பெரியார் நினைவுநாளில் கழகம் மரியாதை!
கோவை: பெரியார் நினைவு நாளையொட்டி டிச.24 அன்று காந்திபுரம் பெரியார் சிலை முன்பு காலை 9.30மணிக்கு கோவை மாநகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
ஏற்காடு: டிசம்பர்-24 அன்று கழகப் பொறுப்பாளர் ஏற்காடு பெருமாள் தலைமையில் தந்தை பெரியாருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
சேலம் கிழக்கு: 24.12.2025 காலை 10.00 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தந்தை பெரியார் உருவச்சிலைக்கு சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமையில் மாலை அணிவித்து கொள்கை முழக்கம் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது.
டேவிட் (சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர்), முத்துமாணிக்கம் (கிழக்கு மாவட்ட அமைப்பாளர்), ஆனந்தி (சேலம் மாநகரச் செயலாளர்), ரமேஷ்(இளம்பிள்ளை நகரத் தலைவர்), மோகன்ராஜ் (இளம்பிள்ளை நகரச் செயலாளர்), தேவராஜ் (சேலம் மாநகர அமைப்பாளர்), வெற்றிமுருகன்(மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்), பிரபு(சேலம் மாநகர பொருளாளர்) மற்றும் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள், தோழர்கள் கலந்து கொண்டனர்.
சேலம் மேற்கு: 24.12.2025 கோனூர் சமத்துவபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் உருவச்சிலைக்கு காலை 10.00 மணியளவில், சுதா (சேலம் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்) தலைமையில் மாலை அணிவித்து கொள்கை முழக்கம் எழுப்பி, மரியாதை செலுத்தப்பட்டது. ஜாதி ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
கோவிந்தராஜ் (சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர்), சக்திவேல் (தலைமைக் குழு உறுப்பினர்), அன்பு (மேற்கு மாவட்ட அமைப்பாளர்), மார்டின்(மேட்டூர் நகரத் தலைவர்), ராஜேந்திரன்(நங்கவள்ளி ஒன்றியச் செயலாளர்), விஜயகுமார்(கொளத்தூர் ஒன்றியச் செயலாளர்), கிருஷ்ணன் (மாவட்ட ஒருங்கிணைப்பாளர்), சந்திரசேகரன் (நங்கவள்ளி நகரச் செயலாளர், பன்னீர்செல்வம்(வனவாசி நகரச் பொருளாளர்), திவாகர்(மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்), பிரபாகரன்(மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர்), சிவசண்முகம்(மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்), உமாசங்கர்(வனவாசி நகரச் செயலாளர்) மற்றும் பொறுப்பாளர்கள், தோழர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு: வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் பெரியாரின் நினைவு நாளான டிசம்பர் 24 அன்று கோபியில் நிவாஸ் (மாவட்ட அமைப்பாளர்) தலைமையில் மணிமொழி, பெரியார் பிஞ்சு நிறைமதி ஆகியயோர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
தோழர்கள் ஜெகநாதன்,அருளானந்தம், பழனிச்சாமி, ஈஸ்வரமூர்த்தி, ரகுநாதன், சுப்பிரமணியம், சூர்யபிரகாஷ், செல்வம், பெரியார் பிஞ்சுகள் அறிவுக்கனல், யாழ் திலீபன், வினோத் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி: திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியாரின் உருவச் சிலைக்கு திருச்சி மாவட்டக் கழகத்தின் சார்பாக மீ.இ. ஆரோக்கியசாமி (மாவட்டத் தலைவர்), தலைமையில் புதியவன் (மாவட்ட அமைப்பாளர்) புகழ்வணக்கம் முழக்கத்தோடு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட கழகத் தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
சென்னை: சென்னை மாவட்டக் கழகம் சார்பில் பத்ரி நாராயணன் நினைவு பெரியார் படிப்பகத்திலும், சிம்சன் சாலையிலும், மயிலாப்பூர் வன்னியமதி ஆகிய இடங்களில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தபசி குமரன் (தலைமை நிலையச் செயலாளர்), அன்பு தனசேகர் (தலைமைக் குழு உறுப்பினர்), மாவட்டத் தலைவர்கள் வேழவேந்தன்,சேத்துப்பட்டு இராசேந்திரன், இரா உமாபதி(மாவட்டச் செயலாளர்), இராவணன்(மாவட்ட துணைச் செயலாளர்), ம.கி எட்வின் பிரபாகரன்(மாவட்ட அமைப்பாளர்), ப.அருண் (இளைஞர் அணி அமைப்பாளர்), இளவரசன் (தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர்), பேரன்பு (மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர்), சு.கோபிநாத் (திருவல்லிக்கேணி பகுதித் தலைவர்), த.நா சூர்யா (அமைப்பாளர்) மற்றும் கழகத் தோழர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
