ஜி.ஆர்.சுவாமிநாதனை கண்டித்து மத நல்லிணக்க பேரணி!

மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பாக மதுரையில் நடைபெற்ற அமைதிக்கான நல்லிணக்க பேரணியில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக கழகத் தோழர்கள் பங்கேற்றனர். தளபதி, காமாட்சி பாண்டி, சத்தியமூர்த்தி, முருகேசன், வேங்கைமாறன், தோழர் ஆனந்த் ஆகியோர் பங்கேற்றனர்.
அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக மதச்சார்பின்மைக்கு எதிராக, மாநில உரிமைக்கு எதிராக சனாதன தீர்ப்புகளை வழங்கி வரும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும், தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்கும் மதவாத கும்பல்களை தடை செய்ய வேண்டும் என்றும், சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமையில் தலையிடும் மதவெறி அமைப்புகளை எச்சரித்தும் பேரணியில் முழக்கங்கள் பேரணியில் முழக்கங்கள் எழுப்பட்டன.
மதவாதத்தை தூண்டி திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம் என அதிகாரத் திமிருடன் பேசி கலவரத்தை தூண்டும் இந்துத்துவ பயங்கரவாதிகளை கைது செய்ய இந்த பேரணி வலியுறுத்தியது.
பெரியார் முழக்கம் இதழ் 25122025
=

You may also like...