‘காவிரிப் பெருநிலம்’ நூல் வெளியீட்டு விழா!

திராவிட இயக்க ஆதரவாளரும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளருமான வழக்குரைஞர் விஜய் எழுதிய “காவிரிப் பெருநிலம்”

வெளியீட்டு நிகழ்வு (03.01.25) அன்று மாலை 5.00 மணி அளவில் ஈரோடு சம்பத் நகரில் உள்ள கடோத்கஜா ரெஸ்டாரன்ட் ஆருத்ரன் அரங்கத்தில் நடைபெற்றது. கற்றல் கலையக மாணவர்கள் சார்பாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். வேர்கள் தமிழ் நாட்டார் கலைக்குழு சார்பாக அரங்கம் அதிர பறை இசை நிகழ்த்தப்பட்டது. வழக்கறிஞர் யோகேஸ்வரி வரவேற்புரையாற்றினார். மருத்துவர் வினிசா (மகரந்தம் வாசகர் வட்டம் ஒருங்கிணைப்பாளர்) தொடக்கவுரையாற்றினார். வழக்கறிஞர்.செயப்பிரகாசம் நூல் அறிமுக உரையாற்றினார்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர்) இணைந்து நூலை வெளியிட்டனர். இலங்கை வட மாகாண மேனாள் அமைச்சர் அனந்தி சசிதரன் நூலைப் பெற்றுக்கொண்டு வாழ்த்துரையாற்றினார். வழக்குரைஞர் விஜய், நூல் இயற்றிய அனுபவத்தைக் கூறி ஏற்புரையாற்றினார். காரா பதிப்பகம் தடா மதி (எ) கிருஷ்ணமூர்த்தி நன்றியுரையாற்றினார். பேரன்பு (தமிழ்நாடு மாணவர் கழக சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) ஒருங்கிணைத்தார். இதில் ப. ரத்தினசாமி (கழக மாநில அமைப்புச் செயலாளர்), கோவை ரகுபதி, கரூர் காமராஜ், காவை அவினாசி ஆகிய கழகத் தோழர்கள், தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மற்றும் தோழமை இயக்கத் தோழர்கள் கலந்துகொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 15012026

You may also like...