ஆர்வத்துடன் நிதி அனுப்பும் ஆதரவாளர்கள்!

ஜாதிய தீண்டாமைக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சட்ட நடவடிக்கையை வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் டிசம்பர் 29 கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற உள்ள போராட்டத்திற்கு தோழர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள் பொதுமக்கள் தங்களால் ஆன ஆதரவை கொடுத்து உதவுமாறு பொதுவெளியில் சமூக ஊடகங்களில் தோழர்கள் பலரும் பதிவிட்டனர் அந்த பதிவை பலரும் தங்கள் பக்கங்களில் பகிர்ந்து ஆதரவு தெரிவித்தது மட்டுமின்றி, தங்களால் முடிந்த சிறு தொகையை அவரவர் சக்திக்கு ஏற்றவாறு நிர்மல் குமாரின் கூகுள் பே எண்ணுக்கு அனுப்பி, போராட்டம் வெல்ல வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் கோவையைச் சேர்ந்த, தற்போது கத்தாரில் பணியாற்றி வரும் தோழர் ஒருவர் இந்த போராட்டம் மிக அவசியமானது எனக்கூறி, ஆர்வத்துடன் நிதி உதவி அளித்திருப்பதோடு, கழகத்தின் இந்த போராட்டத்திற்கான தீர்மானம் 2023-இல் சேலம் மாநாட்டில் இயற்றப்பட்ட சமயத்தில் இருந்து கவனித்து வருவதாக கூறியுள்ளார்.

அதேபோல வெளிமாநிலங்களில் வசிக்கும் தோழர்களும் ஆர்வத்துடன் நிதி உதவி அளித்து வருகின்றனர். மொத்தம் இதுவரை 12,000 ரூபாய் அனுப்பியுள்ளனர். உதவி புரிந்த அனைத்து தோழர்களுக்கும் பெரியாரிய களப்பணி மூலம் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

– கோவை மாவட்ட திவிக
பெரியார் முழக்கம் இதழ் 25122025

You may also like...