வாசகர் கடிதம்

“மதவெறி பாடல் குறித்து விவாதிப்பது ஏன்?” என்ற தலையங்கத்தில், ‘வந்தே மாதரம்’ பாடல் குறித்து இளைய தலைமுறை அறிந்திடாத பல உள்ளார்ந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளதுடன், இதனைத் தூக்கிப் பிடிக்கும் பாஜக-வின் உண்மை நோக்கத்தையும் படம் பிடித்துக் காட்டியுள்ளது.
அதேபோல், தொழிலாளர்களுக்கு எதிரான புதிய சட்டங்கள் தொடர்பான தோழர் அருண் கோமதி எழுதிய கட்டுரையில், அந்தச் சட்டங்கள் எவ்வாறு பெரு முதலாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றன என்பதை மிக அழுத்தமாகவும் திருத்தமாகவும் தெரிவித்துள்ளார். இந்தப் புதிய சட்டத் தொகுப்பு என்பது, இந்திய விடுதலைக்கு முன்பே (தொழிற்சங்க சட்டம் 1926-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்திலேயே) தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட தொழிற்சங்க உரிமைகளை, குறிப்பாக வேலைநிறுத்தம் செய்யும் உரிமையை அடியோடு பறித்துள்ளது. தொழிலாளர்களின் இறுதி ஆயுதமாகவும், முதலாளிகளைப் பணியவைக்கும் பலமிக்க ஆயுதமாகவும் விளங்கும் வேலைநிறுத்தத்தை ஒன்றுமில்லாமல் செய்து, தொழிலாளர் வர்க்கத்தை நவீன கொத்தடிமைகளாக மாற்றியுள்ளது.
-இளங்கோவன் ஏ
காரைக்குடி
பெரியார் முழக்கம் இதழ் 25122025

You may also like...