர்’ என்ற தலைப்பைக் கொடுத்திருப்பதாகவே நான் கருதுகிறேன். “உலகத்தின்...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்ற நிகழ்ச்சிகள்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்ற நிகழ்ச்சிகள்

திராவிட அரசியலின் பெருமைக்குரிய அடையாளம் கருஞ்சட்டைக் கலைஞர் என்ற தலைப்பில் செப்டம்பர் 30ஆம் தேதி திருச்செங்கோட்டில் கருத்தரங்கம் நடைபெற்றது. திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் து.சதிசுகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கின் தொடக்கத்தில் பெரியார் பிஞ்சு இரா.தர்சினி வரவேற்புரையாற்றினார். கழகத்தின் மாவட்ட தலைவர்  மு.சாமிநாதன் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்செங்கோடு நகர பொறுப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும், பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ். மூர்த்தி மற்றும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலைஞரின் செயல்பாடுகளை விளக்கி சிறப்புரையாற்றினர். முன்னதாக தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப்பாளர் சிவகாமி, நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் மா.வைரவேல் ஆகியோரும் உரையாற்றினர். சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி பேசுகையில், “காவிகளை தமிழகத்துக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், தலைவராக பொறுப்பேற்றபோது உறுதியளித்திருக்கிறார். அவருடைய பாதையில் நாங்களும் காவிகளை எதிர்க்க உறுதியாய்...

கழகச் சார்பில் பெரியார் சிலைகளுக்கு மாலை

கழகச் சார்பில் பெரியார் சிலைகளுக்கு மாலை

பேராவூரணி: தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பேராவூரணி ஆவணம் சாலை முகத்தில் அமைந் துள்ள பெரியார் சிலைக்கு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் திருவேங்கடம்,  நகர அமைப்பாளர் கலைச்செல்வன், மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட குழு உறுப்பினர் கருப்பையா, மதிமுக பொறுப்பாளர்கள் குமார், கண்ணன், மணிவாசன், தேனி ஆல்பர்ட், தமிழக மக்கள் புரட்சி கழகப் பொறுப்பாளர்கள் பைங்கால் மதியழகன், வீரக்குடி ராஜா, சத்துணவு ஊழியர்கள் சங்க பொறுப்பாளர் முத்துராமன், அறநெறி மக்கள் கட்சி பொறுப்பாளர்கள் வனராணி, ஜேம்ஸ்,   முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் கீ.ரே. பழனிவேல், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், பேராசிரியர் ச.கணேஷ்குமார், திரைப்படப் பாடலாசிரியர் செங்கை நிலவன், பெரியார் அரும்புகள் அறிவுச் செல்வன், அரும்புச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். திருச்செங்கோடு : தந்தை பெரியாரின் 140 ஆவது பிறந்தநாளான...