டெல்லிக்கு எதிரான போராட்டங்களின் முதல் வெற்றி!
ஒன்றிய அரசு அவசர அவசரமாகக் கொண்டு வந்த மூன்று மசோதாக்களும் தோல்வி அடைந்து விட்டன. “டெல்லி வீழ்ந்தது! தமிழ்நாடு வென்றது!” என்று முதல்வர் மிகச் சரியாகப் பதிவிட்டு இருக்கிறார். பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை முன்னிறுத்தி கொண்டுவரப்பட்ட இந்த மசோதாவுக்கு எதிர்ப்புகள் இருக்காது என்று ஒன்றிய பாஜக ஆட்சி சூழ்ச்சியாக திட்டமிட்டது. ஆனால் தொகுதி மறு சீரமைப்பு என்ற ஆபத்தையும் இணைத்து இந்த மசோதா கொண்டு வரப்படுவதன் நோக்கம்.தென்னகத்தின் உரிமைகளைப் பறிப்பது தான் என்று முதன் முதலாக எதிர்ப்புக் குரல் கொடுத்தவர் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின். தொடர்ந்து தெலுங்கானா,கர்நாடகா, கேரள முதல்வர்களும் காங்கிரஸ் கட்சியும் சமாஜ்வாதி கட்சியும் தமிழ்நாடு முதல்வரின் எதிர்ப்புக் குரலோடு இணைந்தனர். எடப்பாடி பழனிச்சாமி மட்டும் பச்சையாக தனது துரோகத்தை வெளிப்படுத்தினார். இன்றைய பரப்புரையில் பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை ஸ்டாலின் எதிர்க்கிறார் என்று மோடிக்கு வெட்கமின்றி ஜால்ரா அடித்தார். தொகுதி மறுவரையறை என்ற...
